Share:
Notifications
Clear all

அத்தியாயம் 5

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

"குமரன் குடில்" முழுவதும் ஊடகவியலாளர்கள் குழுமி இருந்தது...ஊர் போற்றும் பெரிய வீட்டில் ஏதாவது ஒன்று என்றாலே கூடும் உலகமிது இது போன்ற விஷயம் நடந்தால் விட்டு விடுவார்களா என்ன??? காதும் காதும் வைத்தது போல விஷயத்தை முடிக்க எண்ணி இருந்த ஆதிக்கு எல்லாம் புரிந்து போனது விஷயம் எப்படி பாட்டியிடம் காது வரை சென்று இருக்க வாய்ப்பு வந்தது என்பதை புரிந்து கொண்டவனுக்கு இது கூட அந்த ஆத்ரேயனின் வேலையாக தான் இருக்கும் என எண்ணினான் ஆதி...

அவன் உடைந்து போய் இருந்தான் பாட்டி வர சொன்னதும் அதை மீற முடியாமல் தடுமாறியவன் அங்கிருந்து வரும் போது அனைவரின் பார்வைக்கும் பதில் கூற முடியாமல் மிகுந்த அவமானமாக உணர்ந்து தான் அவன் வந்தான்...அவன் நிலைமையை அவனை தவிர வேறு யாராலும் உணர முடியாது அவன் ஒருவனால் மட்டும் தான் உணரமுடியும் என்ற நிலைக்கு அவனது வீட்டுக்குள் அவனது கார் சுற்றி இருக்கும் ஊடகவியலாளர்களை எல்லாம் கடந்து உள்ளே சென்றான்...

அங்கே அந்த பெரிய வீட்டின் நடு கூடத்தில் சாய்வு நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்து இருந்தார் குலசேகரி... அந்த வீட்டில் நிறைய குடும்ப ஆட்கள் இருந்தாலும் முக்கியமான விஷயங்கள் பேசும் போது அந்த வீட்டில் இருக்கும் யாரும் அந்த நடு கூடத்தில் வந்து நிற்க மாட்டார்கள் அப்படி இருக்க இன்றும் யாரும் இல்லை...ஆதியின் தாய் மட்டும் மகனுக்கு இப்படி ஆகி விட்டதே என தனது அறையில் தன் மாமியார் அறியாமல் வருந்தி கொண்டிருந்தார்...

குலசேகரி மட்டும் அந்த வீட்டின் நடுகூடத்தில் சாய்வு நாற்காலியில் இருந்து ஆடி கொண்டிருந்தார்...ஆதி வீட்டுக்குள் நுழைந்ததும்,"என்ன ஆதி என்ன இதெல்லாம் நீ எதுக்கு அந்த வீட்டுக்கு எல்லாம் போற??" அவனுக்கு பாட்டியின் முகத்தை கண்டதும் கோபம் காட்டுக்கு அடங்காமல் இருக்க பாட்டியிடம் தன் மனவருத்ததை காட்ட முடியாமல், " எதுக்கு பாட்டி எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது???" என்று கேட்டான்...

"அப்படி என்ன நடந்துடுச்சு??? உனக்கு நிச்சயம் பண்ணினவளை அவன் கட்டிட்டான் அவ்வளவு தானே???அதுக்குன்னு அவன் பொண்டாட்டிக்கு கூட நீ வாழ முடியுமா???"

"பாட்டி என்ன இவ்வளவு சாதாரணமாக சொல்லிட்டிங்க??? இன்னும் 20 நாளில் எனக்கு திருமணம் நடப்பதாக இருந்தது??"

"அது தான் நடக்கலையே??"

"பாட்டி என்னால யோசிக்க கூட முடியல பாட்டி...என்னால இதை ஏத்துக்க முடியல"

"ஆதி நீ எந்த வீட்டில் பிறந்து இருக்கன்னு உனக்கு தெரியாதா??? நீ போய் ஒருத்தன்கிட்ட போய் பிச்சை எடுத்தா நம்ம குடும்ப மானம் என்ன ஆகிறது??? புலி பசித்தாலும் புல்லை திங்காது அதுவும் ஒரு நாள் அவன் கூட இருந்தவளை அடையனும்னு நினைக்கிற?? நீ அவளை கூட்டிட்டே வந்தாலும் நம்ம குடும்ப கௌரவம் என்ன ஆகும்னு நினைச்சியா??அவ போனா என்ன?? உனக்கு ஆயிரம் பொண்ணை கொண்டு வந்து நான் நிறுத்துறேன்..உன்னை பழி வாங்க அவன் நினைக்கிறான் எவ்வளவு தூரம் தான் அந்த வெறும்பய போறான்னு பார்க்கிறேன்"என்று குலசேகரி கூறினார்...

"பாட்டி அவனை நான் சும்மா விட மாட்டேன் பாட்டி" என்று கொதித்து எழுந்து கூறியவனை பார்த்து,"ஆதி சண்டை போடணும் தான் ஆனால் பொம்பளை புள்ளைக்கு வேண்டி ஊரறிய சண்டை போட கூடாது யா இனி அந்த புள்ளைக்காக நீ எங்கேயும் பேச கூடாது தெரியும்ல நம்ம குடும்ப மானத்தை பத்தி...நீ ராஜா யா தெருவுல போறவன் புத்தியை அந்த வெறும்பய காட்டலாம் நீ காட்ட கூடாது...அவனை எங்கே அடிக்கணுமோ அங்கே அடிப்போம்" என்று கூறியவர் அவனை பரர்த்து,"இனி அந்த பொண்ணை தேடி நீ போக கூடாது"என்று சர்வ சாதாரணமாக கூறி விட்டு அங்கிருந்து சென்ற அவனது பாட்டிக்கு அவனது மனதை பற்றி எல்லாம் கவலை இல்லை குடும்ப மானம் மட்டும் காற்றில் பறக்க கூடாது அவ்வளவே....ஆனால் அவரது பேரனால் அப்படி நினைக்க முடியவில்லை அது தான் விஷயமாகி போனது...அது அவனை எந்த அளவுக்கு கொண்டு செல்ல போகிறது என்பதை அங்கு யாரும் இந்நேரம் புரிந்து கொள்ள வில்லை...

மகனிடம் நடந்த எதற்கும் ஒரு வார்த்தை கூட பேச முடியாத சாரதா மகன் வருவதற்காக காத்து இருந்தார்... காலையில் இந்த பிரச்சனையெல்லாம் முடிந்து அபியிடமும் தாயிடமும் ஒரு வார்த்தை கூட பேசாமல் தனக்கு என்ன என்பது போல் சென்ற மகன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை...

அந்தப் பெண்ணும் சாரதா காட்டிய ஒரு அறையில் உள்ளே புகுந்த அவளும் இன்னும் வெளியே வரவும் இல்லை.. காலை, மதியம், மாலை என உணவுகள் சாரதா கொண்டு போய் கொடுக்க அந்தப் பெண்ணோ எந்த பதிலும் இல்லாமல் எங்கேயோ வெறித்துக் கொண்டு அமர்ந்து இருப்பதை பார்த்தவருக்கு எதற்காக இந்த பையன் இப்படி ஒரு பாவத்தை வாங்கி சுமந்து இருக்கான் என்று நினைக்க தோன்றாமல் இல்லை மூன்று முறை உணவு கொண்டு போய் கொடுத்தும் அந்தப் பெண் மறுத்துவிட்டாளே என அபிநந்தனாவை எண்ணி வருந்திக் கொண்டிருந்தார் சாரதா....

மாலை ஆனதும் ஆத்ரேயன் வீட்டுக்கு வந்தான் அவன் வந்ததும் வராமலும் அவனை வாசலில் சென்று வரவேற்க சென்றார் சாரதா தாயின் முகத்தில் எண்ணற்ற கேள்விகள் தன்னிடம் தொடுக்க இருப்பதை கண்டவன் எப்பொழுதும் போல கண்டும் காணாமலும் அவனது அறை நோக்கி செல்ல முனைந்தான் தம்பி போயிடாத நில்லு எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று அவனது தாய் அவரிடம் கூறவும் தான் அணிந்திருந்த சட்டையின் பட்டனை அவிழ்த்து முட்டிவரை மடக்கிக்கொண்டு புருவத்தை உயர்த்தி தாயை பார்த்தான்...

"தம்பி என்ன இதெல்லாம்?? எதுக்காக இதை எல்லாம் செய்துட்டு இருக்க???"என்று ஏதோ ஒரு தைரியத்தில் கேட்டு விட்டார்...

தாயை பார்த்தவனோ,"உங்களுக்கு வேற தனியா சொல்லனுமா??? நடந்ததை எல்லாம் வேடிக்கை நல்லா பார்த்தீங்களே??? இந்நேரம் புரிஞ்சு இருக்குமே???" என்று காட்டமாக தன் தாயை பார்த்து கூற இவனிடம் கேட்டதே தவறு என்று எண்ணி கொண்டாலும் அவருக்கு மனது கேட்காமல்," தம்பி விருப்பம் இல்லாமல் ஒரு பொண்ணை பலவந்தமாக கல்யாணம் செய்தது தப்பு பா..இந்த திருமணத்தில் பார் யாருக்குமே விருப்பம் இல்லை இப்படி யாருக்கும் விருப்பம் இல்லாமல் அந்த அடையனும்னு என்ன நிர்பந்தம் உனக்கு?? இதெல்லாம் நியாயமா பா" என்று மகன் கோபப்பட்டாலும் பரவாயில்லை என அவர் கேட்டு விட்டார்..

அதை கேட்ட மகனோ,"நியாயம் தர்மத்தை பத்தி யார் பேசுவதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாமல் போகிடுச்சு இல்லையா??"என்று மார்பில் கையை கட்டி கொண்டு தன் ஒற்றை புருவத்தை மட்டும் தூக்கி கொண்டு அவன் கேட்டான்..

அதை கேட்டதும் சாரதாவின் முகம் தொங்கி போனது...அதை பார்த்து அவனுக்கு வருத்தம் எல்லாம் எழவில்லை.. மாறாக ,"உன் பார்வையில் எனக்கு நியாயம் தர்மத்தை பற்றி பேச அருகதை இல்லாமல் இருக்கலாம் ஆனால் உனக்கு இருக்கு இல்லையா உன்னை அப்படித்தானே நான் வளர்த்தி இருக்கிறேன்..அப்போ உனக்கு நல்லா தெரிஞ்சு இருக்கும் தானே???" என்று அவனுடைய அம்மா நான் என்பதை அந்த இடத்தில் பூர்த்தி செய்ய அவனுக்கு ஒரு நொடி கண்கள் இடுங்கியது..

"எனக்கு நியாயம் தர்மத்தைப் பற்றி எல்லாம் மறந்துபோய் கிட்டத்தட்ட 15 வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு அதனால அதை யாரும் ஞாபகப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்று கூறினான்...

அதை கேட்ட அவரும் மகன் தன் மீது உள்ள கோபத்தில் தான் இதை கூறுகிறான் என்பதை புரிந்துகொண்ட அவருக்கு பெரிய வருத்தம் எல்லாம் எழவில்லை மாறாக ,"தம்பி நீ என்ன வேணா நெனச்சுக்கோ ஆனால் அந்த பொண்ணுக்கு விருப்பம் கிடையாது உன் கூட வாழ, அப்படி இருக்கும் பொழுது யாருக்குமே விருப்பம் இல்லாத ஒரு நிகழ்வை செய்துவிட்டு வந்து இருக்க இது ரொம்ப தவறு இப்படி பிடிச்சு வச்சு உன்னால வாழ முடியும்னு நினைச்சுட்டு இருக்கியா இல்லை அந்த பெண்ணை என்ன செய்வதாக உத்தேசம் அந்த பொண்ணு காலையிலிருந்து எதுவும் சாப்பிடலை தெரியுமா அந்த அறையே கதி என்று கிடக்குது எத்தனை நாளைக்கு அந்த பொண்ணை இப்படி அடைச்சு வைக்க போற???" என்று தானும் ஒரு பெண்ணாக அவள் நிலையில் இருந்து என்னை பார்த்து தன் மகனிடம் மகன் செய்வது தவறு என்பதை சுட்டிக்காட்டினார்....

அதைக் கேட்டதும் மகனுக்கு கொதித்து எழுந்தது தாயைப் பார்த்து ,"நான் அவளை கட்டிப்போட்டு ஒன்னும் வைக்கலையே என்னமோ கடத்திட்டு வந்த மாதிரி பேசிட்டு இருக்கீங்க???தாலி கட்டி கூட வாழத்தானே கூட்டிட்டு வந்திருக்கேன்...லுக் இப்போ அவ என்னுடைய மனைவி அவ விஷயத்துல யாரும் தலையிடுவது எனக்கு பிடிக்காது எனக்கு எப்படி அவ கூட வாழணும்னு தெரியும்...அவ இரண்டு வேளை தானே சாப்பிடல அதுனால ஒன்னும் செத்து போயிட மாட்டா..அவளை என்ன செய்யணும்னு யாரும் இங்கே சொல்லி கொடுக்க தேவை இல்லை... அவ இங்க தான் இருப்பா என்னுடைய மனைவியை இந்த வீட்டு மருமகளாக, என்னுடைய குழந்தைகளுக்கு அம்மாவாக, இங்க தான் இருப்பா அத பத்தி நீங்க எந்த கவலையும் பட தேவையில்லை.. அவளை பார்க்க எனக்கு தெரியும் அப்புறம் என்னுடைய வாழ்க்கையில் அபிப்ராயம் சொல்றத இத்தோட நிறுத்திக்கோங்க" என்று கூறிவிட்டு அவன் அவள் இருக்கும் அறையை நோக்கி சென்றான் ஆத்ரேயன்…

அதைக் கேட்ட சாரதா வருத்தத்துடன் மகன் செல்வதை பார்த்துக் கொண்டு நின்றார்.. இது ஒன்றும் அவருக்கு புதிதல்ல மகன் அவர் மனதை நோகடிப்பதும் புதிதல்ல அதனால் பிறருக்கு எப்படியோ அவருக்கு பத்தில் ஒன்று அவ்வளவுதான் அவன் கேட்க மாட்டான் என்று தெரிந்தும் தன் மனம் கேட்காமல் கூறியது தன் தப்புதான் என எண்ணினார் சாரதா…

அந்த அறையின் கட்டிலில் அமர்ந்து காலை மடக்கி தலையை கால் முட்டி மீது பக்கவாட்டில் சாய்த்தது போல அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் அபிநந்தனா இவனிடம் எத்தனை நாட்கள் இப்படியே பயந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பது இதனை கேட்க யாருமே இல்லையா?? என எண்ணிக் கொண்டே அழுது கொண்டு இருந்தாள்... அவள் முகம் மிகவும் வாடிப்போய் இருந்தது இனி தன்னை காப்பாற்ற யாருமே வர மாட்டார்கள் எல்லோரும் போய்விட்டார்கள் எல்லோரையும் நானே விரட்டி விட்டேன் என எண்ணிக் கொண்டு எழுந்து அவள் முன்னால் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு வந்து நின்றான் ஆத்ரேயன்..அவனது அழுத்தமான காலடி ஓசை அந்த அறையை நிறைத்தது அந்த சத்தத்தில் அவள் நிமிர்ந்து பார்க்க அங்கு அவன் அவனை கண்டதும் சட்டென்று வேகமாக எழுந்து நின்றாள் அபிநந்தனா...

அவளுக்கும் அவனுக்கும் இடையில் இரண்டு அடி இடைவெளி இருக்க அவன் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு அவன் அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே பேன்ட் பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்தான்...சிகரெட்டை எடுத்தவன் அதில் ஒன்றை அவன் வாயில் வைத்தவன் பற்றவைத்து புகையை உள்ளிழுத்துக்கொண்டு அவளைப் பார்த்து ,"எத்தனை நாள் சாப்பிடாமல் இருப்பதால் உத்தேசம்???" என்று கேட்டான்...

அவளோ அதற்கு எந்த பதிலும் கொடுக்காமல் அவனை நிமிர்ந்து கூட பார்க்க விருப்படாமல் நின்று கொண்டு இருந்தாள் அதைக்கண்ட அவனும் விடாமல் ஒரு அடி அவளை நோக்கி நடந்து உள்ளிழுத்த புகையை மெதுவாக அவள் உயரத்துக்கும் குனிந்து புகையை கிட்டத்தட்ட அவள் முகத்திலேயே விட்டான்...அவன் அருகில் வந்ததுமே அவளுக்கு குப்பென்று சிவந்து இருக்க இத்தனை நேரம் அவனை மனதுக்குள் திட்டி கொண்டிருந்தது எல்லாம் பின்னோக்கி சென்றவள் ஒரு நொடி அவன் பின்னோக்கி சென்று விட மாட்டானா என்று தான் அவளுக்கு இருந்தது அவனது அருகாமையும் அந்த புகையின் நெடியும் வேறு அவளுக்கு இருமல் வர அதைப்பார்த்த அவனும் கண்டு கொள்ளாமல் அவளிடம் ,"இதோ பார் நான் தாலி கட்டி உன்னை அழைச்சுட்டு வந்தது பூஜை செய்ய இல்லை இல்ல இதே மாதிரி ஒரு ரூம்ல உட்கார்ந்து நீ அழுதுட்டு இருக்கவும் இல்லை என்னுடைய மனைவியா நீ வாழ்ந்து தான் ஆகணும்.. இதுல உனக்கு முன்னாடியே நான் சொன்ன மாதிரி யாருடைய விருப்பமும் எனக்கு தேவை இல்லை.. சோ சாப்பிடாம இருக்கிறது பட்டினியாக கிடந்து சாகலாம் என்று நினைக்கிறது எப்படி சாகலாம் யோசிக்கிறது ஐயோ எல்லாரும் என்னை விட்டுட்டு போயிட்டாங்க பொலம்பிட்டு இருக்கிறது இதெல்லாம் எனக்கு துளியும் விருப்பம் இல்லை.. நீ வேணா இதெல்லாம் முயற்சி செய்து பார்க்கலாம் நான் உன்னை தடுக்க எல்லாம் மாட்டேன் ஆனால் இதெல்லாம் எத்தனை நாளைக்கு செய்ய முடியும் மட்டும் யோசிச்சிட்டு நீ இதற்கெல்லாம் தயாராக இரு..அண்ட் நான் இல்லாமல் இருக்கும் போது நீ சாப்பிடுவியோ, அழுவியோ, சாப்பிடாமல் இருப்பியோ எனக்கு தெரியாது அதெல்லாம் உன்னுடைய விருப்பம் ஆனால் இந்த வீட்டுக்குள் நான் இருக்கும் போது நீ என்னுடைய மனைவியா இருந்து தான் ஆகணும் இல்லைனா என்ன நடக்கும்னு உனக்கு நல்லாவே தெரியும்" என்று அவன் கூறினான்..

அதை கேட்ட அவளும் ,"சீ விருப்பம் இல்லாத பெண்கிட்ட போய் இப்படி எல்லாம் பேச" என எண்ணியவளுக்கு வாய் வரை துடித்ததை அடக்கி கொண்டாள்… இது போன்ற மிருகத்தனமாக இருக்கும் ஒருவனிடம் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும் என்று எண்ணியவள் அமைதியாக இருந்தாள்... அதை புரிந்து கொண்டானோ என்னவோ அவனுடைய சிகரெட்டின் கடைசி நுனியை அழுத்தமாக உள்ளே இழுத்து விட்டவன்,"யெஸ் நீ யோசிக்கிறது சரி தான் எனக்கு என்னுடைய விருப்பம் மட்டும் தான் வேணும் சோ இப்போ நீ சாப்பிட்டு அதோ அந்த கபோர்டில் புது புடவை இருக்கும்.. இப்போ உன் கையில் பூ கொண்டு வந்து கொடுப்பாங்க ....சோ தயாராகி இரு இன்னிக்கு உனக்கும் எனக்கும் முதல் இரவு" என்று கூறியவன் அவளது அதிர்ந்த விழிகளை பார்த்து கொண்டே அங்கேயே நான் பேச வந்தது எல்லாம் பேசியாகி விட்டது என எண்ணி அங்கு நின்றான்...

" என்ன முதல் இரவா??" என வாய் திறந்து கேட்டே விட்டாள்,"என்னால முடியாது என்னால இதை நினைச்சு கூட பார்க்க முடியாது"என்று அவள் கூறி விட்டாள்...இதுக்கு கூட மறுப்பு தெரிவிக்கவில்லை என்றால் எப்படி என்பது போல அவள் கூற அவனோ ,"நீ ஏன் நினைச்சு பார்க்கிற எல்லாம் நடக்கும் போது நினைச்சா போதும் நான் வரும் நீ தயாராக இருக்க..."

என்று கூறி விட்டு அவள் கூற வருவதை எதையும் கேட்காமல் சென்று விட்டான் ஆத்ரேயன்…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top