Share:
Notifications
Clear all

அத்தியாயம் 4

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

"உங்க பையன் என்ன பண்ணி இருக்கார்ன்னு தெரியுமா??? கல்யாண பத்திரிக்கை வைக்க போன பொண்ணை கடத்திட்டு வந்து இருக்கான் ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது??? வெளியே தெரிஞ்சா எங்க குடும்ப மானம் போயிடும்" என்று கூறினார் சிவபிராகசம் ...

அவருக்கு உயிரே இல்லை தன் பெண்ணுக்கு திருமணம் முடிந்து விட்டது என்று கூறியது முதல் இதோ தன் மகளை காணும் வரை இருந்தும் அவரால் தாள முடியாமல் இருக்க சாரதாவிடம் முறையிட்டு கொண்டு இருக்க அவருக்கும் என்ன நடந்து இருக்கிறது என்று தெளிவாக இந்த நேரம் தெரியவில்லை அவருக்கே இதோ ஒரு இருபது நிமிடத்துக்கு முன் தானே மகன் திருமணம் செய்து விட்டான் என்பது தெரியும்...

அவன் ஒரு திருமணம் செய்து கொள்ள மாட்டானா என பல வேண்டுதல்கள் அவர் வைத்திருக்கும் வேளையில் இப்போது மகன் திருமணம் செய்து விட்டான் என்பதை எண்ணி அவரால் சந்தோசிக்க முடியவில்லை...இப்படி போய் செய்து இருக்கிறானே என்று தான் எண்ணினான்...

"அவங்க கிட்ட எதுக்குங்க பேசிட்டு இருக்கீங்க இப்படி எல்லாம் செய்யற இவங்க எல்லாம் மனுசங்களா???" என கொந்தளித்து கேட்ட மைதிலி தன் தாயை கண்டதும் தாயின் மார்பையே கட்டி கொண்டு இருக்கும் அபியின் கண்ணீர் அவரது மார்பை நனைத்து இருந்தது அவருக்கு புரிந்தது தன் மகள் நன்றாக பயந்து இருக்கிறாள் என்று அதையே தான் உணர்ந்து இருந்தார் சிவபிராகசம்.... இன்னும் ஆதி வரவில்லையே என சிவபிராகசம் எண்ணி கொண்டிருக்கும் போது அந்த வீட்டுக்குள் நுழைந்து இருந்தான் ஆதி...

அவன் கண்களில் ஆத்திரம் தாண்டவம் ஆட இந்த வீட்டுக்குள் என்னை கால் வைக்க வைத்து விட்டானே என எண்ணிய ஆதிக்கு தன்னவளை இங்கே இருந்து அழைத்து சென்றே ஆக வேண்டும் என எண்ணி தான் இங்கே வந்து இருக்கிறான் முடிந்தால் அந்த ஆத்ரேயனை இரண்டு அடி வைத்தால் கூட என்று கூட எண்ணி கொண்டு இருக்கிறான்...அவன் கண்களில் ஆத்திரம் கை வேறு துடித்து கொண்டிருந்தது உச்சகட்ட கோபத்தில் அவன் இருப்பதற்கான அனைத்து விடயங்களும் அங்கு வெளிப்பட்டன...

ஆதியை கண்டதும் சாரதா மேலும் அதிர அவனோ அவரை பார்த்து முறைத்து இருந்தாலும் அவரை ஒரு பொருட்டாகவே பார்க்காமல் ,"அங்கிள் இன்னும் எதுக்கு இங்கே நின்னுட்டு இருக்கீங்க கிளம்புங்க" என்று ஆதியின் கடினமாக குரல் அந்த ஹாலை நிறைத்து இருக்க அவனது குரலை கேட்டதும் சட்டென்று திரும்பிய அபி நந்தனாவுக்கு அவனை பார்த்ததும் அதிர்ச்சி எழ, அவளுக்கோ இப்படி ஆகி விட்டதே என்ற சுயபச்சாதாபத்துடன் அவனை பார்க்க அவள் மீது காதல் கொண்டவனுக்கு அவளை வாரி அணைத்து ஆறுதல் கூற வேண்டும் என்று தான் தோன்றியது...

தன் தாய் தோளில் சரணம் கொண்டிருந்தவள் அருகில் சென்றவன் அவளது தோளை தொட்டு திருப்பியவன் அவளது முகத்தை தன் கைகளில் ஏந்தினான்," அபி எதுக்கு அழுதிட்டு இருக்க உனக்கு நான் இருக்கேன் நடந்தது எல்லாம் ஒரு கனவா நினைச்சுக்கோ ரோட்டுல போற நாய் கடிச்சா மறுபடி அதை நினைச்சு அழுதிட்டா இருப்போம் காயத்துக்கு மருந்து தானே போடுவோம் அது மாதிரி ஒரு விபத்து தான் இது...கிளம்பு போகலாம்..உனக்கு நான் இருக்கேன் இப்போவும் எப்போவும் நான் இருக்கேன் ..இருப்பேன் என்னை நம்புற தானே??? " என்று கடினமாக கூறினான்...

அவனுக்கு அந்த ஆத்ரேயன் கட்டி இருக்கும் மஞ்சள் கயிறு எல்லாம் ஒரு பொருட்டல்ல அவனுக்கு பயந்து போயிருக்கும் அவனது உயிருக்கு உயிரானவளை அவன் சமாதானம் செய்ய வேண்டும் அவளை இங்கிருந்து அழைத்து செல்ல வேண்டும் அவ்வளவே அவனுடைய எண்ணமாக இருக்க அவனது தொடுகையில் அவளும் நடந்த சம்பவத்தில் இருந்து தன்னை தேற்றி கொள்ள முயற்சி செய்தாள்... இன்னும் அவள் கண்கள் சிவந்து தான் போய் இருந்தது...ஆனாலும் தன் குடும்ப ஆட்களை கண்டதும் அவள் இலேசாக தெளிந்து இருந்தாலும் அவன் வருவதற்குள் ஓடி விடலாமா என்று தான் அவள் எண்ணினாள்...அவள் எண்ணத்தை முறியடிக்கும் விதமாக,

"ஆனால் அந்த நாய் கடிச்ச பூனைக்கு மாட்டுக்கு போட்டு இருக்கிற மாதிரி மூக்காணங்கயிறு கட்டி அந்த பிடியை நாய் வைச்சு இருந்தா என்ன செய்விங்க மிஸ்டர் ஆதித்தியன்??? என்று இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டு கொண்டே மாடி படிகளில் இருந்து இறங்கி வந்தான் ஆத்ரேயன்...

அவனைத்தான் தேடிக்கொண்டிருந்தான் ஆதியும் மிகச் சரியாக அவனை வந்துவிட அவனது கண்கள் ஆத்ரேயனை கொன்றுவிட வேண்டும் என்று கூட நினைத்தது....

அவனும் முடிவாக தானே இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறான் இவர்கள் ஆடுவதற்கு எல்லாம் அவன் ஈடு கொடுத்தால் தானே...

அவனைப் பார்த்ததும் அபியின் முகத்தில் தாங்கி இருந்த அவனது கைகளை அகற்றியவன் அவளை தன் அருகே நிறுத்தி கொண்டு," நீ பொறுக்கித்தனம் பண்ணி இருக்கன்னு உனக்கு தெரியலையா??? உன்னை சும்மா விட மாட்டேன் டா அவ என்னுடையவள்ன்னு தெரிஞ்சும் நீ இதை செய்து இருக்க அப்படின்னா உனக்கு என்ன திமிர் இருக்கும்???" என்று ஆதி கேட்டான்..

அதைக்கேட்ட ஆத்ரேயனின் கண்களில் ஆதி மற்றும் அபியின் நெருக்கம் எல்லாம் பட்டு இருந்தது வேறு விசயம் அவன் எப்படி என் மனைவியை பிடிக்கலாம் என கணவனாக அவனுக்கு கோபம் எழுந்து இருந்தது அதனால் ,"நான் பொறுக்கித்தனம் பண்ணுனது இருக்கட்டும் ஏன் உங்க பாஷையில பொறுக்கி ஆகவே இருக்கட்டும் ஆனால் இப்போ நீ பண்ணிட்டு இருக்க அதற்கு அர்த்தம் என்ன??" என்று கேட்டான்...

இவர்களோ குழம்பி அவனை பார்க்க சிவப்பிரகாசம் சூடாக," என்ன நெனச்சிட்டு இருக்க?? என்னுடைய மகளை ரோட்டுல இருந்து கடத்திட்டு வந்திருக்க உன்னை நான் சும்மா விட மாட்டேன் இப்பவே போலீசுக்கு கூப்பிடுறேன்" என்று கொதித்தார் ..

அதைக் கேட்ட அவனும் அசராமல் ,"உங்க இரண்டாவது பொண்ணு நல்லபடியா வீட்டுக்கு வந்துட்டாங்கிற தைரியத்துல பேசிட்டு இருக்கீங்களா எப்ப வேணாலும் என்னால யாரை வேணாலும் தூக்க முடியும் எனக்கு இந்த நீதி ,நியாயம், தர்மம் எதைப் பற்றியும் கவலை கிடையாது இதுக்கெல்லாம் அருகதை பட்டவங்க நீங்க தான் உங்களால உங்க பொண்ணோட வாழ்க்கை பாதிக்கப்பட போகுதுன்னு மறந்திட வேண்டாம்.. என்கிட்ட பேசும்போது யோசிச்சு பேசுறது ரொம்ப நல்லது" என்று கூறினான் ஆத்ரேயன்...

" என்ன பொறுக்கித்தனம் பண்ணிட்டு நியாயம் பேசிட்டு இருக்கியா ஏன் உன்னால மட்டும்தான் கடத்த முடியுமா எங்களால செய்ய முடியாதா நீ அப்படி என்னதான் செய்யறேன்னு நான் பாக்குறேன்" என்று கடுப்போடு கூறினான் ஆதி...

"என்ன செய்யப் போறன்னு பார்க்க போறியா?? ஹாஹா அதுக்கு நீ இன்னும் வளரனும் ப்ரோ!!! உன்னால எதுவும் பண்ண முடியாதுன்னு நான் சொல்றேன் இவ்வளவு தூரம் செஞ்சிருக்கிற நான் இதுக்கு பின்னாடி என்ன நடக்க போகுதுன்னு கூட யோசிக்க மாட்டேன்னா??? இவ கழுத்துல நான் தாலி கட்டி இருக்கேன் இவளுக்கு பிடிக்கலைனாலும் இப்போ இவ என்னுடைய மனைவி அவ என்கூட வாழ்ந்து தான் ஆகனும் என் கூட இருந்துதான் ஆகணும் அதுக்கு யார் தடையாக இருந்தாலும் அவங்களையும் மொத்தமா யோசிக்காம அழிச்சிடுவேன்... உனக்கு நிச்சயம் பண்ணின பொண்ணை நான் கல்யாணம் செய்து இருக்கேன் அப்ப கூட தெரியலையா என்னைப் பற்றி மிஸ்டர் ஆதித்தியன்???" என்று நக்கலாக கூறினான்

"ஆனா இதுல என் பொண்ணுக்கு எங்களுக்கு யாருக்கும் விருப்பம் கிடையாது" என்று குமைந்து மைதிலி கூறினார்..

"அதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் கிடையாது" என்று எடுத்தெறிந்து அவன் கூறினான்... அதற்குள் வெளியே ஏதேதோ சலசலப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது...சாரதா அம்மா வேறு இங்கு என்ன நடக்க போகிறதோ என்று புரியாமல் முழித்து கொண்டிருந்தார்...அவரது மகனின் முகமே எதற்கும் அவன் தயாராக இருக்கிறான் என்பதை கூறியது...அவன் செய்வது தவறு என எடுத்து கூற தோன்றுகிறது ஆனால் அவர் ஏதாவது கூற போனால் அவன் வாயில் வருவதை எல்லாம் கேட்க நேரிடும் அதனால் அவர் அமைதியாக இருந்தார்...

அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆதித்தியன் சிவப்பிரகாசம் மற்றும் மைதிலியை பார்த்து," இவன் கிட்ட எதுக்கு பேசிட்டு இருக்கீங்க வா அபி நாம போகலாம் இவனை சந்திக்கிற இடத்தில நான் சந்திக்கிறேன்...இவன் எதுக்காக இதை எல்லாம் செய்து இருக்கான்னு எனக்கு தெரியும் மோதனும்னு இருந்தா நேருக்கு நேர் மோதனும் அதெப்படி நேருக்கு நேர் மோத தான் இவனுக்கு தெரியாதே" என்று கூறிய ஆதி அவளது கையை பிடிக்க போக அதற்குள் அவனுக்கு அருகே நின்று கொண்டிருக்கும் அவளது கையை பிடித்து தன் பக்கமாக இழுத்து கிட்டத்தட்ட அவள் இடையை வளைத்து தன் அருகிலேயே நிறுத்தி கொண்டான் ஆத்ரேயன்...

அவளோ அதிர அதை கண்டவனின் கை அவளது இடையில் இலேசாக அழுத்தம் கொடுத்து,"என்ன டி தொட்டுத் தாலி கட்டினவன் தொட்டா அதிர்ந்து பார்க்கிற யாரோ ஒருத்தன் தொடும்போது கையை நீட்டிட்டு போற?? நான் உன் புருஷன் டி.. " என்று அவளை பார்த்து அழுத்தமாகவும் அதே நேரம் குதர்க்கமாகவும் கேள்வி கேட்க அவளோ அதிர்ந்தாள் அதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்து இருக்க அவர்களை எல்லாம் பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்டான்...

"இவ என்னுடைய மனைவி இவளை கூட்டிட்டு போக நீங்க எல்லாரும் ஆசைப்படறீங்க நீங்க தாராளமாக கூட்டிட்டு போகலாம் ஆனா இவ கழுத்துல தொங்குற தாலி நான் கட்டினது யாருக்கெல்லாம் இவரை அழைச்சுட்டு போகணும்னு ஆசை இருக்கோ அவங்க எல்லாம் இவ கழுத்துல தொங்கிட்டு இருக்கிற தாலியை அத்துட்டு கூட்டிட்டு போகலாம் அதாவது புருஷன் உயிரோடு இருக்கும்பொழுதே உங்க பொண்ணை நீங்க விதவை ஆக்கலாம்????" என்று கூறும் போது தான் பெற்றவர்கள் ஆன சிவபிராகசத்திற்கும் மைதிலிக்கும் தாலி என்ற ஒன்று நியபாகத்துக்கு வந்தது...

அதை கண்டவர்கள் அதிர்ந்தனர்... அதெப்படி முடியும் என்று யோசித்தனர்.... இவனைப் போல ஒருத்தன் என்றால் அதை செய்து இருப்பார்களோ என்னவோ ஆனால் சிவப்பிரகாசம் மற்றும் மைதிலியால் அதை செய்யக்கூட முடியாது ஏனெனில் தாலி குடும்பம் கணவன் என சாங்கிய நம்பிக்கைகள் மீது அலாதி நம்பிக்கை கொண்ட குடும்பம் மைதிலி அவர்களுடையது அப்படி இருக்க அவர்களால் இந்த காரியத்தை செய்யவே முடியாது...

அதை தெரிந்து தானே அவன் இப்படி ஒரு செக் வைத்திருக்கிறான் ...அவர்கள் அதிர்வதை பார்த்த அவனோ,"அவளோட தாலியை உங்க கையால அத்துட்டு அவளை அழைச்சிட்டு போங்க" என்று கூற அவன் கூறியதை கேட்டு அதிர்ந்த மைதிலி செய்ய முடியாமல் திணறினார் ஏனெனில் அவரும் சுமங்கலியாக இருக்கும் பொழுது எப்படி அவர் கையால் வேறொரு பெண்ணின் கழுத்தில் உள்ள தாலியை அவிழ்க்க துணிவார் என அவர் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சிவப்பிரகாசத்திற்கு அழைப்பு வந்தது அதை எடுக்காமல் கட் செய்தார் அவர்....

"என்ன ஆன்ட்டி பார்த்துட்டு இருக்கீங்க அந்த கருமத்தை அவுத்து போட்டு அவளை அழைச்சிட்டு வாங்க??? நான் இருக்கேன் அவளுக்கு??" என்று கூற அவரோ,"அது எப்படி தம்பி தாலியை போய் அவிழ்க்க முடியும்??" என தயங்கினார் மைதிலி ,"நீங்க இப்படி யோசிச்சிட்டு இருந்தா அபியை இங்கே இருந்து நம்மனால அழைச்சிட்டு போக முடியாது" என்று கூறி அவனே ஆத்ரேயன் முன் வந்தான்....

அவள் கழுத்தில் இருக்கும் தாலியின் மீது கை வைக்க போக ஆத்ரேயனின் பிடி அவளது இடையில் அழுத்தம் கொடுத்தது... மறுகையில் ஆதியின் கையை முறுக்க பிடித்து இருந்தான்.. அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை அவள் மனம் அலைப்பாய்ந்து கொண்டிருந்தது வரும் வழியில் இவன் பயப்படுத்தியதால் வந்த பயம் அவளை வாட்டி வதைத்தது... அவன் கூறிய செய்தி இன்னும் அவள் காதில் எதிரொலித்து கொண்டே இருந்தது...

"என்ன நான் ரோட்டுல வைச்சு தாலி கட்டின என் பொண்டாட்டி உன் தாலியை அவிழ்க்க போறான் நீயும் அமைதியா இருக்க நான் சொன்னது எல்லாம் மறந்துருச்சா" என்று அவள் செவிக்குள் ஒரு வித நக்கல் குரலில் கேட்டான்...

அதில் திடுக்கிட்ட அவளோ அவனை பார்க்க அவனது கோபத்தில் சிவந்த விழிகள் அவளை அச்சுறுத்தியது..அந்த குரல் அவனுக்கு ஏதேதோ எண்ணங்களை விதைத்தது..அவன் அவள் இந்த வீட்டை விட்டு காலை எடுத்து வெளியே வைத்தால் என்ன எல்லாம் நடக்கும் என வரும் போது அவன் மிரட்டியது நியாபகத்துக்கு வர அவளோ அனைவரையும் பார்த்து,"நான் எங்கேயும் வரல வெளியே போங்க நான் தாலியை கழட்ட மாட்டேன்"என்று அவர்கள் என்னவோ கழட்ட வந்தது போல முறுக்கி பிடித்து கொண்டவளோ அவர்களின் நலன் கருதி கூறி விட்டாள் மென் மனம் கொண்ட அபி நந்தனா...

அவள் இப்படி தான் சொல்ல வேண்டும் இப்படி சொல்லித்தான் ஆக வேண்டும் என்பது ஏற்கனவே விதிக்கப்பட்ட ஒன்று என்றாகும் போது அதை மாற்ற முடியாது அல்லவா????....அவள் அதை கூறியதும் ஆத்ரேயனின் முறுக்கு மீசைக்கு இடையே அவனது உதடுகள் இலேசாக விரிந்தன...அவள் அப்படி கூறவில்லை என்றாலும் அவன் மனைவியை அவன் அனுப்பி இருக்க மாட்டான் அது வேறு விஷயம் என்றாலும் அவள் வாயில் இருந்தல்லவா இந்த வார்த்தைகள் வர வேண்டும் அதை கேட்டு அவனது முகம் சுருங்க வேண்டும் அதை ஆத்ரேயன் கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டுமே... அதனால் மீசையை முறுக்கி விட்டபடி ஆத்ரேயன் கம்பிரமாக அமர்ந்து இருந்தான்...

இதை இவள் வாயில் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை குறிப்பாக ஆதித்யன் எதிர்பார்க்கவில்லை..." என்ன உளறிட்டு இருக்க???அவன் உன்னை ஏதாவது மிரட்டினானா???அவனுக்கு எல்லாம் பயந்துட்டு நீ பேசிட்டு இருக்காதே உனக்கு நான் இருக்கேன்"என்று ஆதி ஆதரவாக கூறி கொண்டு இருந்தான் ..

சிவபிராகசமும் தன் மகளிடம் ,"மா வா மா போகலாம் இவன் என்ன பண்ணிடுவான்னு நான் பார்க்கிறேன்" என்று கூற அவளோ இரு தலை கொல்லி எறும்பாக தவித்து வந்தாள்...

அந்த நேரம் ஆதிக்கு ஒரு அழைப்பு வந்தது அவனது வீட்டில் இருந்து தான் அழைப்பை ஏற்காமல் இருக்க முடியாது...அது அவனுடைய பாட்டியுடையதாக இருந்தது...

"இவங்க எதுக்கு கால் பண்றாங்க ஒருவேளை விஷயம் தெரிந்து இருக்கும்மோ???" என்ற சந்தேகம் அவனுக்கு எழுந்தது அவன் நடந்த விஷயத்தை வீட்டிலும் கூட மூச்சு விடவில்லை காதும் காதும் வைத்ததுபோல காரியத்தை முடிக்க தான் ஆதித்யன் எண்ணி இருந்தான் ஆனால் இப்போது என்ன செய்வது என தடுமாறிக்கொண்டே சுற்றி இருப்பவர்களை எல்லாம் பார்த்துக்கொண்டு தனக்கு பொங்கும் கோபத்தை எப்படி அடக்குவது என்று தெரியாமல் அவர்களிடம் இருந்து நான்கு அடி தள்ளி நின்று போனை எடுத்தான்...

" ஆதி எங்கே இருக்க???" என்று கேட்டார் பாட்டி குலசேகரி ..

"பாட்டி நான் அது வந்து" என்று இதுவரை பாட்டியிடம் பொய் கூறி இராத அவருடைய ஆசை பேர மகன் பாட்டியிடம் எப்படி பொய்க் கூறுவது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்க அதை உணர்ந்த பாட்டி,"பொய் சொல்ல முயற்சி பண்ணாத ஆதி...உடனே அங்கிருந்து கிளம்பி வா உனக்கு அந்த பொண்ணு வேண்டாம்..அடுத்தவன் எச்சிலை சாப்பிடுற அளவுக்கு என் பேரன் ஒன்னும் தரம் குறைஞ்சு போயிடல இன்னும் பத்து நிமிஷத்துல நீ வீட்ல இருக்க" என்று கூறி போனை வைத்து விட்டார்..அதை கேட்ட அவனோ அதிர்ந்தான் கூடவே இதை பார்த்த ஆத்ரேயன்," என்ன மிஸ்டர் அழைப்பு வந்துடுச்சா??? தாலியை கழட்ட ரெடியா இருந்த வா இப்போ கழட்டு வா" என்றான் ஆத்ரேயன்...

அவனது முக மாற்றத்தை கண்ட சிவபிராகசமும் மைதிலியும் என்ன என்று புரியாமல் தவிக்க அவன் இருக்கும் தைரியத்தில் மகளை மீட்டு அழைத்து சென்று விடலாம் என்று கொண்டிருந்த அவர்களின் எண்ணத்துக்கு மாற்றாக அவன் ஆத்ரேயன் அவ்வளவு தூரம் பேசியும் அங்கிருந்து விடைப்பெற்றான் ஆதி...

இதை எதிர் பார்க்காத அவர்களோ ஆதி என்றழைக்க தான் ஆசைப்பட்ட பெண் இனி தனக்கு கிடைக்க போவதில்லை என பாட்டி பேசியதை கேட்டு தான் ஆசைப்பட்ட பெண்ணின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்த்தவன் இனி இவள் எனக்கானவள் இல்லை என நினைக்க கூட முடியாமல் அவன் அவ்விடம் விட்டு வெளியேறினான் ஆதி...

அதை கண்ட ஆத்ரேயன் முகத்தில் வெற்றி புன்னகை மிளிர அவளின் தாய் தந்தையை பார்த்து, "இனி உங்களுக்கு என்ன வேலை அதான் உங்க பெண்ணே தாலியை கழட்ட மாட்டேன்னு சொல்லிட்டாளே இங்கிருந்து கிளம்புங்க" என்று வார்த்தையாலேயே தன் மனைவியின் கண்களில் வழியும் கண்ணீரை பார்த்து கொண்டே கூறினான் ஆத்ரேயன்... அவர்களோ, " என்ன மிரட்டறியா??" என கேட்க,

"இல்லையே என் முடிவை சொல்றேன்...இதோ பாருங்க உங்க விருப்பமோ, உங்க பொண்ணு விருப்பமோ இல்லை யார் விருப்பமும் எனக்கு தெரிய தேவை இல்லை...அவ என்னோட மனைவி என் வீட்டில் அவ இருப்பா என் கூட வாழ்வா அவளை எப்படி என் கூட வாழ வைக்கணும்னு எனக்கு நல்லா தெரியும் அதற்கு யார் தடையா வந்தாலும் அழிச்சிட்டு போய்ட்டே இருப்பேன்...என்னை பொறுத்தவரை நான் நினைச்சது மட்டும் தான் எனக்கு நடக்கணும் அதற்கு இதோ இங்க நடந்த எங்க கல்யாணம் தான் சாட்சி..நீங்க இந்த கல்யாணத்தை எதிர்க்கலாம்.. அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை..மிஸ்டர் என்னை நீங்க எதிர்க்க நினைக்கலாம் ஆனால் உங்க ஒரு பொண்ணு வாழ்க்கையே உங்களை பொறுத்தவரை கேள்விக்குறியாகி இருக்கிற நேரத்தில் உங்களுடைய அடுத்த பொண்ணோட வாழ்க்கையையும் கேள்வி குறியாக்கிட மாட்டிங்கன்னு நினைக்கிறேன் நீங்க எனக்கு எதிரா வைக்கிற ஒவ்வொரு அடிக்கும் திருப்பி எதிர்வினை கண்டிப்பாக நடக்கும் இப்போ கூட உங்க இரண்டாவது பொண்ணை தனியா விட்டுட்டு தான் வந்து இருக்கீங்க போல" என்று கூற அதை கேட்ட அவர்களோ அதிர்ந்தனர்...

அதை கேட்டு அபியும் அதிர்ந்து," அம்மா அப்பா இங்கே இருந்து போங்க என் வாழ்க்கையை நான் பார்த்துகிறேன்...உங்களை நீங்க பார்த்துக்கோங்க" என்று கூற, அதற்குள் சிவபிராகசத்திற்கு மீண்டும் அழைப்பு வர ஆத்ரேயன் அவர்களை பார்த்து,"போனை எடுங்க" என்று கூறினான்..

போனை எடுத்ததும் ஊடகவியாளர்கள் போலும் அவர்கள் என்ன சார் உங்க பொண்ணுக்கும் மிஸ்டர் ஆத்ரேயனுக்கும் கல்யாணம் ஆகிடுச்சாமா?? அப்போ மிஸ்டர் ஆதித்தியன் நிலைமை ??? உங்க பொண்ணு தான் ஆசைப்பட்டாங்கலாம்" என்று கூற அதை கேட்ட அவர்களோ அதிர்ந்தனர்...

அப்போ ஊருக்கே தெரிந்து விட்டது போல என அதிர்ந்த சிவபிராகசத்துக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை... இனி மகள் வாழ்க்கை இவனுடன் தானோ என எண்ணினர் ஊருக்கே தெரிந்து விட்டதே என் மானமும் சேர்ந்து போய் விட்டதே இதை எல்லாம் செய்தவன் இவன் தானே இவன் பெயர் எங்கேயும் வெளியே வராமல் எங்களை ஊர் முழுக்க சந்தி சிரிக்க வைத்து விட்டானே??? இவனை எதிர்க்க எண்ணினால் இனியும் ஏதாவது செய்வானோ என அவர்கள் நொடியில் பயந்து மகளை இங்கு விட மனமின்றி அப்படியே சென்றனர்...இந்த காலனிடம் தன் மகள் என்ன வதைப்பட போகிறாளோ என எண்ணிய அவர்களுக்கு இப்படி இங்கு மகளை விட்டு செல்ல மனமில்லை என்றாலும் அவனை எதிர்க்கவும் துணிவின்றி அங்கிருந்து பிரியாவிடை பெற்றனர் அபியின் பெற்றோர்....



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top