Share:
Notifications
Clear all

அத்தியாயம் 33

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அவர்களின் சண்டையும் மோதலும் பிரச்சினைகள் நடந்த இடம் முதல் கொண்டு எல்லாம் பேசினர்... அந்த மழையில் அமர்ந்து கொண்டு இருவரும் சரக்கடித்து கொண்டே ஒவ்வொரு விஷயத்தையும் பேச அவர்களது மனதில் உள்ள பாரமும் கரைந்து போனது...

ஒருவர் மனதில் என்ன உள்ளது என்பதை மற்றவர்களும் புரிந்து கொண்டனர் அதனால் இருவருக்கும் மற்றவர்கள் மீது மதிப்பு வந்தது என்னவோ உண்மைதான்..

மழையில் அவர்கள் இருவரும் சரக்கடித்துக் கொண்டிருக்க அதை குடும்பமே நின்று கார் போர்டிகோவில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்... அவர்களுக்கு எட்டாவது அதிசயமாக இருந்தது இந்த காட்சி... மழையோடு மழையாக அவர்கள் பேசி தீர்த்தனர்....பிறகு கையில் உள்ள பியரும் முடிய மழையும் நிற்க இவர்கள் பேச்சும் முடிந்தது...

ஆனால் இவர்களின் மனைவிமார்கள் இருவருக்கும் அங்கு என்ன நடக்கிறது என்று தெரிய வேண்டும்.. ஆனால் அவர்களை தொல்லை செய்ய வேண்டாம் என்பதால் அவர்கள் இருவரும் அமைதியாக இருந்தனர் பெரியவர்கள் இருவரும் கண்களை துடைத்துக் கொண்டே அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தனர்...

அதற்குள் மழையும் நின்றுவிட ஆதி மற்றும் ஆத்ரேயன் எழுந்து தோளில் கையை போட்டு கொண்டு தொப்பலாக நனைந்தபடி வர, அதை கண்டதும் குடும்பத்தார் சிரிக்க அவர்களின் மனைவிமார்களோ ஆர்ப்பரித்து கொண்டு வந்து அவர்களை கட்டி அணைத்து கொண்டனர்...அவர்களும் சிரித்து கொண்டே அவரவர் மனைவியை அணைத்து கொள்ள இந்த காட்சியை கண்ட பெரியவர்கள் அகம் மகிழ்ந்து போயினர்..

இந்த நாளுக்காக தானே அவர்கள் காத்து இருந்தனர்...நெடு நாளாக மோதி கொண்டாலும் இவர்கள் பல விதத்தில் அவர்களே மாறி இருக்க இவர்கள் இணையவும் பெரிய விஷயமாக இருக்கவில்லை அதற்கு தூண்டு கோலாக அவர்களின் மனைவிகள் இருக்க அவர்களும் அவர்கள் இருவரின் ஈகோவை விட்டு கொடுத்து இணைந்து விட்டனர்…இப்படியே நாட்கள் செல்ல ஆதி மற்றும் ஆத்ரேயன் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டனர்...

அவர்கள் சகோதரர்களாக இல்லாமல் ஒரு நண்பர்களாக இருவரும் பழகி வந்தனர் .. அவர்களுக்கிடையே பல விஷயங்கள் ஒற்றுமையாக இருந்ததால் பேசுவதற்கு இருவருக்கும் நிறைய விஷயங்கள் இருந்தன... தொழில் துவங்கி அரசியல் வரை இருவரும் பல விஷயங்களை பேசிக்கொண்டே இருப்பர் இதில் பல கருத்து முரண்பாடுகள் வந்தாலும் அந்த சமயங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் செல்வர்...இதை பார்த்து குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி அலை மோதியது..

நாட்கள் செல்ல அபிக்கு ஐந்து மாதம் என்ற நிலையில் அவளுக்கு வயிறு இலேசாக மேடிட்டு இருந்தது.. வசுவிடம் தான் செக்கப் சென்று கொண்டிருந்தாள் அபி...

அதுபோன்ற ஒரு தருணத்தில் அவளை பரிசோதனை செய்த வசு,"எல்லாம் நார்மலா இருக்கு அபி உன் புருஷன் நல்லா பார்த்துப்பான் போல வெயிட்டும் ஏறி இருக்கு" என்று சிரித்தபடி வசுந்தரா கூற அபியும் மென் சிரிப்புடன், "ஆமாம் சாப்பிடலை அப்படின்னா அவருக்கு கோபம் வரும் எதுக்கு தேவையில்லாமல் சும்மா இருக்கிறவரை கோபப்படுத்திட்டுன்னு நானும் சாப்பிடுறேன்" என்றாள் அவள்....

"அப்படித்தான் வேணும் உன் புருஷன் புருஷன் மெட்டீரியல் ஆகி ரொம்ப நாள் ஆச்சு ..எப்ப உன்னை பார்த்தானோ அப்பவே அவன் புருஷன் மெட்டீரியல் ஆயிட்டான்... இங்க ஒருத்தன் இருக்கானே எங்க இருக்கான்னு கூட தெரியல.. என்னை கொண்டு போய் அத்தை மாமா வீட்டில் விட்டுவிட்டு பத்து நாள் ஆச்சு இன்னும் வரல எங்க போனான்னு தெரியல... மலேசியா போறேன்னு சொன்னான் டெய்லியும் ஒரு நாளைக்கு ஒரு தடவை தான் பேசறான்... அப்புறம் பிஸியா இருக்கேன் அப்புறம் கூப்பிடுகிறேன்னு ஃபோனை வெச்சிடறான்...ஓவரா பண்ணிட்டு இருக்கான் வரட்டும் அவனுக்கு இருக்கு கச்சேரி" என்று கடுப்புடன் கூறினாள் வசுந்தரா..

"ஆதிக்கு ஏதாவது வேலையாக இருக்கும் அதனால தான் அப்படி நடந்து கொள்றார் போல!!! எதுக்காக கோபமா இருக்க அவருடைய வேலையோட நேச்சர் உனக்கு தெரிஞ்சது தானே" என்று அபி அவளை சமாதானப்படுத்த முயல அவளோ கடுப்போடு தான் இருந்தாள்...

எவ்வளவு முயற்சி செய்தும் முடியாமல் போக இறுதியில் அபி,"புருஷன் பொண்டாட்டி தகராறு அடிச்சுக்கோங்க சேர்ந்துக்கோங்க அவர் வந்தா நாலடி வச்சு உன்னுடைய கோபத்தை தணிச்சுக்கோ நான் வரேன்" என்று சிரிப்போடு கூறிவிட்டு அபி சென்று விட்டாள்...அவள் வரும் வழியில் விஷயத்தை ஆத்ரேயனிடம் கூறினாள்...அதை கேட்ட ஆத்ரேயன் நேராக ஆதியை அழைத்தான்..

அந்த நேரம் பார்த்து ஒரு மீட்டிங்கில் இருந்த ஆதி, "கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுறேன்" என்று மெசேஜ் அனுப்பி போனை ஆப் செய்து விட்டான்... பிறகு அவன் ஃப்ரீயானதும் ஆத்ரேயனுக்கு அழைத்தான்.." ப்ரோ சொல்லு ப்ரோ என்ன கால் எல்லாம் வந்து இருக்கு என்ன விஷயம்???" என்று கேட்டான்...

"ப்ரோ நான் கூப்பிட்டது உங்களை திட்டறதுக்கு" என்று நக்கலாக கூறினான் ஆத்ரேயன்..

"நீயும் உன்னோட பிரண்டும் இதேதான வேலையா வச்சிருக்கீங்க வேற ஏதாவது வேலை இருந்தா தான உங்களுக்கு???" என்று கிண்டலாக கூறினான் ஆதி

"ஸ்டார்ட் தி மியூசிக் எதுக்காக திட்டனும்????" என்று கேட்டான்...

"ப்ரோ நாம சம்பாதிக்கிறது நம்ம குடும்பத்துக்காக தான் ஆனா குடும்பத்தை கண்டுக்காம சம்பாதிச்சா அதுல ஒரு அர்த்தம் இல்லையே???" என்று கூறவும்

ஆதியோ,"என்ன ஆச்சு அவ ஏதாவது கம்ப்ளைன்ட் பண்ணினாளா??? இரண்டு நாளா கூப்பிட்டு இருக்கேன் போன் எடுக்கவே மாட்டேங்கிறா??? இப்ப சொல்லு நான் செஞ்சது தப்பா இல்ல அவ செய்யறது தப்பா எங்கிருந்துதான் புடிச்ச இப்படி ஒரு பிரெண்ட??? ரெண்டு பேரும் சரியா இருக்கீங்க பர்பெக்ட் மேட்ச்சா இருக்கீங்க!!!" என்று கூறினான் ஆதி...

அவனுக்கு கிடைப்பதே கொஞ்ச நேரம் தான் அந்த சமயத்தில் அவன் அவளை அழைக்க அவளோ கோபித்துக் கொண்டு போனை எடுக்காமல் முரண்டு காட்டிக் கொண்டிருக்கிறாள்.. அந்த கடுப்பில் அவன் இருக்க இங்கு ஆத்ரேயன் எதுவுமே தெரியாமல் இவனிடம் அட்வைஸ் மழை பொழிய போக கடுப்பாகி விட்டான் ஆதி...

"ப்ரோ அவ ஏன் கோபப்படுறான்னு புரிஞ்சுக்கோ???" என இருவரின் விஷயத்தையும் கிரகித்து கேட்ட ஆத்ரேயன் கூற, "நான் என்ன பண்ணட்டும் முக்கியமான ஆர்டர் சைன் பண்ணாம வர முடியுமா???" என்று அவன் அவன் பக்கத்தை கூற,

" அதெல்லாம் இருக்கிறது தான் மை டியர் ப்ரோ...இப்படி எங்கேயாவது போகும்போது அவளையும் அழைச்சிட்டு போ உனக்கும் பிரச்சினை இருக்காது அவளுக்கும் பிரச்சினை இருக்காது அவ என்ன தான் ரொம்ப தைரியமா காட்டிக்கொண்டாலும் அவ உன் கூட இருந்தாத்தான் ரொம்ப சந்தோஷப்படுவா அது உனக்கு தெரியும் தானே" என்று ஆத்ரேயன் கூறினான்...

"நான் என்ன புரிஞ்சுக்காமலா இருக்கேன் இப்ப கூட பாரு என்னுடைய வேலையை முடித்துட்டேன் அவளுக்கு தெரியாம சர்ப்ரைஸா அங்க வரத்தான் பிளான் பண்ணிட்டு இருக்கேன் அதுக்குள்ள உன்கிட்ட கம்ப்ளைன்ட் பத்திரம் படித்துட்டா அவ" என்று அவன் குறையாக கூறினான்...

"உன் பொண்டாட்டி என்கிட்ட எல்லாம் சொல்லல அவ சொல்லவும் மாட்டா உன்னை எங்கேயும் அவ விட்டுக் கொடுக்க மாட்டா.. நீ அந்த விஷயத்துக்கு எல்லாம் கவலைப்படாத நீ கிளம்பி வா அதுவே போதும் பத்து நாளா உன்னை பார்க்க முடியாம ஏங்கி ஏங்கி தவிச்சிருக்கா வசு.. அதுனால தான் ரெண்டு நாளா உன்கிட்ட கோபப்பட்டு பேசாமல் இருக்கிறா இருந்தும் அபி கிட்ட ஏதோ புலம்பி இருக்கா.. அபி தான் என்கிட்ட விஷயத்தை சொன்னா அதனாலதான் நான் கூப்பிட்டேன் வேற ஒன்னும் கிடையாது நீ வா ப்ரோ அப்புறம் என் பிரென்ட்டை கண் கலங்காமல் பார்த்துக்கோ" என்று கூறவும் ஆதி மென்மையாக சிரித்தான்.

"ஆமா உனக்கு இந்த பிரச்சனை எல்லாம் வராதா??" என ஆதி சந்தேகமாக கேட்கவும் ஆத்ரேயன் சிரித்து, "வராது அப்படியே வந்தாலும் எனக்கு அபியை சமாளிக்க தெரியும்" என்று சிரித்தபடி ஆத்ரேயன் கூறினான்...

அதைக் கேட்ட ஆதி,"ஹ்ம்ம் நான் வசுவை பாத்துக்குறேன்" என்று கூறியவன் ஃபோனை வைத்து விட்டான்... அவனுக்கு தன் மனைவியை எண்ணி சிரிப்பு தான் வந்தது...

அருகே இருந்தால் ஏதாவது ஒரு விஷயத்தை கூறி சண்டை போடுவாள்..அருகில் இல்லை என்றால் இப்படி அனைவரிடத்திலும் புலம்பி கொண்டிருப்பாள் என எண்ணியவன் இவளை ஒரு வழி பண்ணாம விடமாட்டேன் என தீர்மானித்து உடனே பிளைட் டிக்கெட் புக் செய்து விட்டான்...

அவளோ எப்பொழுதும் போல தன் வேலை முடிந்ததும் வீட்டிற்கு சென்று தன் அறையில் அமர்ந்து கொண்டாள்... அவளுக்கு அவனைக் காணாமல் இருக்க முடியவில்லை அதை வெளியே சொல்லவும் முடியாமல் திக்கித் திணறிக் கொண்டிருந்தாள்... இது நாள் வரை அவன் இதுபோல சென்றதில்லை முதன்முறையாக அவன் செல்லவும் அவளால் அதை தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை...

அப்படியே சோர்ந்து அமர்ந்தவள் உணவு வேண்டாம் எனக் கூறி அப்படியே படுத்துக் கொண்டாள்.. அவனை அழைக்கலாமா என போனை எடுத்து பார்க்க பிறகு வேண்டாம் என முடிவெடுத்தவள்,"என்னுடைய நினைப்பே இல்லாமல் வேலை வேலைன்னு சுத்திட்டு தான் இருக்க அப்படியே இரு" என்று கோபம் கொண்டு படுத்துக்கொண்டாள்... அவன் பிரிவை தாங்கிக் கொள்ளாமல் கண்களின் ஓரம் இரண்டு சொட்டு கண்ணீர் கூட வந்தது... அதைக் கூட பிறர் அறியாமல் எப்பொழுதும் போல போர்வைக்குள்ளேயே துடைத்துக் கொண்டாள்... அவளுக்கே அதிசயம் ஆதி தன்னை இந்த அளவுக்கு தன் மனதை ஆக்கிரமித்து தன் மனதில் குடி கொண்டிருக்கிறானா என அவனை எண்ணி வியக்கவும் செய்தாள்...

அவளுடைய முதல் காதல் தோற்ற போது கூட அவள் இதே அளவு வருத்தப்பட்டு இருந்தாள் ஆனால் அதெல்லாம் முறியெடுத்து ஆதி என்னதான் அவளை பழிவாங்க வேண்டும் என எண்ணி கல்யாணம் செய்து இருந்தாலும் உண்மையில் அவன் வந்த பின் தான் பழைய காதலையெல்லாம் அவள் மறந்து அவனுடன் போட்டி போட ஆரம்பித்து இதோ அவனுடைய காதல் வலையில் விழவும் செய்து விட்டாள்.. இப்பொழுது அவனுடைய சிறு பிரிவை கூட அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை அந்த அளவுக்கு அவன் அவனுடைய அன்பினால் அவளை கட்டி போட்டு வைத்திருந்தான்...

அப்படியே யோசித்து யோசித்து எப்போது உறங்கினாள் என அவள் அவளுக்கு தெரியாது நடு இரவில் வீட்டிற்கு வந்த அவன் அவள் உறங்கிக் கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டான்...

மெல்லிய விளக்கொளியில் உறங்கிக் கொண்டிருக்கும் பெண் அவள் முகத்தைக் கண்டவனுக்கு மோகம் கரைபுரண்டு ஓடியது...அவளுடைய காதலில் அவன் எப்போதோ மொத்தமாக விழுந்து இருந்தான்...அவனாலும் அவளை விட்டு பிரிய முடியாது தான் இவளால் தான் அவன் இந்த அளவுக்கு மாறி இருக்கிறான்...

மெல்ல அவள் அருகே படுத்தவன் அவள் போர்த்தி இருக்கும் போர்வைக்குள் அவனும் இணைந்து கொண்டான்...பிறகு அவனுடைய காலை அவள் மீது போட அவளோ அசைவு இல்லாமல் உறங்கி கொண்டு இருந்தாள்...

மெல்ல அவளது இடையில் தன் கைகளை இட ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் அவள் கவனிக்க தவற, அவனோ மனதுக்குள் சிரித்துக் கொண்டு மெல்ல அவளது கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்தான்... சூடான மூச்சுக்காற்று அவளது கழுத்து வளைவில் குறுகுறுக்க தன் இதழ்களால் அவளது கழுத்து வளைவில் அவளை மெல்ல ஆக்கிரமிக்க துவங்கினான்...

பிறகு அவளது கன்னங்களை அவனது இதழ்களால் வருட அதில் உறக்கம் கலைந்தவள் மெல்ல திரும்பி பார்க்கும் பொழுது அங்கு அவன் அவளது உடல் உரச படுத்திருப்பதைக் கண்ட அவளது கண்கள் விரிய அது அவன் தானா என ஆழ்ந்து அவள் பார்க்கும் நேரம் அவனது தொடுகை அது அவன் தான் என உணர்த்தினாலும் மீண்டும் மீண்டும் கண்களை விரித்து அவள் பார்த்தாள் ஒருவேளை கனவாக இருக்குமோ என்று எண்ணிப் பார்க்க அவனோ மெல்லிய புன்னகையோடு அவளது இதழ்களை பார்த்துக் கொண்டே," நான் தான் டி" என்று கூறியவன் அவளது இதழ்களில் கவி பாட துவங்கினான்...

அவனை அவ்வளவு அருகில் பார்த்ததும் அவளுக்கு தலைகால் புரியவில்லை... பத்து நாட்களாக அவனுடன் சண்டை போட வேண்டும் பேசக்கூடாது என இல்லாததை எல்லாம் யோசித்து வைத்திருந்தவள் அவனது அருகாமையை கண்டதும் மூச்சற்று இருந்தாள்... அவன் தான் அவள் உணரும் முன்பே அவளை ஆக்கிரமித்து இருந்தானே அவளால் இந்த நிலையில் எப்படி அவனிடம் சண்டை போட இயலும்??? அவளது நிலையை புரிந்து கொண்ட அவனும் அவளைப் பேச விடாமல் அவளது இதழ்களில் கவி பாடி அவளது தேகம் எங்கும் அவனது விரல்களின் ஜாலங்களால் அவளது உணர்வுகளை தூண்டிவிட அங்கேயும் யுத்தம் தொடங்கியது காதல் யுத்தம்....

விரல்களின் யுத்தத்தால் அவளின் உணர்வுகள் கரை புரள மோக உணர்வு தட்டி எழுப்ப அவளுக்கு அவன் அருகே இருக்கும் பொழுது சிந்தை மறந்து அவனோடு கலந்துவிட அவளது மனம் துடித்தது...அவனும் அவளை யோசிக்கவே விடாமல் தன்னோடு பிணைத்துக் கொண்டான் ஆதி...

பத்து நாள் பிரிவை தாங்க முடியாமல் தவித்த இருவரும் மோக நதி தீரத்தில் தங்களின் உணர்வுகளை கலக்க விட்டனர்.. இருவரின் வேகமும் அதிவேகமாக இருந்தது சில மணி நிமிடங்களில் அவர்கள் இருவரும் சாந்தமாகி அவன் மார்பில் தன் முகத்தை பதித்து அவனை பார்த்தவளோ,"ஆதி நான் ரொம்ப ஸ்ட்ராங்குனு நினைச்சுட்டு இருந்தேன்... ஆனால் நான் ஸ்ட்ராங் எல்லாம் இல்ல... எப்போ நீ என் மனசுக்குள்ள வந்தியோ அப்போ இருந்து என் மனசு உன்னை தேடிட்டே இருக்கு... நீ சம்பாதிக்கலனாலும் பரவால்ல...என்னை விட்டுட்டு நீ இப்படி பத்து நாள், இருபது நாள் என்று எங்கேயாவது போயிடாத என்னால நீ இல்லாம இருக்கவே முடியாது" என அவள் சிணுங்கிக் கொண்டே கூறினாள்...

அதை கேட்டு அவனும் அவளது நெற்றியில் தன் இதழ்களைப் பதித்து," என்னால மட்டும் உன்னை விட்டுட்டு இருக்க முடியும் என்று உனக்கு தோணுதா என்னாலயும் முடியாதுடி இனி அந்த மாதிரி போகும்பொழுது உன்னையும் இழுத்துட்டு தான் போவேன்" என்று கூறிக் கொண்டவன் அவளை இருக அணைத்து கொண்டான்...

இப்படியே நாட்கள் செல்ல நான்கு வாரங்களுக்கு பிறகு வசுந்தராவால் எழுந்திருக்கவே முடியவில்லை..அவளுக்கு தலையை புரட்டிப் போட்டது அவளுக்கு புரிந்து விட்டது வீட்டிலேயே பரிசோதனை செய்து பார்த்தாள்...

அவள் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தவள் போனில் யாருடனோ பேசிக் கொண்டிருக்கும் அவன் முன்னால் சென்றவள் அவனை இறுக அணைத்து கொண்டாள்... அவனோ போனில் இருப்பதால் அவளை தன்னிலிருந்து பிரிக்க முற்பட அவள் யோசிக்காமல் அவன் காதில் வைத்திருந்த போனை டக்கென பிடுங்கி ஆஃப் செய்தாள்..

"என்னடி என்ன ஆச்சு" என என கேட்க அவளோ எதுவும் பேசாமல் தன் கைகளை நீட்டி அவனிடம் காட்ட அந்த பிரக்னன்சி டெஸ்ட் கிட்டை பார்த்ததும் அவனுக்கு கண்கள் பிரகாசித்தது..

" ஏய் ரெண்டு கோடு போட்டு இருக்கு டி ..அப்போ அப்போ" என மீண்டும் மீண்டும் நம்ப முடியாமல் அவளைப் பார்த்து கேட்க, "எஸ் ஆதி வி ஆர் பிரக்னன்ட்" என்று கூறவும் அதைக் கேட்டு அடுத்த நொடி அவளை தூக்கி சுற்றியவன் அவளை அணைத்து முத்தமிட்டு அடுத்த நொடி விஷயத்தை எல்லாரிடமும் கூற அனைவரும் அந்த வீட்டில் வந்து அவர்களை வாழ்த்தி கொண்டிருந்தனர்... அங்கு மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருந்தது...குடும்பமே அவர்களின் அடுத்த தலைமுறைகளை வரவேற்க தயாராகியது...

உறவுகளுக்காக விட்டு கொடுத்து போவதால் நாம் கெட்டு போவதில்லை...இவர்கள் அனைவ

ரும் மென்மேலும் வாழ அனைவரும் வாழ்த்துவோம்..நன்றி..

………முற்றும்………



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top