அத்தியாயம் 31
கிட்டத்தட்ட ஆத்ரேயன் மற்றும் அபி அருணாச்சலத்தின் வீட்டிற்கு செல்ல மாலை ஆகியது... இடையே அவனுக்கு வேலை வந்ததால் அதை முடித்துவிட்டு செல்லலாம் என கூறியிருந்தான் அவளும் சரி என தலையாட்டி விட்டு இருக்க அதற்கிடையே அவளது பெற்றோரும் வந்து அவளை பார்த்து விட்டு சென்றனர்.. கிட்டத்தட்ட அபி மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தாள் என கூறலாம் இனி கணவனை ஆதியுடன் இணைத்து விட்டால் போதும் என்ற நிலை தான் அவளுக்கு இருந்தது...காரில் பயணப்பட்டு கொண்டிருக்கும் போதே அவள் முகம் சந்தோஷத்தில் திளைத்து கொண்டிருந்தது...
இருந்தும் மனதுக்குள் அவனை எண்ணி சிறு பயம் அவன் ஏதாவது சொல்லி விடுவானோ என உழன்று கொண்டே தான் இருந்தாள்... எது வந்தாலும் பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தை வசுந்தரா அவளுக்கு கொடுத்திருக்க அதனால் சற்று அமைதியாக இருந்தாள் அபிநந்தனா..
அதற்கிடையே வசுந்தரா ஆதியை அழைத்தாள்.. அவளது அழைப்பை பார்த்ததும் மெல்லிய சிரிப்போடு அவன் எடுத்தான்.. ஆம் மெல்லிய சிரிப்பிற்கான காரணம் இன்று காலை அவர்களுக்குள் நடந்த ஊடல் தான் காரணம்...
ஆம் வசுந்தரா இப்பொழுது வேறொரு மருத்துவமனையில் வேலை செய்து கொண்டிருக்க அவளுக்கு காலையில் நேரமாக டூயூட்டிக்கு செல்ல வேண்டும்... இரவு முழுவதும் இவன் படுத்திய பாட்டிற்கு காலை நேரத்தில் அசந்து உறங்கி விட்டாள்.. இவனோ நல்ல பிள்ளை போல அவள் படுத்து இருக்கும் கோலத்தை பார்த்து சிரித்தவன் அவள் இதழில் இலேசாக அவள் உறக்கம் கலையாதபடி முத்தமிட்டு அவளுக்கு போர்த்தி விட்டவன் அவளுக்கு முன்பு எழுந்து குளிக்க சென்று விட்டான்...
அப்படி இருக்க இவன் பாத்ரூமுக்குள் இருந்து பாடிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்தான்... அந்த சத்தம் கேட்டு உறக்கம் கலைந்த அவளோ சமயத்தை பார்க்க, "ஐயோ இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா லேட்டாயிடுச்சு" என்று தலையில் அடித்துக் கொண்டவள் வேகமாக பாத்ரூம் கதவை தட்டினாள்..
"ஆதி சீக்கிரம் வா எனக்கு டைம் ஆச்சு ஹாஸ்பிடல் போகணும்" என்று கத்தினாள்..
அவனோ, "ஏண்டி நான் பாத்ரூமில் போகும் போது தான் நீ இப்படி கத்துவியா போடி" என்று கூறினான்...
அதற்கு அவளோ, "என் செல்லம்ல வாடா எனக்கு டைம் ஆச்சு சொன்னா புரிஞ்சுக்கோ" என்றாள்...
"இந்த வீட்ல இந்த பாத்ரூம் மட்டும்தான் இருக்கா? வேற பாத்ரூம் எல்லாம் இல்லையா அங்க போ" என்று கூற அவளோ தன் கோலத்தை பார்த்து உடை இருந்தால் தானே வெளியே செல்ல முடியும் போர்வைக்குள் புதைந்து கொண்டிருந்தவளோ,
"டேய் ஒன்னும் தெரியாத மாதிரி கேட்காத என்னால இப்ப எல்லாம் வெளில போக முடியாது அதுக்கான சமயமும் இல்லை..நான் இப்படியே போனா உன்னுடைய மானம் தான் போகும் பரவாயில்லையா கதவ தொற எவ்வளவு நேரமா தான் குளிச்சிட்டு இருக்க போற???" என்று கத்தினாள்...
அதைக் கேட்டதும் மெல்லிய புன்னகையோடு, "உனக்கு குளிக்கணும்னா நீயும் வா குளிச்சுக்கோ" என்று கூற, அவளோ, "நீ வெளியே வந்தா தானே குளிக்க போக முடியும் வெளியே வாடா" என்று கதவை தட்டிக் கொண்டே இருந்தாள்...
"இதோ வரேன்" என்று கூறியவன் கதவை திறக்க அவன் வெளியே வருவான் என அவள் நினைக்க அவனும் ஒரு கையை மட்டும் வெளியே நீட்டி அவளை உள்ளே இழுத்து கொண்டான் எதிர்ப்பாராத விதமாக அவன் இழுத்ததில் அவன் மீதே விழுந்தாள் வசுந்தரா...
நனைந்த உடலாய் அவள் முன்னே நின்று கொண்டிருக்க அதை கண்டு,"சீ கருமம்" என்று கண்களை மூடிக்கொண்டாள் ஆனால் அவள் மூட வேண்டியதை அவள் மூடவில்லை...
அப்படி இருக்க ஆதி அவளை பார்த்து சிரித்துக் கொண்டே கண்களை மூடி கொண்ட அவளை பார்த்தவன், " என்ன சீ கருமமா???நீ மட்டும் எப்படி டி இருக்க என்னை மாதிரி தான் நின்னுட்டு இருக்க!! என்றவன் ஷவரை ஆன் செய்து அதில் அவளை நிறுத்தி அவனும் நின்று கொண்டான்...
அவள் அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை அறிந்தாலும், "எனக்கு ஹாஸ்பிடல் போகணும் லேட் ஆச்சு புரிஞ்சுக்கோ நான் பல்லு கூட தேய்க்கல டா என்னை விடு டா" என்று அவளுக்கே கேட்காத குரலில் கூற அவளது குரல் போல அவரது உடலும் சிவந்து இருக்க அதை ரசித்து அவனும் நொடிப்பொழுதும் பாராமல் அவளை தன்னுடைமை ஆக்கிக் கொண்டான்..
அவன் என்ன செய்வான் என்பதை தன் மனக்கண்ணில் யோசித்து வைத்திருந்த அவளும் அவனோடு அவன் செய்த மாயத்தில் அவனோடு கலந்து போனாள்... நேற்று இரவு மிச்சம் வைத்த காதலை இந்த நொடி அவர்கள் தீர்த்துக் கொள்ள இரு உடல்களும் அங்கு சூடாகி தண்ணீரில் நனைந்தாலும் அவர்கள் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சி தாகம் அடங்கவில்லை...
அப்படி இருக்க வரும் வழியெல்லாம் எல்லாம் முடிந்து அவனை திட்டிக் கொண்டே வந்தவளை அவனும் விசில் அடித்துக் கொண்டே பார்த்து ரசித்தவன் அவள் பேசியதை எதையும் காதிலே போட்டுக் கொள்ளாமல் அவளை மருத்துவமனையில் இறக்கி விட்டு விட்டு அவன் அவனுடைய வேலையை பார்க்க சென்று விட்டான்...
இப்பொழுதும் அவள் அழைத்திருக்கவும் அதை எண்ணித்தான் அழைக்கிறாளோ என மெல்லிய சிரிப்போடு போனை எடுத்தான் ஆதி...
"என்ன மேடம் எதுக்கு கூப்பிட்டு இருக்க" என்று மெல்லிய சிரிப்போடு கேட்டான்...
அவனது குரல் கேட்ட அவளோ வந்த விசயத்தை கூறாமல் சிரித்தவள், "ஏன் நான் கூப்பிட கூடாதா??" என்றாள்..
"கூப்பிடலாமே" என்றவன், "காலையில் சும்மா அவசரமா டிரையல் தான் பார்த்தேன் இன்னிக்கு இப்படியும் டரை பண்ணி பாரத்துடனும் இது கூட நல்லாத்தான் இருக்கு கொஞ்சம் பிரெஷா இருக்கிற மாதிரி இருக்கு" என்று அவன் கூறினான்.. அவளோ மேலும் சிவந்து, "எப்ப பார்த்தாலும் இதே நினைப்பு தானா போடா" என்று செல்லமாக கூறினாள்...
"ஆமாம் இந்த ஒரு மாசமா தான் பொண்ணுனா என்னன்னு பாத்துட்டு இருக்கேன்.. அஞ்சு புலனையும் அடக்கி இத்தனை நாள் வெச்சிருந்தேன்.. இப்பதான் அதை உணர்வு பூர்வமா ரசிக்க முடிஞ்சது ரசிக்க விடு டி.. நான் என்ன அடுத்தவன் பொண்டாட்டி வா ரசிக்கிறேன் என் பொண்டாட்டிய தானே ரசிக்கிறேன்" என்று கூறினான்..
அதைக் கேட்டு அவளோ சிரித்துக் கொண்டு, "இன்னைக்கு என்னை பிக்கப் பண்ண வர தானே" என்று கேட்டாள்...
"வரேன் வரேன்" என்றான்...அவனது மனநிலையை புரிந்து கொண்டவளோ இதுதான் தக்க சமயம் என எண்ணி தனது பிளானை அவனிடம் கொட்டினாள்..
"ஹ்ம்ம் எனக்கு அத்தையை பார்க்க போகணும் அங்கே போய்ட்டு வீட்டுக்கு போகலாம்" என்க,
"எதுக்கு இன்னிக்கு போகணும் இரண்டு நாள் முன்ன தானே போனோம் இன்னிக்கு ஏன் போகணும்" என்று கேட்டான் ஆதி.. அதைக் கேட்ட அவளோ தலையை சொரிந்து கொண்டு, "சொந்த அம்மா, அப்பாவை பார்க்க கணக்கு பார்க்கறியே இன்னைக்கு மாமாவுக்கு பிரஷர் செக் பண்ண வரேன்னு சொல்லி இருந்தேன் அதனால தான் போகணும்னு சொல்றேன் போதுமா" என்று வாய்க்கு வந்த பொய் கூறினாள் அவள்...
அதைக் கேட்ட அவனும், "ஓ சரி போகலாம்" என்று மேற்கொண்டு எதையும் கேட்டுக் கொள்ளவில்லை... மாலை ஆனதும் எப்பொழுதும் போல அவளை அழைக்க மருத்துவமனைக்கு சென்றான்... அவளும் இவனுக்காக வெளியே காத்திருந்தவள் இவன் வந்ததும் காரில் ஏறி அமர நேராக அருணாச்சலத்தின் வீட்டிற்கு கார் சென்றது....
வரும் வழியில் ஆதி போனில் மூழ்கி இருந்ததால் வசுந்தரா தப்பித்தாள்.. மனதுக்குள் அவளோ இந்த பிசினஸ்மேனை கல்யாணம் பண்ணிக்கிட்டது நல்லதா தான் போச்சு.. நொடிக்கு ஒரு தடவை போன் வந்துரும்... அதனால நாம தப்பிச்சிடலாம் என மனதுக்குள்ளே அவளை கூறிக் கொண்டாள்..
அப்படியே தாங்கள் இங்கிருந்து கிளம்பி விட்டோம் என்பதை அபிக்கு மெசேஜ் மூலம் கூறினாள்.. பதிலுக்கு அபியும் நாங்களும் வந்து கொண்டிருக்கிறோம் என பதில் அனுப்பினாள்...
நேராக அருணாச்சலத்தின் வீட்டிற்குள் கார் நுழைய எதிர்ப்புறமாக ஆத்ரேயனின் காரும் நுழைய இருந்தது.. இருவரும் எதிர் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தனர்... இருவரும் ஒரே நேரத்தில் காரை வீட்டுக்குள் நுழைக்க முற்பட அதைக் கண்டதும் அவர்களின் இரு மனைவிமார்களும் தலையில் அடித்துக் கொண்டனர்... இப்பொழுது யார் முதலில் உள்ளே செல்வது என்று இருவரும் ஒருவரை ஒருவர் கண்களாலேயே பார்த்துக் கொண்டனர்...
ஆத்ரேயன் அபியை பார்த்து ,"இவன் ஏன் இங்கே வந்து இருக்கான்" என்று கேட்க அவளோ, "தெரியலையே" என்று கூறினாள் அதே நேரம் ஆதியும் ,"இவன் ஏன்டி இங்கே வந்து இருக்கான்" என்று வசுவை பார்த்து கேட்டான்..
அவளோ தலையை சொரிந்து கொண்டு, "என்னை கேட்டா எனக்கு எப்படி தெரியும் அவனோட அம்மா, அப்பாவும் இங்கே தானே இருக்காங்க அவங்களை பார்க்க வருவானா இருக்கும்" என்று மழுப்பலான பதிலை கூறவும் ஆதி அவளிடம், "பாரு அப்படியே நின்னுட்டு இருக்கான் ஒன்னு அவன் போகணும் இல்ல என்னை போக விடனும் இது தான் அவன் கிட்ட எனக்கு பிடிக்காத விஷயம்" என்று கூற,
ஆத்ரேயன் அபியிடம், "ஒரு அடி கார் பின்னாடி போனால் தான் என்னவாம்??? நான் உள்ளே போயிருப்பேன் எப்படி நின்னுட்டு இருக்கான்னு பார் எப்போவும் என் வழியில நுழையறதே இவனுக்கு வேலையா போச்சு" என்று கூற அபி என்ன சொல்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு, "ஆது போனா போகுது கொஞ்சம் பின்னாடி போங்க" என்று கூறினாள்...
அதுக்கு ஆத்ரேயன் தன் மனைவியை பார்த்து முறைத்து," நான் ஏன் டி பின்னடி போகணும் நான் தானே முதல்ல வந்தேன் வேணும்னா அவன் பின்னாடி போகட்டும்" என்று கூறவும் அபி இவங்களை எப்படி தான் சேர்த்து வைக்க போறோமோ எனக்கு தெரியவே இல்லை வீட்டுக்குள்ள நுழையவே இவங்க இந்த பிரச்சனை பண்ணினா உள்ளே போனா என்னதான் செய்வார்களோ என எண்ணினாள்...
அதே நேரம் வசுந்தரா, "அவனுக்கு வழிவிடு போகட்டும்" என்று கூறவும், "ஏன் உன்னுடைய பிரண்டு அப்படின்னு அவனுக்கு வழி விட சொல்றியா?? நான் உன் புருஷன் டி கொஞ்சம் என்கூட நீ நில்லு" என்று அங்கு அவன் உரிமை போராட்டம் நடத்த அவளுக்கு தலையை கழட்டி காரில் வைத்து விட்டு காரில் இருந்து இறங்கினால் என்ன என்று யோசிக்க துவங்கி விட்டாள்... இருவரும் மோதிக் கொண்டு இருக்க பின்னால் இருந்து காரின் ஹாரன் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது...
வசுந்தரா அபியை காருக்குள் இருந்து என்னடி இப்படி ஆகுது என்பது போல பார்க்க அதே நேரம் அபியும் அதேதான் யோசித்துக் கொண்டிருந்தாள் .. அதேநேரம் அண்ணனும் தம்பியும் காருக்குள் இருந்தே மோதிக் கொண்டு இருந்தனர் யார் முதலில் வீட்டுக்குள் செல்வது என்ற போட்டி அங்கே அவர்களுக்கு இடையே உருவானது இதில் இருவரும் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறியும் இருவருக்கும் வந்தது என்னவோ உண்மைதான்...ஆனால் அவர்களின் மனைவிகளோ இவர்களை எப்படி சேர்த்து வைப்பது என தலையை பிடித்தபடி இருந்தனர் இனி இந்த பிரச்சனை முடிந்து உள்ளே சென்று விசயத்தை கூறினால் என்ன ஆகுமோ என என்னும் போதே அவர்களுக்கு தலை சுற்றியது...
இப்படி இங்கேயே மோதிக்கொண்டால் இருவரையும் எப்படி சேர்த்து வைப்பது என இருவரின் மனைவிமார்களும் விழி பிதுங்கி இருந்தார்கள்..
