Share:
Notifications
Clear all

அத்தியாயம் 3

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

"வாட் அபி நந்தனா ஆத்ரேயன் ஆஹ்???" இதெப்படி நடந்தது என்று எண்ணியவனுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை...

இவள் எப்படி அவனிடம் சிக்கினாள் எப்படி இது நடந்தது என புரியாமல் தவித்தவன் அந்த இடத்தை விட்டு உடனே சென்றான் அவன் மனம் முழுவதும் தன்னவளிடமே இருந்தது...அவளுக்கு என்ன ஆகிற்றோ அவளை பார்த்தே ஆக வேண்டும் என எண்ணினான்...

வேகமாக தன் போனை எடுத்தவன் ஆத்ரேயனுக்கு அழைக்க அவன் இவனை ரொம்ப சோதிக்காமல் போனை எடுத்தான்..

"ஆத்ரேயன் உனக்கும் எனக்கும் இடையில் இருக்கிறது நமக்குள்ள மட்டும் இருக்கட்டும் அவகிட்ட வேண்டாம் அவ எனக்கு மனைவி ஆக போறவ??? அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா உன்னை சும்மா விட மாட்டேன்" என்று ஆதி கொந்தளித்து கூறினான்..

அதை கேட்ட அவனோ,"அவ உனக்கு பொண்டாட்டி ஆக போறவளா தானே இருந்தா அது தான் முடிஞ்சு போச்சே...இப்போ அவ என்னோட பொண்டாட்டி யூ நோ".. என்றான்...

"ஆத்ரேயன் நீ செய்யறது சரி இல்லை" என்று கொந்தளித்து ஆதி கூற,"ரொம்ப சூடா இருப்ப போல ஏதாவது குடிச்சு சில் பண்ணு மேன் இன்னும் நாம மோத வேண்டிய விசயம் எல்லாம் இன்னும் நிறைய இருக்கே இதுக்கே கொதிச்சா எப்படி???" என்றவன் அவனிடம்,"இப்போ இருந்து ஷீ இஸ் மை சோ யூ டோன்ட் கெட் ஒரி அபௌட் ஹெர்... ஐ வில் டேக் கேர் ஆப் மை பைவ்" என்று கூறி நிமிடத்துக்குள் இவள் என்னுடையவள் நீ உன் வேலையை மட்டும் பார் என அவனை மூன்றாம் மனிதன் ஆக்கி விட்டான்...

அதை கேட்ட அவனோ,"ஆத்ரேயன்...இதுக்கு நீ விலை கொடுக்க வேண்டி இருக்கும்" என்று கொந்தளிக்க,"அதையும் பார்க்கலாம் அதுக்கு தான் நான் காத்திருக்கேன் டூட்" என்று கூறி போனை அணைத்து விட்டான்...அங்கே "ஆத்ரேயன்"என்று வெறி பிடித்து கத்தி கொண்டிருந்தான் ஆதி....

ஆதித்தியனை வருத்தப்பட வைத்துவிட்டோம் அவனை தோற்க வைத்து விட்டோம் என்பதே அவனுக்கு நிம்மதியாக இருந்தது...மேலும் ஏதோ அவன் இவர்களிடத்தில் எல்லாம் ஜெயித்ததாகவே உணர்ந்தான்...தன்னால் அவன் தோற்றதை அவன் கொண்டாட வேண்டாமா??? என அவன் எண்ணி கொண்டிருக்க, தன் அருகே இருந்து பேசிக்கொண்டு இருப்பதை எல்லாம் கண்கூட கண்டு கொண்டிருந்தவளுக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் கிளர்ந்து எழுந்து கொண்டு இருந்தது...ஐயோ என கத்த வேண்டும் என தோன்றியது அவள் கழுத்தில் அவன் கட்டிய தாலியை கழட்டி வைத்து விட்டு ஓடினால் என்ன என கூட எண்ணினாள்....

"என்ன மனிதன் இவன் கத்தி முனையில் ஒரு திருமணம்??? இதில் என்ன கண்டு விட்டான் இந்த பாவி??? என் குடும்பத்தை கொலை செய்து விடுவேன் என மிரட்டி காரியத்தை சாதித்து இருக்கிறான்" என்று தான் அவள் எண்ணினாள்...அவள் கண்கள் இப்போதும் இதை எல்லாம் நம்பவில்லை இவன் இப்படிப்பட்ட நயவஞ்சகன் என அவள் எண்ணியது கூட இல்லை நடு ரோட்டில் வைத்து திருமணத்தை முடித்து விட்டானே???? என இன்னும் நடந்த சம்பவத்தை உள்வாங்கி கொள்ள முடியாமல் தவித்து கொண்டிருந்தாள் அபி நந்தனா...

அதை எல்லாம் கண்டு கொள்ளாத அவனோ,"கிளம்பு போலாம்" என்றவன் அவளது கையை பிடிக்க போக வெகுண்டு எழுந்த அவளோ," சீ என் கையை பிடிக்காதே கையை விடு" என்றவளின் கையை வேண்டும் என்றே அழுத்தமாக பிடித்தவன் உன் கையை பிடிச்சா என்ன பண்ணுவ???இப்போ நான் உன் புருஷன் அது நியாபகம் இருக்கா??" என்று கேட்டான் நக்கல் வழியும் குரலில்,

"சீ அந்த வார்த்தையை சொல்லாத கத்தி முனையில் கல்யாணம் செய்திட்டு அது நியாயம் வேற சொல்றியா?? இதுல நீ புருஷனாம் புருஷன்" என்றாள்...

"என்னோட நியாயத்தை உன்கிட்ட கேளுன்னு நான் சொல்லவே இல்லையே ஆனால் உன்னை எப்படி நான் நினைக்கிறதை எல்லாம் செய்ய வைக்கணும்னு எனக்கு நல்லா தெரியும்" என்றவன்,"சீக்கிரம் வண்டியில ஏறு இல்லை இங்கேயே ஹனி மூன் முடிச்சிட்டு போலாம்னு நினைச்சிட்டு இருக்கியா??" என்று கேட்டவன் அவளது பதிலுக்கு காத்திராமல் அவளை இழுத்து கொண்டு காருக்குள் தள்ளியவன் நிமிடத்துக்குள் காரை எடுத்தான்... இவனை கண்ட நொடி தன் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே எண்ணி குமைந்தவளுக்கு தன் ஆட்களை காண வேண்டும் அவர்கள் தன்னை இந்த அரக்கனிடம் காப்பாற்ற வேண்டும் என எண்ணி குமைந்து கொண்டிருந்தாள்...

அங்கே தன் மகளுக்காக காத்திருக்கும் சிவப்பிரகாசம் மற்றும் மைதிலிக்கு சமயம் ஆகும் ஒவ்வொரு நொடியும் பதைப்பதைத்து கொண்டிருந்தது..

"இதுக்கு தான் நான் உங்களை எல்லாம் தனியா விடுறது இல்லை இப்போ பார் போனும் எடுக்கல அவளையும் காணோம்??" என்று கோபப்பட்டு தன் மனைவியிடம் கூற அவரும் அதை தான் அந்த நேரத்தில் எண்ணி கொண்டிருந்தார்....

"அந்த ட்ரைவரும் ஏன் போனை எடுக்க மாட்டேன்கிறான்" என்று புலம்பி கொண்டிருந்த சிவப்பிரகாசம் நாலைந்து முறை அழைத்தும் அந்த டிரைவர் போன் எடுக்காததால் கடுப்பின் உச்சிக்கு சென்றவர்,"அவன் வரட்டும் வேலையை விட்டு நிறுத்துறேன்" என்று வாய் விட்டே கூறியவருக்கு அழைப்பு வர யாரது புது எண் என பார்த்து கொண்டே போனை எடுத்தவர்,"ஹலோ" என்றார்...

"ஹலோ மிஸ்டர் சிவப்பிரகாசம் உங்க பொண்ணுக்கு காத்திட்டு இருக்கிறதா இருந்தா அங்கே நீங்க காத்து இருக்க வேணாம் ஏன்னா உன் பொண்ணு இப்போ என்னோட மனைவி ஆகிட்டா!!" என்று கூறினான் ஆத்ரேயன்..

அதை கேட்ட அவரோ அதிர்ந்து அவன் சரியாக தான் கூறுகிறானா?? இல்லை நமக்கு தான் தெளிவாக புரியவில்லையா என எண்ணியவர், "யாரது???" என்று அவர் வினவினார்...

அதை கேட்ட அவனோ,"மாப்பிளை யாருன்னு கூட தெரியாத மாமனாரா இருக்கீங்க ஹ்ம்ம் எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சவன் தான் ஆத்ரேயன்" என்று அவன் நக்கலாக கூறினான்...

அதை கேட்டதும் முழுவதுமாக அதிர்ந்த அவர் ,"ஆத்ரேயன் ஆஹ்??" என்று வாய் விட்டே கூறிய அவரை பார்த்து,"நான் தான் நானே தான் உங்களுக்கு வேற ஏதாவது தெரியணும்னா என்னோட வீட்டுக்கு வாங்க அங்கே உங்க பொண்ணு இருப்பா இதை கூட சொல்லி இருக்க மாட்டேன் தான் எனக்கு என்னோட விஷயங்களை யார்கிட்டயும் பகிர்ந்து கொள்வது பிடிக்காது தான் ஆனாலும் என் மனைவியோட அப்பா அப்படிங்கிற முறையில் நான் இதை சொல்றேன்...போலீசுக்கு போறதா இருந்தா தாராளமாக போகலாம்...உங்க மொபைலுக்கு ஒரு வீடியோ வந்திருக்கும் அதை பார்த்துட்டு போகலாம்" என்று கிட்டத்தட்ட மிரட்டி விட்டு போனை வைத்தான்..

தன் கணவன் அதிர்ந்து இருப்பதை பார்த்து,"என்னங்க ஆச்சு??"என்று மைதிலி கேட்க அவரிடம் விஷயத்தை கூறாமல் போனை பார்த்த சிவபிராகசம் அதிர்ந்தார்.. தன் மகளை சுற்றி இருக்கும் கயவர்களை கண்ட அவர் அதிர்ந்து என்ன என கேட்கும் தன் மனைவியிடம் விஷயத்தை கூறியவர் அங்கேயே ரோட்டிலேயே அமர்ந்து கொண்டார்...தன் இரு பெண்களை சிறை வைத்து இருக்கிறானே என எண்ணி புலம்பினார் அவர் விஷயத்தை கேள்விப்பட்ட மைதிலியும் அதிர்ந்தார்..

அவன் பேசுவதை எல்லாம் அதிர்ச்சி நிறைந்த விழிகளில் அதை எல்லாம் அவளால் கேட்டு கொண்டிருப்பதை தவிர அவளுக்கு வேறு வழி இல்லை...

அவள் தன்னை பார்ப்பதை பார்த்த அவனுக்கு கவலை இல்லை அதே சமயம் அவனுக்கு அவன் நினைத்தது நடக்க வேண்டும் அவ்வளவே அதற்காக அவன் எந்த எல்லையை வேண்டுமானாலும் கடப்பான்...

கண்களில் நீர் வழிய அமர்ந்து இருப்பவளை பார்த்தவன் அவளை பார்த்து,"இந்த ஆத்ரேயன் பொண்டாட்டி எதுக்கு எடுத்தாலும் இப்படி அழுதா எப்படி???? உனக்கு பிடிச்சி இருக்கோ இல்லையோ??? இது தான் உண்மை இதை நீ ஏத்துகிட்டு தான் ஆகணும் ஒரு விஷயம் உனக்கு பிடிக்கலனா ரசிக்க பழகிடு அண்ட் ரோட்டுல கல்யாணம் பண்ணினாலும் இது உண்மை கல்யாணம் தான் காலம் முழுவதுக்கும் நீ தான் என் மனைவி" என்று அவன் கூறினான்..

அதை கேட்ட அபி,"எது என் தங்கையை கடத்திடுவேன்னு நீ சொல்றதை நான் ரசிக்கணும் அப்படி தானே??? வேறொருத்தற்கு நிச்சயம் பண்ணின பொண்ணை மிரட்டி தாலி அப்படிங்கிற பேர்ல ஒரு கயிறை கட்டியதை நான் ரசிக்கணும் அப்படி தானே??? இது எல்லாம் நீ எதுக்காக செய்யற??? உனக்கு என்ன தான் வேண்டும்??? நடந்ததுக்கு தான் நான் சாரி சொல்லிட்டேன்னே??? இன்னும் அதை மனதில் வைத்துட்டு இப்படி செய்யற நீ எல்லாம் மனுசனா??" என்று கேட்டாள் அபி..

அவனோ கூலாக ,"இதை எல்லாம் செய்யற நான் எப்படி மனுசனா இருக்க முடியும் எனக்கு நான் நினைச்சது நடக்கணும் நடத்துவேன்" என்று கூறியவனின் விழிகளில் வன்மம் நிறைந்து இருக்க யாரோ மீதிருந்த கோபத்தை தன் வாகனத்தில் காட்டினான்...

அந்த வாகனம் சீறி பாய்ந்து விடியற்காலையில் சென்னையில் உள்ள அவனது பிரம்மாண்ட வீட்டுக்குள் அந்த உயர் ரக கார் நுழைய அந்த சமயம் பார்த்து குளித்து தன் மகனின் நலனை மட்டுமே சதா எந்த நேரமும் வேண்டி நிற்கும் சாரதா இப்போதும் தன் மகனுக்காக தான் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்....

கள்ளம் கடபம் இல்லாத முகத்தில் எப்போதும் மென்மையான புன்னகை ஒளிந்து இருக்கும் ..இன்றும் அதே புன்னகையுடன் பூஜை அறையில் விளக்கை ஏற்றி கொண்டிருக்கும் போது தான் வாகனம் அதி வேகத்தில் போர்டிகோவில் வந்து இறங்கியது...

காரின் சத்தத்தை வைத்தே மகன் வந்து விட்டான் என்பதை உணர்ந்த தாய் தீபாராதனை காட்டி கொண்டிருக்கும் கையோடு மகனை வரவேற்க செல்ல அங்கு மகன் சிவப்பிரகாசத்தின் மகளோடு நிற்பதை கண்டவர் அதிர்ந்து,"இது அபி தானே" என எடுத்த வாய்க்கு கேட்டார்..

ஏனெனில் இன்னும் சில நாட்களில் ஆதிக்கும் இவளுக்கும் திருமணம் என அவரும் அறிந்து இருந்தார் தான் ஆனால் இப்படி பொன் மஞ்சள் தாலி அவள் அணிந்து இருக்க அவள் எதற்காக இவனுடன் வந்து இருக்கிறாள் என குழம்பிய அவரை பார்த்து,"எனக்கும் இவளுக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சு.. இனி இவ தான் இந்த வீட்டோட மருமகள்" என்ற இரு வார்த்தையை மட்டும் கூறி விட்டு தாயின் அதிர்ச்சியை பொருட்படுத்தாமல் அவன் உள்ளே செல்ல யாருக்கு வைத்த விருந்தோ என தலை குனிந்தபடி நின்று கொண்டிருந்தாள் அபி நந்தனா...

கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு முன்பு

"ஆத்ரேயா ஒரு பொண்ணோட ஜாதகம் உனக்கு பொருத்தமாக இருக்குன்னு புரோக்கர் சொல்லி இருக்கார் பொண்ணு பார்க்க இன்னிக்கு போலாமா???" என்றார் சாரதா!!! பெற்ற மகன் தான் இருந்தாலும் அவனிடம் உரிமையாக பேச அவருக்கு கொஞ்சம் பயம் இருந்தது...ஏதோ ஒன்று அவரை தடுத்து கொண்டிருந்தது...அது எதனால் என்று தெரியவில்லை என்ன தான் பயம் என்றாலும் ஒரு தாயாக மகனுக்கு அவர் ஆற்ற வேண்டிய கடமை என்று ஒன்று உள்ளத்தல்லவா அதனால் இன்று தைரியமாக கேட்டு விட்டார்...

தலையை வாரி கொண்டே தாயின் கேள்விக்கு பதில் அளிக்காமல் இருந்தவனை வருத்தத்துடன் பார்த்தவரின் மனம் அவன் இப்படி தான் செய்வான் என்று தெரிந்தாலும் தன்னை அடக்கி கொண்டு,"நீயும் எவ்ளோ நாள் தான் இப்படியே இருப்ப???" என்க அப்போதும் அவனிடமிருந்து பதில் இல்லை...

அவரோ,"என்னப்பா நான் கேட்டுட்டே இருக்கேன் நீ ஏன் பதில் சொல்ல மாட்டேங்கிற???"

"அதுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லைன்னு அர்த்தம் அம்மா..எனக்கு இந்த கல்யாணம் அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை...ஆனால் நீங்க இந்த கேள்வியை மட்டும் கேட்காமல் இருக்க மாட்டேங்கிறீங்களே" என்று கூற அதை கேட்டவரின் முகம் சுணங்கினாலும்,"கண்ணா அப்படி சொல்லாத நம் வாழ்க்கைக்கு கல்யாணம் எல்லாம் முக்கியம்" என்று கூற மகனோ ஒரு பார்வை பார்த்தான் அந்த பார்வைக்கு பதில் அவரால் கொடுக்க முடியாமல் போனது...

அவர் முகம் சுணுங்கி போக அதை கண்ட மகன் தாளாமல்," சரி உங்களுக்கு என்ன பொண்ணு பார்க்க வரணும் அவ்ளோ தானே வரேன் போதுமா ஆனால் நான் வருவேன்..பத்து நிமிஷம் தான் என்னால உங்களுக்கு ஒதுக்க முடியும் அது மட்டும் தான் என்னால பண்ண முடியும்..அதுக்குள்ள நீங்க என்ன பண்ணனும்மோ பண்ணிடுங்க வேற எதிலும் நான் தலையிட மாட்டேன் அதெல்லாம் உங்க விருப்பம்" என்று முடிவாக அவன் கூறினான்...

அவன் இதை செய்ததே போதும் என எண்ணிய சாரதா அந்த ப்ரோக்கரை அழைத்து கொண்டு அபி நந்தனாவை பெண் பார்க்க வற்புறுத்தி அழைத்து சென்றார்...

அவருக்கு எப்படியாவது தன் மகனுக்கு இந்த சம்மந்தத்தை பேசி முடித்திட வேண்டும் என எண்ணியவர் மகனை அழைத்து செல்ல அவர்களை இன்முகத்துடன் வரவேற்ற சிவப்பிரகாசம் அவர்களை வீட்டுக்குள் அழைத்து வரவேற்றார்...

குடும்பமும் அவர்களுக்கு ஏற்ற விதமாக தான் இருந்தது மைதிலியும் சிவபிரகாசமும் நல்ல விதமாக பேசினர்... புரோக்கர் இவர்களை பற்றி எல்லாம் சாரதாவிடம் கூறி இருந்ததால் மேற்கொண்டு அறிமுக பேச்சுக்கள் இன்றி இனிமையாக பழக துவங்கி இருந்தனர்...

என்ன சாரதாவுக்கு ஒரே ஒரு குறை என்னவென்றால் வந்ததில் இருந்து கால் மேல் கால் போட்டு கொண்டு தான் அணிந்து கூலர்ஸை கூட கழட்டாமல் மொபைலை பார்த்து கொண்டே இருக்கும் மகன் கொஞ்சம் மரியாதை நிமித்தமாக இவர்களை பார்த்து ஒரு வார்த்தை பேசினால் நன்றாக இருக்கும் இவர்கள் என்ன நினைப்பார்கள் என சாரதா நினைக்க ஆனால் சிவபிராகசம் பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை போலும்...மேலும் சிவபிராகசத்துக்கு ஆத்ரேயனை கண்டதும் வேறு பிடித்து இருந்தது அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்...

இடையே ஆத்ரேயன் மணியை பார்த்து அப்படியே தன் தாயை பார்த்து லுக் விட அவருக்கு உள்ளுக்குள்ளே அடித்து கொண்டது...மகனின் குணம் அறிந்து எழுந்து சென்றாலும் சென்று விடுவான் என எண்ணி கொண்டிருக்க அதற்குள் தாமதிக்காமல் மைதிலி அபி நந்தனாவை அழைத்து வந்தார்...

அபியை கண்டதும் சாரதாவுக்கு பிடித்து போனது...அதுவும் அவள் முகத்தில் தெரியும் அந்த சாந்தம் தான் அவரை கூடுதலாக ஈர்த்தது...தன் மகனின் கோபத்துக்கும் இந்த பெண்ணின் சாந்தத்துக்கும் தான் பொருத்தமாக இருக்கும் என எண்ணினார்...

அவளும் அன்ன நடை போட்டு பயமும் பதட்டமும் நிறைந்து தன் தாயின் பின்னால் நடந்து வந்தாள்....அவளுக்கு இந்த பெண் பார்க்கும் படலம் இது தான் முதல் முறை என்பதால் அவளுள் பொதுவே பெண்களுக்கே உள்ள பதற்றம் இருக்க, அவள் அம்மா வந்து அழைத்ததுமே," கடவுளே இந்த சம்மந்தம் முடிஞ்சிடனும் இல்லைன்னா இப்படி எல்லோர் முன்னாடியும் பொம்மை மாதிரி என்னால நிக்க முடியாதுப்பா" என வேண்டி கொண்டாள்...

அப்படி அவன் முன் காபி டிரே உடன் அவள் நிற்க சாரதா தான் ஆசை தீர அபியின் முகத்தை தன் கண்களுக்குள் நிரப்பி கொள்ள பார்க்க வேண்டியவனோ மொபைலிலேயே பிசினஸ் பண்ணி கொண்டிருக்க சிவபிராகசம் கூட யோசனையாக அவனை பார்க்கவும் சாரதா தான்,"கண்ணா பொண்ணை பார் பா" என்று கூறவும், தாய் கூறியது அவனுக்கு பிடிக்கவில்லை தான் என்றாலும் சூழ்நிலை கருதி தாய் சொல்லை தட்டாத தமையனும் அவளை பார்த்தான் தான் ஒரே ஒரு நொடி அபி நந்தனாவை பார்த்ததும் அவள் ட்ரேயை பிடித்து இருப்பதை பார்த்து ,"நோ தேங்க்ஸ்" என்றவன் மீண்டும் மொபைலை பார்க்க துவங்க சாரதாவுக்கு தலையில் அடித்து கொள்ளலாம் என்று இருந்தது...

அதே சமயம் அவனை பார்த்த அபிக்கும் பார்த்ததும் அழகாக இருக்கிறான் என்று தோன்றினாலும் அதே சமயம் என்ன இப்படி திமிராக இருக்கிறான் என்றும் தோன்றினாலும் உணர்வுகள் எல்லாம் கிளர்ந்து எழுந்து விடவில்லை என்றாலும் தாய் தந்தைக்கு மரியாதை கொடுத்து அங்கு நின்று கொண்டிருந்தாள்...அவளின் பெற்றோர்களும் இவர்களின் பதிலுக்காக காத்திருந்தனர்..

சாரதா தான் மகனின் காதுக்குள்,"பொண்ணு பிடிச்சு இருக்கா கண்ணா??" என்று ரகசியமாக கேட்க , சிவபிராகசம் கூட பெருந்தன்மையாக,"பையனும் பொண்ணும் ஏதாவது பேசுவதா இருந்தா பேசட்டும் அவங்க தானே வாழ போறவங்க" என்று கூற சாரதாவுக்கும் அது சரி என்று பட தாயும் அவரும் கேட்டதை பார்த்த ஆத்ரேயன் தன் தாயை பார்த்து,"உங்களுக்கு பிடிச்சு இருந்தா எனக்கு ஓகே தான் டயம் ஆச்சு இப்போ கிளம்பலாமா?? எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு இனி எது பேசுவதா இருந்தாலும் நீங்களே பேசி முடிச்சிடுங்க" என்று கூறியவன் தன் தாயை அழைத்து கொண்டு சென்று விட்டான்....

சாரதாவும் சிவபிராகசத்திடம் மன்னிப்பு கேட்டு விட்டும் வீட்டுக்கு சென்று அழைப்பதாக கூற அவர்களும் சரியென்று சிரித்த முகத்தில் வழி அனுப்பி வைத்தனர்...ஆனால் அடுத்த இரு நாட்களிலேயே சிவபிராகசம் சாரதாவை அழைத்து,"எங்களுக்கு இந்த திருமண பந்தத்தில் விருப்பம் இல்லை அதனால் வேறு இடம் பாருங்க" என்று கூற அதை கேட்டு அதிர்ந்த சாரதா," என்ன காரணம்???"என்று கேட்டார் அவரால் இந்த பதிலை தாங்கி கொள்ளவே முடியவில்லை ஏனெனில் அவருக்கு அபியை ரொம்ப பிடித்து இருக்க தன் மகனையும் அவளையும் இணைத்து கூட அவர் கனவு கண்டு கொண்டிருக்க இந்த நேரத்தில் அவர் இப்படி கூறவும் அவருக்கு தாங்கி கொள்ள முடியாமல் தான் கேட்டார்...

ஆனால் அதற்கு சிவபிராகசமும்,"என் பொண்ணுக்கு இதில் விருப்பம் இல்லை"என்ற பதிலை கூறவும் இதற்கு மேல் சாரதாவால் ஒன்றும் கூற முடியவில்லை...பெண்ணுக்கு விருப்பம் இல்லை எனில் நிர்ப்பந்தம் செய்ய முடியாதே என எண்ணினார்...

அப்படி இருக்க இன்று அந்த பெண் தன் வீட்டுக்கு தன் மருமகளாக தன் வீட்டுக்கு வாயிலில் அனாதை போல நின்று கொண்டிருப்பதை பார்த்தவருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்....



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top