Share:
Notifications
Clear all

அத்தியாயம் 29

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அவனது காரின் சப்தம் கேட்டதும் மாமியாருக்கும் மருமகளுக்கும் சப்த நாடியும் அடங்கியது.. இப்பொழுதுதான் எல்லாம் அமைதியாக சென்று கொண்டிருக்கும் பொழுது இது வேறு புதிய பிரச்சனையா என்பது போல அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...

ஆதிக்கு கூறவே வேண்டாம் இந்த வீடு அவனுக்கு தீயில் தகிப்பது போல இருந்தது அதிலும் அவனுடைய கார் சத்தம் வேறு கேட்க அவன் முகம் மேலும் இறுகியது.. வைதேகி மட்டும் கல்லாக நின்று கொண்டிருந்தார்...

வசுவை பற்றி கூறவே வேண்டாமே வசுவுக்கு இந்த இடம் பழக்கமான ஒன்றுதான் அதனால் அவள் அமைதியாக நின்று கொண்டாள்... அருணாச்சலத்திற்கு தான் மகனின் முன்னேற்றத்தை பார்த்து அவ்வளவு பெருமிதம் மனதுக்குள் அவ்வளவு மகிழ்ச்சியாக அவர் உணர்ந்து கொண்டிருந்தார்... மகன் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறானா என எண்ணிக்கொண்டார்...தான் சாரதாவுக்கு செய்ய எண்ணியதை மகன் செய்கிறான் என்று ஆனந்தக் கண்ணீருடன் வீல்சேரில் அமர்ந்திருந்தார்.... அவனது காரின் சப்தம் கேட்டதுமே அங்கு அனைவரும் அமைதியாகி விட்டனர் யாரும் அதன்பிறகு ஒரு வார்த்தை கூட பேசவில்லை...

ஆத்ரேயனும் இவர்களை ரொம்ப சோதிக்காமல் வீட்டுக்குள் நுழைந்தான்.. அவனது பார்வை அனைவரும் மீதும் படிய குழப்பமாக தன் மனைவியை பார்த்தான்... அவளோ கண்களாலேயே தனக்கு எதுவும் தெரியாது என்பது போல கூற ஆத்ரேயனின் கண்கள் ஒரு நொடி ஆதியின் மீது படிந்தது... அவன் நன்றாக இருக்கிறானா என தலை முதல் கால் வரை அளந்தான்... அவன் நன்றாக இருக்கிறானா என்பதை வசுவிடம் கேட்டு தெரிந்திருந்தான் தான் ஆனாலும் குடும்பமாக அவன் இங்கு வந்தது ஏன் என்ற கேள்விக்குறி தொக்கி நின்றது...

அனைவரும் ஆத்ரேயனை பார்த்துக் கொண்டிருக்க அவனது தாய் மட்டும் திரும்பி நின்று கொண்டிருந்தார்.. அவனால் அவனுடைய அம்மாவின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்திருந்தது.. முன்பை விட கொஞ்சம் பக்குவமாக இருந்தான்..அதனால் வந்தவர்கள் இடத்திலும் தாயிடமும் அவனால் கோபம் கொள்ள முடியவில்லை...

15 வயதில் அவனுக்கு பக்குவம் இல்லாமல் ஏதோ அவனது தாயை வருத்தம் வர வைக்கும் அளவுக்கு பேசி விட்டான்... அதன் தாக்கம் அவன் வளர்ந்த பிறகும் அவனை விட்டு செல்லாமல் இருந்தது ஆனால் இப்பொழுது அப்படி இல்லை அருணாச்சலத்தை தன் வீட்டில் பார்த்ததும் ஒரு பக்கம் அவனுக்கு மகிழ்ச்சி தான் இதுநாள் வரை அவனது வீட்டிற்குள் அவர் நுழைந்ததில்லை.. ஒரு மகனாக அவனுக்கு மகிழ்ச்சி கொடுத்தது இருந்தாலும் அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை...அதே போல தன் ஈகோவை விட்டும் அவன் கொடுக்கவில்லை...

"என்ன மிஸ்டர் ஆதி குடும்பத்தோட வந்திருக்கீங்க என்ன விசேஷம்" என்று கேட்டான்...

"விசேஷம் இருந்தால் தான் இந்த வீட்டுக்கு வரணுமா என்ன அவங்களா வரல நான் தான் எல்லோரையும் அழைச்சிட்டு வந்தேன்" என்று வைதேகி பதில் கூறினார்...

அதைக் கேட்ட ஆத்ரேயன் குழம்பி,"எதுக்காக வந்து இருக்கீங்க சொல்லுங்க" என்று தன் வீட்டிற்கு வந்தவர்களை அவமானப்படுத்தாமல் முறையாக உபசரித்தவன் ஆதியை பார்க்க அவனுக்கு காலில் இலேசாக இன்னும் வலி இருப்பதை அவன் நிற்பதை வைத்து உணர்ந்தவன் அவன் நிற்க சிரமப்படுவதை பார்த்து, "அபி வந்தவங்களை உட்கார வைக்க மாட்டியா அவங்களுக்கு ஜூஸ் கொண்டு வா" என்று உபசரிக்க தன் மனைவியும் கூட்டு பிடித்தான்... "அம்மா எதுக்கு திரும்பி நிற்கறீங்க திரும்புங்க???" என தாயையும் ஒன்றுமே நடவாவது போல இயல்பாக்க முயன்றான்..

அபிக்கு இவன் என்ன செய்யப் போகிறானோ என்ற பயம் உள்ளுக்குள் இல்லாமல் இல்லை ஆனாலும் அவனை உபசரிப்பெல்லாம் பார்த்தபோது அவளால் நம்ப முடியவில்லை... அவளும் இங்கு நிற்பதை காட்டிலும் சமையலறைக்குள் செல்வதே மேல் என என்ற நீ வேகமாக சமையலுக்குள் சென்றவள் அவர்களுக்கு தேவையான ஜூஸ் தயாரிக்க முனைந்தாள்...

பிறகு அனைவரும் அமர ஆதிக்கு முள் மேல் இருப்பது போல இருந்தது இருந்தாலும் அமைதியாக இருந்தான் வசுந்தரா இங்கு வருவதற்கு முன்பே அவனிடம் கூறியிருந்தாள்,"ஆதி உனக்கு எப்படி உன்னுடைய அம்மாவை ரொம்ப பிடிக்குமோ அதே மாதிரி தான் அவனுக்கும் பிடிக்கும்.. ஆத்ரேயன் நிலையில் நீ இருந்து உன்னுடைய அம்மா நிலையில் அவனுடைய அம்மா இருந்தாங்க அப்படின்னா வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை நீ கொஞ்சம் யோசிச்சு பாரு...உங்க அம்மா ஒரு டெசிஷன் எடுத்தாங்கன்னா அதை ரெஸ்பெக்ட் பண்ணு.. இந்த விஷயத்துல நீ அல்லது அவன் ரெண்டு பேரும் தலையிட கூடாது அது உன்னுடைய அம்மா அவனுடைய அம்மா இரண்டு பேரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவில் நீங்க தலையிடாதீங்க.. அது தப்பு பெரியவங்க அவர்களே பேசி தீர்த்துக்கட்டும் இத அவன் கிட்ட என்னால சொல்ல முடியாது உன்கிட்ட சொல்றேன் நீ அதைக் கேட்டு நடப்பேன் என்று நினைக்கிறேன்" என்று அவள் கூறியிருக்க அவன் வந்ததிலிருந்து வாயை திறக்கவில்லை அமைதியாக தான் இருந்தான்...

ஆத்ரேயன் அவர்களைப் பார்த்து, "சொல்லுங்க எதுக்காக வந்திருக்கீங்க" என்று மீண்டும் கேட்டான்..

"நான் உங்க அப்பாவை உங்ககிட்ட ஒப்படைக்கலாம்ன்னு வந்தேன்" என்று வைதேகி கூறவும் ஆத்ரேயன் முதல் சாரதா வரை அனைவரும் அதிர்ந்தனர்...

தன் அதிர்ச்சியை இவர்களிடம் வெளிக்காட்டாமல் ஆத்ரேயன், "என்ன சொல்றீங்க மிஸ்டர் ஆதியோட அப்பாவை இங்கே எதற்கு நீங்க ஒப்படைக்கணும்" என்று அவன் கேட்டான்..

அதைக் கேட்டதும் அருணாச்சலத்தின் முகம் சுருங்கி போனது.. சாரதா அதிர்ச்சி மாறாமல் இருந்தார்... வைதேகி எதையும் பொருட்படுத்தாமல், "தம்பி நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல நடந்தது உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும் ரிஷி என்ன செய்தார் என்று நல்லாவே தெரியும்... அதுபோல நீங்க ரெண்டு பேரும் மாறிடக் கூடாது அப்படின்னு தான் நான் இந்த முடிவை எடுக்கிறேன் உண்மையிலே உங்க அம்மாவுக்கு தான் எல்லா உரிமையும் உண்டு அது எனக்கு தெரியாமல் இல்லை ஆனால் தாலி கட்டின புருஷன் மேல நான் ரொம்ப பாசம் வைத்துட்டேன் இதுவே கல்யாணத்துக்கு முன்னாடி தெரிந்திருந்த சத்தியமா நான் இவர் பக்கம் கூட திரும்பி பார்த்திருக்க மாட்டேன்

அப்போ எனக்கு தெரியல தாலி கட்டி வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் அப்படின்னு நினைச்சு அவரோட வாழ்ந்துட்டேன்.. என்னால அவரை விட்டு பிரிய முடியல.. அதே வலி உங்க அம்மாவுக்கும் இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும் ஆனா நான் உங்க அப்பாவை பிடித்து வைக்க கிடையாது உங்க அப்பா உங்களை பார்க்க வருவார் என்று எனக்கு நல்லாவே தெரியும்... ஆனால் அதுக்குள்ள என்ன என்னமோ நடந்துச்சு இவர் அடிப்பட்டு இப்படியே முடங்கி போயிட்டாரு... நீங்க பெருசாகி நீங்க ரெண்டு பேரும் முட்டி மோதிட்டு இருக்கீங்க இது இப்படியே போனா பின்னாடி வர சந்ததியினரும் இதே தான் தொடர்வாங்க..

அதனால தான் நான் சொல்றேன் உரிமை இருக்குற இடத்துல தான் உறவு இருக்க வேண்டும் அதனால உங்க அம்மா கிட்டயே அவருடைய புருஷனை ஒப்படைத்து விடுகிறேன் இது தவிர எனக்கு வேற வழி தெரியல" என்று கூறும் பொழுதே அவரது கண்கள் நிறைந்தது... அவர் பேசுவதை எல்லாம் ஆழமாக அவன் பார்த்துக்கொண்டு இருந்தான்...

அவனால் அவர் கூறுவதை கிரகித்துக் கொள்ள முடியவில்லை அவர் உண்மையை கூறினாலும் ஒரு பெண்ணாய் அவர் பல வலிகளை சுமந்து கொண்டு தான் இதை கூறுகிறார் என்பதை அவன் புரிந்து கொண்டான்... ஆதி தன் தாய் அழுவதை பார்த்து, "அம்மா அழாதீங்க உங்களுக்கு நான் இருக்கேன் நீங்க எதுக்காக இப்படி அழுதுட்டு இருக்கீங்க??" என கேட்டான்...

சாரதா அனைவரின் முகத்தையும் பார்த்து மகனது முகத்தை பார்க்க அவனும் அவரைத்தான் அந்த நொடி பார்த்துக் கொண்டிருந்தான் போலும்... அவனது தீர்க்கமான முகத்தை பார்த்து என்ன எண்ணினாரோ, "இதோ பாருங்க எனக்கு எந்த உரிமையும் வேண்டாம் உறவும் வேண்டாம் நான் இவரை காதலித்தது உண்மைதான் இல்லைன்னு சொல்லல..கல்யாணமும் பண்ணி அழகா தான் வாழ்ந்தோம் அவர் எதையும் என்கிட்ட மறைக்கல அவங்க குடும்ப விசயம் முதல் கொண்டு எனக்கு நல்லா தெரியும்..அவர் என்னை ஏமாத்தி உங்களை கல்யாணம் பண்ணிக்க எல்லாம் இல்லை... உண்மையில் அவருடைய அம்மாவை நினைச்சு நான் பயந்தேன் இப்படி நடக்குமோன்னு கூட நான் நினைச்சு பார்த்தது உண்டு ஆனால் இவர் மேல வச்ச காதல் என்ன வந்தாலும் இவர் இருக்கிறார் அப்படின்னு நான் நினைச்சுப்பேன்..

ஆனா எப்போ உங்களை கல்யாணம் பண்ணி உங்க கூட வாழ ஆரம்பிச்சிட்டாரோ அப்போ இருந்து அவருடைய விரல் நுனி கூட என் மேல பட்டது கிடையாது.. நான் அதை அனுமதிச்சதும் கிடையாது.. அப்பவே எனக்கும் அவருக்கும் உள்ள உறவு முடிஞ்சு போச்சு.. ஆமாம் என்னால அதை இப்போ வரை ஏத்துக்க முடியல என் பசங்க சொல்லி நான் அவர்கிட்ட இருந்து விலகி போகல இது நானா எடுத்த முடிவு தான்...

பிறகு என் மகள் இறந்ததுக்கு அப்புறம் நாம் முடிவு பண்ணினது என் பசங்களுக்கு அப்பா என்கிற உறவும் முறிஞ்சு போச்சு அப்படின்னுதான் நான் முடிவே பண்ணிட்டேன்..

அதன் பிறகு நான் இவரைப் பற்றி நினைக்க கூட கிடையாது... ஆனால் நீங்கள் தான் அவரை இதுநாள் வரை பார்த்துக் கொண்டதும் ஒரு மனைவியா எல்லா பணிவிடைகள் செய்தது எல்லாமே நீங்கதான்... அப்படி இருக்கும் பொழுது நான் அதுல உரிமை கூறி வருவேன் என்று நினைக்கவே வேண்டாம்... நான் வரவே மாட்டேன் அதனால தயவு செஞ்சு அவரை அழைச்சிட்டு போங்க மனசாரத்தான் சொல்றேன்... நீங்க அவர் கூட இருங்க எனக்கு அதுல எந்த வருத்தமும் கிடையாது" என்று கலங்கிய விழிகளோடு சாரதா கூறினார்...

"இல்லை சாரதா அன்னைக்கே நான் விலகி இருக்கணும்" என்று கூறினார் வைதேகி..

"இத பாருங்க இதுல உங்க தப்பு எதுவும் இல்ல...தப்பு செஞ்சது இவரும் இவரோட குடும்பமும் நீங்க இப்படி குற்ற உணர்ச்சியில யோசிச்சிட்டு இருக்காதீங்க நடந்தது நடந்து போச்சு இப்போ நான் இந்த வாழ்க்கைக்கு பழகிட்டேன் எனக்கு அவரை சத்தியமா ஏத்துக்க முடியாது எப்ப இவரு வேறொரு பொண்ணு கூட வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிட்டாரோ அப்போ இருந்து நான் மனதளவில் அவர்கிட்ட இருந்து விலகித்தான் இருக்கேன்... இனியும் எனக்கு அந்த வாழ்க்கையை போதுமானது.. எனக்கு இப்போ பையன் இருக்கான் மருமக இருக்கா.. அவங்க சந்தோஷமா இருக்கிறது பார்த்துட்டு நான் சந்தோஷப்பட்டு வாழ்ந்துட்டு இருக்கேன் எனக்கு இந்த வாழ்க்கையை நிறைவா இருக்கு இனி மறுபடியும் பழசை எல்லாம் என்னால நினைச்சு பார்க்க முடியாது.." என்று அவர் மனதை போட்டு உடைத்தாலும் ஏக்கமாக அமர்ந்து இருக்கும் அருணாச்சலத்தின் விழிகளை அவர் சந்திக்கவே இல்லை அவரால் சந்திக்க முடியாது ஏனெனில் அருணாச்சலம் இவரை ஏமாற்றி இருந்தாலும் இவரது காதல் உண்மை அல்லவா அருணாச்சலம் என்ற ஒற்றை மனிதரை நம்பி அவருடைய வாழ்க்கையை பகிர்ந்தவர் அல்லவா அதனால் சாரதா அவரது பார்வையை தவிர்த்தார்...

அவர் கூறுவதை மறுத்த வைதேகி, "நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறதா இல்லை சாரதா அவர் இனி இங்கேதான் இருப்பார்.. இத்தனை நாள் நான் பார்த்தேன்ல இனி கொஞ்சம் நீங்களும் பாருங்க.. ஒரு பொண்ணா புருஷனை விட்டு பிரிந்து இருக்கிறது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு இப்ப புரியுது நீங்க இதை எத்தனை வருஷமா அனுபவிச்சிட்டு இருக்கீங்க இப்பவாவது எனக்கு இந்த புத்தி வந்துச்சு அதுவே போதும்.. என்னுடைய ஒரே ஒரு முடிவு இப்போ இருக்கிற தலைமுறை இந்த பழி உணர்வோட வாழக்கூடாது அவ்வளவுதான் அதுக்காகத்தான் நான் இந்த முடிவை எடுத்து இருக்கேன்" என்று கூற சாரதா அறவே மறுத்தார்...

இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ஆத்ரேயன் மற்றும் ஆதி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள ஆத்ரேயன் வைதேகியை பார்த்து, "அதுதான் அம்மா சொல்றாங்க இல்லையா!!! ஒரு காலத்தில் நாங்க இவர் இல்லாததனால வருத்தப்பட்டு இருந்தோம்.. அது உண்மைதான்.. இப்ப நாங்க வருத்தப்பட்டுட்டு இல்ல நாங்க இந்த வாழ்க்கைக்கு பழகிட்டோம் நானும் உங்க மகனும் மோதிக்கிட்டது வெறும் உரிமை போராட்டம் தான்.. வேறு ஒன்றும் கிடையாது.. அது உங்க பையன் என்னை சீண்டும்போது திருப்பி அவனை சீண்டனும்னு எனக்கு தோணும் அதனால நான் பேசுறது தானே ஒழிய வேறொன்றும் கிடையாது..

எனக்கு என்னுடைய அப்பா வேணும் அப்படின்னு நான் நினைச்சிருந்தா எப்பவோ அந்த வீடு தேடி வந்து அவரை கூட்டிட்டு வந்து இருப்பேன் நான் அப்படி நினைக்கல அப்பா இல்லாத வலி என்னன்னு எனக்கு புரியும்.. அவரு எனக்கு வேணும்னு நான் நினைச்சதில்ல.. ஆனால் அவருடைய பசங்க தான் நாங்க அவருடைய மனைவிதான் என்னுடைய அம்மான்னு நாலு பேர் சொன்னா போதும் அது மட்டும் தான் எனக்கு வருத்தமா இருந்துச்சு...

இப்ப அதையும் நான் கடந்துவிட்டேன் யார் என்ன சொன்னாலும் அதுக்கு தகுந்த பதில் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் அதனால் தயவு செஞ்சு அவரை அழைச்சிட்டு போங்க .. அப்புறம் நீங்க இப்படி யோசிக்கிறதே எனக்கு கொஞ்சம் ஆறுதலா தான் இருக்கு இல்லைன்னு சொல்ல கிடையாது ஆனால் காலம் தாழ்த்தி நீங்க யோசிச்சிட்டீங்க இனி ஒன்னும் பண்ண முடியாது " என்று ஆத்ரேயன் ஆதியின் குணத்தை எண்ணி கூறினான்...

அதைக் கேட்டதும் ஆதியோ, "அம்மா ரொம்ப தியாகி மாதிரியெல்லாம் பேச வேண்டாம்னு சொல்லுங்க.. அதுதான் நீங்க இரண்டு பேரும் பேசிட்டு இருக்கீங்கல்ல...அவனை கொஞ்ச நேரம் அமைதியா இருக்க சொல்லுங்க அப்பா இங்கேயே இருக்கட்டும் நாம போகலாம்" என்று கூறினான்..

அதைக் கேட்டதும் வசுந்தரா முதல் அனைவரும் அதிர்ச்சி அடைய ஆத்ரேயனின் விழிகள் ஆதியை ஆச்சரியமாக பார்த்தது...ஆனால் அவன் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை...

ஆம் கூறியது ஆதி தான் ஏனெனில் தன் வீட்டில் இருந்து வரும்போது கூட அம்மா தவறான முடிவை எடுக்கிறார்.. எதுக்கு நம்ம அப்பாவை விட்டுக் கொடுக்கணும் என்று தான் எண்ணியிருந்தான்... மேலும் அவனது தாய் வைதேகி பேசியதெல்லாம் அவனது மூலையில் அழகாக பதிந்து போனது அவரின் உணர்வுகள் அவன் மதிக்கத் தான் செய்திருந்தான்..அதே நிலையில் இங்கு வரவும் சாரதாவின் எண்ணங்களை அவன் கேட்ட போது அவன் அதிர்ந்து விட்டான்...

அவன் மனதில் சாரதா அப்படி அல்ல குலசேகரி கூறியது போல அப்பாவை மயக்கி பணத்துக்காக அவருடன் வாழ்ந்த பெண் அப்படித்தான் எண்ணியிருந்தான்... அதனால் தான் ஆதி இவர்கள் யாரையும் மதிக்கவே இல்லை.. அப்பா என உரிமை கோரும் ஆத்ரேயனை கூட அவன் வெறுத்து ஒதுக்கினான்... அப்படி இருக்க நேரடியாக சாரதா பேசுவதை கேட்ட அவனுக்கு அதிர்ச்சி ஆனது...

கூடவே சாரதா பேசியதில் அவன் கிரகித்துக் கொண்டது என்னவென்றால், இவர் நம்ம அம்மாவை பத்தி யோசிக்கிறாங்க என்ற ஒரு எண்ணமே அவனுக்கு அவர் மீது மரியாதையை கொடுத்தது... அதனால் தான் இத்தனை நாளும் பொத்தி வைத்த தன் தந்தையைக் கூட பகிர அவன் எண்ணி விட்டான்..ஆம் தந்தையை விட்டுக் கொடுக்க எண்ணினான் ஆதி...

ஆதி அவ்வாறு கூறியதும் அதைக்கேட்ட வைதேகி மற்றும் சாரதாவின் கண்கள் நிறைந்தது... ஏனெனில் ஆதி தான் அருணாச்சலத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என எண்ணியிருந்தவன் அவனது மனது இப்படி மாறியிருக்கிறதா என அனைவருமே எண்ணினர்... அதில் ஆத்ரேயனும் உள்ளடக்கம் அதனால் ஆதி கூறவும், வசுவுக்கு தன் கணவனை இழுத்து அணைத்து முத்தமிட வேண்டும் என்ற எண்ணம் தான் வந்தது அவள் இதைத்தான் அவனிடம் எதிர்பார்த்தாள்.. இதை மட்டும் தான் எதிர்பார்த்தாள்..அதை அவன் அவனாக செய்யவும் அவளுக்கு மிகுந்த சந்தோஷம் மனதில் உருவானது என்னவோ உண்மைதான்...

ஆதி மற்றும் அனைவரும் பேச்சைக் கேட்டு அருணாச்சலத்திற்கு குற்ற உணர்ச்சி அதிகமாகியது... தன்னுடைய முதுகெலும்பில்லாத தனத்தால் நடந்த இன்னல்களை அவர் கண்கூட நிதமும் அனுபவித்து வருகிறார் மனது சுத்தமாக இருந்து என்ன பிரயோஜனம்??? பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டிய தருணத்தில் பேசியிருக்க வேண்டும் எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்த்து இருக்க வேண்டும் இல்லையேல் இப்படிப்பட்ட தருணங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும் என எண்ணியவர் எப்படியாவது அனைவரும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும்.. அதைப் பார்த்து தன் இறுதிக் காலத்தை கடத்தி விடலாம் என எண்ணினார் அருணாச்சலம்.. அவருக்கு அவரது இரு மகன்களும் எதிரும் புதிருமாக இருப்பது மிகுந்த வருத்தத்தை கொடுத்தது ஆனால் என்ன செய்ய இயலும் அதற்கெல்லாம் அஸ்திவாரம் அவர் தானே என எண்ணியவர் கண்களாலேயே தன் வலியை அனைவருக்கும் உணர்த்திக் கொண்டிருந்தார்...

ஆதி அனைவரையும் பார்த்து, "நீங்களும் அம்மாவும் சேர்ந்து எந்த முடிவு எடுத்தாலும் எங்களுக்கு சம்மதம் தான் இரண்டு பேரும் அப்பாவை விட்டுக் கொடுத்தா அவர் எங்கே போவாரு??? எல்லாருக்கும் எல்லாம் தெரியும் அதையெல்லாம் ஒதுக்கிட்டு ஒரு முடிவுக்கு வாங்க... என்னை மன்னிச்சிடுங்க பாட்டி சொன்னத வச்சு உங்களை நான் தப்பா நினைச்சிருந்தேன் இப்பதான் உண்மையெல்லாம் எனக்கு விளங்குது இதுல பாட்டி ஆடுன நாடகமும் எனக்கு முழுசா புரியுது... ஒருத்தருக்காக ஒருத்தர் விட்டுக் கொடுக்கிறது நல்லது தான் ஆனால் ஏன் அப்படி இருக்கணும் நீங்க ரெண்டு பேருமே அப்பாவுக்கு இரண்டு கண்ணு மாதிரி தான் அதைத்தான் அப்பாவும் விரும்புவார் முடிஞ்சா ஒட்டுக்கா இருங்க" என்று கூறியவன் ஒதுங்கிக் கொண்டான்...

அவன் பேசியதை கேட்டு ஆத்ரேயனுக்கு மனதில் மிகவும் மகிழ்ச்சி உண்டானது... ஆதி இப்படி பேசுவான் என அவன் எண்ணி கூட பார்த்ததில்லை... அந்த நொடி ஆதியின் மீது மதிப்பு கூடினாலும் ஆத்ரேயன் காட்டிக் கொள்ளவில்லை...

ஆனால் சாரதாவுக்கு தான் ஆத்ரேயன் என்ன கூறுவானோ என்ற பயம் இருந்தது அவனது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார்... அவனுக்கு பிடிக்காத எந்த விஷயத்தையும் செய்ய மாட்டேன் என்ற நிலையில் தான் அவர் இருந்தார் இருந்தாலும் அவரால் அருணாச்சலத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது அப்படி இருக்க மகனை பார்த்தார் அவனும் அவரைப் பார்த்தவனுக்கும் வைதேகி இப்படி நடந்து கொள்வார் என எதிர்பார்க்கவில்லை..

உண்மையில் அவன் அருணாச்சலத்தை பற்றி நினைக்கவே இல்லை என்பதுதான் உண்மை அப்படி இருந்தாலும் அவர் தனது அம்மாவையும் ஒரு பெண்ணாக மதித்து இதை இப்போதாவது கூறினாரே என எண்ணினான்... ஆனால் அருணாச்சலத்தின் தவிப்பையும் அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது தாயின் மனதையும் உணர்ந்து கொண்டான் அதனால் அவனுடைய அம்மாவின் அருகே அருகே வந்தவன், "அம்மா எங்களுக்காக நீங்க யோசிக்க வேண்டாம்.. உங்களுக்கு அப்பாவை பிடிக்கும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும் அவர் செய்த துரோகத்தை உங்களால் மறக்க முடியலை தான் ஆனாலும் அப்பாவை விட்டு உங்களால இருக்க முடியாதுன்னு எனக்கு தெரியும் மா உங்க பல இரவுகளை நீங்க தூக்கம் இல்லாமல் கழிச்சது எனக்கு தெரியும் என்ன தான் நீங்க விருப்பமில்லை அப்படின்னு சொன்னாலும் இன்னும் அப்பா உங்க மனசில் வாழ்ந்துட்டு தான் இருக்காங்க" என்று அவனும் கூற வைதேகி என்ன இருந்தாலும் சாரதாவையும் அருணாச்சலத்தையும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற முடிவிலேயே தான் இருந்தார்...

"உண்மை தான் கண்ணா ஆனால் என்னால எதையுமே மறக்க முடியல டா கண்ணா நான் என்ன பண்ணுவேன்" என்று அவர் தன் மகனை அணைத்துக் கொண்டு அழுதார்..அதை பார்த்ததும் அனைவருக்கும் வருத்தமாகி போய்விட்டது..

"அம்மா இப்போ அப்பா இருக்கிற நிலைமைய பார்த்துட்டு உங்களால அப்படி சொல்ல முடியுமா??? நானும் ஒரு காலத்துல உங்க கிட்ட சொன்னவன் தான் இவரு செத்துட்டாருன்னு கூட நீங்க சொல்லி இருக்கலாம் எதுக்கு இப்படி ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்தீர்கள் என்று நான் சொன்னேன் தான்... ஆனா இப்போ நானே சொல்றேன் அம்மா உங்களால முடிஞ்சா அப்பாவை ஏத்துக்கோங்க" என்று அவன் கூறவும் ஆதி முதல் அனைவருக்கும் அதிர்ச்சி தான் இருவரும் இருவரின் தாய்மார்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வசுந்தரா, அபி இருவரும் மகிழ்ச்சியாக நடக்கும் விஷயங்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.. அந்த சமயம் சாரதா நிமிர்ந்து அருணாச்சலத்தை பார்த்தார்..

இதில் முழு தவறு அருணாச்சலத்தின் மீதுதான் என்றாலும் அவரது நிலையை வைத்து பார்க்கும் பொழுது இப்பொழுது அவரிடம் சண்டை போடவோ, ஆத்திரப்படவோ, கோபப்படவோ இயலாத நிலையில் அவர் இருக்கிறார்... இனி உள்ள காலம் அமைதியாகவாவது இருக்கலாம்.. இப்போது தான் அவரை ஏற்றுக் கொண்டாலும் தன் மனது அமைதியாகாது இவர்கள் அனைவரும் தன்னை ஏற்றுக்கொள்ள சொல்லி வற்புறுத்தினாலும் என் மனதில் இருக்கும் வலி என்றுமே மாறாது ..

ஆனால் இப்படி இருக்கும் அவரை என்னால் வருத்தப்பட வைக்கவும் முடியவில்லை என்று தவித்த சாரதா அவருக்கு உள்ளுக்குள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அனைவரின் நலன் கருதி அருணாச்சலத்தை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தார் அதனால் தன் மனதை மாற்றிக் கொண்டார் சாரதா...

அதனால் சாரதா எதுவும் பேசாமல் அருணாச்சலத்தின் பார்வையை தவிர்த்து வைதேகி அருகே வந்தவர் அவரது கைகளை மென்மையாக பிடித்துக் கொண்டு, "உங்களுக்காக நம்ம பிள்ளைகளுடைய அமைதிக்காக நான் இதற்கு சம்மதிக்கிறேன் ஆனால் ஒரே ஒரு நிர்ப்பந்தம் இருக்கு இவரை என்கிட்ட மட்டும் முழுசா நீங்க ஒப்படைச்சிட்டு போக கூடாது நீங்களும் கூடவே இருக்கணும்" என்று கூறினார்... அதைக் கேட்டதும் வைதேகி அவர்களின் கண்கள் நிறைந்தது..

ஆனால் மோதிக் கொள்ளும் இருவரும் சாரதா மற்றும் வைதேகி இவர்கள் ஒன்றிணைந்தாலும் சமாதானம் ஆவார்கள் என்ற நிர்பந்தம் இல்லை

யே... பெற்றோர்களுக்காக அவர்கள் மனதை அவர்கள் இருவரும் மாற்றிக் கொண்டாலும் இருவரும் பார்வையாலேயே மோதிக் கொண்டுதான் நின்று கொண்டிருந்தனர்…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top