Share:
Notifications
Clear all

அத்தியாயம் 20

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

ஆத்ரேயனின் கார் அந்த மருத்துவ வளாகத்துக்குள் அதிவேகமாக நுழைந்தது...அவனது கைகள் எப்படி வாகனத்தை செலுத்தியது என்பதை அவன் அறியான்...

அவனது வேகம் அதிவேகமாக இருந்தது விஷயத்தை கேள்வி பட்டவனுக்கு கிரகித்துக் கொள்ள சில நேரம் ஆகியது.. அவனுக்கு அவனுடைய தாயை பார்த்து ஆக வேண்டும் என்ற நிலையில் வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தான்...

அவன் நிலை தவறி இருந்தான்... அவனை சீண்டி இருந்தால் அவன் அதற்கு தகுந்தது போல விட்டிருப்பான்... ஆனால் அவனது தாயை சீண்டி இருக்கவும் அதிலும் புத்தம் புதிய அவனுடைய வெள்ளை நிற கார்....அவனுடைய தாய்க்காக வாங்கி இருந்தான்...

இன்று அவன் தாய்க்காக வாங்கிய காரில் தான் கடந்த ஒரு மாதமாக அவன் பயணம் செய்து கொண்டிருந்தான்... இன்று ஏனோ அவன் அந்த காரை வைத்துவிட்டு அவனுடைய கருப்பு நிற வாகனத்தை எடுத்து சென்றான்..

அப்படி இருக்க புத்தம் புதிய கார் எரிந்து சாம்பல் ஆகுவது எப்படி??? என்ற கேள்வி அவனை அரிக்க விசயம் தெரிந்ததும் அவன் எப்படி நடந்தது என விசாரித்து விட்டான்..

அவன் கேட்ட செய்தி தான் அவனை இப்போதும் அதிர்ச்சியில் இருந்து மாறாமல் வைத்தது...ஆம் அவன் விசாரித்ததில் காரில் பாம் வைத்திருந்ததாக கூறியிருந்தனர் அதைக் கேட்டவனுக்கு இன்னும் அதிர்ச்சி மாறவில்லை நேற்று வரை அவன் தான் அந்த காரை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தான்...

இன்று தான் ஏனோ அவன் கருப்பு நிற காரை எடுத்து சென்றவன் அலுவலகத்தை அடையவில்லை அதற்குள் இப்படி ஒரு விஷயம் நடந்திருந்தது...

அது தான் அவனுக்கு மிகப்பெரிய சந்தேகத்தை உண்டாகியக்கியது.. அதிலும் ஆதியின் மீதுதான் அவன் பார்வை முழுவதும் இருந்தது... அவன் தான் ஏதாவது செய்திருக்க வேண்டும் என்று எண்ணினான்... அப்படி அவன் தான் செய்திருந்தால் எனில் அவனது உயிரை கண்டிப்பாக எடுத்தே தீருவேன் என எண்ணிக்கொண்டான்..

அங்கே சாரதா அம்மா கண்களை மூடி படுத்து இருந்தார்...நல்ல வேளையாக அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.. அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார்...

அங்கு அவர் அருகே மைதிலி ,ஸ்ரீ லட்சுமி, சிவப்பிரகாசம் மற்றும் அவனது மனைவி அபிநந்தனா அனைவரும் இருந்தனர்... அவனை கண்டதும் சிவப்பிரகாசம் அவனது பதட்டத்தை பார்த்து," பயப்படாதீங்க ஒன்னும் பிரச்சினை இல்லை அவங்க சேஃப்தான் நல்லா இருக்காங்க... அவங்க அதை நேரில் பார்த்த அதிர்ச்சியில கொஞ்சம் மயக்கம் ஆகிட்டாங்க...அபி தான் சீக்கிரம் ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்து அட்மிட் பண்ணி என்னை அழைத்து சொன்னா அதான் உங்களுக்கும் தகவல் கொடுத்தோம்" என்று கூறினார்...

அவன் அவரது கையைப் பிடித்து," ரொம்ப நன்றி சார் பெரிய உதவி பண்ணி இருக்கீங்க எனக்கு இருக்கிற ஒரே உறவு என்னுடைய அம்மா மட்டும்தான் அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் என்னால தாங்கியிருக்க முடியாது..உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் என்னோட நன்றிகள்" என்று கூறினான் அவன் பேச்சை கேட்ட அருகே நின்று கொண்டிருந்த அபிநந்தனாவுக்கு அந்த பேச்சு என்னவோ போல இருந்தது...அவனையே பார்த்தபடி நின்று கொண்டு இருந்தாள்...

யாரிடமும் அவனது மனதைப் பற்றி கூறி இராதவன் தாய்க்கு ஒன்று என்றதும் தன்னிலை இழந்து விட்டான்... சிவப்பிரகாசத்திடம் தாய் தன் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை கூறவும் அவரும்,"நல்ல வேலையா அவங்க கார்ல ஏறல அவங்க கார்ல ஏறுவதற்கு ஒரு நிமிடம் முன்னாடி தான் கார் தீ பிடிச்சிருக்கு ...நல்ல வேலையா டிரைவருக்கும் எதுவும் ஆபத்து ஆகல ஆனால் ஒரு அஞ்சு நிமிஷம் ஆகியிருந்தால் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது" என்று சிவப்பிரகாசம் கூறினார்...

அதே நினைப்புதான் அவனுக்கும் இருந்தது,.. இதன் காரணமானவன் யார் என்று அவனுக்கு தெரிந்தே ஆக வேண்டும்... அதனால் அவன் அவனுக்கு தெரிந்த ஒரு போலீஸிடம் விசாரிக்க சொன்னான்...

அவர் அடுத்த இரண்டு மணி நேரத்தில் கூறிய விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..."ஆத்ரேயன் சம்பவத்தை பண்ணினது யாருன்னு கண்டுபிடிச்சாச்சு இந்த மாதிரி டைமிங் செட் பண்ணி கார்ல பாம் வைக்கிறதுக்கு ஒருத்தன் தான் எக்ஸ்பர்ட் அவன் தான் இதை செய்திருக்கான் கணக்கச்சிதமா இந்த மாதிரி வேலை எல்லாம் செய்வான்... அவனை பிடிச்சு விசாரணை பண்ணினதில் அவன் சொன்னது ஆதி தான் செய்ய சொன்னான் அப்படின்னு சொல்றான் இப்ப என்ன பண்றது ஆதியை அரெஸ்ட் பண்ணிடலாமா???" என்று கேட்டான்...

"வேண்டாம் இதுவரைக்கும் நீங்க செஞ்சதே போதும் எனக்கு அந்த கெஸ்ஸிங் எப்பவோ இருந்தது இப்போ ஊர்ஜிதம் ஆயிடுச்சு... அவனை நானே பார்த்துக்கொள்கிறேன் கேஸ் எல்லாம் பைல் பண்ண வேண்டாம்" என்று கூறியவனுக்கு ஆத்திரம் தலைக்கு மேல் ஏறியது...

அதேநேரம் மருத்துவர்கள் வந்து அவரை பரிசோதனை செய்ய அவனும் ,"டாக்டர் அம்மாவுக்கு எதுவும் இல்லையே??" என்று கேட்டான்...

" இல்லை மிஸ்டர் ஆத்ரேயன் அவர்களுக்கு அதிர்ச்சி தான் பயப்பட எதுவும் இல்லை உங்க மிஸஸ் வந்து சரியான நேரத்தில் அட்மிட் பண்ணிட்டாங்க" என்று கூறவும் தான் அங்கு அவள் இருக்கிறாள் என்பதே அவனது கண்களுக்கு உரைத்தது...

ஒரே ஒரு பார்வை அவளை தீர்க்கமாக பார்த்தான்... அவளும் அவன் பார்க்க மாட்டானா என அவனை பார்த்துக்கொண்டு இருந்தாள் ஏனோ ஏதோ ஒன்று தடுத்தது... அவனருகே சென்று அவனது பதட்டத்தை குறைக்க வேண்டும் அவனுடன் பேச வேண்டும் என அவளது உள் மனம் ஏங்கினாலும் அவளுக்கு ஏதோ ஒரு தடை இருக்க அவனது பார்வை எதிர்கொண்டு கொண்டே நின்றாள்...

அவன் அவளது அருகாமையை எதிர்பார்க்கவில்லை.. அவனை பொறுத்தவரை அவளுக்கு தான் கெட்டவன் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும் என்று எண்ணிய அவனுக்கு முதலில் அவனது அம்மா முக்கியமானதாக இருந்தார்...

அவரோ மகனை மிகவும் காக்க வைக்காமல் கண்களை திறந்து பார்த்தார்... அவர் கண்களை திறந்ததும் தான் அவனுக்கு கொஞ்சம் சமாதானம் ஆகியது.." அம்மா எப்படி இருக்கீங்க???" என்று அவர் அருகே அமர்ந்து அவரது கைகளை மென்மையாக பிடித்துக் கொண்டான்...

"நான் செத்துடுவேன்னு நெனச்சேன் பா உன்னை எல்லாம் பார்க்கவே மாட்டேன்னு நினைச்சேன்!!" என்று கூறவும் அவர் அதிக பயத்தில் இருந்திருக்கிறார் என்று மட்டும் அவனுக்கு விளங்கியது..

"கவலைப்படாதீங்க மா அதுதான் உங்களுக்கு எதுவும் ஆகலையே??" என்று கூறினான்.." எப்படிப்பா புது வண்டி வெடிக்கும்??" என்று சந்தேகமாக கேட்டார்...

நியாயமான கேள்விதான் ஆனால் அவரிடம் உண்மையை கூற அவன் விரும்பவில்லை ..."தெரியவில்லை அம்மா ஏதாவது டெக்னிகலி ஃபால்ட்டா இருக்கும்" என்று கூறினான்..

ஆனால் அவரோ மகனுக்கு நடந்த விஷயத்தை கூறிட விழைந்தார்.."நான் கார் கிட்ட ஏறப்போறேன் அதுக்குள்ள ஏதோ ஒரு குட்டி குழந்தை என் சேலையை பிடித்து இழுத்துச்சு திரும்பி பாக்கறதுக்குள்ள இந்த பக்கம் கார் வெடிச்சிடுச்சுப்பா" என்று பயத்திலேயே கூறினார்... அவரது பதட்டத்தை கண்ட அவன்," அம்மா ரிலாக்ஸ் ஆகுங்க மா!!நடந்ததையே யோசிச்சிட்டு இருக்காதீங்க " என்று கூறினான்..

அவரோ அவரை சுற்றி இருப்பவர்களை எல்லாம் பார்க்க உடனே அபி அவரருகே வந்தவள் ,"ஆன்ட்டி உங்களுக்கு ஒன்னும் ஆகல பயப்படாமல் இருங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிவிடும்" என்று கூறினாள்.. அவரும் சரி மா என்று அவளைப் பார்த்து மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்தார்..அவளும் ஆதரவாக அவரது கையை பிடித்து கொண்டாள்..

அவள் அவருக்கு ஆதரவாக இருப்பதை கண்டு,"அம்மா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு கொஞ்ச நேரம் அப்சர்வேஷன் வச்சிட்டு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம் என்று சொல்லி இருக்காங்க நான் அதுக்குள்ள வந்துடறேன் அதுவரைக்கும் ரெஸ்ட் எடுங்க" என்று கூறியவனுக்கு அதற்கு மேல் அங்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை அவனுக்கு செய்ய வேண்டிய வேலை நிறைய இருந்தது...

மைதிலி அவரிடம்," நீங்க போயிட்டு வாங்க நாங்க அம்மா கூட இருந்து பாத்துக்குறோம்" என்று கூறினார்... அப்போதும் அவன் தலையை மட்டும் ஆட்டி விட்டு அபியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றான்... அபிக்கு அவன் பார்வையின் அர்த்தம் புரியாமல் இல்லை உடனடியாக பேச வேண்டும் என்றால் எப்படி அவளுக்கு தயக்கமாக இருக்க அவள் அமைதியாக இருந்து கொண்டாள்..

அவன் நேராக சென்றது ஆதியின் வீட்டுக்கு அங்கு குலசேகரியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நிகழ்ந்து கொண்டு இருந்தது..

அவனது கார் ஆவேசமாக அந்த வீட்டுக்குள் நுழைய காவலாளி வந்து,"சார் நீங்க வந்தா???உங்களை உள்ள விடக்கூடாது" என சொல்லி இருக்காங்க" என்று கூறவும் ,"உயிர் மேல பயம் இருந்தா விலகி நில்லு இல்ல இப்படித்தான் அவர்களுக்கு விசுவாசமா இருப்ப அப்படின்னா என்னால எதுவும் செய்ய முடியாது ஏத்திட்டு போயிட்டே இருப்பேன்" என்று கூறினான்.. அவன் கார் ஸ்டியரிங்கை முறுக்க அந்தக் காவலாளி அவனது கோபத்தை பார்த்து அவனுக்கு வழி மாறி கொடுத்தான்...

அசுரவேகத்தில் உள்ளே சென்ற அவன் இதோ அந்த வீட்டுக்குள்ளும் நுழைந்து விட்டான்... இதுநாள் வரை அந்த வீட்டுக்குள் அவன் காலடி எடுத்து வைத்ததில்லை...

ஆனால் இன்று சூழ்நிலை அவனை உள்ளே செல்ல வைக்க அங்கு குலசேகரி பிறந்தநாள் விழா கொண்டாடும் விதமாக கேக் ஒன்று அவர் முன்னால் வைக்கப்பட்டு இருந்தது... குடும்பத்தார் அனைவரும் சுற்றி இருந்தனர்.. ஆதியை தவிர அனைவரும் நின்று கொண்டு இருந்தனர்.. அவன் கண்கள் ஆதியைத்தான் முதலில் தேடியது...

அனைவரும் இவன் உள்ளே சென்றதும் அதிர்ந்து பார்க்க ரிஷி அவன் முன்னால் வந்து நின்று ,"எதுக்காக வந்திருக்க???இவனை யார் உள்ளே விட்டா???" என்று கேட்டார்..அதை கேட்ட அவன் விரல் நீட்டி எச்சரித்து," எட்ட நிக்கிறது உங்களுக்கு நல்லது எங்க உங்க மகன் ஆதித்யன் அவனை கூப்பிடுங்க அவன் கிட்ட எனக்கு பேசியே ஆகணும்!! சும்மா இருக்க மாட்டானா?? சீண்டிட்டே தான் இருப்பானா???"என்று கூறினான்..

யாருக்கும் தெரியாது அவன் எதற்காக வந்திருக்கிறான் என்று இவனுக்கு எப்பவும் இதே வேலை தானா என குலசேகரி எண்ணி," உனக்கு என்னதான் பிரச்சனை??? எப்ப பார்த்தாலும் வீட்டுக்குள்ள வந்து ஏதாவது ஒரு பிரச்சனை பண்ணிட்டு இருக்க சுத்தமா உனக்கெல்லாம் அறிவே கிடையாதா இந்த வீட்டுக்குள்ள நுழையுற தகுதி கூட உனக்கு எல்லாம் கிடையாது" என்று எடுத்ததும் ஏறினார் அவர்

அதைக் கேட்ட அவனும்,"எனக்கு இந்த வீட்ல இருக்க தகுதி இல்லை தான் ஆனால் இப்படிப்பட்ட வீட்ல இருக்கக்கூடிய அவசியம் எனக்கு கிடையாது ஆனால் இந்த வீட்டில் இருக்கிற ஆளுகளுக்கு தேவையில்லாம என்கிட்ட மோதி பாக்கணும்னு ரொம்ப ஆசை போல நான் முன்னாடியே சொல்லி இருக்கேன் தேவையில்லாமல் என்னை சுத்தி இருக்கவங்களை நோண்டிப் பார்த்தால் என்ன நடக்கும்னு இப்போ உங்கள் பேர மகனோட சாவு என் கையில தான் நீங்களும் ஏதாவது பேசி என்கிட்ட வாங்கி கட்டிக்காதீங்க" என்று கூறினான்..

அதைக் கேட்டதும் அனைவரும் அதிர வைதேகிக்கு தாங்க முடியவில்லை.. தான் பெற்ற மகனை இவன் ஏதாவது செய்து விடுவானோ என எண்ணி ,"அப்படி என்னதான் அவன் செஞ்சான் இப்படி மொட்டையா பேசினா என்ன அர்த்தம் அவன் என்ன பண்ணினான்னு சொல்லு" என்று கூறினார்

"என்னுடைய அம்மா இப்போ ஹாஸ்பிடல்ல இருக்காங்க கார்ல பாம் வச்சிருக்கான் உங்க பையன்.. என்னுடைய அம்மாவுடைய உயிரு ஒரு நிமிஷத்துல தப்பிச்சிருக்கு இல்லைனா அவங்க இந்நேரம் போய் சேர்ந்திருப்பாங்க இதுக்கெல்லாம் காரணம் உங்க மகன் .. உங்க மகனை சும்மா விட சொல்றீங்களா???இல்லை அவனுக்கு பாராட்டு விழா நடத்த சொல்றீங்களா??? இனி நான் சும்மா இருக்க மாட்டேன் உங்க பையன் உசுரு கண்டிப்பா உங்களுக்கு கிடைக்காது" என்று கூறினான்.. இதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்தனர் வசுந்தரா உட்பட..

"எதையும் சொல்லிட்டு செய்யறது தான் என்னுடைய பழக்கம் சொல்லிட்டேன் இனி செஞ்சுருவேன்" என்று கூறியவன் அருணாச்சலத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றான் அந்த இடத்தில் நிற்கும் வசுந்தராவையும் அவன் கண்கள் பார்க்க தவறவில்லை...

வைதேகி மட்டும் ஓடிவந்து ,"தம்பி அப்படி எதுவும் செஞ்சுடாதீங்க" என்று கூறினார்...

"எதுங்க தெரியாம பண்ணிட்டான் எல்லாமே தெரிந்து பண்ணி இருக்கீங்க நீங்க முதற்கொண்டு உங்களுக்கு ஒன்னும் இதெல்லாம் புதுசு கிடையாது???நீங்க எல்லாமே தெரிந்து தானே செய்வீங்க??? மத்தவங்களோட வாழ்க்கை பற்றி எல்லாம் நீங்க யோசிக்க மாட்டீங்களா??? நீங்க யோசிக்காத போது நான் ஏங்க யோசிக்கணும்??? நான் ஒன்னும் உங்க பையன் மாதிரி நல்லவனெல்லாம் கிடையாது நான் கெட்டவன் தான் எனக்கு என்ன செய்யணுமோ அதை செஞ்சுட்டு நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன் இந்த மாதிரி அழுகை எல்லாம் என்னை ஒன்னும் செய்யாது..எதற்கும் ரெடியா இருங்க" என்று கூறியவன் நொடிப்பொழுதும் அங்கு நிற்காமல் சென்று விட்டான்.. வைதேகிக்கு அவன் பேசிய பொருள் புரியாமல் இல்லை ஆனால் அதை யோசித்து கொண்டிருக்கும் சமயம் இது அல்லவே...

அதனால் வைதேகி அடுத்த நிமிடமே ஆதியை அழைக்க அவனும் போனை எடுக்கவில்லை அழைத்து அழைத்து அவருக்கு சோர்ந்து போனது தான் மிச்சம் ஆகியது ..

வசுந்தராவிடம் ஓடிவந்த வைதேகி ,"வசு அவன் போன் எடுக்க மாட்டேங்கிறான் அவனை கூப்பிட்டு சொல்லு அவன் எப்படி ஒரு காரியத்தை செய்தான் என்று கேளு" என்று கூறினார் ..

அவளோ,அவருக்காக அவனை அழைக்க போக, அவரது பதட்டத்தை கண்ட குலசேகரி மற்றும் ரிஷி இருவரும் ,"அந்த கிறுக்கு பையன் தான் ஏதோ சொல்றான் என்று நீ எதுக்கு பதறிட்டு இருக்க அவன் ஏதோ சொன்னானா என் பையன் பேரனுக்கு கை கால் ஏதும் இல்லையா???அவன் திருப்பி அடிக்க மாட்டானா???அவன் ஆம்பளை சிங்கம் இவன் கார்ல பாம் வெச்சதுக்கு எல்லாம் என் பேரன் எப்படி காரணம் ஆவான்???

இவனை சும்மா விட்டது தப்பா போச்சு கொஞ்சம் போகட்டும்னு இடம் கொடுத்தா தலையில் ஏறி உக்காந்துட்டு இருக்கான்" என்று குலசேகரி கூறினார்...

அதைக்கேட்டு ரிஷி,"நான் தான் அப்பவே சொன்னேன் இவனை தீர்த்து கட்டிடலாம்னு சொன்னா நீங்க கேட்டா தானே இப்ப பாருங்க கால சுத்தின பாம்பு மாதிரி நம்மளை அடக்க அவன் பார்த்துட்டு இருக்கான் எவனோ ஒருத்தன் நம்மள மிரட்டற அளவுக்கு வெச்சிருக்கீங்க" என்று ரிஷி கூறினார்..

குலசேகரி பதிலுக்கு,"நான் அமைதியா இருந்தது தப்புதான் போல என்ன தைரியம் இருந்தா என் பேரன் மேல கை வைப்பேன்னு என் வீட்டிலேயே வந்து சொல்லிட்டு போறான் அதுக்கு முன்னாடி அவன் அழிஞ்சி இருக்கணும்" என்று கூறவும், அதுவரை அமைதியாக இருந்த வசுந்தரா ,"நல்ல முடிவு ஒருத்தன் அடிச்சா வேற ஒருத்தன் திருப்பி அடிக்கணும் அதுக்கு பழிவாங்க இன்னொன்னு செய்யணும் இதுக்கு பழி வாங்க வேற ஒன்னு செய்யணும் அப்படித்தானே நீ எல்லாம் ஒரு மனுஷியா தெரியாம தான் கேட்கிறேன் நீ என்ன நினைக்கிறாயோ அது நடக்கணும் அப்படித்தானே அப்படி என்ன ஒரு சாடிஸ்ட் புத்தி உனக்கு???" என்று கேட்டாள்..

"ஏய் என்ன வார்த்தை எல்லை மீறுது???" என்று கூற,"இதோ பாருங்க நீங்க தலையிடாதீங்க சும்மா ஏத்தி விட்டுட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க??? நீங்க என்ன ஜென்மம்???" என்று ரிஷியை அடக்கிய வசுந்தரா ,"ஹே கிழவி !! பெரிய மகாராணி மாதிரி பில்டப் பண்ணிட்டு இருக்க??? என்ன குல பெருமை மயிருன்னு சொல்லிட்டு இருக்க??? உன்னோட குலத்தில் இப்படி தான் அடுத்தவன் குடியை கெடுக்க சொல்லி இருக்காங்களா???உன்னால ரெண்டு குடும்பம் அந்த ரெண்டு குடும்பத்தில் இருக்கிற ஆளுக தினமும் ஏதோ ஒன்னு அனுபவிச்சிட்டு இருக்காங்க இதெல்லாம் உனக்கு தப்பா தெரியல தானே???" என்று கேட்டாள்...

குலசேகரி அவளை ஆழமாக பார்த்து ,"எனக்கு உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை ஆனாலும் நீ என்கிட்ட ரொம்ப பேசிட்டே இருக்க ஆனா அதுக்கு பதில் சொல்லித்தான் ஆகணும் எனக்கு எதுவுமே தப்பா தெரியல நான் என்ன நினைக்கிறேனோ அது எனக்கு நடக்கணும் என்னுடைய குடும்பமான எங்கேயும் போகக்கூடாது என் காலுக்கு கீழே தான் இருக்கணும்??? நீ ஓவரா போற?? உனக்கு இருக்கு முதல்ல அவனை முடிச்சிட்டு உன்கிட்ட வரேன்" என்று கூறினார்

"ஏதாவது சொல்லிட போறேன்..போ மா அந்த பக்கம்...இப்படி கூச்சமே இல்லாமல் பேசிட்டு இருக்கியே உனக்கு வெட்கமா இல்ல???நீ செஞ்சிட்டு இருக்கிற வேலையால் யார் உயிர் போனாலும் கவலையில்லை அப்படித்தானே குடும்பம் மானம் சொல்றியே உன் குடும்பம் மானம் எப்படி காத்துல பறக்குதுன்னு கொஞ்ச நாளில் நீ பார்ப்ப" என்று கூறியவள் குலசேகரியின் மீது இருந்த ஆத்திரத்தில்," உனக்கெல்லாம் பிறந்தநாள் ஒரு கேடு" என்று அவர் கட் செய்ய வைத்திருந்த கேக்கை தள்ளிவிட்டு வெளியே சென்றாள்..

அவளுக்கு சற்று பதட்டமாக இருந்தது ஆத்ரேயனின் கோபத்தை கண்டவளுக்கு அவன் ஏதாவது ஆதியை செய்து விடுவானோ என்ற பயம் வாட்டியது...அதனால் அவனை காண வசுந்தரா சென்றாள்...

அதே பீதியில் தான் வைதேகி இருந்தார்.. ஆனால் யார் அழைத்தும் ஆதித்யா போனை எடுக்க மறுக்க அவனது எண்ணில் இருந்து வைதேகிக்கு போன் வந்தது.. ஆதித்யா பயணம் செய்து கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளாகியது அதில் ஆதித்யா படுகாயம் அடைந்தான் என்ற செய்தி அவருக்கு கிடைத்தது...

அவர் பதட்டப்பட்டது போல ஆத்ரேயன் செய்து விட்டான் குலசேகரி சாய்வு நாற்காலையில் அமர்ந்து கொண்டிருக்க அவர் முன்னே சென்ற ,"வைதேகி இப்போ நீங்க உங்க குடும்ப பெருமையை வச்சுட்டு உட்கார்ந்துட்டு இருங்க என் பையனுக்கு அடிபட்டுடுச்சு இப்போ உங்களுக்கு சந்தோஷமா?? அவன் சொன்னதை செஞ்சுட்டான்!!! இப்ப போதுமா ??? "என்று கதறியவர் மருத்துவமனை நோக்கி சென்றார்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top