Share:
Notifications
Clear all

அத்தியாயம் 28

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

குலசேகரி, "வைதேகி" என்று அதிர்ந்து கூற, "நீங்க ஒரு வார்த்தை பேச கூடாதுன்னு நான் சொல்லிட்டேன் நீங்க பேசுற தகுதியை எப்பவோ இழந்துட்டீங்க... அதனால அமைதியா இருங்க.. இவரு என்னுடைய புருஷன், அவங்களுக்கும் இவர் புருஷன் தான் இவருக்கு ஏதாவது முடிவு எடுக்கணும்னா அதை நாங்க எடுத்துக்கிறோம் நாங்கன்னு சொல்றது சாரதாவையும் சேர்த்துதான் நான் சொல்றேன்.. இத்தனை நாள் உங்களுக்கு பயந்து ஒடுங்கி இருந்தது போதும்... இனி எல்லாம் நான் பார்த்துக்குறேன் நீங்க கொஞ்சம் எட்ட நில்லுங்க அது போதும்...குடும்ப கவுரவம் குடும்ப கௌரவம்னு சொல்லுவீங்களே இப்போ எங்க போச்சு உங்க பெரிய பையன் ரெண்டு கல்யாணம் பண்ணி இருக்காங்க உங்க ரெண்டாவது பையன் கொலைகாரன் இப்போ உங்க பேரனையும் ஏதாவது பண்ணலாம்னு பாத்துட்டு இருக்கீங்களா??அதை நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன் அமைதியா இருங்க அவ்வளவுதான் உங்களுக்கு மரியாதை இல்லை என்றால் மரியாதை கெட்டுடும்" என்று கூறினார்...

ஆதி அவனது தாய் வெகுண்டு பேசுவதை கேட்டு, "அம்மா ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க??? வயசானவங்க அவங்க வயசுக்கு மரியாதை கொடுங்க" என்று கூறினான்... "ஆதி உனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனக்கு கல்யாணம் பண்ணி வச்சவங்க இவங்க அதுவும் மகனுக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்காங்கன்னு கூட தெரிஞ்சும் கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க!!

எல்லோரையும் மிரட்டியே காரியம் சாதிச்சு பழகிட்டாங்க இனியும் நான் அப்படி இருக்க மாட்டேன் ஏன்னா நான் செய்த பாவம்தான் நினைக்கிறேன் நீ சாவை பார்த்துட்டு வந்திருக்க!!!

நீ கண்ணு முழிக்கிற வரைக்கும் நான் வேண்டாத தெய்வம் இல்லை தெரியுமா??? ஒரு பொண்ணோட வாழ்க்கையை நாசம் செய்துட்டு அந்த வாழ்க்கையை நான் வாழ்ந்துட்டு இருக்கேன்னு குற்ற உணர்ச்சியா இருக்கு.. ஆதி நான் ரொம்ப வருத்தப்படுறேன்...இவங்க எல்லாம் ஒரு பொம்பளையா??? இவங்க பையன் செய்த விசயத்தை இவங்க புருசன் செய்தா இப்படி தான் வேடிக்கை பார்த்திட்டு இருப்பாங்களா??? பேரும் புகழும் இருப்பதினால் நம்மளை யாரும் கேள்வி கேட்கல விரல் நீட்டி அந்த குடும்பத்தை தான் கேள்வி கேக்கிறாங்க...

எனக்கு அசிங்கமா இருக்கு ...ஒரு மனுஷனா இருந்தா எப்போவாவது அவன் செய்த தப்பை உணரனும் இவங்களை மாதிரி ஜென்மங்ககிட்ட எல்லாம் இதை எதிர்பார்க்க முடியாது அதுனால தான் இப்படி பேசுறேன்" என்று கூறவும் ஆதி அமைதியாக நின்று கொண்டான்... ஏனெனில் இந்த விஷயத்தில் அவனது பங்களிப்பு அதிகம் தானே!!

"என்ன அமைதியா இருக்க??? நீயும் உன்னுடைய சித்தப்பா மாதிரி ஆகிவிடுவியோன்னு எனக்கு பயமா இருக்கு.. அவருக்கு போட்டி, பொறாமை இதெல்லாம் மனசுல ஊறித்தான் இப்படி அவர் செய்திருக்கார் அப்படி இருக்கும்போது உன்னோட மனசுலயும் ஆத்ரேயன் மீது கோபமும் பழி உணர்வும் இருக்கு இவங்க கூட இருக்கிற வரைக்கும் இவங்க உன்னை கெடுத்துடுவாங்க.. அதனாலதான் நான் இன்னைக்கு இதைப்பத்தி பேசறேன்... நீயும் அவரை மாதிரி ஆகிட மாட்டேன்னு என்ன நிச்சயம்???" என்று கேட்டார் வைதேகி...

அவனுடைய அம்மா மறுபடி மறுபடி இதையே கூறவும்,"அம்மா நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன் மா புரிஞ்சுக்கோங்க மா" என்றான்...அவனால் என்ன பேசுவது என்று தெரியவில்லை... வசு வேடிக்கை மட்டும் பார்த்தாள்..

"வாயை மூடு ஆதி நான் இதுவரை ஒரு கடினமா கூட உன் கிட்ட பேசினதில்லை என்னை இதோ உன் பாட்டி பேச விட்டதும் கிடையாது நீ அபியோட தங்கச்சியே கடத்தி ஹோட்டலில் வைத்திருக்கிற இதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நெனச்சிட்டு இருக்காத???இதெல்லாம் உனக்கு தப்பா தெரியல???"என்றதும் வசு அவனை பார்த்து முறைக்க அவனோ,"கல்யாணத்துக்கு முன்ன டி இப்போ இல்லை" என்று கூறினான்..அவனுக்கோ பேசாமல் மருத்துவமனையில் இருந்திருக்கலாம் என்று தோன்றியது..

இருந்தாலும், "அம்மா அப்போ அவன் பண்ணினதெல்லாம் நியாயம்னு சொல்லிட்டு வரீங்களா??? என்னமோ என்னை மட்டும் குறை சொல்றீங்க??? அவன் செய்ததற்கு நான் திருப்பி செய்தேன் அது தப்பா"என்று கூறினான்..

இப்ப கூட பாரு அவன் செய்றான்னு நீ செய்யற??? இந்த ஒரு விஷயத்தை தான் நான் மாத்தணும்னு நினைக்கிறேன் இப்ப புரியுதா அவன் செய்தான்!!! அவன் நியாயமா இருந்தானா??? அவன் தர்மமா இருந்தானா??? இதைப்பற்றி எல்லாம் நான் பேசல நான் என்னுடைய மகன் அவன் நல்லா இருக்கணும் நல்ல விஷயத்தை பண்ணனும்னு நான் பேசிட்டு இருக்கேன் அவ்வளவுதான்"

அதைக் கூறியதும் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவன் இனி அவனுடைய அம்மா என்ன சொன்னாலும் இப்படி தான் இருக்க போகிறார்கள் என எண்ணி, "சரிமா நான் இனி அவன் விஷயத்துல தலையிட மாட்டேன் போதுமா" என்று பேச்சை முடிக்க பார்த்தான்...

அவரோ, "பத்தாது ஆதி நாம இப்போ ஆத்ரேயன் வீட்டுக்கு போக போறோம் சாரதா மற்றும் அவங்க பையன்கிட்ட பேச போறோம் அவங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நாம் செய்தே ஆகணும்" என்று கூறவும் அதிர்ந்தான்..

ஆதி அதை கேட்டதும், "அம்மா இப்ப எதுக்கு அதெல்லாம்??? விடுங்க மா" என்று கூறினான்..

"ஆதி நான் உன்கிட்ட பர்மிஷன் கேட்டு நிற்க கிடையாது.. நான் இன்னைக்கு சாரதா வீட்டுக்கு அப்பாவை கூட்டிட்டு போறேன் உனக்கு வர விருப்பம் இருந்தா வா... அப்பாவை அங்கே விட்டுட்டு தான் நான் வருவேன்" என்று கூறவும் குலசேகரி அதிர்ந்தார்...

"என்ன நெனச்சு பேசிட்டு இருக்க இவனை எதுக்கு அங்க விட்டுட்டு வரணும்???" என்று காட்டமாக கேட்டார்

"அவர் இருக்க வேண்டியது அவருடைய மனைவி கூட அதுவும் மூத்த மனைவி அவங்களுக்கு தான் எல்லா உரிமையும் இவர் மேல இருக்கு அந்த உரிமையை கொடுக்க போறேன் அவ்வளவுதான்... இதனால தானே இவங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிறாங்க... எனக்கு என் மகன் நல்லா இருக்கணும் அவனுக்கு இந்த பழி வாங்கும் உணர்வு இருக்க கூடாது அதுக்குத்தான் நான் இப்படி செய்றேன்" என்று அவர் கூறினார்..

அதைக் கேட்டு ஆதிக்கு என்ன பதில் கூறுவது என தெரியவில்லை... வசுந்தராவுக்கு தான் தன் அத்தையை இழுத்து அணைத்து முத்தமிட வேண்டும் என தோன்றியது இதை அவர் முன்னமே செய்திருந்தால் இது போன்ற பிரச்சனைகள் வந்திருக்காது என எண்ணியவள் அத்தை பேசட்டும் என்று நீ அமைதியாக நின்று கொண்டாள்...

"வைதேகி நீ தேவையில்லாத வேலை பண்ணிட்டு இருக்க" என்று மீண்டும் குலசேகரி கூற, "நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க... எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும் போதும்... உங்க பேச்சைக் கேட்டு இந்த வீட்டு ஆம்பளைங்க எல்லாம் இந்த லட்சணத்தில் இருக்கிறது போதும்... இப்பவாவது அந்த ஆண்டவன் என் கண்ணை தொறந்தானேன்னு நான் நினைச்சுட்டு இருக்கேன் அதை கெடுத்துடாதீங்க" என்று கூறிய வைதேகி வீல் சேரை அப்படியே திருப்பி அருணாச்சலத்துடன் வெளியே செல்ல முனைந்தவரை பார்த்து,

"அம்மா இப்ப நீங்க செய்யப் போற காரியம் எனக்கு சுத்தமா பிடிக்கல" என்று ஆதி கூறவும், "உன்னுடைய விருப்பம் பார்த்து நான் இதை செய்யலை ஆதி" என்க,

"அம்மா அவர் என்னுடைய அப்பா அவருக்கு ஏதாவது ஒன்னுன்னா நான் தானே பார்க்கணும் எனக்கு நீங்க செய்யறது தப்பா தெரியுது" என்று கூற, "உன்னுடைய இந்த மனசு தான் தப்பு ஆதி...உனக்கு ஏன் தப்பா தோணுது.. நான் முடிவெடுத்திருக்கிறது என்னுடைய புருஷனை அங்கு கொண்டு போயி விடனும் தான் எனக்கும் அவருக்கும் இடையில நீ கூட இரண்டாவது இடத்தில் தான் இருக்க... அதனால தயவு செஞ்சு என்னுடைய முடிவுல தலையிடாதே" என்று கூறினார்..

பின் தன் மகனை பார்த்து, "நான் போறேன் நீ வரியா??" என கேட்டார்...

ஆதியும் என்ன நினைத்தானோ வசுவைப் பார்த்து, "வா போகலாம்" என்று கூறி அழைத்து ஆத்ரேயன் வீட்டிற்கு சென்றனர்...

ஆதிக்கு அங்கு சென்றால் தன் அம்மாவை அவன் ஏதாவது சொல்லி விடுவானோ அவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று நினைத்தான் ஆதி சென்று கொண்டிருக்கிறான்.. மேலும் அவனுக்கும் விஷயம் தெரியாமல் எல்லாம் இல்லயே...அதனால் தாயின் முடிவுப்படி இருக்கட்டும் என எண்ணிக்கொண்டான்..

குலசேகரிக்கு வாயே திறக்க முடியவில்லை ரிஷி செய்வது ஒரு பக்கம் என்றால் வைதேகி செய்வது அதைவிட அவரால் தாங்க முடியவில்லை ஆனால் மறுத்து பேச முடியவில்லை அவள்தான் கூறிவிட்டாலே, "எனக்குத்தான் எல்லா உரிமையும் இருக்கு நீங்க கொஞ்சம் எட்ட நில்லுங்க அப்படின்னு சொல்லிட்டாளே" என எண்ணி அவருக்கு வருத்தம் தாளவில்லை அப்படியே சோர்ந்து அமர்ந்து கொண்டார்..

இனி அவரால் எதுவும் செய்ய முடியாது எல்லாம் கை மீறி போய்விட்டது அதனால் அவர் விதியின் மீது அனைத்தையும் போட்டு விட்டு அமர்ந்து விட்டார்..அவர் இதை எல்லாம் பார்த்து நொந்து தன் இறுதி வாழ்க்கையை கழிக்க வேண்டும் என இருக்கிறது போலும்...அது தான் அவருக்கான தண்டனையாக இருக்கும்...

ஆத்ரேயனின் வீட்டுக்குள் ஆதியின் கார் நுழைந்தது... ஆதியின் காரை கண்டதுமே பால்கனியில் நின்று கொண்டிருந்த அபிக்கு அந்த காரை கண்டதும் புரிந்து போனது வருவது ஆதி என..இங்கே எதுக்கு ஆதி வந்திருக்கார் என எண்ணிக் கொண்டே மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தவள் சாரதா அம்மாவிடம் சென்று அத்தை, "ஆதி கார் நம்ம வீட்டுக்குள்ள வந்துட்டு இருக்கு" என்று கூறவும் சாரதாவுக்கு படபடப்பாக இருந்தது...

"என்னாச்சும்மா எதுக்கு வந்திருக்காங்க திரும்பவும் ஏதாவது அவன் பிரச்சினை பண்ணிட்டானா??? இப்ப தானே கொஞ்ச நாளா அமைதியா இருந்தான்" என்று தன் மகன் ஏதாவது தவறு செய்து விட்டானோ என பதை பதைப்புடன் அவர் கேட்கவும், அவளோ, "அவர் எதுவும் செய்யல அத்தை எதுக்காக வந்திருக்காங்கன்னு தெரியல!! வாங்க நம்ம போய் பார்ப்போம் என்ன நடந்தாலும் அவர் வரதுக்குள்ள அவங்களை அனுப்பி வைத்துடுவோம் அவர் வந்தார்னா ஏதாவது சண்டை பெருசா ஆகிட போகுது எதுக்கு வந்திருக்காங்கன்னு தெரியலையே???" என்று ஆதி இந்த வீட்டுக்குள் நுழைந்தாலே சண்டைதான் என முடிவுக்கு வந்த மாமியாரும், மருமகளும் பிரச்சனையை தீர்ப்பதற்காக வேகமாக வர அதற்குள் ஆதியின் குடும்பம் அந்த வீட்டுக்குள் நுழைந்து விட்டது...

அபி அனைவரையும் கண்டு அதிர்ச்சி மாறாமல் தன் மாமியாரை பார்க்க அவரோ அருணாச்சலம் அந்த வீட்டுக்குள் நுழைந்ததுமே திரும்பி நின்று கொண்டார்... அவரது முகத்தை கூட சாரதா சரியாக பார்க்கவில்லை... ஆனால் சாரதாவின் உடல் குலுங்குவதை அவரின் அருகில் நின்று கொண்டிருந்த அபி உணர்ந்து கொண்டு தான் இருந்தாள்...

அவருக்கு சுத்தமாக புரியவில்லை எதற்காக வந்திருக்கிறார்கள் என்று என்னதான் சாரதா தன் கணவனை விட்டு பிரிந்து ஒதுங்கி இருந்தாலும் வேண்டாம் என எண்ணினாலும் அவர் தற்பொழுது இருக்கும் நிலையை அன்று கண்டவர் ஆகிற்றே..

அந்த துயரத்திலும் அவரால் அருணாச்சலத்தை அப்படி பார்க்க முடியவில்லை... அதனால் இனி வாழ்க்கையில அவரை பார்க்கவே கூடாது என்று தான் எண்ணியிருந்தார்...

அப்படி இருக்கையில் இன்று மீண்டும் 15 வருடங்களுக்குப் பிறகு நலிந்த தேகத்தோடு அவர் இருப்பதை சாரதாவால் பார்க்க முடியவில்லை.. ஒரே ஒரு நொடிதான் அவர் பார்த்திருப்பார் ஆனால் அதுவே அவருக்கு துக்கமாக இருக்க திரும்பி நின்று கொண்டார்...

"அபி அவங்க எல்லாரும் எதுக்காக வந்து இருக்காங்கன்னு கேளு" என்று திரும்பி நின்ற படியே கூறவும், "நாங்க உங்களை பார்க்க தான் வந்திருக்கும் தயவு செஞ்சு திரும்ப எங்களை பாருங்க" என்று வைதேகி கூறினார்...

சாரதா அருணாச்சலத்தின் பார்வையை தவிர்க்கும் பொருட்டு, "எனக்கு யாரையும் பார்க்க வேண்டாம் என்ன விஷயம் என்று மட்டும் சொல்லுங்க??" என்று கூற, அங்கு அருணாச்சலமும் தனது மனைவியை பல வருடங்களுக்கு பிறகு சந்தித்ததும் அதுவும் காதல் மனைவியை கண்டதும் அவரால் அவரது அழுகை கட்டுப்படுத்த முடியவில்லை... அவரது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு ஆக இருப்பது அவரது கண்ணீர் மட்டும் தான் ஆனால் காதலை மட்டுமே கசிந்த அந்த கண்களிடம் இந்த வருத்தத்தை சாரதாவால் பார்க்க முடியவில்லை..

அதனால் அவர் குலுங்கி அழுவது அனைவருக்கும் புரிந்தது... அபியிடம் மென் குரலில், "தயவு செஞ்சு அவங்க எதுக்கு வந்திருக்காங்க கேளுமா" என்று கூறவும் அபி வைதேகியிடம், "ஆன்ட்டி எதுக்காக வந்திருக்கீங்க ஏதாவது பிரச்சனையா சொல்லுங்க??? அவர் வர நேரம் ஆயிடுச்சு நீங்க எல்லாரும் இருந்தா நான் சொல்லத் தேவையில்லை தானே உங்களுக்கே எல்லாம் தெரியும் அவர் கோபப்படுவார்" என்று தயங்கி தயங்கி அபி தன் கணவனின் குணத்தை பற்றி கூற, அதைக் கேட்ட வைதேகி, "நாங்க இங்கே பிரச்சனை பண்ண வரல மா உன்னுடைய அத்தை கிட்ட பேசத்தான் வந்திருக்கோம்.. உன் புருஷன் வந்தாலும் பிரச்சனை இல்லை எனக்கு அவர்கிட்டயும் பேச பயம் என்னும் கிடையாது ..

நீ நினைக்கிற மாதிரி உன் புருஷன் கோபம் எல்லாம் பட மாட்டான் அவனும் மனுஷன் தானே கடிச்சு தின்னுட எல்லாம் மாட்டான்" என்று கூறினார் அவளோ கைகளை பிசைந்து கொண்டு இனி என்ன சொல்வது என யோசிக்கும் போது ஆத்ரேயனின் கார் வீட்டுக்குள் நுழைந்தது...அந்த சத்தத்தை கேட்டதும் அபிக்கு தலை சுற்றுவது போல இருந்தது...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top