அத்தியாயம் 27
இங்கு மூன்று மாத வனவாசம் முடிந்து ஆதித்யன் இன்று தான் டிஸ்சார்ஜ் ஆகிறான்..அவன் இப்போது பூரணமாக குணம் ஆகி விட்டான்…இனி பணத்தைக் கட்டி பைலை வாங்கி விட்டால் வீட்டிற்கு செல்லலாம் என்ற நிலையில் அனைவரும் இருந்தனர்..
வசுந்தரா உரிமையாக அவனது டெபிட் கார்டை கையில் வைத்துக்கொண்டு, "நான் ஃபைல் வாங்கிட்டு வந்துடுறேன்" என்று அவனிடம் கூறிவிட்டு ரிசப்ஷன் நோக்கி சென்றாள்...
அங்கு இவளை கண்டதும் எழுந்து நின்ற பெண்ணிடம்," ஆதியோட பைல் தாங்க எவ்வளவு பில் ஆச்சு" என்று கேட்கவும்," மேடம் வெங்கடேஷ் சார் உங்ககிட்ட பைலை மட்டும் தான் கொடுக்க சொன்னார் பணத்தை பத்தி எல்லாம் எதுவுமே சொல்லல" என்று கூறவும், இவளுக்கு கடுப்பு ஆகியது..யாரை கேட்டு அவர் இதெல்லாம் செய்யறார் என எண்ணி, "இன்னும் பத்து நிமிஷத்துல என்னுடைய ரூமுக்கு என் ஹஸ்பண்ட் ட்ரீட்மென்ட்க்கு எவ்வளவு ஆச்சோ அதற்கான பில் வந்து இருக்கணும் கூடவே பைல் இருக்கணும் புரியுதா???" என்று கூறினாள்.. இவளை பற்றி தெரியாது ஒன்றும் இல்லை அல்லவா வசுந்தராவின் முகம் நொடிப்பொழுதில் மாறுவதை கண்ட அந்த ரிசப்ஷனில் இருக்கும் பெண், "சரிங்க மேடம்" என்று கூறிவிட்டாள்..
அறைக்குள் வந்தவளிடத்தில், "என்னமா ஃபைல் வாங்கிட்டியா நாம போகலாமா??" என வைதேகி கேட்டார்.. "இல்லை அத்தை கொஞ்சம் லேட் ஆகும் பில் இனியும் அவங்க தரல" என்று கூறவும் வைதேகி சரிமா என்று கூறி அமைதியாக இருந்து கொண்டார்.. ஆனால் இவளது முகமோ கோபக்கனல் வீசியது...
அவன் அதை பார்த்து, "என்னாச்சு டி???" என்றான்..
"ஒரு நிமிஷம் இரு ஆதி" என்றவள் தன் போனை எடுத்த அவள் தன் தந்தைக்கு நேராக அழைத்தாள்...அவரோ, "சொல்லு வசும்மா" என்றவரிடம், "யாரை கேட்டு பணம் வேண்டாம்னு சொன்னீங்க???"
"என்னமா என்ன ஆச்சு???"
"என்ன என்னம்மா??? ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசிட்டு இருக்கீங்க?? நீங்க எதுக்கு ஆதியோட பில்லை தர வேண்டாம்னு சொன்னீங்க??? நீங்க என்ன எங்களுக்கு பிச்சை போடுறீங்களா??? எங்களுக்கு உங்க தயவு எல்லாம் தேவை இல்லை.. உங்களை விட அதிகமா சம்பாதிக்கிறார் என் புருஷன்... உங்களோட பிச்சைக்காசு ஒன்னும் எங்களுக்கு தேவையில்லை... நீங்க எங்களுக்கு எதுக்காக இதையெல்லாம் செய்யணும்??? நாங்க ட்ரீட்மென்ட் எடுக்க உங்க ஹாஸ்பிட்டலுக்கு வந்தோம் டிரீட்மென்ட் எடுத்தோம் அதுக்கான பணத்தை கட்டிட்டு தான் போவோம்???"
"என்ன வசு உங்க ஹாஸ்பிடல் எங்க ஹாஸ்பிடல் பிரிச்சு பேசிட்டு இருக்க???" என கேட்டார் வெங்கடேஷ்..
"உங்க ஹாஸ்பிடல் தான்... நடந்ததை மறந்துட்டீங்களா??? இப்படி சொல்லித்தான் என்கிட்ட இருந்து நீங்க கையெழுத்து வாங்கினீங்க அதை மறந்துடாதீங்க இப்போ எனக்கும் இந்த ஹாஸ்பிடலுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது... நான் இப்போ ரிஷி குரூப்ஸ் சி இ ஓ ஆதியோட பொண்டாட்டி புரியுதா???
எங்களுக்கு நீங்க ஒன்னும் பிச்சை போட வேண்டாம் அப்படி யாருக்காவது உதவி செய்யணும்னு ஆசை இருந்தா உங்க ஹாஸ்பிடல் ஆப்ரேஷன் தியேட்டர் முன்னாடி நின்னு கதறி அழுதுட்டு இருப்பாங்களே சார் பணத்தை கொடுத்து விடுறேன் எப்படியாவது காப்பாற்றி விடுங்க என்று கேட்பார்களே அவங்களுக்கு செய்ங்க இருக்கிற எங்களுக்கு உங்க உதவி தேவை இல்லை" என்று கூறவும் வெங்கடேசன் முகம் மாறியது..
"வசு திஸ் இஸ் தி லிமிட்" என்று வெங்கடேசன் காட்டமாக கூற," நானும் அதே தான் உங்களுக்கு சொல்லணும் இதோட ஸ்டாப் பண்ணுங்க இந்த ஹாஸ்பிடலுக்காக தான் என்னை நீங்க கல்யாணம் பண்ணி வச்சீங்க... நான் இன்னும் எதையும் மறக்கல... கல்யாணம் ஆனதும் நான் என் புருஷன் கூட வாழ தொடங்கியதும் நான் எல்லாத்தையும் மறந்துடுவேன்னு நினைக்காதீங்க இன்னும் ஐந்து நிமிசத்தில் என் ரூமுக்கு பில் வந்து இருக்கணும்" என்று அவள் கூறினாள்...
அவள் இதை அவளது தந்தையிடம் பேச வேண்டும் என்று தான் எண்ணியிருந்தால் கூற வந்ததே கூறி முடித்ததும் அவளுடைய டென்ஷன் போனது ஆனால் அவள் பேசியதை கேட்டு வெங்கடேசனுக்கு வலித்ததோ இல்லையோ ஆதிக்கு நன்றாக வலித்தது...
அவன் செய்த தவறின் ஆழம் அவனுக்கு புரிந்தது... மருத்துவமனை என்றால் அவளுக்கு எவ்வளவு உயிர் என்பது அவனுக்கு தெரியாமல் இல்லை... அதன் பிறகு அவள் எந்த இடத்திலும் வேலைக்கும் செல்லவில்லை இந்த மருத்துவமனையின் வாசலையும் கூட மிதித்தது இல்லை...
இப்பொழுது பூரண நலமாக இருக்கும் அவன் கடுப்பாக எங்கேயோ வெறித்துக் கொண்டு அமர்ந்து கொண்டிருக்கும் அவளின் அருகே நடந்து வந்து அவள் அருகே அமர்ந்தான்..
அவளோ, "என்ன ஆச்சு" என்று அவனிடம் கேட்க, அவளது இரு கைகளையும் தனது கைகளுக்குள் அடக்கி, "வசு ஐ அம் சாரி இது தவிர என்னால ஒரு வார்த்தையும் உன்கிட்ட பேச முடியாது உன்னுடைய ஆம்பிஷனை நான் என்னுடைய சுயநலத்துக்காக கெடுத்துட்டேன்... நீ எந்த அளவுக்கு இந்த மருத்துவமனை மேல ஆசை வைத்திருந்த அப்படின்னு எனக்கு நல்லா தெரியும்..அதை கெடுத்திட்டேன்" என்று அவன் கூறினான்... அதைக்கேட்ட அவளோ, "நீ தப்பு செய்யல அப்படி எல்லாம் நான் சொல்ல மாட்டேன்... ஆனால் இப்போ எனக்கு நீ சொல்ற ஆசை எல்லாம் கிடையாது" என்று கூறினாள்..
அதைக் கேட்டு அவனும், "அப்புறம் எதுக்காக நீ வேலைக்கு போகாம இருக்க கண்டிப்பா உன்னுடைய படிப்பை வேஸ்ட் பண்ண கூடாது நீ வேற ஏதாவது ஹாஸ்பிடல் ஒர்க் பண்ணு" என்று கூறினான்...
அவளும் அதைப்பற்றி யோசிக்காமல் இல்லை அதனால் அவனிடம், "நீ சரியானதும் நான் கண்டிப்பா ஏதாவது ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ணுவேன்" என்று கூறினாள்.. அதை கூறியதும் அவளது கைகளை அழுத்தமாக அழுத்தியவன், "ரொம்ப தேங்க்ஸ்" என்று அவன் கூறினான்...
அடுத்த நொடி அவள் கூறியது போல இரண்டு நர்ஸ் பெண்கள் வந்து பில்லை கொடுக்க பணத்தைக் கட்டிவிட்டு அனைவரும் குமரன் குடில் நோக்கி சென்றனர்...
அதுவரை நடப்பது எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மைதிலி குமரன் குடில் நோக்கி கார் செல்லவும் அவரது முகம் மாறியது... யாரும் அதை பெரிதாக கவனிக்கவில்லை இதோ வீட்டுக்குள்ளும் அவர் நுழைந்துவிட்டார்.. அப்பொழுது அவரது மாற்றத்தை யாரும் கவனிக்கவில்லை...
எப்பொழுதும் போல வீட்டுக்குள் நுழைந்த ஆதியை தேடி ஓடி வந்தார் குலசேகரி அவரது கண்கள் பேரனை தலை முதல் கால் வரை அளந்தது.. அவன் குணமாகி விட்டானா அவனுக்கு இனியும் எங்கேயாவது அடிபட்டு இருக்கிறதா என எல்லா இடமும் அலசி ஆராய்ந்தார்..
அவன் அருகே வந்தவர், "ஆதி எப்படிப்பா இருக்க அந்த படுபாவி இப்படி செய்வான்னு நான் எதிர்பார்க்கவே இல்ல பா எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது உனக்கும் என் மேல கோபமா???எல்லோரும் என்னை தனியா விட்டுட்டு போய்ட்டாங்க பா " என்று கூறவும், "பாட்டி எனக்கு உங்க மேல எந்த கோபமும் கிடையாது.. நீங்க இதை செய்திருக்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்.. அவர் செய்ததற்கு நீங்க என்ன செய்வீங்க கவலைப்படாதீங்க எனக்கு உங்க மேல எந்த வருத்தமும் கிடையாது" என்று கூறினான்..
அந்த ஒரு வார்த்தையை கேட்டதும் அவருக்கு தெம்பு ஆகிவிட்டது.. அவரது முகம் பழையது போல மாறி, வைதேகியை பார்த்தவர், "என்னை இப்படி நின்னுட்டு இருக்க வைதேகி போய் என் பேரனுக்கு பிடிச்சது எல்லாம் சமைத்து கொடு அவனைப் பார் எப்படி இருக்கான்னு இளைச்சு போயிட்டான் பாவம்" என்று கூறினார்...
"என் மகனை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும் அவனுக்கு வேண்டியதை நான் செஞ்சுகிறேன்" என்று அவர் கூறவும் குலசேகரியின் முகம் மாறியது..
"அம்மா எதுக்காக இப்படி வார்த்தையை விடறீங்க அவங்க என்னோட நல்லதுக்கு தானே சொன்னாங்க???" என்று ஆதி கூறினான்..
அதைக் கேட்டதும், "வாயை மூடு ஆதி.. போதும் அவங்க சொல்பேச்சு கேட்டு இதோ ஒருத்தர் வீல் சேரிலும் இன்னொருத்தர் ஜெயிலிலும் இதோ நீ ஹாஸ்பிடல் இருந்து வந்ததும் போதும்" என்று கூறினார் வைதேகி..
"அம்மா நீங்க என்ன சின்ன குழந்தை மாதிரி பேசிட்டு இருக்கீங்க அவர் செய்ததற்கு இவங்க என்ன பண்ணுவாங்க பாவம்" என்று கூறினான்...
"நீ பேசாதே என்று நான் சொல்லிட்டேன் உனக்கு என்ன தெரியும் அவங்க எல்லாம் இப்படி ஆனதுக்கு காரணமே இவங்கதான்... இவங்கதான் ஆணிவேர் எந்த இடத்திலையும் பாகுபாடு பார்த்துட்டு இவங்க இருக்குறதுனால தான் அவங்க எல்லாம் அந்த மாதிரி ஒரு தவறு செய்தாங்க.. உன்னால இல்லைன்னு சொல்ல முடியுமா??? இவங்க என்ன செஞ்சாங்க இப்பவும் பாரேன் நடந்ததை விட்டுட்டு எதுவுமே நடக்காத மாதிரி பேசிட்டு இருக்காங்க..
இதோ உன்னுடைய அப்பா கல்யாணம் பண்ணி வந்து அந்த ராத்திரில என்கிட்ட அழுது புலம்பினார்.. நான் காதலிச்சதும் கல்யாணம் பண்ணினதும் வேறொரு பொண்ணு...உன்னை என்னால மனைவியா ஏத்துக்க முடியல அப்படின்னு சொன்னார்.. என்னோட அம்மாவுக்காக தான் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அப்படின்னு சொன்னார்...
அதுக்கும் உங்க பாட்டி விடல குழந்தை வேணும் அப்படி என்று பிரச்சனை பண்ணினாங்க என்னமோ என் மேல இரக்கப்பட்டு உங்க அப்பா சேர்ந்து வாழ்ந்தார்.. இதை சொல்லவே எனக்கு அசிங்கமா இருக்கு... ஆனால் தாலி கட்டினவன் கூட வாழ நினைக்கிற சராசரி பொண்ணு நான் அப்போ எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும் இவரு கூட வாழனும்னு நினைச்சேன் அதனாலதான் அவர் இதெல்லாம் சொல்லியும் அவர் கூடவே ஒட்டிட்டு உன்னை பெத்து எடுத்துட்டேன்..இப்போ அசிங்கமா இருக்கு.. நியாயப்படி எனக்கு எந்த விதமான உரிமையும் கிடையாது..
என்னை கல்யாணம் பண்ணி வைக்காம பேசாம அவங்க கூடவே வாழ வைத்திருந்தா இவருக்கு இந்த நிலைமை ஆகி இருக்குமா அதே மாதிரி தான் ரிஷியும்... ரிஷிக்கும் அவனுக்கு ஒரு தொழிலை பார்த்துக்க சொல்லி இருந்தா இப்படி ஒன்னு நடந்திருக்கவே நடந்து இருக்காது..
உங்க அப்பா சரியில்லைன்னா வேகமா ரிஷிகிட்ட போவாங்க உன் அப்பா சரியானதும் ரிஷிகிட்ட இருந்து கம்பெனியை உங்க அப்பா கிட்ட கொடுப்பாங்க.. இதுதான் இவங்களுடைய வேலை நீ வந்ததும் உன்கிட்ட ஒப்படைச்சிட்டு ரிஷியை டம்மி ஆக்கிட்டாங்க.. எத்தனை தடவை பல்லவி இதைக் கூறி என்கிட்ட வருத்தப்பட்டு இருக்கான்னு தெரியுமா என்னமோ இப்ப வந்து பாசத்தைக் காட்டி உருகுறாங்க இதை எல்லாம் நம்ப சொல்றியா நீ வேணா நம்பிட்டு இருக்கலாம் நான் நம்ப கிடையாது...
எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன்... நான் இப்போ போக போறது சாரதாவை பார்க்க இதோ இவரை கூட்டிட்டு நான் போக போறேன் இவரு நியாயப்படி பார்த்தா அவங்க கூட தான் இருக்கணும் நான் தான் தாலி கட்டிட்டார் என்று என்னுடைய சுயநலத்துக்காக பிடித்து வைத்திருக்கிறேன் இனி அப்படி இருக்க போறது கிடையாது நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவை எடுத்து இருக்கேன்" என்று அவர் கூறினார்...
அதைக் கேட்டதும் ஆதி அதிர குலசேகரி, "உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு இதுக்கு தேவையில்லாமல் இந்த வேலை பண்ணிட்டு இருக்க???"..நான் என்னுடைய முடிவை சொன்னேன் யார்கிட்டயும் நான் பர்மிஷன் கேட்க கிடையாது இப்பவாவது என்னை என் போக்கில் சிந்திக்க விடுங்க" என்று கூறினார்
"அம்மா எதுக்காக இந்த முடிவு" என்றான் ஆதி..
"நீயும் உன்னுடைய சித்தப்பா மாதிரி ஆயிடுவியோன்னு எனக்கு பயமா இருக்கு ஆதி... உனக்கும் அவனுக்கும் இருக்கிற பழி உணர்வு எல்லாத்துக்கும் தெரிஞ்சதுதான்... நீயும் அவரை மாதிரி ஆகிட மாட்டேன் என்ன நிச்சயம்???"
"அம்மா நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன் தயவு செய்து நம்புங்க"
"ஆதி நீ அபியோட தங்கச்சியை கடத்தி வச்சது எனக்கு தெரியாமல் கிடையாது... இப்போ நீ அமைதியாக இருக்கலாம் நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்சனை ரெண்டு பேரும் மோதிப்பீங்க... அதனால உங்க குடும்பம் பாதிக்கப்படும்.. உங்க நல்லதுக்காகத்தான் நான் இந்த முடிவை எடுத்து இருக்கேன்"
"வைதேகி என்னை பொறுத்த வரைக்கும் நீ தேவையில்லாத வேலை பண்ணிட்டு இருக்க நீ இப்படி செய்தால் என்ன ஆகும்னு தெரியுமா???"என குலசேகரி கூறினார்...
"என்ன ஆனாலும் எனக்கு கவலை இல்லை நான் அங்க போக போறேன் இவரை அவங்க கூட சேர்த்து வைக்க போறேன்" என்று கூறினார்..
"அம்மா ஏன் இந்த முடிவு இத்தனை காலம் இல்லாமல் இப்போ ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கீங்க??" என்று தாயின் மனதை மாற்ற ஆதி அவ்வாறு கூறினான்...
"எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு ஆதி உனக்கு புரியலை என்னுடைய மனசு எப்படி தவிக்குது தெரியுமா??? நான் இவர் கூட வாழ்ந்துட்டு இருக்கறதுனால யாரும் என்னை எந்த கேள்வியும் கேட்கல!! ஆனால் நியாயப்படி பார்த்தா அவங்களுக்கு தான் எல்லா உரிமையும் இருக்கு!! எனக்கு தான் எந்த உரிமையும் கிடையாது!! ஆனால் எதுவுமே செய்யாம அவங்க எல்லாரும் முன்னாடியும் தலை குனிஞ்சிட்டு நிக்கிறாங்க.. நான் செய்த ஒரே தப்பு தாலி கட்டின புருஷன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை அவர் கூட வாழனும் அப்படின்னு நினைச்சது தான் ஆனால் இன்னைக்கு வர நான் சாரதா கூட ஒரு வார்த்தை கூட பேசினது கிடையாது அந்த பெயரை கேட்கும் போது எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்குது அதோடைய பாதிப்பு தான் நீயும் அவனும் மோதிட்டு நிற்கிறது இனி என்ன ஆனாலும் சரி எல்லாம் அங்க போய் பேசிக்கலாம்" என்று கூறினார்...
"நீ அங்கே போக நான் சம்மதிக்க மாட்டேன் என் பையன் இங்கே தான் இருப்பான்..என்னடி நானும் பார்த்திட்டு இருக்கேன் வாய் நீளுது" என்றார் குலசேகரி..அவர் முகத்தில் பழைய அகங்காரம் குடி வந்தது...
"அட சீ
வாயை மூடுங்க..இனி ஒரு வார்த்தை பேசினா மரியாதை கெட்டுடும்" என்றார் வைதேகி... அதை கேட்டதும் வசு முதல் அனைவரும் அதிர்ச்சி ஆகினர்...
