அத்தியாயம் 26
கூடலின் அயர்வில் தன் மார்பில் முகத்தை புதைத்து படுத்து இருக்கும் அவளது நெற்றியில் மென்மையாக தன் இதழ்களை பதித்தவன் அவள் காதில்,"வெளியே போகலாமா???"என கேட்க அவளுக்கு அயர்வாக இருந்தாலும் சரி அவனோடு கிளம்பி விட்டாள் அபி..
அவளை பொறுத்தவரை அவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் இருக்கிறான் அவனுடனான வாழ்க்கைக்கு தன்னை அவள் பழக்கி கொண்டாள்...
இத்தனை நாட்களில் அவனை அலசி ஆராய்ந்து பார்த்ததில் சிறு சிறு குறைகளை தவிர அவன் நல்லவனே..வில்லத்தனம் மிகுந்த நல்லவன் என்று கூட சொல்லலாம்...ஆனாலும் அவனை பிடித்து இருக்கிறது..
சில நேரங்களில் குழந்தை போலவும் சில நேரங்களில் காதலன் போலவும் சில நேரங்களில் நண்பனாகவும், கணவனாகவும் ஒளிரும் அவனை அவளுக்கு பிடித்து இருக்கிறது...
காரில் பயணிக்கும் போதெல்லாம் ஏ ஆர் ரஹ்மான் பாடல் ஒலித்து கொண்டிருக்க அதை அவள் ரசித்து கொண்டிருக்க அவன் அவளை ரசித்து கொண்டு பயணம் செய்ய அவளை அவன் அழைத்துச் சென்று இடம் அவளை முதன் முதலாக அவன் சந்தித்த இடத்துக்கு தான் அழைத்துச் சென்றான்...
அங்கு சென்றவன் அவள் முகத்தை பார்க்க அவனுக்கு தோன்றி கொண்டிருக்கும் உணர்வு அவளுக்கு இல்லை..அதனால் இங்கே என்ன இருக்கு என கேட்டாள்..ஏனெனில் அவன் அவளை கூட்டி சென்றது மக்கள் அதிகமாக இருக்கும் ஒரு கடை வீதி தெரு..
அதை பார்த்தவளுக்கு குழப்பமாக இருக்க அவளது முகத்தை பார்த்தவனோ, "இங்கே தான் உன்னை முதன் முதலா பார்த்தேன்...அப்போ ரொம்ப சின்னதா இருந்த அழகா இருந்த பார்க்கும்போதே அவ்வளவு ஆசையா இருந்துச்சு...என்னமோ உன்னை எனக்கு பார்த்ததும் பிடிச்சு போச்சு.. ரொம்ப குட்டி பொண்ணா இருந்த அதனால தூரமா பார்த்துட்டு அப்படியே ஓடிட்டேன்.." என்று அவன் சிரித்தபடி அவளை எப்படி சந்தித்தான் அப்போது தனக்கு எந்த மாதிரி உணர்வு ஆட்கொண்டது என்பதை எல்லாம் விவரிக்க அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..
அவனுக்கும் அவளிடம் விவரிக்கும் போது தன் மனதில் அன்று தோன்றிய காதலை தன் உணர்வை கூறும் போதே அவன் முகம் பிரகாசித்தது..
அப்போது அவன் முகத்தில் தெரியும் உணர்வுகளை படித்தவளுக்கு அவனை இழுத்து அணைத்து முத்தமிட வேண்டும் என தோன்றியது...
ஒரு வேளை அவனுக்கு அவளை போல தோன்றி இருந்தால் அவன் சுற்று புறம் பார்க்காமல் அதை செய்து இருப்பானோ என்னவோ??? ஆனால் அவளால் அவனை போல பட்டென செய்து விட முடியாத நிலையில் இருந்தவள் அவன் கூறுவதை கேட்டு கொண்டிருந்தாள்..
"எனக்கு என்னமோ நீ படிச்சிட்டு இருந்ததனால என்னுடைய மனசை உன் கிட்ட சொல்லனும்னு தோணவே இல்ல.. என்னால உன் படிப்பு பாதிக்கப்படக்கூடாதுன்னு இருந்துச்சு... லவ் அந்த மாதிரி தாட்ஸ நான் வந்து உன் மனசில் விதைக்க கூடாதுன்னு சொல்லித்தான் தூரமா இருந்தேன்...
இன்னொன்னு எனக்கிருக்கும் இன்செக்யூரிட்டி... என்னுடைய அப்பா இப்படின்னு என்னை எல்லாரும் ஒதுக்கி வைத்து இருந்த சமயத்தில் தான் நான் உன்னை பார்த்தேன் உன்னுடைய ஸ்மைல் என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுச்சு.. உன்னை பார்த்தா எனக்கு ஏதோ சந்தோஷமா இருக்கிற மாதிரி ஒரு பீல் அதனால உன்னை தேடி இங்கே எல்லாம் பல தடவை சுத்தி இருக்கேன்... எங்கே நான் வந்து என் மனசை சொல்லி அதை நீ ஏத்துக்காம போயிடுவியோ உன்னுடைய நோ அப்படிங்கற பதிலை நான் கேட்டிடுவேனோ அப்படின்னு சொல்லித்தான் நான் உன்னுடைய முகத்தில் முழிக்க கூட கிடையாது இதயம் முரளி மாதிரி சுத்திட்டு இருந்தேன்..
அப்படியே சில வருஷம் போச்சு நீ காலேஜ்ல படிச்சிட்டு இருந்த அப்போவும் நான் உன்னை விட்டு வைக்கல உனக்கே தெரியாமல் உன் பின்னாடி சுத்திட்டு இருந்தேன்..தூரமா பார்த்திட்டு போயிடுவேன்.. நீ உன்னோட பிரெண்ட்ஸ் கல்யாணத்துக்கு போறது முதல் ஷாப்பிங், படத்துக்கு போறது எல்லாமே எனக்கு தெரியும்" என்று கூற அதை கேட்ட அவளுக்கு தன்னை எந்த அளவுக்கு அவனுக்கு பிடித்து இருக்கிறது என்பதை அவள் புரிந்தாலும்,"என்ன ஸ்பை வச்சு பாத்துட்டு இருக்கீங்களா???" என சிரித்தபடி கேட்டாள்...
அதற்கு அவனும் சளைக்காமல், "எனக்கு பிடிச்ச பொண்ணு என்ன பண்றா பாதுகாப்பா இருக்காளா அப்படின்னு நான் பார்க்க வேண்டாமா???" என அவன் கூற அவளால் கோபப்பட கூட முடியவில்லை...
அவளுக்கு அவனை இழுத்து அணைத்து முத்தமிட வேண்டும் என தோன்றியது ஆனால் பரபரக்கும் கைகளை அடக்கி கொண்டாள்.. மேலும் அவள் அவனைப் போல வேகமாக தன் உணர்வுகளை பிரதிபலிப்பவள் அல்ல.. எப்போதாவது பிரதிபலிப்பாள்...
அப்படி இருக்க இன்று அவனை முத்தமிட வேண்டும் என அவளுக்கு தோன்றியது.. தன்னை இவ்வளவு தூரம் காதலிக்க ஒருவன் இருக்கிறானா என அவள் மறைத்து போயிருந்த தருணத்தில் அவனது கைகளை பிடித்துக்கொண்டு, "நீங்க இவ்வளவு தூரம் என காதலிப்பீங்கன்னு எனக்கு தெரியாது ஒருவேளை தெரிந்திருந்தா அப்போவே இந்த சுகத்தை அனுபவித்து இருப்பேனோ என்னவோ??? நான் உங்களை மிஸ் பண்ண இருந்தேன் நல்லவேளை நீங்க எனக்கு கிடைச்சிட்டீங்க ஆனால் உங்க காதலுக்கு நான் உரிமையான ஆளான்னு எனக்கு தெரியல" என்று கூறவும் அவனும் அவளது கைகளை வேகமாக அழுத்தினான்..
அழுத்திய கைகளை பிடித்தவள் இதற்கு மேல் பொறுமை இல்லை என்பதை போல தன் காதலை வெளிப்படுத்தும் விதமாக அவன் அருகே சென்றவள் அவனது கன்னத்தில் தன் இதழ்களை பதித்தாள்...
அவளுக்கு எப்படி அந்த தைரியம் வந்தது என தெரியவில்லை.. அவனது நேசம் அவளை அதை செய்ய வைக்க முத்தமிட்டதும் யாராவது பார்த்து விடுவார்களோ என எண்ணி அவள் கண்களை மூடி கொள்ள அவளாக அவனை அவள் தீண்டியது இல்லை அதனால் அவன் தீண்டும் போது அவள் மறுத்ததும் இல்லை...
அவனை புரிந்து கொண்ட பின் அவள் அவன் என்ன செய்தாலும் அவனோடு கலந்து போகவே எண்ணுவாள்..அப்படி இருக்க இன்று அவளாக அவனை முத்தமிடவும், அவன் கண்கள் விரிந்தன...
"நந்து நீ தானா என்னால நம்பவே முடியல!! இத்தனை பேர் முன்னாடி என் பொண்டாட்டி காரில் வைச்சு கிஸ் அடிக்கிறா அவ தானா??? இந்த பக்கமும் ஒரு முத்தம் கொடுத்துடு நான் நம்பறேன்.."என கிண்டல் குரலில் கூறினான்..
அதை கேட்டதும் அவள் கண்களை மூடிய படியே,"நீங்க இப்படி ஏதாவது சொல்லுவீங்க அப்படின்னு தான் நான் அமைதியா இருந்தேன் நீங்க தான் பேச வைச்சு இப்படி பண்ணிட்டீங்க..போங்க"என தன் சிவக்கும் முகத்தை கைகளால் மூடி கொண்டாள்...அதை பார்த்து சிரித்தவனோ, "லவ் ஓவர் ஃப்லோ ஆனா இந்த லிப்ஸ்ல எல்லாம் கொடுக்க மாட்டீங்களா என்னோட லிப்ஸ் கூட பேசிப் பேசி வறண்டு போச்சு உங்க லிப்ஸ கொஞ்சம் கடனா கொடுத்தீங்கன்னா நான் என்னோட தாகத்தை தீர்த்துட்டு திருப்பி தந்திடுவேன்" என்று மேலும் அவளை சிவக்க வைத்தான் ஆத்ரேயன்...
"போங்க" என கண்களை திறந்து அவனது மார்பில் அடித்தவள்,"நானே எவ்வளவு கில்டியா ஃபீல் பண்றேன் தெரியுமா நீங்க இவ்வளவு நேசிக்கும் போது நான் இதுல ஒரு சதவீதத்தை கூட உங்களுக்கு தரவில்லையென எனக்கு அவ்ளோ வருத்தமா இருக்கு" என்று வருத்தமாக கூறினாள் அபிநந்தனா...
"நான் தான் என் காதலை உன்கிட்ட சொன்னதே இல்லையே???எனக்கு பல முக்கியமான முடிவுகளை எடுக்கக் கூடிய தைரியம் இருந்துச்சு... ஆனா என்னுடைய காதலை உன்கிட்ட சொல்லக்கூடிய தைரியம் எனக்கு இல்ல... அது ஏன்னு எனக்கு தெரியல... நான் சொன்ன என்னுடைய இன் செக்யூரிட்டியாக கூட இருக்கலாம்... அதனாலதான் நான் சொல்லல போல...ஆனா அம்மா பார்த்த பொண்ணு நீ தான்னு தெரிந்ததும் நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை அதுக்கு அப்புறம் தான் என்னென்னமோ நடந்திருச்சு...
திரும்பவும் நீ என்கிட்டே வந்த.. இதை ஏன் நான் இப்போ உன்கிட்ட சொல்றேன் அப்படின்னா மத்தவங்க சொல்லித்தான் உனக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கும்... நானா உன்கிட்ட இது நாள் வரை சொன்னது கிடையாது... அதனால தான் சொல்றேன் அண்ட் இன்னிக்கு ஒரு முக்கியமான நாள் இன்னைக்கு தான் நான் உன்னை முதன் முதலில் பார்த்த நாள் இதே இடத்துல நீ தூரமா நின்னுட்டு இருந்த.. இப்ப நீ என் பக்கத்துல என் கைய பிடிச்சிட்டு இருக்க... இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... அதை உன் கூட ஷேர் பண்ண தான் இங்கே கூட்டிட்டு வந்தேன்.. நீ நினைச்சிருப்ப எங்கேயோ நாம பெருசா ஏதோ ஒரு இடத்துக்கு போக போறோம் அப்படின்னு எங்கேயோ இல்ல...இங்கே தான் நான் உன்னை அழைச்சிட்டு வரணும்னு இருந்தேன்.. இந்த இடம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் அந்த மொமென்ட்ஸை உன் கூட பகிர்ந்துக்க தான் நான் இங்கு உன்னை அழைச்சிட்டு வந்தேன்" என்று கூறினான்..அவன் காதலாக கூறிக் கொண்டிருக்க அந்த சமயத்தில் அவளுக்கு வேறொரு சந்தேகம் கூட வந்தது..
ஆனால் அதைக் கேட்டால் இப்பொழுது இருக்கும் இலகு தன்மை அவனிடம் இல்லாமல் போய்விடுமோ என எண்ணியவள் அப்படியே அமைதியாக இருக்க அவளது முகத்தை பார்த்து கணித்த அவனும், "என்ன விஷயம் ஏன் இப்படி இருக்க ஏதாவது என்கிட்ட சொல்லனுமா சொல்லு???" என கேட்டான்..
"ஒருவேளை நான் ஆதியை இல்லாமல் வேற யாராவது கல்யாணம் பண்ணி இருந்தேனா என்ன பண்ணி இருப்பீங்க??? ஒருவேளை நான் யாரையாவது காதலித்து கல்யாணம் செஞ்சி இருந்தேன் அப்படின்னா என்ன பண்ணி இருப்பீங்க???" என தயங்கியபடியே கேட்டாள்... அவளுக்கு அவனுடைய காதலின் ஆழத்தை பார்க்க வேண்டும் என தோன்றியது..அதை கேட்டதும் நொடியில் அவன் முகம் மாறியது...
அதை கண்ட அவளோ தவறாக பேசி விட்டோமோ என நினைக்க அவனோ அவளை பார்த்து, "ஒருவேளை நீ வேற ஒருத்தனை மனதார காதலிச்சு கல்யாணம் செய்து இருந்த அப்படினா நான் உன் முகத்தில் கூட முழிச்சிருக்க மாட்டேன்..ஏன்னா அடுத்தவன் மனைவியை என் கண்கள் தவறா பார்க்காது அது கொஞ்சம் உன் விசயத்தில் கஷ்டம் தான்.. அதுனால தான் கல்யாணத்துக்கு இருபது நாள் முன்ன உன்னை தூக்கிட்டேன்" என்று கூறினான்..
அதைக்கேட்ட அவளோ அவனது கைகளை பிடித்துக் கொள்ள அவன் அவளைப் பார்த்து மெலிதாக சிரித்து,"வேறொரு காரணமும் ஒன்னு இருக்கு .. ஆதியை நீ காதலிக்கலைன்னு எனக்கு தெரியும் உங்க வீட்ல பார்த்த மாப்பிள்ளை அப்படின்னு சொல்லி தான் நீ அவன்கிட்ட பழகி இருக்க... ஆனா ஆதிக்கு உன்னை எப்படி இருந்தாலும் நான் விட்டுக் கொடுத்திருக்க மாட்டேன்" என்றும் கூறினான்..
அதை கூறும் போதே அவனுடைய முகம் மாற அவளோ மனதுக்குள், "மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏற வேண்டாம் இப்படியே இவரு ரொமான்ஸ் பாயா இருக்கட்டும்..ஏதாவது ஏடாகூடமாக கேட்டு அவருடைய மனசை மீண்டும் வில்லன் வேலை செய்ய வைக்க வேண்டாம்" என எண்ணி, "நீங்க யாருக்கும் என்னை விட்டுக் கொடுக்க வேண்டாம் உங்க கூடயே என்னை வைச்சுக்கோங்க நானும் உங்களை விட்டு போறதா இல்லை" என்று கூறி அவன் தோளில் சாய்ந்து அவள் சிரிக்க அவனும் சிரித்தான்... அப்படியே அவளை அழைத்துக் கொண்டு எங்கெல்லாம் அவளை சந்தித்தானோ அங்கு எல்லாம் அவளை அழைத்து சென்றான் ஆத்ரேயன்...
அவன் வாழ்க்கை இன்பமயமாய் சென்று கொண்டு இருந்தது.. காதலிக்கவும் காதல் கொடுக்கவும் அவள் இருக்க அவன் வாழ்க்கை மிகவும் ரம்யமாய் இருந்தது.. அவளும் அவனோடு கலந்து அவனுள் ஒருத்தியாய் மாறிப் போனாள்... அவனுடைய தேவைகளை அறிந்து அவனுடைய ஆசைகளுக்கும் விருப்பத்திற்கும் இணங்கி நல்லதொரு மனைவியாகவும் சாரதாவிற்கு நல்லதொரு மருமகளாகவும் நடந்து கொண்டாள் அபி நந்தனா..
