அத்தியாயம் 25
கிட்டதட்ட ஒரு மாதத்துக்கு பிறகு
நர்ஸ் உதவியுடன் ஆதியை நிற்க வைத்து கொண்டிருந்தனர்.. வைதேகி கூடவே நின்று கொண்டிருந்தார்... வீல்சேரில் அமர்ந்து தன் மகன் படும் பாட்டை பார்த்துக் கொண்டிருந்தார் அருணாச்சலம்..
அவருக்கு இப்போது ஒரே ஒரு பிரார்த்தனை தான் இருந்தது அவன் பிழைத்து நல்லபடியாக வரவேண்டும் தன்னைப்போல ஒரு இடத்தில் யாருக்கும் உதவாமல் முடங்கி விடக்கூடாது என மனதார உருகிக் கொண்டிருந்தார் அவர்..
அவனும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறான் கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு கண்களை திறந்தவனிடத்தில் வசுந்தரா அவ்வளவு முறை கூறியும் கேட்காமல் வைதேகி உண்மையை போட்டு உடைத்து விட்டார் அவரால் மனதில் போட்டு வைக்க முடியவில்லை..
வசுந்தரா ஒரு மருத்துவராய் அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ அதிர்ச்சியான விஷயங்களை இப்போது கூற வேண்டாம் என எண்ணி அவள் கூறி இருக்க, வைதேகி நிலை கொள்ளாமல் உளறிவிட்டார்... அதைக் கேட்டதும் அவனுக்கு அதிர்ச்சி தாளவில்லை...தந்தை ஸ்தானத்தில் வைத்து பார்க்க இவர் இவர் செய்து விட்டாரா என எண்ணி எண்ணியே தான் இதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்ற உத்வேகத்துடன் போராடிக் கொண்டிருக்கிறான்...
அன்றிலிருந்து இன்று வரை அவன் சோர்ந்து போகாமல் எழுந்து வர வேண்டும் என எண்ணி மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை பின்பற்றி வருகிறான்.. அதனால் கிட்டத்தட்ட இரண்டு வாரத்துக்குள்ளேயே அவனது உடலில் நல்ல முன்னேற்றம் வந்தது இது வசுந்தரா கூட எதிர்பார்க்கவில்லை...இப்போது ஒரு மாதம் ஆகி விட்டதால் இன்னும் நல்ல முன்னேற்றம் ஆகி இருந்தது..
காலையில் பிசியோதெரபிஸ்ட் வந்து பார்த்து நர்ஸிடம் சிறிது தூரம் நடை பழக்க கூறியிருந்தனர்.. அவர்களும் அவனுக்கு பயிற்சி கொடுக்க முனைய அந்த நேரம் பார்த்து குளித்து தயாராகி அவனுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வந்தவளுக்கு அந்த காட்சி அவ்வளவு உவப்பாக இல்லை...
வேகமாக உள்ளே நுழைந்தவள் அவன் நடைப்பழக ஒரு எட்டு எடுத்து வைக்கவும் அந்த நர்சிடம்,"நான் அவரை பார்த்துக்கிறேன் நீங்க வேற ஏதாவது வேலை இருந்தா பாருங்க" என்று கூறினாள்..
"இல்ல மேடம் நாங்களே பண்றோம்" என்று கூறவும் அந்த நர்சை பார்த்து முறைத்தவள், "அதுதான் நான் ஹெல்ப் பண்றேன்னு சொல்றேன்ல" என்று கூறவும், அவர்களுக்கெல்லாம் வசுந்தராவை பற்றி தெரியாததா என்ன???, "சரிங்க மேடம்" என்று உடனே அந்தப் பெண் தள்ளி நின்று கொண்டாள்.. வேகமாக அவள் அவனது இடையை பிடித்து தாங்கிக் கொண்டாள்..
தன்னை தாங்கியவளை பார்த்தவன், "அதுதான் அவங்க ஹெல்ப் பண்றாங்க இல்ல நீ எதுக்கு சிரமப்பட்டுட்டு?? விடு அவங்களே பார்க்கட்டும்" என்று கூறவும் அவள் கடுப்பின் உச்சிக்கு சென்று விட்டாள்..
"ஏன் நான் உனக்கு ஹெல்ப் பண்ணினா நீ நடக்க மாட்டியா???" என்று கேட்கவும், "அப்படி இல்ல என்னுடைய பாரம் நீ தாங்குவியா அதனால தான் சொல்றேன்??"என்று அவன் தன்மையாக கூறினான்..
"காலம் ஃபுல்லா நான் தானே உன்னுடைய பாரத்தை தாங்க போறேன்?? இப்ப தாங்கறது ஒன்னும் எனக்கு பிரச்சனை இல்லை உனக்கு ஏதாவது பிரச்சனையா??" என்று சற்று கடுப்பாகவே கூறினாள்.. அவள் பேசியதின் அர்த்தம் அவனுக்கு புரிப்பட மெல்லிய புன்னகை அவனது இதழ்களில் வந்தது..
பேசிவிட்டு தான் தான் என்ன பேசினோம் என்பதையே உணர்ந்தவள் அவனைப் பார்க்க அதே நேரம் அவனும் அவளை தான் பார்த்தவளுக்கு அவனது விழிகளை சந்திக்க முடியவில்லை அவனது கண்களை பார்த்தவளுக்கு ஏனோ வெட்கம் வந்தது...
அவன் அவளது வெட்கப் பார்வையை பார்த்து ரசித்தவன், "எனக்கு இப்போ ரொம்ப பிடிச்சிருக்கு" என்று கூறினான்... அதைக்கேட்ட அவளோ, "என்ன பிடிச்சிருக்கு??" என்று கூறிக் கொண்டே அவனை நடைபழக வைக்க, "உன்னோட இந்த பொசசிவ் எனக்கு உன்னை விட ரொம்ப பிடிச்சிருக்கு" என்று கூறினான்..
அவளோ மெல்லிய புன்னகையோடு,"நான் இப்படித்தான் எனக்கு பிடிச்சது என்கிட்ட மட்டும் தான் இருக்கணும்னு நினைப்பேன் அது தப்புதான் இருந்தாலும் நான் அப்படித்தான்" என்று கூறினாள்...
"அப்போ என்னை பிடிச்சிருக்கு அப்படின்னு சொல்ற???" என கேட்டான்..
அப்படின்னு நான் சொல்லவே இல்லையே ஏதோ அடிப்பட்டு வந்து இருக்கியேன்னு ஹெல்ப் பண்றேன் அவ்ளோ தான்" என்றாள் நமட்டு சிரிப்போடு,
அதைக் கேட்ட அவனும்,"ஓ அப்படி விஷயம் ஒரு டாக்டரா இருந்துட்டு நர்ஸ் பொண்ணுங்க ஹெல்ப் பண்ணியதற்கு போய் பிரச்சனை பண்றியே இதெல்லாம் சரியா???" என்று சிரித்தபடியே கேட்டான்..
அதைக் கேட்ட அவளோ, "சரியா இப்படி பாயிண்ட்ட புடி" என மனதுக்குள் எண்ணிக் கொண்டு, "சரியா, தப்பா அப்படின்னு எல்லாம் எனக்கு தெரியாது.. ஆனால் நான் தான் இருக்கேனே நான் செய்வேனே அப்புறம் எதுக்கு மத்தவங்க??" என்று கூறியவள் மென்மையாக அவனைப் பிடித்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க பழகிக் கொண்டிருந்தாள்... அவனும் சிரத்தையோடு நடந்தவன் பிறகு மெல்ல வந்து படுக்கையில் படுக்க வைத்தாள் வசுந்தரா...
பின் அவனது பிரஷர் மற்றும் இதயத் துடிப்பை எல்லாம் சரிபார்த்து கொண்டிருந்தாள்...
"அப்போ நீ என்னோட பொண்டாட்டி ஆகிட்டே வர அப்படின்னு சொல்ற அப்படித்தானே" என்று மேலும் அவளை கிண்டல் செய்யும் தொணியில் கேட்டான் ஆதி..
"நீ எப்போ தாலி கட்டினியோ அப்ப இருந்து நான் உன்னுடைய பொண்டாட்டி தானே நீ தான் என்னை கண்டுக்கல" என்று அவள் சிரித்து கொண்டே கூறவும், "நானா கண்டுக்கல நீதான் கிட்டவே விடல" என்று பதில் அளித்தான்.. அதை கேட்டு அவளோ சிரித்தாள்..
அவனுக்கு அதிசயம் தான் கிட்டத்தட்ட அவனது அனைத்து வேலைகளையும் அவள் தான் செய்கிறாள் இத்தனைக்கும் அவள் ஒரு மருத்துவர் அதை கூட அவள் மனதில் வைத்து கொள்ளாமல் இது எல்லாம் அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் அவள் வேறு யாரையும் அவனது தேவைகளை செய்ய விடவில்லை.. அவளே தான் அனைத்து பணிகளையும் செய்தாள்.. ஒரு செவிலியையும் அவன் அருகே விடவில்லை கிட்டத்தட்ட அவன் அடிபட்டது முதல் அவனுடனே தான் இருக்கிறாள்..
இதையெல்லாம் கண்டவனுக்கு அவள் மீது மெல்லிய விருப்பம் இருந்தது..அந்த விருப்பம் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருந்தது என்னவோ உண்மைதான் அவளுக்கும் அப்படி இல்லை என்று எல்லாம் மறுத்து விட முடியாது அவனை பார்க்கும் பார்வையிலேயே அவளது மனதை ஆதித்தியனால் புரிந்து கொள்ள முடிந்தது...
அவளுக்கும் அவளுடைய மாற்றம் அதிசயம் தான் அவளின் கடந்த கால காதல் வாழ்க்கையை விட்டு அவளால் வெளியே வரவே முடியாது என எண்ணியிருந்தவள் மனதை ஆதி ஆக்கிரமித்துக் கொள்ள அவளால் இப்பொழுது ஆதி இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை வந்தது அவன் நன்றாக இருக்கும் சமயத்தில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அவனோடு சண்டை போட்டு கொண்டிருந்தாள்..
அவனுக்கு அடிபட்டதும் அப்படியே அவளுடைய எண்ணங்கள் மாற துவங்கின அவன் மீண்டும் அவளிடம் வந்தால் போதும் என்ற நிலைக்கு அவள் வந்து விட்டாள் அவனுக்கு அடிபட்டதும் தான் அவன் மீது அவளுக்கு நேசம் இருப்பதையே அவள் புரிந்து கொண்டாள்.. அதனால் இனி அவன் இல்லாமல் இருக்கப் போவதில்லை என எப்போதும் முடிவு செய்து அவனோடு வாழ துவங்கி விட்டாள் வசுந்தரா...
அங்கே குலசேகரி அவரது வீடே கதி என்று முடங்கி போனார்.. பல்லவி தன் கணவனின் செயல் அறிந்ததும் அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.. அவரால் இங்கு இருந்து அவமானப்பட முடியாது என அவர் அந்த முடிவை எடுத்து விட்டார்..
இவர்களோ மருத்துவமனையில் இருக்க வைதேகி மற்றும் அருணாச்சலம் மகன் அடிபட்டதிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதம் ஆகியும் வீட்டுக்கு வரவே இல்லை இடையிடையே வசுந்தராதான் வந்து தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து செல்கிறாள்..
அவளிடம் தன் பேர மகன் எப்படி இருக்கிறான் என கேட்க கூட அவரால் இயலவில்லை..
கேட்டால் வசுந்தரா கூறி இருப்பால்தான் ஆனால் அவரும் கேட்கவில்லை.. இவளும் பதில் கூறவில்லை.. யாருமில்லா தனிமையில் இந்த வயதான காலத்தில் அந்த பெரிய வீட்டில் இருக்க அவருக்கு தலை சுற்றியது..
அவருக்கு யோசித்து யோசித்து மூளை குழம்பிப் போனதுதான் மிச்சம் ஜாதி மதம் குலம் கோத்திரம் பணம் என்றெல்லாம் யோசித்து அருணாச்சலத்தை ஒதுக்கி வைக்க, இரண்டாவது மகனோ வேறொரு ரூபத்தில் ஆகி இருக்க எல்லாம் சேர்ந்து குலசேகரி சோர்ந்து போனார்...
அவரால் அவரது தவறை உணர்ந்து கொள்ளவும் முடியவில்லை உணர்ந்து கொள்ளாமல் இருக்கவும் முடியவில்லை வயதாகி விட்டதல்லவா அவ்வளவு எளிதில் அவர்கள் செய்த தவறை அவர்களால் உணர்ந்து கொள்ள முடியாது ஒரே நாளில் ஆம் நான் தான் தவறு செய்தேன் என உணர்ந்து கொள்ளவும் முடியாது..
ஆதலால் அவர் அறையிலேயே இருந்து கொண்டார்.. யாரையும் பார்ப்பதும் இல்லை எந்த அழைப்புகளையும் எடுப்பதும் இல்லை யாராவது பார்க்க வந்தால் கூட தன் குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வைத்த மகனைப் பற்றியும் குடும்பத்தை பற்றியும் தான் கேட்க வந்திருக்கிறார்களோ என பயந்து அவர்களை எல்லாம் வீட்டுக்கு வரவிடாமல் முடக்கியே வைத்திருந்தார் குலசேகரி..
அவரால் அந்த அவமானத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அதனால் எதிலும் பங்கு கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார்...
அங்கு ஜெயிலிலோ இருந்த ரிஷி இப்படி ஆகிவிட்டதே என நொந்து கொண்டு இருந்தார்.. அவர் ஒருமுறை செய்யும் பொழுதே அந்த தவறை திருத்தி இருக்கலாம் ஆனால் மேலும் மேலும் ஒவ்வொருவராக கொலை செய்ய அவர் முயல அவர்களோ தப்பிக்க, இப்பொழுது எந்த பணத்துக்காக அவர் இதை எல்லாம் செய்தாரோ அந்தப் பெயர், புகழ், கௌரவம் பணம் என்று எதுவுமே அவருக்கு இல்லாமல் போய்விட்டது...
எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாரோ அதெல்லாம் சுக்கு நூறாகி இப்பொழுது அடிமட்ட நிலையில் இருந்து வந்தார் அவரும் தன் தவறை உணர்ந்து கொண்டிருக்கிறார் அவர் செய்த தவறுக்கு இனி அவரது இறுதி நாட்கள் சிறையில் தான் கழியும் என்பது தான் போலீசாரின் நிலைப்பாடாக இருந்தது..
இங்கே ஆத்ரேயன் தான் மிகவும் சந்தோஷமாக இருந்தான்.. அவன் எதிர்பார்த்த வாழ்க்கை அவனுக்கு கிடைத்திருக்க அவன் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என எண்ணியிருந்தானோ அது போன்ற வாழ்க்கையை தன் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்தான்..
அவன் வீட்டில் மீண்டும் வசந்தம் வீசியது போல அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்... இப்போது கூட வேகமாக வீட்டுக்கு தான் சென்று கொண்டிருக்கிறான்..
அவளை சர்ப்ரைஸாக ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறான் அவள் காலையிலிருந்து கேட்டு விட்டாள் அவன் பதிலே கூறுவதில்லை இப்பொழுது கூட வருகிறேன் என்று கூறாமல் தான் வீட்டுக்கு செல்கிறான்...
காரில் பயணம் செய்து கொண்டே ரேடியோவை ஆன் செய்தான்..
இது எல்லாம் அவனுக்கு புதிது... எந்த சமயத்திலும் காரில் கூட ப்ளூடூத்தை ஆன் செய்து வைத்திருப்பான் போகும் வழிகளில் கூட ஏதாவது பிசினஸ் சம்பந்தமாக பேசிக் கொண்டே இருப்பான் இப்பொழுது எல்லாம் அப்படி இல்லை நிறைய மாறி இருக்கிறான்...
அவள் மாற்றி இருக்கிறாள் என கூற முடியாது அவன் அவளுக்கு இது பிடிக்காதோ என தன்னைத்தானே மாற்றிக் கொண்டு வருகிறான்..அவள் எதுவுமே சொல்லாமல் அவன் அவளுக்காக இது எல்லாம் தன்னிடம் அவளுக்கு பிடிக்காதோ என அவனே எண்ணி அவனது குறைகளை மாற்ற முயற்சி செய்து வருகிறான்...
ரேடியோவை ஆன் செய்தவன்,
"நினைக்காத நேரமில்லை காதல் ரதியே ரதியே
உன் பெயரை சொன்னால் போதும் நின்று வழி விடும் காதல் நதியே
என் சுவாசம் உன் மூச்சில்
உன் வார்த்தை என் பேச்சில்
ஐந்தாரு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா!!" என பாடிக்கொண்டே வாகனத்தை செலுத்தினான்...
அதற்குள் அவள் அழைத்து விட்டாள்..
அவளது அழைப்பை கண்ட அவனும் போனை ஆன் செய்து," சொல்லுடி என் பொண்டாட்டி என்ன பண்ணிட்டு இருக்க" என கேட்டான்..
"நாம எப்போ வெளில கிளம்பறோம் எங்க போறோம்???" என கேட்க,
"நான்தான் நாம் எங்கே போக போறோம்னு சொல்ல போறது இல்லை என்று சொல்லிட்டேனே" என அவன் கூறவும்,
"ப்ளீஸ்ங்க சொல்லுங்க காலையில நீங்க பாட்டுக்கு இப்படி சொல்லிட்டு போயிட்டீங்க நானும் எங்க போறோம்னு தெரியாம யோசிச்சு யோசிச்சு தலை வெடிச்சிட்டு இருக்கேன் எனக்கு சப்ரைஸ் எல்லாம் சுத்தமா பிடிக்காது தயவு செஞ்சு அதெல்லாம் பண்ணாதீங்க" என கூறினாள்...
"நோ சர்ப்ரைஸ்ன்னா சர்ப்ரைஸ் தான்" என்றான்..
"உங்களை திருத்தவே முடியாது சரி எப்போ வருவீங்க அதுவாவது சொல்லுங்க" என்று கேட்டாள்..
"எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு அது முடிச்சுட்டு நான் வருவேன் கொஞ்சம் சமயம் ஆகலாம் நீ எதுக்கும் ரெடியா இரு" என்று கூறினான்..
"தெளிவா குழப்புறீங்க நாம வெளியில போறோம்.. இப்போ டைம் ஆறு மணி ஆயிடுச்சு.. இனி உங்களுக்கு ஒரு மீட்டிங் அது முடிய லேட் ஆகும்.. இதுக்கு அப்புறம் நீங்க வந்து நான் ரெடி ஆகி போகணும் அப்படித்தானே இதுல என்ன ரெடியாக வேற இருக்க சொல்றீங்க என்று சலித்துக் கொண்டாள் அபி..
"ஏண்டி ரொம்ப சலித்து பேசுற சரி நீ ரெடியாக வேண்டாம் நான் வந்து உன்னை ரெடி பண்ணி கூட்டிட்டு போறேன்" என்று மெல்லிய சிரிப்போடு கூறினான்...
அதைக்கேட்ட அவளோ, "ஐயோ சாமி நீங்க என்னை ரெடி ஆக்க வேண்டாம்..நீங்க என்ன பண்ணப் போறீங்கன்னு எனக்கு நல்லா தெரியும் வேண்டாம் நான் கொஞ்ச நேரம் கழிச்சு ரெடி ஆகிக்கிறேன்" என்று கூறியவள் போனை வைத்து விட்டாள்..
அவனோ நமட்டு சிரிப்போடு போனை அணைத்தவன் நேராக ஒரு பேஸ்ட்ரி ஷாப்புக்கு சென்றான்.. அங்கு அவள் எப்பொழுதும் உண்ணும் அவளுக்கு பிடித்தமான சாக்லேட்டை வாங்கினான்..
பிறகு வீட்டிற்கு செல்ல வாகனத்தை செலுத்தியவன் நேராக வீட்டிற்கு சென்றான்.. அதற்குள் மணி ஏழு ஆகி இருந்தது... வீட்டிற்குள் நுழையவும் அவள் இருப்பாள் என அவன் நினைக்க அவளை காணவில்லை..
எப்பொழுதும் போல தாயின் அறையை நோட்டம் விட அவர் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்... அவனைப் பார்த்ததும் மெலிதாக புன்னகைக்க,"என்னப்பா வெளியே போறீங்களா?? அபி என்னிடம் வந்து அவர் ஏதாவது சொன்னாரா என்று கேட்டுட்டு இருக்கா?? எங்கப்பா போறீங்க???" என்று கேட்டார்..
அவனோ தலையை சொறிந்து கொண்டு, "உங்ககிட்ட வந்து கேட்டுட்டாளா!! நான் சப்ரைஸ் என்று சொல்லி இருந்தேன் அம்மா" என்று கூறவும், "சரிப்பா சீக்கிரமா போயிட்டு வாங்க" என்று கூறி தன் புத்தகத்தில் மூழ்கி கொண்டார் சாரதா... அவனும் சிரித்துக்கொண்டே தலையாட்டிவிட்டு சென்றான்..
அங்கு அவளோ தயாராகாமல் மொபைலை பார்த்துக் கொண்டு பால்கனியில் அமர்ந்திருந்தாள்.. அவள் கையிலோ ஒரு கப் காபி இருந்தது...
அதை பார்த்து கொண்டே உள்ளே அவன் நுழைய அவனை கண்டதும் மென்மையாக சிரித்தவள் தன் மையல் பார்வையோடு, "உடனே வந்துட்டீங்க??? அப்போ மீட்டிங் வர லேட்டாகும்ன்னு சொன்னது எல்லாம் பொய்யா???" என காபியை ஒரு மிடறு குடித்து கொண்டே கேட்டாள் அபி..
அபி பால்கனியில் அமர்ந்திருக்கும் தோரணையும் அவளுடைய மையல் பார்வையும் அவனுக்கு போதையை கொடுக்க அதுவும் அவளின் செப்பு இதழ் திறந்து அவள் அருந்தும் காபியாக மாறி விட கூடாதா??? என கூட எண்ணி விட்டான்...
அதை கண்டவனுக்கு உணர்வுகள் ஆக்கிரமித்து கொண்டது..அவள் என்னவோ சாதாரணமாக வீட்டில் இடும் பைஜாமா தான் அணிந்து இருந்தாள்...
அவன் கண்களுக்கு அவளது அந்த உடை கூட தேவதையாக மிளிர்ந்தது..அவளோ எதார்த்தமாக அவனை பார்க்க அவன் பார்வையின் பொருள் மாறியதை அவள் அறியாள்..
அவளது எதிரே வந்து அமர்ந்த அவன், "எனக்கு ஹாட் காபி எங்க??" என்று கேட்டான்..
"நீங்க இப்ப வருவீங்கன்னு எனக்கு தெரியாது.. அதனால எனக்கு மட்டும்தான் நான் காபி போட்டேன்.. ஒரே ஒரு நிமிஷம் சீக்கிரம் போய் காபி போட்டுட்டு வரேன்" என்று அவள் பாதி குடித்து மீதம் வைத்திருந்த காபி கப்பை டேபிளில் வைத்துவிட்டு வேகமாக எழுந்தாள்..
எழுந்த அவளை சட்டென்று கையைப் பிடித்து இழுத்தவனின் மடியில் பூமாலையாக விழுந்தாள் அபிநந்தனா...
தன்மேல் விழுந்தவளின் இடையை தாங்கியவன் கைகள் அவளது இடையை தாங்கி பிடிக்க அவளோ கூச்சத்தில் நெளிந்து, "என்னங்க இது விடுங்க நான் காபி போட்டுட்டு வரேன்" என கூறினாள்..
"என்ன இதுன்னு தெரியலையா??" என்று கூறிக் கொண்டே அவளது செவி மடலை அவனது நாசியால் நுகர்ந்து கொண்டே ஒரு கை அவளது இடையை வளைத்து தன்னோடு புதைத்துக் கொள்ளும் அளவுக்கு அவளை இறுக்கியவனின் வேறொரு கை அவள் மீதம் வைத்த காபியை சுவைக்க போனது..
அதை கண்ட அவளோ அவனுடைய செயலை ரசித்து கொண்டே அவனது மடியில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு,"ஏங்க அது நான் குடிச்ச காபி நான் வேற போட்டு தரேன்" என்று அவள் கூறினாள்..ஏனெனில் அதில் கொஞ்சமாக தான் காபி இருந்தது...அதனால் அவள் அவ்வாறு கூறினாள்..
"நான் இல்லைன்னு சொல்லலையே நான் கேட்ட ஹாட் காபி தான் எனக்கு கிடைச்சிடுச்சே" என்று கூறியவன் ஒரு கப் காபியை சுவைத்து கொண்டே அவனது விரல்கள் அவளது உடலில் கோலமிட துவங்கியது..அவன் கோலமி்ட துவங்கியதும் சிவக்க துவங்கியவள் அவன் மீதே சரிந்தாள் இப்போது அவளது முழு உடலும் அவன் மீது இருந்தது..
அவனது மூச்சுக்காற்று அருகே வந்தாலும் கூட போதும் அவள் தன் நிலையை இழக்க, இப்பொழுது அவனது மடியில் அமர்ந்து கொண்டு அவளது தேகம் முழுவதும் அவனோடு உரசிக்கொண்டு அமர்ந்திருக்க அவனது விரல்கள் வேறு அவளை இன்பத் தொல்லை செய்து கொண்டிருக்க, அதை அனுபவிக்கவும் முடியாமல் அனுபவித்தால் தன்னுள் எழும் உணர்வுகளை மறைக்க முடியாமலும் திணறியவள், "என்னை விடுங்க ப்ளீஸ் நான் ரெடியாகப் போறேன்" என்று அவளுக்கே கேட்காத மெல்லிய குரலில் கூறினாள்...
அவன் கேட்டால் தானே, "பேசாம இன்னைக்கு சப்ரைஸை கேன்சல் பண்ணிட்டு இங்கேயே இருந்துடலாம்ன்னு இருக்கு" என்று கூறியவனின் இதழ்கள் அவளது செவ்விதழை வருடியது...
அவளோ அவனது தொடுகையில் சிவக்க அவளின் கன்ன சிவப்பு அவனுக்கு மேலும் அவளோடு ஒன்ற தோன்ற, அவள் குடித்த காபியில் மீதம் இருந்த ஒரு மிடறையும் குடித்து விட்டு காபி கப்பை டேபிளில் வைத்தவன் கைகள் அவளது இரு கால்களையும் தூக்கி அவன் மீது வைத்து அவளை அப்படியே திருப்பியவனின் மடியில் அவள் முழுதாக தற்போது படுத்து இருந்தாள்..
அவள் முகம் சிவந்து இருந்தது அவனோ பால்கனியில் இடப்பட்டு இருந்த விளக்கு வெளிச்சத்தில் அவளது மேனியை அவன் அலசி ஆராய்ந்து பார்க்க அவளோ அவனின் கண்கள் கூறும் வார்த்தையை படித்தவளோ, "இன்னிக்கு நாம வெளியே போறோம் அப்படின்னு சொன்னீங்க!!!" என்றாள்..
"ஆமாம் சொன்னேன் ஆனால் இப்ப போகவே மனசுல உன்னை ஒரு ரவுண்டு அடிக்கலாம்ன்னு பார்க்கிறேன்" என்று கூறியவன் நொடி பொழுதில் அவளது இரு கால்களையும் தூக்கி தன் காலில் போட்டவன் அவளது கன்னத்தில் தன் இதழ்களை பதித்தான்... பின் கண்கள், நாசி, இதழ்கள் என அனைத்திலும் அவனது இதழ்கள் பதிய அவள் முகம் செவ்வானமாக சிவந்தது..
அவளது வெட்கத்தை ரசித்தவன், "ஒவ்வொரு நாளும் நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கடி" என்று கூறியவன் அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டான்...
இனி என்ன செய்யப் போகிறான் என்பதை அறிந்த அவளோ கண்களை மூடிக்கொள்ள அவளை மஞ்சத்தில் கிடத்தியவன் அவள் மேல் மென்மையாக தன் மனதில் அவள் மீது வைத்திருக்கும் காதலை கொட்டி அவளோடு இணைந்து போக, அவளும் அவனோடு சுகமாக கலந்து போக, எவ்வளவு தான் அவளது உடலில் அவன் தேடினாலும், அவளை நாடினாலும் மேலும் மேலும் அவளை தீண்ட அவனது மனம் ஏங்க அவனது மனதை புரிந்து கொண்டவள் அவன் கேட்டதை அவளுக்கு வாரி வழங்க அதற்கு தடையாக இருந்த ஆடைகள் காற்றில் பறக்க, அவனுடைய கைகளும் இதழ்களும் அவளை இம்சிக்க, அவளது உணர்வுகளும் தட்டி எழ அவனுடைய வேகத்துக்கு அவளும் ஈடு கொடுக்க அங்கு சுகமான கூடல் அரங்கேறியது...
