அத்தியாயம் 24
எல்லாம் முடிந்து சோர்வாக வீட்டிற்கு சென்ற ஆத்ரேயன் கண்கள் அவளை தேடியது... அதற்கு முன்னால் அவனது தாயை பார்க்க சென்றான்... அங்கு அவர் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார் .."அம்மா எப்படி இருக்கீங்க??" என கேட்டான்..
"நல்லா இருக்கேன் இப்ப எனக்கு ஒரு குறையும் இல்ல தம்பி ஆனாலும் ரிஷி தான் இதையெல்லாம் செஞ்சு இருப்பார் என்று என்னால நினைச்சு கூட பார்க்க முடியல " என்று கூறினார்...
"என்ன செய்யறதுமா?? பண ஆசையும், பணவெறியும், பதவி ஆசையும், பதவி வெறியும் யாரையும் விட்டு வைக்காதே அதற்கு இந்த குலம் கோத்திரத்தில் பிறந்த பெரிய வீடு எல்லாம் தெரியாதே...பெரிய வீட்டில் பிறந்தாலும் ஆளுங்க மனசு சிறுசு தான் மா" என்று கூறினான்..
அவரும்," ஆமாம்" என்று கூறியதோடு விட்டுவிட்டார்...
" உனக்கு ஒன்னும் ஆகிடவில்லையேப்பா??" என்று கேட்கவும்," இல்லைமா எனக்கு ஒன்னும் ஆகல" என்று கூறியவன், "ஆனால் அந்த வீட்ல இருக்க ரெண்டு பேருக்கும் தான் நல்ல அடி அதுல அவரு தான் பாவம்...ஆதி எப்படி இருந்தாலும் பிழைச்சு வந்துடுவான்" என்று கூறியவன் தாயை பார்க்க அவர் அதை காது கொடுத்து கேட்கவே இல்லை..அவருக்கு அதை கேட்க வேண்டும் என தோன்றவில்லை போலும்...
தாயின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க அவரோ அவன் கூறியதற்கு பதில் கூறாமல் ,"பார்க்க ரொம்ப சோர்வா தெரியற ஏதாவது சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடுப்பா" என்று கூறினார்...
அவனுக்கு பதிலுக்கு ஒன்றும் கூறாமல்," சரி அம்மா நீங்க அதிக நேரம் புக் படிச்சிட்டு இருக்காம உறங்குங்க.. நான் என்னுடைய அறைக்கு போறேன்" என்று கூற அவனை அவனது முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தார் சாரதா...
அதை கண்ட அவன்,"என்னமா ஏதாவது என்கிட்ட சொல்லனுமா???" என கேட்டான்...
"தம்பி உனக்கு என் மேல உள்ள கோபம் போயிடுச்சா கண்ணா???" என்று கேட்டார்...
அவர் எதைப் பற்றி கூறுகிறார் என்பதை புரிந்தவன்,"அம்மா என்ன திடீர்னு இப்படி எல்லாம் கேக்குறீங்க???" என்று கேட்டான்..
"சொல்லுப்பா அம்மாவோட மனசை அது அரிச்சிட்டு இருக்கு அம்மா ஏதாவது தப்பு பண்ணி இருந்தா அது உன்னை பாதிச்சிருந்தா என்னை மன்னித்து விடுப்பா??? எனக்கு அந்த மனுஷனோட காதலை விட என் பிள்ளைகள் தான் முக்கியம் அதுவும் எனக்கு இருக்கிற ஒரே உறவு நீ மட்டும் தான் பா நீ மட்டும் தான் பா அம்மாவுக்கு முக்கியம்" என்று கூறினார்..
"இப்போ எதுக்கு மா அதை எல்லாம் பேசிட்டு இருக்கீங்க!! நீங்க எதுக்குமா என்கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க!! நான் தான் புரிஞ்சுக்காம உங்களை தப்பா பேசிட்டேன்!! எனக்கு அக்கா இறந்ததுமே அதுக்கு காரணம் அவருதானே அப்படின்னு கோபம் இருந்தது... அந்த கோபத்தை என்னால கட்டுப்படுத்திக்க முடியல அது மனசுக்குள்ள வெறியா மாறிடுச்சு...அதுனால என் கோபத்தை உங்ககிட்ட காட்டிட்டேன் அவ்வளவு தானே ஒழிய உங்க மேல என்னால கோபம் எல்லாம் பட முடியாது அம்மா தேவையில்லாமல் யோசிச்சுட்டு இருக்காதீங்க" என்று கூறினான்...
"இல்லப்பா என்னால தானே மத்தவங்க கிட்ட எல்லாம் நீ தாழ்ந்து நிக்க வேண்டி இருக்கு" கூறவும்," அப்படியெல்லாம் இல்லம்மா இப்போல்லாம் நான் தாழ்ந்து எல்லாம் நிற்கிறது இல்லை நேருக்கு நேரா மோதிடுறேன் அந்த தைரியம் எனக்கு இருக்கிறதுனால நான் அதைப்பற்றி எல்லாம் யோசிக்கிறதே இல்லை... உங்க மேல மட்டும் எல்லாமே குற்றம் சொல்லிட முடியாது அம்மா..நீங்க எதுவுமே செய்யல மா நீங்க உண்மையில் பாவம் மா..
இதுல தவறுன்னு பார்த்தா அப்பா உடையது தான் அவரு தான் முதுகெலும்பில்லாமல் இருந்துட்டாரு... அதுல பாதிக்கப்பட்டது தான் நாம!!! எனக்குள்ள இருக்கிற அதே வெறி தானே ஆதிக்கும் இருக்கு அப்போ அவனும் நானும் மோதிக்கிறது அவர் ஒருத்தற்காக தானே???
நான் என்னுடைய உரிமைக்கு வேண்டி போராடுகிறேன் அவனும் அவனுடைய உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி போராடுறான் இதுல சரி தப்புன்னு பார்த்தா இரண்டு பேருமே ஒரே தராசில்தானமா இருக்கோம்" என்று கூறவும் அதை ஆமோதிப்பதாக தலையாட்டினார்..
"நமக்கு யாரோட உறவும் வேணாம் பா..நாம இப்படியே இருந்திடுவோம் பா..." என்றவர் அவனை பார்க்க அவனோ எதுவுமே கூறவில்லை...
"நான் உன்னை என்னமோ நெனச்சேன் கண்ணா உன்னுடைய கோபத்துக்கு முன்னால என்னால பேசக்கூட முடிஞ்சதில்லை. ஆனா நீ இவ்வளவு பொறுமையா எனக்கு பதில் சொல்லும் பொழுது நீ எந்த அளவுக்கு பக்குவமா இருக்கேன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது" என்று கூறவும் அவன் சாரதாவை பார்த்து,"பக்குவம் எல்லாம் காட்ட வேண்டிய இடத்துல காட்டினா போதும்மா எல்லா இடத்திலும் என்னால காட்டிட்டு இருக்க முடியாது" என்றான்..
அதை பார்த்து சிரித்த சாரதா, "எங்கிட்ட பேச கூடிய எதுவா இருந்தாலும் பேசு தம்பி ஆனால் அம்மாவை விட்டு விலகி மட்டும் இருக்காத பா" ..என்றார் வருத்தத்தோடு,
அவரது வருத்தத்தை கண்ட அவனும்,"சரி மா இதை நீங்க சொல்ல வேண்டிய அவசியம் இல்லை மா நான் தான் தவறு பண்ணி இருக்கேன் என்னை மன்னிச்சிடுங்க" என்று கூறினான்...
அதை கண்ட அவர், "என்னமோ தெரியலப்பா இரண்டாவது ஜென்மம் மாதிரி இருக்கு கடவுளா எனக்கு உயிர் பிச்சை போட்ட மாதிரி இருக்கு... இந்த வாழ்க்கையில நான் இழந்ததை எல்லாம் வாழனும்னு ஆசையா இருக்கு... முக்கியமா உன் கூட பழையபடி இருக்க மனசு ஏங்குது இருப்பியாப்பா???" என்று கேட்டார்... அதற்கு அவன் பதில் ஏது கூறாமல் தாயை இறுகணைத்து அவரது நெற்றியில் தன் இதழ்களை வாஞ்சையோடு பதித்துக் கொண்டான்... அதில் சாரதா அம்மாவின் கண்கள் பனித்தன...
பிறகு அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு மாடிக்கு சென்றான்...அவனது அழுத்தமான காலடி ஓசை கேட்கவும் அவன் தான் வந்திருக்கிறான் என உறங்காமல் காத்துக் கொண்டிருந்தவள் அவன் வந்ததும் அவளது கண்கள் அவனை ஆராய்ந்தது... ஏதாவது அவனுக்கு ஆகியிருக்கிறதா என கண்களாலேயே அவனை வருடினாள்...
அவனும் ஒன்றும் பேசாமல் உள்ளே நுழைந்து கதவை அடைத்தவன் அவளை பார்த்தான்...அவள் விழிகளும் அவனை தான் பார்த்தது...அதுவரை அவன் புராணம் பாடி கொண்டிருந்த அவள் மனம் நொடி பொழுதில் அவனை அருகில் ஒரே அறையில் கண்டதும் பதட்டம் அடைந்தது...அவன் பார்வையை அவள் தவிர்த்து இருந்தாள்..அதனால் அவள் அவன் அருகே வராமல் எட்ட நின்று கொண்டே," நான் ரொம்ப பயந்துட்டேன் உங்களுக்கு எதுவும் இல்லையே" என கேட்டாள்...
"எனக்கு ஒன்னும் இல்லை" என்று கூறியவன் அவளைப் பார்க்க அவள் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.. அடுத்து அவளுக்கு என்ன பேச வேண்டும் என தெரியவில்லை அப்படியே சமைந்து நின்றாள்...
என்னதான் அவனை ஏற்றுக்கொள்ள அவள் மனம் போராடினாலும் எதையுமே தெளிவாக இருவரும் பேசிக் கொள்ளாமல் எப்படி பிற கணவன் மனைவி போல ஓடிச் சென்று அவன் அருகே நிற்பது என எண்ணிக்கொண்டாள்..அதிலும் அவன் பார்வை அவளை அச்சுறுத்தியது... அவனும் அதேதான் எனினும் என்னவோ தன் ஷர்ட் பட்டன்களை அவிழ்த்துக் கொண்டு அவள் பக்கமாக வந்தான்..
அப்பொழுது அவன் ஷர்ட்டில் கையை வைத்ததும் இவளுக்கு இதயம் வேகமாக துடித்தது இவள் மனம் எங்கெங்கோ அலைபாய்ந்தது...அதிலும் அவன் அருகே வர அவள் இதயம் வாய் வழியே வெளியே வரும் அளவுக்கு துடித்தது...
அவன் அந்த விசயத்தில் அவன் அப்படி இப்படி தான் என்றாலும் அவனுடன் வாழ்ந்த சில நாட்கள் அதை அவளுக்கு போதித்து இருந்தாலும், " இதோ கிட்ட வருகிறாரோ நாம இன்னும் எதுவுமே பேசலையே" என எண்ணி படபடத்து கொண்டு இருந்தாள்..
"ஓடி வந்து கட்டி புடிச்சுருவாரோ என்ன ஷர்ட்டெல்லாம் அவிழ்க்கிறாரு ஏதாவது செஞ்சுருவாரோ??? அப்படி செஞ்சா நான் என்ன செய்யனும்???" என அவள் நினைக்க அவனோ அவளுக்கு அருகே அவளைப் பார்த்துக் கொண்டே வர இவளது மேனியும் சிலிர்த்தது...
அவனது பார்வையை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை.. அவள் மனம் பந்தய குதிரை போல எங்கெங்கோ ஓடியது பழைய எண்ணங்கள் அவன் அவனுடன் கழித்த இரவுகள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்து அவளை பதற்றம் அடைய வைத்தது..
ஆனால் அவனோ அவளுக்கு பின்னால் இருக்கும் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்... அப்பொழுது தான் அவளுக்கு மூச்சே வந்தது...
அவன் சென்றும் அவள் எதற்காக அவனை கண்டு அவள் பயப்படுகிறாள் என அவளுக்கே தெரியவில்லை.. எப்படி இருந்தாலும் அவனுடன் வாழ்ந்து தானே ஆக வேண்டும் இப்படி இருந்தால் எப்படி என எண்ணி கொண்டாள்..அப்படி எல்லாம் மனதை அவள் தேற்றி கொண்டாலும் அவன் அருகே இருந்தால் அவளுக்கு எழும் நடுக்கத்தை அவளால் தடுக்க முடியவில்லை ..
அவன் குளித்து வந்த பின்னரும் அவள் அவன் செல்லும் பொழுது எங்கு நின்று கொண்டு இருந்தாளோ அதே இடத்தில் தான் அவள் நின்று கொண்டிருந்தாள்... இது அவனுக்கு பெரிய ஆச்சரியமாக ஒன்றும் இல்லை அவன் எதிர்பார்த்த ஒன்றுதான்...
இந்நேரம் அவள் காடு, மலை தாண்டி யோசித்து இருப்பாள் என்று கூட அவன் யூகித்து வைத்திருந்தான்..
அதனால் அவளே தொடங்கினாள்,"நின்னுட்டே இருக்கிறதா விரதம் இருந்து இருக்கியா???" என்று கேட்டான் அவளோ அவனைப் பார்த்து,"அப்படியெல்லாம் இல்லை" என்றாள் மெல்லிய குரலில், "அப்புறம் நான் வந்ததிலிருந்து அதே இடத்தில் நின்று இருக்கியே???"என கேட்டான்..
"அது வந்து" என கையை பிசைந்தாள்..அவளால் நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை அவனும் அவளிடம் இருந்து நாலு அடி தொலைவில் தான் நின்று கொண்டிருந்தான்...இருந்தும் அவளால் அவளது பதட்டத்தை குறைக்க முடியவில்லை...
"சண்டை எல்லாம் போடணும்னு சொன்ன" என்று வேண்டும் என்றே அவளது தவிப்பை புரிந்து கொண்டு அவன் கேட்டான்..
அவனுக்கு அவளை கண்டதும் உண்மையில் வாரி அணைக்க வேண்டும் என்று தான் தோன்றியது..ஆனால் இப்போது அதற்கான சமயம் இல்லை என்பதை புரிந்து கொண்டவன் நாலு அடி தொலைவில் நின்று கொண்டான் அருகே வந்தால் அவள் ஓடி விடுவாளோ என்ற பயம் அவனுக்கு வந்தது...ஆனால் அவளது தவிப்பை கண்டவனுக்கு அவனது சமநிலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தது... ஆழந்த மூச்சை எடுத்து விட்டு தன்னை அவன் சமன் செய்து கொண்டான்...
அவளுக்கு அந்த நேரத்தில் என்ன பேசினோம் என்று கூட ஞாபகத்தில் இல்லை அதனால் குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தாள்..."அவரை பார்க்கவே முடியல இதுல சண்டை வேறயா???" என எண்ணி கொண்டாள்..
அவளது மன போராட்டங்கள் அவனுக்கு புரியாமல் இல்லை ஆனால் ஏனோ அந்த நேரத்தில் அவனுக்கு எரிச்சலையே கொடுத்தது..
அவனை கண்டதும் அவள் ஓடி வந்து கட்டியணைத்து முத்தமிட வேண்டாம் ஆனால் அன்பாக பார்த்தால் போதும் ஆதரவாக பேசினால் போதும் அவனை கண்டதும் பயந்து ஓடி நடுங்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லையே என்றுதான் அவன் எண்ணினான்...
அதனால் ,"நீ எதுக்காக இப்போ வந்த???" என அவனே பேச்சே ஆரம்பித்தான்... அவனது கேள்வியின் தோரணை சற்று அழுத்தமாக இருக்க அவள் பதறிப் போனாள்..
"ஏன் என்னாச்சு???"என கேட்டாள் புரியாமல்!!!
அவள் விழிகள் பதறுவதை கண்டவன்,"இல்லை நீயா ஆசைப்பட்டு வந்தியா??? இல்ல யாராவது உன்னை வற்புறுத்தி இங்கே இருக்க சொன்னாங்களா?? அப்படி யாராவது சொல்லி இருந்தாங்கன்னா!!! இப்பவே நீ கிளம்பலாம்!! நீ இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்ல" என்று கூறினான்.. அதைக் கேட்டதும் அவள் அதிர்ந்து அவனைப் பார்த்தாள்..
"என்ன இப்படி ஷாக் ஆகி பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம் உனக்கு விருப்பம் இல்லை அப்படின்னா நீ கிளம்பிடு நிஜமாத்தான் சொல்றேன்"என்றான் மீண்டும் அழுத்தமாக
அவனது பார்வை மாறுவதை கண்டவள்,"நானா விருப்பப்பட்டு தான் வந்திருக்கேன்" என்று மெல்லிய குரலில் கூறினாள்..
"அபி நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல!! நான் உன்னை கார்னர் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... உன்னோட விருப்பமே இல்லாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... உன்னுடைய விருப்பமே இல்லாமல் உன் கூட இருந்திருக்கேன்.. நான் இல்லைன்னு சொல்லல!! அதையெல்லாம் நியாயப்படுத்த நான் விரும்பல... நான் ரொம்ப மேல் ஆசை வைத்திருந்தேன், பாசம் வைத்திருந்தேன் அப்படி எல்லாம் சொல்லி நான் செஞ்ச விஷயத்தை நியாயப்படுத்தவும் விரும்பல.. என் காதலை பிடிக்க எனக்கு வேற வழி தெரியலன்னு நினைச்சு இதெல்லாம் செய்யல..அது வேறொரு விஷயம்..
எனக்கு உன்னை புடிச்சது நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் உன்னை என் கூட வச்சுக்கணும்னு ஆசைப்பட்டேன்... வைச்சிக்கிட்டேன்... நீயும் என் கூட இருந்த ஒரு கட்டத்துல நீ கிளம்பின நான் உன்னை அதுக்கப்புறம் தொந்தரவு பண்ண கிடையாது இல்லையா???
அதுக்கு இடையில யார் உன்கிட்ட என்ன சொன்னாங்கன்னு எனக்கு தெரியல மே பி வசுவாக இருக்கலாம்!!! ஏன்னா அவளுக்கு தான் என்னை பத்தி நல்லா தெரியும்!! அவ உன்னிடம் நான் உன் பின்னாடி சுத்துனது எல்லாம் சொல்லி இருக்கலாம்!! என்னுடைய அம்மாவும் பேசியிருப்பாங்கன்னு தான் நினைக்கிறேன்... அப்படி இவங்க ரெண்டு பேரும் உன்னை டார்ச்சர் பண்ணி எமோஷனல் பிளாக் மெயில் பண்ணி கன்பியூஸ் பண்ணி உன்னை இங்கு வரவச்சிருந்தாங்க அப்படின்னா தயவு செஞ்சு நீ இங்க இருக்க வேண்டாம் கிளம்பிடு" என்று பட்டென போட்டு உடைத்தான்..
அவள் அதைக் கேட்டு மேலும் அதிர, "ஆமாம் அபி நான் சீரியஸா தான் சொல்லி இருக்கேன் மத்தவங்க என்னுடைய எமோஷனல உன்கிட்ட சொல்லி அதனால நீ எமோஷனல் ஆகி அதுல வர பாசம் எனக்கு தேவையில்லை...
சிம்பதியில வர்ற நேசம் எனக்கு முக்கியமில்லை.. அப்படி எனக்கு வேண்டவும் வேண்டாம்... உனக்கு என்னை பிடிக்கலையா??? தைரியமா என் மூஞ்சிக்கு நேரா சொல்லிட்டு நீ போகலாம்!!! உன் கூட வாழ பிடிக்கல நான் கிளம்புறேன் அப்படின்னு சொல்லிட்டு போகலாம் சண்டை போடலாம் என்ன வேணா செய்யலாம்... அது உன்னுடைய நிலை சார்ந்ததாக இருக்கணும் மத்தவங்க சொல்லி நீ அதை செய்யக்கூடாது.. அந்த அளவுக்கு இந்த ஆத்ரேயன் இறங்கி போயிடல...எனக்கு யாருடைய சிம்பதியும் தேவை இல்லை" என்று கூறினான்...
அதை கூறும் பொழுதே அவன் கோபப்படவில்லை ஆத்திரப்படவில்லை நிதானமாக அதே சமயம் அழுத்தமாக அவளது கண்களை பார்த்து கூறினான்...அவனுக்கு பேசியே ஆக வேண்டும் இனி அவனால் எந்த வலிகளையும் தாங்கி கொள்ள முடியாது...
அதனால் அவளை பார்த்து கூறவும் அவளோ,"இல்லை அப்படியெல்லாம் யாரும் எதுவும் என்கிட்ட சொல்லல" என்று அவள் கூறவும்," நீயே ஏன் என்கிட்ட பொய் சொல்ல ட்ரை பண்ற??? அது தான் உன் கண்ணே சொல்லுதே உனக்கு பொய் சொல்ல வராது அப்படின்னு உன் கண் சொல்லுது.. என் மேல கோபமா இருந்த நீ திடீர்னு பாசம் காட்ட துடிக்கும் போதே தெரியலையா??? இது யாரோ செய்த செயல் தான்னு ஸ்டில் நவ் நான் அதே ஆத்ரேயன் தான்...
என்கிட்ட எதுவுமே மாறல நீ வெறுக்கிற பல விஷயங்கள் இன்னும் அப்படியே தான் இருக்கு அப்படியேதான் இருக்கும் நான் இப்படித்தான்... என்னால எதையும் மாத்திக்க முடியாதுன்னு தோணுது" என்று கூறினான்..
அவளும் இதற்கு மேல் மூடி மறைக்க முடியாது உண்மையை ஒப்பு கொள்ள வேண்டியது தான் என்றெண்ணியவளுக்கு அவன் பொறுமையாக பேசவும் சற்று முன் இருந்த பதட்டம் இப்போது இல்லை அதனால், " அவங்க சொன்னதெல்லாம் உண்மைதான் ஆனால் அதெல்லாம் கேட்டு நான் மனசு மாறினதும் உண்மைதான்... ஆனால் ஏனோ எனக்கும் உங்களை பிடிக்க ஆரம்பிச்சு இருக்கு" என்று தயங்கி தயங்கி அவன் முகம் பார்த்து கூறினாள்...
அதைக் கேட்டதும் அவனது முகம் தெளிந்தது.. இருந்தாலும் அவனுக்கு நேரிடையாக கேட்க வேண்டும் அதனால்,"அபி நல்லா யோசிச்சுக்கோ என்கிட்ட பதில் சொல்லும் போது நல்லா யோசிச்சு பதில் சொல்லு திரும்ப மாத்தி சொன்னா நான் ஏத்துக்க மாட்டேன்" என்று கூறினான்...
"நீங்க எவ்வளவு தடவை கேட்டாலும் எனக்கு உங்களை பிடிச்சிருக்கு... இதோ இந்த நாலடி வித்தியாசத்தில் நாம நிக்கும் போது ரொம்ப பிடிச்சிருக்கு... இதுவே நீங்க கிட்ட வந்தீங்க அப்படின்னா எனக்கு பிடிக்குமா இல்லையான்னு தெரியல..ஆனால் என்னுடைய பதட்டத்தை என்னால் குறைக்க முடியவில்லை அவ்வளவு தானே தவிர மத்தபடி ரொம்ப பிடிச்சு இருக்கு" என்று மெலிதாக புன்னகையோடு சிவந்த முகத்தோடு கூறினாள்...
ஆனால் அவனோ,"அபி நான் மாறவே கிடையாது நான் உன்னை மிரட்டி கல்யாணம் பண்ணி இருக்கேன்.." என்றான்..
"பரவாயில்ல எனக்கு புடிச்சிருக்கு.. இனி என்னை மிரட்ட மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்" என்றாள் பதிலுக்கு,
"அபி நான் உன் விருப்பம் இல்லாமல் உன் கூட இருந்திருக்கேன்"என்றான்..
"பரவால்ல இனிமே நீங்க அப்படி செய்ய மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் என்னுடைய விருப்பத்தின் பேர்ல தான் நீங்க என் பக்கத்துல வருவீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்.."என்றாள்
அவனோ அவளது பதிலில் மலைத்து, " அபி நான் உங்க அம்மா, அப்பா கூட சண்டை போட்டு இருக்கேன் உன்னை கஷ்டபடுத்தி இருக்கேன்" என்றான்...
"பரவால்ல இனிமே நீங்க சண்டை போட மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்"
"அபி என்னால நீ அசிங்கப்பட்டு இருக்க என்னால உனக்கு நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்கேன்"
"என்னை எங்கேயும் நீங்க அசிங்கப்பட விட மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்..அது தான் உங்க கூட கல்யாணம் நடந்துடுச்சே" என்றாள்..அதைக் கேட்டவனுக்கு மெல்லிய புன்னகை வந்தது...
"அபி நான் உன்னை பல வருசமா காதலித்து இருக்கிறேன்..எனக்கு உன்னை பத்தி எல்லாம் தெரியும் ஆனால் உனக்கு தெரியுமா???"
"நான் தெரிஞ்சிக்கிறேன் அதனாலதான் நான் இங்கே நிற்கிறேன்" என்று கூறினாள்...
அவன் என்ன சொன்னாலும் அவனது வாயை அடைத்தாள் அவன்," நான் உன்கிட்ட என் காதலை சொன்னதே கிடையாது"
"அதுதான் எனக்கு தெரிஞ்சிருச்சே சொல்லாத காதலும் சுகமாக தான் இருக்கு" என்றாள்...
"நந்து நான் ரொம்ப தப்பானவன் வில்லன் எனக்கு நான் என்ன நினைக்கிறேனோ அது தான் நடக்கணும் அப்படித்தான் நான் இதுவரை இருந்திருக்கேன் இனியும் அப்படி தான் இருப்பேன் அது உனக்கு கஷ்டமா இருக்கும்" என்றான் இறுதியாக
"அதை பத்தி கவலை படாதீங்க இனிமே நீங்க அப்படி நினைக்காத மாதிரி நான் உங்களை மாத்திடுறேன்"என்றாள் அவளும் மெல்லிய புன்னகையுடன்,
"அபி என்ன தான் உன் மேல் ஆசை வைத்திருந்தாலும் நீ அந்த ஆதித்யனை கல்யாணம் பண்ணிக்க கூடாது அப்படின்னும் கூட தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் நீ எனக்கு கிடைக்கனும்னு தான் இதெல்லாம் செய்தேன்" என்று முடிவாக அவனது தவறை கூறினான்...
அதற்கு அவளோ,"இதையே நீங்க எத்தனை வாட்டி தான் சொல்லுவீங்க எனக்கு உங்களை பிடிச்சிருக்கு.. போதுமா??? நீங்க என்னை காதலிச்சீங்கன்னு எனக்கு தெரிஞ்சிருச்சு ஆதித்யன் கூட என்கேஜ்மென்ட் ஆனதை தாங்க முடியாம தான் நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கன்னு எனக்கு தெரிஞ்சிருச்சு.. இதெல்லாம் நான் சரின்னு சொல்ல வரல இதெல்லாம் எனக்கு பிடித்து இருக்கணும் சொல்ல வரல.. சுத்தமா பிடிக்கல!!! இப்ப வரைக்கும் பிடிக்கல!!
ஆனால் உங்களுக்கு என்று ஒரு மனசு இருக்கு அது எனக்கு இப்ப புரிஞ்சிருக்கு... இப்பதான் புரிஞ்சிருக்கு.. நானும் இந்த வீட்டை விட்டு வெளியே போகும்போது உங்க கூட வாழவே கூடாது அப்படின்னு நினைச்சுட்டு தான் போனேன்..
ஆனா நானே திரும்பி வந்து இருக்கேன் அப்படின்னா நானா சுயமா அலசி ஆராய்ந்து தான் வந்திருக்கேன் உங்களுடைய அடி முதல் நுனி வரை உங்கள பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு தான் வந்திருக்கேன்
நீங்க ரொம்ப நல்லவர் என்று நான் சொல்ல மாட்டேன் கொஞ்சம் கொஞ்சம் உங்ககிட்ட வில்லத்தனம் இருக்கு... ஆனா அதையும் இப்போ ரசிக்கிறேன் ..உங்களை பத்தி இப்படி எல்லாம் பேசுற அளவுக்கு நீங்க ரொம்ப என்னை பைத்தியக்காரி ஆக்கிட்டீங்க இந்த அளவுக்கு உங்க பின்னாடி நான் வந்து நிற்பேன் எனக்கு சத்தியமா தெரியல இப்போ உங்களை ரொம்ப நேசிக்கிறேன்...எனக்கும் உங்களை ரொம்ப பிடிச்சு இருக்கு நீங்க இல்லாமல் என்னால இருக்க முடியாதுன்னு தோணுது" என்று கூறினாள்..
அடுத்த நொடி அவனது கை அணைப்பில் அவள் இருந்தாள்..."இனி நீயா விருப்பப்பட்டாலும் என்கிட்ட இருந்து உன்னை யாராலும் பிரிக்க முடியாது" என்று கூறியவன் அவளை காற்று புக முடியாத அளவிற்கு இறுக்கமாக தழுவிக் கொண்டான்...
பின் அவள் முகத்தில் எந்த இடத்தில் அவன் இதழ்கள் பதித்தான் என அவன் அறியான் அவளும் அவனோடு கலந்து போனதை அவள் அறியாள்... இதழோடு இதழ் கலந்து கரங்கள் ஆரத் தழுவி இரு உடல்கள் பின்னி பிணைந்து மோகக்கரை நோக்கி இருவரும் செல்ல அங்கு சில முனகல்களும், சினுங்கல்களும் அந்த அறையை நிறைத்தன..
