அத்தியாயம் 23
ரிஷி குலசேகரியின் இரண்டாவது மகன் மற்றும் ரிஷி குருப்ஸின் வாரிசு என்ற பெயர் மட்டும்தான் அவருக்கு எப்பொழுதும் இருப்பது சிறுவயதிலிருந்தே அருணாச்சலத்திற்கு அந்த வீட்டில் ஒரு மரியாதை என்றால் ரிஷிக்கு வேறொரு மரியாதை இருக்கும்...
என்னவோ நிறுவனம் அவரது பெயரில் தான் இயங்கிக் கொண்டிருந்தது.. ஆனால் அவருக்கும் அந்த நிறுவனத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லாதது போல தான் எப்பொழுதும் இருக்கும் ரிஷியின் தந்தை அம்மையப்பன் கூட ஏதாவது தொழில் விவகாரத்தில் அருணாச்சலத்தை கூட முன்னிறுத்தி வைத்து பேசுவார் ரிஷியை குழந்தை என தட்டிக் கழிப்பார்..
அது ரிஷியின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது... வளர்ந்து அருணாச்சலம் தொழிலை ஏற்று நடத்த துவங்கிய பின்னும் அதே நிலை தொடர ரிஷியை அந்த வீட்டில் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை அவருக்கு அவருடைய அண்ணன் ஒரு எதிரியாக தெரிந்தார்...
அண்ணன் இருப்பதால் தானோ என்னவோ தன்னை யாரும் மதிப்பதில்லை என்று தனக்குத்தானே எண்ணிக் கொண்டார்..
ஆனால் அருணாச்சலம் தன் தம்பியை தன் தோழனாக பார்த்தார்.. அதன் பயனாய் அருணாச்சலம் தன் தம்பியிடம் தன் காதலை கூற தன் தாய் எப்படி இருந்தாலும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று தெரிந்தே அண்ணனை உசுப்பேற்றி விட்டு வேடிக்கை பார்த்தார் ரிஷி...ஏனெனில் குலசேகரியை பற்றி ரிஷிக்கு நன்றாக தெரியும்...
ரிஷியின் வாக்குப்படி தான் அருணாச்சலம் செயல்பட சாரதாவை திருமணம் செய்து கொள்ள தூண்டியது கூட ரிஷி தான்... காதலிக்க தூண்டியதும் அவர்தான் எப்படி இருந்தாலும் குலசேகரி சம்மதிக்காமல் அருணாச்சலத்தை அடித்து துரத்துவார் பிறகு என்னுடைய சாம்ராஜ்யம் தான் என எண்ணிக் கொண்டார்..
அதேபோல அருணாச்சலத்துக்கு மகள் பிறந்ததும் மகள் வளர்ந்தும் தாயை அருணாசலத்துக்கு பெண் பார்க்கும் படி அவர்தான் கூறினார்..
அதைக் கேட்டதும் குலசேகரி வேகமாக பெண் பார்க்க துவங்க அவர் என்ன செய்வது என்று தெரியாமல் தம்பியிடம் கேட்க அவரோ கூலாக அண்ணனிடம் திருமணமான விஷயத்தை கூறும்படி கூறினார்... அதைக் கேட்டு அவர் கூற ரிஷியின் என்னமோ அவரது அம்மா இதைக் கேட்டு அருணாச்சலத்தை அடித்து துரத்தி விடுவார் என்பதுதான்..
ஆனால் குலசேகரி அப்படி செய்யாமல் அருணாச்சலத்திற்கு வேறொரு திருமணம் செய்து வைக்கவும் ரிஷி அதிர்ந்தார் பிறகு அண்ணனிடம் அது இது என சொல்லிக் கொடுக்க மன உளைச்சல் அடைந்த அருணாச்சலம் குடிக்கு அடிமையானார்...
குடிக்கு அடிமையானதும் ரிஷியிடம் கம்பெனி நிர்வாக பொறுப்பை ஒப்படைக்க குலசேகரி தீர்மானித்தார்... அதன்படி ரிஷியின் கையில் பொறுப்பு கிடைக்க ரிஷி வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க துவங்கினார் அவர் எதை எதிர்பார்த்தாரோ அது கிடைக்க ஆரம்பித்தது...
அவர் இதுதான் எதிர்பார்த்தார் ..ரிஷியின் கீழேதான் எல்லாம் வரவேண்டும் என்று எதிர்பார்த்தார்... ஆனால் மூத்ததாக அருணாச்சலம் பிறந்துவிட அருணாச்சலத்துடன் எல்லாம் ஒப்படைத்து ரிஷியை டம்மியாக மாற்றுவது அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... அதனாலேயே இப்படி தேவையில்லாத வேலைகள் செய்ய தொடங்கியவர் நாளடைவில் அதையே முழு நேர தொழிலாக மாற்றி விட்டார்...
ஆம் வைதேகி திருமணம் செய்துவிட்டு முழு நேர குடிகாரனாக அருணாச்சலம் மாறியதை எண்ணி அகம் மகிழ்ந்த ரிஷி தினம் தினம் குலசேகரிடம் அருணாச்சலம் திட்டு வாங்குவதை பார்த்து சந்தோஷம் அடைந்த ரிஷி இனி எல்லாம் என் கையில் என எண்ணத் துவங்கி விட்டார்..
அந்த சமயம் பார்த்து தான் வைதேகி அருணாச்சலம் திருந்தி நல்வாழ்க்கை வாழ ஆரம்பிக்க, அதனால் மீண்டும் ரிஷியின் இடம் இரண்டாவதாக மாறிப்போனது அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...
அதற்குள் ரிஷிக்கு பல்லவி உடன் திருமணமும் ஆகிவிட பல்லவி முன்னால் தான் அவமானப்பட்டு போவதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவும் இல்லை...
இப்படியே நாட்கள் செல்ல ரிஷிக்கு ஏனோ குழந்தைகள் இல்லாமல் போனது... வைதேகி மற்றும் அருணாச்சலத்திற்கு ஆதி பிறந்துவிட என்ன செய்யலாம் என யோசித்த ரிஷி சாரதாவை தேட துவங்கினார்...
அருணாச்சலம் எப்போதாவது சாரதாவை பற்றி பேசுவார் சாரதாவை காணவில்லை என்றெல்லாம் கூறுவதைக் கேட்ட அவர் சாரதாவை தேட துவங்கினார் அப்பொழுது சாரதா இருக்கும் இடம் அவருக்கு தெரிந்தது...
தன் அண்ணனிடம் நேரடியாக கூறாமல் சாரதா இருக்கும் ஊரில் உள்ள மீட்டிங் இருக்கு என்று அண்ணனை செல்ல சொல்ல சரியாக அவரும் செல்ல அங்கு செல்ல சாரதாவை ரிஷி எண்ணியது போல கண்டுவிட்டார் இனி அருணாச்சலம் சாரதா உடன் சென்று விடுவார் என ரிஷி எண்ணினார்...
ஆனால் சாரதா அருணாச்சலத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க அருணாச்சலமும் வைதேகி துரோகம் செய்யாமல் இருந்தார் இரு குடும்பத்தையும் அவர் பாதுகாத்து வர, இது ரிஷிக்கு எரிச்சலை கொடுத்தது...
இப்படியே காலம் செல்ல ஆதி வளர்ந்து பெரியவன் ஆனான்... ஆதி பிறந்தது முதலில் தனக்கு குழந்தைகள் இல்லை இவனுக்கு மட்டும் குழந்தைகள் இனி அவனுக்குப் பிறகு அவனது குழந்தைகள் மட்டும் தான் இந்த சொத்தை எல்லாம் ஆண்டு அனுபவிக்கும் என்று எண்ணி பல்லவியை மருத்துவமனை மருத்துவமனையாக கூட்டி சென்றார்...
ஆனால் ஒரு பயனும் இல்லை... அதனால் எரிச்சல் அடைந்த ரிஷி தன் எண்ண படி வாழவும் முடியாமல் திணறினார்... ஏனெனில் அருணாச்சலத்தை போல அல்ல ரிஷி அவரால் தொழிலை மிக சரியாக ஏற்று நடத்த முடியாது ஆனால் அதை ஒப்புக்கொள்ள தான் மாட்டார் அப்படி இருக்க அருணாச்சலம் நிலை தடுமாறி இருக்கும் நேரத்தில் கொஞ்சம் நஷ்டம் அடைந்து விட்டது தன் தம்பி தானே என அதை வெளியே சொல்லாமல் அருணாச்சலம் உழைத்து பழைய நிலைக்கு அவர்களது தொழிலை மீட்டு எடுத்தார்...
கூடவே அருணாச்சலம் தன் தம்பியிடம் ,"இனி நீ தொழிலை பார்க்க வேண்டாம் நானே எல்லாமே செஞ்சிக்கிறேன்" என்று கூறி விட அதை மிக அவமானமாக உணர்ந்தார் ரிஷி...
தேவையில்லாமல் அருணாச்சலத்தின் மீது வன்மத்தை வளர்த்துக் கொண்டார்... அருணாச்சலமும் தம்பியின் கணக்கு வழக்குகள் சரியில்லை என்று தாராளமாக பணம் கொடுப்பதை நிறுத்தி இருக்க அதெல்லாம் அவருக்கு மிகவும் எரிச்சலை கொடுத்தது அந்த எரிச்சலை நாளடைவில் அருணாச்சலத்தின் மீது வன்மத்தை வளர்க்க உதவியது...
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வன்மத்தை வளர்த்த ரிஷி நாளடைவில் தன் அண்ணனை தீர்த்து கட்ட முடிவு செய்தார் இதற்கு இடையே தவறான சகவாசங்கள் எல்லாம் பழகிய ரிஷி ஒரு சில ரவுடிகளுடன் பழக்கம் வைத்தார்...
அதன் மூலம் பாம் வைக்கும் மாரியுடன் பழக்கம் வந்தது அப்படி ஒரு நாள் அருணாச்சலம் சாரதாவையும் பிள்ளைகளையும் பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் தனியாக காரை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.. அந்த சமயம் பார்த்து காருக்குள் பாம் வைத்திருக்க அது அறியாத அருணாச்சலம் வாகனத்தை செலுத்தி வந்தார் ...
அப்பொழுது பாம் வெடிக்க துவங்க கார் நிலைதடுமாறி மலையடிவாரத்தில் விழ இவர் காருக்குள் இருந்து வெளியே குதிக்கவும் சரியாக இருந்தது... அதனால் உயிர் மட்டும் தப்பித்தார் ஆனால் எதற்கும் உதவாதது போல ஆகிவிட்டார்... அண்ணனை முடக்கினால் தொழில் தன் கைக்குள் வரும் என எண்ணியவர் இந்த வேலையை செய்ய அவர் எண்ணியது போல ரிஷியின் கையில் மீண்டும் தொழில் வந்தது...
பிறகு ஆதி வளர்ந்து ஆதி தொழிலை தன் கையில் எடுக்கவும் ரிஷிக்கு மீண்டும் பிரச்சனை துவங்கியது...ஆள் இல்லாத போது மட்டும் ரிஷியை குலசேகரி உபயோகிப்பது அவருக்கு பிடிக்கவில்லை... ஆதியும் அவரை கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே தான் இருந்தான்..
ஆனால் அவன் சித்தப்பா என்ற மரியாதை அவனுக்கு ஏராளமாக இருந்தது.. அதனால் அவர் என்ன கூறினாலும் சரி என்று கூறிவிடுவான் மேற்கொண்டு எதுவும் பேச மாட்டான் அதனால் இத்தனை காலம் தப்பித்து வந்தார்...
இதற்கிடையே ஆத்ரேயன் வரவு அவருக்கு குடைச்சல் கொடுக்க துவங்கியது... ஆம் ஆத்ரேயன் ஆதியை சீண்டி விட ஆதி தொழிலில் நடக்கும் நுணுக்கமான விஷயத்தை எல்லாம் நோண்ட துவங்கி விட்டான் அது மீண்டும் ரிஷியை தாக்கியது...
தந்தையைப் போல அல்லாமல் இவன் தன்னை கண்டு கொள்ளாமல் இருப்பதால் அவர் இவனை விட்டு வைக்க தீர்மானித்து இருந்தார்.. ஆனால் இவன் எல்லாம் நோண்ட துவங்கவும் இவருக்கு எரிச்சல் ஆகிவிட்டது இதற்கெல்லாம் காரணம் இவன்தானே என என்ன துவங்கி விட்டார் மேலும் ஆத்ரேயனின் பேச்சு சுத்தமாக பிடிக்கவில்லை...
மேலும் ஆதியின் ஆட்டம் ஆத்ரேயன் வந்ததும் கூடிவிட மேலும் இவர்களெல்லாம் இணைந்து விட்டால் தன்னை வெளியே துரத்தி விடுவார்களோ என்ற எண்ணமும் அவருக்கு வந்தது அதிலும் ஆத்ரேயன் அவரை சீண்டி கொண்டே இருக்க அவனுக்கு கட்டம் கட்ட முடிவு கட்டினார்...
அவரது பிளான் படி ஆத்ரேயன் உபயோகிக்கும் இரண்டு காரிலும் பாம் வைக்க சொல்ல அவனும் பாம் வைத்தான்... இவர்களெல்லாம் எண்ணிக் கொண்டிருப்பது ஆத்ரேயனை கொலை செய்ய திட்டமிட்டார்கள் தப்பித்தவறி சாரதா மாட்டிக் கொண்டார் என்று தான்...
ஆனால் உண்மையில் அவர் கொலை செய்ய தீர்மானித்தது மூன்று பெயரை ஆம் முதலில் சாரதாவை தான் கொலை செய்ய திட்டமிட்டார்... சாரதா இறந்துவிட்டால் ஆத்ரேயனின் கோபம் ஆதியின் மீது வந்துவிடும் பிறகு ஆதியையும் தீர்த்து விட்டால் அந்தப் பழி ஆத்ரேயனின் மீது வந்துவிடும் பிறகு ஆத்ரேயனையும் தீர்த்து கட்டி விட வேண்டியது தான் என எண்ணினார்...
ஏனெனில் அந்த சொத்துக்களை ஆண்டு அனுபவிக்கும் உரிமை தனக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது...எந்த இடத்தில் அவரை டம்மியாக உபயோகிறார்களோ அங்கு தனது சாம்ராஜ்யத்தை நிறுவ வேண்டும் என்று நிறுவினார்.. அது அவரை சமநிலை தவற வைத்துவிட்டது...
ஒருவன் இறந்து ஒருவன் போனாலும் அருணாச்சலத்தின் பிள்ளைகள் இருவரும் ஆதலால் சொத்துக்கள் எப்படி இருந்தாலும் அருணாச்சலத்தின் பங்கு அவருக்கு பின் அவரது மகன்களுக்கு செல்லும் அப்படி செல்லக்கூடாது தன்னை அடிமையாக நினைக்கும் இவர்களுக்கு எதுவுமே செல்லக்கூடாது நான் தான் ராஜாவாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ரிஷி அருணாச்சலத்தின் வாரிசுகளான இருவரையும் போட்டுத் தள்ள முடிவு செய்தார்...
சாரதா அம்மாவின் மீது கை வைத்தால் ஆத்ரேயனுக்கு கோபம் வரும் அப்பொழுது ஆதியின் பக்கம் அவன் திரும்புவான் ஆதியை தீர்த்து கட்டினால் போலீஸின் பார்வை ஆத்ரேயனின் பக்கம் திரும்பும் வைதேகி முதல் குலசேகரி வரை வந்து ஆத்ரேயனுக்கு எதிராக சாட்சி சொல்வர்... அதுவரை அவனை விட்டு வைக்காமல் பிரச்சனை நடந்து ஒரு இரண்டு மூன்று நாட்களுக்குள் அவனை தீர்த்து கட்டி விட வேண்டும் என்றுதான் எண்ணினார்..
அதன்படி எல்லாம் பக்காவாக செய்து கொண்டிருக்க ஆனால் ஒவ்வொருவராக உயிர்த்தப்பவும் இவர் கொலை செய்ய எண்ணிய அனைவரும் தப்பி பிழைத்தனர் அது யார் செய்த மாயமோ தெரியவில்லை ஒருவர் கூட அதில் பலியாகவில்லை....
கடைசியில் எவனாவது இறந்து இருப்பான் என எண்ணியிருக்க இவனும் உயிரோடு இதோ அவரது கண்முன்னில் நின்று கொண்டிருக்க,"என்ன அடுத்ததா யாரை போட்டு தள்ளலாமுன்னு பார்த்துட்டு இருக்கியா??" என்று கேட்டான்... ஆத்ரேயன்..
"என்ன சொல்ற நான் யாரு போட்டு தள்ளினேன் நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியல???" என்று மாட்டிக்கொள்ள போகிறோம் என எண்ணி அவர் மாற்றி கூறினார்...
"அப்போ உனக்கு ஒன்னும் தெரியாது யாரு கிட்ட இந்த கதை எல்லாம் பேசிட்டு இருக்க நீ இவன்கிட்ட பேசினது எல்லாம் ரெக்கார்ட் என் கையில இருக்கு அதனால எதுவுமே தெரியாது நான் தூங்கிட்டு இருந்தேன் இப்படி எல்லாம் நடந்துச்சா அப்படியெல்லாம் கம்பி கட்டுற கதை எல்லாம் கட்டிட்டு இருந்த என்ன நடக்கும்னா" என்று கூறிய ஆத்ரேயன் நொடிப்பொழுதும் யோசிக்காமல் அவரது முகத்தில் ஓங்கி குத்து விட்டிருந்தான் ...
"யார் மேல டா கைய வெச்ச??? டேய் ஆமாம் டா நான் தான் டா எல்லாமே பண்ணினேன் இப்போ என்ன பண்ண போற??? இப்போ நான் நினைச்சா கூட உன்னை உள்ள தள்ள முடியும் பாக்குறியா??? நீதான் ஆதியை ஆள் வச்சு இப்படி செய்தேன்னு உன் மேல சந்தேகம்னு காலையிலேயே கம்ப்ளைன்ட் பண்ணிட்டோம் புரியுதா இப்ப நீதான் பண்ணினேன்னு நான் கூப்பிட்டு சொன்னாலும் சரி எனக்கு என்னை ஆனாலும் சரி இந்நேரம் போலீஸ் வந்து உன்னை தூக்கிட்டு போவாங்க பாக்குறியா" என்று கேட்டான்..
"ஓ அப்படியா??? அதையும் பாக்கலாமே!!! இப்போவே கூப்பிட்டு சொல்லு.. ஏண்டா அறிவே இல்லாம அடுத்தவனை வைத்து வேலையை வாங்கிட்டு நாசுக்கா ஒண்ணுமே தெரியாத மாதிரி நல்லவன் மாதிரி உக்காந்துட்டு இருக்க உனக்கே இந்த அளவுக்கு இருந்தா எனக்கு இருக்காதா???" என்று கூறியவன் தனது அப்பா முதல் தான் வரை பணத்துக்காக கொலை செய்ய முயன்ற ரிஷியை சும்மா விட மனம் இல்லை அதனால் ரிஷி நோகும் அளவுக்கு அவரை புரட்டி எடுத்தான்.. இனி உயிர் தங்காது என்ற நிலையில் அங்கு இருட்டாக இருக்கும் அறையின் லைட்டை இட சொன்னான்...
அங்கு லைட் ஆன் செய்ததும் இரு போலீசார் மற்றும் மேலும் அவனது ஆட்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர்... அவர்கள் கையில் கேமரா இருக்க பேஸ்புக்கில் லைவாக இங்கு பேசிக் கொண்டிருப்பதை வீடியோவாக இட்டு கொண்டிருந்தான் ஆத்ரேயன்..
அதைக் கண்ட ரிஷி அதிர்ந்து அவனைப் பார்க்க," என்ன நான் உன்னை அடிப்பேன் நீ கீழ விழுவ இல்லையில்லை இனி அடிச்சா நீ செத்துடுவ உன் மேல இருக்குற கோபத்துல உன்னை கொன்றாலும் கொன்று விடுவேன்...
ஆனா பாரு எனக்கு வாழனும் எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு அவங்க கூட வாழனும்... அதனால உன்னை கொல்ல எல்லாம் எனக்கு மனசு இல்ல ஆனா இத்தனை பண்ணினதுக்கு கொஞ்சமாவது அடிக்காம இருந்தா எப்படி அதனாலதான் கொஞ்சமா ரத்தம் பார்க்கிற அளவுக்கு அடிச்சேன் நீயும் வீராப்பு பேசி உண்மையை உளறிட்ட அவ்வளவுதான்" என்று கூறியவன் அவனைப் பார்த்து,
"எல்லாம் பணம் படும் பாடு அதானே பணத்துக்காக தானே இதெல்லாம் பண்ணிட்டு இருக்க குலம், கோத்திரம் என்று பேசிட்டு இருக்குற உன் அம்மா இதையெல்லாம் பார்த்தாங்கன்னா இப்போ உன் குடும்ப மானம் பறக்காதா????"என்று கூறினான் .. இதையெல்லாம் வசுந்தரா உட்பட குலசேகரி வரை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்...ஆம் அபியை அழைத்த அடுத்த நொடி வசு அழைக்க அவளிடம் விசயத்தை கூறியவன் இது போல தான் செய்வதாக கூற அவள் உடனே வைதேகியிடம் கூறி விட்டு குலசேகரியை காண வீட்டுக்கு சென்றவள் போனை ஆன் செய்து காட்டினாள்...
இதை எல்லாம் பார்த்து யார் அதிர்ந்தார்களோ இல்லையோ குலசேகரி அதிர்ந்தார்... வீட்டுக்குள்ளே இருக்கும் பிரச்சனை வெளியே தெரிந்தால் குடும்பம் என்ன ஆகும் என நினைக்கும் குலசேகரிக்கு தன்மகன் இப்படி ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறான் என்பதே அதிர்ச்சியாக இருந்தது..
ரிஷி இதுபோல செய்திருப்பார் என அவரால் நினைக்கக்கூட முடியவில்லை அவர் வாயாலேயே அவர் உளறி கொட்டி விட்டாரே இத்தனை வருடமாக ஜென்ம பகையை மனதுக்குள் வைத்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல அனைவரிடமும் சிரித்து பேசி கொண்டிருக்கிறாரே இவனை பெற்ற வயிறு பற்றி எரிகிறதே??? என எண்ணினார்...
ஒரு வகையில் குலசேகரியின் மீதும் தவறு இருக்கிறது தான் பெற்ற பிள்ளைகளின் மனதையும் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கூட அறிந்து கொள்ளாமல்,அவர்களது ஆசைக்கும் மதிப்பு கொடுக்காமல் அவர் என்ன நினைக்கிறாரோ அது மட்டுமே நடக்க வேண்டும் அவர் என்ன செய்ய நினைக்கிறாரோ அது மட்டுமே நடக்க வேண்டும் பிள்ளைகளின் மனமோ பிள்ளைகளின் ஏக்கங்களோ பிள்ளைகளின் தவிப்போ பிள்ளைகளின் உணர்வு எதுவுமே அங்கு எடுபடவில்லை அதனால் தான் அவர் பெற்ற இரு பிள்ளைகளும் இரு வேறு திசைகளில் இருந்தனர்...
குடும்ப கவுரவம் என்று கூறிக் கொண்டிருந்த குலசேகரியின் குடும்ப மானம் இப்பொழுது காற்றில் பறந்தது ரிஷி போலீசாரால் கைது செய்யப்பட்டார்... இந்த செய்தி எல்லா செய்திகளிலும், ஊடகத்திலும் வந்தது மிகுந்த அவமானம் அடைந்த குலசேகரி அறையே கதி என முடங்கிப் போனார்....
இதைவிட பெரிய தண்டனை குலசேகரிக்கு இருக்காது.. ஆத்ரேயன் ரிஷியை கொன்று இருந்தால் குலசேகரி அதை மூடி புதைக்கவே பார்ப்பார் இது போன்ற விஷயம் நடக்காதது போலவே நடிப்பார்...அவருக்கு முக்கியம் அவருடைய குடும்ப பெருமை அதற்கு வேண்டி அவர் எந்த அளவுக்கும் செல்வார்... அதுதான் அவருடைய இயல்பு அப்படி இருக்க இதை ஊரார் மத்தியில் போட்டு உடைக்கவும் ஆடி விட்டார்... அதனால் மட்டும் தான் ரிஷியை ஆத்ரேயன் போலீசில் பிடித்துக் கொடுத்தான்..
எந்த குடும்ப பெருமைக்காக தன் தாய்க்கு உரிய மரியாதையை கொடுக்காமல் இந்த அளவுக்கு ஆக்கினார்களோ அவர்களது குடும்பம் மானம் எப்படி இருக்கிறது என ஊரார் அறியட்டும் என வேண்டுமென்றேதான் உலகம் முழுவதும் பரப்பினான் ஆத்ரேயன்... அதில் அவனது மனம் லேசாக சாந்தி பெற்றது...
ஆனால் வீட்டில் வசு குலசேகரியை பார்த்து ,"என்ன இப்படி உட்கார்ந்தா எப்படி??? இப்ப என்ன சொல்றீங்க?? மத்தவங்களை எல்லாம் பெருசா மட்டம் தட்டுவீங்களே இப்போ ஒன்னும் இல்ல மூணு கொலை பண்ண பார்த்து இருக்கார் உங்க மகன்..
என்ன சொல்றீங்க உங்க குல பெருமை இப்ப என்ன ஆச்சு??? தெருவுல நாறிட்டு இருக்கு???நீங்க பெத்த ஒரு பிள்ளைல இருந்து உங்க பேரன் வரை கொல்ல முயற்சி பண்ணி இருக்கார்??
இவ்வளவுதான் மனுசனோட வாழ்க்கை உங்களுக்கு எப்படி உங்க வைராக்கியமும் நீங்க நினைச்சது நடக்கணுமோ அதே மாதிரி தானே மத்தவங்களுக்கும் இருக்கும் ரிஷி மேல கூட நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்..
அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நீங்க கொடுத்திருந்தீங்கன்னா அவரு வந்து இந்த அளவுக்கு ஆகி இருக்க மாட்டார்...
அதே மாதிரி தான் உங்க மூத்த மகனுக்கும் அவருடைய மனசை நீங்கள் புரிந்து நடந்து கொண்டிருந்தீங்கனா இந்த மாதிரி ஒரு பிரச்சனை வந்திருக்கவே வந்து இருக்காது...உங்களுக்கு தான் வெறி ஆச்சே நீங்க எப்படி இதை எல்லாம் யோசிப்பிங்க??
இப்போ உங்களால எதுவுமே செய்ய முடியாது நீங்க நினைச்சாலும் எதுவும் மாறப் போறதும் கிடையாது குடும்பப் பெருமையை கட்டி காப்பாத்தணும்னு சொன்னிங்களே அந்த குடும்ப பெருமை காத்துல பறக்குது"
என்று செருப்பால் அடித்தது போல வசு கூறினாள்...அதைக் கேட்டதும் பதில் ஏதும் கூறாமல் சிலை போல அமர்ந்திருந்தார் குலசேகரி ..அவரால் என்ன பேசி விட முடியும்??? வாயே திறக்கவில்லை...
