அத்தியாயம் 22
அபி ஆத்ரேயனின் அறையில் அமர்ந்து இருந்தாள்...அவளுக்கு புதுவித அனுபவமாக இருந்தது மனதுக்குள் ஏதோ சிலிர்ப்பது போல ஒரு உணர்வு அவளை ஆட்கொண்டது...
அது ஏன் தெரியவில்லை இந்த அறையை பலமுறை அவள் கண்டிருக்கிறாள்...அவனுடன் பகிர்ந்தும் இருக்கிறாள் அப்பொழுது எல்லாம் இந்த இடம் அவளுக்கு இது போன்ற இதத்தை கொடுத்தது இல்லை...
ஆனால் இன்று அவளுக்கு கிடைக்க இருந்தாலும் அருகில் அவனுடன் அமர்ந்து பேச அவன் இல்லையே என ஏங்கிக் கொண்டிருந்தாள்...
இது என்ன புதுவிதமான அனுபவம் அவளுக்கு புரியவில்லை இருந்தாலும் அந்த அனுபவம் அவளுக்கு இனிமையை கொடுத்தது... இப்பொழுதும் கட்டியணைத்து இதழ் ஒற்றி அவனிடம் பேசிட வில்லை தான் இருந்தாலும் அவளுக்கு அவனை ஏனோ பிடித்து இருக்கிறது...
இப்பொழுதுதான் அவனது செய்கை எல்லாம் கூர்ந்து கவனிக்கிறாளோ என்னவோ ஆனால் வாய்விட்டு இருவரும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை.. அவனுக்காக அவள் காத்திருக்கிறாள் கூடவே சற்று முன் நடந்த சம்பவமும் அவளுக்கு ஞாபகம் வந்தது..
சாரதா அம்மாவுக்கு எதுவும் இல்லை என்று கூறி மருத்துவர் இன்று தான் டிஸ்சார்ஜ் வழங்கினார்... ஆத்ரேயன், ஆதியின் வீட்டுக்கு சென்று மிரட்டி விட்டு நேராக மருத்துவமனைக்கு தான் வந்தான்...
அதற்குள் சாரதா அம்மாவுக்கு இரண்டு நாட்கள் கழித்து டிஸ்சார்ஜ் செய்வதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர்... இந்த இரு நாட்களும் சிவபிரகாசம் குடும்பம் மருத்துவமனையில் சாரதா அம்மா உடனே இருந்தது அவன் மட்டும் இடையிடையே வந்து பார்த்து விட்டு சென்றான்...
இவர்கள் இருக்கும் தைரியத்தில் அவன் அவனது வேலையை பார்க்க சென்றான்.. அவனது வேலை என்றால் யார் இந்த வேலையை செய்தது இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது அவனுக்கு தெரிய வேண்டும் அதனால் அவன் செல்ல சிவப்பிரகாசம் குடும்பம் முழுவதும் சாரதா அம்மாவுடன் இருக்க இதோ இன்று அவரை ஆத்ரேயன் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து செல்ல முனைய இவர்களும் கூடவே சென்றனர் கூடவே அபியும் சென்றிருந்தாள்...
வீட்டிற்கு வந்து சாரதா அம்மாவுக்கு உணவு கொடுத்து இவர்களை எல்லாம் உண்ண வைத்து ஆத்ரேயனும் உணவு உண்டான்...
அந்த தருணங்களில் ஒன்றில் கூட அவனது பார்வை அவளை தீண்டவில்லை... அவள் தான் ஆயிரம் முறையாவது அவனை பார்த்திருப்பாள் அவன் தான் கண்டு கொள்ளவே இல்லை இல்லை அவளது பார்வையை தவிர்க்கிறானா என புரியவில்லை அது அவனுக்கே வெளிச்சம்...
அனைவரும் உணவருந்திய பின் சிவப்பிரகாசம் அவனிடம் ஏதோ கூற வாய் எடுத்தார்.. அதற்குள் அவன் முந்திக்கொண்டு," ரொம்ப நன்றி சார் நீங்க உதவி செஞ்சதுக்கு ரொம்ப நன்றி.. இனி என்னுடைய அம்மாவை நான் பார்த்துக்கிறேன்.. நானில்லாத சமயத்துல வீட்ல இருக்கவங்க பார்த்துப்பாங்க ரொம்ப நன்றி நீங்க ரொம்ப சிரமப்பட்டுட்டீங்க நீங்க கிளம்புங்க இனி நான் பாத்துக்குறேன்" என்று அவர்களை அனுப்புவதிலேயே குறியாக இருந்தான்...
அது ஏன் என புரியவில்லை இருந்தாலும் சிவப்பிரகாசம் தன் மரியாதையை காட்டும் விதமாக,"உங்களை ஸ்ரீ லட்சுமி விஷயத்துல தப்பா நினைச்சுட்டேன் மன்னிச்சிடுங்க" என்று கூறினார்...
அதைக் கேட்ட அவன்,"சரிங்க சார்" என்று மட்டும் பதில் அளித்தான்... வேறு எதுவும் கூறவில்லை அவன் அமைதியாக இருப்பதை பார்த்த சிவப்பிரகாசம் மேற்கொண்டு இனி இங்கு நிற்க வேண்டாம் எனக் கருதி கிளம்ப எத்தனித்தார்...
இங்கு இவளுக்குத்தான் மனப்போராட்டமாக இருந்தது.. கைகளை பிசைந்து கொண்டு இருந்தாள்... அவன் பேசி விட மாட்டானா என அவள் ஏங்கிக் கொண்டிருந்தாள் அவனும் அதையேதான் எண்ணிக் கொண்டிருந்தான் போலும் அதனால்தான் என்னவோ அவர்களை அனுப்பி வைப்பதிலேயே குறியாக இருந்தான்...அவள் இனியும் இது போல நின்று கொண்டிருந்தாள் அவளை அவனே விட மாட்டான் என அவன் அறிவான்...
அதனாலேயே சிவப்பிரகாசத்தை அனுப்புவதில் குறியாக இருந்தான் அவன் அவளுடைய நலனை பார்ப்பதால் தான் அவன் தன் மனதில் இருக்கும் ஆசையை ஒதுக்கி வைத்துவிட்டு அவளுடைய விருப்பத்திற்கு இணைந்து போக எண்ணினான் அதனால் பார்வையாலும் அவளை தொட்டு தீண்ட அவன் முனையவில்லை...
இனி ஒரு தவறு அவன் பாகத்தில் இருந்து வரக்கூடாது என எண்ணியிருந்தான் அதற்கு காரணமும் உண்டு வசுந்தரா அபிநந்தனாவை பார்த்துவிட்டு வந்ததும் ஆத்ரேயனை தான் அழைத்திருந்தாள்...
அவள் கேட்ட விஷயம் இவனை அசைத்தது என்று கூறலாம்,"காதலிச்ச பொண்ணு இப்படி கடத்தி தான் கல்யாணம் செய்யணும்னு இல்ல நீ உன்னுடைய மனசை எவ்வளவு தூரம் பார்த்தாயோ அவளுடைய மனசையும் பார்த்திருந்திருக்கலாம் அவளால இப்ப யோசிக்கக்கூட முடியல நீ அவளை காதலிச்ச அப்படின்னு அவன் நம்ப கூட மாட்டேங்குற அப்படி ஒரு நம்பிக்கையின்மையை நீ அவளுக்கு கொடுத்து இருக்க?? இப்படி அவளை உன் கைக்குள்ள வச்சி இருந்து நீ என்ன செய்யப் போற அவளும் உன்னை போல உயிரும் உணர்வும் உள்ள மனுஷி தான் ஏதோ தவறு செய்திருந்தாலும் நீ அவகிட்ட உன்னுடைய மனசை பகிர்ந்து இருக்கியா அதுவும் இல்லை அப்புறம் எப்படி அவ உன்னை புரிஞ்சுக்குவா???
அவளுக்கு புரிந்து கொள்ள நீ அவகாசம் கொடு தயவு செஞ்சு நீ அவளை தொல்லை செய்யாதே நீ உண்மையாலுமே அவளை நேசிக்கிறதா இருந்தால் இப்பவும் நீ அவளை நினைத்து இருக்கிறதா இருந்தா அவளை தேடி நீ போகாதே அவளாகவே உன்னை தேடி வருவா" என்று கூறி விட்டாள்..
அது அவனுக்கு என்னவோ போல ஆகிவிட்டது.. வசுந்தரா கூறுவதை எண்ணிப் பார்த்தவன் அன்று இரவு உறங்காமல் தவித்தான்.. பிறகு அவள் கூறுவது போல அபியாக உணர்ந்து வரும் வேளையில் தன்னிடம் பேச துடிக்கும் தருணத்தில் தன் மனதை வெளிப்படுத்தலாம் அதுவரை பொறுமையாக இருப்போம் அவளை தொல்லை செய்ய வேண்டாம் என முடிவெடுத்து விட்டான்...
அதனால் அவன் அவளிடம் இருந்து அகல எண்ணினான் அவள் அருகே சென்றால் மீண்டும் தான் பழையபடி அவளை பிடித்து வைத்துக் கொள்வோமோ என்ற பயம் அவனை வாட்டி வதைத்தது...அதுவோ அபியை வேறு விதத்தில் சிந்திக்க வைத்தது...
பிறகு சிவப்பிரகாசம் ,"சரி ஆத்ரேயன் நாங்க கிளம்பறோம் நீங்க ஃப்ரீயா இருக்கும்பொழுது வீட்டுக்கு ஒரு நாள் கண்டிப்பாக வரணும் நாம சமாதானமா பேசுவோம் இப்போ இருக்கிற சூழ்நிலையில் என் மனசுல இருக்குறத பத்தி பேச நான் விருப்பப்படவில்லை அம்மாவுக்கு சரியானதும் அம்மாவையும் அழைச்சிட்டு வாங்க" என்று கூறினார்...
"சரிங்க சார் நான் என்னுடைய பிரீ டைம் பார்த்து ஒரு நாள் வரேன்" என்று கூறினான்... இவளோ "மரமண்டைங்க மாதிரி ரெண்டு பேரும் ஃபார்முலா பேசிட்டு இருக்காங்க என்னைப் பற்றி இரண்டு பேரும் நினைச்சு பார்த்தார்களா என்ன??" என இருவரையும் திட்டிக்கொண்டு இருந்தாள்...
மைதிலி மற்றும் ஸ்ரீ லட்சுமி இருவரும் அவனை பார்த்து நிற்க,"சரிங்க தம்பி நாங்க கிளம்புறோம்" என்று மைதிலி கூற, ஸ்ரீ லட்சுமி அவன் அருகே தயங்கிக் கொண்டே வந்து ,"என்னை மன்னிச்சிடுங்க நான் உங்களை வில்லன் ரேஞ்சுக்கு ட்ரீட் பண்ணிட்டேன் நீங்க என் அக்காவுக்கு பண்ணினதுனால தான் நான் அப்படியெல்லாம் செஞ்சேன்" என்று குழந்தை முகம் மாறாமல் அவள் கூறவும், அதை பார்த்து சிரித்தவனோ அபிநந்தனாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு," நான் நல்லவன் இல்லம்மா நீ நினைக்கிற மாதிரி நான் வில்லன் தான் எனக்கு ரொம்ப நல்லதெல்லாம் செய்யத் தெரியாது அதனால தான் இப்படி செய்துவிட்டேன்" என்று கூறினான்...செய்ததை நிராகரிக்கவும் இல்லை அதை ஏற்றுக் கொள்ளவும் இல்லை செய்தேன் என ஒப்புக்கொண்டான்..
இதைப் பேசி இப்பொழுதுள்ள சூழ்நிலையை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என எண்ணிய சிவப்பிரகாசம் தற்போது தன் மனதை மாற்றி வரும் நேரத்தில் இந்த மாதிரி பேச்சுகளை தவிர்ப்போம் என எண்ணி அங்கிருந்து கிளம்பினார்...
எல்லாரும் முன்னே செல்ல இவள் மட்டும் அங்கேயே நின்று கொண்டிருந்தாள் இவளுக்கு உரிமையாக அங்கு இருக்கவும் முடியவில்லை செல்லவும் முடியவில்லை தத்தளித்துக் கொண்டிருந்தாள்... அதையெல்லாம் கவனித்தாலும் அவன் அவர்களை வழி அனுப்ப வெளியே செல்ல,"ஒரு நிமிஷம்" என்று கூறினாள்...
அவனோ அவளை திரும்பிப் பார்த்து ,"என்ன??" என கேட்டான்..
"நான் இங்கேயே இருக்கட்டுமா போகட்டுமா???" என்று அவள் கேட்கவும்
அவன் அவளது முகத்தை பார்த்து மார்பில் கைகளை கட்டி ,"நான் உன்னை போகவும் சொல்லல இருக்கவும் சொல்ல மாட்டேன் அது உன்னுடைய விருப்பம் நான் ஒரு தடவை உன்னை கூட்டிட்டு வரும் பொழுது உன்னுடைய விருப்பமில்லாமல் கூட்டிட்டு வந்தேன்.. நீயா விருப்பப்பட்டு வீட்டை விட்டு வெளியே போன?? இனி உன்னுடைய இஷ்டம் நானா தலையிட மாட்டேன்" என்று கூறியவன் அங்கிருந்து வெளியேறி விட்டான்..
அதைக்கேட்ட அவளுக்கு அவன் கூறிய விஷயம் புரிந்தது எல்லாம் என் விருப்பப்படி என்று அவன் நினைக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள்.. அப்பொழுது என் விருப்பம் என்ன?? பெற்றோருடன் செல்வதா?? இல்லை இங்கே இருப்பதா??? என எண்ணியவள் அங்கேயே இருக்க முடிவு செய்தாள்...
அவளுக்கு இப்பொழுது அவனை பிடித்து இருக்கிறது தெளிவாக அவனை பற்றி தெரியும்.. ஒவ்வொரு நொடியும் அவன் அவளது மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவள் அறிந்து கொண்டே தான் இருக்கிறாள்...
மேலும் அவன் தனக்கு செய்த தவறை எதனால் செய்தான் என்பதையும் அறிந்து கொண்ட அவளுக்கு அந்த ஒரு பகுதியை மட்டும் விலக்கி விட்டு அவனை புரிந்து கொள்ள முயற்சி செய்தாள் அன்று தவறாக தெரிந்தது இன்று அவளுக்கு தவறாக படவில்லை அது ஏன் என அவளுக்கு புரியவில்லை...
அவன் அவள் இங்கு இருக்கிறாளா இல்லையா என்பதை கூட அறிந்து கொள்ள விருப்பம் இல்லாமல் வெளியே சென்று விட்டான்... அவனுக்கு பல விஷயங்கள் தெரிய வேண்டும் அதனால் வெளியே கிளம்பி விட அவளோ அவனை எண்ணி அவனது அறையில் அமர்ந்து கொண்டிருந்தாள்...
பாம் வைத்தவனின் போன் அலறிக்கொண்டே இருந்தது... அழைப்பது ரிஷி தான் போன் இருப்பதோ ஆத்ரேயனின் கைகளில் அந்த பாம் வைத்தவனின் முகம் பீதியில் உறைந்தது...
இனி அவனுக்கு அடி வாங்க உடலில் தெம்பு இல்லை என்று கூறலாம்.. இனி அடித்தால் அவன் செத்து விடுவான் என்பதை அவனே உணர்ந்து கொண்டிருந்தான்...
ஆத்ரேயன் எப்போது வேண்டுமானாலும் அவனை கை நீட்டலாம் என்ற நிலையில் இருந்தவன் ,"போனை ஆன் பண்ணுவேன் நீ பேசணும் பாம் வெடிச்சிருச்சு அதுல ஆத்ரேயன் இறந்துட்டான்னு நான் சொல்ற இடத்துக்கு நீங்க வாங்க அப்படின்னு அவனை வர வைக்கணும் புரியுதா??? நான் சொல்றத ஏதாவது மாத்தி பேசுன அவனைக் காப்பாத்த போய் நீ செத்துப் போயிடுவ அதை ஞாபகத்துல வெச்சிட்டு பேசு!!" என்றான் ஆத்ரேயன்...
"சரிங்க சார் தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க சார் இதுக்கு மேல என்னால அடி வாங்க முடியாது" என்று கூறினான் அவன்..
"அது நீ நடந்து கொள்வதை பொறுத்திருக்கு" என்று கூறி போனை ஆன் செய்தான் அதில் ரிஷி தான் பேசினார்...
"டேய் என்னடா ஆச்சு சொன்னத செஞ்சிட்டியா அந்த ஆத்ரேயன் செத்துட்டானா" என்று கேட்டார்..
"சார் நீங்க தானே சொல்லி இருக்கீங்க அவன் உயிரோட தப்பிக்கவே கூடாதுன்னு அவனுக்கு மட்டும் ரெண்டு டோஸ் அதிகமா வச்சிருந்தேன்.. அவன் கார் பத்திட்டு எரிஞ்சுட்டு இருக்கு இன்னும் அந்த தீ கூட அணையலை... ஆளு க்ளோஸ் ஆயிட்டான் சார்" என்று கூறினான்..
"என்னமோ போடா அப்பன் பிள்ளைகளை சேர்த்து போட்டு தள்ளலாம் என்று நினைத்தேன் அப்பனும் தப்பிச்சுட்டான் இதோ ஒருத்தன் ஹாஸ்பிடல் வந்து படுத்து கிடக்கிறான் இவனையும் போட்டு தள்ளனும் நெனச்சேன் இவன் செத்துடுவான் தானே?? இவன் செத்தே ஆகணும் டா!!!" என்று கூறினார்...
"சார் எப்படி இருந்தாலும் செத்துடுவான் சார் கவலை விடுங்க சார் நான் கேட்ட பணம் என்ன ஆச்சு சார்???"
"டேய் அது தான் கொடுத்துட்டேன்ல???"
"சார் ரெண்டு உயிர் என்று சொன்னிங்க, ஆனால் அந்த ஆத்ரேயனோட அம்மாவும் சேர்ந்து மாட்டிகிட்டாங்களே சார் கொஞ்சம் கூட சேர்த்து குடுங்க சார்...ரொம்ப ரிஸ்க் எடுத்து இருக்கேன் பார்த்து பண்ணுங்க"
"டேய் உனக்கு பணமே கொடுக்கக் கூடாது என்னுடைய அண்ணனிலிருந்து எவனுமே உயிர் போகாமல் தப்பிச்சு வந்துடுறாங்க என்னத்ததான் நீ பாம் வைத்து எல்லோரையும் கொல்றியோ???" என்றார் ரிஷி...
"சார் அவங்க எல்லாம் கீழ குதிச்சு தப்பிச்சதுக்கு நாம என்ன சார் பண்ண முடியும்??? ஆளுங்க மேலயா பாம் வைக்க முடியும் கார்ல தான் வைக்க முடியும் அப்பதானே சந்தேகம் இல்லாம நம்ம தப்பிச்சுக்க முடியும்" என்றான் அவன்..
"அது வேணா உண்மைதான்... ஆனால் யார் தப்பினாலும் அந்த ஆத்ரேயன் மட்டும் சாகனும் டா.." என்று கொந்தளித்து கூறினார் ரிஷி...
"சார் அவன் கரிக்கட்டையா தான் சார் இந்நேரம் இருப்பான் கவலைப்படாதீங்க நீங்க நான் சொன்னா நம்ப மாட்டீங்க இருங்க உங்க மொபைலுக்கு ஒரு வீடியோ அனுப்புறேன் உங்களுக்காக ஸ்பெஷல் ஆஹ் எடுத்தது" என்று ஆத்ரேயன் சைகையில் கூறியதை கிரகித்து அதை ரிஷியிடம் கூறினான் அவன்...
அடுத்த நொடி ரிஷியின் ஃபோனில் ஒரு வீடியோ வந்தது..அதில் ஓடிக்கொண்டிருந்த கார் பற்றி எரிவது போல காட்சி அனுப்பி வைக்கப்பட்டது அதில் அவர் ஆத்ரேயனை எங்கே என தேட அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை...இருந்தாலும் அவனது கார் தான் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டார்... பிறகு வேறொரு கிளிப் அனுப்பி இருந்தான் பாம் வைத்தவன் அதை பார்க்க அதில் ஒருவன் டிரைவர் சீட்டில் அமர்ந்து எரிந்து கொண்டு இருந்தான்.. இரண்டும் வேறு வேறு வீடியோ அதை அவர் கண்டு பிடிக்கவில்லை..அதை கண்ட ரிஷியின் முகம் தெளிந்தது..
அடுத்த நொடி மீண்டும் ரிஷி அழைத்தார் ,"சார் பாத்தீங்களா இப்ப கொஞ்சம் சேர்த்தி பணம் தாங்க சார் நேரிலேயே வந்து தாங்க சார் நான் இங்கே இருக்கேன் இப்போ நான் வெளில வந்தா மாட்டிப்பேன்" என்று இடத்தை கூறினான்..ரிஷி சரி வரேன் என்று பதிலும் அளித்து விட்டார்..
டிவியிலும் ஆத்ரேயனின் கார் விபத்துக்குள்ளானது பற்றி செய்திகள் வர துவங்கின.. அதையெல்லாம் பார்த்து மிகுந்த சந்தோஷத்துடன் இருந்தார் ரிஷி.. அந்த சந்தோஷத்துடன் அந்த பாம் வைத்தவன் கூறிய இடத்திற்கு சென்றார்...
அதேநேரம் ரிஷியைப் போல டிவியில் செய்தியிலும் சமூக வலைதளத்திலும் பரவிக் கொண்டிருந்த ஆத்ரேயனின் கார் பற்றி எரிந்த சம்பவம் அறிந்து அபிநந்தனா முதல் வசுந்தரா வரை அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர் ..
அதிலும் அபிநந்தனாவை பற்றி கேட்கவே வேண்டாம் அவள் நிலை தடுமாறி இருந்தாள்... அவளுக்கு இந்த நொடி அவனை பார்த்தே ஆக வேண்டும் என்ற வெறி வந்தது..
அவள் கண்கள் குளமாகியது அவனுக்கு ஒன்றும் ஆகி இருக்கக் கூடாது என அவளது மனம் ஏங்கியது..ஒரு நொடியில் பதட்டம் அடைந்தாள்...
அவனது எண்ணுக்கு அழைத்தாள்...அவன் எடுக்க வேண்டும் அவனும் அந்த காரினுள் இருந்திருப்பானோ என பயந்து போனவள் மீண்டும் மீண்டும் தொலைக்காட்சி செய்தியை பார்த்தாள்..
அதில் ஒன்றும் ஆத்ரேயனின் கார் என்று மட்டும் தான் குறிப்பிட்டு இருக்க ஆத்ரேயனை பற்றி எந்த விபரமும் தெரியவில்லை... அவன் எப்படி இருக்கிறான் என்பது அறிய வேகமாக அவனது எண்ணுக்கு அழைத்தாள்...
வீட்டிலிருந்து அழைப்பு வருவதை பார்த்த அவன் ,"ஹலோ" என்று அவனது குரல் அவளது செவிக்குள் எட்டவும் ,"நீங்க நல்லா இருக்கீங்க தானே??? உங்களுக்கு எதுவும் இல்லையே கார் எரிஞ்சிருச்சுன்னு சொன்னாங்க?? எங்கே இருக்கீங்க எனக்கு உங்களை பார்க்கணும்" என்று பதட்டமாக கூறினாள்...
அவளது குரலிலேயே அவரது பதட்டம் அவனுக்கு புரிபட ,"எனக்கு எதுவும் இல்ல கார் எரிந்தது உண்மைதான் அதை பத்தின விசாரணையில் தான் நான் இருக்கேன் நான் நல்லா இருக்கேன் எனக்கு எதுவும் இல்லை" என்று கூறினான்..
" நிஜமா நீங்க நல்லா இருக்கீங்க தானே உங்களுக்கு எதுவும் இல்லையே எனக்கு உங்களை பாக்கணும் போல இருக்கு??? பிளீஸ் வாங்க உங்களை நேரில் பார்க்கணும்" என்று உடைந்த குரலில் கூறினாள்..
அதை கேட்ட அவனுக்கு தனக்காக அழ ஒருத்தி இருக்கிறாள் என்ற எண்ணமே அவனுக்கு மகிழ்ச்சியை கொடுக்க,"நான் எங்கேயும் போயிடல உன் கண்ணு முன்னாடி வருவேன்" என்று கூறினான் அந்த குரல் கேட்டதும் தான் அவளுக்கு நிம்மதி வந்தது...
"நீங்க சீக்கிரம் வாங்க என் கண்ணு முன்னாடி வாங்க"என்றாள்..
"எதுக்கு??" என்று அவளது பதட்டத்தை உணர்ந்து கொண்டே கேட்டான் ஆத்ரேயன்..
"எனக்கு உங்களை பார்க்கணும்,உங்க கூட சண்டை போடணும் உங்க கூட பேசணும்..என் கண்ணீரை துடைக்க நீங்க வேணும் அதுக்கு தான் வர சொல்றேன் வாங்க"என்று அவள் மனதை அவளுக்கே தெரியாமல் அவனிடம் கூறி கொண்டிருக்க அதுவும் முதன் முறையாக அவளாக அவள் மனதை கூறுகிறாள் இதை கேட்டு கொண்டே இருக்க அவனுக்கும் ஆசை தான் இருந்தாலும் அவன் செய்ய வேண்டிய வேலைகள் இருக்கிறதே..
அதனால் ,"நான் கண்டிப்பா வருவேன் வரும் போது எனக்கும் பேசணும் உன் கண்ணீரை துடைக்கணும்..உன் கூட பேசணும் நான் வரேன் யாரையும் பதட்டப்பட வேண்டாம் என்று சொல்லு அம்மா கிட்ட நான் சீக்கிரம் வந்துருவேன் என்று சொல்லு கூட இருந்து பார்த்துக்கோ" என்று கூறினான்...
அவன் கொடுத்த தைரியத்தில் கண்களை துடைத்து கொண்ட அவளும்,"நான் இருப்பேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்???" என்று அவள் கேட்கவும் ,"நீ இருப்பன்னு எனக்கு நல்லா தெரியும் நீ அப்படியெல்லாம் என்ன விட்டு போக விடமாட்டேன் அதுவும் என்னை விட்டு தூரமாக எல்லாம் உன்னால போக முடியாது நான் உன்னை காதலிச்சது உண்மைனா நீ என்னை காதலிக்க போறதும் உண்மைதான் அதனால பார்த்துக்கோ நான் வந்துடுறேன் வந்து சண்டை போட்டு சமாதானம் ஆவோம்" என்று கூறினான்...
சரி என்று சிரித்த முகத்தோடு போனை வைக்கவும் அவனுக்கும் மெல்லிய புன்னகை உண்டானது...இதோ ரிஷி சம்பவ இடத்திற்கு வந்து விட்டார்...
அந்த இடம் இருட்டாக இருக்க,"டேய் மாரி எங்கடா இருக்க??" என்று கேட்டுக் கொண்டே அந்த இடத்திற்கு வர அங்கு ருத்ரமூர்த்தியாக ஆத்ரேயன் நின்று கொண்டிருந்தான்...
அவனைக் கண்டதும் அதிர்ந்த ரிஷி ,"நீ எப்படி உயிரோட??" என்று கேட்டார்..
" ஏன் நான் செத்துட்டேன்னு நினைச்சியோ கார் தான் எரிந்தது.. நான் எரியலையே?? என்ன!!! எல்லாரையும் கொன்னு போடலாம்னு முடிவு பண்ணிட்டியா??" என்று கேட்கவும் ரிஷியின் முகம் வியர்த்து கொட்டியது...
உண்மையை அவன் கண்டுபிடித்து விட்டான் என்று எண்ணிய அவர் முகம் வெளிறி அங்கிருந்து தப்பிக்கலாம் என்று நினைத்து வெளியே ஓட முனைய அதற்குள் அந்த கதவு அடைக்கப்பட்டு இருந்தது...
ஆத்ரேயனின் கோபவிழிகள் ரிஷியை அச்சுறுத்த ரிஷி நினைத்த அனைத்து காரியங்களும் இப்படி தவிடு பொடி ஆகி விட்டதே என்ற எண்ணமும் அவருக்கு இயலாமல் இல்லை அவர் அப்படியே சமைந்து நின்றார்...
இத்தனை நாள் அவர் போட்ட திட்டங்கள் எல்லாம் தவிடு பொடியாகி இப்பொழுது இவன் முன்னே நிற்க நேர்ந்து விட்டதே நான் குற்றவாளி என அனைவரும் கண்டுபிடித்து விட்டார்களே என எண்ணினார்...
