அத்தியாயம் 21
இரண்டு நாட்களுக்கு பிறகு
வசுந்தராவின் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்தான் ஆதி...ஏதோ ஒரு சிறிய மருத்துவமனையில் இருந்தவனை அட்மிட் செய்த நபர் அழைத்து விசயத்தை கூறவும் வைதேகி மற்றும் அனைவரும் அங்கு விரைந்தனர்... இரவோடு இரவாக அவனை வசுந்தராவின் மருத்துவமனைக்கு அனுமதித்தனர்...
அவனுக்கும் கார் விபத்து ஏற்பட்டு இருக்கிறது...கார் பற்றி எரிகிறது என்று தெரிந்ததுமே இவன் வெளியே குதித்து இருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது..தலை, கால், கை என அடிபட்டு இருந்தாலும் உயிருக்கு எந்த பயமும் இல்லை என மருத்துவர்கள் கூறி விட்டனர்..
அனைவரும் ஒரே பதட்டமாக இருந்தார்கள்..அவனது தலை, கை காலில் கட்டு போட்டு இருக்க அதை பார்க்க யாருக்கும் திராணி இல்லை..அருணாசலம் வாய் விட்டு கதறவில்லை என்றாலும் அவரது கண்கள் கலங்கிய நிலையில் அவர் இருந்தார்...
குலசேகரி உடைந்த நிலையில் காணப்பட்டார் தனக்கு பிறகு ஆதி தான் எல்லாம் என எண்ணி கொண்டு இருக்க அது எல்லாம் தவிடு பொடி ஆகி விட்டதோ????என எண்ணினார்...
வைதேகி அழுது கொண்டு இருந்தார்.."எதுக்கு டா தேவை இல்லாமல் இப்படி ஒரு வேலையை பார்த்த??? சொல்லு டா சொல்லு இப்போ இரண்டு நாள் ஆகியும் இனியும் கண் முழிச்சு பார்க்காமல் இருக்கியே டா???
உன் அப்பாவுக்கும் இப்படி தான் விபத்து ஆச்சு உனக்கும் இப்படி தான டா விபத்து ஆகி இருக்கு??? கண்ணா நான் எப்படி டா இதை தாங்குவேன் வாழ வேண்டியவன் டா நீ உனக்கு இப்படி ஆனா என் மனசு எப்படி தாங்கும்??? இதை எல்லாம் ஏன் அந்த கடவுள் என்னை பார்க்க வைக்கிறான்???" என அழுதார்...
ரிஷியோ,"எனக்கு என்னமோ அந்த ஆத்ரேயன் மேல தான் சந்தேகமாக இருக்கு.." என்று கூறவும்,
குலசேகரி,"எனக்கும் அந்த சந்தேகம் இல்லாமல் இல்லை???அவனை இனி சும்மா விட மாட்டேன் டேய் ரிஷி அவன் இனி உயிரோட இருக்க கூடாது என்ன செலவு ஆனாலும் பராவாயில்லை ஆதிக்கு ஆனதை விட அவனுக்கு அதிகம் ஆகணும் அவன் உயிர் அவன் உடம்புல தங்க கூடாது ஏதோ இந்த அருணாசலம் தப்பு பண்ணிட்டானேன்னு நான் அமைதியா இருந்தது தப்பா போச்சு..
அன்னிக்கே வேர் அறுத்து இருந்தா இந்த நிலைமை வந்து இருக்காது" என்று வெளிப்படையாகவே ஆத்ரேயன் மீது இருந்த கோபத்தை வெளிகட்டினார்...மேலும் அவன் அருணாசலத்தின் வாரிசு தான் என்பதை ஒப்பு கொண்டும் விட்டார்...
அதை கேட்ட வைதேகி,"போதும் நிறுத்துங்க நீங்க எதுவும் பண்ண வேண்டாம் நீங்க பண்ணினதெல்லாம் போதும்" என்று கூறினார்.
"அண்ணி என்ன புதுசா இருக்கு ஆதிக்கு இப்படி ஆனதுனால நீங்க பேசுறீங்கன்னு எங்களுக்கு நல்லா தெரியுது அதுக்குன்னு அம்மா கிட்ட இப்படித்தான் பேசுவீங்களா??? ஆதி உங்களுக்கு மட்டும் முக்கியம் கிடையாது இந்த வீட்டுக்கே அவன் முக்கியம் அவனை இப்படி செய்தவனை சும்மா விட சொல்றீங்களா?? அவன் இந்த வீட்டு வாரிசு அதை மறந்துடாதீங்க" என்று கூறினார் ரிஷி...
"என்னடி அம்மா புதுசா இருக்கு உன் மருமக அடங்காப்பிடறியா என்னை எதிர்த்து பேசிட்டு இருக்கான்னு பார்த்தா நீ அதை வேடிக்கை பார்த்துட்டு இருந்த இப்போ உனக்கும் தைரியம் வந்துடுச்சா??? அவ குடுக்குற தைரியமா நீயும் வார்த்தையை விட்டுட்டு இருக்க??? என்னை பத்தி தெரியும் இல்ல???" என்று கேட்டார் குலசேகரி...இதை கேட்டதும் வைதேகி முகம் ஏதோ மிகப்பெரிய தவறு செய்தது போல மாறிவிட்டது...
அந்த சமயம் ஆதியின் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து கொண்டே ,"யாரும் யாரையும் எதுவும் செய்ய வேண்டாம் ... இது ஆத்ரேயன் பண்ணி இருக்க மாட்டான்" என்று வசுந்தரா கூறினாள்..
"அது எப்படி நீ இவ்வளவு உறுதியாக சொல்ற??? நீ அப்போ செய்தியா??? உனக்கு தான் உன் புருஷனை பிடிக்காது... இவனை எடுத்து எரிந்து பேசிட்டு இருக்கியே??? இவனை மட்டுமா பேசிட்டு இருக்க?? எங்க எல்லாரையும் தான் பேசிட்டு இருக்க ஆத்ரேயன் உன்னுடைய நண்பன் தானே!! நண்பனுக்கு வேண்டி புருஷனையே அடிச்சு போட்டுட்டியா இப்படி பத்தினி வேஷம் போடுவதற்காகவா??? இப்போ அவனை பரிசோதனை செய்யற மாதிரி நடிச்சுட்டு இருக்கியா???" என்று கேட்டார் ரிஷி...
அதைக் கேட்டதும் வசுந்தரா அவரை பார்த்து,"எனக்கு நடிக்க வேண்டிய அவசியம் இல்லை அவன் ஆதியை ஏதாவது செய்யனும்னா எப்பவோ செஞ்சி இருப்பான்... இத்தனை நாள் விட்டு வைத்திருக்க மாட்டான் ஒரு உயிரோட இழப்பு என்னன்னு அவனுக்கு நல்லா தெரியும்.. அதே மாதிரி அவன் ஆதியை நான் ஆதி கூட இருக்கும் வரை ஆதி கிட்ட அவன் நெருங்க மாட்டான்... ஆதிக்காக எல்லாம் அவன் பார்க்க மாட்டான்... எனக்காக அவன் கண்டிப்பா பார்ப்பான்...
அது எனக்கு நல்லா தெரியும் ஆதிக்கு ஆக்சிடென்ட் பண்ணது வேற யாரோ அதுவும் நல்ல தெரிஞ்சவங்க யாரோ ஒருத்தர் தான்னு எனக்கு தோணுது கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கேன் போலீஸ் விசாரிக்கிறேன்னு சொல்லி இருக்காங்க" என்று வசுந்தரா தனது சந்தேகத்தை கூறினாள்...
"அப்புறம் பத்தினி வேஷம் போட வேண்டியது அவசியம் எனக்கு கிடையாது... நான் ஒன்னும் மறைஞ்சு இருந்து யார்கிட்டயும் சண்டை போடலையே நேருக்கு நேரா என் புருஷன் கிட்ட சண்டை போடுறேன்...
அதுக்கான எல்லா உரிமையும் எனக்கு இருக்கு நாங்க சண்டை போடுறத ஒளிஞ்சிருந்து வேடிக்கை பாக்குற நீங்க இதையெல்லாம் பேச வேண்டிய அவசியம் கிடையாது...
அப்படி பேசினா நான் உங்களை பற்றி பேச வேண்டியது இருக்கும்.. நீங்க என்ன சொன்னீங்க??? பத்தினி வேஷம் போடுறேன் அப்படின்னா திருப்பி நான் உங்களை கேட்க ரொம்ப நேரம் ஆயிடாது ஆனால் எனக்கு இப்போ என் கணவனோட உயிர் தான் முக்கியம்... அதனால தயவு செஞ்சு இங்கு இருந்த டிராமா பண்ணிட்டு இருக்காம எல்லாரும் கிளம்பி போங்க" என்று ஒரு மருத்துவராகவும் அந்த இடத்தில் தன்னை நிலைநாட்டிக் கொண்டு கூறினாள்...
குலசேகரி அவளைப் பார்த்து ,"எங்களை வெளியில போக சொல்ல நீ யாரு நீ வெளியில போடி ராசி இல்லாதவளே இவளை கல்யாணம் பண்ணிட்டு வந்ததிலிருந்து தான் என் பேரனுக்கு இப்படி எல்லாம் ஆகிட்டு இருக்கு" என்று கூறினார்...
அதைக் கேட்ட அவளோ,"என்னோட ராசி எல்லாம் நல்லாத்தான் இருக்கு இந்த மாதிரி சில்லி விஷயத்தையெல்லாம் சொல்லி என்னை தாக்கி பேசலாம்னு நினைக்காதீங்க... மனுஷனோட உயிரை உயிராய் பார்க்காத நீங்க எல்லாம் எனக்கு சாபம் விடுறீங்க ஓவரா பேசிகிட்டு இருக்காதீங்க அப்புறம் ஒரே ஊசி உங்க பேரன் படுத்திருக்கிற மாதிரி நீங்களும் பக்கத்து வீட்டுல படுக்க வேண்டியது இருக்கும்" என்று கூறியவள் அவன் அருகே சென்று அவனது கையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து கொண்டாள்...
அதை கேட்ட குலசேகரி அதிர்ந்து பார்க்க ஆதியின் விரல்களை மென்மையாக வருடி கொடுத்துக் கொண்டே,"நான் சும்மா பேசிட்டு எல்லாம் இருக்க மாட்டேன் நிஜமா பண்ணிடுவேன் இங்கே இருந்து எவனை போட்டு தள்ளலாம் என பேசிட்டு இருந்தீங்க அப்படின்னா நிஜமா செஞ்சிடுவேன்... மனுஷனோட உயிர் எவ்வளவு முக்கியமானதுன்னு இந்த ஹாஸ்பிடல்ல ஒரு ரெண்டு தடவ சுத்தி பாத்துட்டு வாங்க ஒவ்வொரு பேஷண்டும் எப்படி படுத்து கிடக்கிறார்கள் என்று பார்த்துட்டு வாங்க அப்போ புரியும் இடியட் மாதிரி பேசிட்டு" என்று வெகுண்டாள்...
" அத்தை உங்க மகன் நல்லா இருக்கணும் அப்படின்னா முதல்ல இவங்க ரெண்டு பேரையும் அனுப்புங்க இப்பவும் நீங்க பேசாம இருந்தீங்க அப்படின்னா அவர் சரியாக மாட்டார். அவருக்கு தேவை நல்ல நிம்மதியான ஓய்வு அதை குடுங்க உங்க மகன் இன்னும் அஞ்சு, ஆறு மாசத்துல எழுந்து வருவார் அதுவரை இதுங்களை தள்ளி இருக்க சொல்லுங்க" என்று கூறினாள்...
மேலும் வசு ,"அவர் பண்ணின ஒரே ஒரு விஷயம் அந்த காரில் இருந்து தப்பிச்சு குதிச்சதனால மட்டும்தான் அவர் தப்பிச்சிருக்கார்...இல்லை அப்படின்னா இந்நேரம் நம்மை விட்டு போய் இருப்பார்" என்று உள்ளதை உள்ளபடி கூற அதைக் கேட்ட வைதேகி வாயை பொத்திக்கொண்டு அழுதார்...
" நீங்க அழுவதற்காக நான் இதை சொல்லல என்ன நடந்திருக்கு அப்படிங்கறத ஒரு மருத்துவரா உங்ககிட்ட விளக்கம் கொடுக்கிறேன் அவ்வளவுதான்" என்று கூறினாள்...
அதைக் கேட்ட வைதேகி, குலசேகரிடம்,"தயவு செஞ்சு இங்கிருந்து கிளம்பிடுங்க அத்தை... நீங்க உங்க மூத்த மகனுக்கும் சரியான அம்மாவாக இல்லை அவருடைய மனசையும் நீங்க புரிஞ்சுக்கல...
இப்போ பேரனுக்கு வந்து நிக்கிறீங்க ...தயவு செஞ்சு கிளம்புங்க போதும் ... என் பையன் விஷயத்துல நீங்க தலையிடாதீங்க உங்க பையன் விஷயத்தில் எப்படி நீங்க உரிமை எடுத்து என்னை அவருக்கு இரண்டாவது தரமாக கல்யாணம் பண்ணி வச்சீங்களோ அதே மாதிரி என்னுடைய மகன் விஷயத்துல நான் முடிவு எடுத்துகிறேன்...
இது உங்களுக்கு கோபத்தை கொடுத்தாலும் எனக்கு கவலையில்லை...என் மகனோட உரிமையை உங்களுக்கு கொடுத்தது போதும்... இனி நான் அதைப்பற்றி யோசிக்கக்கூட மாட்டேன் எனக்கு என்னுடைய மகனுடைய உயிரு தான் முக்கியம் நீங்க எல்லாம் பேசிப்பேசியே அவனை இந்த அளவுக்கு கொண்டு வந்து நிறுத்திட்டீங்க போதும் "என்று கூறினார்...
அதை கேட்ட குலசேகரி அதிர்ந்து பார்க்க,"அம்மா வாங்க இனி நாம இங்கே இருக்க வேண்டாம் கிளம்புங்க போகலாம்" என்று கூறி அழைத்து சென்றார் ரிஷி... குலசேகரி தன் மருமகளின் மாற்றத்தை அதிர்ந்து பார்த்துக் கொண்டே சென்றார்...
இப்போது வசு, அருணாசலம் மற்றும் வைதேகி மூவர் மட்டுமே அங்கு இருந்தனர்...
"அத்தை மாமாவுக்கு எப்படி இப்படி விபத்து ஆச்சு??? " என்று கேட்டாள்...
"தெரியல மா மாமா ஒரு நாள் இராத்திரி வண்டியை ஓட்டிட்டு வரும்பொழுது அவருடைய எஞ்சின் தீப்பிடிச்சு நிலைத்தடுமாறி வண்டி ரோட்டில் இருந்து மலையடிவாரத்தில் விழுந்துடுச்சு அதுல பலத்த காயம் அடைந்ததாம்... மாமாவுக்கு இப்படி ஆயிடுச்சு மா" என்று கூறினார்...
அதைக் கேட்டு அவளுக்கு பலத்த சந்தேகம் வர சாரதா அம்மா அருணாச்சலம் மற்றும் ஆதி மூவருக்கும் ஒரே போல நடந்து இருக்குமோ என்று அவள் சந்தேகித்தாள்...உடனே ஆத்ரேயனை அழைத்தாள்...
அவனும் இவளை அழைக்க காத்து இருந்தான் போலும் அவள் அழைக்கவும் வேகமாக போனை எடுத்தான்...ஃபோனை எடுத்ததும்," அவனுக்கு எப்படி இருக்கு???" என்று தான் கேட்டான்...
"நீதான் ஆளவெச்சு ஆக்சிடென்ட் பண்ண வெச்சதா பேசிட்டு இருக்காங்க" என்று வசுந்தரா கூறினாள்...
அதைக் கேட்ட அவன் ஸ்டயரிங்கில் வேகமாக குத்தினான்.."இப்போ தான் போலீஸ் என்னை விசாரிச்சாங்க... நான் அப்படி பண்ணுவேன்னு உனக்கு தோணுதா???" என்று அவன் கேட்கவும்,"நானும் உன் மேல சந்தேகப்பட்டேன்னு சொல்லவே இல்லையே நான் கூப்பிட்டது வேற விஷயம் உன்கிட்ட சொல்லத்தான்" என்று வசு கூறினாள்...
அவளுடைய சந்தேகத்தை அவனிடம் கூறவும் அதைக் கேட்ட அவன் சற்று அதிர்ந்தான்... "எனக்கும் அந்த சந்தேகம் இல்லாமல் இல்லை அம்மாவோட கார்ல பாம் தான் வெச்சிருந்தாங்க அந்த பாம் வைச்சவனை பிடிச்சாச்சு... இப்போ அவன் நம்ம கஸ்டடில தான் இருக்கான் ...அவனை பார்க்க தான் நான் போய்ட்டு இருக்கேன்" என்று கூறினான்...
அதை கேட்ட அவளோ ,"எனக்கு என்னமோ பயமா இருக்கு டா" என தன் மனதில் இருப்பதை கூறினாள்.. இத்தனை நேரம் தைரியமாக இருந்தவள் தன் நண்பனிடம் தன் மனதை வெளிப்படுத்த அதைக் கேட்டு ஆத்ரேயன் அவள் மனதை புரிந்து கொண்டு,"கவலைப்படாத அவனுக்கு ஒன்னும் ஆகாது அவன் பிழைத்து வருவான்"...என்று கூறினான்...
"அப்படித்தான் நானும் நினைக்கிறேன் இங்கே யார் முகத்தையும் பார்க்க முடியல!!! என்னமோ அவனை இப்படி பார்க்க முடியல டா" என்று கூறும் போதே வசுவின் குரல் உடைந்து போக அவனுக்கு என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியவில்லை..
"ஹே வசு நீ எதுக்கு ஃபீல் பண்ணிட்டு இருக்க??? அவனுக்கு ஒன்னும் ஆகாது கவலையை விடு நான் இவனை விசாரிச்சிட்டு உனக்கு தகவல் சொல்றேன் யார் இதை செய்தா அப்படின்னு தைரியமா இரு...அண்ட் நீ ஒரு டாக்டர் அதை மறந்துடாத" என்று ஆறுதல் கூறினான்..
அவனிடம் பேசவும் சற்று தெம்பு அவளுக்கு வந்தது.."அம்மா எப்படி இருக்காங்க???"
"நல்லா இருக்காங்க டிஸ்சார்ஜ் பண்ணியாச்சு"...என்றான்...
"ஏன் டி அவனை பிடிக்கலன்னு சொல்லி அவன் மேல உயிரையே வைச்சு இருப்ப போல???" என்று கூறவும் தான் அவளுக்கு அவள் மனம் புரிய மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தாள்..
"ஹ்ம்ம் அப்படியே சிரிச்ச முகத்தோடு இரு அவனுக்கும் ஒன்னும் ஆகாது மத்ததை நான் பார்த்துக்கிறேன்...அண்ட் எனக்கும் அவனுக்கும் இருக்கிற மோதலை நீ பொருட்படுத்த வேண்டாம் அவன் உனக்கு நல்லவன் தான் அதை மட்டும் மனசுல வை" என்று கூறி அவளுக்கு சில ஆறுதல் மொழிகளை கூறி போனை வைத்து விட்டான்...
அவன் அதைக் கூறியதும் வசுந்தரா மெல்ல உறங்கிக் கொண்டிருக்கும் ஆதியை பார்த்தாள்... ஆதியை அவளுக்கு பிடிக்காமல் இல்லை ஆனால் ஆதி ஆத்ரேயனை எதிரியாக பார்ப்பதுதான் அவளுக்கு பிடிக்காது... ஆத்ரேயனின் நிலைமையையும் அவன் மனதில் வைத்தால் போதும் என்பது மட்டும் தான் வசுந்தராவின் கோரிக்கை ஆம் ஆதியை பொருத்தவரை அவன் நல்லவன் தான் அதை வசுந்தரா எப்போதோ உணர்ந்து இருந்தாள்...
அவன் மற்றவர்களைப் போல கல்யாணமானதும் உரிமை எடுத்துக் கொள்வதோ இல்லை தவறாக பார்ப்பதோ இல்லை இவ்வளவு ஏன் அவனது விரல் நுனி கூட வசுந்தராவின் மீது பட்டது கிடையாது அந்த அளவுக்கு அவன் அவளிடத்தில் கண்ணியத்தை நிலைநாட்டினான்... அது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது... ஆனால் அவள் அதை வெளிக்காட்டிக் கொண்டதே கிடையாது..
ஆம் பிடிக்கவில்லை என்று கூறி அவனின் ஒவ்வொரு செய்கைகளை அவன் அறியாமல் ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு இப்பொழுது அவனுக்கு என்று ஒன்று ஆனதும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை யார் முன்னிலையிலும் அழக்கூடாது என தைரியத்தை பிடித்துக் கொண்டிருக்கிறாள் அவன் மீண்டு வருவான் என்ற நம்பிக்கை மட்டும் அவள் இந்த நொடி வரை இழக்கவில்லை அவன் அருகே அமர்ந்து அவனது தலையை லேசாக கோதி கொடுத்துக் கொண்டிருந்தாள் வசுந்தரா...
அவளுக்கே அவளை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருந்தது.. ஆம் அவளாலேயே நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை அவள் இப்படி அவன் அருகே அமர்ந்து கொண்டு அவனது தலையை அவளாகவே கோதி கொடுத்துக் கொண்டிருப்பாள் என நினைத்துக் கூட பார்க்கவில்லை...
அவளது ஒரு கை அவனது தலையை கோதிக் கொடுத்துக் கொண்டிருக்க மறு கையால் அவனது விரல்களை மென்மையாக வருடி கொடுத்துக் கொண்டிருந்தாள் அந்த சுகத்தை அவன் உணர்ந்தானோ என்னவோ அவனது ஒரு விரல் அவளது விரல்களை மென்மையாக பற்றிக் கொண்டது அதை கண்டதும் ஏனோ அவளது கண்களில் முணுக்கென்று கண்ணீர் வந்தது...
ஆத்ரேயன் வசுவின் போனை வைத்ததும் பாம் வைத்தவனை கஸ்டடியில் வைத்திருக்கும் இவனுடைய வேலைக்காரன் ராமுவை அழைத்திருந்தான்..
"சொல்லு ராமு அங்க என்ன ஆச்சு??"
" சார் நான் எவ்வளவோ அடிச்சு பார்த்துட்டேன் நான் விசாரிச்சதில் அவன் சொன்ன விஷயத்தை உங்ககிட்ட சொல்லலாம் என்று தான் அழைத்தேன்" என்றான்...
"என்ன ராமு சொல்லு"
"சார் அவன் மூணு இடத்தில பாம் வச்சிருக்கறதா சொன்னான்... சார் ஒன்னு உங்க அம்மாவோட வண்டியில இரண்டாவது ஆதி அவருடைய வண்டியில மூணாவது உங்களுடைய கருப்பு நிற வண்டின்னு சொல்றான் சார்" என்று கூறவும் அதைக் கேட்ட அவன் அதிர்ந்தான்...
" ஆமாம் சார் மூணு டைம்ல அவன் வச்சிருக்கான் எதுக்கும் நீங்க கவனமாக இருங்க" என்று கூறினான் அதைக் கேட்டதும் நொடிப்பொழுதும் தாமதிக்காமல் காரில் இருந்து அவன் இறங்கினான்...
யார் செய்த புண்ணியம் என்ற தெரியவில்லை காரில் இருந்து இறங்கிய ஐந்தாவது நொடி அந்த கார் வெடித்து சிதறி இருந்தது...
"சார் என்ன ஆச்சு என்ன சத்தம் உங்களுக்கு எதுவும் ஆகலையே சார் சார் சார்" என ராம் கத்தினான்..
"எனக்கு எதுவும் ஆகல நான் தப்பிச்சுட்டேன் ரொம்ப நன்றி அஞ்சு செகண்ட் மிஸ்ஸாகி இருந்துச்சுன்னா போய் சேர்ந்து இருப்பேன்" என்று கூறினான் ஆத்ரேயன்...
நொடிப்பொழுதில் அவனுடைய கார் தீக்கிரையாகி பஸ்மமாகி எரிந்து கொண்டிருக்க புகை மூட்டத்துக்கு நடுவே நின்று அவனது கண்கள் அந்த தீ பிழம்புகள் போல எரிந்தன...யாரிவன் யார் சொல்லி இதை எல்லாம் செய்தான் என்ற எண்ணம் அவனுக்கு தோன்றியது...
"அவன் போலீஸ் கிட்ட ஆதின்னுதானே சொன்னான்" என கேட்டான் ஆத்ரேயன்...
"ஆமாம் சார் அப்படி தான் சொல்ல சொல்லி இருக்காங்க ஆனால் நான் விசாரிச்சதுல ரிஷி தான் இதையெல்லாம் செய்ய சொன்னான்னு சொல்றான்"...என்று ராமு கூறினான்..
இப்போதுதான் ஆத்ரேயனுக்கு எல்லாம் தெளிவாக விளங்கியது.. கூடவே ரிஷியின் நடவடிக்கைகள் முதல் எல்லாம் அவன் ஆலோசிக்க துவங்கினான்....யார் இதை எல்லாம் செய்தது என்பது தெள்ள தெளிவாக அவனுக்கு புரிந்தது...
