Share:
Notifications
Clear all

அத்தியாயம் 2

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அவனது கேள்வியை கண்டு அவள் திடுக்கிட்டாலும் அவன் அன்றும் இப்படித்தானே சற்று திமிராக இருந்தான்...ஒரு வேளை அது அவனது சுபாவமாக இருக்கும் என்று எண்ணியவளுக்கு இதை கேட்க தான் காரை இடைமறித்து நிறுத்துனியா??? என மனதுக்குள்ளே கேட்டு கொண்டவளுக்கு அந்த கேள்வியில் ஏதோ குத்தல் இருப்பது போல தான் அவளுக்கு தோன்றியது அவன் குறிப்பாக திருமணத்தை பற்றி கேட்பதால் ஒரு வேளை நடந்த விஷயங்களை அவன் மறந்து இருக்க மாட்டானோ என எண்ணியவளுக்கு இலேசாக குற்ற உணர்ச்சியும் எழுந்தது... ஏதோ அவள் தவறு செய்தது போல தோன்றியது..

அதனால் உள்ளுக்குள் அவனை ஏறிட்டு பார்க்க சற்று தயங்கியவள்,"மிஸ்டர் ஆத்ரேயன் ஐயம் வெரி சாரி நடந்த விஷயத்தை நீங்க மறந்து இருப்பீங்கன்னு நெனைக்கிறேன்" என்று முதலில் தன் மன்னிப்பை கேட்டு கொண்டவள் மெல்ல திரும்பி தன் காருக்கு சென்றவள் அவன் கேட்கிறானே என எண்ணி கார் கதவை திறந்து தனது திருமண அழைப்பிதழை எடுத்தவள் அதன் மீது இருந்து அவளது போனையும் எடுத்து கையில் வைத்து கொண்டவள் அவனிடம் சென்று சிரித்த முகத்துடன் செல்ல அவளது ஒவ்வொரு அசைவையும் மார்பில் கையை கட்டியபடியே நின்று பார்வை இட்டு கொண்டிருந்த விழிகளில் ரௌத்திரம் படர்ந்தது அதை கூலர்ஸ் மறைத்து இருந்தது...

மேலும் அவள் கேட்ட மன்னிப்பு அதை அவள் கேட்காமல் இருந்து இருக்கலாம் இருந்திருந்தால் கூட அவனுக்கு கோபம் வந்து இருக்காதோ என்னவோ???ஆனால் அவள் அந்த விஷயத்தை வலிய அவனுக்கு நியாபகப்படுத்தியது அவனை அவமானம் படுத்தியதாக அவன் எண்ணினான் அதனால் தன் முன் நிற்கும் எதிராளி பேச்சால் கூட தன்னை வருத்தப்பட வைப்பதை அவன் விரும்பமாட்டான் அதனால் நடந்த விஷயம் எல்லாம் அவனுக்கு நியாபகமே இல்லாதது போல அவளை பார்க்க என்ன இப்படி பார்க்கிறான் என எண்ணினாள் அபி நந்தனா...

"உன் பெயர் என்ன???" என்று தெரியாதது போல சற்றே அழுத்தத்துடன் கேட்கவும் அவளோ திடுக்கிட்டாள்..அவனுக்கு என்ன என் பெயர் தெரியாதா?? என்று எண்ணியவளுக்கு சற்று முன் அவனிடம் மன்னிப்பு கேட்டது தவறோ என எண்ணினாள்..

தனக்கு முன் இருக்கும் எதிராளியை யோசிக்க விடுவது ஆத்ரேயனின் குணம் அன்றோ???" நான் உன்னை தான் கேட்டேன் அபி நந்தனா அது தானே உன் பேரு???" என்று நக்கல் வழியும் குரலில் கேட்டான்...என்னவோ நடந்த எந்த விஷயமும் அவனை பாதிக்கப்பட வைக்கவில்லை அதனால் உன் மன்னிப்பும் எனக்கு தேவை இல்லை என்பது போன்றது ஒரு கேள்வியை அவன் கேட்டான்...

அதை கேட்டதும் அவளுக்கு இவனுக்கு என் பெயர் கூட தெரியாதா?? என்னமா நடிக்கிறான் பார்...என் பெயர் தெரியாதாம் ஆனால் என்னோட கல்யாணம்னு மட்டும் இவனுக்கு தெரியுமாம் என்று எண்ணி கொண்டவளுக்கு அவனை போல நக்கலாக பேச தெரியவில்லை அது அவளுடைய இயல்பு ...

அப்படி இருக்க, அவனை பார்த்து,"ஆமாம் மிஸ்டர் ஆத்ரேயன் இன்னும் 20 நாளில் எனக்கும் ஆதித்தியனுக்கும் கல்யாணம் ஆனால் எனக்கு உங்க பெயர் நல்லா தெரியும் எனக்கு ஒன்னும் ஞாபக மறதி கிடையாது" என்று வெடுக்கென கூறினாள்...

அதை கேட்டவனுக்கு உள்ளுக்குள் புகைந்தாலும் எப்போதும் தன் மனதை அப்படியே கண்ணாடி போல வெளிக்காட்டும் அவனது முகம் இப்போதும் வெளிக்காட்டியது ஆனால் அதை உணர தான் அவளுக்கு முடியவில்லை ஒரு வேளை இவனுடைய சாணக்கிய குணம் அவளுக்கு தெரியாதோ????

"ஓ" என்றவன் தன் கையில் வைத்திருக்கும் சிகரெட்டை எடுத்து பற்ற அவள் முகம் சுருங்கியது...அவளுக்கு இது போன்ற உடலை கெடுத்து கொள்ளும் தீய பழக்கங்கள் அவளிடத்தில் அறவே ஆகாது அதனால் முகத்தை சுருக்கியவள் அந்த புகையிலையின் புகை தன் நாசியில் பரவி விட கூடாது என கருதி தன் சுவாசத்தை உள்ளிழுத்து கொள்ள அது அவனை மேலும் உசுப்பேற்றி விட்டது...

நாலடி தொலைவில் நின்று கொண்டிருந்தவன் அவள் அருகே நெருங்கி வந்து நின்றவன் வேண்டும் என்றே புகையை இழுத்து அவள் முகத்தை நோக்கி விட அவளுக்கு அதுக்கு மேல் முடியவில்லை இரும துவங்கியவள் அவனை பார்த்து ,"மிஸ்டர் ஆத்ரேயன் என்ன இது நீங்க எப்படியோ கெட்டு போங்க??? என் உடல்நலத்தை ஏன் கெடுக்கறீங்க???" என்றவள் பத்திரிக்கை அவன் கேட்டதுக்கு மரியாதை நிமித்தமாக கொடுக்கலாம் என எண்ணி கொண்டிருந்தவள் அவனை பார்த்து மென்மையாக அதே சமயம் இலேசான கடுப்போடு,"காரை கொஞ்சம் தள்ளி நிறுத்துங்க மிஸ்டர் ஆத்ரேயன் எனக்கு போகனும்" என்று கூறும் போதே ஆதித்தியன் அழைத்தான் ...

அவளது ஒவ்வொரு அசைவையும் கண்டு கொண்டிருந்தவனின் கண்கள் அந்த போனில் பட அவர்கள் இருவரும் நெருக்கத்துடன் இருக்கும் அந்த புகைப்படம் அவனுக்கு கோபத்துக்கு வடிகாலாக இருக்க அவள் போனை எடுத்து அட்டென் செய்யவும் ஆதித்யன், "ஹாய் பேபி?? எங்கே இருக்க அங்கே இருந்து கிளம்பிட்டியா??" என்று கேட்கவும், அதை கேட்ட அவளுக்கு மீண்டும் வெட்கம் வரவும் இருவர் மட்டுமே அங்கு நிற்க ஆதியின் கம்பீரமான குரல் ஆத்ரேயனுக்கு தெளிவாக கேட்டது அது அவனை மேலும் உசுப்பி விட்டது...மேலும் அவனது பேபி என்ற அழைப்பை அவன் மனதில் குறித்து கொண்டான்...இதை எல்லாம் கண்டவனுக்கு புகைய அவள் ஆதிக்கு பதில் தருவதற்குள் அந்த போன் எங்கோ தெரித்து பறந்து விழுந்து இருந்தது..

இங்கு என்ன நடந்தது என்று அவளுக்கு ஒரு நிமிடம் சுத்தமாக புரியவில்லை மீண்டும் அவள் நடந்ததை நினைத்துப் பார்க்க அவன் தான் ஹலோ என இவள் கூறப்போகும் முன் போனை பிடுங்கி எறிந்து இருந்தான் இதோ இப்பொழுது அவளது கையை அழுத்தமாக பிடித்து நின்று கொண்டிருக்கிறான் அப்போது இவன் தான் இந்த வேலையை செய்து இருக்கிறான் என மூளை அவளுக்கு நடந்த விஷயத்தை கூற முனைந்து கொண்டிருக்க அதை கூட அவளுக்கு தெரிவிக்க விடாமல் அவள் முன்னே ருத்ர மூர்த்தியாக நின்று கொண்டிருந்தவன் அவளை பார்த்து ,"எங்க போற??" என்று கேட்டான்...

"வாட்ஸ் ராங் வித் யூ மிஸ்டர் ஆத்ரேயன் எதுக்காக என்னுடைய மொபைலை வீசுனீங்க??? என் கையை விடுங்க எதுக்காக இப்படி எல்லாம் செய்துட்டு இருக்கீங்க உங்களுக்கு என்னதான் வேணும்..என்னை விடுங்க எனக்கு போகணும்" என்று அவள் கோபமாக கேட்டாள்...மேலும் அவனிடம் இருந்து விடுபட போராடி கொண்டிருந்தாள்...அவளால் துளியும் முடியாமல் போனது...

"உன்னை நான் போகவே சொல்லலேயே??? அபி நந்தனா" என்க

"ஓ காட் என் கையை விடுங்க??? எதுக்காக இப்படி பிடிச்சு இருக்கீங்க யாராவது பார்க்க போறாங்க விடுங்க" என்றவளின் கண்கள் அவனை பார்க்காமல் அந்த போன் எங்கு விழுந்ததோ என பார்க்க அது சுக்கு நூறாக உடைந்து இருந்தது...

அவளின் ஒவ்வொரு செய்கையும் அவனை கோபப்படுத்தி கொண்டே இருக்கிறது என்பதை உணராத அவள் அவனை பார்த்து,"ஆர் யூ மேட் வாட்ஸ் ராங் வித் யூ என்னுடைய போனை பாருங்க??? என் கையை விடு எனக்கு வலிக்குது" என்று அவள் முகம் சுணுங்கி கூறியவளின் விழிகள் அந்த உடைந்த போனிலே குறியாக இருக்க அதை கேட்டவனுக்கு இது வரை அவன் இழுத்து பிடித்து வைத்திருந்த பொறுமை காற்றில் பறந்தது...

பொறுமையா அப்படி என்றால் என்ன என கேட்பவன் இவ்வளவு நேரம் அவளுடைய இஷ்டத்துக்கு அவளை பேச விட்டதே ஏதோ ஒரு மிக பெரிய தவறு செய்தது போல எண்ணியவன்,"ஏன் அவ்வளவு ஆசையா இருக்கா??? அந்த ஆதித்தியன்கிட்ட பேச???" என்று குதர்க்கமாக கேட்டான் ஆத்ரேயன்...

செய்யறதை எல்லாம் செய்துட்டு இவனோட பேச்சை பார் என்று எண்ணியவளோ,"நான் யார் கூட பேசணும் என்ன செய்யணும்னு நீங்க சொல்லாதீங்க..அண்ட் ஆதி என்னோட கணவனாக ஆக போகிறவர் அவர் கூட நான் பேசுவேன் என்ன வேணாலும் செய்வேன் போதுமா??? என் கையை விட முடியுமா??? முடியாதா???" என்றாள் இறுதியாக

"முடியாது அப்படின்னு நான் சொன்னா??? என்ன செய்வ?? உன்னால ஒன்னும் செய்ய முடியாது..அந்த இடியட்டாலும் ஒன்னும் கிழிக்க முடியாது.. நீ எல்லாம் என்கிட்ட இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்கிறதை கூட எனக்கு எல்லாம் அசிங்கம் தான் அண்ட் அப்புறம் ஏன் பேச விட்டு இருக்கேன்னு பார்க்கறியா?? இனி உன் வாழ்க்கையில் நீ பேசவே கூடாது அப்படின்னு தான் அண்ட் இனி நீ யாருக்கிட்ட பேசணும் யார்கிட்ட பேச கூடாது அப்படின்னு முடிவு செய்ய போறது நான் தான் அபி நந்தனா.." என்றான் கோபத்தோடு...

அவளோ முழித்தாள் அவனது முகம் அவளிடம் பேசும் போது எதற்கு இத்தனை வன்மத்தை கொட்டுகிறது என அவளுக்கு புரியவில்லை இருந்தாலும் அவளது மூளை அப்போது தான் உரைத்தது அவன் எதற்கோ தான் இங்கு வந்து இருக்கிறான் என்று ஒரு வேளை அன்று நடந்த சம்பவத்தை எண்ணி அவன் பிரச்சனை செய்ய வந்து இருக்கிறானோ?? வேண்டும் என்றே தான் காரை இடை மறித்து இருக்கிறானோ??? என எண்ணியவள் அவள் அளவில் மட்டுமே யோசிக்க அவனை கேட்டால் அவனது இந்த யுத்தத்தில் அதுவும் அவளுடைய யூகப்படி அவள் நினைப்பு வெறும் கொசுறு தான் என சொல்லுவான் ஆனால் அந்த பிரச்சனையும் அவனை பொறுத்தவரை தற்போது மலையளவு தான் என்றாலும் இதை எல்லாம் அவன் காரணம் ஆக்கி கொண்டதன் காரணம் என்னவோ???....

அவளோ அவனது பேச்சில் சடைந்து கொண்டு ,"உங்களுக்கு என்ன தான் வேணும்??? நடந்த விஷயத்துக்காக பிரச்சனை பண்ண வந்து இருக்கீங்களா நடந்த விஷயம் உங்களை ஹர்ட் பண்ணி இருந்தா ஐயம் ரீயலி சாரி ஆ....தி....." என்று ஆத்ரேயன் என்று கூறுவதற்கு பதிலாக ஆதி என்று கூற அதுவும் அவனது வன்ம மூட்டையில் ஏறி கொள்ள ,"ஆத்ரேயன் டி நான் என் பெயர் கூட உன் வாயில வராதா??? அவன் பேரே சொல்லிட்டு இருக்க??? எதை டி மறக்க சொல்ற?? உன் குடும்பமே சேர்ந்து இப்போ வரை என்னை அசிங்கப்படுத்திட்டு இருக்கறத மறக்க சொல்றியா??? அதுக்கு ஆத்ரேயன் மறுபடியும் பிறக்கணும் டி இனி உன் வாயில் இருந்து ஆத்ரேயன் அப்படின்னு மட்டும் தான் டி வரணும் இல்லை வர வைப்பேன்" என்று அவளது கையை அழுத்தத்துடன் பிடித்துக்கொண்டு அவன் கொந்தளித்து கூற அவனது கோபமான வார்த்தைகளும் அது தந்த தாக்கமும் மென்மையிலும் மென்மையை மட்டுமே கடைபிடித்து வரும் அவளுக்கு வேதனையை கொடுக்க, "மிஸ்டர் ஆத்ரேயன் அது வந்து" என்று தொடங்க போக அவனோ தன் கையை தூக்கி நிறுத்தினான்...

"வாயை மூடு உன்கிட்ட எனக்கு எந்த எக்ஸ்பிளநேஷனும் தேவை இல்லை நடந்தது நடந்து போச்சு அப்படின்னு விட்டுட்டு போற ஆள் நான் கிடையாது நடந்த விஷயத்தை மாற்றி எனக்கு சாதகமா நடக்க வைக்கிறது தான் நான்... புரியுதா??? இனி நடக்கப் போவது எல்லாம் நான் என்ன நினைத்தேனோ அதுதான் நடக்கணும் ...நடந்தே ஆகணும்" என்று கூறினான் ஆத்ரேயன்...அதை கேட்ட அவளுக்கு அப்பொழுது தான் வசமாக இவனிடம் மாட்டி இருக்கிறோம் என்ற அறிவே வந்தது இப்போது இவனிடம் இருந்து எப்படி தப்பிப்பது என யோசித்தாள் மென்மையிலும் மென்மையான அபி நந்தனா...

என்னவோ ஏதோ என்று அந்த கார் ஓட்டுனர் தன் முதலாளி அம்மாவுக்கு என்ன ஆகிற்றோ என எண்ணி காரில் இருந்து இறங்க அதை கண்ட அவளோ அவனிடம் உதவி கேட்போம் என தன் ஓட்டுனரை நோக்கி அவள் பார்வை திரும்பும் முன் ஆத்ரேயன் அவனை பார்த்து, "ஹே குடும்பம் இருக்கா??" என்றான் நக்கலாக...

அந்த ஓட்டுனரோ அந்த கேள்வியிலேயே கொஞ்சம் அரண்டாலும் ,"இருக்கு சார்" என்று கூறியவனின் பார்வை தன் முதலாளி அம்மாவை இப்படி பிடித்து இருக்கிறானே என்பதிலேயே குறியாய் இருக்க,"உயிர் வாழனும்னு ஆசை இருக்கா???" என்று காருக்குள் தெரியும் தனது பிரஸ்டலை ஒரு பார்வை பார்த்து கேட்டான் ஆத்ரேயன்..

அதை கண்டு பயந்த ஓட்டுனரோ,"ஆமாம் சார்" என்பது போல தலையை ஆட்டினான்..."அப்போ இங்கே இருந்து போ" என்று அவன் கூற அவள் பார்வை அந்த ஓட்டுனரை பார்த்து என்னையும் உன்னுடன் அழைத்து செல் என்பது போல கெஞ்சியது...அந்த ஓட்டுனருக்கும் அந்த எண்ணம் இல்லாமல் இல்லை அவனது விசுவாசம் அவனை தடுத்தது...

அதை கண்ட ஆத்ரேயன் மெல்லிய நக்கல் புன்னகை உடன்,"உன் பசங்க இந்நேரம் ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு போய் இருப்பாங்க தானே??" என்று கூற அதற்குள் அவனது மனைவி அவனை அழைக்க இங்கே அதே நக்கல் புன்னகையுடன் இருந்தவன்,"எடுத்து பேசு" என அதிர்ந்து பார்க்கும் ஓட்டுனரை பார்த்து கூற அவனோ பயந்து முகம் வியர்த்து வேகமாக போனை எடுக்க,"என்னங்க இன்னும் நம்ம பசங்க வீட்டுக்கு வரலைங்க" என்று கூறவும் பதில் ஏதும் கூறாமல் போனை அணைத்த ஓட்டுநர் வேகமாக ஆத்ரேயன் காலில் விழுந்து,"சார் என் குழந்தைகளை ஒன்னும் பண்ணிடாதீங்க சார் நீங்க என்ன சொன்னாலும் நான் செய்யறேன் சார் அவங்களை ஒன்னும் பண்ணிடாதீங்க" என்று கூற அதை பார்த்தவனோ ,"எழுந்திரு உன் பசங்க உயிரோட இருக்கணும்னா இங்கே இருந்து கிளம்பு என் கண் முன்னாடி நின்னுடாதே" என்று கூற,"என்னை மன்னிச்சுடுங்க மா" என்று கூறியவனோ அங்கிருந்து தலை தெறிக்க ஓடினான்..

அதை கண்டவளோ அதிர அவளது இந்த அதிர்ச்சி அவனுக்கு நக்கலை கொடுக்க,"இனி இங்கே யாரும் இல்லை நாம இனி ஆக வேண்டியதை பார்ப்போமா அபி நந்தனா" என்று கூறியவன் மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தவன் வேண்டும் என்றே அவள் முகத்தில் புகையை விட்டு அவளை பார்க்க இனியும் அவள் கையில் பாதுகாப்பு சுவடி போல இருக்கும் அந்த பத்திரிகையை கண்டவன் இனி அது எதற்கு என எண்ணி,"அதை அவள் கையில் இருந்து வாங்கியவன் அவள் முகத்துக்கு முன்னால் தூக்கி காட்டி அப்படியே கீழே போட்டான் அது மிக சரியாக அவனது காலுக்கு கீழே விழுந்தது...

அதை கண்டவன் அவளை பார்த்து ,"என்ன பார்க்கிற என்ன டா இப்படி செய்யறேன் அப்படின்னா காரணம் இருக்கு இனி உனக்கு இந்த பத்திரிக்கை தேவைப்படாது...ஏன்னா இப்போ இந்த நிமிஷம் இதே இடத்தில் உனக்கும் எனக்கும் கல்யாணம்" என்று கூற அவளோ அதிர்ந்தாள்...

"வாட் என்னால இதை ஒத்துக்க முடியாது?? நீ நினைச்சா உடனே நடந்திடனுமா" என்றவள் மனமோ வேகமாக படப்படவென அடித்து கொண்டது...என்ன எண்ணி கொண்டு இருக்கிறான் இவனுடன் கல்யாணமா அதெப்படி முடியும் எனக்கும் ஆதிக்கும் திருமணம் நடக்க இருப்பது இவனுக்கு என்ன தெரியாதா என நினைக்க,"லுக் ..நான் நினைச்சா அது நடக்கும் பார்க்கறியா??? நான் டீஸைட் பண்ணிட்டேன் இப்போ இங்கே உனக்கும் எனக்கும் கல்யாணம் அண்ட் யார் வந்தாலும் வரலைனாலும் யார் இருந்தாலும் இல்லைனாலும் இந்த கல்யாணம் இந்த நொடி நடக்கும்" என்று திடமாக கூறினான்...

அதை கேட்ட அவளோ,"என்னால முடியாது" என்று கூற,

"நான் உன்கிட்ட சம்மதம் கேட்கலையே இன்பர்மேஷன் தான் சொன்னேன் இனி அதுவும் என்கிட்ட இருந்து உனக்கு கிடைக்காது" என்றவன் அவனது போனை எடுத்து காட்டினான்...

அதில் ஒரு வீடியோவில் கல்லூரியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் அவள் தங்கை ஸ்ரீ லக்ஷ்மி ஒரு காபி ஷாப்பில் ஏறி அமர்ந்து இருக்கிறாள் அவளை சுற்றியும் அவனது ஆட்கள் அவள் அறியாமல் சுற்றி வளைத்து இருக்க அதை கண்டவள் அதிர்ந்தாள்...

அவளது அதிர்ச்சியை பார்த்தவன் ஒன்றுமே சொல்லாமல் அடுத்த வீடியோவையும் காட்டினான்... அவளது தாயும் தந்தையும் ஒரு கடை முன்னே இவளுக்காக காத்திருக்க அவர்களுக்கு பின்னால் ஒரு லாரி ரெடியாக இவர்களை இடிக்கும்படி நின்றது...

அதை கண்டவள் மேலும் அதிர்ந்து அவனை பார்க்க, அவன் எதுவுமே சொல்லவில்லை அந்த வீடியோவே அவளுக்கு எல்லாம் விளக்கி விட்டதே அதாவது நீ தற்போது என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் இவர்களை எல்லாம் கொன்று விடுவேன் என்கிறான்னோ இந்த அரக்கன் அதை தானோ வாயே திறக்காமல் தனக்கு சொல்கிறான் என்பதை புரிந்து கொண்டவள் அவனை பார்த்து,"நீ இப்படி கத்தியில நிற்க வைக்கும் ஒரு கயவன்னு நான் எதிர்பார்க்கல.. உன் மேல ஒரு மரியாதை இருந்தது அதை நீ கெடுத்திட்டு இருக்க நீ எதுக்காக இதை செய்யற?? உனக்கு என்ன தான் வேணும்???"

"பதில் உனக்கே தெரியும்"....என்றான் சர்வ சாதாரணமாக

"என்னை விடு எனக்கு இதில் எந்த விருப்பமும் இல்லை"

"உன் விருப்பத்தை பத்தி எனக்கு கவலை இல்லைன்னு நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னதா நியாபகம்" என்றவன் ஊதி கொண்டு இருக்கும் புகையை இழுத்து அவள் முகத்தில் இட்டவன் பாதி சிகரெட்டை அப்படியே அந்த கல்யாண பத்திரிக்கை மேலேயே விசிறி அடிக்க அது மிக சரியாக ஆதித்தியன் வெட்ஸ் அபி நந்தனா என்ற பெயர்களின் மீது பட்டு இலேசாக பற்றி எரிந்த அந்த பத்திரிகை முழுவதுமாக கொழுந்து விட்டு எரிந்த அந்த பத்திரிகையை பார்த்ததும் அவள் உடல் ஒரு நொடி குலுங்கியது அப்படியே அவள் கண்களில் நீர் வழிய அதை பார்த்தவனுக்கு சற்றே எரிச்சலாக இருந்தது...

மேலும் இதை எல்லாம் பார்த்து கொண்டிருக்க அவனுக்கு நேரம் இல்லை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் அந்த பத்திரிகையை அக்னீ சாட்சியாக வைத்து அவன் வைத்திருந்த தாலியை அவள் கழுத்தில் அணிவித்தான்...திருவிழாவில் வெட்ட போகும் ஆட்டின் நிலையாக அவள் இருந்தாள்... அவளால் அவனை தாண்டி தப்பித்து கூட போக முடியாத நிலை??? என்ன செய்வாள் மென் குணம் கொண்ட பாவை...

ஆசை ஆசையாக அவள் எதிர் பார்த்திருந்த திருமணம் இப்படியா நடக்க வேண்டும்??? அதுவும் ஒரு கட்டாய கல்யாணம்??? எதற்காக???எதுவுமே அவளுக்கு யோசிக்க தோன்றவில்லை எல்லாம் பிளான் செய்து தான் அவன் வந்து இருக்கிறான் என்று மட்டும் அவளுக்கு புரிந்தது..அது தான் அவள் வீட்டு டிரைவர் குழந்தைகள் வரை தெரிந்து வைத்திருக்கிறானே இவனிடம் மறுத்து நின்றால் மட்டும் நினைத்ததை நடத்தி காட்டாமல் இருப்பானோ??? இப்படிப்பட்ட ஒரு அரக்கனா இவன் என அவள் கனவிலும் எண்ணி பார்க்கவில்லை...எல்லாம் முடிந்து விட்டதே எல்லாம் முடிந்து விட்டது இதோ நான் இப்போது இவனின் மனைவியா ஒரு கயிற்றால் இருவரையும் இணைத்து விட்டானோ??? என அவள் மனம் வெதும்பியது...

தன்னை வெறித்து கண்ணில் நீர் மல்க நின்று கொண்டிருக்கும் அந்த பெண்ணை பற்றி எந்த கவலையும் அவனுக்கு இல்லையோ?? இல்லை தன் எண்ணம் தான் பெரிது என எண்ணி இதை எல்லாம் செய்பவனுக்கு ஒரு தாலியால் மட்டும் கணவன் மற்றும் மனைவி என்ற உறவை நிர்பந்தமாக உருவாக்கி விட முடியும் என இவன் எண்ணுகிறானோ??? என்னவோ???....

இங்கே தன் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க சென்ற தன் மகளின் திருமணம் நடந்து முடிந்து விட்டது என்பதை கூட அறியாத பெற்றோர்கள் தன் மகளின் எண்ணுக்கு அழைத்து தோற்று புலம்பி கொண்டிருக்கும் வேளையில் ஆதித்தியனும் அவளுடன் பேசி கொண்டிருக்கும் தீடிரென போன் கட் ஆனதில் மீண்டும் முயற்சி செய்து கிடைக்காமல் போக சிவப்பிரகாசத்தை அழைத்தான் ஆதி...

"ஹாய் அங்கிள் அபி எங்கே???"

"அவ இன்னும் வரல பா அவ போனுக்கு அழைச்சேன் கிடைக்கல" என்று அவர் பதட்டத்தோடு கூற அதை கேட்ட அவனது முகம் அவளுக்கு என்ன ஆகிற்று என சுருங்கி,"சரி அங்கிள் அவள் அழைச்சா எனக்கு கூப்பிட சொல்லுங்க??" போனை அணைத்த அடுத்த நொடி அவனுக்கு அழைப்பு வந்தது...

அவள் எங்கு சென்று இருப்பாள் அவளுக்கு என்ன ஆனதோ??? என யோசித்து கொண்டே அழைத்தது யாரென்று தெரியாமல் போனை எடுத்து காதில் வைத்தான் ஆதித்தியன்..

"ஹலோ கல்யாணம்னு கேள்விப்பட்டேன் என்னை இன்வைட் கூட பண்ணல பரவாயில்லை ஆனால் பார் நான் உன்னை மாதிரி இல்லை மரியாதை நல்லாவே தெரியும் எனக்கும் இப்போ கல்யாணம் ஆகிடுச்சு" என்று ஆத்ரேயன் கூற ஹலோ என்பதிலேயே அழைத்தது யாரென்று புரிந்தவன் இவன் எதுக்கு அழைத்து இருக்கிறான் ஏதாவது திமிர் பேசவே அழைத்து இருப்பான் இடியட் என எண்ணியவன்,"வாழ்த்துக்கள்" என்று கூறி போனை வைக்க போனான் ஆதி...

அவன் மனம் முழுவதும் அபியின் மேலேயே இருக்க பொதுவான சமயம் என்றால் ஏதாவது பதில் கூறி இருப்பானோ என்னவோ??? ஆனால் இப்போது எதுவும் கூற தோன்றாமல் இருக்க அவனுடைய வாழ்த்தை கூட ஏற்று கொள்ளாத ஆத்ரேயன் அவனை மேலும் சீண்டும் விதமாக," பொண்ணு யாருன்னு தெரிய வேண்டாமா??? நீ கேட்க மாட்டேன்னு எனக்கு தெரியும் ஆனால் நானே சொல்றேன் அபி நந்தனா இல்லையில்லை இப்போ அவ அபி நந்தனா ஆத்ரேயன் ஆஹ் மாறி மூணு நிமிஷம் ஆச்சு" என்று கூறியவன் அடுத்த நொடி போனை வைத்து விட்டான்....என்ன அபி நந்தனா ஆத்ரேயன் ஆஹ் என அதிர்ந்தான் ஆதி....



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top