Share:
Notifications
Clear all

அத்தியாயம் 19

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

"ஏங்க??? பேசாமல் டிவோர்ஸ் பண்ண பெட்டிஷன் கொடுத்து விடுவோமா???" என்று கேட்டார் மைதிலி...

"அதெல்லாம் வேண்டாம் அவன் அமைதியா இருக்கான்னு நாம இதை செஞ்சா அவன் வேற ஏதாவது செய்வான் இப்போ நம்ம பொண்ணு நம்ம கூட இருக்கா அப்படிங்கிற சந்தோஷமே நமக்கு போதும்" என்று சிரித்தபடி பதிலுரைத்தார் சிவப்பிரகாசம்..

"என்னங்க சிரிக்கறீங்க?? நம்ம பொண்ணு வாழ்கையே போச்சு உங்களுக்கு விளையாட்டா இருக்கா???" என்று குமைந்தார் அவர்..

" அதுக்குன்னு அழவா சொல்ற மைதிலி????" என்றார்...

என்னமோ போங்க அந்த பொண்ணு வசுந்தரா வந்துட்டு போனதுல இருந்து ஒரே கவலையா இருக்கு நான் நினைச்சு கூட பாக்கல ஆத்ரேயன் நம்மள அவனுடைய உறவா நினைக்கிறான் அப்படின்னு உங்களால நம்ப முடியுதா?? என்று கூறினார் மைதிலி...

என்னாலையும் அப்படி நம்ப முடியல ...ஆனால் அவன் இல்லை அப்படின்னா நம்ம பொண்ணு வந்து இருப்பாலோ என்னவோ தெரியல ... அவனைப் பத்தி நான் ஆரம்பத்திலேயே சொன்ன மாதிரி அவன் ஆதியைவிட முன்னாடி தான் இருக்கான்.. அவனுடைய வேகமாகட்டும் தொழிலாகட்டும் அதை செய்யும் திறமையாகட்டும் எல்லாமே அவன் கொஞ்சம் மேல தான் இருக்கான்... அதே அளவு அவனுடைய கோபமும் ஆக்ரோஷமும் இருக்கு.. அதுதான் எனக்கு பயமே...

அதுல ஒரு வார்த்தை அவன் சொன்னான் உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டது கூட வாழ்வதற்காக தான் விட்டு இருக்க எல்லாம் முடியாதுன்னு எனக்கு அதைக் கேட்டதும் என் மகளை அவன் நல்லா பார்த்துப்பான் என்று ஒரு நிமிஷம் சத்தியமா தோணுச்சு..

ஆனால் அப்போ இருந்த சூழ்நிலை எனக்கு என்னுடைய இரண்டு பொண்ணுங்களையும் என் பக்கத்திலேயே வச்சுக்கணும்னு தான் நான் கூட்டிட்டு வந்தேன் மத்தபடி டிவோஸ் வாங்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை..

அபி மனசு வந்து அவன் கூட வாழறான்னு அப்படின்னு சொன்னா எப்ப வேணா அவள் போகலாம்... எனக்கு சந்தோஷம்தான் அவன் நல்லபடியா பார்த்துப்பான்...முதலில் அவன் பொண்ணு பார்க்க வரும்

போதே எனக்கு பிடிச்சு இருந்தது உண்மை தான்" என்று சிவப்பிரகாசம் கூறினார்...

"அவளுடைய வாழ்க்கையை பார்த்தும் என்னங்க இப்படி சொல்றீங்க????" என்று கேட்கவும் ,"அந்த பொண்ணு வசுந்தரா சொன்னதை நீ கேட்டில??? அவன் எந்த இடத்திலாவது நம்ம பொண்ணை அசிங்கப்படுத்தி இருக்கானா???

நம்மளை கூட அவனுடைய வீட்டிலும் தனிப்பட்ட முறையில் தான் பேசி இருக்கானே ஒழிய பொதுவில யார் முன்னாடியும் விட்டுக் கொடுத்தது கிடையாது அவனுக்கு அந்த பொண்ணு சொன்ன மாதிரி நம்ம பொண்ணை பிடித்து தான் கல்யாணம் பண்ணி இருக்காங்க தோணுது..

நான் எப்படி இருந்தாலும் சம்மதிக்க மாட்டேன் அவனுக்கு தெரிஞ்சிருக்கு... ஏன்னா பொண்ணு பார்க்க வந்துட்டு போயிட்டு எனக்கு அவனை ரொம்ப புடிச்சி இருந்துச்சு தான்...நான் தான் குலசேகரி வீட்டு சம்பந்தமான்னு நெனச்சேன்... அவங்களோட குடும்ப பெருமையை மனசுல வச்சு சரின்னு சொன்னேன்... அருணாச்சலத்துடைய பையன் அப்படின்னு தான் நினைச்சேன்.. ஆனால் அந்த புரோக்கர் சரியா விசாரிக்காமல் கொண்டு வந்துட்டான்...

என்னுடைய தப்பும் இருக்கு அவனுடைய குடும்ப பிரச்சனையை இழுத்து நான் அவன்கிட்ட பேசி இருக்கேன் அதனால அவன் கோபப்படுறான்.. அதுல ஒரு நியாயமும் இருக்கு" என்று இரண்டு நாட்களாக யோசித்து யோசித்து சிவப்பிரகாசம் ஆத்ரேயன் மீது நல்ல அபிப்பிராயத்தை கொண்டு வந்தார்... சரி எது தவறு எது என பிரித்தறிந்து தன் மனைவிக்கு விளக்கிக் கொண்டிருந்தார்...

கணவன் பேசுவதை கேட்டதும் அவருக்கும் சரி என்று தோன்றியதோ என்னவோ மைதிலி தன் கணவனிடம்," நாம மட்டும் முடிவு பண்ணினால் பத்தாதே??? அவளுடைய முடிவு தானே அவள் என்ன முடிவு எடுக்கிறான் நாம பொறுத்திருந்து பார்ப்போம் நாம எதுவும் சொல்லிக்க வேண்டாம்" என்று கூறிவிட்டார்…

அதே நேரம் அபியும் அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தாள்...என்னதான் வசுந்தரா ஆத்ரேயனுக்கு அபியின் மீது காதல் என்று கூறினாலும் அபியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. அது ஏன் என தெரியவில்லை அவள் மனதில் இருக்கும் கசப்பான சம்பவங்கள் தான் காரணமோ என்னவோ??? என எண்ணி கொண்டிருந்தவள் அருகே அவளது அப்பா வந்தார்..

"என்னமா ரூமே கதின்னு இருக்க??? "

"என்ன செய்யறதுன்னு தெரியல பா???" என்று கூறி கவலையாக தந்தையாக பார்க்கும் பெண்ணை பார்த்தவர் ,"அம்மா உன்னோட ஒப்னியன் என்ன ஆத்ரேயனை பத்தி????"

"அப்பா என்ன பா அவரை பத்தி நான் என்ன சொல்றது????" என்று பட்டும் படாமலும் பேசினாள் அவள்..

"ஏன் மா நீ சொல்லாமல் வேற யார் சொல்லுவா??? இது நாள் வரை நீ பார்த்ததில் இருந்து கேட்டது வரை அவரை பத்தி நீ என்ன நினைக்கிற????" என்று கேட்டார்..

"அப்பா எனக்கு பதில் தெரியல பா அவருக்கு என்னை பிடிச்சு இருக்கு அப்படிங்கிறதே எனக்கு அதிசயம் தான் அப்பா???"

"ஏன் மா அந்த அளவுக்கு உன்னை கொடுமை பண்ணினான்னா???" என்று கேட்டார்...

அதை கேட்டதும் அவள் யோசிக்க,"இல்லை பா..அவர் வீட்ல நான் இருந்த வரை அவர் என்னை கொடுமை எல்லாம் படுத்தல ஆனால் மனசளவில் நான் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கேன்....அந்த ரணத்துக்கு தான் நான் மருந்து தேடிட்டு இருக்கேன்...ஏன் பா இதை எல்லாம் கேட்கறீங்க?? அவர் கூட வாழ சொல்றீங்களா??" என பதட்டத்தோடு கேட்டாள் அவள்...

அவளின் பதட்டத்தை பார்த்து,"பேசாமல் உனக்கு விருப்பம் இல்லைனா விவாகரத்து பண்ணிடு மா" என்று மகளை போட்டு வாங்கினார்..அதை கேட்டதும் அவள் மேலும் பதட்டம் அடைந்தாள்... அவளால் அந்த முடிவை ஏனோ எடுக்க முடியவில்லை...

"என்ன மா உனக்கு தான் அவனை பிடிக்கல இல்லையா??? பிடிக்காத வாழ்க்கை எதுக்குமா???" என்றார் அவர்..

"பிடிக்காத வாழ்க்கை வாழ கூடாதுன்னு சொன்னா இந்த உலகத்தில் யாருமே வாழ முடியாது ப்பா...எனக்கு அவரை பத்தி யோசிக்க எனக்கு கொஞ்சம் சமயம் தேவை" என்று மட்டும் கூறியவள் வேகமாக அங்கிருந்து நழுவி கொண்டாள்...இதையே கொஞ்ச நேரம் கழித்து அவளது தாயும் பேச அவளுக்கு பைத்தியம் பிடிக்காத குறையாக தான் இருந்தது...

பெற்றோர் இருவரும் பேசுவது அவளுக்கு கேட்காமல் இல்லை ஆனாலும் அவள் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள்...

அவன் அவளிடம் செய்தது மட்டும் அவளுக்கு பிடிக்கவில்லை தான் ஆனால் அவன் சார்ந்த விசயங்கள் அவளுக்கு இதத்தை கொடுத்து இருந்தது என்று கூறினால் மிகையாகாது...

இப்படியே இங்கேயே இருந்தால் சரி வராது கோவிலுக்கு சென்று தன் மன பாரத்தை இறக்கிவிட்டு வரலாம் அப்படியே தோழியின் வீட்டுக்கும் சென்று விட்டு வரலாம் வீட்டுக்குள் அடைந்து கிடந்தால் பைத்தியமே பிடித்து விடும் என எண்ணியவள் கோவிலுக்கு செல்ல தயாராகினாள்...

தனியாகவே செல்ல தீர்மானித்தாள் தனியாக சென்றால் தான் யோசிக்க முடியும் என்று எண்ணி ஆட்டோ ஒன்றை பிடித்து கொண்டு பயணம் செய்ய எண்ணினாள்...

அவளை எங்கேயும் விடாமல் வீட்டுக்குள் வைத்து அடைகாத்து வந்த அவளது பெற்றோர்கள் கூட அவள் மனம் மாறட்டும் என்று விட்டு விட்டனர்...

இதோ கோவிலும் வந்து விட்டது...கோவிலுக்குள் நுழைந்தவுடன் அவள் சந்தித்து என்னவோ சாரதா அம்மாவை தான்...அவர் பிராத்தனை செய்து விட்டு வெளியே வர இருந்தார்...எதிர்பாரா சந்திப்பு...அவரும் நினைக்கவில்லை அவளும் இவரை சந்திப்போம் என நினைக்கவில்லை...

இருவரும் அவர்களின் மன பாரத்தை இறக்கி வைக்க வந்து இருக்க அதிலும் இருவரும் கோவிலுக்கு வர வேண்டிய முக்கிய காரணம் ஒரே ஒரு காரணம் ஆத்ரேயன் மட்டும் தான்...

அவன் ஏற்கனவே கூறி இருக்கிறான் அவரிடம் ,"நீங்க எந்த காரணத்தை முன்னிட்டும் அவளை தேடி நீங்க போக கூடாது... அவளுக்கா விருப்பட்டா அவ வந்துட்டு போறா??? நீங்களா அவளை அழைக்க போக வேணாம்...முடிஞ்ச வரை அவளை நீங்களா சந்திக்க கூட போக கூடாது...என் வாழ்க்கை பத்தின கவலை உங்களுக்கு வேண்டாம் நான் பார்த்துக்கிறேன்????" என்று கூறி விட்டான்...

அதுவும் அவன் கோபத்தோடு கூறவும் அவரால் மீற முடியவில்லை...மீறினால் மகனது கோபத்தை பார்க்க நேரிடும் என்பதால் அவரும் அந்த பேச்சை நிறுத்தி விட்டார்..

அப்படி இருக்க அவளை சந்திக்கவும் என்ன பேசுவது என்று தெரியாமல் அவர் அப்படியே நிற்க அவரை கண்டதும் ஏனோ அவள் குற்றம் செய்தவள் போல தலை குனிந்து நின்றாள்...

பிறகு அவளே அவர் பக்கம் சென்று ,"என்னை மன்னிச்சிடுங்க அவர் தான் அதை செய்திட்டார்ன்னு நெனைச்சுட்டேன்" என்று கூறினாள்...

அதை கேட்ட அவரோ ,"அதை ஏன் மா என்கிட்ட சொல்ற??? உனக்கு எல்லாம் மன்னிப்பு கொடுக்கிற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய மனுஷி இல்லை மா???" என்று மென்மையாக கூறினார் அவர்...

அதை கேட்டதும் அவளுக்கு சுருக்கென்று இருந்தது..ஆம் அவள் பார்வை எப்போதும் அவர் மீது நல்ல எண்ணம் இல்லை...

ஊரார் கூறுவது போல அவர் தவறானவரோ என்ற எண்ணம் எப்போதும் அவளுக்கு இருக்க அதை அறியாதவர் சாரதா அல்லவே...மேலும் மகன் என்ன செய்தாலும் அவன் நல்லவன் என என்னும் இவர் மேலும் அவருடைய வாழ்க்கை முறையையும் எண்ணியவளுக்கு அபியை பொறுத்தவரை பெண் இனத்துக்கே சாபம் என்று தான் எண்ணி இருந்தாள்...அதனால் உண்மையில் அவர் மீது பெரிய மரியாதை எல்லாம் இல்லை...

ஆனால் சரதாவை பொறுத்தவரை அனைவரும் பார்வையும் அவரை துகிலுறிக்க அவர் எப்போதும் இதை எல்லாம் கடந்து சென்றாலும் ஏனோ சிறு பெண் முன்னால் அவள் பார்வையும் தான் துகிலுரிக்கப்படுவதை அவர் விரும்பவில்லை அது அவருக்கு வருத்தத்தை தான் கொடுத்தது அதனால் அவள் மன்னிப்பு கேட்கவும் அதை ஏற்க மறுத்தார்..

"அது வந்து ஏன் இப்படி எல்லாம் சொல்றீங்க ??" என்று கேட்டாள் அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அந்த வீட்டில் இவரைத்தான் அவள் அதிகமாக வார்த்தையால் காயப்படுத்தி இருக்கிறாள் ..அதெல்லாம் இப்போது அவளுக்கு நினைவு வந்தது...

அப்படி இருக்க அவர் இப்படி கூறவும் அவளுக்கு என்னவோ போல ஆகி இருந்தது...

அவரை பார்த்து," நீங்களும் என் மேல கோபமா இருக்கீங்களா???" என்று கேட்டாள்

"எனக்கு தான் யார் மேலயும் கோபப்படுற உரிமை கிடையாது பெத்த மகனில் இருந்து 20 நாள் வரை என் வீட்டில் இருந்த நீ வரை என் மேல தான் எல்லாரும் கோபப்படுவாங்க..

நான் யாருக்கும் மேலையும் கோபப்பட கூடாது ஏன்னா நான் உங்க பார்வையில ஒரு வேசி அப்படித்தானே???" என்று கேட்டார்.. கோவிலில் இருக்கிறோம் என்று கூட பாராமல் அவர் அப்படி ஒரு வார்த்தையை தனக்குத்தானே கூறிக்கொள்ளவும் அவள் அதிர்ந்து அவரைப் பார்த்து ,"அப்படியெல்லாம் பேசாதீங்க" என்று கூறினாள்..

ஆதிக்கும் ,ஆத்ரேயனுக்கும் ஒரு வயது வித்தியாசம் எனக்கு அதுக்கு முன்னாடி அமிர்தான்னு ஒரு பொண்ணு இருந்தா அவளுக்கும் என் மகனுக்கும் எட்டு வயசு வித்தியாசம்... அப்போ அருணாச்சலத்துக்கு யார் முதல் பொண்டாட்டி???நீங்க சொல்ற மாதிரி நான் அவரை கைகுள்ள போட்டுகிட்டேனா??" என்று கேட்டார் என்ன சொல்வது என்றே அவளுக்கு தெரியவில்லை அவள் முகம் கூனி குறுகியது..

"நானும் அவரும் காதலிச்சோம் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் அவங்க வீட்ல ஒத்துக்கவே இல்ல எனக்கு எதிர்த்து கேள்வி கேட்க என் பக்கமும் யாருமே கிடையாது அதுக்குள்ள ஒரு பொண்ணு பொறந்தா எட்டு வருஷம் போயிடுச்சு... அவருக்கு கல்யாணம் ஆகும் போது என் மகன் என் வயித்துல வளர்ந்துட்டு இருக்கான்...

அவங்க வீட்ல அவரை மிரட்டி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க எனக்கு அவரையும் குற்றபடுத்த முடியல ஏன்னா இது நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை எல்லாம் ஆகணும் ஆனால் என்னுடைய பொண்ணு வாழ்க்கை என்னோட வாழ்க்கையால அசிங்கப்பட்டுச்சு...

அதனால அவ தனக்குத்தானே தண்டனை கொடுத்துட்டு இந்த உலகத்தை விட்டு போயிட்டா அதிலிருந்து தான் என்னுடைய மகன் இப்படி ஆகிவிட்டான் அவனையும் தப்பு சொல்ல முடியாது ஏன்னா என்னுடைய வாழ்க்கை நான் வாழ்ந்த வாழ்க்கை அவங்களுக்கு கஷ்டத்தை கொடுத்திருக்கு எனக்கு பேசுற உரிமை கூட கிடையாது அந்த உரிமையை கூட நான் எடுத்துக்கல ஏன்னா நான் பாவம் பண்ணிட்டேன்..

நான் யாரையும் குற்றப்படுத்த விரும்பல நான் தப்பு தான்..என் மகன் இப்படி ஆனதில் இருந்து என் பொண்ணு செத்து போனது வரை நான் தான் காரணம் நான் மட்டும் தான் மா காரணம் நீங்க யாருமே காரணம் இல்லை..என்னால இப்போ வரை என் மகன் வெளியே அசிங்கபடுறான்" என்று கூறும் பொழுது அவரது கண்களில் கண்ணீர் வந்தது...

இந்த உண்மை எல்லாம் அவளுக்கு சத்தியமாக தெரியாது ஊரார் பேசுவது போல அந்த பெரிய குடும்பத்தின் மூத்த வாரிசை சாரதா பணத்திற்கு வேண்டி வளைத்து போட்டு விட்டார் என்று மட்டுமே தெரியும்...

அப்படி இருக்க இந்த விஷயத்தை எல்லாம் கேட்கும் பொழுது அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது கூடவே ஆத்ரேயனின் நிலையும் அவளின் கண்முன்னே வந்தும் போனது தான் இவரை மரியாதை இல்லாமல் நடத்தியது எல்லாம் அவளுக்கு நினைவும் வந்து போனது...

அதிலும் அவரது வாழ்க்கையை கேட்டதும் அவளுக்கு நிழல் படமாக அவருடைய வாழ்க்கை நிலையையும் ஆத்ரேயனின் கோபத்திற்கான காரணமும் பிறரின் ஒதுக்கபடுத்துதலும் தான் அவனது இந்த நிலைக்கு காரணம் என்பதை அழகாக புரிந்து கொண்டாள்..அவளுக்கு இப்பொழுது எல்லாமே நிழற்படமாக தெளிவாக அவளது கண் முன்னே வந்து போனது...அது அவளுக்கு தாங்க முடியாத வலியை கொடுக்க அவளுக்கு சாரதாவின் மீது இரக்கம் சுமந்தது...

"ஆன்ட்டி பிளீஸ் அழாதீங்க எல்லோரும் பார்க்கிறாங்க" என்றாள் தர்ம சங்கடத்தோடு..

"இனி பார்க்க என்னமா இருக்கு அது தான் எல்லோருக்கும் தெரியுமே??" என கண்களை துடைத்து கொண்டவர் ,"இப்ப கூட உன்னை பார்த்து பேச கூடாது அப்படின்னு சொல்லி இருந்தான்... அவன் தப்பா எல்லாம் சொல்லல நான் வற்புறுத்தி உன்னை அழைச்சிட்டு வந்துடக்கூடாது அப்படின்னு தான் அவன் சொன்னான் .. அதனால தான் மனசில் உள்ள பாரம் இறக்கி வைக்க கோவிலுக்கு வந்தேன் இங்கே பார்த்தா நீ நிக்கிற அதனால மனசுல இருப்பதெல்லாம் கொட்டி விட்டேன் அவன் நல்லவன்னு உன்கிட்ட சொல்லல ...

என்னுடைய கஷ்டத்தை தெரியாத்தனமா சொல்லிட்டேன் அவ்வளவுதான் அவன் சந்தோஷத்தை அனுபவிச்சதே இல்ல ஏதோ நீ வந்தா அவன் கொஞ்சம் மாறுவான் என்று நினைத்தேன் அதுவுமே நடக்காது போல விதி இருந்தா நீங்க சேருங்க இல்லாட்டி இப்படியே இருங்க மா...

எல்லாம் நல்ல விதமா இருந்து கல்யாணம் நடந்து இருந்தா நீங்க ஒண்ணா இருந்து இருப்பிங்களோ என்னவோ??? சரி மா நான் வரேன் நானும் என்னோட கஷ்டத்தை சொல்லி உன்னை கஷ்டப்படுத்திட்டேன்...நான் வரேன் மா "என்று கூறினார்...

அவளுக்கு என்ன சொல்வது தெரியவில்லை அவள் மனம் அவனை தேடுகிறது அவனது அனைத்து விசயங்களையும் கேட்ட பின்னர் அவன் அவளுக்கு செய்தது தவறே என்றாலும் அவன் மீது இரக்கம் சுமந்தது...

அவன் ஒன்றும் இவளை பழி வாங்கவில்லையே தான் இரையாகி போனோம் என்று தான் அவள் எண்ணினாள்..

அவனுடைய அனைத்து விசயங்கள் கேட்ட பின்னும் அவன் மீது இரக்கம் சுமந்தது..அவன் மீது மதிப்பு கூடியது...அந்த அம்மன் சாட்சியாக அவளுக்கு அவனை பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது..

இப்படி எல்லாம் எண்ணி கொண்டே இருந்த அவளை பார்த்து கொண்டே தன் மன குமுறலை அவளிடம் கொட்டி விட்டு கோவிலில் இருந்து வெளியே சென்றார் சாரதா...

அவர் சென்ற அடுத்த நொடி அம்மா என்ற சத்தம் கேட்க கோவிலில் இருந்தவர்களும், கோவிலுக்கு வெளியே இருந்தவர்களும் பதற அந்த அம்மா என்ற விளி அவளை உலுக்கியது..அது சாரதா அம்மாவின் குரலாக இருக்க யாரோ ஒருவர் ஐயோ அந்த வெள்ளை கார் பத்தி தெரியுதே??? என்று

கூற வெள்ளை நிற கார் ஆத்ரேயனின் காரின் நிறம் வெள்ளை தான் என அவளது உள்மனம் கூற அதிலும் வெளியே இருந்து வந்த பல குரல்கள் எல்லாம் அவளை உலுக்க வெளியே சென்ற அவள் கண்ட காட்சி அவளை உலுக்கியது...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top