Share:
Notifications
Clear all

அத்தியாயம் 18

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

இரண்டு வாரங்களுக்கு பிறகு

அபிநந்தனா வசுந்தராவின் முன்னாள் அமர்ந்து இருந்தாள்... வசுந்தரா சிவப்பிரகாசத்தின் வீட்டுக்கு வந்து பத்து நிமிடங்கள் ஆகிவிட்டது..

அனைவரின் பார்வையும் வசுந்தரா இங்கு எதற்கு வந்திருக்கிறாள் என்பதிலேயே இருக்க அபிநந்தனா எதையோ பறி கொடுத்தவள் போல முகத்தை வைத்திருந்தாள்... அவளுக்கு யாரிடமும் பேச தோன்றவில்லை ஆனால் வம்படியாக அபிநந்தனா அமர வைக்கவும் செய்வதறியாது தவித்து அமர்ந்து இருந்தாள்...

ஒரு கட்டத்தில் வசுந்தரா அவளையே பார்த்துக் கொண்டே இருக்க," எதுக்காக வந்திருக்கீங்க???" என்று கேட்டாள்..."நல்ல வேலை இப்பவாவது கேட்டியே நான் வந்திருக்கிறது ???" என்று ஆரம்பித்தவள் ,"என்னை யாருன்னு தெரியும் தானே???" என்று கேட்டாள்...

"தெரியும் ஆதியோட மனைவி தானே பேப்பர்ல பார்த்து இருக்கேன்" என்று கூறினாள் அபிநந்தனா... அவளது பார்வையில் ஒரு வெறுப்பு தென்பட்டது அது ஏன் என வசுந்தராவுக்கு புரியாமல் இல்லை இருந்தாலும் ,"ஆமாம் இப்போ ஆதியோட மனைவி ஆனா அதுக்கு முன்னாடி உன்னுடைய புருஷனோட ஃப்ரெண்ட் " என்று கூறினாள்...

அதைக் கேட்டு அபி அதிர ,"என்ன பாக்கற உன்னை மாதிரிதான் என்னையும் மிரட்டி தான் கல்யாணம் பண்ணினான் ஆதி... என்ன உன் புருஷன் நான் கெட்டவன் என்று சொல்லி தைரியமா நெஞ்ச நிமிர்த்தி மனசுல எதையும் வச்சுக்காம மத்தவங்க முன்னாடி தன் பெயர் கெட்டுப் போகிறது பத்தி யோசிக்காமல் நான் இப்படித்தான் அப்படின்னு சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான்...

ஆனால் என்னை கல்யாணம் பண்ணி இருக்கவன் என்கிட்ட மட்டும் மிரட்டி வெளியில எல்லாம் நல்லவன் வேஷம் போட்டு யாருக்குமே எந்த சந்தேகம் வராமல் கல்யாணம் பண்ணிக்கிட்டான் அவ்வளவுதான் வித்தியாசம்" என்று சிம்பிளாக கூறினாள் வசுந்தரா...

அதைக் கேட்ட அபி அதிர்ந்தாலும் என்ன சொல்கிறாள் என குழம்பினாலும் இவளிடம் நமக்கு என்ன பேச்சு என்று எண்ணி," சரி இப்ப எதுக்காக இங்கே வந்து இருக்கீங்க நாங்களே நொந்து போய் இருக்கோம் உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன் ஆதிக்கும், அவருக்கும் ஏதாவது பிரச்சனை அப்படின்னா அவங்க ரெண்டு பேரும் மோதிக்கட்டும் எதுக்காக இவங்க ரெண்டு பேரும் எங்களை போட்டு படுத்துறாங்கன்னு எங்களுக்கு தெரியல???" என்று கூறினாள் அபி...

"அவங்களுக்கு துருப்புச் சீட்டு நீதான் அப்படிங்கும் போது இரண்டு பேரும் யூஸ் பண்ணிக்க தானே செய்வாங்க???" என்று கூறினாள் வசுந்தரா...

"என்ன சொல்றீங்க நான் என்ன பண்ணினேன்???" என்று கேட்கவும் ,"ஆதி உன் தங்கச்சிக்கு பண்ணினது தப்புதான் ஆனால் ஆத்ரேயன் உனக்கு பண்ணினது தவறு கிடையாது அவனும் தப்பு பண்ணி இருக்கான் தான் பிரெண்டுனு சொல்லி நான் அதை நியாயப்படுத்த விரும்பல ...

பிடிக்காத பெண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணினது தப்புதான் நான் மறக்கல ...ஏன்னா நானும் அதே ஸ்டேஜ்ல நிக்கிறேன்... ஆனால் எனக்கு உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் ...எனக்கும் ஆதிக்கும் நடந்த கல்யாணம் எனக்கும் அதில் விருப்பம் கிடையாது... ஆதிக்கும் விருப்பம் கிடையாது...

ஆத்ரேயனை பழி வாங்க அவன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான்...வெளிப்பார்வைக்கு தான் நாங்க நல்ல கணவன் மனைவி.. ஆனால் உன்னோட கல்யாணத்துல உனக்கு ஆத்ரேயனை சுத்தமா பிடிக்கல.. அவன் செய்த செயல் உனக்கு புடிக்கல.. ஆனால் உன்னை அந்த அளவுக்கு அவனுக்கு பிடிக்கும்... எந்த அளவுக்கு பிடிக்கும்ன்னா இன்னும் 20 நாளில் அவளுக்கு கல்யாணம் அவளையும் நான் இழந்திடுவேனோ அப்படின்னு நினைச்சு உன்னையும் இழக்க விரும்பாமல் உன்னை இப்படி ஒரு இக்கட்டில் வைத்து கல்யாணம் பண்ணிக்கிட்டான்" என்று கூறினாள் வசுந்தரா...

அபியால் இதை நம்ப முடியவில்லை ஆனால் வசுந்தரா ,"நான் சொன்னது எல்லாம் நிஜம் அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் அவனுடைய வாழ்க்கைல பாவம் அவனுக்கு எப்பவும் கஷ்டம் மட்டும் தான் மனசுக்குள்ளே கஷ்டப்பட்டு இருக்கான்... ஆனா ஒரே ஆறுதல் நீ மட்டும் தான் அவனுக்கு இருந்திருக்க அத அவன் எங்கேயும் சொன்னதும் கிடையாது... எனக்கு மட்டும்தான் தெரியும் ..ஆனா நீயும் அவனுக்கு கிடைக்காமல் போயிடுவியோ அப்படின்னு தான் அவன் இதை செய்தான்" என்று கூறினாள்...

"அவருக்கு மட்டும் விருப்பம் இருந்தா போதுமா நீங்க சொன்னதை முதலில் நான் நம்பவே இல்லை.. அது மட்டும் இல்லாம நம்புற ஐடியாவும் எனக்கு கிடையாது ஒரு ஆளுக்கு மட்டும் விருப்பம் இருந்தா போதுமா எனக்கெல்லாம் மனசு அப்படின்னு ஒன்னு வேண்டாமா???" என்று அவள் கூறுவதை தான் நம்பவே இல்லை என்பது போல கேட்டாள் அபி...

"நான் சொல்றது உண்மை" என்று வசு கூறினாள்...

"இதோ பாருங்க நீங்க சொல்றபடி நான் வரேன்...அவரோட ஃப்ரெண்டுன்னு சொல்றீங்க அப்போ அவருக்கு சப்போர்ட் தானே பண்ணுவீங்க..என்னை அவர் காதலிச்சு கல்யாணம் பண்ணினார் என்று சொல்றீங்க ஆனா அவர் கூட இருந்த இத்தனை நாள்ல ஒரு நாள் கூட நாங்க சிரிச்சு பேசினது கிடையாது ஒரு மென்மையை அவர்கிட்ட நான் உணர்ந்தது இல்லை" என்று கூறினாள் அதை கூறும் போது முனுக்கென்று அவளுக்கு கண்ணீர் வந்தது...

கட்டிலுக்கு மட்டும் தான் அவனுடன் பயணப்பட்டு இருக்கிறோம் என்ற எண்ணமே அவளது நெஞ்சை அறுத்தது...மிரட்டி திருமணம் மிரட்டி தாம்பத்தியம் இதில் காதலாம் கத்திரிக்காயாம் என்று எண்ணினாள்...

அவள் சொல்வதில் இருந்த நியாயம் அவளுக்கு புரியாமல் இல்லை புரிந்தது... ஆனால் அபியை எப்படியாவது மாற்றியே ஆக வேண்டும் அவனுடன் இணைக்க வேண்டும் என எண்ணியிருந்தாள்... வசுந்தரா தன் தோழனுக்காக இதை செய்ய வேண்டும் என எண்ணியிருந்தாள்...

அவள் முன்னே இரண்டு வெளிநாட்டு கேட்பிரிட் சாக்லேட்டை எடுத்து வைத்தவள் சம்பந்தமே இல்லாமல் ,"இந்த சாக்லேட்டை சாப்பிட்டு இருக்கியா ??" என்று கேட்டாள்...

உடனே அவளுக்கு குழப்பமாகி,"சாப்பிட்டு இருக்கேன்" என்று கூறினாள்... இப்போ அதுதான் முக்கியமா என்பது போல அவள் பார்க்க," ஸ்கூல் படிக்கும்போது உனக்கு டெய்லியும் ஒரு பொண்ணு இந்த சாக்லேட் கொடுப்பா உனக்கு ஞாபகம் இருக்கா???" என்று வசு கேட்டாள்..

அப்போதுதான் அபிக்கு ஞாபகம் வந்தது.. அவள் பள்ளியில் படிக்கும் பொழுது தினமும் இவளுடன் பள்ளியில் படித்த மாணவிதான் தினமும் இவளை பார்த்து சாக்லேட் கொடுத்துவிட்டு போவாள் ...

இவள் இவளும் சாக்லேட்டை கண்டதும் ஏன் எதற்கு என்று கூட கேட்காமல் வாங்கி உண்பாள் கொஞ்ச நாளில் அந்த பெண் அந்த பள்ளியில் இருந்து சென்று விட்டாள்... அவளுக்கு சாக்லேட்டும் நின்று போனது... அவள் நினைவே அவளுக்கு மறந்து விட்டது.. அது இப்போது நினைவு வர அவள் நினைவு வந்தது போல பார்க்கவும்,

"என்ன பார்க்கிற??? அப்போ அது எல்லாம் ஆத்ரேயன் வேலை தான்... அவனுக்கு உன்னை பார்த்ததும் பிடிச்சு போச்சு அப்போ அது காதல் எல்லாம் இல்லை என்னவோ உன்னை பிடிச்சத்தில் நீ ஏதோ ஒரு கடையில் உனக்கு பிடிச்ச இந்த சாக்லேட் கேட்டு உன் அம்மாகிட்ட அழுதியாம் அதுல சாருக்கு உன் பக்கம் சாப்ட் கார்னர் வந்துடுச்சு..

என் கூட டியூஷன் படிச்ச உன்னோட கிளாஸ்மேட் அவகிட்ட உனக்காக தினமும் உனக்கு பிடித்த சாக்லேட்டை வாங்கி கொடுத்து அனுப்புவான்.. அப்போ எல்லாம் ரொம்ப இன்னசென்ட்டா இருந்தான்.. இப்பதான் இப்படி முரடாகி மாறிட்டான்" என்று கூறினாள் வசுந்தரா..

அதைக் கேட்டவளுக்கு இந்த சாக்லேட் என்று கூறியதும் தான் அவளுக்கு ஒன்று நினைவு வந்தது ...ஆத்ரேயன் இவளை திருமணம் செய்து அழைத்துச் செல்லும் பொழுது இதே சாக்லேட்டை அவளிடம் ,"நீட்டி வேணுமா??" என கேட்டான்.. ஆனால் அப்போது சூழ்நிலையில் அழுது கொண்டே அவனை வெறித்து தான் பார்த்தாள் ...

அதே போல முதல் இரவு அறையிலும் இதே சாக்லேட் ஓரமாக இருந்தது...இல்லையில்லை எப்போதும் இவளது அறையில் அந்த சாக்லேட் எப்போதும் இருக்கும் இவள் தான் கண்டு கொள்ள மாட்டாள்...

அவள் அங்கு இருந்த அத்தனை நாளும் அங்கு இருந்தது... அதை அந்த நேரத்தில் எண்ணிப் பார்த்தவள் வசுந்தராவை பார்க்க ,"நான் இந்த கதையெல்லாம் சொல்லி உன் மனசு மாறனும் என்று சொல்ல வரல.. அதுக்கு எனக்கு தகுதியும் கிடையாது இதெல்லாம் உன்னுடைய விருப்பம் தான்.. ஆனால் நீ நினைக்கிற அளவுக்கு அவன் கெட்டவன் மட்டும் கிடையாது அது மட்டும் நான் சொல்லியே ஆகணும்" என்று கூறியவள் அன்று நடந்த ஆதியின் வீட்டில் நடந்த சண்டையை பற்றி இங்கு பேசினாள்..

அதில் அவளின் குடும்பத்தை தன் குடும்பம் என்றும் அவளின் சகோதரி அவனின் சகோதரி என்றும் அவன் கூறி இருப்பதை கேட்டவளுக்கு எங்கேயோ நிம்மதி உருவானது என்று கூறினால் மிகையாகாது...

வசுந்தராவும் அன்று நடந்த அனைத்து விசயங்களையும் கூறியவள்,"இனி உன்னோட முடிவு அவன் உன்னை விடவும் மாட்டான் உன்னை விட்டு போகவும் மாட்டான் அவனை புரிஞ்சிக்க முயற்சி பண்ணு முடிஞ்சா எல்லாத்தையும் மறந்துட்டு அவனை ஏத்துக்கோ!!! அவன் உன்னை மிரட்டி திருமணம் செய்தான் அப்படிங்கிறதை தவிர வேறு ஒன்னும் செய்யல யோசிச்சு பார் இப்போ கூட நீ போனா அவன் உன்னை பழி வாங்கனும்னு எல்லாம் யோசிக்கிற அளவுக்கு அவன் கெட்டவன் எல்லாம் இல்லை.." நன்றாக குழப்பி விட்டு சென்றிருக்க அபிக்கு இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை ..அவள் இறுதியாக செல்லும் போது கூட ஆதியிடம் அபி தனக்கு எவ்வளவு முக்கியமானவள் என்பதை ஆத்ரேயன் கூறியதை சேர்த்து கூறிவிட்டு தான் வசுந்தரா சென்றாள்…

அவள் மனதில் அவனுக்கு இடம் இருக்கிறதா என்று கேட்டால் அவளுக்கு தெரியவில்லை... ஆனால் அவள் தங்கையின் விஷயத்தில் அவன் குற்றமற்றவன் என்று மட்டும் அவளுக்கு நன்றாக தெரியும் அதில் வசுந்தரா கூறியதும் இணைந்து கொள்ள அவள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் இருந்தாள்..அவளுக்கு யோசிக்க வேண்டும் என்பதால் அமைதியாக அவளது அறையே கதி என இருந்தாள்.. இப்படியே ஒரு வாரம் கடந்து இருந்தது...

அதே நேரம் அவள் வீட்டிலிருந்து சென்று மூன்று வாரங்கள் ஆகியிருந்தன.. இன்னும் அவளை காணோமே சிவப்பிரகாசத்தை அழைத்தால் அவரோ போனை எடுப்பதில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை...

சாரதா டென்ஷன் ஆகி நின்று கொண்டிருந்தார்... அவருக்கு அவருடைய மகனின் முகத்தை பார்க்கவே சங்கடமாக இருந்தது... ஏதோ ஒரு தைரியத்தில் அவளை அனுப்பிவிட்டார் ஆனால் அவள் சென்றதும் அவள் வராமல் இருக்கவும் இவருக்கு டென்ஷன் ஆகிவிட்டது ..

அவனோ அவனுக்கும் எதுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தான் ...அது வேறு அவரை டென்ஷனில் ஆக்கி இருக்க ஒரு நாள் மாலை வேளையில் மிகுந்த களைப்போடு வீட்டுக்கு வந்தவனிடத்தில்," தம்பி அபி இன்னும் வரல????நீ போய் கூட்டிட்டு வரியா???" என்று கேட்டார்...

அவனோ தாயை பார்த்து,"நான் அவளை அனுப்பலையே மா??? நான் அவளை போக சொல்லல??? எப்படா ஓடலாம்ன்னு இருந்தவளை நீங்க அனுப்பி இருக்கீங்க??? அவ இன்னும் வருவான்னு உங்களுக்கு தோணுதா??? கொஞ்ச நாளில் டிவோர்ஸ் பேப்பர் தான் வரும்"என்று கூறி விட்டு அவனது அறைக்குள் நுழைந்து கொண்டான்...

அவனது கண்களில் அவனது தாய் கண்டது என்ன???அவன் கண்கள் அவளை தேடுகிறதோ??என எண்ணிய தாயின் கண்கள் பனித்தன..நாளையே அவளை கூட்டி கொண்டு வர வேண்டும் என எண்ணி கொண்டார்... அவன் கூறுவது போல தேவையில்லாத வேலையை செய்து விட்டோமோ என எண்ணி தன்னை நொந்தும் கொண்டார்...

அறைக்குள் சென்ற அவனை வரவேற்றது என்னவோ காலியான அறை தான்... அவள் இருந்த போதும் அவனை வரவேற்று தாங்கவில்லை என்றாலும் அவளுடைய ஸ்பரிசம் ஆவது இந்த அறைக்குள் இருக்கும்... அது அவனுக்கு ஒரு இதத்தை கொடுக்கும் ஆனால் இந்த இரண்டு, மூன்று வாரங்களாக அந்த இதம் அவனுக்கு கிடைக்கவில்லை..

அபிநந்தனா அவளை அவன் கண்டது அவள் பள்ளி செல்லும் போது தான் அப்பொழுது இவன் காலேஜ் படித்துக் கொண்டிருந்தான்..

சிறிதாக தனக்குள் இறுகி இருந்த சமயம் தந்தையின் விஷயம் எல்லாம் தெரிந்து அவன் தனக்குள்ளேயே ஒடுங்கி இருந்த காலம் அப்பொழுது முதன் முதலாக அவளை ஒரு கடையில் வைத்து தான் சந்தித்தான்... அவளுடைய அம்மாவிடம் ஒரு சாக்லேட்டுக்காக அடம் பிடித்துக் கொண்டு இருந்தாள்...

அதை கண்டதும் அவனுக்கு என்னவோ ஒரு உணர்வு ஆட்கொண்டது... அந்த முகம் அவனை மறுபடியும் மறுபடியும் பார்க்க தூண்டியது.. இது என்ன மாயம் என அவன் அறியவில்லை வயதின் கிளர்ச்சியாக இருக்கும் என்று எண்ணினான் ..

அதை அப்படியே விட்டுவிட்டு ஆனால் உறக்கத்தில் வந்து அந்த மென்மையான முகம் அவனை தொல்லை செய்தது பிறகு மனதில் எண்ணிக் கொண்டான் மீண்டும் ஒருமுறை அவளை சந்தித்தால் அவளை வாழ்க்கையில் விடவே கூடாது என்று தனக்குத்தானே ஒரு செக் வைத்துக் கொண்டான்..

அவள் எனக்கானவள் என்றால் மறுபடியும் அவளை சந்திப்பேன் அவள் யாரென்று கூட அவனுக்கு தெரியாது அவள் எங்கு இருக்கிறாள் என்ன செய்கிறாள் என்றும் தெரியாது...

அப்படி இருக்க அவளை பார்த்ததும் பிடித்து அவள் இப்படி தன்னை உறங்க கூட விடாமல் தொல்லை செய்கிறாள் என்று கூறினான் இந்த உலகத்தில் அவள் எந்த மூலையில் இருக்கிறாள் என்று கூட தெரியாது இனி அவளை சந்தித்தால் அவளை விட கூடாது என்று எண்ணினான்...

அப்படி எண்ணியவன் அவளை அடுத்த வாரமே ஒரு ஐஸ் கிரீம் கடை ஒன்றில் வைத்து பார்த்தான் அவளே அவன் கண்ணுக்கு சிறிதாக இருந்தான்...

அவளை விட ஒரு சிறிய பெண்ணுடன் வந்து ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டு இருந்தாள்...இது என்ன மாயம் என அவன் நினைத்தான்....

இனி என்ன செய்வது என அவன் மூளை குழம்பியது...அவளின் முகம் அவனை விட்டு அகல மறுத்தது...

ஆனால் அவளை பார்த்தால் பள்ளி செல்பவள் போல யூனி ஃபார்ம் எல்லாம் அணிந்து இருக்க ,"சை சிறு பெண்ணா?? அன்னிக்கு கொஞ்சம் பெரிசா தெரிஞ்சா???" என அவன் தலையில் அவனே அடித்து கொண்டான்...

இப்போதும் என்ன செய்யலாம் பள்ளி படிக்கும் சிறுமி அவள் அவளை போய் என்று எண்ணியவன் அப்படியே விட்டு விட்டான்...

இருந்தும் அவனால் அவளை மறக்க இயலவில்லை அவளின் பள்ளி சீருடையை வைத்து அவள் எந்த பள்ளியில் படிக்கிறாள் என்பதை அறிந்து கொண்டவன் அவளை காண சென்றான் ..

வசுவையும் அழைத்து செல்ல அவளோ,"டேய் ஆத்ரேயன் பெரிய பையன்னு எல்லாம் பார்க்க மாட்டேன் அடி வாங்குவ டா இப்படி எல்லாம் செய்தா?? ..."என்றாள் விசயத்தை அறிந்து கொண்டு...

அதற்கு அவனோ,"ஆமாம் இப்போவோ நான் அவ கையை பிடிச்சு இழுக்க போறேனா??? அதெல்லாம் மெதுவா தான் எனக்கு அவளை பிடிச்சு இருக்கு அவ்ளோ தான்" என்று கூற," என்னமோ பண்ணி தொலை சொன்னா நீ கேட்கவா போற??? ஆமாம் என்னவோ புதுசா பிசினஸ் ஸ்டார்ட் பண்ண போறதா சொன்ன???" என்றாள் வசு...

"ஆமாம் அதோட வேலை எல்லாம் போய்ட்டு இருக்கு" என்று கூறும் போதே அவளும் அவளது பள்ளி தோழியும் வர அபி உடன் கூட வரும் பெண்ணை பார்த்து,"இவ என்னோட தான் டியூசன் படிக்கிறா" என்றாள் வசு...

அதை கேட்டதும் அவனுக்கு ஒரு யோசனை வந்தது அவளுக்கு பிடித்த சாக்லேட் வாங்கி கொடுத்து அந்த பெண்ணிடம் கொடுக்க சொல்லி அதை அபியிடம் சேர்க்க சொன்னான்...

அதை பார்த்து வசு கூட கிண்டல் அடிக்க அதை எல்லாம் அவன் பொருட்படுத்தவதில்லை..ஏனோ அவனுக்கு அவளை பார்க்கும் போது நேர்மறை எண்ணங்கள் அவன் மனதில் இருப்பது போன்ற ஒரு எண்ணம் வந்தது அவனால் மனதுக்குள் ஒரு உத்வேகத்தை கொடுப்பது போல தோன்றியது...

ஆனால் அவன் அவளை நேரில் சென்று அவளை காணவோ இல்லை அவளிடம் அவன் பேச முயன்றதோ இல்லை...அவளுக்கு இவன் ஒருத்தன் இருப்பது கூட தெரியாது...அவன் அவளிடம் வெளிப்படுத்தி கொள்ள விரும்பவில்லை...

என்ன தான் அவளுக்கும் அவனுக்கும் இடையே ஏழு வயது வித்தியாசம் இருந்தாலும் அந்த சமயத்தில் அவன் பார்வைக்கு அவள் தற்போது பள்ளி செல்லும் அதனால் பார்வையால் கூட அவளை அவன் தீண்டவில்லை...

நாளைடைவில் அபியின் தோழி வேறு பள்ளிக்கு சென்று விட வசுவும் காலேஜ் சென்று விட அவனும் தொழிலில் இறங்கி விட்டான்...

அதற்கு இடையில் அவள் எந்த கல்லூரியில் படிக்கிறாள் என்ன செய்கிறாள் என்றெல்லாம் அவனுக்கு தெரிந்தாலும் அவன் மனதை அவளிடம் வெளிப்படுத்தியது இல்லை...

எங்கே அவள் வேண்டாமென்று கூறி விட்டாள் என்ன செய்வது என்ற எண்ணம் அவனுக்கு வந்தது...

அதன் பிறகு தோற்றத்திலும் குணத்திலும் அவன் சற்று கடினத்தை கொண்டு வந்ததுக்கு பிறகு அவள் பக்கம் செல்ல வேண்டும் என்று அவன் எண்ண வில்லை...அவன் எண்ணம் முழுவதும் ஆதியின் குடும்பத்தார் மீதே இருந்தது... அவளிடம் தன் மனதை வெளிபடுத்த தைரியம் இல்லாதவன் கிடையாது ஆனால் வேண்டாம் என எண்ணினான்...அது ஏன் என்பது அவனுக்கு மட்டும் தான் வெளிச்சம்...

பிறகு ஒரு சில வருடங்கள் சென்றதும் தீடிரென்று அவனது தாய் அவளுடைய போட்டோவை காட்டி உனக்காக பார்த்து இருக்கும் பெண் என்று கூற அவனுக்கு மனதுக்குள் மிகுந்த மகிழ்ச்சி..

அவனால் வார்த்தையால் அந்த மகிழ்ச்சியை விவரிக்க கூட முடியவில்லை...ஆனால் தாயிடம் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் ஒன்றுமே தெரியாதவன் போல அவளை பெண் பார்க்க சென்றான்...

அவளை அவளது வீட்டில் வைத்து அவ்வளவு அருகே பார்க்கவும் அவன் மனதை அடக்க பெரும்பாடு பட்டான்... அதனாலேயே கூலிங் கிளாஸை அவிழ்க்காமல் போட்டு இருந்தான்...

முதன் முதலாக தன்னை பார்க்கிறாள் ஒரு வேளை அவளுக்கு பிடிக்காமல் போய் விடுமோ என எண்ணி கொஞ்சம் தடுமாற்றத்தில் இருந்தான்...அதனாலேயே அவன் கைகள் போனை நோண்டியது..அவளிடம் அவன் மனதை முழுதாக வெளிபடுத்த தான் எண்ணுகிறான் கல்யாணத்துக்கு பிறகு இதை எல்லாம் கூற வேண்டும் என அவன் எண்ணினான்...

ஆனால் சிவப்பிரகாசம் இவனை ஆதி என்று எண்ணி இருக்க அவர் அபியை ஆத்ரேயனுக்கு திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இல்லை என்றும் நாங்கள் குலசேகரி பேரன் என்று எண்ணி விட்டோம் என்று கூற அந்த இடத்தில் தான் முழுவதும் அவமானபட்டதாக எண்ணியவன் என்ன ஆனாலும் அவளை அடைந்தே தீர வேண்டும் என எண்ணினான்..

அதற்கு இடையே ஆதி அழைத்து,"இப்போ தெரியுதா??? நான் தான் நான் மட்டும் தான் அவரோட பையன் எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு ...மதிப்பும் மரியாதையும் எனக்கு மட்டும் தான் உன்னால என் தொழிலை தான் அழிக்க முடியும் ஆனால் உனக்கு குத்தி இருக்கிற முத்திரையும், எனக்கு குத்தி இருக்கிற முத்திரையும் எப்போவும் மாறாது..உன் தகுதி இது தான்... " என்று கூறி அவளோடு நிச்சயத்தையும் ஆதி முடித்து கொண்டான்..

தான் இத்தனை காலம் மனதுக்குள் பூட்டி வைத்திருந்த அவள் வேறொருவனை கணவனாக எண்ண, அதுவும் அவனுடைய எதிரியாக இருக்க ஒரு வேளை ஆதி அல்லாமல் வேறொருவன் அவளை திருமணம் செய்ய எண்ணி அவளுக்கும் அவன் மீது விருப்பம் இருந்து இருந்தால் கூட அவளுக்காக அவன் விலகி இருப்பான் ..

ஆனால் ஆதியின் துணையாக அவனால் எண்ணி கூட பார்க்க முடியவில்லை ...அதுவும் அவர்களுடைய நிச்சய போட்டோவை கண்டவனுக்கு அதை பார்த்து கை கட்டி எங்கிருந்தாலும் வாழ்க என்று பாடி செல்பவன் அல்லவே ஆத்ரேயன் அதிலும் அவளது தந்தையின்

புறக்கணிப்பும், ஆதியின் நக்கலும் சேர்ந்து கொள்ள இவளை அடைந்தே ஆக வேண்டும் என்று எண்ணி அடைந்து கொண்டான் ஆத்ரேயன்...அது அவனுக்கு இன்று வரை தவறாக தெரியவில்லை...அப்படி தெரிந்தாலும் அவனுக்கு கவலை இல்லை...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top