அத்தியாயம் 17
"அம்மாடி அபி அவனால தான் நம் ஸ்ரீ லட்சுமி இப்போ நமக்கு கிடைச்சிருக்கா...நான் இல்லைன்னு சொல்லல??? ரொம்ப சந்தோஷம் ..ஆனால் அவன் கிட்ட இப்படி அடி வாங்க வேண்டிய அவசியம் உனக்கு இல்லம்மா நீ வந்துடு என்ன ஆகும்னு பார்த்துடலாம் என் கண்ணு முன்னாடியே என் பொண்ணு அடி வாங்குவதை என்னால் பார்க்க முடியாது மா" என்று சிவப்பிரகாசம் கூறினார்..
மைதிலியும் ஓடிவந்து அபியை தூக்கி நிறுத்தியவர் ,"அபி அப்பாதான் சொல்றார் இல்ல வாம்மா போகலாம் எத்தனை நாளைக்குனு சொல்லி இப்படி ஒரு வாழ்க்கை நீ வாழ்ந்துட்டு இருப்ப கிளம்பு" என்று கூறினார்....
அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டு நின்று கொண்டிருந்த சாரதா இவர்கள் பேசியே அவளை அழைத்து சென்று விடுவார்களோ என பயந்து,"எதுக்கும் அவன் வந்துடுட்டுமே" என்று ஒருவேளை அபி வீட்டை விட்டு சென்று விடுவாளோ பிறகு தேவையில்லாமல் இனியொரு பிரச்சனை வருமோ என்று பயந்து கூறினார்...
அதை கேட்ட மைதிலி," நீங்களும் ஒரு பொண்ணா இருந்துட்டு இப்படி பேசுறீங்களே??? நியாயமா சொல்லுங்க ??? நாங்க எந்த விதத்துல உங்க குடும்பத்தை நோகடிச்சோம் சொல்லுங்க??? பார்ப்போம் நாங்க பாட்டுக்கு எங்கள் வேலையை பார்த்துட்டு இருக்கும் ஆனா ஆத்ரேயன், ஆதி இரண்டு பேரும் சேர்ந்து என்னுடைய ரெண்டு பொண்ணுகளை படாத பாடு படுத்திட்டு இருக்காங்க... உங்க கண்ணு முன்னாடி உங்களுக்கு ஒரு மகள் இருந்து அவளுக்கு இப்படி கொடுமை எல்லாம் நடந்தது அப்படின்னா நீங்க இப்படித்தான் கையை பிசைந்துட்டு நின்னுட்டு இருப்பீங்களா சொல்லுங்க???" என்று கூறினார் அவர்
சிவப்பிரகாசம் கையெடுத்துக் கும்பிட்டு," அம்மா தயவு செஞ்சு என் மகளை என் கூட அனுப்பிடுங்க ...உங்களுக்கு ஒரு மகள் இருந்து அவள் இப்படி உங்க கண்ணு முன்னாடியே மாட்ட போட்டு அடிக்கிற மாதிரி அடிச்சா நீங்க பார்த்துட்டு சும்மா இருப்பீங்களா என்னால உங்க மகனை எதிர்த்து போராடவெல்லாம் முடியாது.. உண்மையை சொல்லனும்னா உங்க மகனை என்னால எதிர்க்கவே முடியாது ஆனால் கெஞ்சி கேட்கிறேன் என்னால இதையெல்லாம் பார்த்துட்டு இருக்க முடியாது என் மகளை என் கூடவே அனுப்பி வெச்சிடுங்க...உங்க மகன் எப்படி இருந்தாலும் அனுப்ப மாட்டார் நீங்க அனுப்புங்க மா" என்று கூறினார் ...
அவளோ வாயை திறக்காமலேயே நின்று கொண்டிருந்தாள்...அவள் மனம் முழுவதும் ரணமாக இருந்தது... அவனை தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே உண்மை நிலை என்னவென்று அறியாமல் அவனிடம் வார்த்தையை விட்டு விட்டோமே என்று நொந்து கொண்டிருந்தாள்... அவனை அவளுக்கு பிடிக்காது தான் ஆனால் அவன் தவறு செய்யாமல் அவனை வார்த்தையால் நோகடித்து விட்டோமே என்று எண்ணினாள்..அதிலும் அவன் அடித்ததில் அவள் பயந்து விட்டாள்.. அவனது முகம் அவளுக்கு மான்ஸ்டரை போல இருந்தது...
அபியின் தாயும், தந்தையும் இருவரும் சாரதாவிடம் கெஞ்சி கேட்க சாரதாவால் இல்லை என்று கூற முடியவில்லை மகன் வந்தால் தன்னிடம் கோபப்படுவானே அவனுடைய ஆத்திரம் எல்லை கடக்குமே என்று அறிந்தாலும் கண்கள் சிவந்து அவன் அடித்ததில் முகம் வீங்கி பார்க்கவே மிகவும் பரிதாப நிலையில் நிற்கும் அபியை பார்க்கவும் சாரதாவுக்கு வருத்தமாக இருந்தது... அதனால் எதுவும் யோசிக்காமல்," அபியை உங்க மகளாக அழைச்சிட்டு போகாமல் என் மருமகளாக அழைச்சிட்டு போங்க ஆனால் என்ன தான் நான் அனுப்பினாலும் என் மகள் இவளை விட மாட்டான் அது உங்களுக்கு நல்லாவே தெரியும் இப்போதைக்கு அழைச்சிட்டு போங்க" என்று பொடி வைத்து கூறினார்...
ஆனால் சிவப்பிரகாசம் மற்றும் மைதிலி தம்பதியினருக்கு விட்டால் போதும் என்ற நிலை மட்டுமே இருந்தது ஊரைவிட்டு ஓடிப்போய் கூட பிழைத்துக் கொள்ளலாம் இங்கே இருந்து இவர்களுக்கிடையில் உருண்டு கொண்டிருக்கக் கூடாது என்று முடிவு செய்தார் சிவப்பிராகசம்...
அதனால் அவர் கூறியதுமே நொடிப்பொழுதும் யோசிக்காமல் அபியை தரதரவென அழைத்துக் கொண்டு அங்கிருந்து சிவப்பிரகாசம் புறப்பட்டார்... அபிக்கும் சற்று ஆறுதல் வேண்டும் என தோன்றியதோ என்னவோ அவளும் எதுவுமே பேசாமல் அவளுடைய வீட்டிற்கு சென்று விட்டாள்....அதிலும் அவன் மீண்டும் வந்தால் அவன் முகத்தில் எப்படி முழிப்பது என அவளுக்கு தெரியவில்லை பிறகு கோபம் கொண்டு சென்ற அவன் மறுபடியும் வந்து அடித்தால் என்ன செய்வது என்ற பயம் வேறு அவளை வாட்டியது...
அதே நேரம் ஆதியின் அறையில் வசுந்தரா தன் காலுக்கு நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டு இருந்தாள்....எங்கேயோ செல்ல தயாராகி கொண்டிருந்தாள்..டெனிம் ஷார்ட்ஸ் அணிந்து வெள்ளை நிற சட்டை அணிந்து இருந்தாள் அந்த சட்டையில் இரு பட்டன்களை அவிழ்த்து விட்டு அவள் வயிறு தெரியும் அவளுக்கு முடிச்சு இட்டு இருந்தாள்...சற்று அதீத மேக்கப் செய்து இருந்தாள் அவளை பார்க்க ஏதோ பார்ட்டிக்கு செல்வது போல இருந்தது...அந்த சமயம் ஆதி கோபமாக அவனது அறைக்குள் நுழைந்து கதவை பட் என அடைத்தான்...
அவன் கதவை அடைப்பதை வைத்தே அவனுக்கு கோபம் என்பதை புரிந்து கொண்ட வசுந்தரா அவளது வேலையை பார்த்துக் கொண்டு இருந்தாள்..
அவனுக்கு அவளை பார்க்க பார்க்க ஆத்திரம் அவன் பேசிவிட்டு சென்றது ஒரு வகையில் ஆதியை சூடேற்றி இருந்தது என்றால் அதிலும் தன் மனைவி தனக்கு துணையாக நிற்காமல் தனது எதிராளிக்கு துணையாக நிற்கவும் ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது... அதிலும் அவளுடைய கோலம் அவனுக்கு மிகவும் ஆத்திரத்தை கொடுத்தது..
சண்டை போட வந்தவன் அவளுடைய உடையை பார்த்து,"என்னடி இது டிரஸ் இது???" என்று கேட்டான்...
" ஏன் பார்த்த தெரியல ???"
"தெரியுது ரெண்டு பீஸ் போட்டு இருக்கேன்னு தெரியுது இன்னும் கொஞ்சம் கம்மி பண்ணிக்க வேண்டியது தானே???" என்று அவன் அவளது உடல் தெரியும் படியான ஆடையை கண்டு கேட்கவும் அவளோ கூலாக,"அதை யோசிச்சேன் அடுத்த தடவை அப்படியே செஞ்சுடலாம்னு இருக்கேன்" என்று கண்டுக்காமல் பதிலை கூறிக்கொண்டு தன் காலுக்கு நெயில் பாலிஷ் அடித்துக் கொண்டிருந்தாள்.... அவள் எங்கேயோ வெளியே கிளம்பு ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்தாள்...
இங்கே இப்படி ஒரு பிரளயம் நடந்து முடிந்திருக்கிறது இவள் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் இவளது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறாளா அதிலும் இந்த உடை அவனுக்கே கண்ணை கூசியது....கூடவே அவனது பார்வை அவளது உடலை தீண்டியது...
அவளோ நெயில் பாலிஷ் அடித்து முடித்ததும் லிப்ஸ்டிக் எடுத்து மீண்டும் ஒரு முறை அவளது அதரங்களுக்கு இட கண்ணாடி வழியில் அவன் அவளை பார்ப்பதை கண்டவனோ தன் பார்வையை மாற்றி,"ஹே உனக்கு எப்படியோ ஆனால் இந்த வீட்டுக்கும் எனக்கும் ஒரு மரியாதை இருக்கு" என்று காட்டமாக கூறினான்
அதைக் கேட்ட அவள் நக்கலாக பார்த்து லிப்ஸ்டிக் இட்டு கொண்டே," உங்க வீட்டு மரியாதையை தான் நான் பார்த்துட்டு இருக்கேன்" என்று கூறவும் அவன் முகம் கோபத்தில் சிவந்து அவளது கழுத்தை பிடித்து அழுத்தினான்..
"என்னடி கொஞ்சம் கண்டுக்காம விட்டா ஓவரா பண்ற என்ன நக்கலா என்ன நெனச்சிட்டு இருக்க நீ பாட்டுக்கு வர போற தேவையில்லாம என் விசயத்தில் தலையிடுற தொலைச்சிடுவேன்...ஏண்டி அங்க அவன் என் சட்டையை பிடிக்கிறான் நீ அவன் கையை பிடித்துக்கொண்டு இருக்கிற?? உனக்கு தாலி கட்டுனது நானா இல்லை அவனா அவனுக்கு ஒன்னுனதும் துடிக்கிற??" என்று கேட்டான்...
"அதுதான் உனக்கு பிடிக்க ஆளுங்க இருந்தாங்களே அப்புறம் என்ன?? சும்மா மிரட்டிட்டு இருக்காத ஆதி உன்னுடைய மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்" என்று கூறவும் ஆதிக்கு இவளை என்ன செய்வது என்று தெரியவில்லை இவளை வைத்து செக் வைக்கலாம் என்றுதான் எண்ணினான்.. ஆனால் இவள் அவனை கண்டு கொள்வதாகவே இல்லை என்ன செய்தாலும் அவள் நக்கலாகவே இருக்கவும் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இதுவரை அவன் அவளை தொட்டு தீண்டியது இல்லை தொடவும் எண்ணியதும் இல்லை...
அவள் மீது காமமோ, காதலோ எதுவுமே அவனுக்கு தோன்றியதும் இல்லை.. இப்பொழுது கூட அவனது கைக்குள் அவளது கழுத்து அகப்பட்டு இருக்கும் வேளையில் கூட அவள் திமிராகத்தான் நின்று கொண்டிருந்தாள்...
அதுவே அவனுக்கு எரிச்சலை உண்டாக்கியது... ஒரு கையால் அவளது கழுத்தை பிடித்திருக்க மறுக்கையால் அவளது வெற்றிடை தெரியும் அளவுக்கு அவள் உடுத்தி இருந்த ஆடைக்குள் கையை விட்டான்... நொடிப்பொழுதில் அதிர்ந்தாள்... வசுந்தரா அதை கண்டவனுக்கு அதுதான் வேண்டும் இவளை வழிக்கு கொண்டு வர இதுதான் வழி என எண்ணியவன் கைகள் அத்துமீறி அவளது ஆடைக்குள் சென்றது...
"என்ன பார்க்கிற??? எதுக்கு அரையும் குறையுமா உடுத்தி இருக்க??? அதையும் கழட்டிடுறேன்" என்று கூறினான்
அதே நேரம் அவன் கழுத்தில் இருந்து கையை எடுக்கவே இல்லை அவளோ அவன் எங்கே அவளது உடையை அவிழ்த்து விடுவானோ என திமிறிக்கொண்டே அவனது கையில் பிடித்து இழுத்தாள் ...தன் உடலில் தன் அங்கங்களில் தீண்டும் அவனது கைகளை அகற்ற அவள் முற்பட அவளால் முடியவே இல்லை வெற்றி புன்னகை ஆதியின் முகத்தில் வந்தது...
பிறகு நெருங்கி நின்றவன் அவளது கழுத்து வளைவில் புதைந்து அவரது உயிரை தன் நாசி வழியாக நுகர்ந்து இழுக்க அவனது அருகாமை அவளை ஏதேதோ செய்தது ...
உணர்வுகள் எல்லாம் தட்டி எழும்பவில்லை.. அவனிடமிருந்து வெளியேற வேண்டும் என்ற உந்துதல் இருந்தது தனது பயத்தை தான் அவன் வெற்றியாக கருதிக் கொண்டிருக்கிறான் என்று எண்ணிய வசுந்தரா அவனிடம் பயப்படாமல் நின்றால் மட்டும்தான் இங்கு நிலைத்து நிற்க முடியும் என்று எண்ணியவள் அவனை பிடித்து அகற்றினாள்...அவனுக்கோ அவளை தீண்டியதும் உணர்வுகள் தட்டி எழுப்பியது...ஏதோ அவளை மிரட்ட செய்தவனுக்கு இப்போது அவளது நெருக்கத்தை விரும்பினான்...
அவனோ மீண்டும் அவள் அருகே வர அதைக் கண்டவளுக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வர," என்ன ரேப் பண்ண போறியா??" என்று பச்சையாகவே கேட்டு விட்டாள்
அவனுக்கு அதுவரை இருந்த உணர்வுகள் அவளது கேள்வியில் பறந்து போக ,"நான் வேணா டிரஸ் அவுத்துட்டு படுக்கட்டுமா??? என்று கேட்டாள்...
அதைக் கேட்டு அவனும் எந்த உணர்வுகள் எல்லாம் வடிந்து போக அவள் கூறியதை கேட்டவனுக்கு சி என்று ஆனது அவனது முகம் சென்ற போக்கை கண்டவள் தற்போது அவள் ஜெயித்ததாக உணர்ந்தாள்...
"என்ன பாக்குற நீதான் என் விருப்பமே இல்லாம என்னை ரேப் பண்ண போறியே அதுக்கு நான் தயாராக இருக்க வேண்டாமா?? நான் ரெடி தான் வா மத்த பொண்ணுங்க மாதிரி பதறி ஓட எல்லாம் மாட்டேன்...நான் உனக்கு மனைவியா இருந்தாலும் நான் ஒரு டாக்டர் அதை மறந்துடாத..எனக்கு உடல் என்பதை பார்த்தா உணர்வு எல்லாம் பெரிசா வராது என் உடம்பையும் சேர்த்து தான் சொல்றேன் " என்று கூற மீண்டும் அவனுக்கு கோபம் வந்தது...
அவனது கோபத்தை ரசித்த அவள் ,"என்ன என்னை கல்யாணம் பண்ணி இருக்க வேண்டாம்னு தோணுதா??? நான் தான் உன்கிட்ட அப்பவே சொன்னேன் என்னை கல்யாணம் பண்ணிக்காத அப்படின்னு!!! நீ கேக்கல இப்போ முறைச்சு கோபப்பட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை" என்று கூறியவள் அப்புறம் உடுத்துற உடை என்னோட சாய்ஸ் நான் என்ன டிரஸ் போடணும் போடக்கூடாதுன்னு நான் தான் முடிவு பண்ணனும் மத்தவங்க கிடையாது அப்புறம் என்ன சொன்ன நீ அவன்கிட்ட அடி வாங்கும் போது நான் உன் பக்கத்துல நிக்கல அப்படின்னா அவன் கட்டத்தில் நீயா??? அவனா??? அப்படின்னு ஒரு சூழ்நிலை வந்தா எனக்கு அவன் தான் முக்கியம் ஏன்னா அவன் மட்டும் தான் என்கிட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்காக வருவான் புரியுதா?? அப்புறம் மோதணும்னா நேருக்கு நேரா மோது...
ஒரு பொண்ணை ஜெயிக்க அவளோட உடல் மீது தான் பலத்தை காட்ட முடியும் அப்படின்னா உனக்கும் மிருகத்துக்கும் வித்தியாசம் இருக்காது ஏதாவது செய்யணும்னா நேரா மோது படுத்துட்டா மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா?? நான் அப்படியே உன் காலில் விழுந்துவிடுவேன்னு தோணுதோ???" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் வசுந்தரா....
அவள் கேட்ட கேள்வி செருப்பால் அடித்தது போல அவனுக்கு இருந்தது அவனை அவனாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை... மேலும் நடக்கும் பல விஷயங்களும் அவனுக்கு எதிராகத்தான் இருந்தன இதற்கெல்லாம் ஒரே காரணம் அவன் மட்டும்தான் தந்தை முதல் தன் மனைவி வரை எல்லாருமே அவன் பக்கம் இருக்க செய்வதறியாது இருந்தான் ஆதி...
அதே நேரம் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்த வசுந்தராவை பார்த்த குலசேகரி, ரிஷி மற்றும் பல்லவி மூவரும் முகம் சுளித்தனர்...
அந்த வீட்டில் அரைகுறை ஆடை அணிந்த ஒரே பெண் இவள் தான் என்று கூறலாம் ..முதன்முதலாக பேரனின் மனைவியை அப்படி ஒரு ஆடையில் பார்த்தவருக்கு தலை சுற்றியது... அவளைப் பார்க்கவே அவருக்கு நாராசமாக இருந்தது.... அவளுக்கும் அதுதானே வேண்டும் அதனால் எதையும் கண்டு கொள்ளாமல் மாடியில் இருந்து இறங்கி அவர்களையும் கண்டுகொள்ளாமல் வெளியே செல்ல எத்தனித்தாள் ...
"ஏய் நில்லு இது என்ன டிரஸ் எங்க கிளம்பிட்ட ???" என்று கேட்டார் குலசேகரி... இங்கே இத்தனை பிரச்சனை நடந்து கொண்டிருக்க இவள் எங்கே மினுக்கிக் கொண்டு கிளம்பி விட்டாள் என எண்ணி கேட்டார்....
அவரை பார்த்து, "நான் என்ன போட்டு இருக்கேன்னு உங்க கண்ணுக்கு தெரியலையா???அப்படி நான் எங்கே போறேன்னு தெரிஞ்சே ஆகணுமா???" என்று கேட்டாள் வசுந்தரா!!!...
"ஹே என்ன வாய் நீளுது???? அவங்க பெரியவங்க கொஞ்சம் மரியாதையா பேசு" என்றார் ரிஷி...
"அதுனால தான் வாங்க போங்கன்னு மரியாதையா பேசிட்டு இருக்கேன் இல்லாட்டி ஆக்கிற சோத்தை தின்னுட்டு கம்முனு இருக்க மாட்டியா கிழவி அடுத்தவன் என்ன பண்றான்னு பார்த்துட்டே இருப்பியா??? அப்படின்னு கேட்டிருப்பேன்" என்று ரிஷியை பார்த்து கூறினாள்..
அதைக் கேட்டதும் ரிஷி அதிர்ந்து ,"உனக்கு திமிரு கொஞ்சம் அதிகம் தான் என்னமா இவ இப்படி பேசிட்டு இருக்கா???" என்று கூறவும்," நான் கொஞ்சம் கம்மியா பேசிட்டேன்னா?? "என்று அவள் கூறினாள்...
குலசேகரி," இத பாரு இங்க இந்த மாதிரி எல்லாம் நடந்துக்க கூடாது மட்டும் மரியாதை இல்லாம பேசிட்டு இருந்தா சரிப்பட்டு வராது இந்த வீட்டு மருமகளுக்குன்னு சிலது இருக்கு அதுபடி தான் நீ நடந்தே ஆகணும் உனக்கு தெரியலைனா உன்னுடைய மாமியார் கிட்ட கேளு இந்த வீட்டுக்குன்னு சில அருமை பெருமை எல்லாம் இருக்கு அப்புறம் மட்டு மரியாதை இல்லாமல் பேசிட்டு இருந்த அவ்ளோ தான்" என்று கூறவும்,
அதை பார்த்த அவளோ ,"உங்க அருமை பெருமை எல்லாம் நீங்க மட்டும் தான் வச்சுக்கணும் ஊருக்கு வெளிய நாறிட்டு தான் இருக்கு அதனால உங்க குடும்ப பெருமையை பத்தி என்கிட்ட பேசிட்டு இருக்காதீங்க!!! அப்புறம் நான் என்ன டிரஸ் போடணும் போட கூடாதுன்னு நீங்க சொல்லக்கூடாது எனக்கு ஏதாவது வேணும்னா அந்த முடிவை நான் தான் எடுக்கணும் எடுப்பேன்.. அதனால அதிகாரம் பண்றது எல்லாம் மத்தவங்களோட இருக்கட்டும் என்கிட்ட வேண்டாம் என்னை உங்க பேரன்னு நினைக்காதீங்க நான் மூஞ்சிக்கு நேரா பேசிடுவேன்" என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டாள் வசுந்தரா.. அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர் அனைவரும்...அதிலும் குலசேகரியை கிழவி என்று மரியாதை இல்லாமல் அவள் பேசியதை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை...இதை எல்லாம் வைதேகி பார்த்து கொண்டு தான் இருந்தார்...
குலம், கோத்திரம், வீடு, வாசல், குடும்பப் பெருமை என்று பேசிக்கொண்டு இரு குடும்பத்தை சிதைத்த பெருமை குலசேகரிக்கு மட்டும் தான் உண்டு...
அப்படி இருக்க அந்தக் குடும்ப பெருமை பேசிக் கொண்டிருக்கும் குலசேகரியை அந்த குடும்பத்தையும் மட்டம் தட்ட வேண்டும் என்பதையே முக்கிய நோக்கமாக வைத்திருக்கும் வசுந்தரா நாலு பேர் என்ன பேசினாலும் பரவாயில்லை என்று எண்ணிக் கொண்டு அவள் சென்றாள்...
அதேநேரம் நடந்ததை எல்லாம் எண்ணிக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான் ஆத்ரேயன்... அவனது கண்களில் வலி இருந்தது...
அதை யாரும் அறியாமல் மறைத்திருந்தான்... பல விஷயங்களை நினைக்க கூடாது அவன் எண்ணியிருந்தாலும் பலரையும் அந்த தவறு நடக்க காரணமானவர்களையும் நினைக்கும் பொழுதும் அவர்களை பார்க்கும் பொழுதும் அவனுக்கு அவன் மறக்க வேண்டும் என்று எண்ணிய விஷயங்கள் எல்லாம் அவனது கண்முன்னே வந்து போகிறது...
அவன் என்ன செய்வான்??? மறக்க நினைக்கிறான் ஆனால் முடியவில்லை... மகனது கார் வீட்டுக்குள் நுழைந்ததும் அவனுடைய மனைவி அவள் வீட்டுக்கு சென்று விட்டாள் என்று எப்படி கூறுவது என தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார் சாரதா அவருக்கு மகனின் மீது உள்ள பயத்தில் கண்களில் கண்ணீர் மட்டும் தான் வரவில்லை அப்படி ஒரு நிலையில் வாசலில் நின்று கொண்டிருந்தார்..
அவன் வாசலில் நிற்கும் தாயைப் பார்த்துக் கொண்டே காரில் இருந்து இறங்கியவன் எதுவும் பேசாமல் வீட்டுக்குள் நுழைய முற்பட்டான்...
அங்கு வைதேகி தன் தந்தையுடன் இருப்பதை பார்த்தவனுக்கு உண்மையில் சாரதாவுக்கு தான் முழு உரிமையும் இருக்கிறது அப்படி இருக்க அந்த உரிமை எதையும் எடுத்துக் கொள்ளாமல் பிறர் வாயில் விழுந்து இப்படி இருக்கிறாரே என எண்ணிக்கொண்டே எதுவும் பேசாமல் உள்ளே சென்ற ஆத்ரேயனை பார்த்து,"தம்பி அபி அவ வீட்டுக்கு போய் இருக்கா!!! இங்கே நடந்ததில் கொஞ்சம் அவ அப்செட்டா இருக்கா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிட்டு வரட்டுமே" என்று கூறவும் அவன் தாயை ஒரு மாதிரியாக பார்த்தான்...
அந்தப் பார்வையின் பொருள் அவருக்கு விளங்கவில்லை இருந்தாலும் ஏதோ குற்ற உணர்வில் திண்டாடினார்... தவறு செய்தது போன்ற உணர்வை அவருக்கு கொடுத்தது அவன் பதிலுக்கு எதுவுமே பேசவி
ல்லை," இங்கே நடந்ததில ரிலாக்ஸ் ஆக வேண்டியது அவ கிடையாது நான் தானே" என்று கூறியவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவனது அறையில் சென்று தாழிட்டு கொண்டான்...
