அத்தியாயம் 16
இதற்கிடையே அம்மையப்பன் இறந்துவிட அருணாச்சலம் சாரதாவை எல்லா பக்கமும் தேடி அலைந்தார்... அவர் கண்ணில் சிக்கவே இல்லை... அதனால் குடித்து குடித்து தன் உடலையே கெடுத்துக் கொண்டார்...
குலசேகரிக்கோ தனது குலத்தை நாசம் செய்யவே வந்திருக்கிறான் என்று சர்வ சதா காலமும் அருணாச்சலத்தை திட்டி தீர்த்துக் கொண்டிருந்தார்... தொழிலை அவர் முறையாகத்தான் நடத்தி வருகிறார் அது மட்டும் போதாது குலசேகரிக்கு ஒரு பேரனோ பேத்தியோ வேண்டுமே அதை கூறி வைதேகியிடமும் அருணாச்சலத்திடமும் முறையிட அருணாச்சலம் கண்டுகொள்ளாமல் ,"உங்க பேச்சைக் கேட்டு நான் இவ கழுத்தில் தாலி கட்டினது போதும் அவ வாழ்க்கையும் பாதிக்கப்பட்டதும் போதும் என் வாழ்க்கையும் நீங்க அழிச்சிட்டீங்க" என்று குறைபட்டார் ...
அதைக்கேட்ட குலசேகரி," ஓ அப்போ இன்னும் நீ அவளை தான் நினைச்சுட்டு இருக்கியா??? இதையெல்லாம் உன் பொண்டாட்டி கிட்டயே சொல்லிட்ட போல உன் பொண்டாட்டி ஒண்ணுமே தெரியாத ஊமச்சி மாதிரி நின்னுட்டு இருக்கா???? இன்னும் அதே கயிறும் உசுரோட நானும் இன்னும் இருக்கேன்... என் உயிர் போகணும்னா சொல்லு நீ தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு போறேன்" என்று கூறினார்...
அதைக் கேட்டு பேசாமல் சென்ற அருணாச்சலம் குடிக்கு அடிமையாக அந்த சமயம் பார்த்து தொழிலை ரிஷி எடுத்து நடத்த வேண்டிய நிலைமைக்கு ஆளாகியது ரிஷி குரூப்ஸ்....
ரிஷி ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க அருணாச்சலம் எதிலும் கவனம் செலுத்தாமல் இருந்தார்... வைதேகி தான் எடுத்த முடிவிலிருந்து மாற மாட்டேன் என்பதுபோல அவர் இருக்க அருணாச்சலம் சாரதாவை தேடி நொந்து போனார்...
இதற்கிடையே ஒரு நாள் அதீத போதையில் வந்தவர் வைதேகியிடம் சாரதாவை எப்படி காதலித்தேன் என்றெல்லாம் கூறி தனக்கு வேண்டிய ஆறுதல் தேடிக்கொள்ள வைதேகி அவரை சமாதானம் செய்தார்...
இப்படியே நாட்கள் செல்ல சாரதாவை பற்றி ஒரு துப்பும் இல்லாமல் போனது ...வைதேகி குலசேகரியிடம் திட்டு வாங்குவதை பார்த்த அருணாச்சலம் தன்னால் இந்த பெண் இப்படி வாங்கி கட்டிக் கொள்கிறாளே என எண்ணியவர்க்கு வைதேகியை பிடிக்காமல் இல்லை... அவரோடு இணைந்து வாழ தொடங்கினார் ...கூடவே சாரதாவை மறக்க முடியாமல் திண்டாடினார்...
வைதேகிக்கோ தாலி கட்டியவனை விடவும் முடியவில்லை அவரை விட்டு விலகவும் முடியவில்லை... அதனால் அவரும் அருணாச்சலம் இழுத்த இழுப்புக்கு எல்லாம் இசைந்து போனார்...என்பதுதான் உண்மை...
அப்படி இருக்க கொஞ்சம் கொஞ்சமாக வைதேகி அன்பால் அருணாச்சலம் குடியிலிருந்து மீண்டார்... மீண்டும் தொழிலை பார்த்துக் கொள்ள சென்றவர் பல இடங்களில் மீட்டிங் அது இது என சுற்றிக்கொண்டு இருந்தார்...ஆனால் சாராதாவை அவரால் மறக்க முடியவில்லை... அந்த தருணத்தில் தான் சாரதாவே ஒரு கைக்குழந்தையோடு சந்தித்தார் அருணாச்சலம்....
அப்படியே நொறுங்கி விட்டார் அருணாச்சலம் சாரதா உயிரோடு இருக்கிறாரோ இல்லையோ என தவிர்த்து வந்தவருக்கு அவர் கண்ணில் போடவும் வேகமாக ஓடிச்சென்று சாரதாவின் முன்னால் நிற்க சாரதாவும் நிலைகுலைந்து போனார்...
இருவருக்கும் கண்ணீர் முற்றியது ...வார்த்தைகள் குறைந்தது... அருணாச்சலத்திற்கு குற்ற உணர்ச்சி பெருகியது... இவளை இப்படி ஆக்கிவிட்டேனே என சூழ்நிலை கைதியாக நின்றார்... ஆனால் சாரதா அருணாச்சலத்தை குற்றப்படுத்தவில்லை...
சாரதா," நம்ம குழந்தை தானே???" என்று கேட்க கண்கள் மின்ன ஆமாம் என்று கூறினார்...
அதைக் கேட்ட அருணாச்சலம்,"நான் ஒரு பாவி யாருக்குமே நான் உண்மையா இல்ல!!! என் அம்மாவுக்கு நல்ல மகனாக இல்ல !!!உனக்கு நல்ல கணவனாக இல்லை!!! என் பசங்களுக்கு நல்ல அப்பாவாக நான் நடந்துக்கல!!! வைதேகிக்கும் நல்ல புருஷனா நடந்துக்க முடியல என்னால !!! இப்படி இருதலைக் கொல்லி எறும்பா நான் தவிச்சிட்டு இருக்கேன் சாரதா" என்று கூறினார்...
சாரதா அதற்கு பதிலேதும் கூறவில்லை... சாரதா தங்குமிடத்தை அறிந்து கொண்டு சாரதாவிடம் ஏதேதோ பேசி கொண்டே குழந்தை ஆத்ரேயன் மற்றும் அமிர்தா இருவரையும் கொஞ்சிக் கொண்டே இருந்தார் அருணாச்சலம்...
சாரதா எதுவுமே பேசவில்லை மாறாக தன் கைப்பட நன்றாக சமைத்து தன் கணவருக்கு ஆசை தீர பரிமாறினார்...ஆசையாக உணவை உண்ட அருணாசலம்," இப்ப என்ன பண்ணிட்டு இருக்க??" என்று வருத்தமாக கேட்க ,"நான் இப்போ டெய்லரிங் படித்துட்டு இருக்கேன்... எனக்குன்னு எங்க அப்பா அம்மா வச்சிட்டு போன கொஞ்சம் சொத்துக்கள் இருந்துச்சு அதுல சிலதை விற்று பேங்க்ல போட்டு இருக்கேன்... அப்படியே டெய்லரிங் கிளாஸ் படிச்சிருக்கேன் இப்போ ஒன்னு ரெண்டு அக்கம் பக்கம் ஷாப்புகளுக்கு தைத்து கொடுத்துட்டு இருக்கேன்" என்று கூறவும் அருணாச்சலம் சாரதாவின் பட்டும் படாத பேச்சை கண்டு மனம் வெதும்பினார்...
தவறு அவரது பக்கம் தானே சாரதாவின் கோபம் நியாயம் தானே என்று எண்ணியவர்,"சாரதா உனக்கு என் மேல கோபம் தானே எனக்கு தெரியும் சாரதா!!" என்று கூறினார்...
"எனக்கு யார் மேலயும் கோபம் இல்லைங்க நான் உங்க மேல கோபப்பட்டு என்ன பிரயோஜனம் ஆனா இனிமேல் நீங்க என்னை பார்க்க வராதீங்க" என்று கூறவும் அருணாச்சலம் அதிர்ந்தார்...
"ஏன் சாரதா இப்படி சொல்ற??? என்று கேட்கவும், "உங்களுக்குனு இப்போ ஒரு குடும்பம் ஆயிடுச்சு அதை பாருங்க நீங்க அந்த குடும்பத்தை பார்த்தாலே நீங்க உங்க குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு உண்மையாக மாறிடுவீங்க... நடுவுல வந்த நான் நடுவுலயே போயிடுறேன்... இது உங்க மேல நான் கோபத்திலயோ வருத்தத்திலயோ சொல்லல நல்லா யோசிச்சு எடுத்த முடிவு தான்" என்று கூறினார்...
அருணாச்சலம் அதன் பிறகு என்னென்னவோ கூற சாரதாவின் மனதை மாற்ற முடியவில்லை. இறுதியாக அருணாச்சலம் சாரதாவிடம் தோற்று ,"சாரதா உன்னை பார்க்க வரக்கூடாதுன்னு சொல்ல உனக்கு உரிமை இருக்கு ஆனால் என் பிள்ளைகளை பார்க்க வரக்கூடாதுன்னு சொல்ல உனக்கு உரிமை இல்லை எனக்கு எப்போ வரணும்னு தோணுதோ அப்ப நான் வருவேன் பார்த்துட்டு போவேன்" என்று கூறிவிட்டு சென்றார்...
சாரதா அவருக்காகவும் அவரது குடும்பத்திற்காகவும் தான் அவரை விட்டுக் கொடுக்க தீர்மானித்தார் ...அப்படி இருக்க அருணாச்சலம், வைதேகி தம்பதியினருக்கு ஆதி பிறந்தான்...அருணாச்சலம் சாரதாவையும் விட்டுக் கொடுக்காமல் வைதேகியையும் விட்டுக் கொடுக்காமல் மாறி மாறி சென்று வந்தார்...
ஆனால் சாரதா எப்போது அருணாச்சலம் வேறொரு பெண்ணை தீண்டினாரோ அதன் பிறகு கணவனே ஆனாலும் அவரை தன்னருகே விட்டது கிடையாது...அவர் கூறியது போல அவரது பிள்ளைகளை அவர் பார்க்கலாம் அவர் விரும்பும் வரை என்று எண்ணி ஒதுங்கிக் கொண்டார்.... பிள்ளைகள் அருணாச்சலத்தின் மீது உயிராக இருந்தனர்...
சாரதா எப்பொழுதும் கூறும் அதே பொய்யை தான் கூறியிருந்தார் அப்பா வெளியூரில் வேலை செய்கிறார் என்ற பொய் அதேபோல இந்த பக்கம் ஆதியிடம் அப்பாவுக்கு வெளியூரில் வேலை மீட்டிங் என்று வைதேகி பொய் கூறி விடுவார்... வைதேகிக்கு தன் செய்வதும் தெரியாமல் இல்லை ஆனால் அதை ஒப்பு கொண்டு தானே அவர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்...அவரை பொறுத்தவரை தாலி கட்டியவன் உடன் வாழ வேண்டும் அவ்வளவு தான் ...
இப்படியே சென்று கொண்டிருக்க ஆதி மற்றும் ஆத்ரேயனுக்கு இருவருக்கும் அருணாச்சலம் என்றால் உயிர் அவர் எப்போது வருவார் எப்போது தங்களுடன் இருப்பார்கள் என்று இருவரும் காத்து இருப்பார்கள் அருணாச்சலமும் ஏமாற்றாமல் வருவார்...
இப்படியே காலங்கள் போக பிள்ளைகள் வளர்ந்து ஆத்ரேயனுக்கு 16 மற்றும் ஆதிக்கு 15 வயது ஆகி இருந்தது அவர்களுக்கு... அமிர்தாவுக்கு 22 வயது ஆகியிருந்தது ...சாரதா அமிர்தாவுக்கு திருமண ஏற்பாடுகள் எல்லாம் செய்தார்...
பிள்ளைகளிடம் எல்லாம் கணவர் வெளியூரில் வேலை செய்வதை பற்றி கூறியிருப்பதால் மாப்பிள்ளை வீட்டாரிடமும் அதே பொய்யை கூறி இருக்க அவர்களும் சரி என்று ஒப்புக் கொண்டனர்...
இந்த விஷயத்தை அருணாச்சலம் வந்தபோது ஆத்ரேயன் கூறி இருக்க அருணாச்சலம் மிகவும் அகம் மகிழ்ந்தார்... பிறகு தனியாக சாரதாவிடம்," நான் இல்லாமல் கல்யாணம் பேசி முடிவு பண்ற அளவுக்கு வந்துட்டியா???" என்று கேட்டார்..
அதற்கு சாரதாவிடம் பதில் இல்லை ,"நான் தானே முன்னாடி நின்னு என் மகளுக்கு என்ன தேவை என்று பார்க்கணும் எனக்கு தான் யாரும் இல்லை நல்வழி சொல்ல ஆள் இல்லை... ஆனால் என் மகளுக்கு அம்மா நான் இருக்கேன் நான் செய்யணும் இல்ல" என்று கூறினார்... அதை கேட்டதும் அருணாச்சலம் அதிர்ந்தார்.. தான் என்ன செய்தும் இவள் மனதை மட்டும் அவரால் கரைக்க முடியாமல் போய்விட்டதே என வருந்தினார் ...
பிறகு ஒன்றும் பேசாமல் அவர் ஊருக்கு திரும்பி செல்ல அந்த நேரத்தில் அவருக்கு ஆக்சிடென்ட் ஆனது.... அதில் படுகாயம் அடைந்த அருணாச்சலம் கை கால்கள் செயலிழந்து போக செயல் இழந்து நடை பிணமாக மாறினார்....
அவர் உயிர் பிழைத்ததே பாக்கியம் என்ற செய்தி தான் மருத்துவர்கள் இடமிருந்து வந்தது.. இனி காலம் முழுவதும் அருணாச்சலம் இப்படி வீல்சேரில் வாழ்க்கையை வாழ வேண்டியதுதான் என்ற நிலை வந்தது...
அப்படி இருக்க சாரதாவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை ...கல்யாணத்திற்கு இதோ, அதோ என நாட்கள் நெருங்கி விட்டது ....அன்னைக்கு பேசும்போது கூட வருத்தப்பட்டு அவர்கிட்ட சொல்லாம நான் கல்யாணத்துக்கு முடிவு பண்ணிட்டேன்னு வருத்தப்பட்டார்... அதுக்குன்னு சொல்லி கல்யாணத்துக்கு வராமல் போயிடுவாரோ என்று எண்ணி பயந்தார்...
அதிலும் பிள்ளைகள் கேள்வி கேட்டு அவரை தொல்லை செய்ய அவருக்கு பதில் கூற முடியாமல் திண்டாடினார் ..."அம்மா,அப்பா ஏன் வரல??? அப்பா இன்னும் வரல கல்யாண வேலை எல்லாம் நீங்க மட்டும் தனியா செய்யறிங்க???அப்பாவுக்கு இப்போ கூட லீவ் இல்லையா???" என்று கேள்வி தான் அவருக்கு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது ...
அப்படி இருக்க சாரதாவுக்கு தான் அருணாச்சலத்தை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை.. இது போன்ற நிலையை இத்தனை வருடத்தில் அருணாச்சலம் அவருக்கு கொடுத்ததில்லை என்றாலும் தானாக அவரைத் தேடி செல்ல மாட்டோம் என்ற பிடிவாதம் இருந்தது... இந்த பக்கம் அருணாச்சலம் தேறி வீல்சேரில் வீட்டுக்கு வந்தார்... அவர் மனம் முழுவதும் தான் பெற்ற மகளின் திருமணத்தைக் கூட பார்க்க முடியவில்லை என்பதுதான்..
அதோ இதோ இன்று தான் அமிர்தாவின் திருமணம் என்றாகி போனது.. அனைவரின் கேள்வியும் ,"உன்னுடைய அப்பா எங்கே???" என்பதுதான் கேள்வியாக இருந்தது...," அவர் இப்ப வந்திடுவார் அப்போ வந்துருவார்" என்று சாரதா கூறி சமாளிக்க அவர்கள் அனைவருக்கும் சந்தேகம் வந்தது...
"ஏங்க அப்பான்னு ஒருத்தர் இருக்காரா இல்லையா ஏதோ ஒன்னு ரெண்டு முறை தான் அவரைப் நாங்க பார்த்திருக்கோம் பேசி இருக்கோம்... மத்தபடி எல்லாமே நீங்க தான் பேசுறீங்க முடிவு பண்றீங்க??? என்ன நடக்குது இங்கே பொண்ணு கல்யாணத்தை விட்டுட்டு அப்படி என்ன வேலை செய்யறார்??" என்று கேள்வி வந்தது...
மூவரும் கையை பிசைய," உன்னோட அப்பா வந்தால் தான் கல்யாணம் " என்ற நிலை வர சாரதா தன் மகளின் திருமண வாழ்க்கை முடிந்து விடுமோ என்ற பயத்தில் கையை பிசைந்து கொண்டிருக்க அந்த சமயம் பார்த்து யாரோ ஒரு நபர் சாரதா பற்றி தவறாக கூற அங்கே கல்யாண மேடையில் சாரதா ஆத்ரேயன்,அமிர்தா மூவரும் அவமானப் பட்டனர்... அதாவது," பெரிய குடும்பத்தில் பிறந்த அருணாச்சலத்தின் வப்பாட்டி தான் சாரதா அதற்கு பிறந்த குழந்தைகள் தான் இவர்கள்" என்ற பேச்சு அடிபட்டது அதை கேட்டதும் மாப்பிள்ளை வீட்டார் கல்யாணத்தை நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்...
அவமானம் தாங்க முடியாத அமிர்தா ஆசைப்பட்ட வாழ்க்கையும் கிடைக்காமல் இந்த அவமானத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள்... அவளிடம் எவ்வளவோ தாய் அறிவுரை கூறியும் அவள் அழுத்தத்திலிருந்து வெளியேறாமல் தாயிடம் நடித்து அனைவரும் உறங்கிய பின்னர் அவள் மீளா தூக்கத்திற்கு சென்று விட்டாள்...
தாயும் சகோதரியும் பேசுவதை எல்லாம் கேட்ட ஆத்ரேயன் அதிர்ந்து தான் போயிருந்தான்... அதைவிட அதிர்ச்சி அவனுக்கு அவனுடைய அக்கா தவறான முடிவை எடுத்ததுதான் அக்கா தன்னுயிரை மாய்த்துக் கொண்டதை கண்ட சாரதா இடிந்து போய் அமர்ந்திருக்க அக்காவுக்கு சடங்குகளை எல்லாம் செய்து விட்டு வந்தவன் இறுகி இருந்தான்...அவனால் அதில் இருந்து வெளியே வர முடியவில்லை...
அவனுக்கு அவனுடைய அம்மா மீது கோபம் வந்தது.." அம்மா இப்பவும் ஏன் இப்படி இருக்கீங்க??? வாங்க அப்பாகிட்ட போகலாம்??" என்று கூற அவரோ வர மறுத்தார்...
ஆனால் ஆத்ரேயனுக்கு பொறுமை இல்லை,"அப்போ அவங்க எல்லாரும் சொல்றது மாதிரி நீங்க....????? அவர் உங்களை வச்சு இருந்தாரா ???" என்று கேட்க கூடாத கேள்வியை சாரதாவை பார்த்து கேட்டான்...
அதைக் கேட்டதும் மகன் தாயைப் பார்த்து கேட்க கூடாத கேள்வியை ஆத்ரேயன் கேட்டதும் அதிர்ந்த சாரதா கதறி அழுதார் ...
"நான் அவரை காதலித்தது தவிற நான் எந்த பாவமும் செய்யல ஏன் யாரும் என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க??? என்னை துடிக்க துடிக்க அறுக்குறீங்களே??? ஏன்????அவர் முதல் அவருக்கு பிறந்த பிள்ளைகள் வரை ஏன்??? இப்படி இருக்கீங்க??? அவருடைய காதலுக்காக எல்லாமே இழந்துட்டேன் இதோ 22 வயசு வரை வளர்த்த என் செல்லத்தை பறிகொடுத்துட்டு நிக்கிறேன்" என்று தவிக்க தாயின் அழுகையை பார்த்ததும் துடிதுடித்தவன் முகம் இறுகியது.." நீங்க சொல்றதெல்லாம் உண்மையா இருந்தா வாங்க எனக்கு அவரை பார்த்தே ஆகணும் "என்று கூறினான்....
அவனுக்கு அவரைப் பார்த்தே ஆக வேண்டும் இப்படி ஒரு செயலை செய்த தந்தையை பார்த்து நாலு கேள்வி கேட்டே ஆக வேண்டும் தான் அதிகமாக இந்த உலகத்தில் பாசம் வைத்திருக்கும் மனிதன் இப்படி ஒரு செயலை செய்தாரா என்று நம்ப முடியாமல் தாயை இழுத்துக் கொண்டு தாய் கூறிய அட்ரஸ்க்கு சென்றான்..
அங்கு காவலாளி உள்ளே விட மறுக்க அந்த வழியாக டென்னிஸ் கிளாஸ் சென்று வந்து கொண்டிருந்த ஆதியின் கண்களில் ஆத்ரேயன் மற்றும் அவனது தாய் பட்டனர்...
" சொல்லுங்க என்ன விஷயம் எதுக்கு வந்து இருக்கீங்க யாரை பார்க்கணும்???" என்று கூற ஆத்ரேயன் ஆதியிடம்," அருணாச்சலத்தை பார்க்கணும்" என்று கூறினான் ஓ தந்தையை பார்க்க வந்திருப்பார்கள் போல என்று கூற," வாங்க நான் அழைச்சிட்டு போறேன்" என்று கூறி அவன் அழைத்து சென்றான்...
அங்கு சென்றதும் பூகம்பமே வெடித்தது.. யார் இது என்று குலசேகரி முதல் வைதேகி வரை அதிர்ந்து பார்க்க வீல்சேரில் அமர்ந்து கொண்டிருந்த அருணாச்சலத்தை கண்டதும் சாரதாவுக்கு இரக்கம் கூடியது... ஆனால் ஆத்ரேயனுக்கு இரக்கம் வரவில்லை ஏனெனில் இழந்தது அவன் அல்லவா தன்னை ஒத்த உருவமாக நிற்கும் ஆதியை கண்டதுமே அவனுக்கு தெளிவாக புரிந்து விட்டது தனது தாய் கூறியது போல தனது தந்தைக்கு இரண்டு குடும்பம் உள்ளது என்பதை புரிந்து கொண்டான்... ஆனால் தந்தை, தந்தை என்று கூறிக் கொண்டிருந்தவனுக்கு தன் தகப்பனை பிரித்து பார்க்க முடியவில்லை...
ஆனால் அருணாச்சலத்திற்கோ இவர்களை கண்டதும் கண்களில் அருவியாக கண்ணீர் கொட்டியது ...அவரது மனம் அவர்களிடத்தில் செல்ல வேண்டும் என எண்ணுகிறது ஆனால் அவரால் முடியவில்லை..
ஒரு ஆள் சகாயம் இல்லாமல் அவரால் தான் எந்த வேலையும் செய்ய இயலாதே அப்படி இருக்க அவர் கண்களாலேயே நலம் விசாரிக்க துவங்கினார்... ஆனால் சாரதாவை மறைத்து நின்ற ஆத்ரேயன் அவரைப் பார்த்து," என்ன பாக்கறீங்க பொண்ணு கல்யாணத்தை வெச்சுட்டு இங்க வந்து உட்கார்ந்து இருக்கீங்க??? உங்க பொண்ணு எப்படி இருக்கான்னு பாக்கறீங்களா??? உங்க பொண்ணு சந்தோஷமா மேலோகம் போயிட்டா செத்துப் போயிட்டா ? அவ கல்யாணம் எல்லாம் நின்னு போச்சு..உங்களால தான்...
அதாவது இதோ உங்களை காதலிச்ச இந்த மனுஷி உங்களை வச்சிருக்கான்னு சொல்லி கல்யாண மேடையில அசிங்கப்பட்டு என் அக்கா செத்துட்டா உங்களுக்கு என்ன??? உங்களைப் பார்த்துக்க இத்தனை பேர் இருக்காங்க ஆனா அசிங்கப்பட்டு நிற்கிறது நாங்க தானே உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு இவங்களை ஏமாத்த எப்படி மனசு வந்துச்சு..அப்பான்னு பாசம் வைத்திருந்த எங்ககிட்ட இப்படி ஒரு செயலை செய்ய உங்களுக்கு எப்படி மனசு வந்தது??? யாருமில்லாத என் அம்மாவுக்கு இப்படி செயலை எப்படி மனசு வந்துச்சு சீ உங்களை எல்லாம் பெத்த அப்பான்னு சொல்ல அசிங்கமா இருக்கு" என்று கூறினான்...
அருணாச்சலத்திற்கு பதில் இல்லை பதில் இருந்தாலும் அவரால் கூறியிருக்க முடியாது வைதேகிக்கு புரிந்து போனது வந்தது யார் என்று குலசேகரி முதல் ரிஷி வரை அனைவருக்கும் ஆத்ரேயனை கண்டதும் புரிந்து போனது அருணாச்சலத்தின் மறு உருவமாக பிறந்திருந்தான் ஆத்ரேயன்..
அவர்கள் தன்னை யார் என்று கூறாமலேயே அனைவருக்கும் புரிந்து போக குலசேகரி எதுவுமே தெரியாதது போல ,"எங்க வந்து என்ன பேச்சு பேசிட்டு இருக்க ஊர்ல போறவனுக்கு எல்லாம் என் மகன் அப்பா ஆக முடியுமா ??? உங்க அம்மா எவன் கூட இருந்தான்னு உங்க அம்மாகிட்ட கேளு" என்று கூறினார்...
அதை கேட்டதும் பெரியவர் என்று கூட பாராமல் ஆத்ரேயன் அவரது கழுத்தை பிடித்திருந்தான் 16 வயது சிறுவன் என்று எண்ணிவிட முடியாது அப்போதே கை கால்கள் நீளமாக சற்று ஆரோக்கியத்தோடும் அவன் இருக்க அவன் பிடித்த பிடியில் குலசேகரி அதிர்ந்தார்.. பிறகு ரிஷி வந்து அவனை பிடித்து மாற்றினார்..
"எங்கம்மா பரிசுத்தமானவங்க தான் உங்க மகனை அப்படி உங்களுக்கு சொல்ல முடியுமா??? உங்க மகன் தான் சுயநலமாக ரெண்டு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்து இருக்காங்க???" என்று கத்தினான்...
ஆதிக்கு இதை கேட்டதும் அதிர்ச்சி தாளவில்லை அவனும் தந்தை என்றால் உயிரை விட அதிகமாக நேசித்திருக்க இப்போது வேறு ஒருவன் வந்து பங்கு போடவும் ஒற்றைப் பிள்ளையான ஆதிக்கு அது முடியவில்லை அவன் என்னதான் கட்டினாலும் கதறினாலும் ஆதிக்கு ஆத்ரேயனை பிடிக்கவில்லை...
தனக்கு துணையாக பேச தந்தை கூட இன்றி அனைவரும் சாரதாவை அசிங்கமாக பேச அதையும் தாங்க முடியாமல் ஆத்ரேயன் ஒற்றை ஆளாக இருந்து ரிஷி பல்லவி குலசேகரி மூவரையும் பதம் பார்த்து அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தான்... ஒரு கட்டத்தில் ரிஷி குலசேகரி கூறியது போல காவலாளியை வரவழைத்து அடித்து அந்த வீட்டில் இருந்து இறக்கி விட்டனர் ..
அதன் பிறகு அவனுள்ளே ஒரு வெறி உருவானது... ஆத்ரேயன் அவர்களையெல்லாம் பழிவாங்க வேண்டும் என்று எண்ணினான்....
ஊரார் எல்லாம் இவர்களை தவறாக பேச சிறுவயதில் எல்லாம் ஒடுங்கி போனவன் காலேஜ் படிக்கும் போதிலிருந்து அதிலிருந்து வெளியே வந்து யார் என்ன பேசினாலும் கவலையில்லை என்பது போல வாழத் துவங்கியவன் பிறகு கொஞ்சமாக மற்றவர்களை பேசவே விடாமல் அவன் மட்டுமே முன்னிலை வகிக்கும் வகையில் தன்னை உயர்த்தி கொண்டான் ஆத்ரேயன்... ஆனால் என்ன இருந்தாலும் அவனுக்கு தன் தாய் மீதும் சில பல கோபம் இருந்தது என்னவோ உண்மைதான்..
என்னதான் தந்தை காதலித்து தன் இரண்டு பிள்ளைகள் பெற்ற பின்னர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தாலும் அவரை வீட்டுக்குள் விட்டிருக்க கூடாது அதற்கு பதிலாக தந்தை இல்லை அவர் இறந்து விட்டார் என்று கூறி வளர்த்தி இருக்கலாம் ஆனால் தன் தாய்க்கு காதலையும் விட முடியாமல்
பிள்ளைகளையும் விட முடியாமல் அவர் தடுமாறி இருக்க அதில் பாதிக்கப்பட்டது என்னவோ அவன் மட்டும் தான் அதனால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக வளர வளர தாயிடம் பேச்சை குறைத்துக் கொண்டான்...
