Share:
Notifications
Clear all

அத்தியாயம் 14

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

குமரன் குடில்...

பரந்து விரிந்து மிக பிரம்மாண்டமாக காட்சி அளித்து கொண்டிருந்தது...இந்த மாளிகைக்குள் தனக்கு உயிர் இருக்கும் வரை கால் எடுத்து வைக்க கூடாது என எண்ணி இருந்தான் ஆத்ரேயன்...

தான் செத்தாலும் பரவாயில்லை என்ன தேவை என்றாலும் இதற்குள் நுழைய கூடாது என எண்ணி இருந்தான்...கடந்து போன சம்பவங்கள் அப்படிபட்டவை...ஆனால் அவனால் இன்று முடியவில்லை...இன்று அவன் நுழையவில்லை என்றால் அவர்களுக்கு எல்லாம் தொக்காக போய் விடும் அதற்கு விட கூடாது என்று நெற்றியை நீவி விட்டு கொண்டே வண்டியை செலுத்தினான்...அவனது கண்ணில் கோபம் தாண்டவம் ஆடியது...

அவனும் அவன் அம்மா என்று சுருங்கி இருந்த அவனது குடும்பம் அவனது மனைவி மற்றும் அவனது மனைவியின் வீட்டார்க்கு பிடிக்கிறதோ இல்லையோ??? அவர்கள் அவனை பொறுத்தவரை அவனது குடும்பம் தான்.. அப்படி இருக்க இன்று அவன் வீட்டு பிள்ளையை அதுவும் பெண் பிள்ளையை தீண்டினால் சும்மா இருப்பானா???

நாலு வார்த்தை என்ன??? நூறு வார்த்தை என்றாலும் பேசி விட்டு தான் செல்ல வேண்டும் என்று எண்ணி கொண்டிருந்தான்...இதோ வந்தும் விட்டான்..தான் ஒன்றும் இவர்களிடம் கையேந்த வரவில்லையே என்ற எண்ணம் அவனுக்கு வர இதோ அவனது கார் அதி வேகத்தில் உள்ளே நுழைந்தது...

வீட்டின் முன் போடப்பட்டு இருந்த அந்த இருக்கையில் அமர்ந்து சூடான காபியை சுவைத்து கொண்டு இருந்தார் ரிஷி...

ஆதியின் சித்தப்பா அருணாசலத்தின் தம்பி அவரும்,அவரது குடும்பமும் இங்கே தான் இருக்கிறார்கள்...அவரும் இவர்களுடைய குடும்பத்திற்கு சொந்தமான தொழிலை தான் பார்த்து வருகிறார்...

அவர் பார்வையில் ஆத்ரேயன் காரில் இறங்குவது தென்பட அவனை கண்டதும் அவர் முகம் இறுக அவர் அவனிடத்தில் சென்றார்..

அவன் முகமோ கடுப்பில் இருக்க அவனை குறித்து எல்லாம் தெரிந்தாலும் ,"என்ன இந்த பக்கம்??? ஏதாவது உதவி வேணுமா???"என்று ஒன்றுமே தெரியாதது போல நக்கலாக கேட்டார் அவர்...

அவரது நக்கலை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவன் ஒன்றும் சிறு குழந்தை அல்லவே,"கடவுள் என்னை இப்போ அந்த இடத்தில் வைக்கல மிஸ்டர் ரிஷி...அதுவும் போயும் போயும் உங்ககிட்ட எல்லாம் கேட்கிற நிலையில் நான் இல்லை..உங்களுக்கு தேவை என்றால் சொல்லுங்க நான் தரேன்.. ஸ்பை வைச்சு எல்லாம் நான் எவ்ளோ சம்பாதிக்கிறேன்னு கேட்க தெரிஞ்ச உங்களுக்கு தெரியாதா??? இப்போதைய என்னோட நிலைமை???" என்று அதே நக்கலில் பதில் அளித்தான் ஆத்ரேயன்..

அவர் முகம் அதை கேட்டதும் அவருக்கு காந்தியது..."என்ன உண்மையை நான் கண்டு பிடிச்சிட்டேன்னு ஷாக்கா இருக்கா??? மோதும் போது மோதுற ஆள் எப்படி எந்த அளவுக்கு இறங்குவாங்கன்னு தெரிய வேண்டாமா???? அதான் நீங்க என்ன பண்ணினாலும் எனக்கும் தெரிஞ்சுடுது!!!"என்றான்...

"என்ன இங்க வந்து பிரச்சனை பண்ணிட்டு போகலாம்னு வந்திருக்கியா???" என்று கேட்டார் ரிஷி

"கண்டிப்பா பிரச்சனை பண்ண தான் வந்து இருக்கேன் கூப்பிடுங்க உங்க அண்ணன் மகனை அவனை பார்த்து ஒரு நாலு வார்த்தையாச்சும் எனக்கு கேட்டே ஆகணும்...என்ன நினைச்சிட்டு இருக்கான் அவன்??? அண்ட் உங்களுக்கும் உங்க அண்ணன் மகனுக்கும் சொல்லிக்கிறேன்....தேவை இல்லாமல் என் ரூட்ல கிராஸ் பண்ணிட்டு இருக்காதீங்க தொழில் தர்மம் அது இதுன்னு நான் யோசிக்க மாட்டேன் மொத்தமா அழிச்சிட்டு போயிட்டே இருப்பேன்" என்று கூறினான்..

அதைக் கேட்டதும் ரிஷியின் முகம் மேலும் இறுகியது... அவன் எதை கூறுகிறான் என்று அவருக்கு தெரியாமல் இல்லை அவன் எந்த தொழிலை எடுத்தாலும் அதை எப்படி முடக்கலாம் என்று சுற்றிக் கொண்டிருக்கும் ஆதி மற்றும் ரிஷியை அவன் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான்...

அதனால் அவன் எச்சரிக்க," என்னடா என் வீட்ல வந்து என்னையே மிரட்டறயா???? நீ இப்பதான் இந்த இடத்துக்கு வந்திருக்க பரம்பரை பரம்பரையா நாங்க இதே இடத்தில் தான் இருக்கோம் புரியுதா???" என்று கூற," நீங்க பரம்பரை பரம்பரையா பண்ணின விஷயத்தை நான் அஞ்சு வருஷத்துல பண்ணி இருக்கேன்... அப்போ இன்னும் பத்து வருஷம் போனா என்னால உங்க பரம்பரையை அழிக்க முடியும்... அதனால கொஞ்சம் என்கிட்ட ஒதுங்கி இருக்கிறது உங்களுக்கு நல்லது நான் இப்போது வரைக்கும் உங்களை அழிக்க வேண்டும் என்று நினைக்கல அப்படி நினைக்க வச்சிடாதீங்க" என்று கிட்டத்தட்ட மிரட்டவே செய்தான்...

"ஏய் யார்கிட்ட என்ன பேசிட்டு இருக்க உன்னை எல்லாம் எனக்கு சமமா நிக்க வச்சு பேசிட்டு இருக்கிறதே தப்புடா!!!!" என்று அவனை அடிக்க ரிஷி பாய ரிஷி சுருண்டு அடுத்த நொடியே விழுந்திருந்தார் ..."மேல கை வைக்கிற பார்த்துட்டு இருப்பேன்னு பாக்குறியா கொன்னுடுவேன்" என்று கூறி ரிஷி பிடித்த சட்டையின் கசங்கிய பாகத்தை சரி செய்து கொண்டே கூறினான் ஆத்ரேயன்...

அதற்குள் வெளியே நடக்கும் சத்தத்தை கேட்டு குலசேகரி வைதேகி ,ரிஷியின் மனைவி பல்லவி மற்றும் ஆதி ,வசுந்தரா அனைவரும் வெளியே வந்தனர்... வைதேகி வீல்சேரில் அருணாச்சலத்தையும் அழைத்து வந்திருந்தார்..

முதலில் ஆத்ரேயனின் கண்கள் தன் தந்தையை தழுவியது... ஒரே ஒரு நொடிக்கும் குறைவாக எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டார் என எண்ணினான்..

அடுத்த நொடியே அவன் இந்த நிலைக்கு காரணமாக இருந்த அதே அருணாச்சலத்தின் மீது கோபம் வந்தது..." ஏன் ஒவ்வொரு தடவையும் என்னை நீங்க இப்படி கொண்டு வந்து நிறுத்துறீங்க உங்களால தான் நான் இப்படி இருக்கேன்" என்று மானசீகமாக அவரிடம் பேசினான்...

அது அவருக்கு புரிந்ததோ என்னவோ இவனை கண்டதும் கண்களில் நீர் வந்தது... ஆனால் யாரும் காணாமல் துடைக்க கூட அவரால் முடியாது கை கால்கள் செயலிழந்து கிடக்க மனதுக்குள்ளயே ஓடிச் சென்று தன் மகனை அணைத்து முத்தமிட வேண்டும் என்று துடித்த கரங்களை அடக்கி கொண்டார் அருணாச்சலம்...

ஆதி மற்றும் குடும்பத்தினர் வரும்பொழுது அவர்கள் கண்களில் பட்டது என்னவோ ரிஷியை தான்...அதுவும் ஆத்ரேயன் அறைந்தது தான் மிக சரியாக பட்டது....அப்படி இருக்க தன் முன்னே தன் வீட்டில் வந்து தன் வீட்டாளை அடித்து விட்டான் என்று ஆதி ஓடி வந்தான்... அவன் ஓடி வரவும் வாடா வா என்று மனதுக்குள் எண்ணியிருந்தவன் முன்னால் வந்த ஆதி அவனது சட்டையை பிடித்து உலுக்க ஆத்ரேயன் ஒரு நொடி பாராமல் அவனது கழுத்தை பிடித்திருந்தான்..

இருவரும் யாருக்கு மீது யார் என்று தெரியாமல் இருவரும் ஒரே பலத்தோடு மோதி நிற்கவும் குலசேகரி வந்து இடையில் நின்றவர்,"ரோட்டில் போறவனை எல்லாம் வீட்டுக்குள்ள விட்டுட்டு என்ன பண்ணிட்டு இருக்கான் அந்த வெறும் பையன்????" என்று காவலாளியை திட்டினார்... அதற்குள் இருவரும் ஆளுக்கு ஒரு குத்தை விட்டு இருந்தனர்..அடுத்த அடி பாய போகும் போது ஆதியின் குடும்பம் முழுவதும் ஆதியிடம் நின்று அவனை பிடித்து இழுத்தனர்...

வசுந்தரா வேகமாக ஓடிவந்து ஆத்ரேயனின் கையைப் பிடித்து இழுக்க வைதேகி மற்றும் குலசேகரி ஆதியை பிடித்து மாற்றினர் ரிஷியின் மனைவி பல்லவி, ரிஷியை தூக்கி நிறுத்தினார்..

குலசேகரி அவனைப் பார்த்து ,"யாரைக் கேட்டு என் வீட்டுக்குள்ள வர கண்ட கண்டவங்க போறதுக்கு எல்லாம் இது என்ன சத்திரமா???" என்று கேட்டார்

அதைக் கேட்ட ஆத்ரேயன்," நீங்க சத்திரம் கட்டி விட்டு இருக்கீங்களா என்று எனக்கு தெரியாது ஆனால் நான் வந்தது என்னவோ உங்க பேரனை நாலு வார்த்தை கேட்டு போகத்தான் ஏன் அவனுக்கு பழிவாங்க என் வீட்டு பொண்ணு தான் கிடைச்சாளா???? என்று கேட்கவும் குலசேகரின் அதிர்ந்தார்...

ஆதியோ," நீ பண்ணினது தானடா நானும் பண்ணினேன்??? அப்ப மட்டும் உன்னுடைய நாடி நரம்பெல்லாம் இந்த அளவுக்கு கொதிக்கல இப்ப மட்டும் கொதிக்குது" என்று கேட்டான்..

"அப்போ அவ என்னுடைய மனைவியோட தங்கச்சி கிடையாது இப்போ அவ என்னுடைய மச்சினிச்சி உன்னுடைய வார்த்தையில்... இப்போ எனக்கு அவ என்னோட பாஷையில் தங்கச்சி முறை அவளை பாதுகாக்க வேண்டியது என் கடமை தான்... நீ மீச வச்ச ஆம்பளையா இருந்தா மோதறதா இருந்தா என்கிட்ட மோது புரியுதா ??? பொண்ணுங்களை தூண்டி விட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி நல்லவன் வேஷம் போட்டுட்டு இருக்காத!!!"என்றான் கடுமையாக...

குலசேகரிக்கு ஒன்றுமே புரியவில்லை..."ஆதி அப்படி என்ன பண்ணின??? இவன் வந்து கத்திட்டு கிடக்கிறான்???" என்று கூற," உங்க அருமை பேரன் என் வீட்டு பொண்ணை கடத்தி வைத்து விளையாடி இருக்கான் என்னை பழி வாங்குறானாமா வேற ஐடியாவே அவனுக்கு கிடைக்கல போல" என்று கூறினான்... அதற்கு குலசேகரி தன் பேர மகனுக்கு துணையாக,"நீ மட்டும் அவனுக்கு பார்த்து வெச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாமா????" என்று கேட்டார்....

அதற்கு அவனும் அவரைப் பார்த்து,"எனக்கு புடிச்ச பொண்ணு நான் கல்யாணம் பண்ணிக்காம வேற யாரு கல்யாணம் பண்ணிப்பா??? அவ எனக்கானவ!!! இதோ பாருங்க நான் ஒன்னும் உங்க வீட்ல இருந்து எதையும் எடுத்துட்டு போக கிடையாது... எல்லாத்தையும் இழந்துட்டு தான் போயிருக்கேன்" என்று அருணாச்சலத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு கூறியவன்," ஆனா எனக்குன்னு இப்போ என் குடும்பம் இருக்கு...

அதை தொட்டா தொட்டவன் கையை வெட்டிருப்பேன்... இது மாதிரி டயலாக் பேசிட்டு இருக்க மாட்டேன் பக்கம் பக்கமா பேச எல்லாம் முடியாது... செஞ்சு முடிச்சுட்டு அதுக்கப்புறம் தான் பேசுவேன்... இப்போ உங்க பேரனுக்கு பேசுறேன் இனி உங்க மகனுக்காக இது போல வந்து பேச மாட்டேன்... உங்க மகன் எப்போ என்கிட்ட வாங்க போறார்னு தெரியல ஒதுங்கி இருக்க சொல்லுங்க" என்று கூறியவன்,"ஆமாம் நானும் தான் கல்யாணம் பண்ணினேன்... எனக்கு புடிச்ச பொண்ணு நான் ஆசைப்பட்ட பொண்ணு நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அதுல எனக்கு தப்பா எதுவும் தெரியல அவளையும் என்னால உங்க வீட்ல இழக்க முடியாது புரியுதா????" என்று கூறியவனின் பார்வை வசுந்தராவின் மீது இருந்தது...

அவன் பார்வையாலேயே ,"ஏண்டி இங்கே வந்து மாட்டிக்கிட்ட???" என்று கூற அவள் வாய் பேச முடியாமல் தலையை கவிழ்த்துக் கொண்டாள்... ஆதியின் பார்வையும் தன் மனைவியின் மீது தான் இருந்தது அவன் அடிக்கிறான் போய் அவன் பக்கத்தில் நின்று கொண்டு இருக்கிறாளே என்று எண்ணினான்..அனைவரின் பார்வையும் அதே தொனியில் தான் இருந்தது..ஆனால் அதை பற்றி எல்லாம் அவள் கவலை கொள்ளவில்லை...தன் பேரன் தவறு செய்திருக்கிறான் என்பதை கேட்டதுமே குலசேகரின் அதிர்ந்து பார்க்க ஆதியின் முகம் இருண்டது...

குடும்ப கௌரவத்தை இப்படி நான்கு வேலையாட்கள் முன் வாங்கி விட்டானே என எண்ணினார்... அவர் சொந்த வீட்டுக்கே வந்து மகனையும் பேர மகனையும் அடித்து விட்டானே இந்த நாலு பேர் 40 பேரிடம் கூறினால் என் குடும்ப மானம் என்ன ஆவது என்று எண்ணியவர் அதிர்ந்து பார்க்க ஆத்ரேயன்,"ரொம்ப பாக்காதீங்க இன்னும் அசிங்க படத்தான் போறீங்க இவனுங்க இரண்டு பேர் மூலமா" என்று கூறினான்..

பிறகு ஆதியை பார்த்து,"நானும் ஒரு பொண்ணு கழுத்துல உன் பார்வைக்கு இழுத்துட்டு போய் மிரட்டி கல்யாணம் பண்ணினேன் தான் ..நான் இல்லைன்னு சொல்லல ..அது என்னோட தனிப்பட்ட விசயம்...

ஆனால் அவளோட பெயர் எங்கேயாவது உன்னை விட்டு என்னை கல்யாணம் பண்ணிட்டான்னு அசிங்கமா தப்பா எவனாவது ஒரு வார்த்தை பேசி இருப்பாங்களா??? ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைச்சுகிட்டா அப்படின்னு தான் பேசிட்டு இருக்காங்க!!! இனியும் அப்படித்தான் பேசுவாங்க!!! என் மனைவியை எப்படி பார்த்துக்கணும் அவளுக்கு எப்படி அவ பெயர் கெட்டு போகாமல் இருக்கணும்னு எனக்கு தெரியும்... ஏன்னா அவ கூட நான் வாழணும் சந்தோசமா இதே பூமியில வாழணும் அப்போ அவ என்னாலயோ இல்லை மத்தவங்களாலயோ அவமானப்பட்டா நான் அவமானம் பட்ட மாதிரி... என்னால அவ காலடி மண்ணை கூட ஒருத்தன் தப்பா பேசுறத பொறுத்துக்க முடியாது இனி அவ குடும்பத்தை தாக்கி இருக்க!!! இதுவே கடைசியாக இருக்கட்டும் இனி உன் பார்வை என்னை தவிர என்னை சார்ந்தவங்க மேல பட்டுச்சு பார்த்திட்டு சும்மா இருக்க மாட்டேன்" என்று எச்சரித்தவன் முதன் முறையாக தன் மனைவியின் மீது தான் வைத்திருக்கும் நேசத்தை அவன் அறியாமலேயே கூறியவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்..கிளம்பும்போது ஒரே ஒரு பார்வை அருணாச்சலத்தை பார்க்கவும் அவன் தவறவில்லை..

அவன் சென்றதும் மழை பெய்து சோர்ந்தது போன்ற இருந்தது அந்த வீடு குலசேகரி தன் பேரனை பார்த்து," நீ அப்படி செய்தியா அவன் சொன்னது போல செய்தியா???" என்று கேட்டார்

அவன் பேசி சென்றதே இன்னும் அவனது காதுக்குள் ஒலித்து கொண்டு இருக்க அதில் கோபம் அடைந்தவன்,"ஆமாம் பாட்டி பண்ணினேன் அவன் எனக்கு பண்ணினதுக்கு நான் திருப்பி பண்ணனும்னு நினைச்சேன் போதுமா???" என்று கூற அதைக் கேட்ட வசுந்தரா," நாய் தான் இப்படி பண்ணுமாம் ஒருத்தன் பண்ணினான்னு இது போல திருப்பி செய்யறதுக்கு பேரு வேற" என்று அவள் கூறினாள்...

அதை கேட்டு அனைவரும் அதிர குலசேகரி முன்னால் இவள் வேறு என எண்ணியவன்,"வாயை மூடிட்டு இரு உன்கிட்ட யாரும் கேட்கல" என்று கூற ,"நானும் தான் உன்கிட்ட சொல்லல என் வாய் நான் பேசறேன்" என்று கூறியவள் வந்த வேலை முடிந்தது என்பது போல சென்று விட்டாள்... அதேநேரம் அவள் மனம் மகிழ்ச்சியாக இருந்தது..தன் நண்பன் அவன் மனைவியுடன் பாசமாக இருக்கிறான் சந்தோஷமாக வாழ்கிறான் அவளை மதிக்கிறான் என்பதை எண்ணியதும் அவளுக்கு ஏதோ மனதில் அரித்துக் கொண்டிருந்த பாரம் இறங்கியது போன்ற உணர்வு வந்தது..

குலசேகரி ஆதியிடம் வந்து,"தம்பி நீ இப்படி செஞ்சிருக்க கூடாது அவனை நம்ம வீட்டுக்குள்ள வரவிட்டு இருக்க கூடாது அவன் பேசுற அளவுக்கு நாம நடந்துட்டு இருக்க கூடாது" என்று கூறினார்...

அதைக் கேட்டு அவன்,"என்னை என்ன பாட்டி செய்ய சொல்றீங்க அவன ஓட ஓட விரட்டணும்னு தோணுது ஆனா என்னால முடியல" என்று கூறினான்...

குலசேகரியோ அவன் பேசுவதை கேட்டு அதிர்ந்து பார்த்து,"ஆதி இனி அவன் கிட்ட மோதவும் வேண்டாம் குடும்ப மானத்தை வாங்கவும் வேண்டாம் நமக்குன்னு ஒரு தராதரம் இருக்கு அதை என்னால கெடுத்துக்க முடியாது ..இனி அவன் இந்த வீட்டுக்குள்ள வர கூடாது..." என்றார்..

"அப்போ அவனை கண்டு பயந்து ஒதுங்கி போக சொல்றீங்களா???"

நான் ஒதுங்கி போக சொல்லல அவனை அடிப்பதா இருந்தா அவனோட அறிவோட மோது, அவனோட திறமையோட மோது, அவனோட பலத்தோடு மோது அதை விட்டுவிட்டு பொண்ணுங்க மேல எல்லாம் கை வைக்காத"என்று கூறியவர் பார்த்து நடந்துக்க என்று கூறி விட்டு சென்று விட்டார்..

அவனோ ஆத்ரேயன் தன் வீட்டிலேயே வந்து தன்னை அசிங்கப்படுத்தி விட்டு சென்றதே மறக்க முடியாமல் அங்கு இருந்த பெரிய மரத்தில் ஓங்கி குத்தினான் ஆதி...

ரிஷி எழுந்து நின்று தன் தாயிடம் ,"அந்த வேலையை என்கிட்ட விடுங்க அவனை நான் பார்த்துக்கிறேன்" என்று கூறவும் ,"யாரும் எதுவும் செய்ய வேண்டாம் எல்லாரும் அவங்கவங்க வேலையை பார்த்தால் போதும்" என்று குலசேகரி கூறிவிட்டு சென்றார்...

செல்லும் அவரை பார்த்துக்கொண்டிருந்த ரிஷி மற்றும் ஆதி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள ரிஷி, ஆதியிடம்," நீ விடு அவனை நான் பார்த்துக்கிறேன் என் வீட்டில் வந்து என்னையவே கை வச்சிட்டு போயிட்டான்" என்று கூறவும் ஆத்திரமிகுதியில் இருந்த ஆதி," எனக்கும் அவனை ஏதாவது செய்யணும் சித்தப்பா" என்று ஒத்து ஊதினான் ஆதி... அவனின் ஆவேசத்தை கண்ட ரிஷி ,"நான் பார்த்துக்கிறேன் நீ கவலையை விடு" என்று கூறிவிட்டு சென்றார்....

பெரியவர் போனதும் தன் கணவரை அழைத்துக் கொண்டு தன் மகனிடம் வர அவனும் பாராமுகமாக நடந்து கொண்டான் ஆதி...."எதுக்காக இப்படி தேவையில்லாம பண்ணிட்டு இருக்க உங்களுக்குள்ள ஏதாவது சண்டைனா அவன் கிட்ட நேருக்கு நேரா மோது அதுக்குன்னு மத்தவங்கள உபயோகப்படுத்திட்டு இருக்காத" என்று வைதேகி கூறினார்...

"அம்மா இப்போதும் அமைதியா இருங்கம்மா..எதுவும் பேசாதீங்க... நீங்க அமைதியா இருந்து இருந்து தான் எனக்கு இப்படி ஆகி இருக்கு" என்று கூறியவன் தந்தையின் அருகே அமர்ந்து," ஏன் பா ஏன் எதனால அப்பா உங்க சுயநலத்துக்காக என்னை இப்படி நிக்க வச்சு இருக்கீங்க??? ஏன்??? என்னால உங்களை அவன் கூட பகிர்ந்துக்க முடியாதுப்பா??? நீங்க எனக்கு மட்டும் தான் அப்பா என்னதான் ஆனாலும் உங்களுக்கு அவனைத் தான் பிடிக்கும் இல்ல?? பாருங்களேன் அவன் போறான்னு சொன்ன உடனே உங்க கண்ணுல எப்படி கண்ணீர் வருது என்று ஆனால் அவன் என் சட்டையை பிடிச்சான் அது உங்களுக்கு வருத்தத்தை கொடுக்கல இல்லையா அப்பா!!!

உங்களுக்கு என்னை பிடிக்குமா அவனை பிடிக்குமா அப்பா" என்று அவரது முகத்தை பார்த்து கேட்டான் ஆதி..

அப்போதும் கண்ணில் அவருக்கு கண்ணீர் வர அவன் என்ன நினைத்தானோ ,"ஆனால் எனக்கு உங்களை மட்டும் தான் பா பிடிக்கும்" என்றான் ஆதி...

அருணாசலமோ மானசீகமாக,"எனக்கு உங்க இரண்டு பேரையும் பிடிக்கும்.. என்னோட வாரிசுங்க டா நீங்க இரண்டு பேரும் என்னோட இரண்டு கண்கள் மாதிரி இப்படி எதிரிங்க மாதிரி அடிச்சுக்கறீங்களே??? இதை எல்லாம் பார்க்க தானா இறைவா என்னை இன்னும் உயிரோட இனி வைச்சு இருக்க????

இவனுங்க சேரவே மாட்டாங்களா???வாழ்க்கை முழுசும் இப்படி அடிச்சுகிட்டே தான் இருப்பாங்களா????நான் பாவம் பண்ணிட்டேனா??? ஒரு பக்கம் என் ஆசை மறுபக்கம் வீட்டாளுங்க ஆசை இரண்டையும் மதிச்சது என் தப்பா????"என அருணாசலத்தின் மனசாட்சி கேட்க ஆம் தப்பு தான் என்று அறிவுறுத்தினார்கள் அவருடைய பிள்ளைகள்...

வைதேகி அழுது கொண்டே கணவனின் வீல் சேர் தள்ளிக்கொண்டு செல்ல தனக்கு வாய்த்த இரு மனைவிகளுமே நல்லவர்களாக இருக்க தான் மட்டும் ஆதி கூறியது போல சுயநலவாதி ஆகிவிட்டோமோ என்று எண்ணினார் அருணாச்சலம் அப்படியே அவர் பழைய விஷயங்கள் எல்லாம் அவரது கண்முன்னே வந்து போனது...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top