அத்தியாயம் 13
அவள் எப்பொழுதும் இப்படி பேசுபவள் அல்ல இருந்தாலும் அவளால் முடியவில்லை அவன் தான் கூறி இருந்தானே அவன் சொன்னது போல செய்து விட்டானே என்று எண்ணியவளுக்கு ஆத்திரமாக வந்தது....
ஆனால் சாரதா அமைதியாக இருப்பதினால் தானோ என்னவோ அபிநந்தனா தனக்கு எழும் கோபத்தை எல்லாம் அவர் மீது கொட்டி தீர்த்துக் கொள்கிறாள் அதுவும் அவன் மீது கோபம் என்றால் இவர் ஏதாவது வந்து கூறவும் பாவம் இவரை வசை மழை பொழிகிறாள்...
அவள் எதற்காக தன்னையே இழந்தாலோ அது எல்லாம் பொய்யாக போய்விட்டதே தன் குடும்பத்தை இப்படி பழி வாங்க வேண்டிய அவசியம் என்ன என அவளாக கற்பனை செய்து கொண்ட அபிநந்தனா சாரதா கெஞ்சி கேட்பதையெல்லாம் அவள் காது கொடுத்து கேட்பதாக இல்லை...
அவளுக்கு இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் அதனால்," நீங்களும் ஒரு பொண்ணு தானே உங்களுக்கு இதெல்லாம் தப்பா தெரியலையா உங்க பையன் நல்லவன்னு சொல்றீங்க நல்லவன் பண்ற வேலையா இது??? என்னை எப்படி இந்த வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தார் என்று மறந்துட்டீங்களா???" என்று கேட்டாள்...
"ஆமாம் அபி... நீ என் மேல கோபப்படு ஆனால் நான் இப்பவும் சொல்றேன் அவன் செய்திருக்க மாட்டான் எதுக்கும் அவன் வரட்டும் என்ன உண்மைன்னு கேட்டுக்கலாம்" என்று கூறினார்...
"அக்கா இங்கே இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நமக்கு ஆபத்து நம வா போகலாம் இங்கே இருக்க வேண்டாம் எனக்கு பயமா இருக்கு வா அக்கா" என்று ஸ்ரீ லட்சுமி ஒரு பக்கம் அலறிக்கொண்டு இருந்தாள் அவளை எப்படி தேற்றுவது என்பது புரியாமல் திணறினாள் அபிநந்தனா...
ஒரு பக்கம் சாரதா மறுபக்கம் தங்கை இருவர் பேசுவதையும் அவள் கேட்பதாக இல்லை... இன்னும் இங்கு ஒரு நொடி கூட நிற்கக் கூடாது என்று எண்ணி அவ்விடம் விட்டு தன் தங்கையை இழுத்துக் கொண்டு வீட்டு படியில் காலை வைக்கவில்லை அப்பொழுது வீட்டுக்குள் நுழைந்தான் ஆத்ரேயன்...
ஸ்ரீ லட்சுமி வீட்டுக்குள் நுழைந்ததும் அவனுக்கு தகவல் வந்துவிட்டது அவள் வந்துவிட்டாள் என்று உடனே அவன் வீட்டிற்கு வந்து விட்டான்... அவன் கண்ணில் அப்படி ஒரு கொலைவெறி தாண்டவம் ஆடியது யாரை பலி கொடுக்கலாம் என்று எண்ணிக் கொண்டு வந்தான் .... அக்காவை விட தங்கை படு முட்டாளாக இருக்கிறாள் என்றுதான் எண்ணிக் கொண்டு வந்தான்....அவள் செயலை எண்ணி அவனே எரிச்சல் அடைந்தான்...அவன் உள்ளே வரும் போது அவள் வெளியே வந்தான்...அவன் வருவான் என அவர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை...
அவனது மிரட்டும் பார்வையை கண்ட சகோதரிகள் இருவரும் சற்று அரண்டனர்.. அதிலும் ஸ்ரீ லட்சுமி சற்று பயப்பட்டு,"அக்காவா போயிடலாம் எனக்கு பயமாக இருக்கு" என்று கூற அபி தன் தங்கையை இப்படி பயமுறுத்தி வைத்திருக்கிறானே என எண்ணியவள் அவன் பார்வையைக் கண்டு சற்று அதிர்ந்தாலும் தங்கையை விட தன் பயம் பெரிதல்ல என்று எண்ணி சற்று தைரியத்தோடு,"நீங்க நெனச்சத நடத்தி காட்டிட்டிங்க உங்களுக்கு என் தங்கச்சி என்ன பாவம் பண்ணினா??? அவளையும் இப்படி ஆக்கி இருக்கீங்களே நீங்க எல்லாம் மனுஷன்னா" என கேட்டாள்...
சுற்று முற்றும் வேலையாட்கள் வேலை செய்து கொண்டிருக்க அவன் மீது உள்ள பயத்தால் ஆட்கள் காதில் இது எல்லாம் விழுந்தாலும் கேட்காத பாவணையில் அவனை கண்டதும் வேலையை தொடர்ந்தனர்..
"நான் மனுஷனா இல்லையான்னு கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும் உள்ள போ" என்று கூற அவளோ,"என்னால போக முடியாது போதும் இந்த நரக வாழ்க்கை.. அதுதான் என் குடும்பத்தையே நடுத்தெருவில நிறுத்திட்டீங்களே இனி என்ன வேணும் வேற எவளாவது கிடைப்பா அவளைத் தேடி போங்க" என்று கூறினாள்..
"ஏய் உள்ள போடி அதான் சொல்லிட்டே இருக்கேன் இல்ல ஓங்கி அறைஞ்சிடப் போறேன்" என்று கூறியவனின் பார்வை ஸ்ரீ லட்சுமியின் மீது பதிந்தது... ஸ்ரீ லட்சுமி பயத்தில் வெடவெடக்க அதை எதையும் கணக்கில் கொள்ளாமல் அவனது பார்வை கண்கொத்தி பாம்பாக அக்கா தங்கைகள் மீது இருந்தது..
அவர்கள் அவனை முறைத்து கொண்டே உள்ளே நுழைந்ததும்,"அப்புறம் எங்க கிளம்பிட்ட ??? "என்று ஒண்ணுமே தெரியாது போல கேட்டான்...
"இன்னும் நான் இங்க இருக்க முட்டாளா என்ன நான் என் வீட்டுக்கு போறேன்" என்று கூறினாள்...தங்கை கிடைத்ததும் அபி அவள் வீட்டாரிடம் கூறியிருக்க இதோ சிவப்பிரகாசம் மற்றும் மைதிலி தம்பதியினர் கூட அவனது வீட்டிற்கு வந்து விட்டனர்...
தங்களது மகளை கண்டதும் ஆரத் தழுவி அவனைப் பார்த்து," நாங்க அப்படி என்னையா உங்களுக்கு பாவம் பண்ணிட்டோம் இப்படி போட்டு படாத பாடு படுத்திட்டு இருக்க தயவு செஞ்சு உன் கால்ல வேணா விழறேன் என் பொண்ணுங்களை விட்டுடு" என்று கூறினார் சிவப்பிரகாசம் அவனை எதுவுமே செய்ய முடியாது என்று எண்ணியதால் அடங்கிப் போக தீர்மானித்தார்...
தன் தந்தை இவனிடம் கெஞ்சுவதை பார்த்த அபிநந்தனா," அப்பா நீங்க யார்கிட்டேயும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை வாங்க போகலாம் நான் இனி இங்கே இருக்க மாட்டேன் என்ன நடக்குதுன்னு பார்த்துடலாம்" என்று கூறினாள்...
முதலிலேயே ஆதி செய்த செயலால் கோபத்தில் இருந்த ஆத்ரேயன் இவளும் இப்படி பேசிக் கொண்டே இருக்க அவனது நிலை தடுமாறியது...."இந்த ஆத்ரேயனுடைய பொண்டாட்டி ஆத்ரேயன் எங்கே இருக்கானோ அங்கே தான் இருப்பா ஆமா இங்க என்ன பிரச்சனை நீ எதுக்கு ஓவரா சீன் போட்டுட்டு இருக்க??? அதான் உன் தங்கச்சி தான் வந்துட்டாலே??? எங்கேயாவது உட்கார்ந்து எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைன்னு பாட வேண்டியது தானே!!! நல்ல குடும்பம் எப்ப பார்த்தாலும் நய நயன்னுட்டு" என்று நக்கலாக கூறினான்...
"உங்களுக்கு இப்படி சொல்ல வெக்கமா இல்ல???எங்களை பார்த்தா எப்படி தெரியுது??? என் தங்கச்சியை நாசம் பண்ணி இருக்கீங்க என் வாயால எப்படி சொல்லுவேன் அவளை கடத்தி வைத்து கொடுமைப்படுத்தி இருக்கீங்க இது எல்லாம் உங்களுக்கு தப்பாவே தெரியாது அப்படித்தானே எப்படி உங்களால முடிஞ்சது என் கூடவும் என் தங்கச்சி கூடவும் இருக்க சீ உங்ககிட்ட இத பேசக்கூட எனக்கு அசிங்கமா இருக்கு" என்று கூறவும் ஸ்ரீ லட்சுமியின் முகம் வெளுத்தது... அடுத்த நொடி அபிநந்தனா சுருண்டு விழுந்திருந்தாள் அவளது முகம் ஜிவ்வு என்று எறிய அவன் அறைந்திருந்தான்...
தன் கண் முன்னாலேயே தன் மகளை அடிக்கிறானே என்று மைதிலி ஓடி சென்று அவளை தூக்க போக,"யாராவது என் பொண்டாட்டிய தொட்டிங்க அவங்க கையும் இருக்காது அவளோட கையும் இருக்காது வெட்டி இருப்பேன் செம கடுப்புல இருக்கேன் அப்படியே ஓரமா நின்னுக்கங்க அவ்வளவுதான் உங்களுக்கு மரியாதை" என்று கூறினான் ஆத்ரேயன்...
அவளுக்கு கிடைத்த அடியை கண்ட ஸ்ரீ லட்சுமி அரண்டு போனாள் அவளுக்கு பயத்தில் முகம் வெளிறிப் போனது...அபிநந்தனா இன்னும் அவளுக்கு கண்ணில் பொரி பறந்து கொண்டு தான் இருந்தது... அவன் அருகே வந்தது எதுவும் அவளுக்கு தெரியவில்லை ...
"என்ன சொன்ன உன் தங்கச்சியை நான் கெடுத்தேனு அவ சொன்னாளா???அப்படி உன் தங்கச்சி சொன்னாளா???" என்று கேட்டான்...
அந்த வலியிலும் தங்கை மீது உள்ள பாசத்தில் ஆமா என்று அவள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கூற அதைக் கேட்ட அவனும் ,"அப்படியா நான் எங்கே கடத்தினேன் என்ன பண்ணினேன் தெரியுமா??? உன் தங்கச்சி கிட்ட கேளு அவ வாயை திறந்து தெளிவா நான் என்ன செஞ்சென்னு எல்லார்கிட்டேயும் சொல்லணும் இல்லை உன்னை இங்கேயே குழி தோண்டி எல்லோர் முன்னாடியும் புதைச்சிடுவேன்" என்று கூறவும் ,"நான் என்ன பேசிட்டு இருக்கேன் நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க??" என்று கேட்டாள் அபிநந்தனா..அடுத்த அடி அவளது கன்னத்தில் இறங்கியது... அதை கண்டதும் ஸ்ரீ லட்சுமி அரண்டு விட்டாள்... மைதிலியின் பின்னால் ஓடி சென்று ஒளிந்து கொண்டாள்....
"நான்தான் கேளுன்னு சொல்றேன்ல உன் தங்கச்சி என்ன சொல்றான்னு பார்ப்போம் நான் வேற அட்டம் டு ரேப் வேற பண்ணி இருக்கேன் அப்படி தானே???" என ஸ்ரீ லக்ஷ்மி பார்த்துக் கொண்டே கூறினான் ஆத்ரேயன்...
அவன் பேசுவது எரிச்சலை கொடுத்தாலும் அவன் அடித்தது வலித்தாலும்,"அப்படி நான் என்ன பாவம் பண்ணிட்டோம் உங்களுக்கு எதுக்காக எங்களை இப்படி போட்டு படாத பாடு படுத்திட்டு இருக்கீங்க???" என்று கண்களில் கண்ணீர் மல்க கேட்டாள் அவள் ... அவளது ஒவ்வொரு கேள்வியும் ஈட்டியாக அவனின் இதயத்தை பதம் பார்த்தது நான் செய்திருப்பேன் என 100% நம்பிய அவளுக்கு ஒரு சதவீதம் ஆவது அவன் செய்திருக்க மாட்டான் என்று நினைக்கிறாளா என எண்ணினான்...அதுவே அவனது கோபத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது....ஆனால் அவளோ அவன் இதை செய்திருக்க கூடாது என அவளது உள் மனம் ஏங்கியது அதை அவளுக்கு சொல்ல தெரியவில்லை...
அவளது விழிகளை நேருக்கு நேர் சந்தித்தானோ என்னவோ அடுத்த நொடி ஸ்ரீ லட்சுமியின் அருகே சென்றவன்,"சொல்லு நான் உன்னை கடத்தினேன்னா??" என்று கேட்டான்..
அவன் அபியை அடித்த அடியை தான் பார்த்த ஸ்ரீ லட்சுமி மைதிலியின் பின்னால் ஒளிந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டு ,"நீங்க என்னை கடத்தல நான் தான் ரெண்டு நாளா ஹோட்டல்ல ஒளிஞ்சு இருந்தேன்... ஆதி தான் அப்படி இருக்க சொன்னார்...
நீங்க ஆதியை அவமானப்படுத்திட்டீங்கன்னு சொல்லி என்கிட்ட வருத்தப்பட்டார்...நீங்க எங்க அக்காவை கடத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க அதை சொல்லி எங்க அப்பா வருத்தப்பட்டார்... அதனால உங்களை மாட்டி வைக்க தான் நான் கடத்தப்பட்டதா நானே டிராமா பண்ணினேன்... ஆதி என்ன எல்லாம் சொன்னாரோ அதை எல்லாம் செஞ்சேன்.. உங்களை போலீஸ் புடிச்சிட்டு போகணும்னு சொல்லித்தான் நாங்க அப்படி பண்ணினோம் ஆனால் என்ன நினைத்தாரோ தெரியல ஆதி என்னை போக சொன்னார் அபி அக்கா கிட்ட இப்படி எல்லாம் சொல்லி அவளையும் அழைச்சிட்டு போக சொன்னார் அதனால தான் நான் இங்கே வந்தேன்" என்று தங்களை மூடியபடி ஸ்ரீ லட்சுமி உண்மையை கூறினாள்... அதை கேட்ட அனைவரும் அதிர ஆத்ரேயன் மட்டும் இறுகிய பாறை போல இருந்தான்...
தன் தங்கை கூறக் கூற கூற அபிநந்தனாவின் முகம் தெளிய ஆத்ரேயன் அப்படியே ,"நான் உன்னை ரேப் பண்ணினேன் ஆ??? அதையும் சொல்லிடு???"என்று கேட்டான்...
அதற்கு ஸ்ரீ லட்சுமியும்,"இல்லை இவரை நான் இப்பதான் முதல் முறையா நேரில் பார்க்கிறேன்" என்று கூறினாள்.. எல்லோருக்கும் உண்மை விளங்க சிவப்பிரகாசம் மற்றும் மைதிலி தம்பதியினருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை என்னதான் இருந்தாலும் அவன் தன் மூத்த மகளை இப்படி கல்யாணம் செய்திருக்கக் கூடாது என்று மட்டும் புரிந்தது மேலும் மைதிலி ஸ்ரீ லட்சுமி அடித்தார்...
"அறிவில்லாத வேலை செய்வியா டி ஏதாவது ஒன்னு கடக்க ஒன்னு ஆகி இருந்தா என்ன ஆகிறது யாரோ சொன்னாங்கன்னு நீ எதுக்கு டி இதையெல்லாம் செய்யற???" என்று அடித்தார்...
ஆத்ரேயனுக்கு அந்த ட்ராமாவை எல்லாம் பார்க்க விருப்பப்படவில்லை அவனுக்கு வேறு வேலை காத்திருந்தது...ஆம் அதற்கு முன்பாக சிவப்பிரகாசத்தை பார்த்து" இத பாருங்க மிஸ்டர் சிவப்பிரகாசம் நீங்க என்ன நினைத்தாலும் சரி நான் உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி இருக்கேன்... கடைசிவரை அவளை எல்லாம் விடமாட்டேன் ..கூட சேர்ந்து வாழத்தான் கல்யாணம் பண்ணி இருக்கேன்... நீங்க என்ன நினைச்சாலும் சரி உங்க பொண்ணு என்ன நெனச்சாலும் சரி நீங்க யார்கிட்ட போய் கம்பளைண்ட் பண்ணினாலும் எனக்கு ஒரு கவலை கிடையாது ...
அதை பத்தி எல்லாம் நினைச்சு நான் பயப்பட மாட்டேன் தெரிஞ்சோ தெரியாமலோ நீங்க என் மனைவியோட அப்பா ஆகிட்டீங்க அதாவது என் குடும்பம் அப்படிங்கற அங்கத்தில் நீங்களும் வரீங்க அதனால பார்த்து நடந்துக்கோங்க...
இனி நீங்களும் என் குடும்பம் மாதிரி தான் அதனால தேவையில்லாமல் யோசிச்சுட்டு இருக்காதீங்க... கவனமா உங்க ரெண்டாவது பொண்ணை பார்த்துக்கோங்க" என்று கூறிவிட்டு தன் தாயை ஒரு நொடி பார்க்க அவரோ தன் மகனை பார்த்து இன் முகமாக சிரித்தார்... அவருக்கு தெரியும் அவன் அதை செய்திருக்க மாட்டான் என்று அதனால் அவர் சிரிக்க தன் மனைவியை பார்க்காமலேயே குமரன் குடில் நோக்கி சென்றான் ஆத்ரேயன்..
மனைவியை வந்து பார்த்து கொள்ளலாம் அதுக்கு முன் தன் தம்பியை பார்த்து நாலு நல்ல வார்த்தை பேசி விட்டு வர அவனது வீடு நோக்கி புறப்பட்டான் ஆத்ரேயன்...
