Share:
Notifications
Clear all

அத்தியாயம் 12

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அங்கு அதிர்ந்து நிற்கும் தன் மனைவியையும் அழுது வீங்கிய முகத்தோடு இருக்கும் தன் மனைவியின் தாயையும் கண்டவன் அங்கு நின்று கொண்டிருக்கும் போலீசாரை பார்த்து ,"சொல்லுங்க சார் என்ன விஷயம்???" என்று கேட்டான்...

அவர்கள் பதில் கூறுவதற்கு முன்னே சிவப்பிரகாசம் முந்தி கொண்டு,"என்ன தெரியாத மாதிரி கேக்குற சொல்லு என் மகளை எங்க வச்சிருக்க சொல்லு ஸ்ரீ லட்சுமி எங்கே????" என்று சிவப்பிரகாசம் பதறி கேட்டார்...

அதை கண்ட அவன் கடுப்பாகி விட்டான்....தன்னை அசிங்கப்படுத்தி பார்க்க இவர் அழைத்து வந்து இருக்கிறாரோ என எண்ணி,"இங்க வந்து டிராமா பண்ணிட்டு இருக்காதீங்க மிஸ்டர் சிவப்பிரகாசம் உங்க பொண்ணு காணோம் அப்படின்னா அவ எங்க போயிருப்பாளோ அங்க தேடுங்க இங்க வந்துட்டு நடிச்சிட்டு இருக்கீங்க??? " என்று கேட்டான்...

போலீசாரோ அவர் கூறியதை எல்லாம் கூறி,"சார் இவர் சொல்றதெல்லாம் உண்மையா இவருடைய மூத்த பெண்ணை நீங்க கட்டாயப்படுத்தி திருமணம் செய்து இருக்கீங்களா ???" என்று கேட்டார்...

ஓ அப்படி போகுதா கதை என்று எண்ணிய அவன் அவர்களையெல்லாம் பொசுக்கி விடுவது போல பார்த்தான்... அதில் முதலில் அதிர்ந்தது அபிநந்தனா தான்...அடுத்த நொடி தன் மனைவி அருகில் வந்தவன் அவளது தோளை தொட்டு அழுத்தி,"நாங்க இரண்டு பேரும் காதலிச்சோம் இவர் சம்மதிக்காமல் வேற கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டார் அதுனால நாங்க எங்க விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டோம் உங்களுக்கு சந்தேகம் இருந்தா தான் தொட்டு தாலி கட்டின என் பொண்டாட்டி இருக்கா அவகிட்டேயே கேட்கலாம்" என்று கூறினான் ஆத்ரேயன்...

அவன் செய்து விட்டானே சொன்னது போல செய்து விட்டானே தான் எதிர்த்தால் தன் தங்கையை தீண்டுவான் என்று கூறியிருந்தானே அதேபோல செய்து விட்டானே என எண்ணியவள் அவனை பார்க்க அதே நொடி அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தான்...

சுற்றி இருக்கும் ஆட்களை எல்லாம் பார்த்தவனுக்கு தன்னை இவர் வேண்டுமென்று அவமானப்படுத்துவதாக தோன்ற , போலீசாருக்கு முன்னால் சிவப்பிரகாசம் தன் மகளிடம்," என்னமா பாத்துட்டு இருக்க சொல்லுமா போலீஸ் கிட்ட சொல்லு இவன் கட்டாயப்படுத்தி உன்னை இங்கே தங்க வச்சுட்டு இருக்கான்னு சொல்லு நம்ம ஸ்ரீ எங்க இருக்கான்னு கேட்டு சொல்லுமா?? இவன் ஜெயிலுக்கு போனாதான் நம்ம பொண்ணு கிடைப்பா!!!" என்று அவர் கூறவும் அவளுக்கு தெரியாதா? அவனுடைய சித்து விளையாட்டை நடுரோட்டில் வைத்து தாலி கட்டியவனாகிற்றே???

அந்த டிரைவரை இவன் மிரட்டியது இவளது கண்முன்பில் வந்து போனது... அதே நேரம் வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது,"உன் தங்கச்சி உனக்கு உன் தங்கச்சியாகவே மட்டும் வேணும்னா நீ நான் சொல்றதை கேட்டு தான் ஆகணும் நான் சொல்றதை எப்போ நீ மீறிட்டு நடக்கிறாயோ அப்போ உன் தங்கச்சி உனக்கு கிடைக்க மாட்டா" என்று அவன் அன்றும் மிரட்டி இருந்தான் ..

கடந்த வாரம் தான் பேசியதற்கு பதிலாக இப்பொழுது தன் தங்கையை கடத்தி விட்டானோ என எண்ணியவள் பயத்தில்,"அதெல்லாம் ஒன்னும் இல்ல இன்ஸ்பெக்டர் அவர் என்னுடைய புருஷன்.. நான் விருப்பப்பட்டு தான் இங்கே இருக்கேன் அவர் சொன்ன மாதிரி நாங்க காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. அது அப்பாக்கு பிடிக்கல அதுனால தான் இப்படி ஒரு தகவலை உங்ககிட்ட சொல்லிட்டாங்க நீங்க என் தங்கச்சியை மட்டும் கண்டு பிடிச்சு தாங்க சார் " என்று அவனைப் பார்த்துக் கொண்டே கூறினாள்...

அவள் கண்கள் அவனை குற்றபடுத்தியது அதை உணர்ந்து கொண்டே தான் அவனும் நின்றான்...அவன் முகம் இறுகியது...அவன் எதுவும் பேசவில்லை...

அவள் கூறியதை கேட்டு பதறிய சிவப்பிராகசம்,"ஏன் மா பயப்படுற இவனை மாதிரி ஆளுங்க கிட்ட எல்லாம் பயப்பட கூடாது மா தைரியமா நிற்கணும்!!!" என்று அவளது தந்தை அந்த நிலையிலும் கூறினார்...அதை அவள் கேட்டால் தானே!!!!...அதற்குள் போலீசாருக்கு ஒரு கால் வர அவர் பேசி கொண்டிருந்தார்...

அந்த சமயம் அவள்,"அப்பா நாம எதிர்த்து நின்னா உங்களுக்கு நம்ம ஶ்ரீ வந்துடுவான்னு தோணுதா அப்பா??? நான் தான் சொல்லி இருக்கேன்ல என்னை பத்தி கவலைபடாதீங்கன்னு நான் இங்கே நல்லா இருக்கேன் அவ வந்துடுவா தயவுசெய்து கேஸை வாபஸ் வாங்கிட்டு வீட்டுக்கு போங்க அவ வருவா" என்று கண்களில் வலியோடு அவள் கூறினாள்...

அவள் முடிவே செய்து விட்டாள் இவன் தான் அவளை கடத்தி வைத்திருப்பான் என்று அவன் நடந்ததை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்...

வாயை திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை அதே போல அவன் கண்கள் ஒரு நொடி அவளை விட்டு மாறவும் இல்லை...

அவளோ போலீசாரிடம் ,"சார் என் அப்பாவுக்கு என் புருசன் மேல கோபம் அதுனால இப்படி கம்ப்ளைன்ட் பண்ணிட்டார் நான் விருப்பப்பட்டது தான் என் புருஷன் கூட இருக்கேன் என் தங்கச்சி காணாம போனதுக்கும் என் புருஷனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது சீக்கிரம் என் தங்கச்சியை கண்டுபிடித்துக் கொடுங்க" என்று கூறியவள் போலீசாரை அனுப்பி வைக்க முயல அவன் எதுவும் பேசவில்லை...

அவன் மூளை முழுவதும் ஶ்ரீலட்சுமி எங்கு இருப்பாள் என்பதிலேயே குறியாக இருக்க போலீசார் சந்தேகிப்பது போலவோ இல்லை அவளது தந்தை நினைப்பது போலவோ இல்லை அவனுடைய மனைவி எண்ணுவது போலவோ ஆத்ரேயன் அவளை கடத்தி இருக்கவில்லை... ஆம் இதற்கும் அவனுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை...

அவள் அப்படி எங்கு சென்று இருப்பாள் என அவன் மூளை யோசிக்க இவளோ போலீசார் மற்றும் தன் பெற்றோர்களை அனுப்பி வைத்தவள் அவனிடம் வந்து அவனது கையை பிடித்து," நீங்க சொல்றது எல்லாம் கேட்கிறேன் சின்ன பிள்ளை அவளை விட்டுடுங்க..உங்களுக்கு என்ன கொடுமை செய்யனும்னாலும் என்னை செய்ங்க அவளை விடுங்க" என்று கூறினாள்...

அதை கேட்டவனுக்கு ஆத்திரம் எழ,"என்னை பார்த்தா எப்படி இருக்கு பொண்ணுங்களை கடத்தி ரேப் பண்ற மாதிரி இருக்கா???? என் கை ஒரு பொண்ணு மேல பட்டு இருக்குன்னா அது உன் மேல மட்டும் தான்.. அதுவும் தாலி கட்டின பிறகு தான் டி உன்னை தொட்டு இருக்கேன்.. சும்மா அழுது ஏதாவது பேசிட்டு இருந்தேன்னு வை ஓங்கி ஒன்னு விட்டுடுவேன்...உன் தங்கச்சி வீட்டுக்கு வந்துடுவா போ ஏதாவது ஒரு மூளை இருக்கும் அங்கே போய் உட்கார்ந்து அழு" என்று எரிச்சலாக கூறியவன் அடுத்த நொடியே வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்...

செல்லும் அவனையே பார்த்து கொண்டிருந்தவளுக்கு அவன் பேசியது எதுவும் விளங்கவில்லை அவள் தங்கை வீட்டுக்கு வந்தால் போதுமென்று இருந்தது...

கிட்டத்தட்ட இரு நாட்கள் ஆகிவிட்டது... அவளை எங்கே என ஒரு சிறு துப்பும் ஆத்ரேயனுக்கு கிடைக்கவில்லை...அவன் குழம்பி விட்டான்...

ஸ்ரீ லட்சுமியின் தோழிகள் மற்றும் கல்லூரி அவள் பழக்கம் வைத்திருந்த ஆட்கள் என அனைவரிடத்திலும் அவன் விசாரித்து விட்டான் ...

ஆனால் அவர்கள் யாருக்கும் அவள் இங்கே இருக்கிறாள் என தெரியவில்லை...அவன் அந்த காரியத்தை செய்யவே இல்லை எனும் போது அவனுக்கு இலேசான நெருடல் ஏற்பட்டது...ஆட்களை அனுப்பி விசாரிக்க சொல்லி இருக்க அந்த நேரம் பார்த்து அவனுக்கு அழைப்பு வந்தது...

போனை எடுத்து பார்க்க,"என்ன ப்ரோ சீரியசா மச்சினிச்சியை தேடுவ போல இருக்கு" என்று கூறினான் ஆதி ..ஆதியின் குரல் கேட்டதும் அவன் தான் அவளை கடத்தி இருப்பான் என்று தெரிந்ததும் ஆத்திரம் வந்தது ஆத்ரேயனுக்கு..

"ஏய் அவ எங்க??" என்று கேட்டான் என்ன கேட்டான்..

"கடத்தி வச்சிருக்க உனக்கு தானே தெரியும்".. என்று நக்கலாக சிரித்தபடி கூறினான் ஆதி..." உனக்கு விளையாட வேற யாருமே கிடைக்கலையா பொம்பளைங்க தான் கிடைச்சாங்களா???" என்று கேட்டான் ஆத்ரேயன்...

"ஏன் நீயும் பொண்ணை வச்சு தானே விளையாண்ட ?? நான் விளையாண்டா தப்பா???" என்று குதர்க்கமாக கேள்வி கேட்டான் அவன்..

அதற்கு ஆத்ரேயன் நெற்றியை நீவிக் கொண்டே,"ஸ்ரீ லட்சுமி மட்டும் என் கையில கிடைக்கல நீ முடிஞ்சேன்னு வச்சுக்கோ அப்புறம் என்னை பழி வாங்குவதாக நினைச்சுட்டு உன் பொண்டாட்டிய பழி வாங்கிட்டு இருக்காத மோதுவதா இருந்தா என்கிட்ட மட்டும் மோது" என்று கூறினான்...

"ஏன் உன் ஃப்ரெண்ட் மேல அவ்ளோ பயமா??? "என்று ஆதி கேட்கவும்,"இல்ல உன்ன நெனச்சா தான் பயமா இருக்கு அவ ஏதாவது பண்ணிடுவாளோனு பயமா இருக்கு அதுனால அவகிட்ட பார்த்து நடந்துக்கோ" என்று போனை உடனே கட் செய்தான் ஆத்ரேயன்...அவன் கூறியதை கேட்டு ஆதிக்கு முகம் இறுகியது...

வீட்டில் அபியின் நிலைமையை கூறவே வேண்டாம் நொடிக்கு ஒரு முறை தன் வீட்டுக்கு அவன் வீட்டுக்கு லேண்ட் லைன் ஃபோனில் இருந்து அழைத்து கொண்டே இருந்தாள்...

அவர்கள் பயத்தில் இருக்க அவர்களை எப்படி ஆறுதல் படுத்த வேண்டும் என அவளுக்கு தெரியவில்லை... மேலும் போலீசார் ஒரு பக்கம் தேடி கொண்டு இருந்தனர் ...

அவன் எப்படி போலீசாரை வளைத்து தன் கையில் எடுத்தான் என தெரியவில்லை அவன் மீது சந்தேகப்பட்டு வந்த போலீசார் பிறகு அவன் பக்கமாகி அவன் ஒரு பக்கம் தேட இவர்கள் ஒரு பக்கம் தேடிக்கொண்டு இருந்தனர்... சிவபிரகாசத்தை கூட போலீசார் ஓரங்கட்டி ,"மருமகன் சொன்னதை கேட்டு நடங்க சார்" என்று ஃப்ரீயாக அட்வைஸ் செய்து விட்டனர் அவர் சொல்ல வருவது எதையும் கேட்பதாக இல்லை...

இதே நிலையில் செல்ல சாரதா அம்மாவுக்கும் விஷயம் தெரிந்து அவர் அபிநந்தனாவை தேடி அவளது அறைக்கு வந்தார்...

"அபி ஏதாவது தகவல் கிடைத்ததா???" என்று கேட்டார்

"இல்லை தெரியல" என்று அழுகையிலேயே அவள் பதிலளிக்க," கவலைப்படாதம்மா உன் தங்கச்சி கிடைச்சிடுவா" என்று ஆறுதலாக கூறினார்...

அதைக் கேட்டதும் அவள் அவரைப் பார்த்து,"உங்க பையன் மனசு வச்சா தான் என் தங்கச்சி வருவா அவர் தான் என்கிட்ட சொன்னாரே அதுபோல செய்துட்டார் பாருங்க உங்க பையன் செய்த காரியத்தை???? உங்க மகன் இந்த அளவுக்கு இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை" என்று கூறியவள்,"என் தங்கச்சிக்கு மட்டும் ஏதாவது ஆச்சு நான் சும்மா இருக்க மாட்டேன்" என்று கொந்தளித்து கூறினாள் அபி...

அவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை மகன் செய்திருப்பானா செய்திருக்க மாட்டானா அவருக்கு அவன் அப்படி எல்லாம் செய்ய மாட்டான் என நம்பிக்கை இருந்தாலும் அப்படி செய்யவும் வாய்ப்பு இருக்கிறது அவனைத்தான் கணிக்கவே முடியாதே ...

பெற்ற தாய் தான் ஆனால் அவராலேயே மகனை கணிக்க முடியாமல் அந்த சிறு பெண்ணிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறி நின்றவர் ,"நான் கும்பிடுற சாமி உன் தங்கையை உன்கிட்ட கொண்டு வந்து விடுவாள். கொஞ்சம் சாப்பிடுமா" என்று அவள் உண்ணாமல் இருப்பதை எண்ணி அவர் கூறினார்...

எப்போதும் அவன் மீது உள்ள ஆத்திரத்தை இவரிடம் காட்டி என்ன பிரயோஜனம் என்று எண்ணியவள் என் கஷ்டம் என்னோடு போகட்டும் என எண்ணி," எனக்கு வேண்டாம் கொஞ்சம் என தனியா இருக்க விடுறீங்களா???" என்று கெஞ்சுதலாக கேட்டாள்...

இந்த பிள்ளைக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் அவளது அறையில் இருந்து வெளியேறி தனது மகனுக்கு அழைத்தார்... வீட்டிலிருந்து அழைப்பு வரவும் தப்பாமல் போனை எடுத்தான் ஆத்ரேயன்...

"பா தம்பி அந்த பொண்ணு எங்கேப்பா கிடைச்சாளா??" என்று கேட்டார் சாரதா அம்மா

"இன்னும் கிடைக்கல" என்று பதில் அளித்தான் அவன்...

"அம்மா கேட்கிறேன் என்று தப்பா நினைச்சுக்காத அந்த பொண்ணை நீ எங்கேயாவது" என்று ஆரம்பிக்கும் போது,"அவ தான் அப்படி சொல்றானா உங்களுக்கும் என் மேல நம்பிக்கை இல்லையா நான் பொண்ணுங்கள கடத்துற அளவுக்கு மோசமானவன் கிடையாது மா உங்க வயிற்றில் பிறந்து இருக்கேன் பொண்ணுங்களை நாசம் செய்யணும்னு நினைக்க மாட்டேன்" என்று பட்டென கூறினான்...

அதைக் கேட்டதும் சாரதா அம்மாவுக்கு சிறு துளி கண்ணீர் வேகமாக முணுக்கென்று வந்தது... அவருக்கு தான் தெரியுமே தன் மகன் செய்திருக்க மாட்டான் என்று அதனால் மகன் மீது நம்பிக்கை வந்தது... எப்படி இருந்தாலும் அவன் அவளை கண்டுபிடித்து இருப்பான் என்று எண்ணினார்...

அவர் எண்ணியது போலவே அவன் அதை செய்யவில்லை என்று கூறி விட்டான்... அதனால் அவர் மனதில் இருக்கும் பெரும் பாரம் இறங்கியது என்று கூறலாம் அதே நேரம் அவனது வீட்டுக்குள் ஓடோடி வந்தாள் ஸ்ரீ லட்சுமி...

"அக்கா அக்கா"... என்று கதறியபடி ஓடி வந்தாள் அவளது குரலை கேட்டதும் அவளது அறையில் ஓடி வந்தாள் அபிநந்தனா..

தன் தங்கையை பார்த்ததும் வேகமாக அனைத்து கொண்டவள் எங்கடி இருந்த என்று அவளை கண்களாலேயே ஆராய்ந்தாள்...

"உன்னை கல்யாணம் பண்ணிட்டு இங்க கூட்டிட்டு வந்து அடைச்சு வச்சிருக்கானே அவன் தான் என்னை கடத்துனது இருட்டு அறையில் அடைத்து வைத்திருந்தான் தெரியுமா?? கண்ட கண்ட இடத்தில் எல்லாம் தொட்டான் அசிங்கமா இருக்கு எப்படியோ அங்கிருந்து தப்பிச்சு வந்திருக்கேன்..எனக்கு மயக்கம் மருந்து கொடுத்து கடத்திட்டான் அக்கா... வா போகலாம் இங்க இருக்கவே வேண்டாம் எங்கயாச்சும் போயிடலாம் வா அக்கா உன்னையும் அதே மாதிரி பண்ணிடுவான் வா" என்று கூறினாள் ஸ்ரீலட்சுமி..

சாரதா முன்னிலையில் இதைக் கூற அபிநந்தனா அதிர்ந்து,"என்னடி சொல்ற என்ன நடந்துச்சு??? என்று கேட்டாள்...சாரதா இதை கேட்டு அதிர்ந்து விட்டார்...தன் இதை செய்து இருக்க மாட்டான் என நம்பியதால் ,"என் மகன் அப்படி செய்து இருக்க வாய்ப்பே இல்லை"என்று கூறினார்..."இவ்வளவு நடந்தும் நீங்க இப்படி சொல்றது எனக்கு கஷ்டமா இருக்கு"என்றாள் அபி..அவரால் அவளிடம் பேசி ஜெயிக்க முடியவில்லை...

ஆனால் ஶ்ரீ லக்ஷ்மியோ,"யாருனே தெரியல அக்கா இருட்டுல என் மேல கைய வச்சான் தப்பா நடக்க முயற்சி பண்ணுனான் எனக்கு பயமா இருக்கு எனக்கு நல்லா என்னை கடத்தியது உன் புருசன் தான் என்னை நம்ப மாட்டியா???" என்று கத்தி கூச்சல் போட்டாள் தங்கை.....

அவ சொல்றதை பார்த்தா அப்போ அவகிட்ட தப்பாவும் நடந்துக்கிட்டானா அவளால் நினைக்கவே முடியவில்லை..

தன்னை தொட்ட கை வேறொரு பெண்ணை தொட்டது என்று எண்ணும் பொழுதே அவள் கூசிப் போனாள்...என்ன தான் அவன் தொட்ட போதெல்லாம் அவன் வேகம் கண்டு தன்னை மட்டும் புதிதாக தீண்டுவான் போல என்றெல்லாம் எண்ணி இருக்க, ஆக அந்த ஒரு நிம்மதி மட்டும் தான் அவளுக்கு இருந்தது இவள் சொல்வதை எல்லாம் பார்த்தால் அவன் அவளை கடத்தி வைக்க மட்டும் முயற்சி செய்யவில்லை போலவே... அது தான் எல்லாம் நடந்து முடிந்து விட்டேதே இனியும் இங்கே இருப்பதில் அர்த்தம் இல்லை அதுதான் என் தங்கை கிடைத்துவிட்டாலே என எண்ணியவள்,

"பாருங்க உங்க புள்ள லட்சணத்தை இப்ப என்ன சொல்றீங்க??? பார்த்தீங்களா என் தங்கை என்ன சொல்றான்னு???இப்போவும் உங்க பையன் நல்லவன்னு சொல்றீங்களா??? போதும் என் குடும்பத்தை நாசம் செய்ததே போதும் இனி என்ன ஆனாலும் நான் இங்கே இருக்க மாட்டேன்" என்று நொடிப்பொழுதும் யோசிக்காமல் ஸ்ரீ லட்சுமி அழைத்துக்கொண்டு அந்த வீட்டிலிருந்து வெளியேற எண்ணினாள் அபிநந்தனா..

அதைக் கண்டதும் சாரதாவுக்கு ஒரு பதற்றம் ஆகி போக," அபி எதுவாக இருந்தாலும் அவன் வந்து பேசிட்டு முடிவு பண்ணுமா" என்று கூறினார்...

"என்ன பேச சொல்றீங்க என் தங்கச்சியை மறுபடியும் கடத்தி வைக்கவா??? உங்க பையனுக்கு ஒரு பொண்ணு பத்தாதா???" என்று பச்சையாகவே கேட்டாள் அபிநந்தனா...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top