Share:
Notifications
Clear all

அத்தியாயம் 11

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

ஆதித்யன் மற்றும் வசுந்தரா இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன குலசேகரிக்கு பெருமை தாங்கவில்லை...

அவரது குடும்பத்திற்கு இணையான ஒரு சம்பந்தத்தை தான் தன் பேர மகன் முடித்திருக்கிறான் என கௌரவமாக மேடையில் அமர்ந்து கொண்டு இருந்தார்.... திருமணம் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது...என்னவோ எதுவுமே நடக்காதது போல ஆத்ரேயன் வெளி ஆட்களிடம் கூறி இருப்பது போல அந்த பெண்ணுக்கு காதல் வீட்ல ஒத்துக்கல...அதுனால அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்றே இவர்களும் பூசி முழுகி இதில் தன் பேர மகனிடம் எந்த தவறும் இல்லை என்பது போல கூறி தன் குடும்ப பெருமையை நிலை நாட்டி விட்டார் குலசேகரி...அதனால் யாருக்கும் பெரிதாக சந்தேகம் எல்லாம் இல்லை ஜோடி பொருத்தமும் பிரமாதமாக இருந்தது...

ஆனால் மாப்பிள்ளை மற்றும் மணமகள் இருவரும் கொஞ்சம் சிரித்து இருந்தால் இன்னும் பிரகாசமாக இருந்திருக்கும் திருமணத்தை லைவ்வாக பல சேனல்கள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன...வேண்டும் என்றே ஒளிபரப்பி இருந்தான் ஆதி...

அந்த காட்சியை ஆத்ரேயன் கண்ணில் பட்டது... அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை வசு என்னிடம் சொல்லி இருக்கலாம் இப்படி ஏமாந்துட்டியே இதனால தான் நீ என்னை அவாய்ட் பண்ணியா என மனதுக்குள் எண்ணிக்கொண்டான்...தன்னை அவன் குறி வைக்க அவளை கல்யாணம் செய்து இருக்கிறானோ என கணித்து கொண்டான்...ஆதியின் இந்த வியூகத்தை பார்த்து அவனுக்கே கொஞ்சம் ஆச்சர்யம் தான் இருந்தாலும் தன்னால் தன் தோழிக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்து கொள்ள வேண்டும் என எண்ணி கொண்டான்...

ஆதி ஏன் இவளை திருமணம் செய்து இருக்கிறான் என அறியாத சிறுவன் ஆத்ரேயன் இல்லை.. எனினும் தனது தோழி இப்படி போய் மாட்டிக் கொண்டாலே என எண்ணிக் கொண்டான் இனி எப்படி அவளை இவனிடமிருந்து காப்பது அவனுக்கு ஒன்றும் புரியவில்லை கையில் பற்ற வைத்திருந்த சிகரெட் இந்த காட்சியை கண்ட அதிர்ச்சியில் தன் விரல்களை பதம் பார்த்தும் அவனுக்கு உணர்ச்சிகள் இல்லை அவன் கண் முழுவதும் வசுந்தரா மீதே இருந்தது...

அதே நேரம் வசுந்தரா சர்வ அலங்காரங்களுடன் ஆதியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்... யாருக்கும் கேட்காத குரலில் அவனிடம்,"என்ன தாலி கட்ட போறியா??? ரொம்ப வருத்தப்படுவ இப்ப கூட ஒன்னும் கெட்டுப் போகல எந்திரிச்சு ஓடிடு !!" என்று மெல்லிய குரலில் கூறினாள்...

அதைக்கேட்ட அவனும் நெற்றியை நீவி அதே சிரித்த முகத்தோடு அவளைப் பார்த்து,"நான் என்னமோ நெனச்சேன் பரவால்ல சரியான ஜோடியா தான் எனக்கு வந்து அமைஞ்சிருக்க யாரு ஓட போறான்னு கொஞ்ச நாள்ல தெரிஞ்சிடும்" என்று கூற அதைக் கேட்ட வசுந்தரா அவளைப் பார்த்து,"அதுக்கு பிறகு உன் இஷ்டம் இனி நான் சொல்றதுக்கு எதுவுமே இல்ல ஆனா நீ என்ன நினைச்சு கல்யாணம் பண்ணியோ அது நடக்கவே நடக்காது" என்று அதே மெல்லிய நக்கலான புன்னகையில் கூறினாள் வசுந்தரா...

"கெட்டி மேளம் கெட்டி மேளம்" என்று ஐயர் வேதங்கள் ஓத குலசேகரி தாலியை எடுத்துக் கொடுக்க ஆதித்யன் அக்னி சாட்சியாக வசுந்தராவை தன் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான்...

அவன் தாலி கட்டியதும் அவன் கண்ணில் இருந்து கண்ணீர் தன் வாழ்க்கை பொய்த்து போனதே என எண்ணி விழ அது மிக சரியாக அவனது கையில் பட்டு இருக்க அவனது முகத்தில் வெற்றி புன்னகை வந்தது...அவள் ஒன்று நினைக்க அவன் ஒன்று நினைக்க யாருக்கும் தெரியாமல் கண்ணீரை துடைத்து கொண்டவள் மேலும் இறுகிய பாறை போல நின்றாள்...

அவள் கண்கள் அவன் கட்டிய மாங்கல்யத்தை பார்த்து கொண்டது எதை எண்ணி இதை அவள் கழுத்தில் அனுவித்தானோ அது நடக்கவே கூடாது என எண்ணி கொண்டாள்...ஆனால் அவனோ இவளை வைத்து அவனை ஆட்டி படைக்க வேண்டும் என எண்ணி கொண்டான்...

"பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்குங்க",என்று யாரோ ஒரு உறவினர் கூற மணமக்கள் முதலாவதாக குலசேகரி அருகே செல்ல வசுந்தரா வர மறுத்தாள்...

அவன் முன்னே செல்ல இவள் வராமல் அங்கேயே நிற்கவும் ஆதி திரும்பி வா என அழைக்க அவளோ சிலை போல நின்றாள்...

சுற்றும் முற்றும் பார்த்து அவள் அருகே சென்றவன்,"உன்னை வா ன்னு சொன்னேன் "என்று அடிகுரலில் கூறி அவளது கையை பிடிக்க போனான்...அவளோ ஒரு அடி தள்ளி நின்று,"என் கையை பிடிச்ச சுத்தி இத்தனை பேர் இருக்காங்கன்னு கூட பார்க்காமல் அறைஞ்சிடுவேன் தாலி கட்டிட்டேன்னு என்கிட்ட அட்வாண்ட்டேஜ் எடுக்காத...உனக்கும் எனக்கும் உள்ள டீல் நான் உன் மனைவி ஆகனும்னு தான் மத்தபடி எதுவுமே இல்லை புரியுதா???"..

அவன் அதிர்ந்தான்..ஆதி நினைத்தது போன்ற பெண் இவள் இல்லை என்பதை புரிந்து கொண்ட ஆதி அந்த நொடி சுற்றும் முற்றும் பார்த்து,"சரி நான் கை பிடிக்கல அதெல்லாம் நாம தனியா இருக்கும் போது பார்த்துக்கலாம் ஆனால் அதை இங்கே காட்ட வேண்டிய அவசியம் இல்லை...எல்லோரும் பார்க்கிறாங்க பாட்டி அப்புறம் பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கலாம் வா" என்றான்..

அதை கேட்ட அவளோ," நான் எதுக்கு அந்த கிழவி காலில் விழனும்??? நான் யார் காலிலும் விழ மாட்டேன்" என்று கூறினாள்...அதை கேட்டவன் அதிர, அவளோ நக்கலாக சிரித்து,"இதை நீ எதிர்பார்க்கல அப்படி தானே??? நான் தான் பத்து நிமிஷம் முன்னாடி உனக்கு அவகாசம் கொடுத்தேன் நீ கேட்கல"என்று கூறியவள் கையை விரித்து அவனை பார்த்து நக்கலாக சிரித்தாள்...

இப்போது வந்து ஆசிர்வாதம் வாங்குவார்கள் என காத்திருந்தவருக்கு அவர்கள் வாக்கு வாதம் செய்து கொண்டிருப்பது கண்ணில் பட அதை கண்டு வைதேகி வேகமாக ஓடி வந்து,"வாங்க வந்து ஆசிர்வாதம் வாங்குங்க" என்று கூற அவனோ அவளை பார்த்து முறைத்து கொண்டே,"அதெல்லாம் வேண்டாம் வீட்ல போய் பார்த்துக்கலாம் எல்லோரும் கிளம்புங்க" என்று கூறி விட்டு ஆதி சென்றான்...

அவளோ ஒன்றுமே தெரியாதது போல அவன் பின்னாலேயே சென்றாள் வசுந்தரா...இதை கண்டு குலசேகரி முதல் குடும்பத்தார் வரை அனைவரும் குழம்பி போயினர்...

அதே நேரம் தங்கள் மகளை நேற்று இரவில் இருந்து காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் கம்ப்ளைன்ட் கொடுக்க வந்திருந்தனர் சிவப்பிரகாசம் மற்றும் மைதிலி தம்பதியினர்...

ஒரு மகளை கட்டாய திருமணம் செய்து விட்டான் ஒருத்தன் இன்னொருத்தியை காணவில்லை என்ன செய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை..

ஸ்ரீ லட்சுமியின் தோழிகள் அனைவரிடத்திலும் விசாரித்து விட்டனர் யாருக்கும் இவள் எங்கு சென்றாள் என தெரியவில்லை... ஒருவேளை காதல் கீதல் என்ற முடிவு எடுத்திருப்பாளோ என்று கூட யோசனை செய்தனர்...

ஆனால் அவளுடன் படித்த தோழிகள் யாரும் அவள் அப்படிப்பட்ட பெண் இல்லை என்று கூறினர்... எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்று அவர்களுக்கு புரியவில்லை மூத்த மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று அழுது புலம்பக் கூட முடியாமல் அதிலிருந்து வெளியே வர முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் வேளையில் இப்படி இரண்டாவது மகளையும் காணவில்லை என்றால் என்ன செய்வது தங்களுக்கு மட்டும் ஏன் உலகத்தில் உள்ள அத்தனை கஷ்டங்களும் வருகிறது என்று மைதிலி நொந்து கொண்டே இருந்தார்...

காவல் நிலையத்திற்கு சென்ற சிவப்பிரகாசம்,"சார் என் பொண்ணை காணோம்" என்று கூறினார்....

போலீசார்,"யாராவது மேல சந்தேகம் படுறீங்களா ??" என்று கேட்டார்..

"எனக்கு ஆத்ரேயன் அவன் மேல தான் சார் சந்தேகம்" என்று கூற அவரது மனைவியோ,"என்னங்க சொல்றீங்க??? கம்முன்னு இருங்க" என ஆத்ரேயனை பயந்து கொண்டே கூறினார் மைதிலி..

"நீ சும்மா இரு மைதிலி இதுக்கு மேல நான் சும்மா இருக்க மாட்டேன் ஒரு பொண்ணோட வாழ்க்கை தான் போயிடுச்சுன்னு பார்த்தா அவன் என்ன என்கிட்ட விளையாட்டு காட்டிட்டு இருக்கானா இப்ப என்னோட இரண்டாவது மகளையும் காணோம் .. அவனுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் எதுக்காக நம்மளை இப்படி போட்டு படுத்தனும் நான் சொல்லாமல் இருக்கவே மாட்டேன்" என்று கொதித்தார் சிவப்பிரகாசம்...

போலீசாரை பார்த்து,"சார் எனக்கு அந்த ஆத்ரேயன் அவன் மேல தான் சந்தேகம் என்னுடைய முதல் பொண்ணையும் கட்டாயத் திருமணம் பண்ணி இருக்கான்... இதை வெளியில சொன்னா என்னுடைய இரண்டாவது மகளையும் ஏதாவது செஞ்சுருவேன்னு மிரட்டினான் எனக்கு அவன் மேல தான் சந்தேகம்" என்று உண்மையை எல்லாம் கூறினார் அவர்...

போலீஸார் அதைக்கேட்டு அதிர்ந்து,"அவர் பெரிய ஆள் அவரை போய் சந்தேகபடுறீங்க??? இத்தனை நாள் இதையெல்லாம் சொல்லாம என்ன பண்ணிட்டு இருந்தீங்க இப்ப வந்து சொல்றதுக்கு???" என்று கேட்டனர்...

"சார் எங்களை சொல்ல கூடாதுன்னு பயமுறுத்தி வச்சிருந்தான் சார்...என் பெரிய பொண்ணுக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு தான் அமைதியா இருந்தோம் நீங்க அங்கே போய் விசாரித்தா உண்மை தெரிஞ்சுடும் சார்" என்று கூறவும்," சரி வாங்க அவங்க வீட்ல போய் விசாரிப்போம்" என்று கூறி போலீசார் உடன் மைதிலி மற்றும் சிவப்பிரகாசம் ஆத்ரேயனின் வீட்டிற்கு சென்றனர்...

அங்கு மாலை எப்பொழுதும் போல ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு வந்திருந்தான் அவனது அறையில் தான் இருந்தான் அவள் எப்பொழுதும் போல தோட்டத்தில் இருந்தாள்...

என்ன ஒரு அதிசயம் இந்த ஒரு வார காலமாக அவனது விரல் கூட அவள் மீது படவில்லை இப்பொழுது தான் அவரது மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது...

அன்னைக்கு நாம பேசுனது நெனச்சு அவன் திருந்திட்டான் போல என மனம் கூற அவனாவது திருந்துறதாவது வேறு ஏதாவது நெனச்சு இருப்பான் என்று மூளை அறிவுரை கூறியது...

அதைக் கேட்டு அவளோ,"இருக்கும் இருக்கும் அடுத்தது அவன் என்ன செய்ய காத்திருக்கானோ தெரியல ஆனா இந்த நாள் எனக்கு நல்லபடியா தான் இருக்கு... இனியும் எத்தனை நாள் இவன் கூட இப்படியே இருக்க முடியும் ???" என மீண்டும் பழையது போலவே எண்ணிக் கொண்டாள்...

ஆனால் அவனது அமைதி அவளுக்கு ஏதோ ஒரு பயத்தை கொடுத்துக் கொண்டே இருந்தது அது மட்டும் இன்றி இன்று காலை சாரதா அம்மா டிவி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நியூஸ் சேனலில் ஆதி மற்றும் வசுந்தரா இருவரின் திருமணம் நடந்து விட்டது என்ற செய்தியை அவளும் பார்க்க நேரிட்டது..

அதைப் பார்த்த அவளுக்கு ஒரே ஆச்சரியம் அதற்குள் திருமணம் செய்து கொண்டானா??? இவ்வளவுதான் வாழ்க்கையா அன்றைய நாள் தன்னிடம் உருகி உருகி பேசியது என்ன நிச்சயம் முடித்ததில் இருந்து தன்னை நேசித்து பேசிய வார்த்தைகள் என்னென்ன இவ்வளவு தான் மனித வாழ்க்கையா இவ்வளவு தான் காதலின் ஆழமா??? என்றெல்லாம் எண்ணிக் கொண்டு இருந்தாள் எது எப்படியோ அவன் அவனுக்காக ஒரு வாழ்க்கை தேர்ந்தெடுத்து கொண்டானே அதுவரை மகிழ்ச்சி என்றும் அவனுக்காக வேண்டியும் கொண்டாள் அபிநந்தனா...

அப்படி இருக்க அவன் உள்ளே நுழைந்தும் அவள் அவனைத் தேடி செல்லவும் இல்லை அவனுக்கான தேவைகளை அவள் நிறைவேற்றும் இல்லை ஏனெனில் அன்று அவள் காபி கலந்து கொண்டு சென்றபோது அதை தட்டி எறிந்தவன் ,"இனி எனக்காக நீ எதுவும் செய்யத் தேவையில்லை ஆனால் உனக்கு ஏதாவது தேவைனா மறக்காமல் என்கிட்ட சொல்லு இது நீ சொன்னதுனால கிடையாது நானா முடிவு பண்ணது" என்று கூறியவன் தான் அதற்குப் பிறகு எதுவுமே அவளிடம் பேசவும் இல்லை...

அவள் முகத்தை பார்க்கவும் இல்லை அவளை தொட்டு தீண்டவும் இல்லை அவன் விலகி இருக்கவும் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.. சாரதா அம்மா அவளிடம் ஏதாவது ஓரிரு வார்த்தைகள் பேசுவதோடு சரி மற்றபடி இவளது வேலைகளில் அவர் தலையிட மாட்டார்... அப்படி இருக்க அந்த வீடு கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு அமைதியை கொடுத்தது என்று கூறலாம்...

அப்படி எப்போதும் போல தோட்டத்தில் அவள் அமர்ந்து கொண்டிருக்கும் பொழுதுதான் போலீஸ் வாகனம் ஆத்ரேயனின் வீட்டுக்குள் நுழைந்தது...

அவள் யாரது என்று பார்க்க போலீஸ் வாகனத்தை பார்த்ததும் அபி அதிர்ந்தாள்...

போலீஸ் வாகனத்தில் இருந்து தன் பெற்றோர்கள் இறங்கவும் அவளுக்கு தலை சுற்றியது அவளுக்கு பதற்றம் அதிகமாகி வேகமாக அங்கு சென்றாள்.... என்னமோ நடக்க கூடாதது நடந்தது போல அவள் பணம் பதைபதைத்தது...

"என்னாச்சும்மா என்னாச்சுப்பா" என்று பதறி அவள் கேட்க மைதிலி ஓடிவந்து அபியை அணைத்துக் கொண்டு,"அபி ஸ்ரீயை காணோம் எங்கே போனாலும் தெரியல நேத்து ராத்திரி இருந்து அவளை காணோம் நாங்க தேடாத இடமில்லை" என்று கூறவும் இவள் அதிர்ந்தாள்...

அவளுக்கு எல்லாம் விளங்கிப்போனது அவளது கணவனின் ஒரு வார அமைதிக்கு பின்னால் தன் தங்கை தானோ காரணம் என எண்ணியவளுக்கு பதற்றம் அதிகமாகியது... தானே தன் தங்கைக்கு இவனிடத்தில் குழி பறித்

து வைத்து விட்டோமோ என்று எண்ணினாள்...அதே நேரம் சாரதா அம்மா மற்றும் தகவல் அறிந்து ஆத்ரேயன் மாடியில் இருந்து கீழே வந்தான்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top