Share:
Notifications
Clear all

அத்தியாயம் 10

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

ஆத்ரேயன் கடும் கோபத்தில் வீட்டுக்குள் வந்தான்... வசு ஏன் அவனை நிகாரிக்கிறாள் எதுவும் அவனுக்கு புரியவில்லை... யோசித்து யோசித்து அவனுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம் இன்றைய நாளே அவனுக்கு போனது போன்ற உணர்வு தேவையில்லாமல் அவமானப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் அவனுக்கு வந்தது...அப்பனும் மகளும் சேர்ந்து என் நேரத்தை செலவாக்கிட்டாங்க என்று எண்ணினான்...

பொதுவாகவே சாதாரணமாக ஏதாவது செய்தால் கூட தன்னை எண்ணித்தான் செய்கிறார்களோ என்ற குணம் கொண்ட ஆத்ரேயனுக்கு இப்பொழுது வசு அனாவசியமாக தன்னை அவமானப்படுத்தி விட்டாள் என்று தான் எண்ணினான்...

கூடவே அவள் எதற்காக இப்படி இருக்கிறாள் என்னை யோசித்து யோசித்து தலை சூடாகிப் போனவனுக்கு ஒருவேளை இவளை திருமணம் செய்தது அவளுக்கு விருப்பமில்லாமல் போய்விட்டதோ என்று கூட எண்ணினான் ஆத்ரேயன்...

அவளுக்கு பிடிக்காமல் போவதில் என்ன இருக்கிறது இது என் முடிவு என் உரிமை அதைக் கேட்க பெற்ற தாய்க்கு அவகாசம் இல்லை என்று இருக்க இவள் கோபப்படுவதில் நியாயம் இல்லை... என்று என்னை அவனும் விட்டுவிட்டான் ஆனால் அவனுக்கு வந்த தலைவலி மட்டும் அவனை விட மாட்டேன் என அடம்பிடித்தது....

அந்த ஆத்திரத்தோடு வீட்டிற்கு நுழைந்தான்... அவனது தாயை காணவில்லை.... அவன் பார்வை அவன் மனைவி எங்கே என ஹால் முழுவதும் தேடியது...

அங்கு ஒரு சில பணியாட்கள் தவிர யாரையும் காணவில்லை... ஒருவேளை மேலே இருப்பாளோ என்று எண்ணினான்... போகும் வழியில் என்னதான் தாயிடம் அவன் பெரிதாக பேசுவதில்லை என்றாலும் தாய் என்ன செய்கிறார் என ஒரு நோட்டம் பார்த்தான்.... அவர் அவரது அறையில் அமர்ந்து கொண்டு வழிபாட்டு புத்தகம் படித்துக் கொண்டு இருந்தார்...

அதைக் கண்ட அவனுக்கு ஒரு வெறுமை தான் தோன்றியது..." என்ன படிச்சு என்ன பயன் நீங்க கேட்ட வரம் என்னைக்குமே உங்களுக்கு கிடைக்காது அது தெரிஞ்சும் சாமி பூதம் என்று சுத்திட்டு இருக்கீங்க??" என மனதுக்குள்ளயே கூறியவன் வேக வேகமாக மாடிப்படி ஏறினான்... அவனது அழுத்தமான காலடி சத்தத்தை வைத்தே சாரதா அவன் வந்து விட்டதே உணர்ந்தார்...

மீண்டும் அவரது கண்கள் அந்த புத்தகத்திலேயே படிந்தது.... என்ன இருந்து என்ன பயன் இது அறையே கதி என கிடைக்க வேண்டியதாக இருக்கிறது என்ன தெய்வம் மட்டும் இல்லை என்றால் அவரது வாழ்க்கை வெறுமை மட்டும் தான் என மகன் எண்ணியதேயே அவரும் எண்ணிக்கொண்டவர் ,"ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சிவ கோவிந்த கேசவா என் பையனை நல்லபடியா பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு நான் என் வாழ்க்கையை தொலைத்துவிட்டேன் என்று சொல்ல மாட்டேன் தெரிஞ்சே தான் தொலைச்சேன்!! அதே மாதிரி என் மகனும் தெரிஞ்சே அவனுடைய இயல்புகளை தொலைக்கிறான்னு எனக்கு எப்பவும் தோணும் ...அதிலிருந்து அவன் வெளியே வந்தா போதும் அதுக்கான அருளை மட்டும் என் மகனுக்கு கொடுத்தாயே" என்று ஒரு தாயாக தன் மகனின் நலனுக்கு வேண்டி வேண்டி மீண்டும் தன் பணியை துவங்கினார் சாரதா....அதே நேரம் அறைக்குள் நுழைந்தவன் அவள் அங்கு இருப்பாள் என அவன் கண்கள் தேடியது...

அவளை அங்கேயும் காணவில்லை ஒருவேளை பாத்ரூம் சென்றிருப்பாளோ என அவனது கண்கள் குளியல் அறையிலேயே இருந்தது....

ஒவ்வொரு நொடியும் அவளை காணாமல் அவனது கோபம் உயர்ந்து கொண்டே இருந்தது... அது ஏன் என அவனுக்கே தெரியவில்லை. வசு பேசாததால் வந்த கோபமா இல்லை இவளை தேடிய அவனது மனதிற்கு அவள் இன்னும் அவனது கண்களில் அகப்படவில்லை என்ற ஆத்திரமா எது என்று தெரியவில்லை அவனது உணர்வுகளை அவனாலேயே படிக்க முடியவில்லை ...

அவன் வாழ்க்கையில் அவள் நுழைந்து கிட்டத்தட்ட ஒரு பதினைந்து தினங்கள் ஆகியிருக்கும்.. ஆனால் இந்த பதினைந்து நாட்களும் அவனது மனம் அவளை தேடுகிறது அதை நன்றாக அவன் அறிவான்...

யாருடனும் தன் உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாத ஆத்ரேயன் மனம் அவளை விரும்புகிறது.. அவளைத் தேடுகிறது ஒருவேளை தன்னையே அவளோடு பகிர்ந்து கொண்டதால் தானோ இந்த எண்ணம் என எண்ணினான்… அதை எண்ணியவனுக்கு மெலிதான புன்னகை வந்தது..அந்த புன்னகையை வெளிக்காட்டி கொள்ள அவள் இங்கு இல்லை...

இன்னும் அவளை காணவில்லை பாத்ரூமில் யாரும் இருப்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை... அவள் எங்கே சென்றாள் கொஞ்சம் கொஞ்சமாக அவனது அரிதாக தோன்றிய மெல்லிய புன்னகை மீண்டும் கோபத்திற்கு வழி வகுத்தது...

அவன் அவனது அறைக்குள் நுழைந்து கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் ஆகிவிட்டன...அவனது அறை தட்டும் சத்தம் கேட்டது ஒருவேளை அவள் வந்து விட்டாலோ என அவனது மனம் கொஞ்சம் சாந்தி ஆகி,"எஸ் கமிங்" என்ற கம்பீரக் குரல் கேட்க வெளியே இருந்து வேலைக்கார பெண் உள்ளே நுழைந்து அவனுக்கான காபியை தயாரித்து கொண்டு வந்து மேஜையில் வைத்தாள்...

அவளை கண்டதும் ஏனோ தெரியாமல் அபிநந்தனாவின் மீது கொள்ளை ஆத்திரம் வந்தது.. அவனுடைய தன்னிலையை அவன் இழக்க துவங்கி விட்டான்..

"நித்யா அபி எங்கே??" என்று வேலைக்கார பெண்ணிடம் கேட்க,"சார் கீழே தோட்டத்தில் இருக்காங்க சார்" என்று கூறினாள் அவள்...

ஓ என்றவன் சற்றே தன் குரலை உயர்த்தி,"நான் கூப்பிட்டேன்னு அவங்களை என்னுடைய ரூமுக்கு வர சொல்லு" என்று கூறினான் ...அந்தப் பெண்ணும் சரி சார் என தலையாட்டி விட்டு சென்று விட்டாள்..

"தோட்டத்தில் இருக்கிறாள் என்றால் தோட்டமும் காரை நிறுத்தும் இடமும் மிக அருகில் அருகில் தான் அப்போது நான் வந்தது அவளுக்கு தெரிஞ்சிருக்கு தெரிஞ்சிட்டு வராம இருந்திருக்கா என்ன ஒரு திமிர் அவளுக்கு இருக்கும் புருஷன் வந்துட்டான் இன்னும் அங்கே இருக்கா அப்படின்னா இவளுக்கு என்ன திமிரு இருக்கணும்????" என எண்ணிக் கொண்டான்.... அது வேறு அவனது வன்ம மூட்டையில் இடம் பிடித்துக் கொண்டது...

அந்தப் பெண்ணும் அவன் கூறியது போல அவளைத் தேடிச் சென்றாள்... அந்த நேரம் அவளோ அவளையே வெறுக்கும் நிலையில் அமர்ந்து கொண்டு இருந்தாள் எப்படி என்னால் முடிந்தது..

"ஒருத்தன் கூட நிச்சயம் முடிந்து கல்யாணம் வரைக்கும் அவன் தான் புருஷன் சொல்லி ஆசை மனசுக்குள்ள வச்சு கிட்டத்தட்ட 20 நாளைக்கு முன்னாடி வேற ஒருத்தனுக்கு பொண்டாட்டியா கிட்டத்தட்ட கடத்தி கல்யாணம் பண்ணி இருக்கான் அவன் கூட அவனுடைய படுக்கையை பகிர்ந்து இருக்கேன்... எப்படி என்னால முடிஞ்சது... அவன் அப்படித்தான் அவன் கேரக்டர் அப்படித்தான் ஆனால் நான் அப்படி இல்லையே என்னை அப்படி வளர்த்தலையே.... என்னால எப்படி முடிந்தது அவன்கிட்ட வரும்பொழுது நான் ஏன் வெட்கப்படுகிறேன்.... அவன் கிட்ட வரும்போது நான் ஏன் துடிக்கிறேன் அவன் தொடும் போது ஏன் எனக்குள்ள உணர்ச்சி எல்லாம் வருது.... அப்போ நான் கேவலமான ஒருத்தியா????" என தன்னைத்தானே எண்ணி வெட்டிக் கொண்டாள் அபிநந்தனா...

"என்னால எப்படி முடிஞ்சுச்சு இனி காலம் முழுவதும் அவன் இஷ்டப்படி அவன் நினைச்ச மாதிரி நான் அவன் கூட தான் இருக்கணுமா என்ன வாழ்க்கை இது? எனக்குன்னு ஒரு உணர்வுகள் இல்லையா படுக்கையை பகிர்ந்து விட்டது மட்டும்தான் உணர்வா??? என்று அவன் நினைத்துக்கொண்டு இருக்கிறானா??? இவ்வளவு செய்தவனை எப்படி என் மனசு ஏத்துக்கும்??? எப்படி ஒரு வாழ்க்கையை நான் வாழ்வேன் சாகத் துணிவிருந்தால் கூட செத்து இருப்பேன் ஆனா என்னால சாக முடியாது அந்த அளவுக்கு எனக்கு மனசு கிடையாது???" என கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது தான் அவனது வாகனம் உள்ளே நுழைவதை கண்டாள்...

இருந்தும் அவளுக்கு அவனைக் காண செல்ல வேண்டும் என தோன்றவில்லை..."எதுக்கு நான் போகணும்??? ஆமாம் வந்துட்டான் இவனுக்கு வேண்டி ஓடிப்போய் சிரிச்ச முகத்தோடு அவனை வரவேற்கணுமா??? அப்படி ஒரு கல்யாணமா எனக்கு நடந்துச்சு..யார் வந்தா எனக்கு என்ன??? "என தன்னைத்தானே கேட்டுக் கொண்டவள் அப்படியே தோட்டத்திலேயே அமர்ந்து கொண்டாள்...

அந்த இடம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது அந்த சூழல் அவளுக்கு சற்று கொதித்துக் கொண்டிருக்கும் அவள் மனதிற்கு இதம் அளிப்பதாக இருந்தது...அதனால் அவள் பெரும்பாலும் இந்த இடத்தில் தான் பொழுதை கழிக்கிறாள்...

அதையும் கெடுக்கும் விதமாக அவனது வாகனம் வீட்டுக்குள் நுழைவதை கண்டவளுக்கு சற்று கோபமாகத்தான் இருந்தது... அவளால் அவனைப் போல பக்கம் பக்கமாக பேசி ஆத்திரப்பட்டு கோபப்பட இயலாது... அது அவளுடைய அதுவல்ல குணம் அவளது கோபம் அமைதியான நேர்மையான கோபம் அதை அவனிடம் வெளிப்படுத்தினாலும் அவளால் அவனைப் போல எதிராளியை அடக்கி ஜெயிக்க முடியாது...

எனவே அவள் அமைதியாக இருக்க அந்த சமயம் நித்யா வந்து,"மேம் உங்களை சார் மேலே வரச் சொன்னார்" என்று கூறினாள்...

அதைக் கேட்டு அவளுக்கு ஐயோ அழைத்து விட்டானே என்று தான் இருந்தது... ஆனால் வேலைக்கார பெண்ணிடம் எதுவும் காட்டிக் கொள்ள முடியாததால் சரி என்பது போல தலையை மட்டும் ஆட்டியவள் அங்கேயே நின்று கொண்டாள்...

செல்லலாமா வேண்டாமா என மனதுக்குள் போராடிக் கொண்டிருந்தாள் சென்று தான் ஆக வேண்டும் அதுதான் அழைத்துவிட்டானே என எண்ணியவள் மெதுவாக அவனது அறை நோக்கி செல்ல அதற்குள் அவன் கோபமே உருவாக நின்று கொண்டு இருந்தான்...அவனது கையில் எப்போதும் போல சிகரெட் இருந்தது பாதி எரிந்து கொண்டிருந்த சிகரெட் அந்த அறையை நிறைக்க அறைக்குள் நுழைந்ததும் அவள் அமைதியாக அவனது முகத்தைக் கூட பார்க்காமல் அப்படியே சிலை போல நின்று கொண்டாள்..

அவள் வருகையை பார்த்தவனோ," வெல்கம் மிஸ்ஸஸ் அபிநந்தனா ஆத்ரேயன்???" என்பதை அழுத்தி கூறினான்..

அவள் பதில் ஏதும் கூறவில்லை அமைதியாக நின்றாள்..அவளுக்கு எரிச்சலாக இருந்தது அவள் நிலை அவளுக்கே பிடிக்கவில்லை ...மனம் முழுவதும் அவளது வீட்டிலேயே இருந்தது...அங்கே இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்களோ அழைத்து பேச ஒரு ஃபோன் கூட தனக்கு இல்லையே என எண்ணினாள்...அதனால் அவன் கேள்விக்கு அவனை பார்க்க கூட தோன்ற வில்லை ..

அது அவனது எரிச்சலை மிக அதிகப்படுத்த அதை மிக சரியாக மனதில் வைத்து கொண்டவனோ ,"புருஷன் வீட்டுக்கு வந்தும் அவனை வரவேற்க கூட முடியாமல் அவ்வளவு பிஸியாக இருந்தியா???" என கேட்டான் அவன் ...

அவள் அமைதியாக இருக்க அவனது கோபம் எல்லை கடந்தது... இனியும் அவனுக்கு பொறுமை இல்லை காலையிலிருந்து அவனது மூடு சரிவர இயங்காமல் இருக்க இவளும் சேர்ந்து அவனுக்கு எரிச்சலை கொடுக்கவும் அவனது கோபம் பன்மடங்காகி ,"நான் கேட்டா பதில் சொல்லணும் அபி" என்று அவள் அருகே அவள் கையை அழுத்தி பிடித்த படி கூறினான்

அதற்கு அவளோ அவனது வார்த்தை கொஞ்சம் கடினமாக வருவதை உணர்ந்தவளுக்கு அவனது அழுத்தமான பிடியால் அவள் கை வலிக்க அவனது அருகாமை அவளுக்கு ஒரு வித விதிர்விதிர்ப்பை கொடுத்தது...

அவள் உடல் ஒரு நொடி குலுங்கியது அதிலும் அருகே நின்று கொண்டிருந்தவன் எப்பொழுது வேண்டுமானாலும் அவளது உடலை தொட்டுவிடலாம் என்ற நிலையில் அவன் நின்றான்..இனியும் அவனை தன் உடலை தொட விடாது தான் வேசியை விட கீழாக போய் விட்டோம் இனி அவன் தொட்டால் மறுத்தே ஆக வேண்டும் என எண்ணினாள்...

சற்று முன் எண்ணியது எல்லாம் அவளுக்கு நினைவு வந்து தொலைக்க அவளது உடலோ அவனது மூச்சுக்காற்றுக்கே குலையும் நிலையில் இருந்தது... அது வேறு அவளுக்கு மிகவும் அவமானமாக இருக்க இவனுக்கு பதில் அளித்து தப்பித்து விட வேண்டும் என எண்ணினாள்..

"தோட்டத்துல நின்னுட்டு இருந்தேன் நீங்க வந்ததை கவனிக்கல" என்று அவளது வாய் கூறியது...

"ஆமா அப்படியே முறையா நடந்த கல்யாணம் பாரு இவன பார்த்ததும் ஓடி வருவதற்கு !!" என மனதுக்குள் கூறிக் கொண்டாள் ...அது அவளது முகத்தில் அப்பட்டமாக தென்பட்டது...

அது அவனது காதிற்கு கேட்டதோ என்னவோ,"ஏன் என்னை எல்லாம் உன் மனசு புருஷனா ஏத்துக்காதா???" என்று கேட்டான்...

இன்னும் பிடியை விடாமல் அவன் கேட்க, அதற்கு அவள் அமைதியாக இருக்க ,"என்னை பாரு" என்று அவன் கூற அவளோ நிமிர்ந்து அவனை பார்த்தாள்...அவளால் முடியவில்லை...நரகமாக இருக்கிறது இவனுடான ஒவ்வொரு நொடியும் அவனை போல அவளால் கொதிக்க முடியவில்லை அவன் வேறு பிடித்து கொண்டு இருக்கிறான்..

அவள் விலக முயற்சி செய்து தோற்று நிற்கையில் அவள் மனம் பாடு அறியாது அவன் பேச இப்பவோ அப்பவோ என விழும் நிலையில் தயாராக இருந்தது அவளுடைய கண்ணீர் அதை கண்ட அவனும் என்னை எண்ணினானோ,"என்னை பார்க்க பயமா இருக்கா???" என்று அழுத்தமாக அவளை பார்த்து கேட்டான்...ஏனெனில் அவனே அவளுடைய பயத்தை உணர்ந்து கொண்டு தானே இருக்கிறான்...அவன் எப்போதும் அவள் முகத்தில் கண்ணீரை விரும்புவது இல்லை அது எதனால் என தெரியவில்லை...

அதற்கு அவள் கண்களாலேயே ஆம் என்று கூற அவனது அத்தனை நேரம் கோபமும் நொடி பொழுதில் மாயம் ஆனது..அவளது கைகளை அழுத்தமாக அவன் பிடித்து இடத்தில் கைகள் சிவந்து இருக்க அதை கண்டவன் அவளை நெஞ்சோடு சேர்த்து பிடித்தான்..அவனது மார்பில் அவளை புதைய வைக்க அவனை போல அவனுடைய அழுத்தமான இதயத்தின் ஓசையும் அவளை பாடாய் படுத்த அவனை தொட விட கூடாது என்று எண்ணியவளுக்கு இப்போது அவன் மார்பில் புதைந்து கொண்டே ஆறுதல் தேடுகிறோமே என எண்ணி அவளை அவளே அறுவறுத்தாள்...அவளுக்கு அவள் மீதே ஆத்திரம் வந்தது..அப்படி ஆம்பிளை சுகம் அவள் உடலுக்கு தேவையா சீ என மானசீகமாக அவளை அவளே காரி உமிழ்ந்தாள்..

இப்போதும் அவன் மனம் அறியா அவனோ அவளிடம்,"பயப்படாத!!! உனக்கு பிடிக்காத படி நான் தாலி கட்டி இருந்தாலும் முறையா உன்னை மனைவியா ஏத்துக்கிட்டேன் நீயும் என்ன புருஷனா ஏத்துக்கலாம் தப்பு ஒன்றும் இல்லை... ஏத்துகிட்டு தான் ஆகணும் அது வேற விசயம்...

எதுக்கெடுத்தாலும் அழுகிறத நிறுத்து நீ என்னுடைய மனைவி அதை ஞாபகம் வச்சுக்கோ.. நான் வந்தா நீ என் கண்ணு முன்னாடி இருக்கணும் இருந்தே ஆகணும் ஓடி ஒளியனும்னா எங்கே போய் ஒளிய முடியும் அதனால இனி நான் வரும்போது நீ இருக்க இருந்து தான் ஆகணும் என் தேவைகளை நீ கவனி" என்று அவன் மனதில் ஓடும் ஓட்டங்களை மறைத்து அவன் அவளுக்கு அறிவுரை கூறவும் அவளோ தலையை மட்டும் ஆட்டினாள்...அவளுக்கு அவன் விட்டால் போதுமென்ற நிலைமை இருந்தது அவன் கூறுவது எதுவும் அவள் காதில் விழவில்லை...வெடிக்கும் நிலையில் அவள் இருந்தாள்..

அவள் இப்படியே இருப்பதனால் வந்த விளைவு என எண்ணி கொண்டவன் இவள் என்னுடைய மனைவி இவளை எக்காரணத்தைக் கொண்டும் விடமாட்டேன் என்று எண்ணித்தான் திருமணத்தை செய்து கொண்டவன் வாழ்க்கை முழுவதும் இவள் வேண்டும் என்று தானே அவளை கரம் பிடித்திருக்கிறான் அப்படி இருக்க அவளை அவ்வளவு எளிதாக விட்டுவிடுவானோ??? இனி அவளை தன்னோடு வைத்திருக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டவன் எப்போதும் திமிரோடு இருப்பவனுக்கு இவளை எப்படி சமாதானம் செய்வது எல்லாம் தெரியவில்லை ஆனால் அவளுடைய கண்ணீரை நிறுத்தியாக வேண்டும் என்று மட்டும் தோன்றியது தன் நெற்றியை நீவி விட்டு கொண்டே,

"காபி போட தெரியுமா???" என்க

அவளோ தலையை தெரியும் என்பது போல ஆட்டினாள்..இப்போதும் அவளை தன் அருகே இருந்து விடவில்லை...

"அப்போ எனக்கு இனி காபி உன் கையாள போட்டு தரணும் இப்போ நீ என்ன பண்ற எனக்கு வேண்டிய எல்லாம் வேலையும் செய்யணும் செய்யற" என்றான்..அவனது அந்த அதிகார தொனி அவளுக்கு எரிச்சலை கொடுத்தது..மெல்ல அவனிடம் இருந்து விலகியவள் வெடித்து விட்டாள்..

"நான் ஏன் இதை எல்லாம் செய்யணும்???"

"நீ தானே என்னோட மனைவி???" என்றான்..

"என்ன சொன்னீங்க மனைவியா அது உங்களை பொறுத்தவரை!!! நான் அப்படி நினைக்கல..நீங்க என்னை பொறுத்தவரை மான்ஸ்டர் ஆத்ரேயன்... உங்க வேலை எல்லாம் செய்ய அதுக்கு தான் வேலைக்காரி இருக்காளே நான் எதுக்கு??? உங்களுக்கு எப்படி கேட்க முடியுது எதையும் மனசில் வைக்காமல் உங்களை கணவனா ஏத்துக்க எப்படி சொல்றீங்க??? உங்ககிட்ட நியாயம் எதிர்பார்க்க முடியாது மிரட்டி உங்க காரியம் சாதிச்ச உங்களை நான் மன்னிக்கவே மாட்டேன்...நீங்க என் உடலை வேணும்னா எடுத்து இருக்கலாம் ஆனால் என் மனசு உங்களுக்கு எப்போவும் கிடைக்காது...இப்போ சொல்றேன் நீங்க தொடும் போது எனக்கு அப்படியே கம்பிளி புழு ஊறுன மாதிரி அருவருப்பாக இருக்கு" என்று கூறியவளை பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது..

அதுவும் அந்த கடைசி வார்த்தை அவனால் உட்கொள்ள முடியவில்லை..."என்ன டி பயம் விட்டு போச்சா??? என்ன நான் தொட்டா உனக்கு புழு ஊருற மாதிரி இருக்கா அப்போ இன்னும் அசிங்கபடு உன் வாழ்க்கை முழுவதும் நான் மட்டும் தான் உன்னை தொட்டுட்டே இருப்பேன் உனக்கு வேற ஆப்சன் உனக்கு இல்லை.." என்று கூறி மீண்டும் அழுத்தமாக அவள் கையை பிடித்தான் ஆத்ரேயன்..

"கையை விடுங்க வலிக்குது எனக்கு உங்க மேல இருக்கிற பயமும் போகல என் மனசில் இருக்கிற வலியும் போகல..ஆமாம் அசிங்கமா தான் இருக்கு இதோ இந்த இடைவெளியை நான் வெறுக்கிறேன் " என்று அவனுக்கும் அவளுக்கும் இடையே உள்ள இடைவெளியை அவள் காட்டி கூறினாள்..

அதை கேட்ட அவனோ,"அபி நான் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கேன் எனக்கு என்னோட இஷ்டம் தான் ரொம்ப முக்கியம்னு உன் விருப்பத்தை பார்த்து இருந்தா உன்னை நடு ரோட்டில் வைத்து தாலி வேண்டிய அவசியமே கிடையாது..அதுனால தேவை இல்லாமல் யோசிக்கிறத விடு அது தேவையில்லாத வலியை உனக்கு தான் கொடுக்கும்??? என்னை விட்டு போகலாம்னு பார்க்கறியா?? அது உன்னால முடியும்னு உனக்கு தோணுதா???"என்றான் கோபத்தோடு...

"நான் தான் எங்கேயும் போகலையே இங்கேயே உங்க கண் முன்னாடி தானே இருக்கேன்... இப்போ கூட உங்களுக்கு காபி போடத்தான் நான் போறேன் " என்றாள் அபி..

அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்த அவனுக்கு அவளது தீடிர் பேச்சு அதிசயமாக இருந்தது.. அதே நேரம் ஆச்சர்யமாகவும் இருந்தது...அவனது பொறுமையையும் தன்னை எதிர்க்க துணிந்த தன் மனைவியை அடக்கியே ஆக வேண்டும் என்ற எண்ணம் ஆத்ரேயனுக்கு கொழுந்து விட்டு எரிந்தது..

இப்படியே ஒரு வாரம் கழிய அவள் தங்கை ஶ்ரீலட்சுமியை காணவில்லை என அவளது பெற்றோர் தேடி கொண்டிருந்தனர்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top