ஸ்வரம் 9
ஸ்வரம் : 9
போன் ஒலித்து கொண்டே இருக்க அனைவரும் போனையே பார்க்க அவளோ அதை கண்டுக்கொள்ளாமல் போனை கட் செய்தாள்..இவனுக்கு என்ன மரியாதை என்பது போல இருந்தது அவளது தோரணை.. அவளது செய்கை அவனது இமேஜை தொட்டு தீண்டியது போல இருந்தது அதில் களிப்புற்றவன் இனி சும்மா இருக்க மாட்டான் என அவனது மனசாட்சி அவனிடம் கூற அவன் அதற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டிய வெறி அவனுள் எழுந்தது...ஒரு நொடி பலமாக என்ன செய்யலாம் என யோசித்தவனுக்கு அழகாக தொக்காக ஒரு எண்ணம் வந்து உதிக்க அதை செயல்ப்படுத்த முனைந்தான் ஆர்ய கௌரவ்.. ஏனெனில் அவன் அவளுக்கு அழைத்த நேரம் வீட்டுக்கு வந்து இருந்தான்..
அந்த சமயம் அவள் அங்கு இல்லை இரண்டாவது அவளுக்கு அவன் அணிவித்த தாலி நேற்று கூடி களித்த படுக்கையில் அவிழ்த்து எறிந்து விட்டு அவள் சென்று அதை கண்டவன் மனம் இந்த நொடி அவள் இங்கே வந்தாக வேண்டும் என கொதிக்க அதை செயல்படுத்த முனைந்தான்..
தன் தந்தையை கண்டவள்,"டாடி நீங்க தான் சொல்லுவிங்க அவன் நல்லவன் ஏதோ தனியா இருக்கிறதுனால இப்படி ஆகிட்டான்னு ஆனால் அப்படி இல்லை டாடி அவன் பிராட் டாடி அவன் ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டான்" என்று கூற,
அதை கேட்ட நிதிஷ்க்கு என்ன செய்வது என்று புரியவில்லை ஊர் முழுவதும் இவர்களின் திருமண விஷயத்தை தான் பேசிக்கொண்டு இருக்க , இப்போது இவள் வேறு ஒரு குண்டை தூக்கி போடுகிறாளே என்று தான் நிதிஷ் நினைக்க தன் மகள் இப்படி என் மானத்தை வாங்கி விட்டாளே என வருந்தி கொண்டிருக்கும் வேளையில் மகள் அவள் இப்படி கூற அதைக்கேட்டு நிதிஷ் கோபத்தில் திளைத்தார் அவனுக்கு என்ன திண்ணக்கம் என்று தான் நினைத்து அவனை ஏதாவது செய்யாமல் விட மாட்டேன் என்று நினைத்தார்..
"அப்போ அவன் என்ன காரணத்துக்காக இத செஞ்சு இருக்கான்" என்று அவர் கூற, " எதுக்காக பழிவாங்குவதற்காக தான்" என்று ஹிமானி கூற
அதைக் கேட்டு அந்த வீட்டில் உள்ள அனைவரும் திகைத்தனர்.." என்ன சொல்ற பழி வாங்குற அளவுக்கு நாம என்ன அவனுக்கு செஞ்சோம் சும்மா ஏதாவது சொல்லிட்டு இருக்காதே" என்று சிவானி அவனது ரசிகை என்று அங்கு நிரூபித்தாள்..
" நீ வாயை மூடு அவனோட சினிமா பார்த்துட்டு நீ பேசாதே அவன் அப்படியெல்லாம் கிடையாது அவன் ஒரு மான்ஸ்டர் நான் மிஹூவை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னே இப்படி எல்லாம் இப்படி எல்லாம் செஞ்சு இருக்கான்" என்று கூற
" என்னால நம்ப முடியல நீ அவன் கூட பேசிட்டி இருந்ததை நானே பார்த்து இருக்கேன் டாடி இவ சொல்றதை நம்பாதீங்க இவ பொய் எல்லாம் சொல்லுவா " என்று சிவானி அவனுக்கு துணை போய் எப்போதோ அவளுடைய அக்கா கூறும் பொய்களை எல்லாம் இணைத்து கூற அவளது தந்தையோ ஹிமானியை நம்பாமல் பார்க்க அதை கண்டு அவளோ , " டாடி அவ சொல்றதை நம்பாதீங்க நான் பொய் சொல்லி இருக்கேன் ஆனால் இப்போ சொல்றது எல்லாம் உண்மை ஹே சும்மா இரு டி நடந்தது என்னன்னு தெரியாமல் பேசிட்டு இருக்காத " என்று கூற
அதற்குள் நிதிஷ்க்கு ஒரு அழைப்பு வர அவரோ அந்த அழைப்பை எடுத்தார் ஒரு சினிமா அவரது தயாரிப்பில் தயாராகிக் கொண்டிருக்க அது ஒரு சிறு முதலீடு பட்ஜெட் திரைப்படம் தான் அது அந்த திரைப்படத்தின் செட் திடீரென தீப்பற்றி எரிந்து விட்டதாக செய்தி வர அதை கேட்டு நிதிஷ் அதிர்ந்தார்..
" என்ன சொல்ற எப்படி தீடீர்ன்னு " என்று அவர் கூற, " சார் தெரில சார் பக்கத்துல எல்லாம் சேரிங்க அதனால தீப்பற்றி இருக்குமோனு பயமா இருக்கு நாம வேற போட்டிருக்கும் செட் சேரில தான் போட்டு இருக்கோம் தீ பரவினா ரொம்ப பிரச்சனை ஆகிடும் சார் சீக்கிரம் வாங்க சார் இல்லனா பெரிய கம்ப்ளைன்ட் ஆகிவிடும் " என்று அவருடைய அசிஸ்டன்ட் கூற , "சரி நான் இப்பவே வரேன் "..என்று நிதீஷ் கிளம்பினார்
அவர் பேசுவதை பார்த்து பயந்து, "எப்படி தீப்பிடித்தது??" என்று பாயல் கேட்க , "தெரியல நான் சீக்கிரம் போறேன் வந்து பேசிக்கலாம்" என்று கூறிவிட்டு நிதிஷ் கிளம்ப ஹீமானியோ இனி என்ன செய்வது என்று யோசித்து அறையில் நடந்துகொண்டிருந்தாள் அவளுக்கு எப்படியாவது மிஹ்ரானிடம் பேசியே ஆகவேண்டும் அப்படி இருக்க,
வேகமாக தன் மாமன் மகனை அழைத்தாள் கொஞ்சம் அவன் என்ன நினைப்பானோ என்ற தயக்கம் அவளுக்கு இருந்தாலும் அவள் அழைத்தாள்.. ஆனால் மிஹ்ரான் எடுத்தால் தானே அவன் ஒரு ஆண் பிள்ளையாக இருந்தால் அவளது அழைப்பை எடுக்க மாட்டான் அந்த அளவுக்கு அவள் மீது அவன் கோபத்தில் இருக்க இவளோ விடாமல் அவனை அழைத்துக் கொண்டிருந்தாள்..
அவனோ எடுக்காமல் போக அதை பார்த்த ஷிவானி , "அவன் எடுக்க மாட்டான் நீ எதுக்கு அவனை கூப்பிட்டு இருக்க??" என்று கூற பாயலுக்கு இங்கே நடக்கும் கூத்தை எல்லாம் பார்த்து என்ன செய்வதென்றே தெரியவில்லை சாமியே சரணம் என அவர் சென்றுவிட , "எனக்கு அவ கூட பேசி ஆகனும் சிவானி அவன் கூட பேசாம என்னால இருக்க முடியாது" என்று கூறினாள் ஹிமானி..
அப்போது சிவானி ஒரு விஷயம் அவனிடம் கூறினாள் , "உனக்கு ஒன்னு தெரியுமா இப்போ மிஹூ ஒரு புதிய படத்தில் கமிட்டாகி இருக்கான் அதப்பத்தி டிஸ்கஷன் தான் ஹோட்டல் தாஜ்ல போயிட்டு இருக்கு என்னோட ஃபிரண்ட் அர்மான் அங்கிளோட பொண்ணு அமிர்ஷா தான் ஹீரோயின்" என்று கூற ,
அதை கேட்டவளுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக தான் இருந்தது ஏனெனில் இதை பற்றி மிஹ்ரான் அவளிடம் கூறி இருந்தாள் அது போலவே நடக்க கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தாள் ஹிமானி..
"நீ அங்க போனா அவனை மீட் பண்ணலாம் நீ அவன மாமா வீட்டுக்கு போகாம அங்க போய் பாரு அப்போ அவ உங்கிட்ட பேசறதுக்கு சான்ஸ் இருக்கு பிக்காஸ் ஆன்ட்டி ரொம்ப கோபமா இருந்தாங்க " என்று கூற சரி என்று கூறி அவளும் அவளது போனை எடுத்துக் கொண்டு சென்றாள் ஹிமானி..
அங்கே மிக ரகசியமாக மிஹ்ரான் நடிக்கும் புதிய படத்தின் கதை டிஸ்கஷன் சென்றுகொண்டிருந்தது தாஜ் ஹோட்டலில் மேலே ஒரு கோச் முழுவதும் புக் செய்திருந்தனர் அங்கே யாரும் வரக்கூடாது என முன்பே அறிவுறுத்தப்பட்டு இருக்க யாரும் அந்த பகுதிக்கு செல்லவில்லை..
கதையில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர் டைரக்டர் இவர்கள் மட்டுமே அங்கு இருந்தனர் படத்தை இயக்கப்போவது மிஹ்ரானின் நண்பன் அதனால் இந்த படம் வாய்ப்பு எப்படியாவது தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தான்
அந்த சமயம் பார்த்து தான் அவள் அழைத்துக் கொண்டிருக்க அவள் முகத்தில் கூட விழிக்க கூடாது என்று இருந்தவனுக்கு அவளது அழைப்பு எரிச்சலை கொடுத்தது வேகமாக தனது போனை அணைத்து விட்டு அமர்ந்து கொண்டான்..அவளோ மீண்டும் முயற்சித்து தோற்று போனாள்..
