ஸ்வரம் 8

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  


ஸ்வரம் : 8

அவன் அவளது பேச்சை எல்லாம் கேட்டு பணிப்பெண் சென்று விட்டாள் என்பதை உணர்ந்து , "ஹலோ ஹலோ" என்று கூறுவது அவளுக்கு தெளிவாக கேட்டது.. நான் இவ்ளோ தூரம் கூப்பிட்டும் அவ போன் எடுக்கலையே என்று கடுப்பில் இருந்தவன் ஹலோ என்று சற்று கடுமையான குரலில் கூறவும் அவள் பதில் பேசாமல் இருக்க அவன் தன் நிலையை இழக்கிறான் என்பதை அவன் உணர்ந்தான்..

தன் அருகில் வேறு பல ஆட்கள் சூழ்ந்திருக்க ஒரு பக்கம் கேமரா மறுபக்கம் புரோடுயூசர் ,டைரக்டர் அந்த சினிமாவில் நடித்த நடிகர்கள் ஊடகங்கள் என எல்லோரும் சூழ்ந்திருக்க அவனால் சத்தமாக கூட பேச முடியவில்லை , "சாப்பிட்டியா ஹனி" என்று கேட்க,

அதற்கு அவளிடம் பதில் இல்லை, " நான் சீக்கிரம் வந்துடுவேன்" என்று அவள் பதில் பேசாததை வெளியே பேசுபொருள் ஆக்கிவிடக்கூடாது என்று அவன் பதில் பேசவும் எதற்கும் அவள் பதில் கூறாமல் இருக்க சட்டென்று போனை வைத்துவிட்டான்..

சுற்றுப்புறம் பார்த்து தன் கோபத்தை அடக்கிக்கொண்டு அவனுக்கு அவளை என்ன செய்யலாம் என்று தான் அவனது மூளை சிந்தித்துக் கொண்டிருந்தது அதில் வேறு விழா தொடங்க சில மணி நேரம் தாமதம் ஆனதால் அவன் முகம் கடுகடுவென இதன் அருகே அமர்ந்து கொண்டு விழாவின் ஒருங்கிணைப்பாளரும் தயாரிப்பாளரும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க எதுவுமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை முகத்தை கடுமையாக கடுமையாக அது வெளியே தெரியாமல் இருக்க அரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான்..

அதிலும் அவர், " நாம அடுத்த படமும் சேர்ந்து செய்யணும் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்டுதான் "என்று பேசிக் கொண்டிருக்க அவனோ, " அடுத்தபடம் நாம சேர்ந்து செய்யணும் அப்படினா இன்னும் பத்து நிமிஷத்துல இந்த பங்க்ஷன் முடிஞ்சு இருக்கணும் இல்ல அப்படின்னா நான் எந்திரிச்சு போயிட்டே இருப்பேன்" என்று கூறினான் அதைக் கேட்ட தயாரிப்பாளர் அதிர்ந்தார்

ஏனெனில் அவனது ஆரம்ப காலத்தில் அவனை தூக்கிவிட்ட தயாரிப்பாளர் இவர்தான் அவருடைய புரோடக்சனில் இவன் பல படங்கள் நடித்துக் கொண்டிருந்தான் அப்படி அவன் வளர இவரும் தூண்டுகோலாக இருந்தார் ஆனால் அதை நினைத்துப் பார்க்காமல் ஆர்யா பேசவும் அவருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை அவரது முகம் நொடிப்பொழுதில் மாறியது..

ஆனால் ஆர்ய கௌரவ்வை பொறுத்தவரை அவன் பழகுவதற்கு அத்தனை சுலபமான ஒருவனல்ல பேசுவதற்கும் இனிமையான ஒருவனும் அல்ல எப்பொழுது என்ன பேசுவான் என்ன செய்வான் என யாராலும் கணிக்க முடியாத ஒருவன் சினிமாவில் கதாபாத்திரமாக வாழ்வதைப் பார்த்து பல கோடி ரசிகர்கள் அவனை ரசிக்க அவனோ ஒரு குறுகிய கூட்டில் வாழ்ந்து வருபவன் அதனால் அவனிடம் ஏதாவது தேவையில்லாமல் பேச முனைந்தால் மூக்கு உடைவது.. நிச்சயம் யாருக்கும் எதற்கும் அஞ்ச மாட்டான் அவனது வேலைகளும் அப்படித்தான் இருக்கும் அதனால் அவரிடம் கொஞ்சம் அடக்கி வாசிக்கத் தான் வேண்டும் என்பதால் அந்த தயாரிப்பாளரும் அமைதியாக இருக்க விழா இனிதே முடிவுற்றது அதற்கு அடுத்த நொடி அவன் அவனது வீட்டிற்கு கிளம்பி இருந்தான்

அதற்குள் இங்கே அவளோ அவளுக்கு எந்த பதிலும் கூறாமல் இருந்தவள் என்ன செய்யலாம் என யோசித்து அடுத்த நொடி அவன் அணிவித்த தாலியை கழட்டி நேற்று இரவு கூடி கழித்த அந்த படுக்கையிலேயே விசிறி அடித்து வீட்டை விட்டு இறங்கினாள் அவனது மனைவி..

வீட்டைவிட்டு வெளியே வந்தவளை பார்த்த அந்த வீட்டின் கார் டிரைவர் வேகமாக காரை எடுத்து வந்தான் அவளுக்கும் வெளியே செல்ல வேண்டும் அதனால் மறு பேச்சு பேசாமல் அந்த காரில் ஏறி அமர்ந்து கொண்டால் அந்த கார் டிரைவர் அவர்களுக்காக அவனால் நியமிக்கப்பட்ட ஒருவன் அவள் எங்கு செல்லவேண்டும் என எண்ணினாலும் அவளை கொண்டு செல்வது மட்டுமே அவனது வேலை அதனால் வேகமாக ஓடி வரவும் இவள் ஏறி அமர்ந்தாள்..

இவன் செய்தது எதுவும் தெரியாமல் அவள் அந்த வீட்டைவிட்டு கிளம்பி நேராக அவளது வீட்டுக்கு செல்ல அவளது வீடும் வந்தது அந்த கார் டிரைவரிடம், " நீ வீட்டுக்கு போயிடு" என்று கூற ,

"மேடம் நான் வெயிட் பண்றேன் நீங்க எங்க போகணுனாலும் உங்க கூடவே இருக்க சார் சொல்லியிருக்கார்" என்று கூற அதைக்கேட்ட அவளுக்கு கடுப்பாகி , "உங்க சார் அப்படி சொல்லியிருந்தார் அப்படின்னா நீ நிக்கிற இடத்துல நில்லு எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை ஆனால் நான் இப்போதைக்கு வர போறது இல்லை "என்று கூறி விட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டாள்..

அங்கே வீடு மயான அமைதியாக இருந்தது அவரது தந்தை அலுவல் அறையில் இருந்தார் போலும் அங்கு யாரிடமோ பேசும் சத்தம் கேட்டது அம்மா அம்மா என்று அழைத்துக் கொண்டே உள்ளே வர பாயல் பூஜை அறையில் இருந்தார் கண்கள் ததும்ப அவர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்

தன் மகளுக்கு இப்படி ஒன்று நடந்து விட்டதே இனி அவள் என்ன செய்யப் போகிறாளோ என வருத்தப்பட்டு கொண்டிருந்தார் பாயல் ..ஹிமானி தாயை ஒரு நொடி பார்த்தவள் கண்கள் குளம் கட்ட துவங்க வேகமாக தன் கண்களை அழுந்தத் துடைத்து அழுகையை உள்ளே இழுத்துக் கொண்ட ஹிமானி தன் தங்கையின் அறையை நோக்கி சென்றாள்.. அவளோ பால்கனியில் நின்று கொண்டு யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருப்பது தெளிவாக விமானிக்கு கேட்டது

"நான் நினைச்சு கூட பாக்கல அவன லவ் பண்ணுவான்னு எங்கிட்ட கூட அவர் சொல்லவே இல்லை பட் அவன் எவ்ளோ ஹேண்ட்சம் இல்ல நான் இவ கல்யாணம் முடிஞ்சதும் அவன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணலாம்னு இருந்தேன் என் அக்கா என் குடியை கெடுத்துட்டா" என்று புலம்பிக் கொண்டிருக்க ,

தினம் ஒருவனை பிடிக்கும் என்ற பருவ வயதில் நிற்கும் தன் தங்கையை எண்ணி தலையில் தான் அடித்துக் கொண்டாள் அவள், " ஏய் என்னடி பண்ணிட்டு இருக்க??" என்று அக்கா கேட்க ,

வேகமாக திரும்பியவள் , "ஹீமோ நீ வந்துட்டியா வாவ் "என்று கட்டிப்பிடித்து தன் இதழ்களை எல்லாம் அவள் முகமெங்கும் பதித்தாள் பிறகு அவளிடம் , "நான் கிஸ் பண்ண இடத்திலெல்லாம் உன் புருஷனும் கிஸ் பண்ணினானா??" என்று கேட்க அவளின் முகம் உடனே வேகமாக சிவந்தது.. உண்மைதானே நேற்று இரவு அவள் தேகத்தில் அவன் தொடாத இடமே அவள் தேகத்தில் இல்லையே அதை எண்ணி அவளுக்கு நேற்று இரவு வேறு ஏனோ ஞாபகம் வந்து போக, " யூ இடியட் என்ன பேசிட்டு இருக்க?? நிறுத்து உன் வயசுக்கு தகுந்த மாதிரி பேசு" என்று கோபம் கொண்டாள் அக்கா ..

அதற்கு சிவானியோ, " ஆமா உன் முகம் ரொம்ப அழகா சிவந்து இருக்கு அதனால தான் சொன்னேன் இங்க பாரு " என்று அவளது பால் மேனி சிவப்பாக இருக்க அவனது கைகள் பட்ட இடமெல்லாம் சிவந்து அவனது உதடுகள் பட்ட இடமும் சிவந்து அவள் இருக்க அதை காட்டிய தன் தங்கையை பார்த்து வேகமாக தன் உடைகளை எல்லாம் சரி செய்து கொண்டவள் இடுப்பில் கட்டியிருந்த முடிச்சயையும் லேசாக இறக்கி விட்டாள்

"என்னை விட்டு டி என்னை ஆராய்ச்சி பண்றதை விட்டுட்டு என்னோட போன் எங்கே ??" என்று கேட்க, " இதோ இங்கே இருக்கே "என்று தங்கை எடுத்துக் கொடுத்தாள்.. அதை வாங்கியவள் மொபைலை ஆன்செய்ய ஏகப்பட்ட கால்கள் ஏகப்பட்ட மெசேஜ்கள் வந்து குவிந்திருந்தன அதை பார்த்து அவள் முகம் மாறியது..

"ஏய் உன் புருஷன் வந்து இருக்காங்களா??" என்று அவள் அருகே வந்து அவளது மொபைலை பார்க்க அவளோ வேகமாக அதை ஆப் செய்து வைத்தவள், " அவன் வரல" என்று கூற ,

அதற்குள் வேகமாக ஓடி வந்தார் பாயல் என்னாச்சு என்று தன் மகளை தலை முதல் கால் வரை ஆராய தனது இரண்டாவது மகளுக்கு ஏதோ லேசாக புரிவது போல் இருக்க இத்தனை நாள் குடும்ப வாழ்க்கையில் வாழ்ந்த பயலுக்கு தன் மகளின் முகத்தை பார்த்தே விஷயம் புரியாதா என்ன அவரோ , "என்ன திடீர்னு அவங்க அவர் இல்லாம நீ ஏன் வீட்டுக்கு வந்து இருக்க??" என்று வினவ மகளோ முறைத்தாள்

"நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு நீ முழிச்சிட்டு இருக்க கல்யாணமான பொண்ணு அதுலயும் கர்ப்பமா வேற இருக்க கல்யாணம் ஆகி மொதமொத அம்மா வீட்டுக்கு வரும்பொழுது புருஷன் கூட தான் வரணும்" என்று கூற கர்ப்பம் புருஷன் என்ற இரு வார்த்தையும் அவளை செவி வழியாக ரத்தம் வழிவது போல அவளுக்கு தோன்ற , "கொஞ்சம் நிறுத்துங்க புருஷன் பெரிய புருஷன் பிராடு ஒன்னாம் நம்பர் பிராடு பார்க்கத்தான் ஹீரோ மாதிரி இருக்கான் செய்யற வேலை எல்லாம் வில்லன் வேலை இதோ இந்த வயித்துல ஒன்னும் இல்ல நல்லா ஏமாத்திட்டான் எவனோ ஒருத்தன் மாசமா இருக்கான்னு சொன்னா நீங்க உடனே கல்யாணம் பண்ணி கொடுத்துடுவிங்களா என் வயித்துல ஒரு மண்ணும் இல்லை" என்று அவள் கூற அதைக்கேட்டு அதிர்ந்தார் பாயல் ..

விஷயத்தை கேட்டுக்கொண்டே வந்த நிதிஷ் கபூர் , "என்ன சொல்ற "என்று அதிர்ந்து கேட்க ஆமாம் டாடி அவன் நல்லா ஏமாத்தி தான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டான்" என்று தந்தையிடம் வருத்தமாக கூறவும் அதே நேரம் அவளது போன் ஒலித்தது வேறுயாருமல்ல அவளது கணவன் தான்..

ஸ்வரம் இசைக்கும்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top