ஸ்வரம் 7
ஸ்வரம் : 7
விடியற்காலை யாருக்கும் காத்திருக்காமல் அழகாக விடிய கண்களைத்திறந்து மெல்ல பார்த்த ஹிமானிக்கு அவளது கோலமும் நேற்று நடந்த செயலும் நினைவுக்கு வந்து அவளை வாட்டி வதைத்தன..
அந்த நேரத்தில் தனக்கு இருந்த பயத்தை அவன் உபயோகப்படுத்தி கொண்டானோ என்ற எண்ணம் வர எது எப்படியோ என்னை அவன் அடைந்து விட்டான் ஆனால் நான் அவனை சும்மா விட மாட்டேன் என உறுதி எடுத்து கொண்டாள்...அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை ஒரே இரவோடு எல்லாம் இப்படி அரங்கேறும் என அவள் எண்ணவில்லை ஆனால் நடந்து இருக்க செய்வது அறியாது தனக்கு தாலி கட்டியவன் மீது அளவற்ற கோபம் கொண்டாள் பெண்ணவள்..
எங்கே அவன் சுற்றி முற்றி அவனை தேடி பார்த்தாள் அவன் இருப்பதற்கான எந்த தடயமும் இல்லை இருந்தால் தான் என்ன நேற்று எல்லாம் அவன் விருப்பம் தானே நடந்தது எவ்வளவு ஆணவமா பேசினான் என எண்ணியவளுக்கு நேற்று அவனை தடுக்க துப்பு இல்லையோ என்னவோ இன்று அவன் இல்லாத போது அவன் மீது வானம் அளவுக்கு கோபம் வைத்திருந்தவளுக்கு அவள் காதலும் அதற்கு அவனால் அவள் செய்த தூரோகமும் ஞாபகம் வர தன் காதலனுக்கு தவறிழைத்து விட்டோமோ என்று கூனிக் குறுகினாள்..
நேராக குளியலறை சென்றவள் தன் மீதான ஆத்திரமும் உடல் ஆத்திரமும் தீர குளித்தாள்..அப்பொழுதும் அவள் மனம் ஆறவில்லை அவள் நேற்று அவனுடன் களித்த இரவை எண்ணினாலே பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது மனதில் ஒருவனை எண்ணி வேறு ஒருவனுடன் உடலை பகிர்ந்து கொண்டோம் இதற்கு எப்படி என் மனம் துணிந்தது என்ற கேள்வி அவளை வாட்டி வதைத்தது தன் ஆத்திரம் தீர தண்ணீருக்கு அடியில் இருந்தவள் ஒரு துண்டை கட்டிக் கொண்டு வெளியே வந்தாள்..
வெளியே வந்தவளுக்கு நேற்று இரவு அவனுடன் சல்லாபித்த அந்த படுக்கையை காணும் போது அதில் அமர கூட அவளுக்கு விருப்பம் இல்லை..அதனால் அங்கே போட்டு இருக்கும் அந்த நீண்ட ஒற்றை சோபாவில் அவள் அணிந்து இருந்த தான் கட்டியிருந்த துண்டோடு வந்து அமர்ந்து மீண்டும் நடந்த சம்பவங்களை அசைபோட்டு கொண்டு இருக்க அப்போது தான் அந்த அறையின் ஏசியின் குளுமை அவள் உடலெங்கும் பரவ தன் தேகம் குளிர்மை அடைவதை உணர்ந்தவளுக்கு அப்போது தான் அவளது உடை குறித்த ஞானோதயம் உதித்தது..
தன்னுடையை பார்த்தவள் தன் தலையில் தட்டி இப்போது எந்த உடை அணிவது என பார்த்தவளுக்கு நேற்று அவன் கழட்டி எறிந்த உடை கூட அங்கே தென்படவில்லை அவனது உடை ஏதாவது இருக்கும் அதை எடுத்து அணியலாம் என கபோர்டு திறந்து பார்க்கும் பொழுது அங்கு அவளுக்காக அவள் விரும்பும் விதத்தில் அவள் எவ்வாறு உடை அணிவாளோ அதுபோல உடைகள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது அதையெல்லாம் பார்த்ததும் ஒரு நொடிக்கும் குறைவான ஷனம் அவளது கண்கள் விரிந்தது என்று கூறினால் மிகையாகாது..
அதில் பல வண்ணங்கள் அடங்கிய உடைகள் இருக்க அதில் இருந்து ஒரு குட்டைப் பாவாடையும் ஒரு கையில்லாத பனியனையும் எடுத்து அணிந்தவள் அந்த கையில்லாத பனியனை தனது தொப்புள் தெரியும்படி முடிச்சிட்டு கொண்டாள் அந்த உடையை அணிந்து கண்ணாடியில் பார்த்தவளுக்கு மிகக் கச்சிதமாக அவளுக்கு அளவெடுத்து வாங்கியது போல இருக்க அந்த கலரும் அவளுக்கு பிடித்தமானதாக இருக்க எப்படி உனக்கு எல்லாம் இதெல்லாம் தெரியுதோ என்னவோ என எண்ணினாள் பின் கழுத்தில் மின்னும் மங்கல்சூத்ராவை பார்த்தவளுக்கு மீண்டும் அவன் மீது கோபம் வந்தது , "சீ இவனெல்லாம் ஒரு மனுஷனா இப்படி உடையும் நகையும் ஆடம்பர வாழ்க்கையும் இவனுக்கு இருக்கிற மதிப்பையும் பார்த்து இவன் பின்னாடி நான் போயிடுவேன்னு நினைப்பா இல்ல இவன் கூட எல்லாத்தையும் மறந்துட்டு நான் வாழ்ந்திடுவேன் என நினைப்பா நான் ஹிமானி நேத்து ஏதோ ஒரு தப்பு நடந்து போச்சு இனி அதை தொடர எனக்கு விருப்பம் இல்லை இனி அவன் யாரோ நான் யாரோ" என்று வாய் மொழியாகவே கூறியவள் வேகமாக அவள் கழுத்தில் அணிந்திருந்த மங்கல்சூத்ரா அவிழ்க்க போக அவளது அறையில் இருக்கும் இன்டர்காம் அலறியது..
போனை எடுக்க அவளுக்கு மனமில்லை இருந்தும் அவனை போல அது அலற அதில் கடுப்பானவள், "இடியட் அவனை மாதிரியே இருக்கு அவனோட ரூம் அவனோட திங்ஸ் எல்லாமே" என்று புலம்பியவள் அந்த அழைப்பை எடுக்காமல் இருக்க அப்பொழுது தான் எப்படி உடை கூட இல்லாமல் அவள் இங்கே வந்தாலும் அதுபோல அவளுடைய போன் எதுவுமே அவளிடம் இல்லை அப்படி இருக்க யாரையாவது அழைக்கலாம் என்று நினைத்தால் கூட அவளால் அழைக்க முடியாது சரி என்ன செய்யலாம் என யோசித்த அவள் திரும்பிப் பார்க்க அங்கு புத்தம் புதிய புதிய மாடல் போன் ரெடியாக இருந்தது ..
இன்டர்காம் அடித்து ஓய்ந்த நேரம் பார்த்து அந்த புதிய போன் அலறியது அதில் ஆர்யா என்று அழைப்பு வர அதை பார்த்த அவளோ புது போனும் வாங்கி விட்டயா என்று பார்த்தாலும் அந்த அழைப்பை எடுக்கவில்லை.. அவள் ஒவ்வொரு முறையும் அவனது அழைப்பை நிராகரித்து கொண்டே இருக்க அடுத்த நொடி அந்த வீட்டின் பணியாள் அவளது அறை கதவை தட்ட துவங்கினாள் ..
இவளோ என்ன செய்யலாம் என யோசித்து அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்க அறைக் கதவு தட்டும் ஓசை கேட்கவும் மிகுந்த எரிச்சல் உற்றாள்.. என்னை நிம்மதியாக இருக்க விட மாட்டாங்களா என்று அவள் கதவைத் திறக்க அவளது கோபத்தை கண்ட எதிரில் இருந்த பணிப்பெண் ஒரு நொடி பயந்து விட்டாள்
அதை கண்டு, " என்ன?? என்ன விஷயம்" என்று அவள் அதிர்ந்து கேட்க, " மேடம் சார் ஆன்லைன்ல இருக்காரு உங்கள போன் எடுக்க சொன்னார் இது உங்க மார்னிங் பிரேக்பாஸ்ட் உங்க ரூமுக்கு கொண்டு வரச் சொல்லியிருந்தார்" என்று அவள் லைனாக அவளுக்கு அறிவுறுத்தப்பட்ட பணிகளை எல்லாம் சிறப்பாக செய்து அதை தன் எஜமானியிடம் கொண்டு செல்ல, " அவளோ வச்சிட்டு போ" என்று கூறினாள்..
அந்த பணிப்பெண் கொண்டு வந்த ட்ரேயில் ஒரு இன்டர்காம் இருக்க அதுவும் ஆன் செய்யப்பட்ட நிலையில் இருக்க அந்தப் பெண் செல்லும் பொழுது திரும்பிப் பார்த்துக்கொண்டே, " மேடம் போன் எடுத்துப் பேசுங்க சார் லைன்ல தான் இருக்காரு" என்று கூறி செல்ல, " எனக்கு தெரியும் உன் வேலையே பாத்துட்டு போ" என்று ஹிமானி கோபத்தோடு கூறினாள்..
அந்தப் பெண்ணும் தன் வேலை முடிந்தது என்று பட்டென்று வெளியேறி விட்டாள்.. அங்கே நடக்கும் பேச்சுகளை எல்லாம் ஒரு ஆடியோ லான்ச் விழாவில் இருந்து அவன் கேட்டுக் கொண்டிருந்தான் அது அவனது ரிலீஸாக போகின்ற படத்தின் இசை வெளியீட்டு விழா அவன் முன்பே கூறியிருந்தான் நான் வரமாட்டேன் என்று ஆனால் அந்த புரொடியூசர் கெஞ்சி கூத்தாடியதால் மட்டுமே அவன் வந்தான் ..அதுவும் விழா முடிந்ததும் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் தான் இருந்தான்..
அவள் உறங்கி எழும் முன்பு அங்கு இருக்கவேண்டும் என்று தான் அவன் எண்ணியிருந்தான் ஒரு சில தினத்திற்கு எந்தவிதமான அலுவல்களையும் அவன் எடுத்திருக்கவில்லை ஆனால் இது தவிர்க்க முடியாததால் மட்டுமே அவன் சென்றிருக்க அவளோ அங்கே கோபத்தோடு இருந்தாள் போன் எடுப்பதா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்க போனோ ஸ்பீக்கரில் இருந்தது..
