ஸ்வரம் 4
ஸ்வரம் : 4
"என்ன சார் எங்கே பார்த்தாலும் உங்களுக்கு தோல்வி தானா ???இந்த பாலிவுட்டில் இருக்கிற பொண்ணுங்க ஒண்ணுக்கு மூணு பேரை டேட் பண்றது சாதாரணம் தான் ஆனால் ஒரே வீட்டில் இரண்டு பேரை டேட் பண்ணி இரண்டு பேரையும் மணவறை வரைக்கும் கூட்டிட்டு வந்து அதுல ஒருத்தர் மணமேடை வரைக்கும் வந்தும் உங்களுக்கு திருமணம் நடக்காமல் போகிடுச்சே"... என்று சில குசும்பு ஊடகவியாளர்கள் பண்பு என்றால் என்ன என்று தெரியாமல் இருக்கும் அவர்கள் அநாகரீகமாக கேள்வி கேட்க,
அதை கேட்டவனுக்கோ ஆத்திரம் எழுந்தது என்ன தான் இருந்தாலும் ஆண்மகன் அல்லவா இளரத்தம் கொதிக்கும் தானே தனக்கு வரும் வாய்ப்பை எல்லாம் தட்டி தன் பாதையில் எப்போதும் கல்லெறிந்து கொண்டிருக்கும் அவனது தந்தைக்கு பிறந்தவனை எண்ணினாலே அவனுக்கு ஆத்திரம் தான்..
ஒதுங்க ஒதுங்க அடிப்பார்கள் என கூறுவார்களே அது போல மிஹ்ரான் அவன் உண்டு அவன் வேலை உண்டு என இருந்தாலும் ஆர்யன் அமைதியாக இருக்க மாட்டான்...அப்படி இருக்க இதோ அவனது வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கும் செயலை செய்பவனை என்ன வென்று சொல்ல?? இன்று நடப்பதே அபத்தம் என்றால் அதில் இவர்களது கேள்விகள் அவனை மேலும் சூடாக்கி விட," உங்க பொண்ணையோ இல்லை உங்க மனைவியையோ அனுப்புங்க நான் கல்யாணம் செய்துக்கறேன்"...என்று சிரித்த முகத்திலே காமெடியாக கூறினான்.. இல்லையேல் அவன் நடிகன் என்பதால் தேவை இல்லாத பிரச்சனை எழும் என்பதாலேயே கோபத்தை முகத்தில் வெளிப்படுத்தி குரலில் மென்மையை கொணர்ந்து கூற,
"என்ன சார் இப்படி பேசறீங்க ???"..என கேள்வி கேட்டவர் கொதிக்க
"அவர் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொன்னேன்"... என்று மிஹ்ரான் பதில் கூறி தன் சூட்டை தனித்து கொண்டான்..
இதை கண்ட உபேந்திராவோ இடையில் தலையிட்டு தன் மகனை பார்த்து , "மிஹு அமைதியா இரு" என சைகை செய்து அடக்கி , " காதலர்கள் ஒன்னு சேரனும்னு ஆசைப்படறாங்க பெரியவங்க நாங்க கவனிக்காமல் ஏற்பாடு பண்ணிட்டோம் அது தவறா??? இப்போ அவங்க ஆசையில் குறுக்கிடாமல் இப்போவாவது கல்யாணம் பண்ணி வைக்கிறோம் அதுக்கு என்ன இப்போ??? நடப்பது எங்க குடும்பத்து விழா அதில் யார் திருமணம் செய்துகிட்டா உங்களுக்கு என்ன??? உங்கள் வேலை இது அல்லவே.. எங்க குடும்பத்துக்குள்ள மீடியா வரதை நாங்க விரும்பல அதனால இனி இதை பத்தி பேசாதீங்க "...என்று கூறி முடித்து விட,
நிதிஷ் மற்றும் பாயல் மிகவும் அவமானத்தோடு நின்று கொண்டிருந்தனர்...அதில் பாயல் மட்டும் , "என்னங்க அவன் சொன்னது போல செய்துட்டானோ??"... என்க
"அதுக்கு அவன் என்கிட்ட உரிமையா பொண்ணு கேட்டு இருக்கலாம் பாயல் இப்படி அசிங்கப்படுத்தி இருக்கணும்னு இல்லை முன்னாடியே சொல்லி இருந்தா நாம மறுக்கவா போறோம் சொல்லு.. நான் பெத்ததும் சொல்லல அது தான் எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு ".. என்று கூற அதை கேட்டு நின்று கொண்டிருந்த பாயலுக்கு மட்டும் ஏதேதோ நினைவுகள் வந்து போக ஆர்யன் நினைத்ததை முடிப்பவன் என்றே தோன்றியது..
தன் மனைவியின் இடையை அழுத்தி பிடித்து கொண்டு மிக கம்பீரமாக நடந்து வந்தான் ஆர்யன் கௌரவ்...
அவனது கம்பீரத்தை காணும் போதே அவளது அடிவயிற்றில் நெருப்பு வைத்தது போல இருக்க அவள் நினைத்தது எதுவும் நடக்காமல் இப்படி மாட்டி விட்டேனே என்று தான் அவளுள் கொழுந்து விட்டெறிய பிறர் பார்வையும் கூடவே அவளது குடும்பத்தார் பார்வையும் அவளை சுட,
மிஹ்ரான் பார்வையை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை அதுவும் அவள் வயிற்றில் கரு உண்டு என மருத்துவர்கள் கூறியும் அவளால் அதை என்ணி நொந்தவளுக்கு பிறர் பார்வையை எதிர் கொள்ளும் திறன் இல்லை அவள் கால்கள் தள்ளாடின...
"இருவரும் காதலித்தார்களா?? ஹே ஆமாம் அவங்க மாலத்தீவு போன சமயத்தில் எடுத்த படங்கள் தான் அவ்ளோ கிளாசியா இருந்ததே இதெல்லாம் பெரிய இடத்தில் சாதராணம்".. என்ற பேச்சுக்கள் எல்லாம் ஹிமானியின் காதில் மட்டும் தான் விழுகின்றதா இல்லை அவளது பிரமையா ???
அவனது கம்பீரமும் சுற்றியிருந்த கூட்டத்தின் வாய் பிளந்த பார்வையும் அவளுக்கு நிம்மதியை கெடுக்க மயங்கியது முதல் இதோ இப்பொழுது வரை என்ன நடக்கிறது என்று அவளால் சரிவர உணர்ந்து கொள்ள முடியவில்லை அருகில் இருப்பவன் அருகாமையும் அவனும் அவளை பாடாய்படுத்த உடனே அவளுக்கு என்னவோ இவர்கள் கூறுவது தான் ஒருவேளை உண்மையாக இருக்குமோ என அவள் யோசிக்க, " ரொம்ப யோசிக்காத கடைசியில் இதெல்லாம் உண்மையா நடக்கப்போகுது அவளுக்கு இப்போ அவங்க எல்லாரும் நாம காதலர்கள்ன்னு சொல்லிட்டு இருக்காங்க அத கூடிய சீக்கிரம் உண்மை ஆகிடலாம் அதனால யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை இதுக்கு எல்லாம் நீ டென்ஷன் ஆகாத டி என் பொண்டாட்டி"
என்று அவன் கூற ,
அதற்கு அவளோ அவனை பார்த்து மெல்லிய குரலில் யாரும் கேட்காத அவனுக்கு மட்டுமே கேட்கும் சத்தத்தில் , "அதுக்கு நான் உன்னை காதலிக்கனும் என் மனசுக்கு உன்ன பிடிச்சிருக்கனும் ஆனா என் மனசு உன்ன விரும்பல உன்ன ஒரு அற்பப் புழு மாதிரி தான் நான் இப்போ பார்க்கறேன் இதோ இந்த ஊரே உன்ன பாத்து ரசிக்குது ஆனா எனக்கு மட்டும் அருவருப்பா தான் இருக்கு நீ ஒரு அருவருப்பான இப்படி ஒரு அசிங்கமான செயலை செஞ்சிட்டு என் முன்னாடி பேசிட்டு இருக்க உன்ன நான் வெறுக்கிறேன் அடியோடு வெறுக்கிறேன்"... என்று கூறியவள் எதிரே நின்று கொண்டிருந்த மிஹ்ரானை பார்த்து வேதனை சுரக்க
அதைக்கேட்டவனுக்கும் அவளது பார்வை சென்ற திசையை கண்டவனுக்கும் மேலும் ஆத்திரம் எழ, மிஹ்ரானை பார்த்தவனுக்கு கண்களில் ஆத்திரம் சுடர்விட்டு எரிய தன்னருகே நிற்கும் தன் மனைவி தன்னை விட்டு வேறொருவனை பார்ப்பது அவனது ஆண்மைக்கு இழுக்கு என்ற எண்ணத்தை கொண்டவனுக்கு இத்தனை வேலை செய்து அவளை தன் கைக்குள் வைத்து கொள்ள அவன் பார்க்க மீண்டும் அவன் பக்கம் அவள் பார்வை போவாதா என நினைத்தவன் சுற்றுப்புறம் ஒன்றும் யோசிக்காமல், " என்ன காதலா இன்னும் உருகிட்டு இருக்கியா??? கொஞ்சம் உன்னை குளிர வைக்கவா??? அதுக்கான மருந்து என்கிட்ட தான் இருக்கு".. என கூறியவனின் கைகள் அவளது இடையில் இருந்து மெல்ல மேல்நோக்கி செல்ல அவளோ அவனது பிடியில் இருந்து விலக முனையும் நேரம் நொடி பொழுதில் அவளை தன் கைக்குள் வளைத்து சுற்றார் முன்னிலையில் அவளது இதழை ருசித்தான் இது ஆங்கிலேய பாணி முறையில் இருந்தது அவனது செய்கை அங்கே கூடி இருப்பவர்களுக்கு தவறாக தெரியவில்லை வெளியே இருப்பவர்கள் இந்த காட்சியை பார்த்து ரசித்து இப்போவாவது சேர்ந்தார்களே என ரசிக்க விஷயம் அறிந்த குடும்பத்தார்களோ எரிச்சலில் தான் இருந்தனர்..அதுவும் இரு குடும்பமும் உரசும் நிலையில் தான் இருந்தது... தன் மகள் சொல்வது உண்மையாக இருக்குமோ ஒரு வேளை அவனை பிடிக்கவில்லை என கூறினாலே அது உண்மையாக இருக்குமோ என சிந்தித்து கொண்டிருந்த நிதிஷ்க்கு எல்லாம் இந்த காட்சியும் தன் மகள் பிடிப்புக்காக அவனது பரந்த முதுகை அழுத்தி பிடித்து இருப்பதை பார்த்து அனைவரும் அதிர ஷிவானி மட்டும் வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தாள்...ஆம் அவளும் அவளது அக்காவும் இதோ அவளது அக்காவின் இதழை முரட்டுதனமாக ருசித்து கொண்டிருந்தானே அவனையும் அவனது சினிமா என்றால் அவர்களுக்கு உயிர் ...எப்படியாவது ஸ்பெசல் ஷோ பார்த்து விடுவர்...
ஆர்யன் எப்போதும் எங்கேயும் இவர்களை பார்த்து முறைத்தாலும் இவன் என்றால் இவர்கள் இருவருக்கும் பிடித்தமே அப்படி இருக்க சினிமாவில் எப்படி ஹீரோயினின் இதழை ருசிப்பானோ அதே போல தன் அக்காவை அவன் ருசிக்க அதை கண்டவள் வாயை தான் அவளால் பிளக்க முடிந்தது...
இந்த கபூர் மற்றும் மல்கோத்ரா குடும்பத்தை பொறுத்தவரை பெரிய குடும்பம் மேலும் ஊர் போற்றும் குடும்பம் என்பதால் மிக சிறிய விஷயங்கள் கூட பெரிய அளவில் பேசும் பொருள் ஆகும் என்பதால் அவர்கள் குடும்ப கவுரவத்தை விட்டு கொடுக்கும் வகையில் எங்கேயும் நடக்க மாட்டார்கள் ..அது தவறே என்றாலும் விட மாட்டார்கள் அது தான் அதில் வருத்தப்படக்கூடிய விஷயமே..
ஒரு வேளை அவர்கள் பாகத்தில் இருந்து ஏதேனும் தவறு நிகழ்ந்தாலும் கூட தவறே நிகலாதது போலவும் தவறை சரியென்றும் சமாளித்து வருவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர்..இதை ஊரார் அறிந்தாலும் கேள்வி எழுப்பினாலும் அந்த பொய்யை நியாகரித்து பேசுவதை வழமாக கொண்டிருக்க அதையே தான் இப்போதும் செய்திருக்க அதை தாங்கி கொள்ள முடியா சில நெஞ்சங்களோ குடும்பத்திற்காக தங்கள் உணர்வை வெளிக்காட்டி கொள்ள முடியாமல் திணறி கொண்டிருந்தனர்..அந்த அளவுக்கு குடும்ப மானம் அவர்களை குத்தி கீறி இருந்தது...
அதில் மிஹ்ரானை நிமிர்ந்து பார்க்கும் சக்தி ஹிமானிக்கு இல்லை குடும்பத்தார் அனைவர் முன்னிலையில் அவன் தீண்டும் போது அவனை அடித்து இருக்க வேண்டுமோ இந்த ஒற்றை முத்தத்திலே அவர்களது குடும்பத்தாருக்கும் அவள் மீது சந்தேகத்தை விதைத்து இருக்கிறானோ??? என அவள் நினைக்க அதே போன்ற பார்வையை தான் அவர்களும் அவர்கள் மீது வீச திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் சபை நாகரிகம் கருதி ஹிமானி மற்றும் ஆர்யனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டு போக, இவளுக்கு அங்கே நிற்க முடியவில்லை..
அவளும் ஏன் அனைவர் முன்னும் பேசாமல் இருக்கிறாள் என அவள் அறியாள் அவளும் கற்ற பாடம் அவளை அமைதியாக நிற்க வைக்கிறதோ ஒரு வழியாக வந்தவர்கள் எல்லாம் செல்ல ஹிமானி மற்றும் ஆர்யனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் விலக அதை கண்ட அவளோ யாருமற்றவளாக தன்னை நினைக்க ,
அதை கண்டவனுக்கு பெரிதாக எந்த உருக்கமும் நிகழந்தது போல தெரியவில்லை இது எல்லாம் நடக்க வேண்டும் என்பது தானே அவனது எண்ணமும் அனைவரும் சென்ற பின், " இன்னும் எத்தனை நேரம் தான் இப்படியே நிற்க போற ??"...என்றவன் அவளை அழைத்து செல்ல தந்தையும் தாயும் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றதை கண்டவளுக்கு அவன் மீது ஆத்திரம் துளிர் விட அறைக்குள் சென்றதும் , "இப்போ உனக்கு நிம்மதியா ?? எல்லோரையும் அவமானப்படுத்தினப்போ உனக்கு நிம்மதியாச்சா?? யாரை கேட்டு எனக்கு நீ தாலி கட்டின ??"... என்று எகிறினாள் அவனுடைய மனையாள்..
"யாரை கேட்கனும்???"...
" என்னை கேட்கனும் எனக்கு எவன் புருஷனா இருக்கணும்னு நான் தான் முடிவு பண்ணனும்".. என்று கூற
அதை கேட்டவனோ அவள் அருகே வந்து, "ஓ அப்படியா ?? ஆனால் என் மனைவிக்கு அந்த பாக்கியம் இல்லைன்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேனே அது உனக்கு நினைவு இல்லையா??"...என்க
"இடியட் மனைவி மனைவின்னு சொல்லிட்டு இருக்காத பத்திட்டு வருது.. என்ன என் வயித்துல புள்ள கொடுத்திட்டா நீ பெரிய இவனா ?? இப்போவே இதை அழிச்சிட்டு வரேன் பார்...உன் மானத்தை வாங்கியே தீருவேன்.. பெரிய நடிகன் தானே உன் லட்சணம் என்னன்னு ஊர் பூரா சொல்லல என் பேர் ஹிமானி இல்ல".. என்க,
அதை கேட்டவனா அவள் அருகே நெருங்கி நின்று அவள் மூச்சுக்காற்று அவன் தேகத்தில் தீண்டும் அளவுக்கு நெருங்கியவன் அதுக்கு தான் உன் பேரை ஹிமானி ஆர்யன்ன்னு மாத்தியாச்சே" ..என்று கூறியவன் அவனது நெருக்கத்தை எண்ணி அதிர்ந்து பார்க்க, அவனோ அவளை இறுக்கமாக அணைத்து, " இனி உனக்கு பிடிச்சு இருக்கோ இல்லையோ இது தான் உனக்கான வாழ்க்கை நீ வாழ்ந்து தான் ஆகனும் ..பிகாஸ் நீ என்னோட பொண்டாட்டி..அதுனால உன் காதலனை எல்லாம் மறந்துட்டு புருஷனை கவனி "..என்று கொஞ்சம் கண்டிப்பான குரலில் கூற
அவளோ அவனிடமிருந்து திமிறி கொண்டே, " என்னை விடு" என்று நெளிய
"இப்படி விலகிட்டே இருந்தா குழந்தை எப்படி வரும் இன்னிக்கு நம்ம முதல் இரவு தெரியுமா??"... என்று அவளது கழுத்து வளைவில் அவன் புதைய,
" எதுக்கு குழந்தை பெத்துக்கவா அது தான் இருக்கே என்னை விடு ".. என்று அவள் விலக துடிக்க
" அங்கே ஏதாவது இருந்தா தானே பெத்துக்க முடியும் அதுக்கு தான் ட்ரை பண்ண போறேன் ".. என்று நக்கல் குரலில் ஆர்யன் கூற,
"என்ன ??"..என கேட்டு அவள் அதிர,
அவள் அதிர்ச்சியை ரசித்தவன், " இப்போ உன் வயித்துல குழந்தை இல்லை ஆனால் கூடிய சீக்கிரத்தில் வரும் "..என கூறியவன் என்ன முழிக்கிற ,
" இப்போவே போய் உன் வீட்ல சொல்லலாம்னா நீ சொன்னா அவங்க நம்புவாங்களான்னு யோசிச்சிட்டு போ ..எல்லா நேரமும் நான் பொய் சொல்லிட்டு இருக்க மாட்டேன் ".. என்று அவன் கூற அதை கேட்டவள் அதிர அவனோ அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி, " நான் சொன்னதை செய்வேன்னு உனக்கு தெரிஞ்சு இருக்குமே எனக்கு ஒரு விஷயம் தேவைனா நான் அதை எப்படி வேணாலும் அடைஞ்சிடுவேன் அதுவே வேண்டாம்னா சீண்ட கூட மாட்டேன் ".. என்க,
அதை கேட்டவள் சத்தியமாக அவனை எண்ணி அதிர்ந்தவளுக்கு இலேசாக அவன் மீது தோன்றும் பயத்தை அடக்க முடியவில்லை என்றாலும் , " நான் வேறொருத்தன் காதலின்னு தெரிஞ்சுமா நீ இப்படி செய்த??"..
"ஆமாம் அப்படி தெரிஞ்சதுனால தான் செய்தேன்...அதை பத்தி எனக்கு என்ன கவலை இப்போ நீ என் மனைவி " என்று கூறியவனின் கை அவளது இடையை சுற்றி வளைத்தது...
ஸ்வரம் இசைக்கும்...
