ஸ்வரம் 34
ஸ்வரம் 34
அதைக்கேட்டு அவளோ மெல்லிய சிரிப்புடன், " கண்டிப்பா இல்ல ஆர்யாவுக்கு என்னை எவ்வளவு தூரம் பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும் அதே அளவுக்கு அவரு இந்த சினிமாவை அவ ரொம்ப நேசிக்கிறார் கிட்டதட்ட 6 வருஷமா அந்த சினிமாவுக்கு தான் அவர் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து இருக்காரு சினிமா இல்லனா கண்டிப்பா ஆர்யா இல்ல அப்படி இருக்கும் பொழுது எனக்காக நான் அவர சினிமா விட்டுட்டு வாங்க நான் சொல்ல போறது கிடையாது நான் சொல்லவும் மாட்டேன் ஒருத்தர் கூட நாம வாழ்ந்துட்டு இருக்கும்பொழுது சும்மா காதலித்தோம் வாழ்ந்தோம் அப்படின்னு இல்லாமல் அவருடைய கனவுகள் ஆசைகள் என்ன அப்படின்னு அதை தெரிஞ்சு கிட்டு அவர்களுக்கு உறுதுணையாக நிற்பது தானே இந்த காதலும் கல்யாணமும் இணைந்து நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தமும் இருக்கும் அதனால அவர் இனி விரைவாக புது படத்தில் புக் ஆவார் அவர் கொஞ்சம் ரெஸ்ட்ல இருந்தாரே ஒழிய மத்தபடி வேறு எதுவும் இல்லை..அவருக்கு என்னை விட அவருக்கு எப்போ படம் செய்யணும்னு நல்லாவே தெரியும்
அவருக்கு இந்த நடிப்பு அல்லாமல் திரைத்துறையில் எல்லா பக்கமும் கால்பதிக்கும் உன்ன ரொம்ப ஆசை கண்டிப்பா அதற்கான முயற்சியும் எடுப்பார் கூடிய விரைவிலேயே அவரை நீங்க வேறொரு பரிமாணத்தில் பார்க்கலாம் அதற்கு நானும் அவருக்கு உறுதுணையாக இருக்க போகிறேன்" என்று அவனுடைய ஆசைகளையும் தெளிவாக விவரிக்க அதைக் கேட்டதும் அந்த அரங்கமே கரகோஷம் எழுப்பியது..
" கண்டிப்பா எவ்வளவு உறுதுணையாக இருக்கீங்க மிசஸ் ஆர்யா அதை பார்க்கும் பொழுது எங்களுக்கு உங்க மேல கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு சார் ரொம்பவே லக்கி "என்று கூறவும் ஆர்யாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை ..
அவனது கனவுகளை அவள் அழகாக விவரிக்க காதல் மட்டும் அங்கு கரைபுரண்டு ஓட வில்லை அவளுடனான வாழ்க்கையின் நம்பிக்கையும் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி கரை புரண்டோட ஆர்யா மற்றும் ஹிமானி ஜோடி அந்த அரங்கத்தையே தங்களது அதிரடி பேச்சுகளால் அடித்துக் கொண்டிருக்க இதையெல்லாம் வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நிதிஷ் மற்றும் பாயல் குடும்பம் மகிழ்ந்தனர்..
அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதே அவர்களுக்கு மிக சமாதானமாக இருந்தது மேலும் நிதிஷை பொறுத்தவரை அவருக்கு குடும்பம் மட்டுமே அவரது உலகம் அவரது மனைவி மக்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவரால் தாங்கிக்கொள்ள முடியாது அதற்காக அவர் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்க தயாராக இருப்பார்..
அப்படி இருக்கையில் தான் ஆர்யா என்ற ஒருத்தனை அவரால் அசைக்க முடியாமல் போக மேலும் தன் மனைவியும் தன்னிடம் இப்படி ஒரு விஷயத்தை மறைத்தாள் என்ற செய்தி அவரை வதைக்கவும் தான் இப்படி அவர் நடந்து கொள்ளவும் பிறகு தன் மகள் அவனுடனான அந்த வாழ்க்கையில் மிக அழகாக வாழ தொடங்கிவிட அவருக்கு பிறகு என்ன வேண்டும் ஆர்யாவை போல ஒருத்தன் அவர் மகளுக்கு சத்தியமாக தேடினாலும் கிடைக்க மாட்டான் என்பது அவருக்கு நன்றாக தெரியும்..
ஆனாலும் ஆர்யாவின் ஒரு சில குணங்கள் அவருக்கு பிடிப்பு இல்லாத காரணத்தினால் மட்டுமே அவர் ஆர்யா வேண்டாம் என மறுத்து இருக்க மத்தபடி ஆர்யாவுடன் அவருக்கு எந்த கோபமும் இல்லை இருவரும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் விடை அளித்து விட்டு இருவரும் வீட்டிற்கு வந்து அன்றைய இரவை இனிமையாக கழித்தனர்..
அவர்கள் இருவருக்கும் தாம்பத்தியத்தின் உணர்வையும் அதன் ஆழத்தையும் அன்பையும் இருவரும் புரிய முற்பட்டனர் மேலும் ஆர்யாவுக்கு அவள் மேல் மிகப்பெரிய மரியாதை உண்டானது ஏனெனில் அவனது கண்ணசைவிலேயே அவனுக்கு அவள் திரையில் தோன்றுவது விருப்பமில்லை என்பதை உணர்ந்துகொண்டு மிக அழகாக பொதுவெளியில் அவனை விட்டுக் கொடுக்காமல் அவள் பேசியது அவனுக்கு மிக மகிழ்ச்சியை கொடுத்தது அதேபோல அவளுக்கு அவன் கொடுத்த வாக்கின்படி மிஹ்ரான் படத்தின் புரமோஷனுக்கு வந்து ஆச்சரியத்தை கொடுத்தான்..
மிஹ்ரான் கூட சத்தியமாக நினைத்து பார்க்கவில்லை அவன் வருவான் என அவன் வந்தது மட்டுமின்றி மிஹ்ரானுக்கு கை கொடுத்து அவளை தோளோடு தோள் அணைத்து மேடையில் காட்சி அளிக்க ஆர்யாவின் ரசிகர்கள் இருவரும் இணைந்து விட்டனர் என்பதை அவர்களுக்கு உணர்த்துவது போல அவனது செய்கை இருக்க ரசிகர்களும் அப்படி எண்ணிக் கொண்டனர்..
மிஹ்ரானுக்கு தான் என்ன நடக்கிறது என புரியாமல் குழப்பமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருந்தான் ஆனால் மனதளவில் இருவரும் உறவுமுறைகளில் இணையவில்லை என்றாலும் ஆர்யா தான் செய்த தவறை உணர்ந்து அவனது வளர்ச்சிக்கு உறுதுணையாக அந்த இடத்தில் நின்றான்..
அதனால் அந்தப் படம் ரிலீஸ் ஆனதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது ஆர்யாவின் ரசிகர்களும் அந்தப் படத்தை கொண்டாடினர் அதனால் மிஹ்ரான் ஒரே படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கண்டான் இதுநாள்வரை அவனுக்கு இது போன்ற ஆதரவு கிடைத்தது இல்லை அப்படியிருக்க முதல் நாளிலேயே அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக திரை வாசலிலேயே அவன் கண்ணீர் சிந்திய காட்சி வைரல் ஆனது இனி அவனது திரைப்பயணம் கோலோச்ச துவங்கி விடும் என திரைப்படத்தை கண்ட ஆர்யா தன் மனைவியிடம் கூறினான்..மிஹ்ரான் படம் ஹிட் ஆனதை எண்ணி உபேந்திரா மற்றும் மயூராவும் கூட மகிழந்தனர்..
அதேபோல ஆர்யாவும் புதிய படத்தில் நடிக்க முடிவெடுக்க நிதிஷ் குடும்பம் ஆர்யாவை காண அவனது அழைப்பின் பொருட்டு அவனது வீட்டுக்கு சென்றனர்.. அவனும் தன் வீட்டிற்கு வந்த விருந்தாளிகளை எப்படி உபசரிப்பானோ அதுபோல உபசரிக்க ஆனால் அவளுடைய தந்தை அம்மா என்ற உணர்வு மட்டுமே அவன் வைத்துக் கொள்ள அவனது சொந்த பந்தம் என்ற நிலையில் அவன் ஒட்டிக் கொள்ளவும் இல்லை அதற்காக ஒட்டாமல் முகத்தில் வெறுப்பை காட்டவும் இல்லை..
அந்த அளவுக்கு அவன் ஹிமானியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இருக்க அதுபோல நிதிஷ் குடும்பம் வந்து அவனிடமும் அவளிடமும் உரிமையாக பழகினர் நிதிஷ் அவனிடம், " சில கசப்பான சம்பவங்கள் நடந்தது ஒரு தந்தையாக நான் செஞ்சது எதுவுமே எனக்கு தப்பா தெரியல நீங்க உங்க பக்கத்து நியாயத்தை சொன்னிங்க நான் என்னுடைய பக்கத்து நியாயத்தை செஞ்சேன் அவ்வளவுதான் ஆனா என்ன இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் மகிழ்ச்சியாய் இருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இப்படியே இருங்க.." என்று அவரும் கூறி அதோடு நிறுத்திக் கொண்டார்..
சிவானி தான் புது குண்டை தூக்கி போட்டாள் அதாவது அவள் இனி நடிக்க இருப்பதாக கூற அதைக் கேட்ட அனைவரும் மகிழ்ந்தனர் ஏனெனில் அவளுக்கு நடிக்க மிகவும் விருப்பம் இனி புதிதாக நிதிஷ் தயாரிக்கப் போகும் படத்தில் நடிக்க இருப்பதாக அவள் தன் அக்கா கணவனிடம் கூற அவனும் அதை ஆமோதிக்க ஒரு வழியாக அந்த குடும்பம் இணைந்தது..
அன்றைய இரவு அவன் மார்பில் சாய்ந்து கொண்டு அவள் அவனிடம், " நீ சத்தியமா எங்க அப்பாகிட்ட பேசுவன்னு நான் எதிர்பார்க்கல நான் உன்னோட மதிப்புகளுக்கு மரியாதை கொடுத்து தான் நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை அப்படின்னு நான் என்னுடைய குடும்பத்தை இணைக்க முயற்சி எடுக்கல அது உனக்கு பிடிக்காதுன்னு எனக்கு தெரியும் ஆனா நீ இன்னைக்கு அவங்கள நீயா விருந்துக்கு அழைத்தது மட்டுமில்லாமல் அவங்க ரொம்ப சந்தோஷத்தில் ஆழ்த்திட்ட என்னால நடந்தது எல்லாம் உண்மையான்னு கூட நினைத்து பார்க்க முடியல " என்று கூற ,
அவனோ, " நீ எப்படி என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அதுபோல நானும் உன்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தேன் அவ்வளவு தான் மத்தபடி அவங்க மேல எனக்கு எந்த உணர்வுகளும் இல்லை
" என்று அவன் கூற அதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என அவளது கண்கள் அவளிடம் கூறியது அந்த அழகிய அவனை எப்பொழுதும் கவர்ந்திழுக்கும் அந்த கண்களிலேயே தன் இதழ்களை பதித்த ஆர்யா தன் மனைவியை இறுக அணைத்துக் கொண்டான்..
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு ஆர்யா ஒரு ஷூட்டிங்கில் இருக்கும் பொழுது அவனது மனைவி வீட்டில் இருக்கும் பொழுது மயக்கமாகி விட்டாள் என்ற செய்தியை வேலைக்காரர் கூறி கேட்டதும் வேகமாக பறந்து மருத்துவமனையை அடைந்தவனுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருந்தது..
அவளுடன் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என்ற செய்தியை அறிந்து அவன் தன் மனைவியை காண துடித்தான் அவனது மனைவியோ மருத்துவமனையின் பெட்டில் படுத்துக் கொண்டிருக்க பாயல் அவனருகே வந்து , "அவள் உடம்பு கொஞ்சம் வீக்கா இருக்கா இந்த நேரத்துல கவனமாக இருந்து பார்த்துக்க சொல்லியிருக்காங்க மத்தபடி எல்லாம் நல்ல விஷயம் தான்" என்று கூற அதைக் கேட்ட அவனது கண்கள் பனித்தது..
தன் மனைவியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்போடு கூடவே அவள் எப்பொழுது கண்விழிப்பாலோ என்ற ஏக்கமும் இருக்க அவனது மனையாளும் அவனை வெகுவாக காக்க வைக்காமல் தன் கண்களை திறந்தாள், " ஏண்டி உடம்பு முடியலனா என்கிட்ட சொல்லி இருக்கலாமே நான் ஷூட்டிங் போயிருக்க மாட்டேனே" என்று கூற ,
"இல்ல எனக்கு நீங்க போனதும் தான் தலை சுத்துற மாதிரி இருந்தது நான் லக்ஷ்மி அம்மாவ கூப்பிடுவதுக்குள்ள நான் மயங்கிட்டேன் போல" என்று கூறினாள் அவள் , "இனி தனியா இருந்து பாரு நான் அப்புறம் பேசிக்கிறேன்" என்று கூறியவன் அவளது தலையை வருடிக் கொடுத்தவனுக்கு அவள் முகத்தை பார்த்து , "ரொம்ப நன்றி டி தனியாய் இருந்த எனக்கு ஆதரவா நீ வந்த இப்போ என்னோட வாழ்க்கைக்கு அர்த்தம் என்னோட காதலுக்கு அஸ்திவாரம்மா ஒரு வரத்தை எனக்கு கொடுத்திருக்க" என்று கூறினான் அதைக்கேட்டு அவளோ, " நம்ம காதலோட காலத்தின் அடையாளம் நம் குழந்தை" என்று கூற அதைக்கேட்ட அவனும் ஆமோதிப்பது போல அவளது நெற்றியோடு நெற்றி முட்டி அவள் நெற்றியில் தன் இதழ்களை பதித்தவன், " இந்த குழந்தை நம்ம காதலுக்கு உண்டான பரிசு பேபி அப்பா உன்னை என் உயிரை விட பத்திரமா பார்த்துப்பேன் பேபி நீ எங்கே பொக்கிஷம் அப்பா அம்மாக்கு இடையில் வந்த தேவதை உன்னை எப்படி பார்த்துகிறேன் பார் " என தன் மனைவியின் மணி வயிற்றில் முத்தமிட்டு அவளின் அன்பு கணவன் கூற அவனின் காதலின் ஆழத்தை மனையாள் புரிந்து கொண்டாள்.. அவனும் தன் இயல்பை சற்றும் மாற்றிக் கொள்ளாமல் இதுதான் நான் இப்படித்தான் இருப்பேன் என்று வெளியே இருந்தாலும் அவளிடத்தில் அவன் அவனது முழு அன்பை அவளுக்கு கொடுத்தான் அவனுக்கு வெளியே இருக்கும் சுபாவம் தான் அவன் அல்ல அவனுக்கு என்று தனிப்பட்ட அழகிய பகுதி ஒன்று உண்டு என்பதை உணர்ந்த அவளும் அவனோடு ஒன்றிப் போனாள்..
இப்பொழுது அவர்களின் காதலுக்கு அடையாளமாக அவர்களின் அன்புக்கு பரிசாக அவளது வயிற்றில் அவனது உதிரம் உதிர்த்து இருக்க அதை கொண்டாடும் விதமாக அவள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்ததும் அவர்களது குடும்பமே விழாக்கோலம் பூண்டிருந்தது..உபேந்திரா முதல் நிதிஷ் வரை எல்லோருக்கும் அழைப்பு சென்று இருந்தது தன் தந்தையிடம் அவன் பெரிதாக பேசி கொள்ளவில்லை என்றாலும் அந்த குடும்பத்தில் ஒருவர் என அவருக்கும் அழைப்பு செல்ல தன் வளர்ச்சி பாதைக்கு வித்திட்டவன் மேலும் தன் உயிர் தோழியின் விசேஷத்துக்கு செல்லாமல் இருப்பானா என்ன மிஹ்ரானும் அந்த விசேஷத்தில் கலந்து கொள்ள அனைவருக்கும் மிக மகிழ்ச்சியாக இருந்தனர்..இதே போல மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடும் என நாமும் நினைப்போம்...
சுபம்
