ஸ்வரம் 33

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  

ஸ்வரம் : 33

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு

"ஆர்யா ஆர்யா எழுந்திரு சூட்டிங் சமய ஆகல நீ இப்படி தூங்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் ??? "என்று வினவ , "அடியே நைட் எல்லாம் ஒரே வேலை தூக்கமே இல்லை" என்று அவன் கண்ணடித்து கூறி அவளை இழுத்து தன்மேலே விழ வைக்க அவன் மேலே விழுந்தவளோ சிணுங்கி கொண்டே வேகமாக எழ முற்பட அவனோ மலைப்பாம்பு போல அவள் உடலை வளைத்து பிடிக்க, " உனக்கு இதே வேலையா தான் போச்சு கதை வேற யார்கிட்டயும் கேட்க மாட்டேங்கிற யார்க்கும் அப்பாயின்மெண்ட் கொடுக்க மாட்டேங்கிற உன் கால்ஷீட்க்காக அர்ஷாத் அங்கிள் வந்து வையிட் பண்றார்..நான் டூ டேஸ் கழிச்சு வாங்க அங்கிள்ன்னு சொல்லி அனுப்பினேன் எனக்கே அவர் முகத்தை பார்த்து கஷ்டமா போச்சு தெரியுமா நீ என்னடானா வேலை அதிகம்னா சொல்ற?? அதே வேலையை செஞ்சிட்டு இருந்த நான் எழுந்திட்டேன் நீ எழுந்திரு" என்று கூறினாள் ஹிமானி..

அதைக் கேட்டவனும் அவள் அடுக்கி சொல்லும் விதத்தை பார்த்து கள்ளப் புன்னகை புன்னகைக்க அவளோ அவனது கைவிரல்களை நோண்டிக்கொண்டே இருந்தவளை ஒரே இழுப்பில் இழுக்க அவன் அருகே ஒரு அடி இடைவெளியில் படுத்து இருந்த அவளும் அவன் மீதே மோதி அவனோடு ஒன்றி உடல் மீது உடல் உரச படுத்தவளின் முகத்தை தன் முகத்தாலே உரசி கொண்டு இருந்தவனுக்கு மோகம் கரைபுரண்டு ஓட தன் கால்களை அவள் மீது போட்டு அவளை வளைத்து முறுக்க அவளும் அவனோடு ஒன்றி அவளது மூச்சு காற்று அவன் தேகத்தில் உரசும் படி படுத்தவளுக்கு அவன் அடுத்தது என்ன செய்ய போகிறான் என்பது தெரிய , " நமக்கு கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆச்சு நீ என்னடான்னா இனியும் என்னை போட்டு படுத்துற" என்று கூறினாள்..

அதை கேட்டு அவளும், " அதுக்கு என்ன இப்போ?? உன்னை தானே டி படுத்த முடியும் இதுக்காக வேற ஆளையா கூட்டிட்டு வர முடியும்?? எவ்வளவு வருஷம் ஆனாலும் நீ என்னை நம்ம முதல் இரவில் உன்னில் என் மீதான கோபத்தை மீறி ஒரு பார்வை பார்த்தியே உனக்கு நியாபகம் இருக்கான்னு தெரியல அந்த பார்வையில் நம் முதல் கூடலை ஆரம்பித்தேன் நான் அப்போது உனக்கு என் மீது வெறுப்பு கோபம் இருந்தாலும் நீ என்னோடு ஒன்றி தான் போன அந்த சமயம் பெண்களுக்கே உண்டான கூச்சமும் உன்னை விட்டு வைக்கல உன்னோடு உணர்வுகளும் உன் கோபத்தை மீறி என்னோடு இயைந்து போச்சு அது போல தான் எனக்கு உன்னோடு நான் இருக்கும் எல்லா இரவுகளும் வேணும் பல சமயம் பகலும் நேரம் காலம் பார்க்காமல் நீ வேணும்..." என்க

அதை கேட்டு அவளோ, " ஆசை முப்பது மோகம் முப்பது ஆக மொத்தம் 90 நாட்கள் அது நமக்கு முடிந்தது " என அவன் கூறியதை கேட்டு வெட்கம் கொண்டு அவன் கூறியதை எதிர்க்கும் வகையில் அவள் கூற ,

அவனோ அவளை மேலும் தன்னோடு இறுக்கி அவளை படுக்கையில் கிடத்தி நொடி பொழுதில் அவள் மீது சரிந்தவன் அவளது கைகளை பிணைத்து, " இப்போ நான் சொல்ல வந்ததே அந்த 90 நாட்கள் மட்டும் போதாது எனக்கு வாழ்க்கை முழுவதும் உன்னோடு நான் சேர்ந்த முதல் நாள் போல தான் நம்ம வாழ்க்கை ஆயுள் முழுக்க இருக்கணும்னு சொல்லத்தான் " என கூற

அதை புரிந்தாலும் அவனிடம் வெளிக்காட்டி கொள்ளாமல் ," உனக்கு அந்த எண்ணம் எல்லாம் இருக்கா?? அந்த நிகத்தியா உன்னை பார்க்கிறது சரியில்லை சொல்லிட்டேன் அவ ஹீரோயினா இருந்தா நீ அந்த படத்தில நடிக்க கூடாது இப்போவே சொல்லிட்டேன் அந்த ஒரு படத்தோடு நிறுத்திக்கோ " என்றவள் அவனை முறைக்க,

முறைக்கும் அவளது அந்த முகம் எங்கும் தன் இதழ்களால் அர்ச்சனை செய்தவன் அவளது சிவந்த நாசியை மட்டும் மேலும் சிவக்க வைக்க அவளது நாசியை இலேசாக கடித்து வைத்தான்..அவனது எண்ணத்தை புரிந்து கொண்ட அவளோ, " எப்போ பார் இதே தானா?? இல்ல ஒரு குழந்தை வேணாமா??" என்று அவள் கேட்கவும்,

அவள் கூறியதை கேட்டு சிரித்தவனோ, " அதுக்கு என்ன அவசரம் மொதல்ல நம்ம நமக்கான வாழ்க்கையை வாழ்வோம் பிறகு குழந்தைக்காக நம்ம வாழ்க்கையை ஆரம்பிப்போம்" என்க

"அதுக்கு இடையில இடைப்பட்ட காலத்தில் நமக்காக ஒரு வாழ்க்கை வேண்டாமா???" என அவள் கூற

" இத நீ எத்தனை தடவ தான் என்கிட்ட கேப்பியோ எனக்கு தெரியல முட்டைக்கண்ணி இதே பதில் தான் நீ எத்தனை தடவை என்கிட்ட இருந்து உனக்கு வரும்னு தெரியாதா" என்று கூறினான் ஆர்யா..

இது தினமும் அரங்கேறும் நாடகம் தான் ஒரு நாளில் ஒரு தடவையாவது அவள் கேட்டு விடுவாள் ஆனால் அவனும் குழந்தை என்ற விஷயத்தை மறுப்பான் ஏனெனில் அவனுக்கு குழந்தைகளை பிடிக்காமல் இல்லை அவர்களுக்காக அவர்களைப் புரிந்து கொள்ள ஒரு வருடமாவது வேண்டும் என அவன் நினைக்கிறான் அதற்காகத்தான் அவன் வேண்டாம் என மறுக்க இவளோ இன்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு , "அப்போ நீ அந்த இன்டர்வியூக்கு தனியாவே போ நான் வரமாட்டேன்" என்று மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டாள்..

அப்போது அதை கண்ட அவனும், " சரி நான் போகல நீ வர வேண்டாம் இன்னும் ரெண்டு வாரத்துல யாரோடதோ படம் ரிலீஸ் ஆகுதுன்னு கேள்விப்பட்டேன் அதோட புரமோஷனுக்கு வரணும்னு நீ தான் கேட்ட நான் வரட்டுமா வேண்டாமா??" என்று கேட்கவும்

"கண்டிப்பா நீ வரணும் நீ வந்து ஒரு நாலு வார்த்தை பேசினா தான் அந்த படம் ஓடும் கொஞ்சநஞ்ச கொடுமையா நீ அவனுக்கு பண்ணி இருக்க பாவம் எனக்கு வாய்த்த அடிமை அவன் " என்று மிஹ்ரானின் படத்தின் ப்ரோமோசனுக்கு இவனை அழைத்து கொண்டிருந்தாள் ஹிமானி அவனும் அவளுக்காக வருவதாக ஒப்பு கொண்டான்..

ஆம் அனைத்தும் அவளுக்காக மட்டும் தான் அவள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தான் அதுவுமே அவன் செய்கிறான் இல்லை என்றால் அவன் செய்ய மாட்டான்..

ஆனால் மிஹ்ரானுக்கு அவன் செய்ய வேண்டும் என முன்பே நினைத்து இருந்தான் அதற்காக அவள் என்ன சொன்னாலும் செய்வான் என்பதில்லை மிஹ்ரானுக்கு தேவை இல்லாமல் தொல்லை கொடுத்து விட்டோம் என்று ஆர்யாவை எண்ணியதால் மட்டுமே அவனே மிஹ்ரான் படத்துக்கு சப்போர்ட் செய்ய எண்ண அதிலும் அந்த திரைப்பட ப்ரொடியூசர் கேட்டுக் கொண்டதாலும் மேலும் பல விதங்களில் அவனது முன்னேற்றத்திற்கு தடையாக இருந்ததை ஆர்யா உணர்ந்த காரணத்திற்காகவும் அவனுடைய திரைப்பட புரமோஷனுக்கு செல்ல முடிவெடுத்தான் ..

ஆனால் இது பாவம் அவனுக்கு தெரியாது சர்ப்ரைஸாக இருக்கட்டும் என எண்ணி விட்டான்...மேலும் இவர்களிடையே இன்றும் உறவு அப்படியே தான் இருக்கிறது ஆனால் என்ன பார்த்தால் முறைத்து கொள்வதில்லை என்ற ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் அவன் வாழ்க்கையில் அவன் மாற்றி எழுதி இருக்கிறான் மத்தபடி ஒட்டுதல் உறவு எதுவுமே இல்லை அவனை சொந்த தம்பியாக அவன் ஏற்றுக் கொள்ளவில்லை...அவனது தந்தையை கூட இதுநாள் வரை அவன் அருகே விட்டதில்லை இதில் தம்பி என்ற உறவா என எண்ணினாலும் அதன் பெயரில் வெறுப்பாகவும் நடந்துகொள்ளவில்லை அவ்வளவு தான் விஷயம்..

கபூர் மற்றும் மல்கோத்ரா குடும்பத்தில் ஒருவன் மிஹ்ரான் அந்த உரிமையை மட்டும் தான் அவன் உட்பட அனைவருக்கும் அவனை பொறுத்தவரையில் அவர்களுக்கு கொடுத்து இருக்கிறானே ஒழிய மற்றபடி எந்த விதமான உறவுக்கும் அவனிடம் இடமில்லை ஹிமானியை தவிர

அவளும் அவனிடம் பெரிதாக இதைப் பற்றி பேசிக் கொள்ளவில்லை அவனது விருப்பம் போல அவன் இருக்கட்டும் என விட்டு விட்டாள் அப்படி இருக்க ஆர்யா அவளை அவனது அவளது வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்றெல்லாம் கூறியதில்லை அவளுக்கு எப்பொழுது விருப்பமோ அப்போதெல்லாம் செல்லலாம்..

அவளும் அவளது வீட்டிற்கு வாரத்தில் இரு முறையாவது சென்று வருவாள் அப்படி இருக்க அவள் வீட்டில் இருப்பவர்களுக்கு அவன் அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் விஷயம் தெரிந்தாலும் நிதிஷ் மற்றும் பெரிதாக நம்பாமல் தான் இருந்தார் ஏதோ மகள் சந்தோசமாக இருந்தால் சரி என்று தான் எண்ணி கொண்டிருக்க இன்று ஒரு பேட்டி நடைபெற இருக்கிறது அவனது திருமணம் முடிந்த பின் முதன்முறையாக இருவரும் சேர்ந்து பேட்டி கொடுக்கிறார்கள்..

அதற்காக தான் அவளை அவனை அவள் எழுப்பிக் கொண்டிருக்க அவனோ அவளை கட்டி கொண்டு படுத்து கொண்டு இருந்தான் ஒருவழியாக சில கொஞ்சல்கள் முடிந்து இருவரும் தயாராகி அந்த நிகழ்ச்சிக்கு செல்ல,

அங்கே நிகழ்ச்சி தொகுப்பாளர் இவர்களை வரவேற்று அமர வைத்தவருக்கு ஆர்யாவின் குணத்தை எண்ணி முகம் முழுவதும் டென்ஷனாக இருந்தாலும் அவர் வேலை அதுவே என எண்ணி , "சார் ஆரம்பிக்கலாமா??" என கேட்க,

எஸ் என கையை காட்டினான் ஆர்யா தன் மனைவியின் கையை இறுக பிடித்தபடி அமர்ந்து இருக்க அந்த நிகழ்ச்சி வேறு நேரலையாக ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தனர்..

"உங்க தீடீர் கல்யாணத்தை நினைச்சு தான் பலர் புலம்பி தள்ளிட்டு இருக்காங்க??" என்று தொகுப்பாளர் ஆரம்பிக்க

"அப்படியா எனக்கு தெரியலையே??" என கையை விரித்து ஆர்யா இதழ் நகை புரிய ஹிமானியோ, " எல்லோரும் என் மேல கோபமா இருப்பாங்க போல",என்க

"ஆமாம் தீடீர்ன்னு ஒரு கல்யாணம் ஏன் எப்படி??" என கேட்க

"உங்களுக்கு தான் தீடீர் கல்யாணம் எங்களை பொறுத்தவரை அது தீடீர் திருமணம் அல்ல"..என்று கூறிய ஆர்யா , "இதை நான் தான் சொல்லிட்டேனே இதையே கேட்டு மக்களை போர் அடிக்கறீங்களே பிரகாஷ் வேற கேள்வி இருந்தா கேளுங்க??" என சூசகமாக கூறவும் அதை புரிந்து கொண்ட அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், அப்படியே வேறு பக்கம் தாவி

"உங்களில் யார் உங்க மனதை வெளிப்படுத்துனீங்க??" என்க

"நான்" என ஹிமானி வெட்கப்பட்டு கூறவும் அரங்கமே கரகோஷம் எழுப்ப, எல்லோர் மனதிலும் பிறகு எதற்கு மிஹ்ரானுடன் அந்த போலி திருமணம் என்ற கேள்வி எழுந்தாலும் ஆர்யா அதை பற்றி கேட்க கூடாது என்று சூசகமாக கூறி விட்டதால் யாரும் அதை பற்றி கேள்வி எழுப்பவில்லை..

"இப்போ இருக்கிற இந்த பிலிம் இண்டஸ்ட்ரில அழகான ஜோடின்னு சொன்னா அது நீங்க தான் ஆனா இப்போ ஆர்யா ஒரு மிகப்பெரிய ஆக்டர் அவர் இல்லாம இந்த ஹிந்தி திரைத்துறையை இல்லை என சொல்லலாம் அப்படி இருக்கிற இடத்தில நீங்களும் ஒரு திரை குடும்பத்தைச் சேர்ந்தவங்க நீங்களும் ஆர்யாவும் ஒரு அட் பிலிம்ல வேற நடிச்சிருக்கீங்க மேலும் உங்க நடிப்பை நாங்க திரையில பார்க்கலாமா" என்று அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹிமானியிடம் வினவ,

ஆர்யா , "அது அவர்களுடைய இஷ்டம் அவளுடைய இஷ்டத்திற்கு நான் எப்பவும் குறுக்கே நிற்க மாட்டேன்" என்று கூறினாலும் அவனுக்கு மனதளவில் அவன் மனைவி நடிப்பது அவனுக்கு சுத்தமாக விருப்பமில்லை அதை அவனது கண்களாலேயே புரிந்துகொண்ட மனைவியோ, " நடித்து தான் நான் பெரிய ஆள் ஆகனும்னு இல்ல எனக்கு நடிப்பு மேல எந்தவிதமான ஈடுபாடும் இல்ல நான் நடிக்கிறேன் சொன்னாலும் என் கணவன் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பாரு அதுல எந்த நம்பிக்கை இல்லாத தன்மையும் எனக்கு கிடையாது ஆனால் என்னுடைய ஆசையே வேற நான் ஒரு டான்சர் எனக்கு அந்த டான்ஸ்ல தான் முழு ஈடுபாடு இருக்கு மேலும் நீங்க சொல்ற மாதிரி திரைத்துறையில் பெரிய குடும்பத்தில் பிறந்தேன் தான் அதனால நான் திரை துறையிலேயே தான் இருக்கணும்னு இல்ல முன்பே எனக்கு சினிமா மேல எந்த ஆசையும் இல்லை அதனால தான் நான் இந்த டான்ஸ் பக்கம் என்னுடைய கவனத்தை செலுத்தினேன் சோ எனக்கு அந்த மாதிரி எண்ணம் சுத்தமாக இல்லை" என்று கூற

"வெரிகுட் ஆன்சர் மிஸஸ் ஆர்யா அதே மாதிரி இப்போ சார் உங்கள கல்யாணம் செஞ்சுகிட்ட பிறகு மூணு மாசம் எந்த ஒரு சினிமா பங்க்ஷன் எதிலுமே பெருசா அவரை பார்க்க முடியல எந்த படமும் அவர் கமிட் பண்ணல என்று சொல்றாங்க இதெல்லாம் உண்மைதானா?? இதற்கு எல்லாம் காரணமும் நீங்கதான்னு சொல்றாங்களே??" என்று வினவினார்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top