ஸ்வரம் 32
ஸ்வரம் 32
கிட்டத்தட்ட ஒரு இரண்டு மணி நேரமாக அவள் தன்னை அலங்கரித்து இருப்பாள் அவன் சென்று மூன்று மணி நேரம் ஆகி இருந்தது அந்த சமயம் அவளுக்கு வேண்டும் அவளுக்கு உண்டான சந்தேகத்தையும் அவளுக்கு ஒரு தெளிவு பிறக்க வேண்டும் என எண்ணித்தான் அவளை தனியாக அவன் விட்டுச் செல்ல அவனும் அங்கே பலத்த கரகோஷங்களுடன் அவனுக்கு ஒதுக்கப்பட்ட விருதினை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தான்...
அதற்கு ஒரு காரணமும் உண்டு அவள் தயாராகி முடித்ததும் அவளுக்கு அந்த நொடி அவனை காண வேண்டும் என தோன்ற அவனது எண்ணுக்கு , "ஐ மிஸ் யூ கம் பேக் சூன்"... என்ற ஒரே ஒரு வார்த்தையை மட்டும் அவனுக்கு அனுப்பியிருந்தாள் அந்த ஒரு வார்த்தை போதுமே அவள் கணவன் எங்கு இருந்தாலும் அவள் அருகே பறந்து வர கிட்டத்தட்ட பறந்தே தான் வந்தான்..
அவன் மனம் அந்த ஒரு வார்த்தையில் எவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது என்பதை அவனை தவிர யாராலும் புரிந்துகொள்ள முடியாது என்ன இருந்தாலும் அவளுக்கு பழைய நினைவுகள் இல்லை ஆனால் அதை புரிந்து கொள்ளவாவது முயற்சி செய்தாளே என்பது தான் அவனது எண்ணமாக இருக்க வேகமாக விரைந்து வர அந்த நேரம் பார்த்து இடியுடன் கூடிய கனத்த மழை பெய்தது ..
அவனது காரும் அதே நேரம் வீட்டுக்குள் நுழைய கிட்டத்தட்ட இரவு ஆகியிருந்தது மழையும் சேர்ந்து கொண்டதால் ஊரை அமைதியாக இருக்க அவனது வீடும் அமைதியாகத்தான் இருந்தது அவனது மனதை போல மேல் அறையில் அவனது அறை மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருக்க அவள் அங்கே தான் இருக்கிறாள் என்பதை புரிந்துகொண்டு அவன் காரில் இருந்து இறங்கி தனது அறையை நோக்கி சென்றான் ..
அவளது அறையை திறந்தவன் அங்கே புத்தம் புது மலராய் அவள் நின்று கொண்டிருந்தாள் அவள் முகத்தில் ஒரு பரவசம் அவனை பார்த்ததும் ஓடி சென்று கட்டி தழுவ வேண்டும் என்ற ஒரு ஆர்வம் எழ அவளுடைய இந்த பிரவாகத்தை அவன் எதிர்பார்க்கவில்லை என அவனது கண்கள் ஒரு நொடி கூறியது ஏனெனில் எங்காவது ஒரு மூலையில் அமர்ந்து இருப்பாள் என அவன் எண்ணியிருக்க,
ஆனால் அவளோ அழகிய மலராக தயாராக இருக்கவும் அவனது கண்களை அவனாலேயே நம்ப முடியாமல் , "என்ன எல்லாம் படிச்சியா??" என்று வினவ அவளோ அவனது கேள்விக்கு பதில் அளிக்காமல் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் பதில் ஏதும் கூறாமல் என்னவோ அவனை புதிதாக பார்பவள் போல அவள் நிற்க அவனோ அவளை பார்த்துக் கொண்டே அவள் அருகே வர அதற்கு முன்னே ஓடி வந்து அவனை கட்டித் தழுவிக் கொண்டாள் ஹிமானி..
அவளது இந்த அணைப்பு அவனுக்கு இன்ப அதிர்ச்சியாக தான் இருக்க அவனும் மிக மகிழ்ச்சியாக அவளை அணைத்துக்கொண்டான் என்ன தான் அவன் அவளுடன் அவளுக்கு விருப்பமே இல்லாமல் இணைந்தாலும் அவளாக அவனை அணைக்கவும் அவன் அருகே வரவும் அவன் தவமிருந்தான் என்றே கூறவேண்டும் வெளியே பார்க்க கரடுமுரடாக இருந்தாலும் அவன் உள்ளுக்குள்ளே அன்புக்காக ஏங்கும் சிறு குழந்தைதான் அதுமட்டுமின்றி அந்த டைரியில் அவளது தாத்தா ஆர்யாவை பற்றியும் குறிப்பிட்டு இருந்தார் ..
அவன் வெளியே காணும் தோற்றம் அல்ல அவனுடையது என்பது போல குறிப்பிட்டு இருக்கவும் மேலும் அவள் தான் ஒவ்வொரு விஷயத்தையும் அசைபோட்டு பார்த்தாளே அவன் ஏன் அவளை விடாமல் துரத்தினான் என அதை அவள் எதற்காக தாத்தா குறிப்பிட்டு இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டாள்..
இப்பொழுதும் கூட வெளியே பார்ப்பதற்கு கடுமையாக தெரிகிறான் ஆனால் உள்ளுக்குள் அவள் மீது எவ்வளவு ஆழமான காதலை அவன் வைத்திருக்கிறான் என்பதை அவள் உணர மெல்ல தன் முகத்தை நிமிர்த்தி அவனை அணைத்த வாக்கிலே, " சத்தியமா இப்ப வர நீ தான் என்னை காதலிச்சு இருக்க நீ சொன்னது எல்லாம் எனக்கு ஞாபகம் கூட இல்லை ஏன் எனக்கு அந்த விபத்து நடந்துன்னு எனக்கு தோணுது நடக்காம இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் உன் காதல் எப்போதும் என்னோட மனசுக்குள்ளேயே இருந்திருக்குமே ஆனால் இவ்வளவு படிச்சும் நீ சொல்லியும் எனக்கு நியாபகம் வரலையே" என்று கூற அதைக்கேட்ட அவனும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு, " அதற்கு இப்போ என்ன குறைச்சல் இப்பவும் காதலிச்சுட்டு தானே இருக்க இனி நமக்குள்ள நடக்கிற எதுவுமே உனக்கு தான் மறக்காதே" என்று அவன் கூற,
"ஏன் ஏன் நீ மட்டும் என்னை இப்படி நேசிக்கிற அதுக்கான தகுதி கூட எனக்கில்லை???? உண்மையா நான் உன்னை நேசிக்கல உன் அளவுக்கு" என்று அவள் உடைந்து கூற
"ஏன் உனக்கு என்ன குறைச்சல் எனக்கு ஒரு காதலி ஆகவும் ஒரு தோழியாகவும் என்னுடைய மனைவியாகவும் என்னோட குழந்தைகளுக்கு அம்மாவாகவும் இருக்க எல்லாத் தகுதியும் உன் கிட்ட இருக்கு என்னை பொறுத்த வரைக்கும் இந்த உலகத்திலேயே ரொம்ப அழகான பொண்ணு யாருன்னு என் கிட்ட கேட்டா நான் நீ என்று தான் சொல்லுவேன் நான் உன்ன பார்த்து தான் மயங்கினேன் கிறங்கினேன் உன்னை ரசிக்கிறேன், உன்னை பார்க்கும் போது தான் எனக்கு கிஸ் பண்ணனும்னு தோணும் உன்னை கட்டி பிடிக்கணும்னு தோணும் உன்கூடவே இருக்கணும்னு தோணும் உன்னை யாருக்கும் விட்டு கொடுக்க கூடாதுன்னு தோணும் இது எல்லாம் உன்கிட்ட மட்டும் தான் எனக்கு தோணும் அப்போ இதை நான் உன்மேல வைச்சு இருக்கிற காதல்ன்னு சொல்லலாமா??" என்று கூறியவன்,
அவளது முகத்தை தன் கைகளில் ஏந்தி , "என்னை விட என்னை காதலிச்ச ஒருத்தி நீ உன்னை அவ்வளவு எளிதாக நான் விடமாட்டேன் ஏதோ சிறு வயதில் நமக்குள்ள நடந்த விஷயத்தை நான் என்னுடைய இருபத்தி மூணு வயசு வரை பெரிசாக்குவேன்னு நெனைக்கல எனக்கு அது பெரிய விஷயமா அப்ப தோணவே இல்ல ஆனா நீ என்கிட்ட வலிய வந்து பேசியதும் எந்த காரணமுமே இல்லாம உன் குடும்பத்தை பார்த்து உன் பாஷையில் நீ சொல்ற மாதிரி முறைச்சு நடக்கிற என்கிட்ட வலிய வந்து அன்பு காட்டுவதும் நீ தான் என்னோட உலகம் நீ உன்னை எப்போதும் விடக் கூடாது அப்படின்னு எனக்கு தோணுச்சு நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை முக்கியமா உன்னோட அன்பு அதனால மட்டும்தான் நான் உன்னை நேசிக்க ஆரம்பித்தேன் தாத்தா சொன்னதற்காக எல்லாம் இல்லை
உனக்கு விபத்துன்னு தெரிஞ்சதும் உடைஞ்சு போயிட்டேன் உன்னை வந்து பார்க்கும் போது உனக்கு எதுவுமே ஞாபகத்தில் இல்லை தாத்தாவும் இப்ப போய் கேட்காத அப்படின்னு சொல்லிட்டாரு அவரே என்கிட்ட கெஞ்சியும் கேட்டாரு நீ இந்த விஷயத்தை நீயா வா ய்திறந்து சொல்லாத ஒருவேளை நான் செஞ்ச பாவம் தான் இப்படி எல்லாம் நடந்து இருக்கோ என்னவோ நீங்க ரெண்டு பேரும் சேர கூடாதுன்னுதான் விதி எழுதி இருக்கோ என்னவோ அப்படின்னு சொன்னாரு அந்த விதியை எனக்கு மாத்தணும் தோணுச்சு அதாவது நான் எதுவுமே சொல்லாமலேயே உன்னை என்னோட மனைவியாக்கி காட்டுறேன்னு நானும் நினைச்சேன் அதற்கு இடையில் உங்கிட்ட நான் பழகவும் செஞ்சேன்..உன் மனசின் மூலையில் தான் எனக்கு ஒரு இடம் கிடைச்சதே தவிர முழுசா உன்னை என்னால ஆக்கிரமிக்க முடியல நீயும் நீ என்கிட்ட நல்லா தான் பழகின ஒவ்வொரு முறை சந்திப்பிலும் உனக்கு ஏதாவது ஞாபகப்படுத்தினா என்னன்னு கூட நெனச்சேன் ஆனா அப்போ உனக்கு எதுவுமே ஞாபகத்தில் இல்லை
அந்த மாலத்தீவு பயணம் அப்பவாவது உனக்கு ஏதாவது ஞாபகம் வருமா நான் பார்த்தேன் எனக்கு தனியா இருக்க நீ விரும்புவ அப்படி இருக்க நெனச்சேன் அப்போதும் உனக்கு வரல அதற்குப் பிறகுதான் நான் இந்த முடிவை எடுத்தேன் ஆமாம் ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிறதை விட எனக்கு வேற வழி தெரியல.. நீ எனக்கு வேணும்னு உன்கிட்டயோ இல்லை உன் குடும்பத்துக்கு கிட்டயோ என்னால போய் நிற்க முடியாது பீகாஸ் நீ என்னுடையவள்" என்று அவன் கூற ,
அதைக் கேட்ட அவளோ , "ஒரு வேளை எனக்கு கல்யாணம் ஆகியிருந்தா என்ன பண்ணுவ??" என்று அவனிடம் அவள் வினவ
"நான் எப்பவும் சொல்றதுதான் இப்பவும் எப்பவும் இனிமேலும் உன்னை நான் விட போவதில்லை ஒரு வேளை உனக்கு அப்படி ஒரு கல்யாணம் நடந்திருந்தாலும் உன்னை தூக்கி இருப்பேன் அதுல எந்தவிதமான டவுட்டும் எனக்கு இல்லை என் பொண்டாட்டிய வேறு ஒருத்தன் திருமணம் செய்ய அவ்வளவு சீக்கிரமா விட்டுவிடுவேனா என்ன??" என்று வினவ,
அதைக்கேட்ட அவளோ அதிர்ச்சியாகி பின் சிரித்தாள் அதை கண்டவனும், " என்ன அப்படி பார்க்கிற??' என்று கேட்க, " நீ நான் சொன்ன மாதிரி கொஞ்சம் வில்லன் தான்" என்று கூற அதைக் கேட்டு சிரித்தவனும், " உன் விஷயத்துல நான் கொஞ்சம் வில்லன் தான் " என்று கூற
அதைக்கேட்ட அவளோ , "சின்ன வயசுல இருந்து உன்னை பிடிக்கும் ஆனா நீ என்கிட்ட பேசவே மாட்ட உன்னை சினிமாவில் பார்த்ததும் எனக்கு அவ்ளோ பிடிக்கும் உன்னோட படத்தை நான் மிஸ் பண்ணவே மாட்டேன் ஆனா உன்னோட பர்சனல் கேரக்டர் எனக்கு சுத்தமா பிடிக்கல யாரையுமே மதிக்காம ஒரு திமிராக சுத்திட்டு இருப்பல்ல அது தான் எனக்கு அதிகமா பிடித்ததோ என்னவோ தெரியல?? ஆனால் அதுக்கு பேர் காதலோ அப்போ எனக்கு தருணை பிடித்து இருந்ததே" என்று அவள் கூற அதை கேட்டு அவனும் சிரித்தான் ..
அதற்கு அவனோ , "ஆமாம் கொஞ்சம் திமிர் ஆஹ் தான் இருக்கேனோ??? நான் ஒத்துக்குறேன் எனக்கு எங்க அம்மானா ரொம்ப பிடிக்கும் ஆனால் என் அம்மாவும் அப்பாவும் ஏன் பிரிஞ்சாங்கன்னு என்று எனக்கு தெரியல என்னோட அப்பா இல்லை மிஹ்ரானோட அப்பா மிஸ்டர் உபேர்ந்திரா மேலேயும் எனக்கு கோபம் எல்லாம் இல்ல சின்ன வயசுல கோபம் இருந்தது உண்மைதான் ஆனால் அவரோட வாழ்க்கைக்கு யார் துணையாக இருக்கணும்னு அவர் தான் முடிவு பண்ணனும் அவருக்கு அவங்க மனைவியை பிடிச்சிருக்கு என்னோட அம்மாவுக்கும் அவருக்கும் இடையில் என்ன நடந்ததுன்னு யாருக்கு தெரியும்??
அவரோட இப்போதைய மனைவியை என்னோட அம்மாவை பிரிஞ்ச அடுத்த நொடி கல்யாணம் பண்ணிட்டாங்க அது அவரோட முடிவு அதில் நான் தலையிட விரும்பல எனக்கு அவரோட பையன் மிஹ்ரான் மேலேயும் எந்த கோபமும் இல்லை ஆனால் அவன் உன் கூட உரிமையா பழகிறதை என்னால அனுமதிக்க முடியாது உங்கிட்ட பேசறது என்னால அனுமதிக்க முடியாது நீ எனக்கானவள்..
சின்ன வயசுல நான் ஒதுங்கி இருந்தேன் அப்படின்னா எனக்கு உங்க அப்பா மேலயும் கோபம் இருக்கு ஏன்னு சொன்னா மிஸ்டர் உபேந்திரா பாதை மாறிப் போகும்போது கூட ஒரு நண்பனா அவர் கேள்வி கேக்கல அவரும் ஒருவேளை என்னை போல நினைத்து இருக்கலாம்...உபேந்திராவுக்கு உபேந்திராவோட வாழ்க்கை முக்கியம்ன்னு நினைச்சு இருக்கலாம்..
அவரோட தங்கையை விட தன் தோழன் நல்லா இருக்கட்டும் நினைத்திருக்கலாம் அவரும் அவருடைய குடும்பத்தை தானே பார்த்தாரே ஒழிய வேறு எதுவுமே அவர் செய்யல எனக்கு தவறு சொல்லவும் முடியல எனக்கு என்னன்னா அவர் ஏன் ஒரு கேள்வி கேட்கல என்கிற ஒரு வருத்தம் தான் வேற ஒன்னும் கிடையாது திரும்ப எங்க அம்மாவை இறந்ததுக்கு அப்புறம் இவங்க எல்லாரும் என்னோட விஷயத்தில் இருந்து ஒதுங்கி இருக்கும் பொழுது நாம் மட்டும் ஏன் போய் வலிய பேசணும் என் அம்மாவே போய்ட்டாங்க இவங்க எல்லாம் எனக்கு யார் என்ற கேள்வி தான் அதனால தான் நான் ஒதுங்கி இருக்க மத்தபடி அவங்க மேல எனக்கு எந்தவிதமான உணர்வும் இல்லை உறவும் இல்லை ஒட்டும் இல்லை..
ஆனா நீ அப்படி கிடையாது நீ என்னுடையவள் எனக்காக மட்டுமே பொறந்தவ நீ... உன்ன அவ்வளவு சீக்கிரம் என்னால விட முடியாது விடவும் மாட்டேன் இந்த ஆர்யா உயிரோட இருக்கிற வரைக்கும் ஆர்யா கூட ஹிமானி இருப்பா என்று கூறினான்..
இதை எல்லாம் கேட்ட அவளோ, "ஒரு வேளை நான் உன்னை காதலிக்காமல் போயிருந்தா??" என்று அவள் வினவ அதைக்கேட்ட அவனும் விடாமல், " உன்னால அப்படி போகத்தான் முடியுமா??" என கூறினாள்..
அவனது கண்களில் வழிந்த காதல் அவளது கண்களிலும் கண்ணீராக கசிந்துருக , "நீ என்னை இவ்வளவு நேசிக்க தான் நான் பிறந்திருப்பேன் போல" என்று அவள் கூற அதைக்கேட்ட அவனும் அவளை இறுக அணைத்தான்..
அவளும் சுகமாக அவன் மார்பில் பதிய அவனும் அவளை தன் இரு கரங்களில் ஏந்தி கொண்டவன் அவளது முகத்தைப் பார்த்து, " இனி என்னை காதல் செய்வாயா??" என்று உடைந்த குரலில் கூற அவளும் மிக சந்தோஷ கண்ணீரோடு தலையை ஆட்டினாள்..அவனும் அவளுடைய தலையை முட்ட
பிறகு மென்னகை புரிந்து அவளை ஏந்தி மஞ்சத்தில் கிடத்தினான் ஆர்யா...பின் அவள் மேல் படரத் தொடங்கியவன் காதல் கரை புரண்டு ஓடியது இது நாள் வரை அவன் அவளை தீண்டாமல் இல்லை தொட்டும் தொடாமலும் இல்லை எல்லாம் அரங்கேறி இருக்கிறது ஆனால் இன்று தான் என்னவோ அவனது காதலுக்கு உயிர் பெற்று இருக்கிறதோ என்னவோ இந்த நாளுக்காக தான் அவன் காத்திருந்தாலும் என்னவோ இன்று அவளுக்கு தோன்ற அவனுக்கும் அதே தான் தோன்றியது வெளியே கனத்த மழை பெய்தாலும் உள்ளே இரு உள்ளங்களில் மனதிலும் ரணம் போய் இதம் பரவ இருவரும் தங்களுக்குள் ஒன்றி போயினர்..
ஸ்வரம் இசைக்கும்..
