ஸ்வரம் 31
ஸ்வரம் : 31
அவளுக்கு அவனை இப்போதும் எப்போதும் பிடித்து இருக்க அந்த பிடிப்பு காதல் என இன்று தானே அவள் உணர்கிறாள்..அவன் மீது உள்ள ஈர்ப்பு என அவள் நினைக்க அது ஈர்ப்பு இல்லையடி பெண்ணே அவன் மீது நீ வைத்துள்ள காதல் என அவன் கூற,
ஆனால் அவளுக்கு அந்த இடைப்பட்ட நாட்களில் நடந்தது எதுவுமே நியாபகத்துக்கு இல்லையே...அவன் கூறியது எதுவுமே அவளது நினைவு பெட்டகத்தில் இல்லையே... அவளுக்கு அந்த அறையில் சிதறி கிடந்த போட்டோக்கள் மட்டும் அந்த நேரம் துணையாக இருக்க அவளுக்கு எதை நம்புவது எதை நம்பக்கூடாது என்று எதுவுமே விளங்கவில்லை..
ஆனால் அவளது அம்மாவே கூறி விட்டாரே இவர்களுக்குள் பால்ய விவாகம் நடந்தது உண்மை தான் என்ற போதும் அது உண்மை என்றால் இதுவும் உண்மையாக இருக்குமோ என்று கூட அவள் எண்ணினாள் ...
இருந்தும் அவனை அவளுக்கு ரொம்ப பிடிக்கும் அவனது நடிப்பு அழகு எல்லாமே பிடிக்கும் ஆனால் தான் இப்படி அவனை நேசித்து இருக்கிறோம் என அவளுக்கு எந்த சூழ்நிலையிலும் அவளுக்கு தோன்றவே இல்லை அவள் எண்ணிக் கூட பார்க்கவில்லை என்று தான் கூற வேண்டும் அப்படி இருக்க தயாராகாமல் அமர்ந்திருந்த அவள் முன்னே வந்தவன் அவளிடம் ஒரு ஆறு வருடங்களுக்கு முன்பு எழுதிய டைரிகளை தூக்கி போட்டான்...
அவளோ அதை பார்த்து முழிக்க அந்த டைரிகளில் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பு எழுதிய டைரி ஒன்றையும் இணைத்து அவளிடம் கொடுத்து , "நீ என்ன நம்ப மாட்டேன்னு நல்லாவே தெரியும் இது நம்ம தாத்தாவோட டைரி இத படிச்சு பார்த்தா உனக்கு நான் சொல்றது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சிடும்" என்று கூறிவிட்டு, " எப்படி இருந்தாலும் நீ இப்போதைக்கு ஃபங்ஷன் வரமாட்டேன்னு எனக்கு தோணுது இதெல்லாம் படிச்சு பார் அப்போவாவது ஏதாவது உனக்கு புரியுதான்னு பார்" என்று கூறி விட்டு சென்றான் ஆர்யா அவனுக்கு அவள் அவனை நம்பாததை அதில் பெரிய வருத்தம் எல்லாம் இல்லை ..
அவள் உன்னை எல்லாம் தெரிந்துகொண்டு அவனிடத்தில் வந்தாலே போதும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க அவளுக்கு தனிமை கொடுக்க விரும்பி அவன் அந்த விழாவில் கலந்துகொள்ள சென்றான்
அவன் சென்றதும் அப்படியே சரிந்து அமர்ந்தவள் கீழே சிதறிக் கிடந்த போட்டோக்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தால் அதில் எவ்வளவு அழகாக அவன் சேர்த்திருக்கிறார் அவளும் மிக சந்தோஷமாக இருப்பது போலதான் இருந்தது மேலும் அந்த டைரியை பார்த்தார் அது அவளுடைய தாத்தா உடையது அவளது குடும்பத்திலேயே அவளது தாத்தாவுக்கு மட்டும்தான் டைரி எழுதும் பழக்கம் இருந்தது அது அவள் அறிவாள்
பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயத்தை நமது மனதை போட்டு அழுத்தும் பாரத்தை சொல்ல சிறந்த பெட்டகம் தான் டைரி என்பது தாத்தா எப்பொழுதும் கூறுவார் அவளிடம் கூட இதைப்பற்றி கூறிருக்க அவளோ, " யாரிடமோ பகிர முடியாததை எழுதுறதா சொல்றிங்க ஆனால் யார் வேணாலும் உங்க மனதை இதன் மூலமா திறந்து பார்க்கலாம் தானே அப்போ உங்க மனது என்னன்னு தெரியும் தானே " என கேட்டாள் அதற்கு அவரிடம் பதில் இல்லை..
ஆனால் தாத்தா யார் முன்னேயும் டைரி எழுத மாட்டார் அவர் தனியாக இருக்கும் பொழுது தான் டைரி எழுதுபவர் அந்த டைரியை கூட யாரும் எடுக்க முடியாத இடத்தில் தான் வைப்பார்...
ஒருமுறை இவர் அவருடைய எழுதிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து ஹிமானி உள்ளே செல்ல அவர் வேகமாக டைரியை மூடி வைத்தார் கூட கேலியாக , "நான் பார்த்தா என்ன பண்ணுவீங்க??" என்று வினவ, " அடுத்தவங்க டைரியை பார்க்கிறது அடுத்தவங்க பெட்ரூமை பாக்குறதுக்கு சமம் என்று உனக்கு தெரியாதா??" என்று அவர் கூற,
அவளும் , "இதெல்லாம் என் கிட்ட சொல்லாதீங்க இதற்கான பதில் நான் எப்போவோ உங்களுக்கு சொல்லிட்டேன் தாத்தா..நான் எப்படி இருந்தாலும் உங்க டைரியா எப்பவாச்சும் நான் பார்த்தே தீருவேன்" என்று விளையாட்டு போல கூறினாலும் அவளுக்கும் தெரியும் இதையெல்லாம் பார்க்க கூடாது என அந்த டைரியை தான் இப்போது அவள் கையில் இடம்ப்பட்டிருக்க முதலில் அதை படிக்க அவளுக்கு கூசியது இருந்தாலும் அவளுக்கு விஷயம் தெரிந்தாக வேண்டுமே அவனும் குறிப்பிட்ட அந்த டைரிகளை மட்டும் தான் அவளிடம் கொண்டு வந்து கொடுத்து இருக்க,
இருபது வருடங்களுக்கு முன் நடந்த விஷயங்களை அந்த இருபது வருடத்திற்கு முன் உள்ள டைரியில் குறிப்பிட்டிருக்க அதே போல கடந்த ஆறு வருடத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை அந்த டைரியில் குறிப்பிட்டிருந்தார் பெரியவர் மேலும் அவன் சொல்வதை தான் அவரும் எழுதி இருக்க நம்பமுடியாமல் இருக்க முடியவில்லை மேலும் அவளுக்கும் விபத்து நடந்ததும் உண்மைதானே
அதில் இரண்டு மாத நினைவுகள் அவள் இழந்ததும் உண்மைதானே அது அவளுக்கு தெரிந்தது தானே ஆனால் அந்த இரண்டு மாதம் அவள் வாழ்வில் நிகழ்ந்த பல பொக்கிஷங்களை அவள் இழந்து இருக்கிறாள் என்பதை அறிந்தவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை தன்னை இவ்வளவு தூரம் ஒருவன் காதலிக்கிறானா என்பதை அவளுக்கு பெருமையாகவும் அதே சமயம் அவனை நான் புரிந்து கொள்ளவில்லையே என்று கண்ணீராகவும் வெளிவந்தது..
அதிலும் அவன் ஏன் அவளை இப்படி துரத்தி அவளைத் திருமணம் செய்து பிடிக்காத வாழ்க்கை என்றாலும் உன்னுடன் தான் வாழ்வேன் என்று அவன் இருக்கிறானா இவனைப் போல் தவறாக எண்ணி விட்டோமே என்று வருந்தினாள்.. அவளுக்கு இப்பொழுதும் அவன் இவ்வளவு தூரம் கூறியும் அவன் கூறிய ஒரு விஷயமும் அவள் நினைவுகளில் இல்லை..
அது இனியும் அவளது நினைவு அடுக்கை தொடும் என்ற நம்பிக்கையும் அவளுக்கு இல்லை..ஆனால் ஒரே ஒரு விஷயம் அவளால் இப்பொழுதும் அவனது காதலையும் அவனது அன்பையும் புரிந்து கொள்ள முடிந்தது அவன் ஒருவனால் மட்டும் தான் அவளை அவன் ஒருவனால் மட்டும் தான் இந்த உலகத்தில் சந்தோஷமாக வைத்திருக்க முடியும் என தோன்றியது இனி என்ன ஆனாலும் இவனை விட்டு பிரிய கூடாது என்ற அறிவும் அவளுக்கு வந்தது..
இனி என் வாழ்க்கையில் இவன் மட்டும் தான் என்று அவள் அறிந்த நொடி வேகமாக எழுந்தாள் எழுந்தவள் அவன் அவளுக்காக அவன் தயார் செய்து வைத்திருந்த உடையை அணிந்து அணிந்தவள் அழகாக தன்னை அலங்கரித்துக் கொண்டான் அவர்களது காதல் பொக்கிஷங்களான அந்த போட்டோக்களை எல்லாம் சேகரித்து வைத்து ஒரு பெட்டியில் அவன் எப்படி வைத்திருந்தானோ அது போல அதை அதே இடத்தில் வைத்தவள் ஒருவேளை இதை நான் பார்க்காமல் போய் இருந்தால் என்ன ஆகியிருக்கும் என எண்ணும் பொழுது அவளுள் அதிர்வு எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை..
ஆனால் எதுவாகினும் இப்பொழுது எல்லாம் சுபமாக முடிந்தது என்று எண்ணிய ஹிமானி தன்னை மிக அழகாக அலங்கரித்துக் கொண்டாள்
