ஸ்வரம் 30

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  


ஸ்வரம் : 30

அவன் அனுப்பி வைத்த இரண்டு நாட்கள் கழித்து உத்ரகேஷிடம் இருந்து போன் ஒன்று வந்தது ஆர்யாவுக்கு என்ன இவன் காலையில் கூப்பிடலையே என எண்ணி கொண்டிருந்தவனுக்கு தாத்தாவின் அழைப்பு வரவும், " சொல்லுங்க தாத்தா!!"

"கண்ணா நம்ம ஹிமானிக்கு விபத்தாகிடுச்சு பா " என்று கூறி அழ

" என்ன தாத்தா சொல்றிங்க ??" என்று வினவினான் ஆர்யா அவனுக்கு அவனது காதுகளில் சரியாக தான் தாத்தா சொல்வது கேட்டதா என்ற சந்தேகம் வேறு..

"ஆமாம் கண்ணா மிஹ்ரான் சிவானி ஹிமானி மற்றும் அவங்க நண்பர்கள் எல்லாரும் போன வாகனம் விபத்துக்குள்ளாகி இருக்கு அதுல எல்லாத்துக்கும் ஒரு சில அடி பட்டிருந்தாலும் ஹிமானிக்கு அடி பலமாக விழுந்திருக்கு "என்று கூற அதைக் கேட்ட அவனுக்கு உலகமே சுழல்வது போல இருக்க அவனுக்கு தான் அவளை போது பார்க்க வேண்டும் என தோன்றியது ..

உடனே எதைப்பற்றியும் யோசிக்காமல் அவன் இந்தியா வர அங்கே மருத்துவமனையில் அவள் இருந்தாள் அவளை காண வேண்டும் என எண்ணி செல்ல துடித்த அவனை தடுத்து நிறுத்தினார் உத்ரகேஷ்

"தாத்தா எனக்கு அவளைப் பார்த்தே ஆகணும் அவளுக்கு என்ன ஆச்சுன்னு என் மனசு பதறிட்டு இருக்கு தயவு செய்து விடுங்க தாத்தா எதுக்காக என் வழியை மறைச்சு நிக்கறீங்க??" என்று கூற மேலும் அதைக்கேட்டு உடைந்து போனார் உத்ரகேஷ்..

"கண்ணா நீ அவசரப்படாதே நீ இப்போ அங்க போகாத எல்லாரும் இருப்பாங்க " என்று கூற , "இருந்தா இருந்துட்டு போறாங்க அவ என்னோட பொண்டாட்டி தானே எனக்கு இல்லாத உரிமை வேற யாருக்கு இருக்கு??" என்று அவன் கேட்க ,

அதை கேட்டதும் உத்ரகேஷ் , " அமைதியா இருந்த உன்னை இப்படி செய்துட்டேனே பாவி நான் பேசாமல் என்னை கொண்டு போய் இருக்கலாம் அந்த கடவுள் " என்று புலம்பியவர்,

"அதுதான் யாருக்கும் தெரியாதே நான் சொல்றதை கேளு அவளோட உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை ஆனால் நீ இப்போ அங்கே போகாத டா " என்று கூறிய பின் தான் அவளுக்கு ஒன்றுமில்லை என்பதை அறிந்த பின் தான் அவன் சமாதானமாக இருக்க அப்பொழுது தான் ஒரு குண்டை தூக்கி போட்டார் அவனது தாத்தா..

"ஹிமானிக்கு ஒன்னும் இல்ல அவ நல்லாத்தான் இருக்கா ஆனா அவளுக்குப் பின் மண்டையில் அடிபட்டு அதுல அவளுக்கு கடந்த 2 மாத ஞாபகங்கள் மட்டும் அவளை விட்டுப் போயிருக்கு அதாவது அவள் லண்டன் போனதோ இந்த நடனத்தில் கலந்துகிட்டதோ கல்லூரியில் எடுத்த பாடம் முதல் அவளுக்கு நடந்த முடிந்த பிறந்த நாள் புதிதாக கிடைத்த நண்பர்கள் யாருமே அவளுக்கு ஞாபகம் இல்லை இரண்டு மாத ஞாபகங்கள் எல்லாமே அவளுக்கு அழிஞ்சு போயிருக்கு அதுல உன்னோட நினைவுகளும் இல்ல பா "என்று பேரபிள்ளைகள் இருவரையும் இந்த காதல் புரிய தூண்டிய மனிதர் கூற உடைந்து போனான் ஆர்யா..

" அப்போ நான்" என்று மீண்டும் அவன் வினவ , "உன்னையும் சேர்த்துதான் சொல்றேன் நான் தான் உங்க ரெண்டு பேரையும் தேவையில்லாம கிளப்பிவிட்டுட்டேன் போல நீ அமைதியாத்தான் இருந்தே நான் தான் ஏதேதோ செய்து இப்போ இப்படி ஆகி இருக்கு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தது இந்த கடவுளுக்கு பிடிக்கல போல இப்பத்தான் நான் பழைய விஷயத்தை எல்லாம் சொல்லி அவ அதை ஒத்துகிட்டு அவளும் உன்னை நேசிக்க ஆரம்பிச்சா ஆனா இப்போ இப்படி ஆயிடுச்சே கண்ணா" என்று அவர் அழுதார்

அவருக்கு ஆறுதல் சொல்லும் மன நிலையில் அவன் இல்லாத காரணத்தினால் அவன் அமைதியாக இருக்க தாத்தா என கெஞ்சி கேட்டு அவனை அவளை பார்க்க விடாமல் செய்தார் உத்ரகேஷ்..ஏனெனில் நிதிஷ் மற்றும் பாயல் எப்பொழுதும் அங்கே இருக்க இவன் சென்று ஏதாவது பிரச்சினை ஆகி விடுமோ என பயந்தார் ஏனெனில் நிதிஷ் மற்றும் பாயலிடம் இவன் தான் பேசிக் கொள்வதில்லையே அப்படியிருக்க அவளை காண சென்றான் எனில் அவர்களுக்கு சந்தேகம் வரும் என எண்ணி ஆர்யாவை காண சம்மதிக்கவில்லை..

இருந்தும் அவன் அவளை யாரும் காணாத விதத்தில் முக கவசம் அணிந்து அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் ஆள் போல சென்று அவளை காண சென்றான் ஆர்யா..

ஆம் இரவு ஒரு பனிரெண்டு மணிக்கு அவள் தங்கி இருக்கும் அறைக்கு ரத்த கொதிப்பு செக் செய்வது போல அவன் கதவை திறக்க அவளுக்கு துணையாக இருந்த பாயல் உறங்கி போய் இருந்தார்..

அவளோ கசங்கிய மலர் போல படுத்துக் கிடக்க எப்பொழுதும் சிரிப்பை உதிர்க்கும் அவளது உதடுகள் காய்ந்து போய் இருக்க அதையெல்லாம் அவனால் பார்க்க முடியவில்லை அவள் அருகே சென்றவன் அவளது தலை முதல் கால் வரை பார்வையாலேயே அளந்தான்..

பின், "ஹிமானி" என்று அழைக்க அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் மெல்ல கண் விழித்தாள் அவள் அவளை கண்டதும் தான் அவனுக்கு இத்தனை நாட்களாக துடித்து கொண்டிருந்த துடிப்பு அடங்கியது என்றே கூற வேண்டும்..

" நான் யார் வந்து இருக்கேன்னு தெரியுதா??" என்று அவன் வினவ, " சொல்லுங்க" என்று ஆண் நர்சிடம் பேசுவது போல அவள் பேச இவனுக்கு தூக்கிவாரிப் போட்டது தன் முகத்தில் அணிந்திருக்கும் மாஸ்கை அவன் அவிழ்க்கவில்லை..

அவனுக்கும் தாத்தா கூறுவது போல இப்பொழுது தன் முகத்தை காட்டினால் அவள் அவளது குடும்பத்தாரிடம் இவன் தன்னை காண வந்தான் என கூற நேரிடும்மோ என எண்ணி வந்த வழியே சென்று விட்டான் ஆர்யா..ஆனாலும் அவள் தன்னிடம் பேசினாலே என்ற சிறு மகிழ்ச்சியுடன் அவன் சென்றான்..

அப்படியே ஓரிரு மாதங்கள் செல்ல அவள் மீண்டு வந்து கல்லூரிக்கு செல்ல துவங்கினாள் ஆனால் அந்த இரண்டு மாத நினைவுகள் அவளுக்கு அழிந்திருக்க அதை எப்படியாவது ஞாபகப் படுத்தும் முயற்சியில் இறங்கினான் ஆர்யா..

அந்த இரண்டு மாத நிகழ்வுகள் மறந்து இருந்தாலும் அவள் மனதுக்குள் காதல் என்ற ஒரு விஷயம் உள்ளுக்குள் எப்பொழுதும் அவளது நினைவு படலத்துக்குள் பத்திரமாக இருந்தது என்னவோ உண்மைதான் ஆனால் பாவம் யாரை காதலித்தோம் என்பதையே அவள் மறந்திருக்க,

இப்படியே மூன்று வருடங்கள் ஓடியது தான் மிச்சம் அந்த சமயம் பார்த்து தான் தருண் அவள் வாழ்க்கைக்குள் நுழைய ஒரு வேளை தருணை தான் நாம் காதலித்தோம்மோ என எண்ணி அவனோடு பழக தொடங்கினாள் ..

ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய இருவரும் தருண் கல்லூரி முடித்து அவன் ஒரு டைரக்டரிடம் அசிஸ்டெண்ட் ஆக வேலை செய்வது வரை நண்பர்களாக இருந்து இதோ ஹிமானி கல்லூரி முடித்ததும் தான் இருவரும் காதலிக்க தொடங்கினர் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவர் தந்தை என்ன செய்வார் என தெரியாது என்ற காரணத்தினால் சுற்றுவது போல அவளை அவன் சுற்ற, இவளை தூரத்தில் இருந்து கவனித்து வந்த ஆர்யா அவளுக்கு மீண்டும் எப்படியாவது அந்த பழைய நினைவுகளை கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினான் ..

அதற்கு முதல் படியாக தன் தாத்தாவிடம் அவளை இந்த வீட்டிற்கு வர சொல்லுமாறு அழைக்க தாத்தாவும் அவளை காண வேண்டும் என அழைத்தார் ..

அப்பொழுது அவன் அங்கு இருப்பது போல காட்டிக் கொள்ள எதேர்ச்சையாக அவளைக் கண்டவன் தலை முதல் கால் வரை அவள் நன்றாக இருக்கிறாளா என பார்த்து அவளிடம் ஹலோ என்று கூற,

இவளுக்கு ஆச்சரிய விழிகள் தூக்கியது என் கிட்ட எல்லாம் பேசுகிறானே என்று அவள் நினைத்தாலும் அவளுக்கு அடிப்பட்டும் கூட இவன் என்ன பார்க்க வரலையே ஊரே அவள் நலத்தை நாட இவன் மட்டும் கேட்கவில்லையே என்ற கோபத்தில் ஹாய் என்று மட்டும் கூறினாள் ...

இப்படியே ஒரு இரண்டு மூன்று சந்திப்புகள் அவன் அவளிடம் பேச அவளோ ஒரு உறவினர் என்ற முறையில் தான் பேசினாலே ஒழிய மேற்கொண்டு அவனிடம் ஒட்டவில்லை அது ஏன் என ஆர்யாவுக்கு சுத்தமாக புரியவில்லை..

அவள் தான் தருணை காதலித்துக் கொண்டு இருக்கிறாள் அது விஷயம் இல்லை என்றாலும் அந்த விஷயத்தை கசிய விடக்கூடாது என்று மேலும் ஹிமானி கவனமாக இருக்க ஏனோ அவளுக்கு இவனிடம் ஒதுக்கம் ஏற்பட ஆர்யாவை 4 அடி தூரத்திலேயே நிறுத்தினாள் ஹிமானி..அதற்கு எல்லாம் காரணம் மிஹ்ரான் கூட இருக்கலாம்..

இவளை இப்படியே விட்டால் சரியாகாது இவளுடன் பேசியே ஆக வேண்டும் என அவன் நினைக்கும் போது தான் எட்டு மாதங்களுக்கு முன் அவனுடைய தாத்தாவும் அவனை விட்டு பிரிய மரணத்திற்கு வந்து இருந்த ஹிமானிக்கு ஏனோ ஆர்யாவை பார்க்கும் போது வருத்தமாக இருந்தது ஏனெனில் எல்லோரும் கூட்டாக இருக்க இவன் மட்டும் இப்படி தனி மரமாக இருக்கிறானே என்ற வருத்தம் அவளுள் தோன்றியது..அவள் கொஞ்சம் அவன் பக்கம் இளக துவங்கினாள்...

அந்த சமயத்தில் தான் மாலத்தீவில் ஒரு சூட் நடக்க இருக்க அதில் நடிக்க ஆர்யா அந்த டைரக்டரிடம் ஹிமானிடம் பேசச் கூறினான்..அப்படி அவரும் அவளிடம் பேச முதலில் மறுத்தாள் பின்பு , "அதில் ஓரிரு நடன அசைவுகள் உள்ளன அதை நீங்க செஞ்சா தான் நல்லா இருக்கும்" என்று ஏதேதோ பேசி அவர் அவளை சம்மதிக்க வைக்க அவளும் அங்கு வந்தாள்..அவள் இங்கு வர வேண்டும் என்று தான் அவன் அவளை இங்கு கொண்டு வந்து இருந்தான்..

மேலும் அவளுக்கு அங்கு ஒரு நடன விழாவும் இருந்தது அதுவும் ஆர்யாவின் ஏற்பாடு தான் ஆனால் அவளுக்கு தெரியவில்லை அப்படி இருக்க அவள் மாலத்தீவு வந்தாள் அவன் தங்கியிருந்த அறைக்கு அருகிலேயே தான் அவளுக்கு ஒரு அறை புக் செய்யப்பட்டிருக்க இவன் வந்திருக்கிறான் என்பது கூட தெரியாமல் அவள் அங்கு வந்து சேர்ந்தாள்

அந்த சமயம் நடன அசைவுகள் கொண்ட ஆட் ஷூட் என்று கூறியவர்கள் பிறகு பிகினி அணிந்து ஷூட் என்று கூறவும் அவளுக்கு பிகினி அணிய பிரச்சனை இல்லை ஆனால் ஏமாற்றி விட்டார்களே என அவள் கூற நாயகன் யார் என்று பார்க்கும் பொழுது அது ஆர்யாவாக இருக்க அவள் ஆர்யாவிடம் சென்று, " இது என்ன இப்படி பண்ணி இருக்காங்க அக்ரிமென்டில் கையெழுத்து போட்டுட்டேன் இல்லேன்னா நான் பிரச்சனை பண்ணி இருப்பேன் முதன் முதலா ஒரு ஆட்ல ஆக்ட் பண்ணலாம்னு வந்தா இப்படியா??" என்று கூற அவனும் கூல் என்று கூறி விசாரிக்க,

அவர்களோ , "சார் கடைசி நிமிஷத்துல மாற்ற வேண்டியது ஆகிடுச்சு தயாரிப்பாளர்க்கு இந்த காட்சி விருப்பமில்லை என்று கூற ஆர்யாவை மனதுக்குள், " அப்படி வாடி என்கிட்ட என்கிட்ட" என எண்ணி அவன் அவளை பார்த்து, " நீ பிகினி புதுசா போடுறவ இல்லையே ஒரு சின்ன சாட் தானே பயப்படாமல் நடி நான் இருக்கேன் என்று கூற அந்த நான் இருக்கேன்" என்ற வார்த்தையில் விழுந்தவள் சரி என்று கூறினாள்..

பிறகு அந்தக் காட்சியில் அவர்கள் இருவரும் மிக நெருக்கமாக நடிக்க அந்த போட்டோ தான் வைரல் ஆனது அதுவும் ஆர்யாவின் வேலை தான் இவர்கள் இருவரின் புகைப்படத்தை வெளியே விட சொன்னதும் அவன் தான் மேலும் என்னதான் அவனிடம் ஒட்டாமல் இருந்தாலும் அவனை அவளுக்கு ரொம்ப பிடிக்கும் மேலும் ஆர்யாவும் அவனது அருகாமையையாவது அவள் உணர்கிறாளா என அறிய தான் ஆறு வருடங்களுக்கு முன் லண்டனில் இருக்கும் வேளையில் ஒரு நாள் எப்படி இவர்கள் நெருக்கமாக இருந்தார்களோ அது போல இருக்க அப்போதும் ஷாட் முடிந்து அவள் வெளியேறினாலே ஒழிய நம்பிக்கை இல்லை..

ஏனெனில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் அவளுக்கு மறந்து இருந்தாலும் இப்பொழுதும் அவன் அவளின் நாயகன் தானே அவனது சினிமாவை ஒன்று விடாமல் பார்த்து விடுவாளே அவனுடைய ரசிகி தானே அந்த காரணமும் சேர்ந்துகொள்ள மாலத்தீவு சென்றதும் அவனுடன் இயல்பாக பேச ஆரம்பித்தாள் ஹிமானி..

அப்படி இருக்க அவளுக்கு அந்த நடன நிகழ்ச்சியும் முடிவடைய நடன நிகழ்ச்சி முடிந்ததும் அவளை இரவு உணவுக்காக அழைத்தான் அவளோ, " இல்லை எனக்கு நாளைக்கு பிளைட் எனக்கு இப்ப போகணும் ரெஸ்ட் எடுத்தா தான் காலையில போக முடியும் "என்று கூற அவனும், " பரவால்ல வா" என்று கூற

அவளுக்கு அவனுடன் உணவு அருந்தியது மட்டும் தான் நினைவிருக்கிறது பிறகு அவள் எழுந்ததோ ஒரு நாள் கழித்து தான் அவளது உடைகள் எல்லாம் மாற்றப்பட்டிருக்க அவளுக்கு அடித்துப்போட்டது போல உடல் வலி கண்களை திறந்து பார்க்கும் பொழுது கடலை வைத்துக்கொண்டு பால்கனியில் அமர்ந்திருந்தான் ஆர்யா ..

அவன் மனம் கொதித்துக் கொண்டிருந்தது , "இனியும் உன்னை தனியா விட என்னால முடியாது உனக்கு என்னை பத்தின ஞாபகங்கள் வரலைன்னாலும் எனக்கு கவலை இல்லை உனக்குள்ள எப்படி நுழையனும்னு எனக்கு தெரியும் அதனாலதான் நான் இத செஞ்சேன்" என்று கூற மெல்ல எழுந்தவள் , "எனக்கு என்ன ஆச்சு??" என்று வினவ ,

"என்னனு தெரியல திடீர்னு மயங்கிட்ட டாக்டர் செக் பண்ணிணாங்க ஒன்னும் இல்ல சாப்பிட்டதில் ஏதோ புட்பாய்சன் அப்படின்னு சொன்னாங்க அதுதான் ரெஸ்ட் எடுக்கட்டும்ன்னு நான் அமைதியா இருந்தேன்" என்று சொல்லி , "நான் உனக்காக காத்து இருக்கேன் " என்க

"அப்ப எத்தனை நாள் ஆச்சு??" என்று கேட்க ஒரு நாள் ஆகிவிட்டது என்று கூறவும் அதை கேட்டு அதிர்ந்த அவளோ, " அப்போ என்னோட ஃபிளைட்"

" மிஸ் ஆயிடுச்சு" என்று கூலாக கூற அவன் கூறியது உண்மை என நம்பினாள் அவள் ஆனால் பின்னாளில் அதை வைத்து அவன் அவளைத் திருமணம் செய்வான் என அவள் எதிர்பார்க்கவில்லை..

ஆம் அவனுக்கு வேறு வழி இல்லை அவளும் மிஹ்ரானும் சேர்ந்து நாளுக்கு நாள் அவனது கோபத்தை அதிகப்படுத்தி கொண்டிருக்க அவனுடைய மனைவியை அவன் இப்படி தான் அழைத்து வர வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டான் ஆர்யா

அவனும் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் அவளுக்கு நினைவுகள் எழுமா அவள் மனதில் மீண்டும் நுழைவோம்மா என காத்திருந்தான் ஆனால் அவனால் முடியவில்லை அதுவும் அவன் அவனது தாத்தாவிற்கு கொடுத்த வாக்கின்படி உண்மையை கூறாமல் அவளை திருமணம் செய்தான்..

அவளாக அறியும் பொழுது நீ கூறினால் போதும் என அவளது தாத்தா கூறியிருக்க அதன்படி அவளாக கேட்கும் போது தான் அவன் உண்மையை கூறினான் அப்படி எல்லா விஷயத்தையும் அவளிடம் கூறியவன், " இதுதான் நடந்தது உன்னால் நம்ப முடிஞ்சா நம்பு இல்லையா நம்பாதே நான் இப்பவும் வில்லன் தான்" என்று கூறி அவனது ஒரு கண்ணை மட்டும் சிமிட்டு விட்டு சென்றான் ஆர்யா..இதை எல்லாம் கேட்டு அதிர்ந்தவள் அவளை விட்டு செல்லும் கணவனின் முதுகையே வெறித்தாள் இப்போதும் அவளுக்கு இவன் சொல்வதை நம்புவதா என தெரியவில்லை...

ஸ்வரம் இசைக்கும்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top