ஸ்வரம் 3

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  

ஸ்வரம் : 3

அவளை கைகளில் ஏந்தி அவன் திரும்பி செல்லும் போது, "என்னை இறக்கி விடு விடுன்னு சொல்றேன்ல".. என்று அவளது உடலை அவனிடத்தில் இருந்து மீட்டு எடுக்க அவள் போராடியவள் மனம் தாங்கொன்னா வலியை அனுபவித்து கொண்டிருக்க அவனோ தன் கழுத்தை ஒட்டிய அவளது முகத்தை பார்த்து , "முடியாது".. என்றான் அதுவும் தீர்க்கமாக

"உனக்கு வெட்கமா இல்லை ஒரு பெண்ணை நாசம் பண்ணிட்டு அவளோட அனுமதி இல்லாமல் அவளுக்கு செந்தூரம் தீட்டினா நீ கணவன் ஆகிடுவியா??"..

"அப்புறம் வேற என்ன செய்யணும் இங்கேயே முதல் இரவும் கொண்டாடனுமா??..ஒரே அறையில் இப்போவே இருக்கணும்னா சொல்லு இருக்க நான் தயார் "... என நக்கலாக அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினான்..

"சீ உன் பேச்சை அன்னிக்கு நான் நம்பி இருக்கவே கூடாது என்னை விடு டா ..என்னை நீ ஏமாத்திட்டே"..என்று அவள் திமிர

"ஹ்ம்ம் நானா??? உன்னை நம்ப சொன்னேன் நீயா தான் என்னை தேடி வந்த அது இல்லைன்னு உன்னால மறுக்க முடியுமா டி??? நானா உன்னை தேடி வந்தேன்"....என்று அவளிடமே கேள்வி கேட்க இதை எல்லாம் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருக்க தான் முடிந்தது...

அதை கேட்டவள் அவன் கூறுவது உண்மையே நான் தானே அன்று அவனை தேடி போனோம் ஆனால் இது எப்படி என குழம்பி அவன் கூறுவது உண்மை தானே என்பதை உணர்ந்தவள் அதிர்ச்சியில் உறைய அதை கேட்ட குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ந்து நிற்க மிஹ்ரான் மட்டும் , "என்ன சொல்றான் ஹிமானி அவன் சொல்றது உண்மையா??? என அதட்டி கேட்டான்..அவனுள் கோபம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது..தன் கண் முன்னே அவளை அவன் தூக்கி இருப்பது பிடிக்கவில்லை என்றால் இங்கே நடந்து கொண்டு இருக்கும் கூத்து அதை விட பிடிக்கவில்லை... அப்படியிருக்க மிஹ்ரான் அவ்வாறு கேட்டதும்,

ஆர்யனின் கையில் இருந்து திமிறிக்கொண்டே குடும்பத்தார் முன்னர் அது உண்மையே என்பது போல அவள் தலை தாழ்ந்து போக அதை கண்ட ஆர்ய கௌரவ்வின் இதழ்களில் வெற்றி புன்னகை..

தன் மகளுக்கு ஒரு நொடி என்ன நடந்தது என்ன நடந்து கொண்டிருக்கிறது என புரியாமல் விழித்த நிதிஷ் , "ஆர்யா என்ன இது நீயா என் பொண்ணு வாழ்க்கையை அழிக்க வந்து இருக்கியா இப்படி ஒரு செயலை செய்ய உனக்கு எப்படி துணிவு வந்தது???"..... என்று கேட்க

"துணிவா அது என் கூடவே இருக்கு அதை நீங்க இன்னும் பார்க்கலனா நான் என்ன செய்ய??? அப்புறம் என் மனைவி வாழ்க்கையை கெடுத்துட்டேன்னு நீங்க எப்படி சொல்லலாம் மிஸ்டர் சிவேஷ்??? நானா உங்க பொண்ணை தேடி போனேனானு கேளுங்க பொண்ணு என்ன செய்யறான்னு பார்க்க துப்பு இல்லை பேச வந்துட்டாங்க"... என்றான் அகம்பாவத்தோடு இப்படி யார் மனதை பற்றியும் கவலை இல்லாமல் இருப்பானா ஒருத்தன் என அவர்கள் நினைக்க, அவன் எப்படி இப்படி குடும்பத்தில் இருந்து ஒதுங்கி இருக்கிறானோ அது போல இவர்கள் அனைவரும் ஒதுங்கி தானே இருக்கின்றனர் ஆனால் இவன் மட்டும் எதற்காக தொடர்ந்து இவர்களுக்கு குடைச்சல் கொடுத்து கொண்டே இருக்கிறான்..

யார் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் அளித்து கொண்டே அவன் மேலும் ஒரு அடி எடுத்து வைக்க,

"இப்போ எங்கே என் பொண்ணை தூக்கிட்டு போற???"... என்று பாயல் கேட்க

"என் பொண்டாட்டியை நான் கூட்டிட்டு போறதை யார் கிட்டயும் சொல்லணும்னு அவசியம் எனக்கு இல்லை அதும் உங்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு சுத்தமா இல்லை"... என்று அவர் மீதும் அவன் சாட,

"பார்த்தீங்களா எல்லோரும் சேர்ந்து இப்போ எங்களை அசிங்கபடுத்திட்டிங்க இப்போ வெளியே எங்களை யார் மதிப்பா?? இவனை காதலிச்சுட்டு அவன் புள்ளையை சுமந்துட்டு இருக்கா சீ".. என மயூரா கூற, அதை கேட்ட ஹிமானியின் விழிகளில் கண்ணீர் சுரந்தது ...அதை ஆர்யன் கவனித்தும் விட,

உபேந்திரா கூட , "நீ செய்தது சரியில்லை இதை நீ முன்னாடியே சொல்லி இருக்கலாம் இப்படி எங்க எல்லோரையும் அசிங்கப்படுத்தி இருக்க வேணாம்"..என்று ஆதங்கத்தோடு கூற

அதை கேட்ட ஆர்யனின் கண்கள் கோபத்தில் சிவந்து இருவருக்கும் பொதுவாக, " இதோ பாருங்க நானா உங்ககிட்ட வந்து கேட்கனும்னு எனக்கு அவசியமே இல்லை அப்படி நான் கேட்கவும் மாட்டேன் அண்ட் நீங்க எல்லாம் யார் எனக்கு??? உங்கிட்ட பர்மிஷன் வாங்க??? ஷி இஸ் மை வைப்..ஷி இஸ் மை ..இவ எனக்கானவ அவளை நான் கூட்டிட்டு போறேன் சாரி கூட்டிட்டு வந்து இருக்கேன் இந்த வீடு என்னோடது இல்லையா ?? அண்ட் மிசஸ் உபேந்திரா அடுத்த பொண்ணை பேசும் போது நாம எப்படி வாழ்ந்தோம்னு கொஞ்சம் யோசிச்சிட்டு பேசுங்க...அண்ட் என்னோட பர்சனல் பத்தி பேச நான் யாருக்கும் அனுமதி கொடுத்தது இல்லை ...இனி ஹிமானியை பத்தி யாராவது இங்கே பேசுனீங்க அப்புறம் உங்க மரியாதை போச்சேன்னு என்கிட்ட வந்து புலம்ப வேண்டியதா இருக்கும்

அண்ட் இதோ இவ சொல்றதை தான் கேட்டிங்களே?? அப்போவும் உங்க எல்லோர்க்கும் சந்தேகமா இருக்கா அப்படி சந்தேகம் இருந்தாலும் எனக்கு கவலை எல்லாம் இல்லை.. "... என்று நக்கல் குரலில் திமிராக கூறினான்..

அதை கேட்ட மிஹ்ரான் ஆர்யனின் சட்டையை பிடிக்க ஒரு அடி எடுத்து வைக்க அதற்குள் உபேந்திரா தடுக்க தன் கோபத்தை அடக்கியவன், "ஒரு வேளை நான் தாலி கட்டி இருந்தா என்ன செய்து இருப்ப ??? இப்போ இப்படி நாலு பக்கத்துக்கு வசனம் பேசிட்டு இருக்க அப்போவும் பேசுவியோ??"... என்று மிஹ்ரான் அதே நக்கல் குரலில் கேட்க,

" கண்டிப்பா...தாலி கட்டி இருந்தாலும் இவளை தூக்கி இருப்பேன் புரியுதா?? அவ்வளவு சீக்கிரமா உன்னால இவ கழுத்துல தாலி கட்டிட முடியும்னா நீ நெனைக்கிறியா???"... என்க

"அப்போ எல்லாமே பிளான் தான்"... என்று எரிச்சலாக மிஹ்ரான் கேட்க,

"பிளான் எல்லாம் கிடையாது இது தான் முடிவு மிஸ்டர் மிஹ்ரான் மல்கோத்ரா..அவளை அழைச்சிட்டு போக வந்திட்டு சும்மா இருப்பேன்னா நினைக்கிற??? என்னை பத்தி நீ தெரிஞ்சுக்க நிறைய இருக்கு "... என்றான் ஆர்யன்...

நிதிஷ்ஷோ, " அவ என் பொண்ணு இல்லையா நான் கேட்கலாம் இல்லையா??"..

"இனி கேட்க முடியாது இப்போ அவ என் மனைவி".. என்றவன்

"உங்களுக்கு நான் சொல்லி தான் எல்லாம் தெரியணும்னு இல்லை நடக்க வேண்டியதை பாருங்க...பெரிய குடும்பத்துக்கு ஆட்கள் வேற குடும்ப மானத்தை அதிகமா காத்தில் வாங்க விரும்ப மாட்டீங்கன்னு நினைக்கிறேன்... நல்ல யோசிச்சு ஒரு பதிலை வெளியே இருக்கிறவங்களுக்கு சொல்லுங்க...அதுனால இன்னும் பத்து நிமிடத்தில் எல்லோரும் மணமேடைக்கு வந்து சேருங்க ".. என்று கூறி விட்டு அவளை தூக்கி கொண்டே சென்றான்..

அதை கேட்டு அனைவரும் செய்வதறியாது நிற்க, "டாடி என்னை விடு.. டாடி எனக்கு இவன் கூட இருக்க பிடிக்கல பிளீஸ் என்னை விடு " என்று அவள் கூற அதை கேட்காமல் திமிறி கொண்டிருக்கும் அவளது இடையை அழுத்தி பிடிக்க அவளோ அதிர்ந்தாள்.... அதில் அவள் இன்னும் வாய் திறப்பாளேயானால் இன்னும் அவனது பிடியின் அழுத்தம் கூடும் என்பது போல அவன் செய்ய , அவளுக்கு அந்த நொடி மூளை தான் மரத்து போனது..அவள் எண்ணியது எல்லாம் சுக்கு நூறாக நொறுங்குவது போல அவளுக்கு தோன்றியது..

அவனோ அவனது அறைக்கு எதிரே இருக்கும் ஒரு அறைக்கு அவளை தூக்கி சென்று கதவை காலால் எட்டி உதைத்து அவளை இறக்கி விட்டான்..

அவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது அவன் செய்ததில் வெகுண்டவள், "என்ன நினைச்சிட்டு இருக்க ஏமாத்தி ஒரு புள்ளையா கொடுத்திட்டா நீ ஆம்பிளையா???"..

"அப்போ இல்லையா??"... என்றவன் விழிகள் அவளை தலை முதல் அடி வரை வருட, அவளோ என்ன இப்படி பார்க்கிறான் என முழித்தவளோ,

"இந்த தாலியும் செந்தூரம் தான் உன்னை பொறுத்தவரை கல்யாணமா அது மனசு சம்பந்தப்பட்டது என்னால உன்கூட வாழ முடியாது"... என அவள் கட்டிய தாலியை அவிழ்க்க போக சட்டென்று அவள் அருகே வந்தவன் , "இந்த தாலியை அவிழ்த்தா மட்டும் உன்னை விட்டுடுவேன்னு நீ நெனைக்கிறியா மிசஸ் ஆர்யன்??"... என்று கூறிய

மிசஸ் ஆர்யன் அதை கேட்கும் போதே அவளுக்கு காந்தியது, "அப்படி சொல்லாத?? என்னால உன்னை கணவனா ஏத்துக்க முடியாது"... என்க

"ஏன்??"... அந்த கேள்வியில் அவனுக்கு பதில் தெரிந்தாக வேண்டிய நிலையோ??

"நீ என்னை ஏமாத்தி இருக்க ??"...

"அப்படியா ??"... என்றான் நக்கலாக

"பின்ன இல்லையா?? சீ ஒரு பெண்ணை ஏமாத்தினதும் இல்லாமல் இப்படி நல்லவன் மாதிரி நிற்கிற உனக்கு வெட்கமா இல்லை???ஆமாம் இப்படி ஒரு பெண்ணை நிஜ வாழ்க்கையில ஏமாத்திட்டு வெளியே ஹீரோன்னு சொல்லிட்டு இருக்க?? உன்னை பார்க்கவே அருவருப்பா இருக்கு ".. என்க

"ஓ இந்த ஹீரோ நடிச்ச படத்தை விடாமல் கைதட்டி ரசிச்சு பார்த்தன்னு சொன்னாங்க என்ன டி என்னை ரசிச்சு பார்த்தது எல்லாம் மறந்துடுச்சா இப்போ நானா உன்கிட்ட வந்தா உனக்கு என்ன இளக்காரமா??..."... என்று கூறியவன் அவளது கையை பிடித்து தன்னை நோக்கி இழுக்க அவன் இழுத்த விசையில் அவள் அவன் மீதே விழ அவளோ முகத்தை சுழித்தாள்..

அதை கண்டவனுக்கு மேலும் எரிச்சலை கொடுக்க, " அப்போ கொஞ்சம் கூட அருவருப்பு பட்டுக்கோ தாலி கட்டினத கொண்டாட வேண்டாமா".. என்றவன் அவளது முகத்தை அவனது ஒரு விரலால் தூக்கியவனின் கைகள் அவள் இடையை இறுக்கமாக வளைத்து பிடிக்க, அவளோ, " சீ என்னை விடு உன்னை பார்த்தாலே எனக்கு பிடிக்கல ".. என்று துள்ள

"அதை பத்தி எனக்கு கவலை இல்லை டி என் பொண்டாட்டி "...என கூறியவன் அவள் முகத்தை தீர்க்கமாக பார்க்க திருமணத்திற்காக ஆசையாக போடப்பட்ட அலங்காரம் களைந்து போய் இருக்க அப்போதும் அவன் கண்ணுக்கு அழகியாய் அவள் மின்னி கொண்டிருக்க, அதை பார்த்தவன் கண்களும் உதடும் மேலும் முன்னேறி செல் என்பது போல அவனிடம் அறிவுரை கூற மேலும் உன்னை பிடிக்கவில்லை அருவருப்பா இருக்கு என்ற வார்த்தை அவனை உசுப்பி விட அவன் கை தானாக அவள் இடையில் அழுத்தம் கொடுக்க அடுத்த நொடி சற்றும் யோசிக்காமல் அவளின் அதரங்களை தீண்டினான்..

அவனது தடித்த பருத்த உதடு அவளது மெல்லிய சிவந்த அதரங்களை அவளுடைய அனுமதி இல்லாமல் தீண்டி கொண்டு இருக்க அவள் முயன்றும் அவனிடமிருந்து விலக முடியவில்லை அவனோ விடாகண்டன் போலும் அவள் உதட்டை விடாமல் சுவைக்க அவள் திணறி தான் போனாள்...

இறுதியில் அவள் மூச்சுக்காக பாடுபட்டவளை விட்டவன் ஆத்திரமும் எரிச்சலும் கலந்த குரலில், " என்னை என்ன செய்வதா உத்தேசம் ?? பழி வாங்கவா ??? "..

அவளை தீர்க்கமாக பார்த்தவன், " அப்படி தான்னு வைச்சிக்கோ"... என்று கூற

"நான் மிஹுவை கல்யாணம் பண்ணிக்க போறேன் நாங்க காதலிச்சது தெரிஞ்சும் நீ என்னை இப்படி செய்து இருக்க அப்படினா உன்னுள்ள பழி வெறி தானே ??"... என்றாள் அவளும் விடாமல்,

"என்ன மிஹூவா ஆமாம் டி அவன் பேரை சொல்லும் போது தான் டி வெறியே வருது... நீ சும்மா இருந்தா கூட உன்னை விட்டு இருப்பேன் ஆனால் அவன் கூட சுத்தும் போது தான் டி உன்னை இழுத்திட்டு வரணும்னு தோணுது இதோ இழுத்திட்டு வந்துட்டேன்".. என்று கூற

"நான் மறுபடியும் அவன் கூட போனா என்ன செய்வ?? இதோ இப்போவே போறேன் என்னோட பேமிலி எல்லோரும் வெளியே தான் இருக்காங்க உன்னை அசிங்கப்படுத்த போறாங்க பார்".."...என்க

அவனோ," அப்படியா...ஒன்னும் செய்ய தேவையே இல்லை நீயே பார் ".. என்று கூறியவன் அவளை இழுத்து கொண்டு அந்த அறையின் ஜன்னல் அருகே சென்று அங்கே உள்ள திரை சீலைகளை விலக்கி காட்ட அங்கே நிதிஷ் மற்றும் உபேந்திரா இருவரும் சேர்ந்து ஊடத்திற்கு பேட்டி கொடுத்து கொண்டு இருந்தனர்..

"ஹிமானிக்கு ஆர்யா மேல காதல் எங்ககிட்ட சொல்லவே இல்லை பரவாயில்லை இந்த விஷயத்தை கேட்டு மிஹ்ரான் கூட விலகிட்டார் நாங்க தான் சின்னவங்க மனசை புரிஞ்சிகல"... என்று கூற

"அப்போ மிஹ்ரான் அண்ட் ஹிமானி பல வருசமா டேட்டிங் பண்ணிட்டு இருந்தாங்களே??"... என்று ஒருவர் கேட்க,

"என்னங்க டேட்டிங் கசின்ஸ் இரண்டு பேர் வெளியே போனா அதுக்கு பேர் டேட்டிங் ஆஹ் நீங்களா ஏதாவது எழுதினா அதுக்கு நாங்க எப்படி பொறுப்பாக முடியும் ??"..என்று நிதிஷ் காட்டமாக கூற,

அதை கேட்ட கூட்டத்தில் ஒருவரோ, " ஆமாம் ஹிமானி அண்ட் ஆர்யா சார் இரண்டு பேரும் மாலத்தீவுல சேர்ந்து இருந்த போட்டோ தான் வோர்ல்டு வைரல் ஆச்சே"... என்று கூற அது தான் என்பது போல குடும்பமும் அங்கிகரித்து கூற அதை கேட்ட ஹிமானி அதிர்ந்தாள்... என்ன இது இத்தனை நேரம் இவனை எதிர்த்து கொண்டு இருந்தவர்கள் இப்போது அப்படியே தலை கீழாக இருக்கிறார்களே என அவள் யோசிக்க அவனோ அவளது செவியில் , "என்ன இப்போ என்ன செய்ய போற?? எல்லாம் சரி தானே என்னுடைய காதலியே" ...என்க

அதை கேட்டவளோ அதிர்ந்து இவன் எமபாதகன் என்பதை உணர்ந்து தேவையில்லாமல் புலி வாலை பிடித்து விட்டோமோ என அதிர்ந்தாலும், "உன்கிட்ட நான் இதை எதிர் பார்க்கல?? நல்ல பாம்பு போல இருந்த உன்னை நம்பினேன் ஆனால் நீ விஷ பாம்பு"... என்று கூறியவளை பார்த்து தன் மீசையை முறுக்கி விட்டு அதை உண்மை போல ஏற்று இலேசாக சிரித்தவன், " இப்போ போட்டு இருக்கிறதை எல்லாம் அவிழ்த்திட்டு அதோ அந்த கபோர்ட்ல இருக்கிற ட்ரெஸ்ஸை போட்டுட்டு வா "... என்று என்று அதிர்ச்சியில் உறைந்த அவளது முகத்தை பார்த்து சிரித்தபடி கூறியவன் அவளுடைய இதழ்களை அவனது ஒற்றை விரலால் தீண்டி விட்டு செல்ல முனைய இங்கே என்ன நடக்கிறது என புரியாமல் அவள் முழிக்க , "இரண்டு நிமிசத்தில் தயாராகி நீ வரலனா நான் உனக்கு உடுத்தி தர வேண்டி இருக்கும்"... என்று மேலும் அவளுக்கு பீதியை கிளப்பி விட்டு கொண்டே அவன் செல்ல அவளோ அதிர்ச்சியில் உறைந்து இருந்தாலும் அவளது கைகள் வேகமாக உடைகளை மாற்றி கீழே வர ஆர்யனோ அங்கே காத்திருந்தான் அதிர்ந்த விழிகளோடு இங்கே என்ன நடக்கிறது என புரியாமல் திருவிழாவில் தொலைந்த குழந்தை போல மலங்க விழித்து கொண்டு வந்தவளை பார்த்து அவளது இடையை வலுக்கட்டாயமாக பிடித்தவன் அவள் செவியில், " நீ என் காதலின்னு உன் அப்பா சொல்லி இருக்கார் அப்போ அது போல நடி டி என் பொண்டாட்டி".. என்று கூறியவன் அவளை அழைத்து கொண்டு அந்த திருமணத்திற்கு போடப்பட்ட செட்டிற்கு சென்றான்...

ஸ்வரம் இசைக்கும்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top