ஸ்வரம் 29
ஸ்வரம் : 29
தன் மகன் இந்த திருமண விஷயத்தில் விருப்பம் இல்லை என்று கூறினாலும் உத்ரகேஷ் மனதில் இருவரும் கணவன் மனைவி தானே என்ற எண்ணம் இருந்தது..அன்று ஏதோ திருமணத்தை நடத்தி இருந்தாலும் ஏதேதோ சொல்லி பாயலின் மனதை மாற்றி இருந்தாலும் இவர்கள் இருவரும் தான் பெரியவர்கள் ஆனாலும் இணைய வேண்டும் என அன்றே முடிவு செய்திருக்க, ஆனால் தன் மகனிடம் இதை எல்லாம் கூற முடியாத நிலையில் அல்லவா அவர் இருந்தார்..
அதனால் அவர் கூறவில்லை எனினும் நிதிஷ் சம்மதிக்காவிட்டால் என்ன விஷயத்தை ஆர்யா மற்றும் ஹிமானியிடம் கூறிவிடலாம் என எண்ணினார் ஆனால் ஆர்யா மனதில் இந்த விஷயம் ஆழமான வேராக பதிந்து இருக்கிறது என்பதை அவர் அந்நேரம் அறியவில்லை அதனால் அவரும் தன் பேரப்பிள்ளைகளை காண லண்டன் சென்றார் உத்ரகேஷ்..
அவருக்கு ஹிமானி என்றால் ஒரு கண் மற்றொரு கண் ஆர்யா இருவரையும் இணைத்து பார்க்க வேண்டும் என அவருக்கு ஆசையாக இருக்க அதை செயலாற்றும் விதத்தில் அவர் செல்ல அங்கு அவனது முதல் ஷெட்யூல் முடிந்து இருநாட்கள் பிரேக் ஆக இருந்தது அதனால் அவன் அவனது அறையில் தான் இருந்தான் அந்த நேரம் பார்த்து அவனது தாத்தா அவனது அறையில் வெளியே வந்து இருக்கவும் இவனோ அவரை பார்த்ததும் அதிர்ச்சியாகி, " நீங்க எப்படி இங்க வந்தீங்க??" என அதிர்ச்சியாகி தாத்தாவை வரவேற்று அமர வைத்தான்..
அவர் பின்னாலேயே ஹிமானியும் உள்ளே நுழைய ஹிமானியை பார்த்ததும் அவன் முறைக்க அவளோ, " இப்படித்தான் தாத்தா என்னை பார்த்தா முறைச்சுட்டு இருக்கான் நான் என்ன பண்ண சொல்லுங்க??" என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவள் கேட்க, தாத்தாவிற்கு சிரிப்பு வந்தது அவளது முக பாவனையை கண்டு ஆர்யாவுக்கும் மில்லிமீட்டர் சிரிப்பு வந்தது என்ற சந்தேகம் அவளுக்கு தோன்றாமல் இல்லை..
சிரிக்கும் தன் தாத்தாவிடம் , "இவன் மட்டும் ஏன் இப்படியே இருக்கான் அழகா இருக்கான் ஆனால் கடவுள் அறிவை மட்டும் கம்மியா படைத்திட்டார் போல எப்ப பார்த்தாலும் சிரிக்கவே மாட்டேங்குறான் முரட்டுதனமா இருக்கான் அதே ஸ்கிரீன்ல பாருங்க எப்படி ரொமான்ஸ் பன்றான்னு ஆனால் இரண்டு நாள் முன்ன என்னோட கையை முறுக்கிட்டான் தாத்தா" என்று அவள் மனதில் உள்ளதை வாய் வழியாகவே அவள் புலம்பிய படி கூற,
அதைக் கேட்ட தாத்தா சிரிக்க அவனோ, " உனக்கு விவஸ்தையே இல்லையா " என கேட்டான் தன் தாத்தா முன் என்ன கேள்வி கேட்டு விட்டாள் என மீண்டும் அவளைப் பார்த்து முறைக்க, " நான் சொன்னேன்ல இதோ பாருங்க முறைக்கிறான் அப்படி நான் என்ன சொல்லிட்டேன்னு முறைக்கிறான் கேளுங்க தாத்தா இவனை தனியா பார்த்து திட்டணும்னு தான் நான் இருந்தேன் தனியா வந்தா அடிப்பான்னு தான் அமைதியா இருக்கேன் இப்போ தான் நீங்க இருக்கீங்களே அதான் நான் இப்படி பேசுறேன் இவனை என்ன கேட்க யாருமே இல்லையா ?? எதுக்கு இவன் எல்லோர்கிட்டே இருந்தும் ஒதுங்கி இருக்கணும் யாரும் இல்லாத மாதிரி "என்று அவள் அவனிடம் உரிமையாக பேச அவனுக்கு அது மிகவும் பிடித்து இருந்தது ..
மேலும் அவன் அவனுடைய வாழ்க்கை பாதையை எண்ணித்தான் பலரிடமும் ஒட்டாமல் அவன் போக்கில் இருக்கிறான் அதில் இவள் வலிய வந்து பேசவும் ஏதோ ஒரு இதம் அவனுக்கு பரவாமல் இல்லை ஹிமானியும் சுட்டிப்பெண் அவளிடம் யாரும் பேசவில்லை என்றாலும் அவளாகவே பேசி கலகலப்பாக அந்த இடத்தை ஆகிவிடுவாள்..
அதனால் தன்னிடம் பேசவில்லை என முறைத்துக் கொண்டு இருக்கும் ரகமும் அல்ல வலிய வந்து பேசும் ரகம் அப்படி இவனிடம் பேச இவனுக்கும் அவளை பிடித்திருந்தது ..
பிறகு தாத்தா எண்ணுவது போல பழைய விஷயங்கள் ஒன்றும் அவனுக்கு நினைவில்லாமல் இல்லையே இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும் என்று தானே அவன் ஒதுங்கி இருக்கிறான்..
அவள் வலிய வந்து பேசுவும் அவனுக்கு அவளை வாழ்நாள் முழுவதும் விடக்கூடாது என்ற எண்ணம் தானே தோன்றி கொண்டிருக்கிறது அதிலிருந்தும் அவளிடம் இருந்தும் விலகுவதற்கு தானே அவன் அவளை கண்டதும் விலகி கொண்டிருக்கிறான்..
இவன் இப்படி நினைக்கிற கூறி விட வேண்டும் என நினைக்கும் பெரியவரும் இவர்கள் நினைப்பது எதுவும் தெரியாமல் இவன் மீது ஒரு ஆசை காதல் என்று கூறிவிட முடியாது அவனை அவள் ரசிக்கிறாள் அணுஅணுவாய் ரசிக்கிறாள் என்ன அவள் மனதில் இந்த நொடி தோன்றுகிறது என அவளுக்கு சொல்ல தெரியவில்லை என்றாலும் அந்த ரசனையை வைத்துக்கொண்டு அவனோடு பழக முயற்சி செய்து கொண்டிருக்க இதையெல்லாம் கவனித்த தாத்தா அவளிடம் , "உன்ன ரொம்ப மிரட்டறானா அப்போ சொல்லிடு டேய் புருஷா என்னை ரொம்ப மிரட்டாத கூடிய சீக்கிரம் உன் வீட்டுக்கு நான் வந்து விடுவேன்னு சொல்லு அடேய் மடையா நீ எனக்கு எப்பவோ புருஷனா ஆகிட்ட உனக்கும் எனக்கும் எப்போவோ கல்யாணம் ஆகிடுச்சு நான் வளரட்டும்ன்னு என்னோட தாத்தா இதை வெளியில் சொல்லாமல் வச்சிருந்தாரு இப்போ நான் உன் கூட சேரனும் உன் கூட வாழனும் ஆசைப்படுகிறேன்னு சொல்லு அவன்கிட்ட" என்று தன் மனதில் உள்ளதை பேத்தியிடம் கூறுவதுபோல இருவரிடமும் கூற அவர் கூறுவதை கேட்டு இருவரும் அதிர்ந்தனர் ஆர்யா ஒருவிதத்தில் அதிர்ந்தான் எனில் விஷயமே தெரியாதா ஹிமானி வேறுவிதத்தில் அதிர்ந்தாள்...
"என்ன தாத்தா சொல்றீங்க??" என அவள் அதிர ஆர்யாவும் தாத்தா, "சும்மா இருக்க மாட்டீங்களா???" என்று கண்டிக்க, " நான் சொல்வது உண்மைதான் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு" என்று அனைத்தையும் ஒன்று விடாமல் கூறியவர்," இப்போ நீங்க ரெண்டு பேரும் வளர்ந்து இருக்கீங்க உங்ககிட்ட என்னால சொல்லாம இருக்க முடியல அதனால தான் நான் சொல்றேன் இப்போ நீங்க ரெண்டு பேரும் கணவன் மனைவியா தான் இருக்கீங்க என்னை பொறுத்தவரை என் கண்ணுக்கு அப்படி தான் இருக்கு இருக்கீங்க சிறுவயதில் திருமணம் ஆகியிருந்தாலும் அப்போ உங்களுக்கு புரியாத வயசுல நடந்த இந்த விஷயத்தை நான் உங்ககிட்ட இப்போ சொல்றேன்..
இனி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்வதும் வாழ்வதும் உங்க விருப்பம் ஆனா எனக்கு நீங்க ரெண்டு பேரும் சேரனும் தான் ஆசை" என்று கூற அதைக்கேட்ட அவள் அதிர்ந்தாள்
"தாத்தா "என்று அவள் கூற ஆர்யாவும் சட்டென்று அவள் அதிர்வை பார்த்தவனுக்கு இதை எதுக்கு இப்போ சொன்னார் தாத்தா என எண்ணி, " தாத்தா நான் அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை" என்று பொய் கூற அதைக்கேட்டு உத்ரகேஷ் மனமுடைந்தார் ..
அவருக்கு அவனது பதிலில் கலக்கம் ஏற்பட ஷிமானி மட்டும் அவளது தாத்தா வருத்தப்படுவதை பார்த்து, " எப்ப பார்த்தாலும் இப்படி சட்டு சட்டுன்னு தான் பேசுவியா தாத்தா பார் எப்படி வருத்தப்பட்டு இருக்காங்கன்னு" என்று கூற,
அதைக் கேட்ட அவனோ , "உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு நான் என்ன செய்கிறேன் என்ன செய்யலாம்ன்னு எனக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்காத" என்று கூற,
அதைக்கேட்ட அவளோ முறுக்கிக்கொண்டு , "தாத்தா உங்களுக்கு என்ன நான் இவன் கூட இருக்கணும் அவ்வளவுதானே நான் இவன் கூட தான் இருப்பேன் இவன் என்ன பண்றான் நானும் பார்க்கிறேன் ரொம்ப பண்றான் இவன் ஒவ்வொரு பொண்ணுங்களும் கட்டிப்பிடிச்சு கிஸ் பண்றான் கேட்டா ஆக்டிங்ன்னு சொல்றான் இவனை நான் சும்மா விடமாட்டேன் ஆனாலும் சின்ன வயசுல கல்யாணம் பண்ணி வச்சது இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் தாத்தா சாக்லேட் கொடுத்து ஏமாத்திட்டீங்க அப்படித்தானே " என்று அவள் விளையாட்டு போல கூறினாலும் பெரியவர் விஷயத்தை எல்லாம் கூற அதைக் கேட்ட அவளோ வருத்தப்பட்டு, " சாரி தாத்தா நான் தெரியாம சொல்லிட்டேன் எனக்கு இவன் ஓகே தான் அவனுக்கு என்னோட மூஞ்சி போதும் தாத்தா நீங்க கவலைபடாதீங்க" என்று கூறினாள்
இருவருக்கும் திருமணம் ஆனது அதிர்ச்சி தான் என்றாலும் அவளுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் மகிழ்ச்சி எட்டிப்பார்த்தது என்னவோ உண்மைதான் இவள்தான் இவன் மீது பைத்தியமாக இருக்கிறாளே..அதை அவளுக்கு தான் சொல்ல தெரியவில்லையே..
இவனோ யாரையுமே அண்ட விடாமல் இருக்க போய் தானே விலகி இருக்கிறாள் அதனால் தாத்தா இந்த விஷயத்தை கூறியது முதல் அவனை இவளை விட்டு விலகி செய்ய முனைந்தாலும் அவள் தொல்லை செய்ய வந்து விடுவாள்..
ஆனால் தாத்தா கொண்டதற்கிணங்க அவளது வீட்டில் மட்டும் அவள் இந்த விஷயத்தை கூறவே இல்லை இப்படி ஆர்யாவும் இந்த விஷயங்களை எல்லாம் மறக்கவே இல்லையே அவனுக்கும் அவள் மீது சிறு விருப்பம் இருக்க இவளது தொல்லைகள் நாளடைவில் காதலாக மாறியது ஆர்யாவுக்கு..
அப்போது ஹிமானிக்கு 18 வயதும் ஆர்யாவுக்கு இருபத்தி மூன்று வயதும் இருக்க அப்பொழுது இருந்த காதலிக்கத் தொடங்கினர் உள்ளுக்குள் கணவன் மனைவி என்ற எண்ணம் இருவருக்கும் இருந்ததாலும் இருவரும் அந்த லண்டனை சுற்றி வந்தனர்..
கிட்டத்தட்ட பல போட்டோக்களை எடுத்து குவிக்க இவன் மீது மையல் கொண்டுள்ள அவளும் இவனை தொங்கிக் கொண்டே இருந்தாள் இப்படி நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அந்த லண்டனில் அவள் இருந்த மூன்று வாரமும் அருமையான நாட்களாக இருவருக்கும் அமைய காதலில் முத்து எடுத்து கொண்டிருக்கும் போதுதான் அவள் இங்கே வந்த நடன நிகழ்ச்சியும் அரங்கேற அது முடிந்ததும் அவள் வந்த குழு இந்தியா புறப்பட தயாரானது..
இதற்கு மேல் அவளால் இங்கே இருக்க முடியாத நிலை ஏற்பட கனத்த மனதுடன் இருவரும் விடைபெற்றனர் ஆர்யாவுக்கு இன்னும் அவனது ஷூட்டிங் நிறைவேறாத காரணத்தினால் அவன் அங்கு தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது அதனால் அவளிடம், " இன்னும் பத்து நாள்ல வந்துடுவேன் நீ தைரியமா போ நீ எனக்கு தான் எனக்கு மட்டும் தான் இனி உன் அப்பாவை வந்தாலும் நம்மள பிரிக்க முடியாது உன்னோட படிப்பு முடிஞ்சதும் நாம கல்யாணம் பண்ணிக்கலாம் ஆல்ரெடி கல்யாணம் பண்ணிகிட்டோம் இருந்தாலும் நம்ம ஆசைக்காக ஒருமுறை கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று கூற
"ஆனா அம்மா அப்பா ஒத்து கொள்வார்களா தெரியல பார்க்கலாம் எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு அப்பாக்கு தான் உன்ன சுத்தமா பிடிக்கல நீ எல்லோர் கூடவும் இயல்பா பேசி இருக்கலாம் ஏன் இப்படி முறைச்சிட்டு இருக்க" என்று அவள் குறைபட ,
"உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு எல்லாம் என்னால பேசிக்க முடியாது" என்று கூற ,
அதைக் கேட்ட அவளோ , "உன்னை திருத்த முடியாது ஆனா நம்ம கல்யாணத்துல நம்ம சொந்தகாரங்க எல்லாரும் இருக்கணும் உன் அப்பா என் அப்பா எல்லாரும் இருக்கணும்" என்று கூற அவனும் சிரித்த முகத்துடன் சரி என்று ஒப்புக் கொண்டு அவளை வழி அனுப்பி வைத்தான் ..ஆனால் இனி அவளை பார்க்கும் போது அவள் நிலையை அவன் எண்ணி இருந்தால் இப்போது அவன் அவளை அனுப்பி வைத்திருக்க மாட்டானோ???
ஸ்வரம் இசைக்கும்..
