ஸ்வரம் 28
ஸ்வரம் : 28
ஒரு கட்டத்தில் தன் பொறுமை இழந்த அவன் அவள் புறம் திரும்பி, "என்கூட வா " என்று மட்டும் கூற அவளோ என்ன கூப்பிடறான் என்று யோசித்தாலும் என்ன இவன் அதிகாரமா என்னை கூப்பிடறான் என்று நினைக்கவும் தவறவில்லை..
அவளோ காதிலேயே விழாதது போல அந்த இயக்குனரிடம் பேசிக்கொண்டிருக்க பொறுமை இழந்த அவன் அவளது கைகளை பிடித்து தரதரவென அவளை இழுத்து சென்றான் அவன் நேராக சென்றது அவனுடைய கேரவனுக்குள் உள்ளே சென்றதும் கதவை அடைத்தவன் மார்பில் கையை கட்டி நிற்க, " அவளோ எதுக்கு இப்படி பிஹேவ் பண்ணுற அவங்க என்னை என்னன்னு நினைப்பாங்க??" என்று எகிறினாள்..
அதற்கு , "அவங்க என்ன நெனச்ச எனக்கு என்ன??? எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை நீ என்ன நெனச்சிட்டு இருக்க அதுதான் என்னுடைய கேள்வி??" என்று கூற,
அதைக் கேட்ட அவளோ , "நான் என்ன நினைக்க இருக்கு எதுக்கு நீ இப்ப என்னோட கைய பிடிச்சி இழுத்துட்டு வந்த அத முதல்ல சொல்லு நீ தான் பெரிய இவனா ஆச்சே எங்க யார் கூடவும் பேச மாட்டே எங்களை பார்த்தாலும் பார்க்காத மாதிரி போவ மாமா கூட பேச மாட்ட டாடி கூட பேச மாட்ட என்கிட்ட மட்டும் பேசலாமா??" என்று அவள் அவனை பிடித்து இருந்தாலும் அருகில் அவனை கண்ட பிரம்மிப்பு இருந்தாலும் அவனிடம் காட்டி கொள்ளாமல் கேட்க
அவள் கூறியதற்கு எதற்கும் பதில் அளிக்காமல், " நீ எதுக்காக இங்க வந்திருக்க??" என்று மட்டும் கேட்டான் அவளோ நான் கேட்டதுக்கு பதில் சொல்றான்னா பாரு அவனுக்கு மட்டும் நான் பதில் சொல்லனுமா என்ன முகத்தை திருப்பி வைத்துக் கொள்ள அவனும் அதை கவனித்துக் கொள்ளாமல், " கூட வேற யாராவது வந்திருக்காங்களா??" என கேட்டான்..
அப்பொழுதும் அவள் பதில் அளிக்காமல் இருக்க அவளருகே ஒரு அடி நெருங்கி நின்ற ஆர்யா அவளது கையை பிடித்து முறுக்க வலியால் துடித்தாள்..
"என்னை விட்டு என்னை விடு ரொம்ப வலிக்குது நான் அப்பா கிட்ட சொல்லிடுவேன் தாத்தாக்கு இப்பவே கால் பண்றேன் பாரு" என்று கூற,
" நான் கேட்டதுக்கு பதில் சொல்லு" என்று மட்டும் கூறினான்..
"இல்ல நான் மட்டும் தான் வந்திருக்கேன் நான் ஒரு டான்ஸ் புரோகிராம்காக வந்தேன்" என்று கூற,
அதைக் கேட்ட அவனும் அவளது கைகளை விட்டவன் , "ஏண்டி வந்தது தான் வந்த ஒழுக்கமான ட்ரெஸ் பண்ணிட்டு வர மாட்டியா?? என்ன டிரஸ் இது?? "என்று அவளை பார்த்து வினவ
"என்ன குறைச்சல் என் ட்ரெஸ்க்கு நீயே இப்படி பேசலாமா இப்ப நீ கூட தான் ஒரு பொண்ணுகிட்ட நடிச்சுட்டு வந்த அவ போட்டிருக்கிறது விட நான் கொஞ்சம் அதிகமாகத்தான் போட்டிருக்கேன்" என்று கூற அதைக்கேட்ட அவனும் அவளருகே வந்து , "அதுக்கு பதில் அது கிடையாது" என்று கூற
"வேற என்ன பதில்?? உனக்கு நான் என்ன ட்ரெஸ் பண்ணினா என்ன??"
அதை கேட்டவனின் முகம் மாற, "நீ போட்டிருக்கிறது இந்த மினி ஸ்கர்ட் நீ அவர் முன்னாடி சாதாரணமா உட்கார்ந்த அப்படினாலே எல்லாமே தெரியும் அதுல நீ கால் மேல கால் போட்டு உட்கார்ந்து பேசிட்டு இருக்க இடியட் இதெல்லாம் சொல்லி தான் புரியனுமா??" என்று கூற அப்பொழுதுதான் அவளுக்கு தெளிவாக விளங்கியது அவன் எதற்காக அவளை அழைத்து வந்தான் என, " கொஞ்சம் டீசண்டா உக்கார்ந்து இருக்க வேண்டியது தானே??" என்று கூற அவளோ தலையை சொறிந்து கொண்டு , "சாரி' என்று கண்களை சுருக்கிக்கொண்டு அவனிடம் கூற அப்பொழுது அதுவரை ஏறியிருந்த அவனது கோபம் மெல்ல இறங்கியது..
அவனுக்கு அவள் அந்த உடை அணிந்தது பிரச்சினையில்லை ஆனால் இடம் பொருள் ஏவல் பார்த்து அவள் அமராமல் அவளது அங்கங்களை காட்டி கொண்டதுபோல் அமர்ந்தது தான் அவனுக்கு பிரச்சினையாக இருக்க அதைத்தான் அவளை கண்டது முதல் கவனித்து வந்தவன் அந்த டைரக்டரிடம் பேச விடாமல் அவளை அழைத்து வந்தான் அதற்குள் உத்ரகேஷ் அவனை அழைத்திருந்தார் ..
அவனும் இவள் இருக்கிறாள் என்ற அறிவில்லாமல் வேகமாக அந்த வீடியோ கால் ஆன் செய்ய உத்ரகேஷ், " என்னப்பா ஷாட் எல்லாம் முடிஞ்சதா எப்போ இந்தியா வர??" என்று கேட்க,
" தாத்தா ஒரு பத்து நாள் எடுக்கும் போல ஷெட்யூல் மாத்தி எடுக்கிறாங்க" என்று கூற அவர் அப்பொழுதுதான் கவனித்தார் பின்னால் ஒருத்தி இருக்கிறாள் என்று , "உன் பின்னாடி யாரு??" என்று வினவ
"யாரும் இல்ல நான் தான் தாத்தா" என ஹிமானி அவனுக்கு முன்னால் முந்தி கொண்டு பதில் கூறவும் தாத்தா இருவரையும் சந்தேகமாக பார்க்க ஆர்யாவை தலையிலடித்துக் கொண்டான்..
இவளை இப்படி நான் மறந்தேன் என எண்ணிக்கொண்டான் ஏனெனில் ஊருக்கே தெரியுமே இவன் யாரிடமும் பேச மாட்டான் என்பது இப்போது இவளை அழைத்து வைத்திருப்பதை அவர் பார்த்து விட்டாரே என அவன் எண்ணிக் கொண்டிருக்க தாத்தாவோ அவர்கள் இருவரையும் தீர்க்கமாக பார்க்க என்ன நினைத்தாரோ, " சரி நீங்க பேசிட்டு இருங்க நான் அப்புறம் கால் பண்றேன் அவளை பத்திரமா பார்த்துக்கோ ஆர்யா நீ அங்கே இருக்கிறதும் இந்த சமயம் நல்லது தான்"என்று கூறி போனை வைத்து விட்டார்
அவர் ஒரு முக்கியமான விஷயத்தை கூறுவதற்காக தான் அழைத்திருந்தார் தனது பேரப் பிள்ளையை ஆனால் அதை சொல்லாமல் போனை வைத்து விட்டார் ஆம் அவருக்கு ஏதோ நேற்று இரவு ஒரே படபடப்பாக இருக்க அதை அவனிடம் கூறத்தான் அழைத்திருக்க அவர்கள் இருவரையும் பார்க்கவும் அவருக்கு என்னவோ தோன்றியது அதாவது அவர்களின் பால்ய விவாகம் பற்றி அவர்களிடம் கூறி விடுவோமா என்று கூட எண்ணினார்..
ஏனெனில் அவருடைய மனதிலும் அது தான் இருந்தது தனது நண்பன் இறந்ததும் அவருக்கும் யாருமே இல்லாமல் இருப்பது போல இருந்தாலும் ஆர்யா அவருடன் இருப்பது அவருக்கு துணையாக தான் இருந்தது ஆனால் அவனும் வளர்ந்துவரும் நடிகன் என்பதால் அவன் எப்பொழுதும் பிஸியாக இருக்க இவருக்குப் பிறகு இந்த பையன் எப்படி இருப்பான் என்ற கவலையும் அதிகரித்தது மேலும் அவருக்கும் ஹிமானியை திருமணம் செய்து வைத்தால் என்ன என்று தான் அவர் நினைக்க நிதிஷிடம் கூற,
ஒருமுறை இதைப் பற்றி பேசி இருந்தார்..
ஆனால் நிதிஷோ , " அவன் நம்மளை எல்லாம் மதிக்கவே மாட்டேங்குறான் மாமா..எதுக்காக இப்படி ஒரு கல்யாணத்தை செய்து வைக்கணும் அதுக்குத்தான் மிஹ்ரான் இருக்கானே அதுமட்டுமில்லாம அவளுக்கு பதினெட்டு வயசு தான் ஆகுது இப்ப போயி கல்யாணம் காதுகுத்துன்னு நிக்கனுமா மேலும் எனக்கு ஆர்யாவுக்கு என் பொண்ணு கொடுக்கிறதில்லை சுத்தமா விருப்பமே இல்லை" என்று கூறிவிட்டார் .. அதை கேட்ட உத்ரகேஷ் தான் அதிர்ந்தார்..
மாமனார் மீது மரியாதை வைத்திருப்பவர் தான் மகளுக்கும் சுதந்திரம் கொடுத்து வளர்த்தவர் தான் இருந்தாலும் ஆர்யாவின் குணம் அவருக்கு பிடிக்காததால் அவர் மறுக்க உத்ரகேஷுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை..
ஸ்வரம் இசைக்கும்..
