ஸ்வரம் 27

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  

ஸ்வரம் : 27

"என்ன சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியல?? என்று வினவ , 'உனக்கு எது தான் புரிஞ்சிருக்கு??" என்று குறைப்பட்டான் ஆர்யா ...யாரை காதலித்து இருக்கிறோம் என்பதையே மறந்து இருக்கும் இவளை என்னவென்று சொல்வது அது தான் அவனது கோபமே..

அவளுக்கு சத்தியமாக இந்த படங்கள் எடுத்தது நினைவில்லை அது இவள் தானா என்று தான் அவள் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்க அதை கவனித்த அவன் , "அதில் இருக்கிறது நீயும் நானும் தான் சந்தேகம் வேண்டாம் "என்று கூறினான்..

அதைக்கேட்ட அவளோ , "எப்படி நீயும் நானுமா அப்போ நீயும் நானும் காதலர்களா என்னால நீ சொல்றதை நம்ப முடியல "என்று சந்தேகமாக கூற அவனோ ஒரு கசப்பான சிரிப்பை அவளுக்கு பதிலாக கொடுத்தான்..

" அப்போ நான் சொல்ல போறதை மட்டும் நீ நம்பவா போற?? " என்க

"ப்ளீஸ் சொல்லு சொல்லாமல் இருக்காதே எனக்கு தெரிஞ்சே ஆகனும் " என்க

"ஆமா நீ என்னை காதலிச்சன்னு சொன்னா உன்னால நம்ப முடியுமா??" என்று கூற அவளுக்கு தலை சுற்றுவது போல இருந்தது ..

அவள் காதலித்தது தருணை தானே என அவள் முழிக்க அவனோ, " நீ இப்போ காதலிச்சவன்னு சொல்லிட்டு ஒரு டிராமா பண்ணிட்டு இருந்தீயே அவன் எல்லாம் கிடையாது நான் சொல்றது என்னை" என்று அழுத்தமாக கூறினான் கிட்டத்தட்ட அவள் மனதில் அதை பதிய வைக்க நினைத்தான்..இந்த விஷயத்தை பற்றி அவளாக அறிந்து அவனிடம் கேட்டால் மட்டுமே கூற வேண்டும் என என்றோ நினைத்து இருந்தான் அது இன்று தான் நடந்தது..

அவளோ தலையை ஆட்டி இல்லை என்பது போல ஆட்டினாள் அதைப் பார்த்தவன் மேலும் எரிச்சலான சிரிப்பை தான் உதிர்த்து,

"இல்லைன்னாலும் உன் தலையை ஆமாம் போல ஆட்டு அதுதான் உண்மை நீ காதலிச்சது என்னை தான் உனக்கு நாம ரெண்டு பேரும் கணவன் மனைவி என்று தெரியும் ஆறு வருஷத்துக்கு முன்னாடியே நான் உன்கிட்ட சொல்லிட்டேன் தாத்தா தான் உன்கிட்ட சொன்னார்" என்று கூற அதைக் கேட்ட அவள் மேலும் அதிர்ந்தாள் .. அவள் முகத்தை பார்த்து , "இன்னிக்கு நான் அவார்ட் வாங்கின மாதிரி ஏதாவது ஒன்னாவது நடக்கட்டும்" என்று கூறியவன் ஆறு வருடங்களுக்கு முன் நடந்த விஷயங்களை கூறலானான்...

ஆறு வருடங்களுக்கு முன்...

"லண்டன் போன வெக்கேஷன் தானே அங்க போனோம் இப்ப எதுக்கு அங்க போகணும்னு சொல்ற இப்போ தான் காலேஜ் சேர்ந்து இருக்க படிக்கணும்னு ஐடியா இருக்கா இல்லையா?? என்று நிதிஷ் கேட்க,

" டாடி எனக்கு அங்க ஒரு டான்ஸ் ப்ரோக்ராம் இருக்கு" என்று தலையை சொறிந்து கொண்டு கூறினாள் ஹிமானி அதை கண்ட அவர் , "ஓ இங்க பாரு ஹிமானி நம்ம ஃபேமிலிக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு நீ இப்படி அங்கே இங்கே டான்ஸ் ஆடுவது எனக்கு சுத்தமா பிடிக்கல" என்று கூற

"டாடி இதையே நீங்க எத்தனை தடவை தான் சொல்வீங்க எங்களுக்குன்னு எந்த ஒரு தனி திறமையும் கூடாதா பெரிய வீட்டில பிறந்திட்டா நாங்க என்ன ஷோகேஸ்ல இருக்கிற பொம்மை மாதிரி தான் வளரணுமா??' என்று கூற ,

" என்ன நீ என்னை எதிர்த்து பேசுவியா?? " என்று அவர் கேட்க அந்த சமயம் பார்த்து வந்த உத்ரகேஷ் விஷயத்தை கேள்விப்பட்டு அதிலும் சரியான நேரம் பார்த்து தனது பேர பிள்ளையான ஹிமானி தன் தாத்தாவிடம் ஒப்புதல் வாங்கி தர வர சொல்லி இருக்க உத்ரகேஷ் தன் மருமகனிடம் , "அவளை அனுப்பு இப்படியே பிடிச்சு வைக்காதே" என்று கூற தந்தை சொல்மீறாத மகனும் தன் மகளை அந்த நடன ஆசிரியர் உடன் அனுப்பி வைத்தார் லண்டனுக்கு..

அங்கு லண்டனில் உள்ள இந்திய சங்கத்தில் தான் அவர்களுடைய நடனம் அரங்கேறி இருக்க பலதடவை லண்டன் அவளுக்கு பரிச்சயமான ஒன்று தான் இப்பொழுது விட்டாலும் அவள் தனியாக சென்று வந்து விடுவாள் என்ற தைரியத்தால் மகளை தனியாக அனுப்பி வைத்தார் நிதிஷ்

18 வயது பெண்ணை தனியாக அனுப்புவதா என யாரும் அவரிடம் கேள்வி கேட்க முடியாது ஏனெனில் மகளுக்கு தேவையான சுதந்திரத்தை அவர் எப்போதே கொடுத்திருக்கிறார் அப்படி இருக்க தான் அவரது மாமனாரும் கூறிவிட பிறகு மறுபேச்சு அங்கு என்ன இருக்கப்போகிறது அப்படி அவளும் லண்டன் வர விழா இன்னும் ஒரு வாரத்தில் நடக்க இருக்கிறது அதற்கு முன்னே ஒத்திகைகள் நடந்து கொண்டிருந்தன அப்பொழுது அவளும் அந்த ஒத்திகைக்கு எல்லாம் சென்று வந்தவள் மாலையானதும் ஊர் சுற்ற கிளம்பி விடுவாள் ..அவளுக்கு தான் பழக்கப்பட்ட இடம் தானே

அப்படி செல்வது அவளுக்கு மிக விருப்பமான ஒன்று ஏனெனில் இந்தியாவில் அவள் எங்கு சென்றாலும் அவள் பின்னால் ஒரு கூட்டம் தேனீ போல ஒரு கூட்டம் மொய்த்துக் கொண்டே இருக்கும் ஆனால் இங்கே யாரும் அவள் பின்னால் வர மாட்டார்கள் அதனால் அவள் எப்படி வேண்டுமானாலும் சுற்றலாம் அந்த தைரியத்தில் அவள் சுற்றிக் கொண்டிருக்க அப்போது பார்த்து அங்கு ஏதோ ஒரு ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது..

பாடல் காட்சியை படமாக்கி கொண்டிருக்க நமது ஊர் போல ஆயிரக்கணக்கில் ஆட்கள் நின்று வேடிக்கை பார்க்க வில்லை என்றாலும் ஒரு சில ஆட்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அவளும் எதேச்சையாக பார்க்க அது ஆர்யாவின் படத்தின் பாடல் காட்சி படமாக்கி கொண்டிருந்தது

அதைக் கண்ட அவள் அப்படியே மெய்சிலிர்த்து போய் நின்றாள்.. ஏனெனில் அப்பொழுதுதான் ஆர்யா திரைத்துறைக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகியிருந்தது ஹிந்தி திரை உலகத்தின் ஹாட் சாக்லேட் பாய் என்றால் அது ஆர்யா தான் அப்படி எல்லா பெண்களும் அவன் மீது மையல் கொண்டிருக்க இவளும் அவர் மீது யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக கொண்டிருந்தாள்..

அவனை திரையில் பார்க்க அவளுக்கு அவ்வளவு பிடிக்கும் ஏனெனில் அவனைத்தான் அருகே வைத்து பார்க்க முடியாதே இத்தனைக்கும் மாமன் மகன் தான் இருந்தாலும் அவனருகே செல்லக்கூட யாரும் முயற்சி செய்தது இல்லையே..

மேலும் அவன் தான் அவர்களை எல்லாம் அவன் அருகே விட்டதும் இல்லையே என எண்ணியவளுக்கு அவனை ரொம்ப பிடிக்கும் அதனால் திரையில் அவனைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் அதிலும் அவனது ஒவ்வொரு அசைவையும் அவனது அழகையும் அவனது ஸ்டைலையும் ஏதோ ஒரு குக்கிராமத்தில் இருக்கும் கடைக்கோடி பெண் எப்படி ரசிப்பாளோ அதுபோன்ற ரசனை தான் அவளுக்கும் இருக்க, இப்படி அவள் பார்த்துக் கொண்டிருப்பதை அவன் அறிந்தாலும் கண்டுகொள்ளாமல் எப்போதும் இருப்பவனுக்கு இன்று அப்படி இருக்க முடியவில்லை இங்கே என்ன இவள் செய்கிறாள் என சுற்றுமுற்றும் பார்க்க அவளுடன் யாரும் இல்லை என்பது தெரிந்து விட்டு அமைதியாக செல்லத்தான் முனைந்தான்..

அதற்குள் அந்த சினிமாவின் டைரக்டர் அவளை கண்டுகொள்ள, " மேடம் நீங்களா வாங்க வாங்க!!???" என ஹிமானியை வரவேற்க அவளோ அதை எதிர்பார்க்கவில்லை , "ஐயோ இப்படி போய் மாட்டிக்கிட்டேனே " என எண்ணினாள்..

அந்த டைரக்டர் வேறு விடாமல் அழைக்க ஹிமானி மெல்ல அங்கு வந்தாள் அவனோ அவளை பார்த்தாலும் பார்க்காதது போல அவனுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துகொள்ள அந்த இயக்குனரோ அவளை விடாமல் அவனருகே அமர்த்தினார்..

ஏனெனில் அவர் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கும் ஒரு இயக்குனரான அவருக்கு இவரது குடும்ப ரகசியங்கள் பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆதலால் யாரோ கூறிய தகவலின் படி இருவரும் சொந்தம் தானே என எண்ணி அமரவைக்க கடுங்கோபத்தில் இருந்தான் அவன் ..

அவள் அருகே அமர்ந்ததும் அவனது சிவந்த முகம் மேலும் சிவக்க, " இவன் என்ன நான் பக்கத்துல உட்கார்ந்ததும் கோபப்படுகிறான் இவனுக்கு என்ன கோவமோ இப்படி வெளியே கோபம் இல்லாத மாதிரி நடிக்க கூட தெரியாதா??" என அவள் முனுமுனுக்க அதை அவன் கேட்டுவிட்டான்..

மேலும் அந்த இயக்குனரோ அவளிடம் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க அதற்கெல்லாம் அவள் பதில் அளித்துக் கொண்டே இருக்க இங்கே ஒருவன் எரிச்சலாகி இருந்தவன் எதற்காக இந்த அளவுக்கு கோபப்படுகிறான் என அருகில் உள்ளவளுக்கு விளங்கவில்லை..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top