ஸ்வரம் 26
ஸ்வரம் : 26
அவன் கேட்டதும் அவளுக்கு என்னமோ போல தோன்ற அவன் கூறியது உண்மை தானே இந்த ஒரு வார காலம் எதை பற்றியும் நான் நினைக்கவே இல்லையே என எண்ணியவள் அவனை பார்த்து மெல்லிய குரலில், "இந்த அது வந்து" என வார்த்தையை மென்று முழுங்க,
அவளது நிலையை அவன் உணர்ந்தாலும் அவனுள் அவள் மீது சிறு கோபம் இருந்தாலும் அதை இந்த நேரத்தில் வெளிப்படுத்தி கொள்ள அவன் விரும்பவில்லை..
அப்படி இருக்க அவனோ , "அதை எல்லாம் அப்புறம் பேசிக்கலாம் கிளம்பு " என்க
"எங்கே??" என அவள் விழி விரித்து கேட்க
"எனக்கு மார்க்ஸ் பத்திரிகையில் இருந்து ஒரு விருது கிடைத்து இருக்கு அதை வாங்க தான்" என கூற
அவளோ, " நான் வரல " என்க
"உன்கிட்ட வரயான்னு நான் கேட்கலை கிளம்ப சொன்னேன்" என்று கூற இனி மறுத்து பிரயோஜனம் இல்லை என்பதை புரிந்து கொண்ட அவள் அவனுடன் கிளம்ப தயாராக செல்ல அவனோ, " அந்த கபோர்ட்ல புதுசா மனிஷ் டிசைன் பண்ணின பிளாக் பிராக் இருக்கு அதை எடுத்து போட்டுட்டு வா நான் கீழே வெயிட் பன்றேன்" என கூறி சென்று விட்டான்...
அவனுக்கும் ஆசை தான் மனைவி உடை அணிவதை பார்க்கவும் இந்த ஒரு வார தவத்தை தீர்க்கவும் அதிலும் அவள் வேறு உரிமையாக பேசி இருக்கிறாள் அதுவும் வேறு கூட்டு சேர்ந்து கொள்ள அவன் கால்கள் அவளை விட்டு நீங்க மறுத்தது என்னவோ உண்மை தான் ஆனால் அது நடந்தால் விழாவிற்கு செல்ல முடியாது என உணர்ந்து அவன் கீழே செல்ல அவளோ அவன் கை காட்டிய கபோர்ட்டை விட்டு அவளது கபோர்ட்டை திறக்க அங்கே அந்த உடை இல்லை..
எங்கே என அவள் தேட இது போன்ற நீலமாக இருக்கும் உடைகளுக்காக அவன் செய்திருக்கும் கபோர்ட்டை தானே அவன் கை காட்டினான் அதை விட்டு இதை திறந்தால் கிடைக்குமா என தன் தலையில் கொட்டி அவன் கூறிய அலமாரியை திறக்க
அங்கு அழகிய ப்ராக் இருந்தது கருப்பு நிறம் என்றாலும் அதில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்து பார்க்கவே கண்கவர்காட்சியாக இருக்க அந்த பிராக்கை கண்டதும் அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது என்னவோ உண்மைதான்..
அதனால் வேகமாக அந்த பிராக்கை கையிலெடுக்க அதற்குள் அந்த உடை அலமாரியின் மேலே உள்ள செல்பில் சரியாக அடைக்க படாமல் இருந்த அந்த செல்பில் இந்த உடையின் சிறு துண்டு சிக்கிக்கொண்டது அதை பற்றி இழுத்தாள் ஹிமானி ரொம்ப இழுத்தால் அந்த உடை கிழிந்து விடும்...
அதனால் அவள் தன் கால்களை தூக்கி எம்பி நின்று அந்த அலமாரியின் பாதியில் சிறந்த செல்ஃபை முழுவதுமாக திறந்தாள் பின் கையை மேலே தூக்கி அந்த துணியின் நுனியை எடுக்கும் பொழுது அவளுக்கு துணையோடு வேறு ஏதோ ஒன்று தட்டுப்பட்டது..அவள் துணியை எடுக்கவும் அந்த துணியோடு சேர்ந்து அதுவும் சேர்ந்து வேறு ஏதோ கீழே விழ அது போட்டோக்களின் குவியலாக இருந்தது ..
படபடவென போட்டோக்கள் கீழே ஐயோ கீழே விழுந்திடுச்சே என எண்ணி பார்க்க அந்த போட்டோக்களை கண்டு அதிர்ந்தாள் ஹிமானி..
ஏனெனில் அந்த படங்கள் முழுவதும் ஹிமானி மற்றும் ஆர்யா சேர்ந்து எடுத்துக்கொண்ட படங்கள் தான் அதுவும் அவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்த படங்களும் அடக்கம் அதைக் கண்டு அவள் அதிர மேலும் இவர்கள் இருவரும் வேறு போல இருந்தனர் அதாவது அவர்கள் திருமணம் முடிந்த பின் ஹனிமூன் மாலத்தீவு சென்றபோதும் கூட அதிகமான போட்டோக்கள் இருவரும் எடுத்துக் கொள்ளவில்லை
அப்படி இருக்க இந்த போட்டோக்களை பார்க்கவும் அவளுக்கு குழப்பமாக இருக்க இருவரின் முகமும் வேறு மாதிரியாக இருந்தது ஆம் கிட்டத்தட்ட ஒரு ஆறு வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்களோ அது போன்ற முக அமைப்பில் அவன் இருக்க அவளும் முடியை முன்புறமாக வெட்டி இருந்தாள்..
அதுவும் அவள் கல்லூரியின் முதல் வருடம் படிக்கும் பொழுது தான் இந்த ஹேர்ஸ்டைல் வைத்ததாக அவள் நினைவில் வர அப்பொழுது இவனுடன் எப்படி நான் என அவள் குழம்பி நின்றாள்..
மேலும் அந்த போட்டோக்களை எல்லாம் எடுத்துப் பார்த்தவள் குழம்பி வேகமாக ட்ரெஸ்ஸிங் டேபிளின் ஸ்டூலை எடுத்து போட்டு அதில் ஏறி அந்த அலமாரியின் செல்ஃபை திறந்து பார்த்தாள் அதில் இதுபோல பல ஆயிரம் போட்டோக்கள் இருந்தன..
அதில் அனைத்திலும் இருவரும் கட்டியணைத்தபடி முத்தமிட்டபடி அவள் மடியில் அவன் படுத்தபடியும் அவனை அவள் அணைத்தபடியும் என்று பல விதங்களில் போஸ் செய்திருந்தனர் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாலும் அனைத்து போட்டோவும் மிக நெருக்கமாக இருக்க பார்ப்பதற்கு இருவரும் ஏதோ காதலர்கள் போல இருக்க அந்த சமயம் பார்த்து, " ஹிமானி தயாரா??" என கேட்டான்
அவளோ உடை கூட மாற்ற தோன்றாமல் அந்த போட்டோக்களில் ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்க, "இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க எனக்கு டைம் ஆகுது??' என்று அவன் கீழே இருந்து மறுபடியும் குரல் கொடுக்க அவளிடமிருந்து சப்தமே இல்லை , "என்ன பண்ணிட்டு இருக்கா இடியட் ஒரு பஞ்சுவல் வேண்டாம்மா??"என்று குறைபட்டுக் கொண்டே ஆர்யா மேலே வர அங்கே அந்த அறை முழுவதும் போட்டோக்களாக சிதறிக் கிடந்தது..
அதை கண்டவன் அந்த போட்டோக்களை பார்த்து கொண்டே அவன் அவளது முகத்தை தான் முதலில் பார்த்தான் அவளது அதிர்ந்த முகமே கூறியது அவள் இதையெல்லாம் எதிர்பார்க்க வில்லை என்று அவனை கண்டதும், "இதெல்லாம் என்ன??" என அவனைக் கண்டதும் அவள் வினவ,
அவனோ , "பார்த்தா தெரியலை போட்டோ "என்று கூலாக கூறினான் அதை கூறும் பொழுது அவனது முகம் சற்று மாறுபட்டு இருக்கிறதோ என்ற சந்தேகம் அவளுக்கு வர, " நானா எப்படி அதுவும் உன் கூட??" என்று கூற அதைப்பார்த்த அவனோ , "என் காதலி என் கூட இருக்காமல் வேற யார் கூட இருப்பா" என்று கூற,
" என்ன காதலியா?? என அதிர்ந்தாள் அவள் அதைக்கேட்ட அவனோ , "சாரி என் மனைவின்னு சொல்லி இருக்கணுமோ??" என்று கூற அவளோ மேலும் குழம்பினாள்..
"என்ன சொல்ற உனக்கும் எனக்கும் பால்ய விவாகம் நடந்ததையே என்னால இன்னும் நம்ப முடியல அதிலிருந்து மீள்வதற்கு உள்ள நீயும் நானும் காதலர்களா என்ன விளையாட்டு இது நீயும் மார்ஃபிங் பண்ணி இருக்கியா??" என்று கேட்டாள் ஹிமானி..
அதை பார்த்த அவனோ, " என்ன பார்த்தா மார்ஃபிங் பண்ற மாதிரியா இருக்கு ?? "என்று கூறியவன் அவள் போட்டோக்களை எடுத்து இடத்திலேயே பொக்கிஷமாக அவன் பாதுகாத்து வந்த ஒரு டிஜிட்டல் கேமராவை எடுத்தான் ..
அதை எடுத்து அவளது கையில் கொடுத்தவன் , "இது ஆறு வருஷத்துக்கு முன்னாடி நான் ஆன் செய்த கேமரா இன்னைக்கு வரைக்கும் நான் அதை ஆன் பண்ணல நீயே இத பாரு " என்று கூற,
அவளும் அதை உயிர்ப்பிக்க ஆயிரக்கணக்கான போட்டோக்களை பார்த்து தலை சுற்றி போய் இருந்தவள் அந்த கேமராவை பார்க்க அதில் ஆறு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட எண்ணாயிர கணக்கான படங்கள் இருக்க அதை கண்டவள் மேலும் அதிர்ந்தாள்..
அதில் ஒரு சிலர் மட்டுமே படங்களாக அச்சிடப்பட்டு இருக்க பல ஆயிரங்கள் இன்னும் அச்சிடப்பட இருந்தன அத்தனை போட்டோக்கள் எடுத்து தள்ளி இருந்தனர் இருவரும் அதிலும் அவள் ஒன்று கவனித்தது இவள் தான் அவனை எப்பொழுதும் விடாமல் கட்டிக் கொண்டிருக்கிறாள் அவன் அவளை கட்டிக்கொண்டு இருக்கவில்லை..
இந்த விஷயத்தை கவனித்து அவனிடம் கேட்டாள் அவள் அதைப் பார்த்ததும் மென்னகை புரிந்தவன், " இதையெல்லாம் நீயா தெரிஞ்சுக்க தான் நான் இத்தனை நாள் அமைதியாக இருந்தேன் கல்யாணம் செஞ்சேன் அப்படிங்கிறதே உனக்கு ஞாபகமில்லை இது மட்டும் ஞாபகம் இருக்குமா என்ன??" என்று கேள்வி கேட்க அவளோ குழம்பினாள் ...
ஸ்வரம் இசைக்கும்...
