ஸ்வரம் 25
ஸ்வரம் : 25
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகு அவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் கழிந்து விட்டன ஒரு மாதம் சரியாக ஆகி விட்டது என இதோ அவள் தேதியை பார்த்து கணக்கிட்டு கொண்டிருக்க பின்னால் வந்து ஆர்யா நின்றான்..அது தெரியாமல் எங்கோ வெறித்து கொண்டிருந்தாள் ஹிமானி..
இந்த ஒரு வார காலமாக அவன் அவள் அருகே வரவில்லை அவன் அவளாக சமாதானம் ஆகட்டும் தான் என அவன் வேறு தொல்லை செய்ய வேண்டாம் என நினைக்க ஏனெனில் கடந்த ஒரு வாரமாக ஹாட் டாபிக் இவளுடைய அந்த விடியோவாக தான் இருந்தது அப்படி இருக்க அவளோ அவனது அந்த செய்கையால் அவளையே குழப்பி கொண்டிருந்த நிலையில் இவன் வேறு அவனது அருகில் வராதது வேறு அவளுக்கு பெரும் தொல்லையாக இருந்தது அதுவும் அவனுக்கு ஷூட் வேறு இருக்க அதனால் இரவு லேட்டாக தான் வருகிறான் அதுவும் ஒரு காரணமாக இருக்க இவள் தான் அவளை குழப்பி கொண்டாள்..
அதிலும் அவளது வீடியோ வெளியான விஷயம் அவளது குடும்பத்தில் உள்ள அனைவரின் பார்வைக்கும் அந்த வீடியோ விஷயம் வந்து இருக்க அவர்கள் அனைவரும் முதலில் அதிர தான் செய்தனர் அதில் மிஹ்ரான் மட்டும் , " அதுல என்ன இருக்கு அவ அவன தான காதலிச்சா' என்று உண்மையை போட்டு உடைத்தான்..
ஏனெனில் அவள் இந்த அளவுக்கு அவள் இறங்கி இருப்பாள் என மிஹ்ரான் எதிர்பார்க்கவில்லை தன்னோடு பேசிய வார்த்தைகள் என்ன அவள் செய்த வேலை என்ன என்று நினைத்தவன் அழுது கரையும் பாயலிடம் , "உங்க பொண்ணு ரொம்ப யோக்கியமானவ எல்லாம் இல்ல இவனைத்தான் காதலிச்சா இப்போ இந்த அளவுக்கு போய் இருக்கு ஆனா இவளை போய் அவன் ஏன் திருமணம் செய்யனும் அதுதான் என்னோட கேள்வி என்னமோ சின்ன வயசுல கல்யாணம் செய்தான் அதனால பொண்டாட்டிய காப்பாற்றினான்னு சொல்லி அவன் ஹீரோ வேலை பண்ணிட்டான் அவனுக்காவது அவள உண்மையா இருக்க சொல்லுங்க" என்று கூறிவிட ,அதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்..
அதனால் பாயல் முதல் நிதிஷ் வரை அவளிடம் சண்டையிட்டனர் முதலில் நம்பவே இல்லை அவள் என்ன தான் சொன்னாலும் நம்பாமல் தான் இருந்தனர் ..மேலும் மிஹ்ரான் வேறு அவளின் விஷயத்தை பட்டென போட்டு உடைக்கவும் அதை அவளும் அவளது பெற்றோர்கள் கேட்கும் பொழுது ஒப்புக்கொள்ள அவர்கள் சுத்தமாக அதிர்ந்தனர்..
அதிலும் இவள் விஷயத்தில் நிதிஷிடம் பாயல் அந்த உண்மையை சொல்லாமல் மறைத்ததில் நிதிஷ்க்கு வருத்தம் அதிகமாக இருந்தது அதனால் நிதிஷ் பாயலிடம் அதிகமாக பேச்சுவார்த்தை வைத்துக்கொள்வதில்லை ..
அப்படி இருக்க இந்த செயலும் சேர்ந்து கொண்டு மகளிடமும் கோபத்தை வளர்த்துக் கொண்டார் நிதிஷ் ..அவளை இந்த உலகத்தில் இந்த நொடியில் முழுமையாக நம்பும் ஒருவன் உண்டு எனில் அது அவளது கணவனான ஆர்யா மட்டும் தான்..
அவன் மட்டும் தான் அவளது முகத்தைப் பார்த்து அவள் வீட்டார் முதல் அனைவரும் பேசுவதை பார்த்து, " நீ சுத்தமானவன்னு எனக்கு தெரியும் நீ இதை செய்திருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும் அதனால இதையெல்லாம் நினைச்சு கவலைப் படாதே உனக்கு நான் இருக்கேன்" என்று ஒரு வார்த்தை தான் கூறினான்..
அந்த வார்த்தை அவளுக்கு ஆயிரம் பலத்தைக் கொடுத்தது அந்த வார்த்தையின் தைரியத்தில் தான் இந்த ஒரு வாரத்தை அவள் கடந்து இருக்கிறாள் என்று தான் கூற வேண்டும் அப்படி இருக்க இந்த ஒரு வார காலமும் வருத்தத்தில் ஆழ்ந்த கொண்டிருந்தவளுக்கு கணவன் என்னதான் ஆறுதல் கூறினாலும் தன்னருகே வரவில்லையே என்ற வருத்தம் அவளை வாட்ட நாட்களைக் கணக்கிட்டுக் கொண்டே எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள் அவள் அவள் பின்னால் ஆரிய வந்து நின்றதை கூட கவனிக்காமல் ஷிமானி இருக்க மென்மையாக அவளது தோளை தொட்டான் ஆர்யா ..
அவன் தொட்டதும் கனவுலகத்தில் இருந்து நிகழ் உலகிற்கு வந்த ஹிமானி திரும்பி பார்க்க அங்கே அவள் கணவன் கருப்பு நிற ஃபுல் சூட் அணிந்து டிப்டாப்பாக நின்று கொண்டிருந்தான்..அவனை எந்த சூழ்நிலையில் பார்த்தாலும் மிக அழகாக தான் இருப்பான்..
ஏதோ பார்ட்டிக்கு போவது போல அவன் உடை அணிந்திருக்க அவளைப் பார்த்த அவனும், " எத்தனை நாளைக்கு தான் இந்த ஜன்னலை பார்த்துட்டு இருப்ப??" என கேட்டான்..
அதை கேட்டதும் அவனை அவ்வளவு அருகே பார்த்ததும் அவளது கண்களில் கண்ணீர் இப்பொழுது விழும் என்ற நிலையில் இருக்க அதை பார்த்தவுடன் , "என் முன்னாடி அழ மாட்டேன் நினைச்சேன் அப்படி தானே இருந்த ஆனால் உனக்கு அழுகை எல்லாம் வருது அப்போ நீ அவ்ளோ தானா??" என்று நக்கலாக கூற வேகமாக உள்ளே இழுத்துக்கொண்டாள் ஹிமானி...
ரோசக்காரி ஆகிற்றே அதை பார்த்து மெல்லிய சிரிப்பை உதிர்த்தவனை பார்த்து, " எல்லாருக்கும் நான் ஒரு கேளிக்கை பொருளாக மாறிட்டேன் எல்லாரும் என்ன கிண்டல் பண்றாங்க நான் தப்பான பொண்ணுன்னு சொல்றாங்க "என்று கூற ,
"நான் அப்படி சொல்லலையே " என்று பட்டென கூறினான் அதைக்கேட்ட அவளும் , "நீ மட்டும் தான் என்னை நம்பின " என்று கூற ,
"உன்னோட வாழ்க்கையில் உனக்கு வேற யாரும் நம்பனும் நான் நம்பினால் போதாதா??" என்று கூற
"நீ மட்டும் தான் நம்பற அது தான் என்னுடைய பிரச்சனையும் நீயும் என்னை நம்பாமல் இருந்திருக்க வேண்டியது தானே??" என்று கூற,
அதைக் கேட்ட அவன் அவளது இரு தோளிலும் ஸ்டைலாக அவனது இருக்கைகளை இட்டவன் அவளருகே நெருங்கி நின்றான்..
அவளோ அப்போது அவனை பார்த்து, " உனக்கும் நான் அலுத்துட்டேன்ல இத்தனை நாள் என் பக்கத்துல நீ கூட வரல அப்ப நான் நினைச்சேன் நீ என்னை தவறாக நினைத்துக் இருப்ப அப்படின்னு நீ நடிக்கிறன்னு எனக்கு நல்லா தெரியும் யாரும் வேண்டாம் போங்க " என்று தன் மனதில் உள்ளதை எல்லாம் கொட்ட,
அது அவனுக்கு பிடித்து இருந்தது இது போன்ற உரிமையை தான் ஆர்யா அவளிடம் எதிர்பார்த்தது அதுவும் அவளாக கூறுவது இன்னும் அதிகமாக பிடித்து இருந்தது...தான் எப்படி இருந்தாலும் தன்னோடு இது போல உரிமை பாராட்டுவது அவனுக்கு பிடித்து இருந்தது..
அவள் அவ்வாறு தவறே செய்து இருந்தாலும் அவளை விட்டு இருக்க மாட்டான் அது வேறு விஷயம் அவனுடைய ஹிமானி அவனுடைய உயிரிலேயே கலந்த ஒருவள் அவளை அவன் ஒரு போதும் பிரிய மாட்டான் அவன் அவளை பிரியும் நேரம் ஒன்று அவன் வாழ்க்கையில் அவனது மரணத்தை தழுவும் நேரம் தான் என அவனுக்கு நன்றாக தெரியும்.. அதற்காக தான் அவளை இப்படி எல்லாம் அதிரடி காட்டி திருமணம் செய்து இருக்க அவளை அப்படி விட்டு விடுவானா அவளது கணவன் அவள் அவ்வாறு உரிமையாக பேசியது எட்டாவது அதிசயமாக அவளை அவன் பார்த்து கொண்டிருக்க அவளோ என்ன இவன் இப்படி பார்க்கிறான் என முழிக்க
அதை கண்டவனோ வேகமாக தன்னை சமன் செய்து கொண்டு தன் எண்ணத்தை அவளிடம் வெளிக்காட்டாமல், "உனக்கு எங்க இதுக்கு எல்லாம் சமயம் இருக்கு எதையோ யோசிக்க தான சமயம் இருந்துச்சு நான் எப்ப வந்தேன் எப்ப வரல எதுவுமே நீ கேட்கலையே " என்று விளையாட்டாக மெல்லிய மில்லி மீட்டர் சிரிப்பை உதிர்த்து அவன் கூறினான்..
