ஸ்வரம் 24

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  

ஸ்வரம் : 24

அவன் அடித்தும் மனம் தளராமல் எழுந்து நின்ற அவளோ , "ஆமா நான் இவனை தான் காதலித்தேன் "என்று கூற மீண்டும் அவளது கழுத்தை பிடித்து நெருக்கி , " என்ன கொலைக்காரன் ஆக்காதே ஹிமானி உன் வாயில இருந்து இந்த வார்த்தை வருவதை நான் விரும்பல " என்று கூற,

" சொன்னா என்ன செய்வ இது போல அடிப்பியா அடி என்னால ஒருத்தன் இப்படி கிடக்கிறான் அவனுக்காக நான் உன்கிட்ட அடி வாங்கமாட்டேனா என்னை காதலிச்சான்ன்னு சொல்லி தானே அவனை அடிச்ச அப்போ நானும் அதே தானே செய்து இருக்கேன் எனக்கும் அந்த காதலில் பங்கு இருக்கு தானே " என அவள் அவனை பார்த்து கொண்டு கூற அங்கே தருண் மற்றும் அவனது கூட்டாளிகள் நினைவுகள் இல்லாமல் மயங்கி கிடந்தான் அவனை அந்த நிலையில் பார்க்கும் போது அவளுக்கு அழுகை முட்டியது அதை கண்டவனுக்கு மேலும் ஆத்திரம் வர

" காதலிச்சவன் நல்லவனா இல்லையா என யோசிக்க கூட மாட்டியா இல்ல காதலிச்சது யார்ன்னு கூட உனக்கு தெரியாதா இடியட்..இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு அவனுக்காக துடிக்கிற உன்னோட ஒவ்வொரு துடிப்பையும் பார்க்கும் போது ஆத்திரம் வருது உன்னை வெட்டியே போடணும்னு கோபம் வருது போன் எல்லாம் பார்க்க மாட்டியா டாமிட் "என்று கூறி அவனது போனை காட்டினான் ஆர்யா..

அதில் தருணும் அவளும் படுக்கை அறையை பகிர்ந்து போல காட்சிகள் இடம் பெற்றிருக்க அதை கண்டவள் அதிர்ந்தாள் ஏனெனில் அவள் ஒரு முத்தம் கூட அவனுடன் பகிர்ந்தது இல்லை

அப்படி இருக்க இப்படி ஒரு வீடியோ எப்படி என அவள் முழிக்க அதை பார்த்து, " என்ன பேச்சே இல்லை இது நீ தானே இவன் கூட இருக்கிறது" என்று குற்றப்படுத்தும் பார்வையோடு ஆர்யா கேட்க

" இல்லை இது நான் இல்லை " என்று கூற

இல்லை இது நீ தான் நீங்க தான் உயிருக்கு உயிரா காதலிச்சவங்களாச்சே" என்று அவன் குற்றப்படுத்த அவளோ அதிர்ந்தாள்..ஏனெனில் அவள் தானே அவனிடம் இத்தனை நேரம் இதை கூறி வாதிட

அவனும் அதையே பிடித்து கொண்டு, " என்ன உயிர் காதலனும் காதலியும் லீலைகள் புரிந்த வீடியோ இது பிராடுத்தனம் பண்ணி கல்யாணத்துக்கு பிளான் பண்ணினேன்னு சொன்ன ஆனால் இந்த விஷயத்தை சொல்ல மறந்துட்டியா இல்லை மறைச்சுட்டியா??" என கேட்க

அவளோ அதிர்ந்து, " நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லை"

" அப்போ இதுக்கு பேர் என்ன??"

"அது யாரோ தவறா சித்தரிச்சு இருக்காங்க நான் எந்தவிதமான உடல் ரீதியான தொடர்பும் நான் வைச்சுக்கல" என்றாள்

" உன்னை எப்படி நம்புறது பொய் சொல்லி இந்த அளவுக்கு இறங்கின உன்னை எப்படி நம்புறது" என கூற

ஒருவர் செய்யாத தவறுக்கு நம்மை குற்றப்படுத்தும் போது வரும் அதிர்வு அவளுள் எழ,அவனை பார்த்து, " நான் இவனை காதலிச்சேன் தான் ஆனால் நான் எந்த விதமான தப்பான செயலிலும் ஈடுபடல " என்க

" அப்போ ஈடுபட்டது யார்??" என அவன் கேட்க அவளோ முழித்தாள் எங்கே தன்னை தவறானவள் என கூறி விடுவானோ என அவள் அதிர அதுவரை அவள் மீது இருந்த கூரிய பார்வை மாறி கோபக்கனல் வீசி, " இதோ இந்த நாய் தான் " என கூறி மயங்கி கிடந்த அவனை அடிக்க அவளோ மேலும் அதிர்ந்தாள்..ஏனெனில் இவ்வளவு கீழ்த்தரமான செயலை செய்தது என நினைக்க,

இது போன்ற பல லீக் விடியோஸ் வெளியே வருவது சினிமா துறையை பொறுத்தவரை இயல்பான ஒன்று தான் என்றாலும் ஹிமானி அப்படிப்பட்டவள் அல்ல அப்படி இருக்க இப்படி ஒரு வீடியோ வெளியாகி இருக்க தன் மனைவி இப்படி ஒரு தவறை செய்திருக்க மாட்டாள் என ஆர்யாவுக்கும் நன்றாக தெரியும் இது இதோ இங்கு படுத்து கிடக்கும் தருணின் வேலை தான் என ஆர்யாவிற்கு நன்றாக தெரியும் ..

ஆம் தருணின் வேலை தான் தருணுக்கு இவள் மீது நம்பிக்கை இல்லை இவள் தன்னை காதலிக்கிறாள் என்று தன் நண்பர்களிடம் கூறும் பொழுது நண்பர்கள் அவனை கேலி பேச அவனோ, " நீங்க வேணா பாருங்க அவ என்னை கல்யாணம் பண்ணிப்பா" என்று கூறியிருக்கிறார் ஆனால் ஆர்யாவுடன் திருமணம் நடைபெறவும் அவனுக்கு இவள் தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற ஆத்திரம் அவனுள் இருந்தது என்னவோ உண்மைதான்..

மேலும் நண்பர்களும் கேலி பேச அதிலும் ஆர்யா ஒன்றுக்கு இருமுறை அவனை திட்டவும் அடிக்கவும் செய்திருக்க எல்லாம் சேர்ந்து அவளை எப்படியாவது பழி வாங்க வேண்டுமென நினைக்கிறான் அதற்காக வேண்டும் என்றே தகாத வீடியோவில் அவனது முகத்தையும் அவளது முகத்தையும் இணைத்து மார்பிங் செய்து அதை சோசியல் மீடியாவில் வலம் வர செய்தான்..

அப்படி செய்தாள் அவள் மானம் காற்றில் பறக்குமே என்ற நல்ல எண்ணம் அவனுள் இருக்க சோஷியல் மீடியாவில் வலம் அந்த இரு நிமிடங்களுக்குள் அந்த செய்தி ஆர்யாவின் செவிகளுக்கு சென்றது..

ஆம் இன்று காலை ஆர்யாவுக்கு ஒரு மீட்டிங் அதற்காக வெளியே சென்றவன் எதேச்சையாக போனை திறந்து பார்க்க அப்பொழுது தான் அந்த வீடியோ வைரலாக ஓடிக் கொண்டிருக்க கிட்டத்தட்ட அந்த இரு நிமிடங்களிலேயே இரண்டு லட்சம் பேர் அதை பார்த்து இருந்தனர் ..

அப்படி இருக்க வேகமாக அவனது குழுவை அழைத்து இதை எப்படியாவது டெலிட் செய்ய வேண்டும் என்று இவன் கேட்டுக்கொள்ள நொடிப்பொழுதில் அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது மேலும் இந்த சம்பவத்திற்கு காரணம் யார் என்று விசாரிக்க கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குள் தருண் அவனது கூட்டாளிகளும் சேர்ந்து செய்த வேலைதான் என தெரிந்த அடுத்த நொடி அவர்கள் மூவரும் ஆர்யாவின் ஆட்களால் பிடிக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டு ஆர்யாவின் கைகளால் செமத்தியாக வாங்கி இனி அடிவாங்க தெம்பில்லாமல் மயங்கிக் கிடக்கின்றனர்...

நடந்த சம்பவத்தை ஒன்றுவிடாமல் ஆர்யா தன் மனைவியிடம் கூறவும் அதுவரை தைரியமாக நின்று கொண்டிருந்த அவளுக்கு அவளது கால்கள் தள்ளாட ஆட தொடங்கியது இவனுக்காக அவள் பல இடங்களில் பொறுத்துப் போகும் இவன் காதலுக்காக அவள் பல திருட்டு வேலைகளிலும் ஈடுபட்டு இருக்க இவனோ அவளது காதலை எண்ணாமல் இப்படி ஒரு செய்கை செய்து போனானே என்னதான் அப்படி நான் தவறாக நடந்து கொண்டாலும் ஒரு பெண்ணை எப்படி இப்படி அவமானப்படுத்தலாம் என்று அவளுக்கு நினைக்கும் பொழுதே மிக வருத்தமாக இருந்தது..

அவள் கண்கள் குளமாக அதைக்கண்ட ஆர்யா என்ன எண்ணினானோ தன் மனைவியை இறுக அனைத்து கொண்டான் வீங்கிய கண்ணங்களில் வழிந்த கண்ணீரை தன் விரல்களால் துடைத்தவன் அவள் முகத்தை பார்க்க அவளோ அப்பொழுதும் இவன் செய்த சதி தாளாமல் அழுதுகொண்டிருந்தாள்..

ஏனெனில் இவனை மலையளவு அவள் நம்பியிருந்தாள் மேலும் அவனது காதலை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒருத்திதான் ஹிமானி அப்படியிருக்க அவன் இப்படி செய்வான் என எதிர்பார்க்காத காரணத்தினால் அவளுக்கு மிகுந்த துயர் ஏற்பட அதைக்கண்ட கணவனோ அவளது முகத்தை தன் கைகளில் ஏந்தி , "உன் காதலுக்கு அவன் பொருத்தமானவன் இல்ல ஆனா நீ காதலிச்சது உண்மை நீ காதலிச்சது இதோ விழுந்து கிடக்கிற இவனை இல்லை இது ஏதோ ஒரு நாடகம் போல தான்" என கூறி அவன் அவள் அதிர்ந்து விழிக்க ஏதோ சொல்ல வாயை எடுத்தவன் தன் வாயை அடைத்து கொண்டான்...

அவளோ கண்களாலேயே அவனை பார்க்க ஆர்யா தன் மனைவியின் முகத்தை பார்த்து, " கவலைப்படாத இந்த விஷயம் யாருக்கும் தெரியாது ஒரு ரெண்டு லட்சம் பேரை பார்த்து இருக்காங்க உண்மைதான் ஆனால் நீ தவறு செய்யாத பொழுது எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை யார் கேள்வி கேட்டாலும் என்னை காட்டு அது போதும் " ..என்று தன் மனைவியின் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் ஆர்யா ..

ஸ்வரம் இசைக்கும்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top