ஸ்வரம் 23
ஸ்வரம் : 23
கதவை வெளிப்புறமாகவே அடைத்து விட்டு உள்ளே இருப்பவர்களின் மூச்சுக்காற்று கூட வெளியே வரக்கூடாது என்பது போல எல்லா கதவுகளை அடைத்து உள்ள ஆக்ரோஷமாக தருணை ஆர்யா அடித்து கொண்டிருந்தான்.. அந்த சமயம் பார்த்து வெளிப்புறமாக கதவை தட்டும் ஓசை கேட்கவும் கண் அசைவிலியே யாரென்று பார்க்க சொல்ல அவனது இரு அடியாட்களும் பார்க்க, " சார் மேடம் வந்து நிற்கிறாங்க " என்று அவர்கள் பதில் அளிக்கவும்,
துணுக்குற்று திரைச்சீலைகளை நீக்கி பார்த்தான் ஆர்யா அங்கு அவனது மனைவி வெளிறிய முகத்தோடு நின்று கொண்டிருந்தாள்.. மேலும் அந்த அறையில் இரத்த வெள்ளத்தில் தருண் இனி அடிவாங்க உடலில் தெம்பில்லை என்பது போல படுத்துக் கிடந்தான்..
மற்றொரு மூலையில் இருவர் படுத்துகிடக்க அவர்கள் உடலிலும் அடி வாங்குவதற்கு தெம்பில்லை மேலும் ஆர்யாவின் அடியாட்கள் இருவர் மேலும் தருணை அடிக்கப் போக ,
அவர்களை கண் பார்வையை நிறுத்திய ஆர்யா மனைவி கூர்ந்து பார்க்க அவள் முகம் பயத்தில் இருப்பதை பார்த்து வேகமாக கதவை திறந்தவன் அவளைப் பார்த்து ஏதோ சொல்ல வர,
அதற்குள் அவள் அவனை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தாள் அதை ஆர்யா எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை..அது அவனது முகமே அவளுக்கு வெளிக்காட்டி கொடுத்தது..ஆனால் அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை அவளை பொறுத்தவரை இவன் ஒரு ராட்சசன் அரக்கன் யாருடைய உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடியாத ஒருவன்..மனிதனை மனிதனாக பார்க்காத ஒருவன்..
அங்கே தருண் மற்றும் இருவர் ரத்தவெள்ளத்தில் கிடக்க அவர்களை பார்த்து பதறியவள் சுற்றுப்புறம் மறந்து, "தருண் உனக்கு என்ன ஆச்சு?? என்று பதறிப் போய் கேட்க ஆர்யாவின் முகம் வெறி கொண்ட வேங்கையாக மாறியது..அவனுக்கு ஏதோ புரிவது போல இருந்தது..
உடனே தனது அடியாட்களை வெளியே போக சொன்னவன் அங்கே போடப்பட்டிருந்த டேபிள் மீது அவளது பதற்றத்தை பார்த்துக்கொண்டே ஏறி கூலாக அமர்ந்தான்..
அவளோ , " உனக்கு என்ன ஆச்சு என்ன ஆச்சு??" என்று அவள் பதற இவனுக்கு புரியாத புதிராக இருக்க என்ன தான் செய்கிறாள் என கவனிக்க துவங்கினான் அவள் கணவன்..
தருணோ அவளருகே வருகிறாள் என்பதை அறிந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தவன் ஒரு அடி தள்ளி சென்று, " என்னை மன்னிச்சிடுங்க நான் இனி அப்படி செய்ய மாட்டேன் என்னை மன்னிச்சுடுங்க" என்று கத்த துவங்கினான் தருண்..
அதை கண்ட அவளோ , " தருண் என்னை பார் டா நான் தான் உன் ஹிமானி.. உனக்கு என்ன ஆச்சு என்ன நடந்தது எப்படி இங்கே வந்த??? " என்று கூற தருண் மீண்டும் ஆர்யா மீதுள்ள பயத்தில் ஒரு அடி விலக ," இப்படி அடிச்சு இருக்காங்களே என எண்ணி தன் கணவனை பார்த்து எதுக்காக அவனை அடிச்ச நீ என்ன மனுஷன்னா இல்லை மிருகமா ஒரு அப்பாவியை போட்டு இப்படி அடித்திருக்கிற?? " என்று அவள் ஆர்யாவின் முகத்தை பார்த்து கேட்கவும் தான் இவனுக்கு எங்கேயோ இடிப்பது போல தோன்ற,
" அவனை அடிச்சா உனக்கு ஏன் கொதிக்குது?? என்ன அவனோட ஹிமானியா ஆமா இது என்ன கேஸ் மிசஸ் ஆர்யா??" என்று ஆர்யா நக்கலாகவும் அதே சமயம் கோபமாகவும் கேட்டான் ஆர்யா..
"ஆர்யா ஏன் உனக்கு இவனை எல்லாம் பார்த்தா மனுஷனா தெரியலையா?? இல்ல உனக்கு இவனோ ஏழைகளை பார்க்கும்போது மிருகமா தெரியுதா?? ஏன் இவனை அடிச்ச அவனை கேட்க யாரும் இல்லைன்னு நினைப்பா இல்லை உன்னோட பலத்துக்கு அவன் எல்லாம் ஈடாக மாட்டான்னு நினைப்பா?? அவனுக்கு நான் இருக்கேன் உங்களுக்கு எல்லாம் பணம் வைச்சு இருக்கிறவன் தான் நல்லவங்க அப்படித்தானே உன்னோட திமிருக்கும் கர்வத்துக்கும் இவன் தான் பலியாடா ஒவ்வொருத்தவங்க வாழ்க்கையையும் உன்னோட சுயநலத்துக்காக அழிச்சிட்டு இருக்க நீ என்ன தான் நினைச்சிட்டு இருக்க " என ஆத்திரம் கொதித்து அவள் வினவ ,
அதைக்கேட்ட ஆர்யாவோ , "நான் என்னவோ நெனச்சிட்டு போறேன் ஆனா நீ இவனை பத்தி என்ன நினைக்கிற அத மட்டும் சொல்லு "என அவளது துடிப்பை கண்டவனுக்கு ஏதோ நெருடலாக இருக்க அவனுக்கு விஷயம் தெரிய வேண்டும் என்ற முனைப்பில் ஆர்யா கேட்டான்..
அவளோ அதற்குள் வேகமாக தான் அணிந்திருந்த சுடிதார் ஷாலை எடுத்து தருணின் முகத்தில் ஒற்றி அவன் முகத்தில் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை துடைத்துக்கொண்டு இருக்க அதை கண்டவனுக்கு காதில் புகை வர, "என்ன ஓவரா கொஞ்சிக் குலாவுவ போல" என்று கேட்க ,
தருணுக்கு எப்படியாவது இங்கிருந்து தப்பித்தால் போதுமென நினைத்து, " என்னை மன்னிச்சிடு நான் இனி இந்த மாதிரி செய்ய மாட்டேன் என்னை மன்னிச்சிடு என்ன விட்டுட்டு சொல்லு என்னால தாங்க முடியல அடி செத்து விடுவேன்னு பயமா இருக்கு இனி என்னால அடி வாங்க முடியாது இனி நான் உன் பக்கம் கூட வர மாட்டேன்" என்று கூற ,
அதைக் கேட்ட அவளோ ஆர்யாவை பார்த்து, "ஏன் இப்படி மிருகமா நடந்துக்கிற உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு ?? பார் அவன் எப்படி துடிக்கிறான் பார் உனக்கு இவனை பார்த்தா பாவமா இல்லையா?? மிருகம் மாதிரி நடந்துகிற" என கேட்க ,
அதைக் கேட்ட ஆர்யா கோபத்தில் கொதித்து எழுந்தவன் நொடி பொழுதும் தாமதிக்காமல் அவளது சிகையைப் பிடித்து அவளை தரதரவென இழுத்து சுவற்றில் அழுத்தமாக அழுத்தினான்..
அதுவரை அவன் கடைபிடித்த பொறுமை காற்றில் பறக்க நேற்று இரவு மென்மையாக அவன் அளந்த கூந்தல் இன்று அவன் கையில் படாதபாடுப்பட அவனோ வெறிகொண்ட வேங்கையாக மாறி, " நீ என்னடி நெனச்சிட்டு இருக்க என்ன அவனுக்கு ரொம்ப பரிந்து பேசிட்டு இருக்க?? அதுவும் என் முன்னாடி" என்று வினவ,
அதைக்கேட்ட அவளோ அவன் அழுத்தி பிடித்த வலியிலும் , " அவன் என்னோட காதலன் அவனை தான் நான் உயிருக்கு உயிரா நேசிக்கிறேன் " என்றாள் ஹிமானி.. போட்டு உடைத்தே விட்டாள் இத்தனை நாட்கள் மிஹ்ரான் மற்றும் தருண் மட்டுமே அறிந்த ரகசியத்தை இன்று அவளது கணவனிடம் போட்டு உடைத்தாள் அதை கேட்ட அவளது கணவன் அதிர்ந்தான்...
அதில் அவனது பிடி தளர , " அப்போ மிஹ்ரான்" என கேட்க
"அது நீங்க எல்லோரும் அப்படி நினைச்சிட்டு இருக்கீங்க நீ சொன்னியே காதலன் காதலன்னு அது மிஹ்ரான் இல்லை இவன் தான் இவன்தான் காதலிச்சு உயிருக்கு உயிராக நேசித்தேன் "என்று அவள் கூற
"நீங்கதான் பணக்காரங்க ஒரு ஏழைய மனுசனா நீங்க மதிக்க மாட்டீங்க என்னோட அப்பாகிட்ட என்னால சொல்ல முடியாது அதுக்காக பொய்யான கல்யாணம் செய்ய தான் நாங்க பிளான் பண்ணினோம்" என்று அவள் கூற அதைக் கேட்ட அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை ..
என்ன இவனையா இவள் நேசிக்கிறாள் என் எண்ணியவனுக்கு இவள் விஷயத்தில் மேலும் முட்டாளாகி போனோமே என்ற எண்ணம் அவனுள் எழுந்தது என்னவோ உண்மைதான் அதிலும் ஆர்யாவின் கண்கள் எப்போதும் மிஹ்ரான் மற்றும் ஹிமானியை சுற்றி இவனது கண்கள் இருக்க இவளோ அவனுக்கே தண்ணி காட்டி இருக்கிறாள் என்ற விஷயம் அறிந்தவன் மிகுந்த ஆத்திரம் கொண்டு மேலும் அவளது கழுத்தை இறுக்கமாக அழுத்தி பிடித்தான்..
அவனது கண்ணில் கொலைவெறி தாண்டவம் ஆடியது, " அப்போ இவன் காதலனா இதுக்காகத்தான் பிளான் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்க?? அப்படி தானே??" என்று அவன் சரியாக கணிக்க ,
"ஆமா நானும் மிஹ்ரானும் உங்க எல்லோரையும் ஏமாத்த தான் கல்யாணம் பண்ற மாதிரி நடிக்கத்தான் பிளான் பண்ணி பெரியவங்ககிட்ட நாங்க காதலர்கள்ன்னு சொன்னோம் அப்போ அவங்களும் நம்பிட்டாங்க அவன்கிட்ட இருந்து டிவோஸ் வாங்கி என் இஷ்டப்படி தருணை கொஞ்ச நாள் கழிச்சு கல்யாணம் பண்றதா தான் நினைச்சுட்டு இருந்தேன் இடையில நீ தான் புகுந்து எல்லாத்தையும் கெடுத்துட்ட" என்று ஆக்ரோஷத்தோடு கூறிய அவளது செவியில் கொய் என்ற சத்தம் மட்டும் தான் அவளுக்கு கேட்டது உலகமே இருண்டது போல அவளுக்கு தோன்ற அவள் அதை கூறிய அடுத்த நொடி அவளது செவிப்பறை கிழிக்கப்பட்டு இருந்தது ஏதோ ஒரு மூலையில் சுருண்டு விழுவது போல அவள் நினைக்க அதுவே தான் நடந்து கொண்டிருந்தது அவள் ஒரு மூலையில் தான் சுருண்டு விழுந்து இருந்தாள்..
அவள் காதலித்தாள் என்பதை விட இவனை போய் காதலித்தாளே என்பதே அவனுக்கு பெரிய பிரச்சனை ஆகி இருக்க ஒன்றுமில்லாத மிஹ்ரான் அவளுடன் சுற்றுவதையே காதில் புகை வரை பார்த்து கொண்டிருந்தவனுக்கு இப்போது அவன் அல்ல இவன் தான் காதலன் என எல்லோர் காதிலும் பூ சுற்ற எண்ணிய இவளை என்னவென்று சொல்வது என எண்ணி தான் அவன் அடித்தான்..
