ஸ்வரம் 22
ஸ்வரம் : 22
பழைய விஷயத்தையும் இவன் எதற்காக இவளை திருமணம் செய்தான் என்ற செய்தி செய்தியையும் கேட்டு அறிந்த பெரியவர்கள் அதற்குப்பின் அவனிடம் என்ன சொல்வது என தெரியாமல் திண்டாடினார் நிதிக்கு தன் மனைவி தன்னிடம் விஷயத்தை கூறாமல் விட்டாளே என்ற கோபம் தள்ளாடிக் கொண்டிருக்க மதிகெட்டு அவளை அடிக்கவும் செய்தார் அதனால் அவர் அந்த நிலையில் வேறு என்ன பேசுவது என்று தெரியாமல் வெளியேறி இருக்க உபேந்திரா மற்றும் மயூரா வெளியேறி இருந்தனர்
அனைவரும் சென்ற ஆகி விட வேண்டும் ஏனெனில் விஷயத்தை எல்லாம் கூறிக்கொண்டு அவன் அவனது வேலை முடிந்தது என்பது போல அவன் சென்றுவிட்டான் அவளது குடும்பம் சென்று விட அவள் தான் அந்த பெரிய ஹாலில் யாரும் இல்லாத அனாதை போல நின்று கொண்டிருந்தாள் அவளுக்கு எதுவுமே விளங்கவில்லை
நான்கு வயதில் திருமணமா அதை மனதில் வைத்துக் கொண்டு ஒருவன் அவளை திருமணம் செய்வதா என எண்ணி அதை எல்லாம் மனதில் வைத்து திருமணம் செய்வதா ஏதோ பெரியவர்கள் இப்படி ஒரு வேலையை செய்தார்கள் என்றால் அதை கொடி பிடித்து வருவதா என எண்ண அவளுக்கு நடந்த சம்பவங்கள் எதுவுமே ஞாபகம் இல்லை அப்படி நியாபகம் இருந்தாலும் ஏதோ ஒரு சடங்கு தானே அதை தூக்கிக் கொண்டு ஒருவன் இப்படி நிற்பான் என அவள் நினைக்க அவளுக்கு பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது நான்கு வயதில் திருமணம் இப்பொழுது 24 வயதிலும் திருமணம் ஆகி இருக்க இப்பொழுதும் என் மனம் தருணை தானே எண்ணிக் கொண்டிருக்கிறது இந்த திருமணம் கூட அவனுக்கு நான் செய்த துரோகம் ஆகத்தானே எண்ணுகிறேன் என்றெல்லாம் எண்ணிக்கொண்டு இருந்தவள் அவனிடம் பேசிய ஆகவேண்டும் என முடிவெடுத்தாள்..
அவர்கள் சென்றதும் முக்கியமான ஒரு மீட்டிங் ஸ்டோரி டிஸ்கஷன் என்று கூறி ஒரு சில பெரிய டைரக்டர்கள் ஆர்யாவின் வீட்டுக்கு வர அவனது ஆபீஸ் அந்த பெரிய வீட்டின் பின் பகுதியில் இருக்க அங்கு சென்று விட்டான்..
அவளுக்கு அப்பொழுதும் பேச முடியாமல் போனது அவனது வருகைக்காக அவள் காத்திருந்தாள் காத்திருந்து காத்திருந்து அவளது கண்கள் பொய்த்துப்போனது என்றுதான் கூறவேண்டும் ஏனெனில் டிஸ்கஷன் என சென்ற ஆர்யா கிட்டத்தட்ட மாலை வரை சமயம் எடுத்துக்கொண்டான்.. எப்பொழுதும் அவன் அப்படித்தான் ஒரு கதை என்றால் அதை சும்மா கேட்டோம் ஏனோதானோவென செய்யமாட்டான் அதில் முடிந்த அளவு தனது ஈடுபாட்டை கொடுப்பான்..
முதலில் அவன் கேட்ட அந்த கதை அவனுக்கு பிடிக்க வேண்டும் அந்த கதையின் அடி முதல் நுனி வரை அவன் அலசி ஆராய்ந்த பிறகே அதை ஒப்புக் கொள்வான் அதிலும் இப்பொழுதெல்லாம் அவனுக்கு என்றொரு பெயர் வெளியே வந்ததும் அவன் தீவிரமாக கதைகளை விசாரித்து நடிக்கிறான் அது எவ்வளவு பெரிய டைரக்டர்கள் ஆனாலும் அவன் அந்த கதையில் அவனது பங்களிப்பு எந்த விதத்தில் இருக்கிறது கதையின் நோக்கம் என்ன என்று பலவிதமாக ஆராய்ச்சி செய்த பின்னரே அவன் நடிப்பான் அதனால் கிட்டத்தட்ட மாலை வரை டிஸ்கஷன் சென்றது மாலை வரை அவன் அங்கு எட்டிப் பார்க்கவில்லை அவளும் அதையே கதி என முடங்கிப் போனாள் அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை நிலைமை அவனது கையை விட்டு செல்லும்படியாக அவளுக்கு தோன்ற துவங்கியது..
அன்றைய இரவு படுக்கையில் படுத்து இருந்தவளுக்கு ஒரே சந்தேகம் அப்பொழுதும் அவன் அங்கு இல்லை..வரும் எண்ணம் அவனுக்கு இல்லை போலும்..
ஆம் அவன் அவர்களது அறைக்கு வெளியே ஒரு சிறிய பார் போன்ற அமைப்பு இருந்தது..வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அது அழகான கண்ணாடி குடுவை போன்ற விளக்குக்களால் அலங்கரித்த அறை போல இருக்கும் ஆனால் அது முழுவதும் அவன் ஒவ்வொரு முறை வெளிநாடு சென்ற போதும் அவனுக்கு பிடித்த சரக்குகளை வாங்கி வந்து அடுக்கி வைத்து இருந்தான்..அதில் அவனுக்கு பிடித்த சரக்கை எடுத்து அந்த அழகான கப்பில் ஊற்றி ஒரு சிப் குடித்து கொண்டே மெலிதான பாடல்களை கேட்டு கொண்டிருந்தான் அதில் அவனுக்கு ஒரு ஆனந்தம் எப்போதும் கிடைக்கும் தனிமையில் இருக்கும் போதெல்லாம் பாட்டும் சரக்கும் தான் அவனுடைய துணை அப்படி இருக்க அவள் இருக்கும் அறைக்கும் கூட செல்லாமல் அவன் அங்கு இருக்க அவனை இன்னும் காணவில்லையே என நினைத்து அவனை தேடி வெளியே வந்தவளுக்கு பாட்டு மெலிதாக கேட்க அவ்விடத்திற்கு சென்றாள்..
அங்கு அவன் அவனது கண்ணாடி கிளாசுக்கு சூழலும் மிதக்கும் பனிக்கட்டிகளை பார்த்துக்கொண்டே அவனது இதழ்கள் மெல்லிய பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே இருக்க அவள் மெல்ல அவன் அருகே சென்றாள்..
அவளது மூச்சு காற்றை கொண்டே அவள் இவ்விடம் இருக்கிறாள் என்பதை அறியும் அவனுக்கு அவளது வாசத்தையும் அவள் வருகையையும் வைத்து அவள் தன் அருகே வந்து கொண்டிருக்கிறாள் என்று அறியாத குழந்தை அல்லவே அவன் ..அவள் வரவும் மெல்ல நிமிர்ந்து அவளை பார்த்தான்..
அவனது பார்வையில் திக்கென தோன்றும் உணர்வை கட்டுப்படுத்தியவள் அவனிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என தெரியாமல் அவளோ அவனைப் பார்த்து, " தூங்கலையா??" என வினவ மெல்லிய புன்னகை அவனிடமிருந்து வெளிப்பட்டது ..
அதை கண்டவளுக்கு குப்பென சிவந்து எதற்காக அவன் சிரிக்கிறான் என எண்ண அவளோ மெல்ல தலையை குனிந்து தன் முடியை கோதி காதிடுக்கில் சொருகி விட்டு தனது சிவப்பை மாற்ற முயற்சி செய்தாள் ஹிமானி..
இப்படி அவன் பார்வையிலேயே நீ வெட்கப்பட்டுட்டு இருந்தா நீ பேச வந்த விஷயம் மறந்து போயிடும் கொஞ்சம் அவன்கிட்ட கேளு என்று அவளது மனசாட்சி அவளுக்கு அறிவுரை கூறியது
அப்படி இருக்க , "நான் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா??" என்று வினவ ஹ்ம்ம் என்ற பதிலை அவளை குறுகுறுவென பார்த்துக்கொண்டே பதில் அளித்தான்...
" ஏதோ சின்ன வயசுல அவங்க அப்படி செஞ்சாங்கன்னு சொல்லிட்டு இப்போ இப்படி கல்யாணம் செய்து கொள்வது சரியா பேசாமல் எல்லோர்கிட்டேயும் சொல்லி இருக்கலாமே??" என்று அவன் வினவ ,
"ஏன் பண்ணிக்க கூடாது அப்பவும் நீ என்னோட மனைவி தானே இப்பவும் நீ என்னோட மனைவி தானே என் பொண்டாட்டிய நான் கைய பிடிச்சு கூட்டிட்டு வந்ததுல என்ன தப்பு??" என்று வினவ ,
அதை கேட்டு அவளோ விழித்து,"ஆனால் அந்த இடைப்பட்ட காலம் 20 வருஷம் எனக்குன்னு ஒரு வாழ்க்கை இருந்து இருக்கு எனக்கு இந்த விஷயத்தை நம்ப கூட முடியல" ,என்று அவள் கூற ,
அதைக் கேட்ட அவனும், " அப்படியா அப்போ நம்பாத உன்னை நம்ப சொல்லலையே ஆனால் இப்போ உனக்கு அறிவு இருக்கு தானே இப்போ உனக்கு நியாபகம் இருக்கு தானே அப்போ இப்போவும் நான் உனக்கு தாலி கட்டி இருக்கேன் தானே அப்போ நீ எனக்கு இப்போ பொண்டாட்டி தானே ஆனா 20 வருஷத்துக்கு முன்னாடியே நீ என் பொண்டாட்டி ஆகிட்ட அது தான் உண்மை" எனக் கூற
அவனது பதிலைக் கேட்டவள் இவனிடம் எப்படி பேசுவது என குழம்பி , "அப்போ என்னோட விருப்பங்கள் எல்லாம் நீ நெனச்சு கூட பார்க்க மாட்டியா???" என கேட்டாள்..
அதைக்கேட்ட அவனும், | நான் தான் வில்லன் ஆச்சே நான் இதையெல்லாம் நினைத்துப் பார்ப்பன்னு நீ எப்படி எதிர்பார்க்கலாம் எனக்கு ஒரே குறிக்கோள் தான் உன்னை என்கிட்ட திரும்ப கூட்டிட்டு வரணும்னு நான் கூட்டிட்டு வந்துட்டேன் அவ்வளவு தான்" என்று கூற,
" அப்போ நான் இப்படி பிடிக்காமலேயே உன் கூட வாழ்ந்த உனக்கு ஓகே தானா??" என்று அவன் கேட்க அதை கேட்டு அவன் சிரித்த படி ஒரு மிடறு அவனது கப்பில் உள்ளதை குடித்தவன், " யார் சொன்னா பிடிக்கலைன்னு எனக்கு ஒன்னும் அப்படி தெரியல நீ நல்லா பிடிச்ச மாதிரி தான் இருக்க" என்று கள்ளத்தனமாக அவளை பார்த்துக் கொண்டே அவன் மேலும் ஒரு சிப் அருந்திக்கொண்டு கூற,
அதை பார்த்த அவளோ மேலும் அவள் முகம் சிவந்து போக அதனுடன் அவளது கோபமும் போட்டி போட்டுக் கொண்டது எப்படி எல்லாம் பேசறார்ன்னு பார் சண்டை போடனும்ன்னு நினைச்சேன் இப்படி பேசியே ஏதாவது செஞ்சிடலாம் என்று மனதுக்குள் கொடி பிடித்து கொண்டு அவனிடம் வந்தவள் , "உனக்கு உன்னோட இஷ்டம் தான் முக்கியம்மா??" என்று கேட்க,
" கண்டிப்பா என்னைப் பொறுத்தவரை என்னுடைய விருப்பங்கள் தானே முக்கியம் "என்று கூறியவன் மேலும் அவளை பார்த்து, "அப்படி நான் விரும்புவதை அடைவதில் தானே ஒரு கிக் இருக்கு அதனாலதான் உன்னை அடைந்து இருக்கேன்" என்று கூறியவன், " இதோ பாரு இத பத்தி மறுபடி-மறுபடி பேசிட்டு இருக்காத நான் தான் சொல்லிட்டேனே உன் மனசுல யார் இருந்தாலும் எனக்கு கவலை இல்லைன்னு ஆனா நீ என்னோட மனைவி எப்படின்னு நான் சொல்லிட்டேன் அதனால இத பத்தி பேசாத இப்போ தூங்க போகலாமா???" எனக் கூறிவிட்டு அந்த கடைசி சிப்பை வேகமாக குடுத்து விட்டு அவளருகே வந்தவனுக்கு அவளை கண்டது முதல் மோகம் கரை புரண்டு ஓட அந்த மெல்லிய பாடலில் கரைந்து உருகி கொண்டே அவளது தோளை தொட்டு இடுப்பை ஒரு கையால் வளைத்து அவளுடன் இரு நிமிடம் மெலிதாக நடனம் புரிந்தவனின் விரல்களும் ஜாலத்தை துவங்க அவளும் அவனது தொடுகையில் கரைந்து உருகி கொண்டு இருக்கிறாள் என்பதை உணர்ந்து அவன் அவளை அழைத்துக் கொண்டு சென்றான்..
அவளுக்கு இவனிடம் எப்படி புரியவைப்பது என்றே தெரியவில்லை ஆனால் தன்னுடல் தன் மனதோடு ஒப்பாமல் இருக்கிறதே என எண்ணியவள் தன்னை எண்ணியே வெட்கியவள் இதுவரை மிஹ்ரான் தான் காதலன் என எண்ணிக் கொண்டிருக்கிறான் அவன் அல்ல காதலன் தருண் என்பது தெரிந்தால் என்ன நேருமோ என அவளுக்கு எண்ணும் போதே பயம் தொற்றி கொள்ள அவனுக்கு ஒரு வேளை தெரிந்து இருக்குமோ என எண்ணி மேலும் பயந்தவளை அதற்கு கூட அவளது கணவன் இடம் கொடுக்கவில்லை போலும் அவர்களது அறையை அடையும் வரை தான் அவளுக்கு யோசிக்க அவகாசம் கொடுத்தான் அதற்கு பிறகு அவன் யோசிக்கக் கூட அங்கு அவகாசம் அவளுக்கு கொடுக்கவில்லை..
**************************
இரண்டு நாட்களுக்கு பிறகு ஹிமானி அவளது அறையில் இருக்கும் பொழுது காலையிலே ஏதோ வேலை இருப்பதாக அவன் வெளியே செல்ல அவளும் அந்த வீட்டின் மேல் பகுதியில் இருக்கும் ஜிம்மிற்கு தயாராகி கொண்டிருக்க எங்கேயோ ஒரு சத்தம் கேட்டது அந்த சத்தம் எங்கே என அவள் சத்தம் வரும் திசையில் கேட்க அந்த சத்தம் பலத்த அலரலுடன் கேட்டது..
வேகமாக ஓடி அவளது அறையில் இருந்து வந்தவளுக்கு அந்த சத்தம் அதிகமாக கேட்பது போல இருந்தது ஆனால் அந்த வீட்டில் வேலை செய்யும் யாருக்கும் சத்தம் போலவே அல்லாமல் அவர்கள் அவர்களுடைய வேலையை செய்து கொண்டு இருக்க அவர்களை எல்லாம் ஒரு மாதிரியாக பார்த்து விட்டு எங்கிருந்து வருகிறது என எண்ணி வீட்டின் பின்பக்க தோட்டத்திற்கு செல்ல அது ஆர்யாவின் ஆபீஸ் உள்ள இடம் அங்கு யார் இப்படி கதறுகிறார்கள் என எண்ணிக்கொண்டே மேலும் வெளியே சென்றவன் எப்போது வந்தான் என யோசித்து கொண்டே அவள் செல்ல அருகே செல்லவும் அந்த அழுகுரல் , "வேண்டாம் விடுங்க விடுங்க நான் இனி அப்படி செய்ய மாட்டேன்" என்று கூறிய சத்தம் அவளது செவிப்பறையை கிழித்துக் கொண்டு சென்றது ..
ஏனெனில் அந்த சத்தத்தை போட்டது தரும் தான் அந்த ஆபீஸ் முழுவதும் அடைக்கப்பட்டு இருக்க ஒரு நூல் இழை கூட உள்ளே நடக்கும் விஷயங்களை வெளியே இருந்து பார்க்க முடியாத படி திரைச்சீலைகள் மூடப்பட்டிருந்தது கதவு அடைக்கப்பட்டு இருக்க உள்ளே தருண் தான் கதறிக் கொண்டிருந்தான்..
அவனது சப்தம் தான் வெளியே இருந்து கேட்கும் அவளுக்கு தெரியாதா??, " என்னை விடுங்க இனி நான் ஷிமானி பக்கம் கூட வரமாட்டேன் என்னை விட்டுடுங்க என்று அவன் கதறிக்கொண்டே இருக்க, " உனக்கு அந்த நினைப்பு வேற இருக்கா நீ பக்கம் வந்து தான் பாரேன் வந்தா என்ன நடக்கும்னு காட்டுறேன்??" என்று கூறிக்கொண்டே ஆர்யா ஆத்திரத்தில் அடிக்கும் சத்தமும் அவளுக்கு மெலிதாக கேட்டது.
அதை கேட்டவளுக்கு சர்வமும் நடுங்க அவனுக்கே தெரிந்து விட்டதே என்ற பயமும் தருண் மாட்டி கொண்டானே என்ற வருத்தமும் சேர்ந்து அவளது நெஞ்சாங்க்கூட்டை ஓட்டை ஆக்கி கொண்டு இருக்க மேலும் அவளது மூளை இது தருணின் குரல் அல்லவா யோசித்து அது அவனே தான் என மூளை அவளுக்கு பதில் அளிக்க பயத்தால் அவளது கை கால்கள் நடுங்கிக் கொண்டிருக்க எந்த பக்கம் கதவு என முழித்து வேகமாக கதவு இருக்கும் திசை நோக்கி சென்ற அவளுக்கு மூளை மரத்துப் போனது என்னவோ உண்மை தான் வேகமாக அந்த அறை கதவை பட பட வென தட்டினாள் ஹிமானி.. அவள் மனமோ ஐயோ தருண் மாட்டி கொண்டாயே என்று நினைக்க ஐயோ இப்படி மாட்டி விட்டேனே தருணின் மனமும் பயத்தால் அதிர்ந்து கொண்டு இருந்தது..இவர்களுக்கு இடையே ருத்ர மூர்த்தியாக ஆர்யா நின்று கொண்டு இருந்தான்..
ஸ்வரம் இசைக்கும்..
