ஸ்வரம் 21
ஸ்வரம் 21
இப்படியே இரு வருடங்கள் கழிய சாராவின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது அவர் படுத்த படுக்கையாகி போனார்..மேலும் சுரேஷுக்கும் கொடும் வியாதி ஒன்று வர ஒருவேளை இதனால் தான் இப்படியெல்லாம் நடக்கிறதோ என அந்த ஜோசியர் கூறியதை எண்ணிக் கொண்டே இருந்தனர் ..
உத்ரகேஷ் மற்றும் சுரேஷ் அவர்கள் இருவரும் மீண்டும் கூடி பேச மீண்டும் அந்த ஜோசியரை அழைத்தனர் அவரோ மீண்டும் இவர்களின் ஜாதகங்களை பார்க்க அப்போது ஆர்யாவுக்கு ஒன்பது வயசு ஹிமானிக்கு நான்கு வயசும் ஆகியிருந்தது ..
அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு என்ன கூறினாரோ அதையே மறுபடியும் கூறி, " இனியும் காலம் தாமதிக்காதீர்கள் வேகமாக திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் மேலும் முக்கிய குறிப்பாக இது பிள்ளைகளின் தந்தைக்குகளுக்கு தெரிய வேண்டாம் அது அவர்களுக்குப் பெருத்த ஆபத்தாக முடியும் அதனால் தாய்மார்கள் மட்டுமே இந்நிகழ்வை காண வேண்டும் வேறு யாரும் வேண்டாம்..
மேலும் உங்களுக்கு விஷயம் தெரியும் ஆதலால் நீங்கள் வேண்டுமானால் இருந்து கொள்ளுங்கள் ஆனால் உங்களைத் தவிர வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரிய கூடாது "என்று கூற நிலைமை கருதி சுரேஷ் மற்றும் உத்ரகேஷ் சம்மதித்தனர்..
அதன்படி தங்கள் மகள்களிடம் இதனை கூற அவர்களும் குடும்ப நலன் கருதி சம்மதித்தனர்..சாராவும் இப்படியாவது தான் நலம் அடைவோமா என நினைக்க பாயலும் எல்லோரின் நலம் கருதி சம்மதித்தார்.. இதன் மூலம் உத்ரகேஷ் பாரம்பரிய குடும்ப வீட்டில் தான் பால்ய விவாகம் நடப்பதற்கான சம்பிரதாயங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தனர்
அதன்படி உத்ரகேஷ் வேறு பேரமகனை லீவுக்கு அழைத்து வர அவனும் மிக மகிழ்ச்சியாக வந்தான் அவனிடமும் விஷயத்தை தெளிவாக கூறி இருக்கவில்லை வயது ஒன்பது வயது ஆனாலும் ஆர்யா புத்தி கூர்மை உள்ள சிறுவன் ஹிமானியோ சிறுபெண் இன்னும் அவளுக்கு விவரம் வரவில்லை அப்படி இருக்க இரு சிறு சிறார்களுக்கும் புத்தாடை உடுத்தி அவர்களை மண மேடையில் அமர வைக்க ஆர்யா மட்டும் , "எதுக்காக இப்படி உட்கார வைக்கறீங்க" என்று கேட்டான்..
அவன் லீவுக்கு வரும்போதெல்லாம் ஹிமானியை பார்ப்பான் அவனுக்கு அவளை ரொம்ப பிடிக்கும் டால் போல இருக்கும் தன் மாமன் மகளை மிக ரசிப்பான் எப்பொழுதும் தூக்கிவைத்து கொஞ்சிக் கொண்டே இருப்பான் அப்படி இருக்க அவன் அலங்காரம் எல்லாம் செய்து அவளை அமர வைக்கவும் அந்த 4 வயது சிறுமியை கையில் ஒரு லாலிபாப் வைத்துக்கொண்டு இருக்க பெரியவர்களுக்கு இவன் கேட்ட கேள்வி அனைவரையும் தூக்கிவாரிபோட்டது..
அவர்களோ காதும் காதும் வைத்தபடி ஒரு நபருக்கும் தெரியாமல் செய்ய முடிவெடுத்தனர் அதனால் சம்பவம் நடக்கும் அன்று கூட வேலைக்காரர்கள் முதற்கொண்டு யாரும் அங்கு இல்லாமல் பார்த்துக் கொண்டனர் விளக்கு கூட இடாமல் கிட்டத்தட்ட அந்த அறைக்குள் இவர்கள் மட்டுமே இருக்கும்படி பார்த்து திருமணத்தை நடத்த என்ன நடக்குது இங்க என ஆர்யாவின் கேள்வியை பார்த்து, " ஒன்னும் இல்லப்பா ஒரு சின்ன பூஜை நான் சொல்றபடி செய் " என்று பாயல் கூறினார் ..
அவனும் குழம்பி அவர்கள் சொல்வது போல செய்ய பிறகு மங்கல்சூத்ராவை கொடுத்து அவளது கழுத்தில் கட்ட சொல்ல அவனும் அது என்ன என விளங்காமல் அவர்களது கழுத்தில் கட்டினான் ..
அன்று விளங்காத வயதில் திருமணம் நடக்க என்ன தான் ஆர்யா கேள்வி கேட்டாலும் யாரிடமும் தெளிவான பதில் கிடைக்கவில்லை என்றாலும் அவனுக்கு அவன் செய்தது என்ன என்று பின்னாளில் புரிய வந்தது..
என்று அவனுக்கு அவன் செய்த செயல் புரிய ஆரம்பித்ததோ அன்றிலிருந்து அவளை தன் மனைவியாக அவன் காண துவங்க விஷயம் அறிந்த மூன்று பேர்களும் பின்னாளில் இறந்து போக பாயல் மட்டும் உயிரோடு இருக்க அன்றே பெரியவர்கள் கூறியிருந்தனர் இது ஏதோ சடங்கு என்ற ரீதியில் நடந்தது தான் இதை எல்லாம் மனதில் வைத்து கொள்ள வேண்டாம் அவர்கள் பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்கு என்ன எழுதி வைக்கப்பட்டு இருக்கிறதோ அது நடக்கட்டும் என்று கூறி இருக்க பாயலும் காலப்போக்கில் விஷயத்தை மறக்க அது இந்தளவுக்கு கொண்டு வந்து நிற்கும் என அவர்கள் நினைக்கவில்லை ..
மேலும் குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் நிகழ தான் செய்யும் ஆர்யாவின் தாய் சாரா இறந்ததும் ஆர்யா மேலும் சுருங்கி போனவன் தன் தந்தை வழி தாத்தா உத்ரகேஷுடம் வளர ஆரம்பித்தவனுக்கு அவனது தாய்க்கு பின் தாத்தா மட்டும் போதும் வேறு யாரும் வேண்டாம் என்று அவனாகவே இவர்கள் மீது வெறுப்பை வளர்த்து கொண்டான் தந்தை மீதுள்ள கோபம் தாய் மாமன் மீதும் வந்தது சொந்த தங்கை வாழ்க்கையை கவனிக்க தவறிய மனிதன் தங்கையை விட நண்பனுக்கு துணை போனவன் என நிதிஷ் மீது வெறுப்பை வளர்த்திவனுக்கு தன் தந்தை உபேந்திராவை பற்றி கூற தேவையில்லையே வெறுப்பின் உச்சியில் இருக்க பல முறை அவர் அவனை காண வந்தும் சந்திக்காமல் அனுப்பினான்..அவருக்கே அந்த மரியாதை எனில் அவருடைய இரண்டாம் குடும்பத்துக்கு மரியாதை கிடைக்குமா என்ன இப்படி தாய் நட்டு வைத்த விதை இப்போது விருட்சமாக வளர்ந்து நிற்க அவன் தனி மரமாகி போனான்..யாரும் வேண்டாம் என ஒதுங்கி தான் இருந்தான் அவனவளை தவிர,
ஆனால் பாயலுக்கு இப்போது நடப்பதும் நன்மைக்கே என்று தான் தோன்ற அதனால் அவர் மட்டுமே இந்த திருமணத்தை எதிர்க்காமல் அமைதியாகி விட அவர் கூறியதை கேட்டு அனைவரும் அதிர மயூரா மட்டும் இனியும் என்ன எல்லாம் மறைச்சு வெச்சு இருக்காங்களோ என புலம்ப தன் மனைவி இப்படி ஒரு செய்தியை தன்னிடம் கூறாமல் இருந்து விட்டாலே என நிதிஷ் அதிர அவரது பார்வையை பாயலால் ஏற்று கொள்ளமுடியவில்லை..நல்லதுக்கு செய்ய என்னிடம் எப்படி மறைக்க முடிந்தது என எண்ணிய நிதிஷ் அனைவர் முன்னிலையிலும் தன் மனைவியை அடித்து இருந்தார்..
நாடு எவ்வளவோ வளர்ந்து இருக்க தன் மகளுக்கு பால்ய விவாகம் செய்ததை எண்ணி அவர் அடிக்க அவர் இதை செய்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை ஆனால் ஆர்யா இதை எண்ணி தான் என்னை தொடர்கிறானா என ஹிமானி எண்ண அவனோ என்ன ஆனாலும் சரி நீ எனக்கு மட்டும் தான் என கர்வத்தோடு அங்கு நடந்து கொண்டு இருக்கும் பார்வைகளை புறம் தள்ளி கொண்டு அமர்ந்திருந்தான் ஆர்யா..
உன் மேல் கோபம் கொண்டாலும் காதல் கொண்டாலும் நீ என்னவள் எனக்கானவள் மட்டுமே நீ எந்த அளவு சென்றாலும் உன்னை தொடர்வேன் என அவன் எண்ணி தான் அவன் அனைத்துக்கும் தயாராக இருக்க அது எதுவும் யாருக்கும் புரியாதது ஆர்யாவின் தவறு இல்லையே????...
பாயல் அழுவதை பார்த்து , "மிஸ்டர் நிதிஷ் உங்க டிராமா எல்லாம் வெளியே வைச்சுக்கோங்க உங்க பொண்ணை கொடுமைப்படுத்துறேனான்னு பார்க்க வந்துட்டு நீங்க என்ன செஞ்சுட்டு இருக்கீங்க " என்று நக்கலாக கேட்டவன் அவர்கள் அனைவரிடமும் பொதுவாக அவளுக்கும் கேட்கட்டும் என்ற விதத்தில், " இங்கே பாருங்க நான் என் பொண்டாட்டியை அடிச்சாலும் அணைச்சாலும் என் பொண்டாட்டியை நான் எங்கேயும் விடறதா இல்லை சோ அந்த கவலை வேண்டாம்..நீங்க பஞ்சாயத்து பண்றதுக்கு எல்லாம் நான் குறைஞ்சு போயிடல அண்ட் உங்க பொண்ணை எப்போ வேணாலும் வந்து நீங்க பார்க்கலாம் ஆனால் என் மனைவியை இங்கே இருந்து கொண்டு போகணும்னு நினைச்சா நான் சும்மா விட மாட்டேன் " என்று எச்சரித்து விட்டு தன் வேலை முடிந்து என்பது போல அவன் சென்று விட்டான்..
ஸ்வரம் இசைக்கும்...
