ஸ்வரம் 20
ஸ்வரம் : 20
தன் தந்தை சுரேஷ் வீட்டில் சாராவுடன் அவரது ஐந்து வயது மகனான ஆர்யா அமர்ந்திருந்தான் அவன் முகம் அந்த சிறு வயதிலும் கோபத்துடன் இருந்தது..
"அம்மா எல்லாரும் சொல்றாங்க அப்பாக்கு அந்த நடிகை மயூரா கூட கல்யாணமாமே அப்படியா நாம இனி அப்பா கூட இருக்க முடியாதா ??" என்று வினவ ,
அதைக்கேட்ட சாரா கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு, " உனக்கு அப்பா கிட்ட போகணும்னா போகலாம் ஆனா இனி உன் அப்பாவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்படித்தான் சட்டம் சொல்லுது நீ சின்ன பையன் உனக்கு ஐந்து வயசு ஆகிடுச்சு இதெல்லாம் உன்கிட்ட சொல்லலாம்னு எனக்கு தெரியல ஆனா எனக்குன்னு என்னுடைய ரத்தம்ன்னு எனக்கு இருக்கிற ஒரே சொந்தம் நீதான் என்னை சுத்தி ஆயிரம் பேர் இருக்கலாம் ஆனா உன்னை போல வராது அதனால உன்கிட்ட நான் சொல்றேன் நானும் அப்பாவும் பிரிந்துவிட்டோம் எங்களுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கல அப்பாவுக்கு மயூராவைத்தான் பிடிச்சிருக்கு என்னை உங்க அப்பாவுக்கு பிடிக்கலை பிடிக்காத வாழ்க்கை வாழ எனக்கு விருப்பமில்லை" என்று கூற,
ஐந்து வயது சிறுவனான ஆர்யாவுக்கு தன் தந்தை மீது கோபம் தன் தாய் அழுகிறாள் என்ற வருத்தம் இருந்தது என்னவோ உண்மைதான், " அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் அம்மா அப்புறம் ஏன் இத்தனை நாள் என்னை பார்க்க வரல??" என்று கூற ,
"ஆமா உன்னை பிடிக்கும் ஆனா இப்போ மயூராவை பிடிக்கும்" என்று கூற அதைக்கேட்டவனோ , " நான் இனி அப்பா வேணும்னு உங்ககிட்ட சொல்ல மாட்டேன் மா" ...என்று கூற,
சாராவும் , "நீயாவது என் கூட இருப்பியா??" என்று வினவ , "அம்மா எனக்கு நீங்க தான் வேணும் நான் உங்கள விட்டு எங்கேயும் போகமாட்டேன் அம்மா" என்று கூறினான் ..
ஆர்யா அப்போது முதல் தன் தந்தையின் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டான்..ஆனால் இதில் சாராவையும் குறை கூறியே ஆக வேண்டும் அவருடைய வறட்டு பிடிவாதம் தான் இதற்கு எல்லாம் அடிகோல் அதை ஒப்பு கொள்ள மனமின்றி மகனிடம் அவர் பக்கத்துக்கு நியாயத்தை மட்டும் கூறி அவனை வளர்த்தினார்..அதனால அவன் அந்த சிறு வயதிலேயே தன் தந்தை மீது வெறுப்பை வளர்த்தி கொண்டான்..
ஆர்யா அவன் தந்தையை விட்டு இங்கு வந்த இரண்டு வருடங்களில் அவளது தாய் அழாத நாள் இல்லை உபேந்திரா விட்டு பிரிந்து வந்தாரே ஒழிய அவரால் உபேந்திராவை மறக்க முடியாமல் திணறிக் கொண்டு தான் இருந்தார் ..
ஆனாலும் அவருடைய ஈகோ உபேந்திராவிடம் செல்ல ஒத்துழைக்கவில்லை அப்படி இருக்க மகனுடன் சுரேஷ் அவருக்கு கொடுத்த வீட்டில் தங்கியிருந்தார் சாரா..
தாய் தந்தை பிரிவால் ஒரு பக்கம் நிம்மதி இழந்தார் எனில் மறுபக்கம் ஆர்யாதான் துன்பப்பட்டான் அனைவரும் மிக சந்தோஷமாக இருக்கும் பொழுது தான் மட்டும் வருத்தத்தில் இருப்பது போலவே அவனுக்கு தோன்றியது ஐந்து வயது சிறுவனுக்கு பெரிதாக ஒன்றும் கூற தெரியவில்லை என்றாலும் எல்லோரும் எங்கு சென்றாலும் அவனை பார்ப்பது போலவே தோன்றியது அது அவனுக்கு ஒரு மாதிரியான நெருடலை கொடுத்தது
அதில் தவித்து வந்தவனுக்கு தன் தாய் மாமனை மிகப் பிடிக்கும் தாய்மாமனுக்கு குழந்தைகள் வேறு இல்லாத சமயத்தில் அவனது சிறு வயதில் அவரது மனைவியும் தன் தந்தையின் சகோதரியான பாயலை மிகவும் பிடிக்கும் எப்பொழுது பார்த்தாலும் இவரை தூக்கி வைத்து கொஞ்சுவார்கள்..தற்போது பாயல் வேறு கர்ப்பம் அடைந்து இருந்தார்.. அவர்களிடம் கூட இவனால் ஒட்ட முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டான் ஆர்யா ..
சாரா இதையெல்லாம் பார்த்து மகன் வளரக்கூடாது என போர்டிங் ஸ்கூலில் அவனை ஐந்து வயதிலேயே சேர்த்துவிட லீவுக்கு வரும்போது தான் இந்த சோதனை நடந்து கொண்டிருந்தது..
உபேந்திரா அவர்களை பிரிந்த வருடமே மயூராவை திருமணம் செய்து அடுத்த வருடமே அந்த மயூரா உடன் ஒரு குழந்தையையும் பெற்றுக் கொண்டார் அந்த விஷயம் அறிந்ததும் சாரா மிகவும் நொந்தார் ..
சாராவுக்கும் உபேந்திராவுக்கும் என்ன பிரச்சினை என்றால் அவர்களுக்குள் உள்ள ஈகோ பிரச்சினை மட்டும் தான் அந்த ஈகோவால் உபேந்திராவுக்கும் சாராவுடன் செல்ல தோன்றவில்லை சாராவுக்கும் தோன்றவில்லை..
ஆனால் இருவருக்கும் அந்த பழைய பாசம் உண்டு என்பது என்னவோ உண்மைதான் அதை இருவரும் வெளிக்காட்டி கொள்ளவும் இல்லை இருவரும் வெளிப்படுத்தாத போது மயூரா வந்து உபேந்திராவிடம் சாய உபேந்திரா ஒரு பெண்ணுக்கு இவ்வளவு திமிர் இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்கும் என்ற ஒரே ஒற்றை வரியில் மயூராவை திருமணம் செய்து கொண்டார் ..
சாராவும் அவருக்கு இருக்கும் கௌரவத்தை விட்டுக் கொடுக்கவில்லை இதற்கு பலியாடு ஆகியது என்னவோ ஆர்யா தான்..
இப்படி சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் தான் சாராவுக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அனைவரின் தலையிலும் சாராவுக்கு கேன்சர் என்ற இடியை இழக்க அனைவரும் அதிர்ந்தனர்
மேலும் சுரேஷின் மகனான நிதிஷ் கபூருக்கு ஒரு செல்ல மகள் பிறந்தாள் அவளுக்கும் கிட்டத்தட்ட இரண்டு வயது ஆகிவிட்டது..
மகள் பிறந்த நேரமோ என்னவோ தெரியவில்லை நடிகராக இருந்த நிதிஷ் தயாரிக்கவும் செய்ய அவருக்கு படங்கள் அனைத்தும் தோல்வி அடைய துவங்கின..
சுரேஷின் மகளுக்கும் இதுபோல நோய் வாய்ப்பட நிதிஷ் குடும்பத்தில் பல பிசினஸ்கள் தோல்வியின் பாதைக்கு செல்ல துவங்கின அதனால் பெருத்த அடி வந்தது என்ன செய்வது என்று சுரேஷ் மற்றும் உத்ரகேஷ் இருவரும் கலந்து பேசி ஊரிலேயே ஒரு பெரிய ஜோதிடரை சந்திக்க முடிவெடுத்தனர்..
சுரேஷ் விஷயத்தை எடுத்து போட உத்ரகேஷ் மனமும் அதையே தான் கூறியது ஏனெனில் அவருக்கும் உபேந்திராவின் நிலையை எண்ணி வருத்தம் தான் உபேந்திரா விபத்தாகி படுத்து இருந்தார்..எல்லாம் கொண்டும் இரு குடும்பத்துக்கு பிரச்சனையாகி விட என்ன செய்வதென்று புரியாமல் முழிக்க அப்போது தான் ஒரு ஜோசியரை பற்றிய செய்தி அவருக்கு கிடைக்க மிக ரகசியமாக தெரிய சுரேஷ் மற்றும் உத்ரகேஷ் அழைத்தனர்..
அவர் வந்து அந்த குடும்பத்தில் உள்ள அனைவரின் ஜாதகத்தையும் பார்க்க மிகவும் குழம்பிப் போனார் உங்கள் குடும்பத்திற்கு ஏதோ ஒரு சாபம் உள்ளது போல இருக்கிறது அதனால்தான் இப்படி கெடுதலான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன..
அதற்கு இந்த குடும்பத்தின் மூத்த பேரனுக்கும் மூத்த பேத்திக்கும் திருமணம் செய்து வையுங்கள் என்று கூற அதைக் கேட்டு இரு பெரியவர்களும் அதிர்ந்தனர்..
" அவங்க ரெண்டு பேரும் சின்ன குழந்தைகள் என்னோட பேரனுக்கு ஏழு வயசு பொண்ணுக்கு 2 வயசு குழந்தை அந்த குழந்தைக்கு இப்போ எப்படி திருமணம் செய்ய சொல்றீங்க??" என்று உத்ரகேஷ் கூற,
அதைக் கேட்டு அந்த ஜோசியர், " நான் சொல்றதை சொல்லிட்டேன் மத்தபடி உங்களுக்கு தேவைனா செய்யுங்கள் ஆனா செய்யாமல் மட்டும் இருந்தீங்கன்னா கூடுதல் பிரச்சினைக்கு நீங்க ஆளாகி விடுவீர்கள்" என்று கூற அவர்கள் இருவரும் அதிர்ந்தனர்..
" இன்னும் இரண்டு வருஷத்துக்குள்ள நீங்க இதை செய்யலைன்னா கபூர் அண்ட் மல்கோத்ரா குடும்பமே இல்லாம அழிஞ்சு போயிடும் ஒரு சந்ததியினர் கூட இந்த குடும்பத்தில் உயிரோட இருக்க மாட்டார்கள்" என்று கூற அதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்
உத்ரகேஷ்க்கு இதில் சுத்தமாக விருப்பமில்லை .. "சின்ன பசங்களுக்கு போய் கல்யாணம் செய்யறதா இருந்தாலும் நாமலே பார்த்துக்கலாம் பைத்தியக்காரனா இருப்பான் போல" என்று கூறி அந்தப் பேச்சை அப்படியே முடித்துக் கொள்ள ஆனால் அந்த ஜோசியர் கூறியதெல்லாம் ஒவ்வொன்றாக நிகழ ஆரம்பித்தது..
உபேந்திராவிற்கும் செய்யும் வேலை எல்லாம் சரி இல்லாமலும் விபத்தும் நிகழ அதுபோல சுரேஷுக்கும் அவர் மனைவியும் கோவிலுக்கு சென்று வரும் வழியில் விபத்து ஆகி அவருக்கு காலில் அடிபட்டு போக மனைவியோ பரிதாபமாக உயிர் இழந்தார்.. மேலும் உத்ரகேஷ் மனைவியும் இறக்க இப்படி தொடர் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு இருந்தது ..
