ஸ்வரம் 2

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  

அத்தியாயம் : 2

இவள் வேறு யாருமில்லை கபூர் குடும்பத்தின் இன்றைய தலைமுறையை தாங்கி கொண்டிருக்கும் நிதிஷ் கபூரின் மகள் ஹிமானி ஆவாள்... நிதிஷ் கபூர் சினிமாவின் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்..மேலும் அவர் மறைந்த சாராவின் சகோதரன் ஆவார்..

அதாவது ஆர்யனின் சொந்த தாய் மாமா தான் மேலும் ஆர்யனின் தந்தை உபேந்திராவின் சொந்த தங்கையை தான் நிதிஷ் திருமணம் செய்திருக்க இரு வழியிலும் அவனுக்கு சொந்தமே...அப்படியிருக்க உபேந்திராவின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மிஹ்ரானுடன் தான் இந்த திருமணத்தை அவர்கள் நடத்தி கொண்டிருக்க இவளோ தீடிரென மயங்கி விழவும், மிஹ்ரான் பயப்பட்டு, " என்ன ஆச்சு.. பேபி ??"...என தவிக்க அதற்குள் கூட்டம் கூடி விட்டது..

காமிராக்கள் கிளுக்கி கொண்டிருக்க வேகமாக எழுந்த ஆர்யன் அதுவரை கீழே அமர்ந்து இருந்தவன் மேடையேறி கூடியிருப்பவர்கள் எல்லாம் பார்த்து கொண்டிருக்கும் போதே அவளை தூக்கி இருந்தான்..

அதற்குள் அவனது கண் அசைவில் அவன் கூற வந்த விஷயத்தை புரிந்து கொண்ட அவனது உதவி ஆட்கள் சூழ்ந்து அந்த இடத்தை மறைத்து கொள்ள அவள் தாய் பாயலின் மடியில் படுத்து கொண்டிருந்தவளை பூ போல தூக்க அதற்குள் மிஹ்ரான், " என்ன செய்யற ஆர்யா இது உனக்கு தேவையில்லாத வேலை அவளை பார்த்துக்க நாங்க இருக்கோம் உன் வேலையை நீ பார்க்கலாம் "...என அண்ணனாக இருந்தாலும் ஒரு வித கடுப்புடன் சினிமா உலகில் பெரிய வீட்டில் வளர்ந்து இருந்தாலும் இதோ எதிரே இருப்பவன் தொடர்ந்து செய்யும் சதியால் வளர முடியாமல் தொடர்ந்து வளர துடித்து கொண்டிருக்கும் மிஹ்ரான் கூற,

அதை பார்த்து இதழ்களில் தனக்கே உரிய நக்கலை வெளியே விட்டவன், " எனக்கு என்ன வேலைன்னு நீ சொல்ல நீ இன்னும் வளரனும் மிஸ்டர் மல்கோத்ரா "...என கூறியவன் அவளது தாயின் மடியில் கிடந்தவளை பூ போல தாங்கியவன் தூக்கி செல்ல கூடவே அவனது ஆட்கள் அங்கே மேடையில் என்ன நிகழ்கிறது என பிறருக்கு தெரியாதது போல மறைத்து கொள்ள என்ன நடந்தது என யாருக்கும் புலப்படவில்லை..

அதற்குள் உபேந்திரா மற்றும் நிதிஷ் மற்றும் ஹிமானியின் சகோதரி ஷிவானி அவள் தாய் பாயலின் கண்கள் விரிந்து கொண்டே செல்வதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவளை ஏந்த , அதை கண்ட மிஹ்ரான் மற்றும் அவனது தாய் மயூரா இருவரும் அதிர மயூரா மட்டும் , "எங்கே அவளை நீ எடுக்கிற அவளை பார்த்து கொள்ள எங்களுக்கு தெரியும் இத்தனை நாள் விலகி இருந்தவன் அப்படியே இருக்க வேண்டியது தானே எல்லார் முன்னாடியும் என்ன இதெல்லாம் அவளுடைய கணவனாக போறவன் இங்கே இருக்கான் அவன் அவளை பார்த்துக்குவான்"... என்று கூற

அதை கேட்ட அவனோ, " அவனை பார்த்திட்டே இருக்க சொல்லுங்க நான் ஒன்னும் மல்கோத்ரா குடும்பத்தையோ இல்லை கபூர் குடும்பத்துக்குள்ளோ வரணும்னு நினைக்கவும் மாட்டேன் எனக்கு அது தேவையும் இல்லை ஆனால் இவ எனக்கு சொந்தமானவ அது உங்களுக்கே தெரியும்னோ இல்லை தெரிஞ்சு இருக்கணும்னு அவசியம் இல்லை"... என்க

"அவளும் நானும் காதலிச்சிட்டு இருக்கோம் அது இந்த ஊருக்கே தெரியும்".. என்று மிஹ்ரான் கூற

" ஓ அப்படியா எனக்கு தெரியாதே ".....என்று கூறியவன் அவளை தூக்கி கொண்டு பின்னால் உள்ள அவனது அந்த பண்ணை வீட்டுக்குள் நுழைந்தவன் அவனுடைய அறைக்குள் அவளை படுக்க வைக்க அதற்குள் உபேந்திராவின் குடும்பமும் நிதிஷின் குடும்பமும் ஓடி வர,

பின்னாலே அந்த கூட்டத்தில் இருந்த ஒரு மருத்துவர் வந்தார்...குடும்ப நண்பர் என்பதால் , "என்ன ஆச்சு டாக்டர் என் பொண்ணுக்கு??"... என பாயலும் நிதிஷும் துடிக்க

அவரும் பரிசோதிக்க அவரோ, " அவங்க இப்போ கர்ப்பமா இருக்காங்க".. என்று அழுங்காமல் ஒரு குண்டை தூக்கி போட்டார்..

அதை கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்.."வாட்??".. என மிஹ்ரான் முதலில் அதிர எல்லோரும் அவனை சந்தேகமாக பார்க்க, அவனோ செய்வது அறியாது நின்றான்.."நான் இல்லை இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை".. என்று கூற,

அதற்குள் கண்களை திறந்த அவளை பார்த்து , "என்ன டி இதெல்லாம் கல்யாணம் தான் செய்து வைக்கிறேன்னு சொல்லிட்டோமே எதுக்கு இப்படி அவசரப்பட்டிங்க ??"..என்று பாயல் கூற

அவளோ அதிர்ந்து, " என்ன சொல்றிங்க அம்மா??".. என்றாள் ...

"என்ன சொல்லணும் ?? நீ கர்ப்பமா இருக்கன்னு சொல்றாங்க உண்மையா ??"...என்று வினவ அதை கேட்ட அவளோ அதிர அந்த நொடி அவள் கண்களுக்கு வேறு யாரும் தெரியவில்லை இதோ அவளுக்கு முன்னே ஆஜானுபாகுவான தோற்றத்தில் நின்று கொண்டிருந்தவன் மட்டுமே தெரிய,

"சொல்லு டி"... என்று கூற

அதற்குள் மிஹ்ரான் அவள் அருகே வர

நிதிஷ் அவர் பங்கிற்கு, " உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கல மிஹ்ரான் இப்படி நம்ம குடும்பத்தை அவமானப்படுத்தி பிறர் வாய்க்கு அவல் போட்டு இருக்க வேண்டாம்".. ..என்க

"மாமா".. என்று அவமானத்தால் அவன் முகம் சுருங்க அதை பொறுத்து கொள்ளாத மயூராவோ, " என்னவோ நடந்தது நடந்து போச்சு அதுக்காக எதுக்கு இப்படி குதிச்சிட்டு இருக்கீங்க கல்யாணம் ஆக போறவங்க தானே அதிலும் காதலர்கள் வேறு அப்படி இப்படி இருப்பது எல்லாம் சகஜம் தானே நீங்க இப்போ எந்த காலத்தில் வாழ்ந்திட்டு இருக்கீங்க??".. என்று தன் மகனை குறித்து பேசியதற்கு எதிராக அவரும் பொங்க,

உபேந்திரன் மட்டும் , "நிதிஷ் பொறுமையா இருங்க பேசிக்கலாம்".. என்க

இதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த அவளுக்கு முதலில் அதிர்ச்சி என்ன என் வயிற்றில் ஒரு குழந்தையா என அதிர்ந்தே விட்டாள் அவளுக்கு ஒரு நொடி என்ன நடக்கிறது என புரியவில்லை பிறகு அவள் குடும்பத்தார் அங்கே வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் சமயம் அவளுக்கு விஷயம் தெளிவாக விளங்க மூன்று மாதத்திற்கு முன் நடந்த அன்றைய இரவு நியாபகம் வந்து போக அவளுக்கு தெளிவாக விளங்க

"என்ன பொறுமையா இருக்க சொல்றிங்க உலக மீடியாவே இங்கே தான் இருக்கு இங்கே இப்படி ஒரு செய்தினா எனக்கு எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்க என்னால வெளில் தலை காட்ட முடியுமா சொல்லுங்க உங்களுக்கு எப்படியோ எனக்குன்னு ஒரு பேர் இருக்கு அதை இழக்க என்னால முடியாது "..என்று நிதிஷ் வெகுண்டு கொண்டு இருக்க

மிஹ்ரான் செய்வதறியாது நின்று கொண்டு இருக்க இதை எல்லாம் ஏதோ மூன்றாம் மனிதன் போல வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவனின் நக்கல் முகத்தையும் இளக்காரத்தையும் கண்டவள் பொங்கி, " என் வயித்துல வளரும் குழந்தைக்கு காரணம் மிஹூ இல்லை இதோ இவன் தி கிரேட் ஆர்ய கௌரவ் "...என்று ஆவேசத்தோடு கூற அதை கேட்ட அனைவரும் இது எப்படி சாத்தியம் என்று எட்டாம் அதிசயமாக முழித்தனர்.. ஆம் வெளியே பார்த்தாலோ இல்லை ஏதாவது விழாவிற்கு தற்செயலாக சந்திக்க நேர்ந்தாலும் கூட பிறர் பார்வைக்காது பெரியவர்கள் சிரித்தால் கூட அவர்களை முகத்துக்கு நேரே அவமானப்படுத்தி செல்பவன் அவனுடன் இவளுக்கு பழக்கமா இதை ஏன் அவள் முன்பே தங்களிடம் கூறவில்லை என அனைவரும் அதிர மிஹ்ரான் மட்டும் நம்ப முடியாத பார்வை பார்த்தான்...

அங்கு கூடியிருந்த யாவரின் அதிர்ச்சியையும் கண்டு கொள்ளாமல் அவளை மட்டுமே பார்த்து அதற்காகவே காத்து இருந்தவன் போல மெல்லிய நகை புரிந்தான் ஆர்யன்..அவனது சிரிப்பையும் அவனது நயவஞ்சகத்தையும் அவளை இப்படி ஏமாற்றி விட்டானே என்ற வெறியும் அவளுள் எழுந்தது...அவனோ இதற்காக தான் காத்து இருந்தது போல தன் மீசையை முறுக்கி விட்டவன் அடுத்த நொடி கண் அசைக்க அவனது மேனேஜர் கொண்டு வந்த மங்கல்சூத்ரமும்(தாலி) கும்குமத்தையும் எடுத்தவன் நொடி பொழுதில் அனைவர் முன்னே அவள் அருகே நெருங்கி வந்தவன் அவளது ஆத்திரம் சுடரும் விழிகளை பார்த்து கொண்டே அவளது கழுத்தில் அணிவித்து நெற்றியிலும் திலகமிட்டவன் அவளை மீண்டும் தூக்கியவன் , "போகலாமா மிசஸ் ஆர்யன் "..என கூறி அவளை ஏந்தி செல்ல அங்கே இருந்தவர்கள் எல்லோரும் அதிர்ந்தனர்...

ஸ்வரம் இசைக்கும்....



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top