ஸ்வரம் 19

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  


ஸ்வரம் : 19

அவள் மீது இருந்த ஆத்திரத்தில் குளித்து தயாராகி வர அவ்வளவு அதற்குள் வேகமாக கீழே இறங்கி இருந்தாள்..அதுவும் அவனுக்கு கடுப்பை தான் கொடுத்தது..என்ன இருந்தாலும் குடும்ப புத்தி தானே இருக்கும் என்று எண்ணியவன் இவளோடு இருந்த கடுப்பை அவளது குடும்பாத்தாரிடம் காட்ட முடிவெடுத்து விட்டான்..எப்படி இருந்தாலும் அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்று தான் எண்ணி இருந்தான் அதற்கு அவனுடைய கொஞ்சம் விளக்கு பிடித்து இருக்க இனி அவனுக்கு காரணம் வேண்டாமே வைச்சு செய்யும் முடிவில் தான் இருந்தான்..

என்ன தான் அவனிடம் சண்டை போட்டுக் கொண்டு கீழே இறங்கி வந்து கொண்டு இருந்தாலும் அவளது முகத்தில் வருத்தம் அப்படியே இருந்தது அவள் அன்றே முடிவு எடுத்திருந்தாள் இவன் முன்னே அழக்கூடாது என முடிவெடுத்து இருக்க இருந்தும் அவன் முன் அழாமல் அவன் சென்றதும் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு என்ன நடந்தாலும் கல் போல இருக்க அவள் எண்ணினாள் ..

அதன்படி அவன் குளிக்க சென்றதும் உடையை சரிப்படுத்தி வேகமாக தலையில் ஒரு கெலெச் குத்திக் கொண்டு ஒரு பொட்டை மட்டும் வைத்துக் கொண்டு கீழே இறங்கி வர எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல அவளுடைய வீட்டின் அமர்ந்திருந்தனர்..

கிட்டத்தட்ட 3 மணி நேரம் கடந்திருந்தது இன்னும் அவன் வந்தபாடில்லை..அவர்களுக்கு என்ன இவன் வீட்டில் பிச்சை எடுக்க வந்திருக்கிறார்கள் என்ற நினைப்பா என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் ?? இத்தனை நேரம் நாங்கள் காத்துக் கொண்டிருப்பது அவனுக்கு தெரியவில்லை என எண்ணிய மயூரா, " ஏங்க நீங்க பேச தான வந்து இருக்கீங்க?? நீங்க பேசுங்க எங்களை எதுக்கு கூட்டிட்டு வரீங்க நாங்க அசிங்கப்பட்டது போதாதா?? இனியும் அசிங்கப்படனுமா??" என்று வினவ,

அதைக் கேட்ட நிதிஷ் , "உங்க வீட்டுப் பையன் தப்பு பண்ணுனா உங்ககிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்றது?? நீங்க அவனுக்கு அம்மாவா இல்லாம இருக்கலாம் உபி ஆர்யாவோட அப்பா தானே அவன் என்னவோ எனக்கு அப்பாவே கிடையாது குடும்பமே இல்ல சொந்தமே இல்ல அப்படின்னு சொல்லிட்டு என் பொண்ண மட்டும் கல்யாணம் பண்ணிக்கலாம் ஆனா இவருக்கு தெரியும் இல்ல அவரோட மகனை பத்தி அப்போ இங்க என்ன நடக்குதுன்னு இவருக்கு தெரிய வேண்டாமா அதனால தான் உங்களை வரச் சொன்னேன் நீங்க இவரு கூட வந்ததுக்கு நான் பொறுப்பாக முடியாது உங்களுக்கு அப்படி பிசியா இருந்தா நீங்க கிளம்புங்க ஏன்னா இது என்னோட பொண்ணோட வாழ்க்கை நான் எங்க இருந்துதான் ஆகணும்" என்று கோபமாக கூறினார்..

அவருக்குமே ஆர்யாவின் செயலில் எரிச்சல் தான் இவன் என்னடா இப்படி செய்கிறான் என எண்ணிக் கொண்டிருந்தார் ..ஆனால் என்ன செய்வது பெண்ணை பெற்றவர் ஆகிற்றே அடங்கி தானே போக வேண்டும் என்ற நிலையில் அமைதியாக இருந்தார் ஆனால் அவரது அமைதியை அவன் மிகவும் சோதித்து கொண்டிருந்தான்

மாடிப்படிகளில் இருந்து ஹிமானி இறங்கிவர அதைக்கண்ட ஷிவானி, " அம்மா அக்கா வர்றா" என்று கூறினாள் அதைக்கேட்டு பாயல் தன் மகளை பார்க்க மகளோ அன்றில் மலர்ந்த பூவைப் போல மிக அழகாக இருப்பதாக அவருக்கு தோன்றியது..

அதிலும் அவளை புடவையில் பார்க்கவும் அவருக்கு ஏனோ மனது குளிர்ந்து தான் போனது அவளது முகமே கூறியது அவள் சந்தோஷமாக இருக்கிறார் என்று இத்தனை வருட தாம்பத்திய வாழ்க்கையை அறிந்தவருக்கு தெரியாதா தன் நிலை என்னவாக இருக்கும் என எண்ணினாலும் நிதி சகோ தன் மகளின் முகத்தில் படிந்த சோகம் அவளது தந்தையை வாட்டியது..

தாய் ஒரு ரீதியாக நினைக்க தந்தை வேறு ரீதியாக எண்ண அவள் வருகைக்காக காத்திருக்க அவளோ இறங்கிவந்து , "வாங்க டாடி வாங்க மம்மி வாங்க அத்தை மாமா "என அனைவரையும் வரவேற்றாள்..

அதைப்பார்த்த மயூரா , "உனக்கு வெட்கமா இல்ல ஒரு வாரம் முன்ன வர மிஹூ மிஹூன்னு என் பையன் பின்னாடி சுத்திட்டு இருந்த இப்போ வேற ஒருத்தன் கூட இருக்க?? உனக்கு அசிங்கமா இல்ல இதுல வேற எப்படிடி கூசாம எங்களை வரவேற்கிற??" என்று பொரிய தொடங்கிவிட்டார் அவளுக்கோ என்னவோ போல ஆகிவிட்டது

அதை கேட்டு பாயல் , "இதோ பாருங்க யாருக்கு என்ன எழுதி வைத்திருக்கோ அதுதான் நடக்கும் இங்கே நடந்தது எல்லாத்துக்கும் அதிர்ச்சி தானே அவளுக்கு மட்டும் அப்படித்தானே இருக்கும் அதுனால எல்லா பழியையும் அவள் மேல போடாதீங்க " என்று தன் மகளுக்கு துணையாக பேச ,

" ஏங்க உங்க பொண்ணு என்ன சின்ன குழந்தையா அவளுக்கு ஒண்ணுமே தெரியாது பாவம்ன்னு சொல்ல எல்லோரும் அவன் கூட பேசாமல் தானே இருந்தோம் இவளும் அப்படி இருக்க வேண்டியது தானே எதுக்கு அவன் பின்னாடி போனா??எதுக்கு இவனை பார்க்க மாலத்தீவு வரைக்கும் போயி அவன் ரூம்ல வேற தங்கி இருக்கா அதுனால தான் இந்த அளவுக்கு வந்து இருக்கு" என்று கூற

"அவ ஒரு விழாக்கு தான் போனா சும்மா புரியாமல் பேசாதீங்க" என்று பாயல் கூற

உபேந்திராவோ , "நீ இங்கே வந்தா வாயை திறக்க மாட்டேன் என்று சொல்லித்தான் வந்து இருக்க அது மாதிரியே இரு உனக்கு இங்கே இருக்க பிடிக்கல அப்படின்னா நீ கார்ல போயி வெயிட் பண்ணு ஐயோ நான் பேசிட்டு வந்துடறேன் என்னால உன் பின்னாடி இப்போதைக்கு வரமுடியாது இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும் "என்று முடிவாக கூறினார் உபேந்திரா

உபேந்திரா தன் மருமகளைப் பார்த்து, " எப்படி இருக்கமா??" என்று வினவ அவளும் மெல்லிய குரலில், " நல்லா இருக்கேன் மாமா" என்று மரியாதைக்காக கூறினாள்..அவருக்கு ஆர்யாவின் செயலில் வருத்தம் இருந்தாலும் அவள் எப்படி இருந்தாலும் தன் வீட்டு மருமகள் தானே என்ற எண்ணம் தான் அதனால் அதை என்ணி தன் மனதை ஆற்றி கொண்டார்..

பாயலோ, " இங்க வா இங்க வந்து உட்கார்" என்று கூற தன் தாய்க்கும் தந்தைக்கும் நடுவே அமர்ந்தாள்..

நிதிஷ் அவளிடம் , "அவன் உன்னை ரொம்ப கொடுமைப்படுத்தறானா ஏதாவது பிரச்சனையா இருந்தா சொல்லிடு இப்போவே உன்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறேன் என்ன இருந்தாலும் டாடிகிட்ட தயங்காமல் சொல்லு" என்று கூற

அவளுக்கு இங்கே இருக்க பிடிக்கவில்லை என கூற வேண்டுமென வாய் துடித்து, " அப்பா என்ன இங்கிருந்து அழைச்சிட்டு போய் விடுறீங்களா??" என்று கேட்க வேண்டும் என துடித்து அதை கூற வாயெடுக்க அதற்கு முன், " மிஸ்டர் நிதிஷ் அப்படி நான் கொடுமை படுத்தினாலும் இந்த ஆர்யா ஓட பொண்டாட்டி கண்டவங்க வீட்டில் இருக்கிறத நான் விரும்பல.. ஏன் நான் சம்பாதிக்கல என் பொண்டாட்டி தங்க ஒரு வீடு கூட கட்டி கொடுக்க மாட்டேனா?? " என்று கூற ஆரம்பமே அமர்க்களமாக தொடங்கி வைத்தான் ஆர்யா

"வாட் எது கண்டவங்க வீடு அது என் பொண்ணோட வீடு " என்று கூற,

" உங்க பொண்ணா அவ இப்ப என்னோட மனைவி அதை நீங்க மறந்துட்டீங்களா??" என்று கூறிக்கொண்டே படிகளில் இறங்கி வந்தவன் நிதிஷின் முகத்தை பார்த்து கொண்டே , தனக்கு எதிரே உள்ள ஒற்றை சோபாவில் அமர்ந்தவன் பார்வை முழுவதும் அவனது தாய்மாமனுக்கு இடையே அமர்ந்திருக்கும் அவள் மீது தான் இருந்தது ..

அவன் உள்ளே கோபக்கனல் வீசிக்கொண்டிருந்தது என்னமோ இவளை டார்ச்சர் பண்ண மாதிரி இங்க வந்து சீன் போட்டு வந்து இருக்கா என்பது தான் அவனது கேள்வியாக இருக்க இவளையெல்லாம் எவ்வளவு தான் நல்லா பார்த்தாலும் இப்படித்தான் இருப்பான் போல என்று நினைக்கவும் மறக்கவில்லை ..

"பொண்டாட்டினா பெரியவங்க பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் ஆனா நீ திருட்டுத்தனமா பொய் சொல்லி கல்யாணம் பண்ணி இருக்க?? அதுக்கு பேரு கல்யாணமா??" என்று வினவ,

" ஏன் திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணா வாழக்கூடாதுன்னு ஏதாவது இருக்கா என்ன?? நான் ஒன்னு திருட்டுத்தனமாஉங்க பொண்ண மட்டும் தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணலயே நீங்க கூப்பிட்ட ஆளுக முன்னாடி ஊரறிய தானே கல்யாணம் பண்ணி இருக்கேன் உங்க முன்னாடி தான் தாலி கட்டுனேன் அப்ப எல்லாம் எதுவுமே சொல்லல வாய் கிழிய மைக் வச்சு பேசுனிங்க ஆமா நாங்க காதலர்கள்ன்னு நீங்கதானே சொன்னீங்க அதை ஊரே ஒத்துக்குது ஆனால் நாங்க காதலர்கள்ன்னு ஊருக்கு விளக்கம் கொடுத்த நீங்க ஒத்துக்க மாட்டேங்கறீங்க??" என்று கேட்டான் ஆர்யா

"அது நீ கடைசி நிமிஷத்தில் வந்து இப்படி நாடகம் போடுவன்னு நான் என்ன கனவா கண்டேன் நாங்க எங்க பாட்டுக்கு ஒதுங்கி தான இருக்கோம் உன் விஷயத்தில் தலையிடுவது கூட இல்லையே எதுக்கு தேவையில்லாம எங்கள நோண்டிட்டே இருக்க??" என்று கேட்க

" நானா நான் என்ன உங்களை செய்ய போறேன் நான் பாட்டுக்கு இருக்கேன் எனக்கு தேவையான படம் பண்றேன் தேவையான அளவு சம்பாதிக்கிறேன் நானும் என் மனைவியும் அமைதியா இருக்கோம் உங்களுக்கெல்லாம் என்ன வந்துச்சு எதுக்கு இப்போ வந்து இருக்கீங்க அதுவும் ஒரு வாரம் கழிச்சு" என்று ஒன்றுமே செய்யாதது போல கூற ,

அதைக் கேட்ட நிதிஷ் கோபம் கொண்டு, " நடிக்காத அது கேமிரா முன்ன வை என்கிட்ட வேண்டாம் உனக்கு அறிவு இல்லை என் பொண்ணு பிரக்னண்டா இருக்கான்னு சொல்லி ஏமாற்றி கல்யாணம் செய்ய பொய் சொன்னவன் தானே நீ

யூ இடியட் என் பொண்ணை ஏமாத்தி கல்யாணம் பண்ண உனக்கு எப்படி தைரியம் வந்தது??" என்று கூற

அவனும் விடாமல், "உன் பொண்ணு என்ன பெரிய ரதியா ஏமாத்தி கல்யாணம் பண்ண?? ஆப்ட்ரால் ஒரு குள்ள வாத்து சரியா கிஸ் கூட பண்ண முடியல" என்று கூற அதை கேட்டு அனைவரும் அதிர அவளோ இவர்களின் பேச்சையும் அவனது பதிலையும் கேட்டு நொந்து தான் போனாள்.. இப்படி மானத்தை வாங்குகிறானே என்று அவள் எண்ண

தாய் மாமா என்ற மரியாதை இல்லாமல் பேசும் அவனை பார்த்து நிதிஷ் அதிர

"என்ன பார்க்கறீங்க எனக்கு மரியாதை எல்லாம் கொடுக்க தெரியும் அதே மரியாதை எனக்கு கிடைக்கும் போது?? அதெப்படி நல்ல மரியாதை தெரிஞ்ச குடும்பத்தில் பிறந்தவங்க ஆச்சே நீங்க எல்லாம்??

அண்ட் உங்க பொண்ணை நான் ஏமாத்தினேன்னு சொல்றிங்களே அதை உண்மையாக்க தான் அவளை கல்யாணம் பண்ணினேன் எஸ் இப்போ நான் சொன்ன பொய் உண்மை ஆகிடுச்சு இப்போ வேணா நீங்களே செக் பண்ணி பாருங்களேன் உங்க பொண்ணு நான் என் கல்யாணத்துக்கு சொன்னது போல மூணு மாசம் கழிச்சு கர்ப்பமா இருப்பா இப்போவே அதுக்கான வேலையில் இறங்கி இருக்கேன் எதுக்கு இப்படி வந்து தொல்லை செய்யறீங்க நாங்க இத்தனை நேரம் லேட்டா வரும்போது உங்களுக்கு தெரியலையா??" என்று நக்கல் குரலில் ஆர்யா கூறிவிட்டு தான் அணிந்து இருந்த சட்டையை தனது முட்டி வரை மடக்கி விட்டு அவரை ஒரு வெட்டும் பார்வை பார்க்க அதைக் கேட்ட நிதிஷ் மற்றும் உபேந்திரா அதிர்ந்தனர்..

அதாவது உன் மகள் எனக்கு மனைவியாக தான் வாழ்கிறாள் என்று சொல்லாமல் அவன் கூற அதை கேட்டு பாயல் மட்டும் தான் அந்த இடத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தார்..

அவர் எண்ணியது நிறைவேறியது என்பதுபோல அவருடைய எண்ணமாக இருந்தது எங்கே தனி மரமாக நின்று விடுவாளோ என நினைத்திருக்க இவனோ வாழ்ந்து கொண்டிருக்கிறான் எனக் கூறவும் மேலும் அவள் மீது அவனுக்கு உண்டான உரிமை போராட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக அவன் பேசுவது அங்கு கூடியிருந்த அவருக்கு மட்டுமே புரிந்தது மீதி இருந்த நபர்கள் அனைவரும் அவன் கர்வம் பிடித்தவன் என்று தான் நினைத்திருக்க அவர்களுடைய நினைப்பு அவனுக்கு தேவையில்லாதது அவன் என்ன நினைக்கிறானோ அது மட்டும் தான் அங்கே இருக்க வேண்டும் என எண்ணுபவன் அதனால் இவர்களின் என் எண்ணங்களை எல்லாம் அவன் புறக்கணித்து விட்டான்

அங்குள்ள அனைவரும் அவன் பேச்சை கேட்டு அதிர அவளும் என்ன மனுஷன் என்ன பேச்சு பேசிட்டு இருக்கான் என்ன யோசிக்க அவனும் விடாமல் , "இதோ பாருங்க ஹிமானி எனக்காவன்னு உங்களுக்கு தெரியாதா?? இல்லை தெரிஞ்சும் தெரியாதா மாதிரி நடிச்சிட்டு இருக்கீங்களா?? நீங்களா அவளை எனக்கு தந்து இருக்கணும் நீங்க தரல நானே எடுத்துகிட்டேன்.. " என்று கூற

அதைக் கேட்ட நிதிஷ் கொதித்தெழுந்து , "நான் என்ன என் பொண்ணு உனக்கு தரேன்னு சொல்லி இருக்கேன்னா என்னமோ உனக்கானவன்னு சொல்ற நான் எப்போ என் பொண்ணை உனக்கு தரேன்னு சொன்னேன்??" என்று வினவ

அதைக் கேட்ட அவன் தனது கால் மீது கால் போட்டு, " அதை எனக்கு தந்தவங்கிட்ட கேளுங்க ..என்ன புரியலையா அதாவது என் பொண்டாட்டிய பத்து மாசம் சுமந்து பெத்த உங்க மனைவி கிட்ட கேளுங்க அவங்க சொல்லுவாங்க இவ யாருக்கு சொந்தமன்னு " என்று கூற அனைவரின் பார்வையும் பாயல் மேல் திரும்ப ,

பாயலோ அனைவரையும் பார்த்து தனது குட்டு வெளிப்பட்டு விட்டதே என எண்ணினாலும் மறந்த மறக்கடிக்கப்பட்ட நினைவுகளை நினைவு கூர்ந்தார்..ஆனால் இனியும் அதை மறக்காமல் இருக்கும் தன் மருமகனை எண்ணி வியந்தாலும் ஆனாலும் அவன் அவனவளை எடுத்து கொண்டானே என்ற எண்ணமும் தோன்ற, " ஆமாம் ஹிமானி ஆர்யாவுக்கு சொந்தமானதாவ தான் " என்று கூற அதைக் கேட்ட நிதீஷ் , "என்ன உளறிட்டு இருக்க??" என்று கேட்க,

அவரோ , "ஆமாம் ஆர்யா சொல்வது உண்மைதான் உங்களுக்கெல்லாம் அவன் ஒரு வாரத்துக்கு முன்னாடி அவளை திருமணம் செய்ததா தான் தெரியும் ஆனால் ஹிமானி ஆர்யாவோட மனைவியா மாறி கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு மேல ஆச்சு அதாவது அவங்க பாலிய காலத்திலேயே அவங்க 2 பேருக்கும் திருமணம் முடிந்தது" என்று கூற அதைக் கேட்டு ஹிமானி அதிர்ந்தாள் ஏனெனில் அவளுக்கும் கூட இந்த விஷயம் தெரியாது என்பது தான் உண்மை..

ஆர்யா மட்டும் அதிராமல் இருந்தான் ஆனால் இப்படி ஒரு விஷயம் நடந்தது நிதிஷ் மற்றும் உபேந்திரா என யாருக்குமே தெரியவில்லை அதுவரை அமைதியாக இருந்த உபேந்திரா தன் தங்கையிடம், " என்ன சொல்ற பாயல் என்ன உளறிட்டு இருக்க ??"என்று கூற, " நான் சொல்றதெல்லாம் உண்மைதான் அண்ணா" என்று கூறி உண்மைகளை கூற ஆரம்பித்தார் பாயல் ..

ஸ்வரம் இசைக்கும்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top