ஸ்வரம் 18

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  

ஸ்வரம் 18

இதை அறியாத அவளோ அவன் முன்னே தான் மொத்த புடவையும் உடுத்தி இருக்க ஐயோ இவன் தூங்கலையா என எண்ணியவளுக்கு அப்போ எல்லாம் பார்த்திட்டான என நினைக்க இனி அங்கே பார்க்க என்ன இருக்கு என்ற பதில் அவளுக்கு அவளது மனசாட்சியிடம் இருந்து கிடைக்க அவன் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காமல் அவன் முன்னால் இந்த கோலத்தில் இருக்கிறோமே என எண்ணி தன் கைகளை கொண்டு தன் அங்ககளை மறைத்தாள்.. என்ன மறைத்தாலும் அவளால் முழுமையாக மறைக்க இயலாதே அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் குனிந்த வாக்கில் அவள் நிற்க அவளது ஒவ்வொரு அசைவையும் அவன் ரசித்து கொண்டு தான் இருந்தான்..அவனுக்கு அவளை ரொம்ப பிடிக்கும் அவள் எனக்கு மட்டுமே சொந்தமானவள் என்ற கர்வம் அவனை எப்போதும் ஆட்டி படைக்கும் இவளை என்னால் மட்டுமே மகிழ்ச்சியாக பார்த்து கொள்ள முடியும் என்ற நினைப்பும் அவனிடம் இருக்கும் ஆனால் இதை எதையும் சாந்தமாக அவனால் வெளிப்படுத்த தெரியாது அது தான் அவனது பிரச்னையாக இருக்க, அவனுக்கே அவன் மனது விளங்காத போது அவளுக்கு எப்படி தெரியும்

அதிலும் அவளது மாராப்பை பிடித்துக்கொண்டு கள்ளப் பார்வை பார்க்க இவளோ ஏதோ உணர்ச்சிகளின் பிடிக்குள் செல்வது போன்ற உணர்வை அவளுக்கு குனிந்த வாக்கிலே அவள் தேகம் அவளுக்கு கொடுக்க ,

அவளோ என்ன இவன் இப்படி பார்க்கிறான் என எண்ணி தன் சேலையின் நுனியை தன் பக்கமாக மெல்ல இழுக்க அவன் அந்தப் பக்கமாக இழுத்தான் எப்பொழுதும் போல அவன் பக்கமே சாய்வு செல்ல மேலும் அவள் மெல்ல பலமாக இழுக்கவும் அவனும் லேசாக பலமாக இழுத்தானோ என்ற சந்தேகம் அவளுக்கு வர அவள் இந்த பக்கம் பலமாக இழுத்தாள்..

"ரொம்ப இழுத்தால் சேலை கிழிந்து விடும் சோ இங்கே வா" என அவன் மென்மையான குரலில் அழைத்தான் அவனுக்கு அவன் பக்கமாக அவள் செல்ல , "நீ சேலை எல்லாம் கட்டுவியா??" என ஒரே ஒரு நொடி ஆச்சரியமாக பார்த்தான் ..

அவன் பார்த்தவரை அவள் புடவை உடுத்தி அவன் கண்டதே இல்லை எனலாம் அவனுக்கு மிக ஆச்சரியமாக இருக்க அவளோ, " இல்லை மொத்தம் இரண்டு தடவை கட்டியிருக்கேன் எனக்கு சாரி கட்ட பிடிக்காது" என்று அவன் கையில் இருக்கும் சேலையிலேயே கண் பார்வையை வைத்துக் கொண்டு கூறியவள் மெல்ல அந்த சேலையின் நுனியை அவனிடமிருந்து பறிக்க பாடுபட,

அவனோ, " அப்புறம் இன்னிக்கு என்ன ஸ்பெசல் கட்டி இருக்க " என்று அந்த சேலை நுனியை விடாமல் அவளிடம் பேச்சுக்கொடுக்க தனது ஒரு கையால் அந்த சேலையை சுற்றி முழுக்க பிடித்தவன் அவளிடம் வினவ,

" இன்னிக்கு எல்லோரும் வராங்கல அதான்" என்க

ஓ என்றவனுக்கு ஏனோ அவள் கூறிய பதில் நிராசையாக இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல், " எதுக்கு நின்னுட்டு இருக்க இங்க வா பக்கத்தில் உட்கார் " என்று அவன் படுத்திருந்த நிலையில் இருந்து எழுந்து சற்று தள்ளி தலையணை தனக்கு பின்னால் சொருகி எழுந்து அமர்ந்தவன் அவளுக்கு அவன் படுத்த இடத்தை கொடுக்க ,

அவளோ , "இல்ல போகணும் லேட் ஆயிடுச்சு எனக்கு ரெடி ஆகனும்" என்று அவசரபட்டாள்..

அவனோ பொறுமையாக, " யாருக்கு லேட்டாயிடுச்சு ??" என்று கேட்க ,

"இல்ல டாடி மம்மி வந்து இருப்பாங்க" என்று கூற ,

"வந்தா வந்துட்டு போகறாங்க இனி உட்கார்" என்க

" லேட் ஆகிடும் அவங்க காத்து இருப்பாங்க " என்று மீண்டும் கூற அவனுடைய மோனநிலை அறுபடுகிறதோ என்ற எண்ணம் அவனுக்கு வர எரிச்சல் அடைந்தான் ஆர்யா

" அவங்க காத்து இருந்தா எனக்கு என்ன?? உன்னால என்னை மீறி அவங்கள பார்க்கத்தான் முடியுமா இல்ல இந்த ரூம்ல விட்டு நான் சொல்லாம உன்னால வெளியே போகத் தான் முடியுமா சோ அவங்க வந்தா கீழே வெயிட் பண்ணுவாங்க பண்ணி தான் ஆகனும் நான் அவங்களை பார்க்க விருப்படல அவங்க தான் என்னை பார்க்கணும்னு சொல்லி இருக்காங்க ".. என்று அவளை அந்த உடையில் பார்த்தவன் கொஞ்சம் மையலாகவும் அதே நேரம் தன் கடினத் தன்மையை வெளிப்படுத்த அவளோ , "ஐயோ இப்படியே அம்மா அப்பாவை துரத்தி விடுவானோ பாக்காம போய் விடுவேனோ " என கூறி அவள் பேசாமல் அவன் அருகில் அமர ,

அவனோ சாவகாசமாக அவளுடைய ஈர கற்றை கூந்தலை அளந்து கொண்டிருக்க அவளுக்கு உள்ளுக்குள் எரிச்சலும் ஆத்திரமும் இவனை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற வெறியும் அதனுடன் சேர்ந்து இவனுடைய விரல்களின் மாயத்தில் கூசும் சிலிர்க்க அவளுக்கே அவளைப்பற்றி புரியவில்லை ..

அவனோ அவளது கற்றை கூந்தலை அவனுக்கு குளிர் மேனியையும் அளக்க நினைக்க நினைத்ததை முடிப்பவன் அவளை அவ்வளவு எளிதாக விட்டு விடுவானா என்ன அவளது முதுகில் பரந்து கிடந்த அவளது ஒரு அடி கூந்தலை அவளுக்கு முன் புறம் தள்ளியவன் அவளது முதுகில் அருகே சென்று தன் இதழ்களை பதிக்க இவளுக்கு அந்த கூச்சத்தில் கூசி போனாள்..

அவனோ பின்னால் இருந்து அவளை அணைத்து அவளை செல்லவிடாமல் அவளின் வெற்று இடையில் கோலமிட்டவன் அவளது கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்து அவளின் தேகக் குளுமையை உணர்ந்து கொண்டிருந்தான்..

அவளோ இவனது செய்கைகளை உணர்ந்து அவளால் அவனை விட்டு செல்லவும் முடியவில்லை தன்னையும் உணர்ச்சிகளின் பிடிவாதத்தில் கொண்டு சென்று விடுவானோ என எண்ணி, " நான் போகணும்" என்று அவளுக்கே கேட்காத குரலில் கூற அதைக் கேட்ட அவனோ, " நீ இனி ஒரு தடவை என்னை விட்டு போகணும்னு சொன்னா அவங்கள இப்பவே வெளியே அனுப்பி விடுவேன் நான் இதெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன்" என்று கூலாக கூறிக்கொண்டே,

அவளது கழுத்தில் இருந்து அவளது கன்னங்களின் குளுமையை உணர சென்றவன் அங்கு தன் இதழ்களைப் பதித்து கொண்டிருக்க அவனது விரல்கள் அவளது இடையை வளைத்து பிடித்து அவள் கஷ்டப்பட்டு ஒரு மணி நேரமாக உடுத்த புடவை ஒரு நொடியில் அவிழ அவளோ அவனது பேச்சிலும் அவனது செயலிலும் எரிச்சல் கொண்டாலும் அவனது செய்கையில் மயங்கினாள் ..

அவனது ஒவ்வொரு செய்கையும் அவளுக்கு எரிச்சலாக இருந்தது ஏன் இப்படி எதுவாக இருந்தாலும் அவன் என்ன நினைக்கிறான் அதுதான் நடக்க வேண்டுமா என எண்ணியவள் அவனது விரல்களில் மயங்கினாலும் அவளுக்கு அவளை எண்ணியும் அவனை எண்ணியும் வருத்தமாக இருக்க அவனிடம் இருந்து விலக எண்ணியவள் முடியாமல்,

" என்னோட ஃபீலிங்ஸ்ஸை நீ புரிஞ்சுக்க மாட்டாயா??" என்று கேட்க அவனும் அவளது முகத்தை தீர்க்கமாக பார்த்தான்,,

" உன்னோட பீலிங்ஸ்க்கு என்ன குறைச்சல் நல்லாத்தானே இருக்கு" என்று கூலாக கூற, அவளோ எரிச்சல் அடைந்தாள்..

" நான் இத சொல்லல" என்று கடுமையாக கூற, " நான் இதைத்தான் சொன்னேன் "என்று அவளுக்கு பதில் அளிக்க அவளுக்கு கோபம் வந்தது..

" நீ என்ன நெனச்சிட்டு இருக்க உன் மனசுல நான் என்ன அந்த மாதிரிப் பொண்ணா?? உனக்கு தோணும் போது உன்கிட்ட வரணும் உன் கூட படுக்கணும் அப்படின்னு நினைக்கிற என்ன ஒரு மென்டாலிட்டி என்னோட ஃபீலிங்ஸ் பத்தி எல்லாம் நினைச்சு பார்க்க மாட்டியா?? நீ என்னை டார்ச்சர் பண்ணிட்டு இருக்க அது உனக்கு புரியுதா?? நீ மட்டும் தான் ஹாப்பியா இருக்கணும்னு ஆசைப்படுற?? நீ மட்டும் தான் இப்படியா இல்லை எல்லாம் ஆம்பிளைங்களும் இப்படி தானா யாருக்கும் யாரை பத்தியும் அவங்க உணர்வை பத்தியும் கவலை இல்லையா??" என்று அவள் வெடித்தாள்..

அந்தக் கேள்வியில் அவள் மீது கோபமுற்றவனுக்கு அவனுடைய அனைத்து மோகவலையும் அறுந்தது..

" நீ எத்தனை ஆம்பிளைங்களை பார்த்து இருக்கிற இந்த கேள்வி கேட்கிற?? நீ எனக்கு அந்த மாதிரி பொண்ணு தான் ஒவ்வொரு புருஷனுக்கும் பொண்டாட்டி அந்த மாதிரி தானே நீ கேள்விப்பட்டதில்லையா கேள்விபடலன்னா உன் அம்மாகிட்ட போய் கேளு சொல்லுவாங்க" என்று கூறியவன் ,

அவளைப் பார்த்து முறைத்து , "அப்படி மத்தவங்க பீலிங்ஸ் பத்தி புரிஞ்சுக்கலயான்னு கேக்கிற நீ கல்யாணமாகி கட்டின புருஷன் முன்னாடியே காதலன் நல்லா இருக்கணும்னு நினைக்க மாட்ட" என்று மிஹ்ரானை எண்ணி கூற,

அவளோ அதை கேட்டு அதிர்ந்தாள்.. ஒருவேளை தருணைப் பற்றி அறிந்து கொண்டானோ என வெடவெடக்க தொடங்கினாள் அதை பார்த்து அவனும் , "என்ன காதலனை பத்தி பேசினா உனக்கு ரொம்ப நடுக்கம் வருதா மத்தவங்கள பத்தி நினைச்சு பார்க்கிற நீ செய்யறது மட்டும் என்ன?? என்னமோ கொஞ்ச நேரம் முன்னாடி ரொம்ப வீரவசனம் பேசின ஆம்பளைய புத்தி அப்படி இப்படின்னு நான் கட்டின தாலியோட மகிமை உனக்கு என்னனு தெரியுமா இல்லை புருஷனை எப்படி பார்த்துக் கொள்வதுன்னாவது தெரியுமா?? இதுல நீ பேசுற என்கிட்ட??" என்று கூறியவன் அவளை ஒரு தள்ளு தள்ளிவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான் ..

அவனுக்கு ஷவரை திறந்து கொண்டு நிற்கும் பொழுதும் கூட அவள் கேட்ட கேள்வியின் தாக்கம் குறையவில்லை என்ன வார்த்தை கேட்டு விட்டாள்.." என்னை பார்த்து டாமிட் உனக்காக தானடி இதெல்லாம் பண்ணிட்டு இருக்கேன்" என்று அவன் கத்த வேண்டும் என தோன்றியதை அடக்கி சுவற்றில் ஓங்கி குத்தினான் ஆர்யா ...

வெளியே அவனுடைய பேச்சை கண்களில் அவளையும் மீறி கண்ணீர் வர கண்களை துடைத்து கொண்டவளுக்கு இனி கீழே அவன் வந்தால் என்ன நேருமோ என்ற பயம் தான் ஏனெனில் அவள் மீது உள்ள கோபத்தை அவர்களிடம் காட்டி விடுவானோ என்று அவள் நினைக்க தன் வாயை ஏன் இன்று அவளால் அடக்க முடியவில்லை என்று தன்னை எண்ணி நொந்தாள் ஹிமானி..

ஸ்வரம் இசைக்கும்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top