ஸ்வரம் 17
ஸ்வரம் : 17
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பின்பு ஆர்யாவின் குடும்ப வீட்டில் அதாவது ஹிமானி , மிஹ்ரான் அனைவருடைய குடும்ப வீடு தான் அது.. அதாவது அவர்களுடைய பரம்பரை வீடு அதுதான் இப்பொழுது இந்த வம்சாவளியில் மூத்த மகனான ஆர்யாவிடம் உள்ளதே அங்கு தான் உபேந்திரா மற்றும் நிதிஷ் குடும்பத்தினர் வந்திருந்தனர்..பெரியவர்கள் மட்டும் தான் வர எண்ணியிருக்க ஷிவானி தன் அக்காவை காணவென வந்து விட்டாள்..
அழையா விருந்தாளிகள் தான் இருந்தாலும் அவர்கள் ஹாலில் அமர வைக்கப்பட்டு இருக்க விஷயத்தை கூறியும் அவனது அறையில் இருந்து அவன் கீழே இறங்கவில்லை தன் மனைவியை விடவும் இல்லை ..
அவர்கள் வந்து கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கு மேல் ஆகிற்று காத்து காத்து அனைவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்காதது தான் குறை உபேந்திராவின் மனைவி மயூரா பொறும துவங்கி விட்டார்.. நல்லவேளையாக மிஹ்ரான் வரவில்லை ஏதோ தன் மனைவிக்கு ஆர்யா கொடுத்த வாக்கின்படி அவனிடமிருந்து பறித்த புதிய பட வாய்ப்பு அவனுக்கே திருப்பி கொடுக்கப்பட்டது..
அதை எண்ணிய மிஹ்ரான் அந்த படத்தில் நன்றாக தன் திறமையை வெளிப்படுத்த வேண்டுமென அதில் மெனக்கெட துவங்கி விட்டான் அவனுக்கு வேறு எந்த சிந்தனையும் இல்லை இந்த படம் எப்படியாவது வெற்றியடைய வேண்டும் இல்லையேல் இந்த சினிமா என்ற ஒன்றே வேண்டாமென வெளியேறிவிட வேண்டும் என்றுதான் அவன் எண்ணிக் கொண்டிருந்தான் மிஹ்ரான் அதனால் வீட்டில் நடக்கும் எதை பற்றியும் சிந்திக்காமல் இருக்க எண்ணினான்..
அவர்கள் வருகிறார்கள் என்ற செய்தி ஷிவானி மூலம் அறிந்தவள் அன்று காலை நேரமாக எழ அவனோ உறங்கிக் கொண்டிருந்தான்.. அதுவும் தன்னை எப்போது பார்த்தாலும் இறுக்கியணைத்து உறங்கும் அவனிடம் இருந்து விடுபடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல அவன் எங்கேயாவது உணர்ந்து விட்டால் அவ்வளவுதான் அன்று என்ன நடக்கும் என அவளுக்கு நன்றாக தெரியும் ..
மீண்டும் அவனுக்கு அவளை பார்க்கும் பொழுது மையல் வரும் பிறகு அது காதலாக மாறும் பிறகு அது காமமாக மாறி கட்டிலில் முடியும் கட்டிலில் படுத்து கட்டிலில் முடியும் இதுதான் நடக்க அதனால் அவனுக்கு தெரியாமல் மெல்ல அவனது கையை விளக்க முயற்சி செய்தாள் ஹிமானி..
அவளிடமிருந்து அசைவு வரவும் அவனோ மீண்டும் அவளை இறுக்கி அணைத்து அவள் மீது தன் காலை போட்டு படுத்து கொள்ள அதை கண்டதும் ஹிமானிக்கு கெனியில் அடைப்பட்ட எலி போல தன்னை உணர்ந்தவள் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து என்ன இவன் இவன் காலே இந்த கணம் கணக்குது என்று அவள் யோசிக்க அது இன்னிக்கி தான் உனக்கு தெரிஞ்சதா இந்த பத்து நாளா உனக்கு தெரியலையா என அவளது மனசாட்சி அவளிடம் கேள்வி கேட்க அவளுக்கோ அந்த கேள்வி உறுத்த தன்னை தானே கடிந்து கொண்டாள்..
மெல்ல அவன் புறம் திரும்ப முயன்று திரும்ப அவனது முகத்துக்கு அருகே அவளது முகம் இருப்பது போல ஆயிற்று..ஏனெனில் அவளால் அவளது உடலை அவன் புறமாக திருப்ப தான் முடிந்ததே தவிர அவள் உடல் வெளியே அவனிடமிருந்து வெளியே வரவில்லை..
அதுவும் அவனது மூச்சுக்காற்று அது வேகமாக அவள் முகத்தை தீண்ட அவளுக்கு அந்த நொடியிலும் குப்பென சிவந்தது ஒரே கட்டிலில் கிட்டத்தட்ட 10 இரவுகளை இவனுடன் கழித்து இருக்கிறாள்.. ஆனால் அவளாக அவனது முகத்தை அருகில் பார்ப்பது என்னவோ முதன்முறை போல அவளுக்கு சிவந்தது அவனுடைய ஆளுமைக்கு கீழ் இருந்ததால் என்னவோ அவ்வாறு தோன்றுவதற்கான காரணமோ??
மேலும் அவன் முகத்தை அருகே பார்க்க உறங்கும் பொழுது எவ்வளவு சாந்தமாக இருக்கிறான் கண்களை திறந்தால் மட்டும் ,"அப்பப்பா என்ன ஒரு வெறி என்ன ஒரு கோபம் அனைவரும் அவனது கோபத்தில் வதைப்பட்டு போக வேண்டுமே" என்று எண்ணியவள் தருணை ஏதாவது செய்யாமல் இருந்தால் சரி என்று எண்ணியவளுக்கு இன்று எப்படியாவது அவள் தந்தையிடம் இவன் காணாத விதத்தில் பேசியே ஆக வேண்டும் தன் தந்தை ஒருவரால் மட்டுமே அவனிடமிருந்து தன்னை மீட்க முடியும் என்று எண்ணினாள்..ஆனால் தந்தையிடம் பேச கணவன் அனுமதிப்பானா??
சரி அவனது உறக்கம் கலையாமல் அவன் தன் மேல் இட்டு இருக்கும் காலை தூக்கி மெல்ல கீழே வைக்க அவளது மூச்சுக்காற்றை வைத்தே அவள் என்ன யோசிக்கிறாள் என்பதை அறிய முடியும் அவனுக்கு அவளது செய்கை புரியாமலா இருக்கும்?? அவளோ அவனுக்கு தெரியாமல் இருக்க அரும்பாடுபட அவனோ கண்களை திறக்கவும் அவளோ அவனை பார்க்கவும் அவளுக்கு அவனது கண்களுக்கு அவள் கண்களுள் நுழைந்து விட்டது போல தோன்ற திக்கென்று அவள் இத்தனை நேரம் பிரயத்தனப்பட்டு கொண்டிருந்தது எல்லாம் வீணாகிப் போக தன் முகத்துக்கு அருகே முகம் வைத்து படுத்திருக்கும் தன் மனைவியை பார்த்தவன் அவள் எழுவதை பார்த்து, "என்ன எழுந்துட்ட கொஞ்ச நேரம் தூங்கு" என்று அவளை அணைக்க போக,
" இல்ல எனக்கு குளிக்கணும் இன்னைக்கு அம்மா அப்பா வரேன்னு சொல்லி இருக்காங்க உன்கிட்ட நேத்து இன்ஃபார்ம் பண்ணினாங்க தானே" என்று அவர்கள் வருவதை அவனுக்கும் ஞாபகம் படுத்த, " நிகில் சொன்னான்" என்று மட்டும் அவன் நிறுத்திக் கொண்டான் .. நேற்று நிதிஷ் இவனை அழைக்கவும் அவன் போனை கட் செய்து நிகிலை கொண்டு அழைக்க வைத்தான் ஆர்யா பின் என்ன விஷயம் என தெரிந்து கொண்டவன் தான் இன்று காலை வேளையில் அவர்களை சந்திப்பதற்கான அப்பாயின்மெண்ட் கொடுத்து வேண்டும் என்றே அவர்களை அலைக்கழித்தான்..
"அவங்க வர லேட் ஆகும் இல்ல இன்னும் சமயம் இருக்கு நீ கொஞ்ச நேரம் தூங்கு அவங்க வரும்போது பார்த்துக்கலாம்" என்று அவன் கூற,
" இல்ல எனக்கு ரெடி ஆகணும் அவங்க சத்தம் கீழே கேட்குது அவங்க இந்நேரம் வந்து இருப்பாங்க" என்று அவர்கள் வந்து இருப்பார்களோ என்ற ஆவலில் அவள் பாவமாக கூறினாள் அதைக்கேட்ட அவனோ என்ன எண்ணினாலும் தெரியவில்லை, " சரி போ "என்று கூற அவளோ கண்கள் மின்ன அப்பா தப்பிச்சோம் என எண்ணி வேகமாக எழ போனாள்..
அதற்குள் அவன் , "ஒரு நிமிஷம்" என்று கூற இனி என்ன பண்ணப் போறானோ என அவள் நினைக்க வேகமாக ஒரு அவசர முத்தம் கொடுத்தவன் , " நீ ரெடி ஆகிட்டு என்னை எழுப்பி விடு "என்று மென்மையாக அவளிடம் கூறி மீண்டும் படுத்துக் கொண்டான் ஆர்யா..
அவளோ அப்பாடா என்று எண்ணினாலும் அவனது அவசர முத்தம் அவளது முகத்தை ஏனோ செவ்வானமாக சிவக்க செய்ய , "இவன் என்ன கேட்டகிரி ஒரு பக்கம் மென்மையா இருக்கான் மறுபக்கம் அனலா இருக்கான்" என எண்ணிக் கொண்டே குளிக்க அவள் செல்ல குளித்து முடித்து வெளியே வரவும் அப்பொழுதும் அவன் உறங்கி தான் கொண்டிருந்தான்..
சரி அனைவரும் வருகிறார்களே என்ன எண்ணி அவளது கபோர்டு திறக்க ஒரு பக்கம் முழுவதும் மாடர்ன் ஆடைகள் இருக்க மறுபக்கம் முழுவதும் சேலைகள் இருந்தன எதை உடுத்தலாம் என யோசித்தவளுக்கு அதில் ஒரு மெலிதான ஷிபான் ஸாரியை பார்க்க மிக அழகாக இருந்தது மிக மெலிசானதாகவும் இருந்தது..
உடுத்தினால் உடுத்தியது போலவே தோன்றவே தோன்றாது அப்படி இருக்க அவள் அந்த சிலையை எடுத்தார் அவனை பார்க்க அவனும் அந்த தொடக்கத்தில் இருப்பதற்கான அறிகுறி அவளுக்கு தென்பட வேகமாக சேலையை கொடுத்துவிடுவோம் என எண்ணி திரும்பி நின்று சேலையை உடுத்திக் கொண்டு இருந்தவள் அவளது மாராப்பை தன் தோளில் போட அது எங்கேயோ சிக்கிக்கொண்டது அவளோ கண்ணாடியில் சரிபார்த்து கொண்டிருக்க அந்த மாராப்பை தன் பக்கமாக இழுக்க ஆனால் சேலை வரவே இல்லை..
எதிலாவது சிக்கி இருக்கிறதா என திரும்பி பார்க்க அவளது சேலையின் மாராப்பு அவனிடம் இருந்தது..சேலையின் நுனியை பிடித்து கொண்டு அவளை மேல் இருந்து கீழாக குறுகுறுவென பார்க்க அதை பார்த்த அவளுக்கு குப்பென்று சிவந்தது..
ஏனெனில் அவள் அப்பொழுது தான் குளித்து முடித்து தன் ஈரத் தலையுடன் தலையை கூட சரியாக காய வைக்காமல் சேலையை கட்டி விட்டு காய வைக்கலாம் என இருக்க அதற்குள் இதை எல்லாம் பார்த்தபடி அவள் முன்னே உறங்கும் பாவனையில் இருந்தான் ஆர்யா..
