ஸ்வரம் 16

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 308
Thread starter  

ஸ்வரம் : 16

அறைக்குள் அவளோ விறுவிறுவென்று கோபமாக உள்ளே சென்றவள் வேகமாக குளியலறைக்கு சென்று தன் உடலை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.. அவனும் ஏதோ ஒரு போனில் இருந்தவன் அவளது கோபத்தை கண்டு கொள்ளவில்லையோ என்னவோ பிறகு அவன் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு அவளருகே வர அவனது புஜத்தில் இலேசாக ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது..

அதை கவனிக்காமல் எங்கோ வெறித்து இருந்தாள் அவள் மனம் முழுவதும் ரணமாக இருந்தது..சற்று முன் உடற்பயிற்சி ஷாட்டில் ஷார்ட்டோடு நடித்தவன் இப்போது வெறும் துண்டோடு அவள் முன்னே வந்து நின்றான்..

அவளோ அவனை கண்டுகொள்ளாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருக்க அதை பார்த்து எனக்கு கோபம் வந்தது ஏனென்றால் அவனது புஜத்தில் அந்த ராட் பட்டு லேசாக இரத்தம் வழிந்து கொண்டு இருக்க அவன் குளித்து வரும்பொழுது மீண்டும் ரத்தம் அவ்விடத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருக்க அதை பார்த்து , " ஹிமானி அந்த பஸ்ட் அய்டு பாக்ஸ் எடு "என்று கூற ,

அவளோ காது கேட்காமல் இருக்க ரத்தம் வேறு வழிந்து கொண்டு இருக்க "ஹிமானி " என்று மீண்டும் அழுத்தமாக கூற அவளோ நிமிர்ந்து, " என்ன??" என்று அப்போது தான் நினைவு வந்தவள் போல கேட்க , "நீ எங்கடி பார்த்துட்டு இருக்க நீ எப்ப பார்த்தாலும் வேடிக்கை பார்த்துட்டே இருக்க நான் பேசுவது உனக்கு கேக்குதா இல்லையா ??" என்று கேட்க,

"உங்களுக்கு மட்டும் நான் பேசுறது கேக்குதா இல்லையா இல்லைல??" என்று அவள் கூற ,

அதைக் கேட்ட அவனோ நீ கண்டவன் கிட்ட எல்லாம் பேசினத கேட்டதனால தான் டி நான் பேசுறதை மட்டும் கேட்க உன்னை நான் கல்யாணம் பண்ணிருக்கேன் அந்த முதலுதவி பெட்டியை எடு "என்று கூற,

அவளும் எடுத்துக் கொண்டு வந்து வைக்க , "என் கையில ரத்தம் வருது கொஞ்சம் மருந்து போட்டு விடு" என்று கூற ,

அதைக் கேட்ட அவளோ , "இன்னொரு கை சும்மா தான் இருக்கு நீங்களே போட்டுக்கோங்க" என்று முறுக்கிக் கொள்ள அதை கேட்டவனோ, " அப்புறம் எதுக்கு நீ இருக்க என்னோட தேவைகளை பார்த்துக்க தானே என்னோட மனைவியா என் கூட இருக்க தேய்ச்சு விடு கூட ஒரே பெட்ல படுத்தா மட்டும் போதுமா?? இதெல்லாம் செய்ய வேற யாராவதா வருவாங்க" என்று நக்கலாக கூற அதைக் கேட்டு அவள் முகத்தை திருப்பிக் கொள்ள,

இவனோ , "நான் ஆரம்பத்திலிருந்து சொல்லிட்டே இருக்கேன் ஆனா நீ கேட்கவே மாட்டேங்குற என்கிட்ட முகத்தை திருப்பினா என்ன நடக்கும்ன்னு நீ அடிக்கடி மறந்துடுற??" என அவளை நெருங்கி வந்து சற்றுமுன் அந்த விளம்பரத்தில் எப்படி நடித்தானோ அதே போல இவளை ஒரு நொடி திருப்பி அவன் அவளது முகம் நோக்கி குனிய வேகமாக தன் கண்களை மூடிக் கொண்டு வலது புஜத்தில் கையை வைத்தாள் ..

"நான் மருந்து போட்டு விடுறேன் " என்று கூற "இத நீ முன்னாடியே கேட்டு இருக்கலாம்" என்று அவன் அவளை முத்தமிட்ட பின் தான் விட அவளை அடுத்த நொடி முதலுதவிப் பெட்டியில் இருந்து மருந்து எடுத்து அவனது கைகளுக்கு மென்மையாக போட்டுவிட்டு கொண்டே , "நான் உன்கிட்ட ஒன்னு கேட்டா நீ தப்பா நினைச்சிக்க மாட்டல" என்று வினவ,

" நீ நான் தப்பா நினைக்காத மாதிரி கேள்வி கேட்டா நான் தப்பா நினைக்க மாட்டேன்" என்று பதிலளித்தான்..

இவன் கிட்ட எல்லாம் மனுஷன் பேச முடியுமா என்று நினைத்துக்கொண்டே , "எதுக்காக அவனை அடிச்ச அவ என்ன தப்பு பண்ணான் பாவம் எல்லாரும் முன்னாடியும் அடிச்சா அவனுக்கு அவமானமா இருக்காதா ??என்று வினவ

"அப்போ உன் புருஷனோட கண்ணு மூக்கு கிழிஞ்சு போன உனக்கு பரவாயில்லையா ?? அவனுக்கு கிடைக்க வேண்டிய அடி தான் " என்று வினவ அப்பொழுது தான் ஒன்றை கவனித்தாள் அந்த ராட் சற்று ஆழமாக தான் அவனது அவளது கையைப் பதம் பார்த்திருந்தது..

" ஆனா உனக்கு ஒன்னு இருக்கு உன் புருஷனை தவிர மத்த எல்லாருக்கும் சப்போர்ட் பண்ற உன் புருஷன் ஏதாவது செஞ்சா மட்டும் உன் கண்ணுக்கு தெரியவே மாட்டேங்குது" என்று ஒரு மாதிரி குரலில் குத்தலாக கூற அவளுக்கு திக்கென்று இருந்தது..மேற்கொண்டு எதுவும் அவள் பேசவில்லை..

அன்றைய இரவு அவளது மனதை புரிந்து கொள்ளாமல் ஏற்பட்ட கூடலுக்கு பிறகு இருவரும் உறக்கத்தில் இருக்கும் வேளையில் ஹிமானி மட்டும் உறக்கமே வராமல் தவித்து கொண்டிருந்தாள் சிறிது நேரம் அவனுடன் உறங்க முயற்சி செய்தாள் தான் ஆனால் உறக்கம் வராமல் தவிக்க அவளது ஆழ்மனதை தருண் வந்து ஆக்கிரமித்துக் கொண்டானோ என்னவோ கடவுளே என்ன சோதனை என எண்ணி பட்டென்று கண் விழிக்க அந்த அறையை இருட்டாக இருந்தது..

இருட்டு என்றால் அவளுக்கு பயம் அதனால் கண்களை மூடி கொண்டு எண்ணி கொண்டிருந்தவள் இப்போது கண்விழித்து பார்க்க இவர்களின் பால்கனி கதவு திரைச்சீலைகள் விலகியிருக்க அந்த கடலின் மேல் ஒரு வெள்ளை பந்து போல நிலா சூழ்ந்திருக்க அதை கண்டவளுக்கு என் வாழ்க்கை ஏன் இப்படி போகுது என்ற கேள்வி எழுந்தது..

நான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது என வருந்தியவளுக்கு தண்ணீர் தாகம் எடுக்க மெல்ல எழ முயன்றாள் ஆனால் அவளால் முடியவில்லை ஏதோ தலையணையை கட்டி பிடித்து உறங்குபவன் போல அவளை இறுக்கமாக அணைத்து இருந்தான் ஆர்யா.. அவளோ அவனது கையை மெல்ல விலக்கி முயற்சி செய்ய அதற்குள் அவன் எழுந்து விட்டான் எழுந்தவன் , " என்னாச்சு தூங்கலையா ??" என்க

"இல்லை தூக்கம் வரல " என்கவும்

"சரி வா "என்று அவளை மீண்டும் அணைத்து அவளது உடலை மெல்ல வருடி கொடுத்து கொடுக்க இப்போது கூட என்னை விட மாட்டேங்கிறானே என அவள் நினைக்க அவனோ ஏதோ எண்ணி கொண்டிருந்தான்...

அதே நேரம் பாயலிடம் நிதிஷ் , "என் பொண்ணு அவன் கூட இருக்கிறதில் எனக்கு விருப்பம் இல்லை" என்க

அவரோ, " அவ அவனோட சொத்து அவன் கூட தான் இருக்கணும் அவன் அவளை விடுவான்னு உங்களுக்கு தோணுதா?? " என்க

அவருக்கும் இல்லை என்ற பதில் தான் கிடைத்தது , "ஆனால் என் பொண்ணு ஹாப்பியா இல்லை .."

" அதெல்லாம் அவன் பார்த்துப்பான் " என்க

" அதெப்படி நீ இவ்ளோ உறுதியா சொல்ற?? எனக்கு என்னமோ அவன்கிட்ட பேசியே ஆகனும்னு தோணுது " என்க

அவன் உங்க எல்லார்கிட்டேயும் பேசுவான்னு தோணலை " என்று பாயல் கூற

" அவன் பேசாமல் எங்கே போயிட போறான் அவன் எங்கோ மாலத்தீவு போயிருப்பதா சொல்லி இருக்காங்க வந்ததும் எல்லோரும் போய் அவன்கிட்ட பேசியே ஆகனும் நான் டாக்டர் கிட்ட பேசிட்டேன் அவ கர்ப்பமா இல்லை அவரை மிரட்டி தான் பேச வைச்சு இருக்கான் அவன் இஷ்டத்துக்கு ஒவ்வொன்னும் செய்ய என் பொண்ணு ஒன்னும் அவனோட பொம்மை இல்லை " என்று கூறிய நிதிஷ் ஒரு மாடர்ன் பஞ்சாயத்தை கூட்ட தயாரானார்..அதற்கு அவரது மருமகனின் பதில் என்னவாக இருக்குமோ??

ஸ்வரம் இசைக்கும்



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top